ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆத்விகா பொம்முவின் நிறைவடைந்த நாவல்களுக்கான விமர்சனங்கள்

விளையாடு வேட்டையாடு

79a14a5e.jpg

நாவலாசிரியர்: ஆத்விகா பொம்மு

ஹீரோஸ்: இந்திரஜித், கர்ணன், அர்ஜுன், ருத்ரன், தீரன்.

ஹீரோயின்ஸ்: சுலோச்சனா, வைஷாலி, சுபத்ரா, லீலா, கார்குழலி.

கருத்தாழமுள்ள அழகிய கதை.

ஒவ்வொருவரின் மனநிலையிலும் அவரவர் கதாபாத்திரங்கள் மிக தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டிருந்தது அருமை கா.

எவ்வளவு தான் வலிகள் மனதிற்குள் இருந்தாலும் அதை முகத்திற்கு காட்டாமல் மறைத்த இந்திரஜித் கதாபாத்திரம் என்னை பொருத்த வரை மிக அமைதியான கதாநாயகன்.

வேலையில் அதிரடி வேறு கதை...

நேர் எதிர் சுலோச்சனா... எதிர் எதிர் துருவங்கள் தான் ஒன்றை ஒன்று ஈர்க்குமொ???

கர்ணன் பற்றி சத்தியமாக எனக்கு சொல்லத் தெரியவில்லை அக்கா... அவன் அதிரடியில் வீழ்ந்தாலும் கடைசி வரை அவள் காதலை அவன் புரிந்து கொள்ளாதது மிகவும் வருத்தம்.... அதிலும் அவன் அவளைப் பற்றி வரையறுத்த விளக்கம்....

ஆனாலும் அவன் மன இறுகலுக்கான காரணம் ஏதாவது ஒன்று இருக்குமென சின்ன நம்பிக்கை... இப்போது குற்றம் சொல்லி விட்டு காரணம் தெரிந்த பின் சரண்டர் ஆவதற்கு இப்போதே சரண்டர்.

இந்தக் கதையில் மிக அனுதாபத்திற்குரிய கதாபாத்திரம் வைஷாலி...

நாட்டில் பெண்களுக்கான தற்போதைய மிகப் பெரும் சவால் கற்பு!!!

அதை வைஷாலி கதாபாத்திரம் மூலம் விளிப்புணர்வு தந்தமைக்கு மிக்க நன்றி கா.

அர்ஜுன் மற்றும் சுபி கதாபாத்திரங்கள் காதலை வைத்துக் கொண்டு வலி கண்டு தள்ளி நிற்பவர்கள்.... உண்மை காதல் அவர்களை நிச்சயம் இணைக்கும்...

ருத்ரன் கதாபாத்திரம் மிக மிக அருமை... அவனை பற்றி சொல்லப்பட்ட "மிஷனின் பில்லர் என்று தான் அப்போது இருந்தே அவனை அழைத்தார்கள்.நம்பிக்கை துரோகம் குற்றம் தான். மாறுவேடம் பூண்டு ஒருவரை ஏமாற்றுவது பாவம் தான். ஆனால் அந்த பாவமும் குற்றமும் கெட்டவர்களை அழிப்பதற்காக செய்யப்படும் போது தர்மமாகத் தான் பார்க்கப்படும். மகாபாரத போரில் கிருஷ்ணன் வியூகங்கள் அமைத்து அதர்மத்தை அழித்தது தர்மமாக பார்க்கப்பட்டதை போலவே..." திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டிய மிக மிக அருமையான உதாரணம்.

தீரன், மின்னல் கதாபாத்திரம் போல் எப்போதும் அதிரடி மட்டுமே... ஆனால் இவன் பாகத்திற்கு தான் அதிகம் எதிர்ப்பார்ப்பு எழுகிறது எனக்கு....

ஐந்து நாயகர்களும் ஒவ்வொரு விதத்தில் சித்தரிக்கப்பட அடுத்து வரும் தனி தனி பாகங்களுக்கான எதிர்ப்பார்ப்புடன்,

உங்கள் படைப்புக்கு என் மனமார்ந்த நன்றிகள் கா.

(பின்குறிப்பு- அக்கா உங்களுக்கு அர்ஜுன் தாஸ் அதாவது ருத்ரனை புடிக்கும்குறதுக்காக அவன முரட்டு சிங்கிளாவே சுத்த வெச்சது ரொம்ப அநியாயம் சொல்லிட்டேன் ஆமா)

நன்றி.

ரிஷி.
 
Last edited:
விளையாடு வேட்டையாடு

c5c25448.jpg

கர்ணன்

நாவலாசிரியர் : ஆத்விகா பொம்மு

ஹீரோ : கர்ணன்
ஹீரோயின் : வைஷாலி

அதிரடி காதல் கதை.

வாழ்க்கையில் யாரையும் நம்பக் கூடாது அல்லது வாழ்க்கையில் எல்லோரையும் நம்புவது என்ற சரி பிழை கருத்தை தாண்டி ஒரே ஒரு முறை தன்னை வர்ணித்து கவி பாடி ஓவியமாய் சித்தரித்தவனை முழு மனதாக நம்பி ஏற்றதே பாவையின் முதல் தப்பே ஆனாலும் அவள் பார்வையில் அது அவளுக்கு விளங்காமலே இருந்ததற்கு ஒரு காரணம் உண்டு.

காதல் உண்ணதமானது!!!

வைஷாலி கதாபாத்திரத்தின் பார்வையில் கண்டவுடன் காதலாக இருந்தாலும் ஓவியக் காதலாக இருந்தாலும் காதல் எப்போதுமே உண்ணதமானது தானே....

ஒருவர் மீது நட்பு ஒரு அடிப்படையில் வந்தால் ஏன் கண்டவுடன் காதல் அதே அடிப்படையில் இருக்க முடியாது?

அன்பு வைத்து விட்டால் அனைவரும் பலவீனர்களே!!!

அது தான் வைஷாலிக்கும் நடந்தது.

அதற்காக அதே பலவீனத்தை வைத்து விளையாடியது தான் கர்ணன் கதாபாத்திரம் செய்த தப்பு.

அதை விட தன் குற்ற உணர்வை மறைக்க அவளை வார்த்தைகளால் வதைத்து காயப்படுத்தியது வருத்தம்.

ஏமாற்றிய ஒருவரை எந்த விதத்திலும் மன்னிக்கவோ மறக்கவோ முடியாது தான்.

ஆனால் ஏமாற்றத்தின் வலி தெரிந்தவள் அதே வலியை அவளின் உயிரானவனுக்கு அதே காதலை பகைடைக்காயாக வைத்து கொடுத்தது என்ன நியாயங்கள் இருந்தாலும் தவறு தான்.

ஏமாற்றப்பட்டவளின் கோபம் நியாயமானதாக இருந்து அவள் தண்டனை கொடுத்தது சரியாக இருக்கலாம்... ஆனால் அந்த காதலை அவள் பயண்படுத்தியது தான் தவறு.

கிட்டத்தட்ட இருவருமே ஒரே நிலை தான்.

ஆனால் கொடுக்கப்பட்ட விதமே வேறு வேறு...

அவன் தெரிந்தும் தெரியாமல் காயப்படுத்தினான் இவள் தெரிந்தே காயப்படுத்தினாள்.

எல்லாவற்றையும் தாண்டிய அவர்களுக்குள் இருந்த காதல் என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கி விட முடியா உணர்வே இங்கு இருவரையும் தனக்குள் அடக்கிக் கொண்டது.

இரும்பாக இருந்தவன் அவளுக்காகவே பனியாய் மாறிப் போக பனியாய் இருந்தவள் இரும்பாய் மாறி பின் அவனுக்காகவே பனியாய் ஆனாள்.

கரை கடந்த காதலே இங்கு அத்திவாரமாய் இருவருக்குள்ளும்!!!

வாழ்த்துக்கள் கா ❤️

நன்றி.

ரிஷி.

05-05-2021.
 
விளையாடு வேட்டையாடு

fa47ea41.jpg

இந்திரஜித்

நாவலாசிரியர் : ஆத்விகா பொம்மு

ஹீரோ : இந்திரஜித் (மித்ரன்)
ஹீரோயின் : சுலோச்சனா

அழுத்தமான ஆழமான காதல் கதை.

எனக்கு இப்போவும் தோன்றது இதான் கா... "ஒருத்தரால இவ்வளவு ஆழமா காதலிக்க, காதலை கொடுக்க முடியுமா???" அவ்வளவு பிரம்மிப்பு எனக்குள்....

இந்திரஜி (கதாபாத்திர) த்தின் காதல் ஆழம் அவ்வளவு தத்ரூபமாக சித்தரிக்கப்படிந்தது.

காதலுக்கு உடலை விட மனம் தான் முக்கியம் என அவன் நிரூப்பித்து அவன் காதலை அவளுக்கு அவன் உணர்த்திய விதம் வார்த்தைகளில் அடங்கா...

அவளால் அவன் பட்ட வலிகளுக்கு வடிகாலாய் அவளின் புன்னைகை ஒன்றையே பார்க்க துடிக்கும் அவன் மனம் உண்மையில் அழகானது.

சுலோச்சனா கதாபாத்திரம் மிக நிமிர்வாக சித்தரிக்கப்பட்ட விதம் அருமை...

வாழ்க்கையில் அன்பு, உறவு எவ்வளவு முக்கியமோ அதையும் தாண்டிய லட்சியம், கனவு என்ற விடயங்கள் எவ்வளவு முக்கியம் என அவள் மூலம் வெளிக் கொணர்ந்தது கதையில் என்னை கவர்ந்த ஒன்று...

கற்பை இழந்து காதலை மறைத்து தன்னிலையை வெறுக்கும் அவள் மனநிலை இன்னும் வருத்தம்...

இதையெல்லாம் தாண்டி கதையில் என்னை கவர்ந்த இன்னொரு முக்கிய விடயம்...

நட்பு!!!

ஐவரும் வேறு வேறு குணம், பின்னனி உள்ளவர்களாக இருந்தாலும் அவர்களுக்கிடையில் இருக்கும் நட்பு அவன் (இந்திரஜித்) போலவே மிக ஆழமானதும் மிக அழகானதும் கூட...

'உன்மேல் எங்களுக்கு நம்பிக்கை' அவனுக்காக நண்பர்களிடமிருந்து வந்த அந்த ஒற்றை சொல் என்னை நெகிழ வைத்து புன்னகை மலரச் செய்தது உண்மையிலும் உண்மை....

தன்னலமில்லா அன்பு நட்பில் மட்டுமே சாத்தியம்!!!

பல தடைகள் தாண்டி காதல் என்ற ஒற்றை சொல்லில் அவர்கள் வாழ்வில் சங்கமித்திருக்க இனி வாழ்வே சுபம்!

இவ்வளவு அழகான ஆழமான ஓர் படைப்பை கொடுத்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள் கா...

வாழ்த்துக்கள் ?

நீங்க மென்மேலும் வளர வேண்டுமென்ற பிரார்த்தனையுடன்,

நன்றி.

ரிஷி.

12-05-2021.
 
விளையாடு வேட்டையாடு

7f89ed7f.jpg

ருத்ரன்

நாவலாசிரியர் : ஆத்விகா பொம்மு

ஹீரோ : ருத்ரன்
ஹீரோயின் : லீலா

ஆழமான காதல் கதை...

உண்மையில் ருத்ரன் கதாபாத்திரமே பிரம்மிப்பு தான்.

நிதானமாகட்டும் காதலாகட்டும் பாசமாகட்டும் எல்லாவற்றிலும் ஓர் லாவகம்!

அவன் காதலை வெளிப்படுத்திய விதமே தனி அழகு.

உறவுகள் பிரிவினைக்கு நிதானமற்ற செயலே இங்கு காரணமாக அமைந்து விடும் போது எந்த நிலையிலுமே நிதானம் தவறாமல் மனைவியை புரிந்து கொண்டு செயற்படும் விதம் உண்மையில் பிரம்மிப்பு தான்...

அவன் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதம் ஆத்மார்த்தமாக இருந்தது.

அதை விட அவன் நேர்மை மனதை கவர்ந்தது.

உலகில் உள்ள அணைவரும் ஒரே நிலையில் படைக்கப்படுவதில்லையே!!

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு குணங்கள்.

கணவ (ருத்ர) னுக்கு லீலா கொடுத்தது மா பெரும் வலி தான்... இல்லை என்று ஒரு போதும் சொல்லி விட முடியாது.

ஆனால் பெற்றோரை இழந்து நிற்கும் நிர்க்கதியான நிலையை வேறு சந்தர்ப்பங்களாக இருந்திருந்தால் வேறு மாதிரி கையாண்டிருப்பாளோ என்னவோ???

ஆனால் அவன் குழந்தையை சுமந்து கொண்டிருக்கும் போதல்லவா நடந்திருந்தது.

அவளுள் எழுந்த ஏமாற்றம் விரக்தியே அவன் மீது கோபமாய் உருமாறி இருக்கிறது.

அப்போது அவள் பார்வையில் ஒரு வேலை அது சரியாக இருக்கலாம்... இல்லை பிழையென தெரிந்தும் புரிந்து கொள்ள முடியாத மனநிலையில் இருக்கலாம்.

ஆனால் அவனுக்குள் இருப்பது போலவே அவளுக்கும் அவன் மீது காதல் இருக்கிறதுவே..

அவள் தரப்பு நியாயங்கள் அவள் செய்கையை நியாயப்படுத்தி விட்டாலும் கணவனென்று வரும் போது நியாயம் பிழைத்துப் போகிறதோ???

பெற்றோர் மீதுள்ள பாசம் கணவன் காதலையே கேள்விக்குறியாக்கும் அளவு வைத்து விட்டதே!!!

நட்பு!!!

நட்பு கடவுள் கொடுக்கும் வரம்!!!

செயல் முறையில் உணர்த்தும் நட்பே தனி சுவாரஷ்யம் தான்!

பிரச்சனை என்னவென்று தெரியாத போதும் அவனுக்காக அவர்கள் இருந்தது நெகிழ வைத்தது.

அவன் உயிர்ப்பை தொலைத்து நிரூபித்த காதல் வெற்றி பெற உயிர்ப்பை மீட்டுக் கொடுத்து நட்பு!!!

தோழமை என்றுமே அழகு தான்!!!

இந்த படைப்பை கொடுத்ததற்கு என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் கா ❤️

நீங்கள் மென்மேலும் வளர வேண்டுமென்ற பிரார்த்தனையுடன்,

நன்றி.

ரிஷி.

21-05-2021.
 
விளையாடு வேட்டையாடு

4aecc683.jpg

அர்ஜுன்

நாவலாசிரியர் : ஆத்விகா பொம்மு

ஹீரோ : அர்ஜுன்
ஹீரோயின் : சுபத்ரா

மிக ஆழமான காதல் கதை...

அர்ஜுன் (கதாபாத்திர) த்தின் காதல் ஆழம் மெய் சிலிர்க்க வைத்தது.

காதல் குற்றம் இல்லைதான்... ஆனால் மனைவி செய்த செயல்களில் பாரதூரம் அவன் காதலை அல்லவா உயிருடன் கொன்று புதைத்து விட்டது.

அக்கினி சாட்சியாக தன்னில் சரிபாதியாகி இருந்த மனைவியின் செய்கை எந்த ஆண்மகனாலுமே ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று தான்... இருந்தும் அவன் ஏற்றான் அவளுக்காக... அவன் அவள் மேல் வைத்த காதலுக்காக....

அவளுக்கு வலியை கொடுத்து விட்டு தானும் அதே வலியை அனுபவித்த அவனின் ஆழமான காதல் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியது!!!

தந்தை தந்தை என தந்தைக்காகவே வாழ்க்கையை தொலைத்து ஓர் மகளாய் தந்தையை ஜெயிக்க வைத்து விட்டவளுக்கு மனைவியாய் அவனை தோற்றுப்போன உண்மை காலம் கடந்து தான் புரிந்ததுவோ???

தான் செய்த தண்டனைக்காய் அவனின் வார்த்தைகளின் வீர்யத்தை கூட தாங்கிக் கொண்டு அவன் வலி போக்கிய அவள் காதலும் கூட அவனுக்கு சலைத்ததல்லவே???

மனைவியா (சுபத்ரா கதாபாத்திரத்தா) ல் பட்ட அவமானம் அவளாலேயே துடைத்தெடுக்கப்பட தான் தவற விட்ட வார்த்தைகளின் வீர்யம் தாங்காமல் விலகி நின்றானோ அந்த காதல் கணவன்???

நேர்மை விலை கேட்கப்பட அவமானம் முகத்திலறைய பலவீனமான மனது மீண்டும் மீண்டும் அவளிடமே சரணடைந்ததன் மாயம் என்னவோ???

காதல்!!!

காதல் இருப்பின் எல்லாம் சுபம்!

நீங்கள் மென்மேலும் வளர வேண்டுமென்ற பிரார்த்தனையுடன்,

வாழ்த்துக்கள் பொம்மு கா ?

நன்றி.

ரிஷி.

30-05-2021.
 
Top