ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 3- இலையின் மேலாடும் பனித்துளி

#இலையின்_மேலாடும்_பனித்துளி

#கௌரிஸ்ரிவ்யூ

பீல் குட் லவ் ஸ்டோரி 🤩 🤩 🤩 🤩 🤩 🤩

நல்ல வேலை இதை நா ongoing லா படிக்கல🤭🤭🤭🤭🤭

எப்பா ஒரு ஒரு எபி முடியும் போது, லலிதா என்ன பண்ணுவாளோ…..ஷீபா வந்திருவாளோ…..வேணி அம்மா எதில் சொதப்புவாங்களோ…..

பவியை பார்த்தி கிட்ட இவங்க பிரிச்சி விட்டுருவாங்களோ அப்படினு பயந்து வந்துருச்சு🤷🤷🤷🤷🤷

பரபரப்பா போனாலும் பீல் குட் தான் கதை♥️♥️♥️♥️♥️♥️

வேணி அம்மா ஓட பெரிய பையன் அஜய் காதல் கல்யாணம் பண்ண…அவன் ஓட மனைவி தான் லலிதா….

அவளோட தங்கச்சிக்கு பார்த்தி மேல கண்ணு…..லவ் எல்லாம் இல்ல…

சும்மா அழகான புடிச்ச பொருள் தனக்கே வேணும்னு ஒரு நல்லா…… எண்ணம் தான் அவளுக்கு……

வேணி அம்மாக்கு, லலிதா ஓட அப்பா சொத்து எல்லாம் தன் பசங்களுக்கே வேணும்னு பேராசை……

அதனாலா, பார்த்தியை கேட்காம வாக்கு கொடுக்க…..

ஷீபாவின் ஆசை…..

அம்மாவின் வாக்கு…..

இது ஏதும் தெரியாம, பார்த்தி அவன் தொழிலில் முன்னேற….

அதுவும் லலிதாக்கு பொறுக்கல 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️….

இத்தனை சதி வேலைக்கு நடுவில், பார்த்திக்கு பவி மேல லவ்வாங்கி 😁😁😁😁😁😁…,

இதுக்கே அவன் மன தைரியத்தை பாராட்டணும் நாம🤭🤭🤭🤭🤭……

இவங்க கல்யாணம் எப்படி நடக்குது என்பது தான் மீதி கதை…..

பார்த்தி….எப்பா டேய்…நீ எல்லாம் unique piece🤣🤣🤣🤣🤣…..

புத்தர் ஓட கடைசி சிஷ்யன் இவனா தான் இருப்பான் போல…..

என்ன அழகா அவன் அம்மாக்கு எடுத்து சொல்றான்…..

அம்மாவை சமாளிச்சி, அண்ணியை சரி கட்டி, பவியை லவ்ஸ் விடறது எல்லாம் cute moments 🥰 🥰 🥰 🥰 🥰

பவி….இவளுக்கு பெருசா வேலையே இல்ல….பார்த்தி சொல்ற மாறி பொம்மை தான்🤣🤣🤣🤣

இவளுக்கும் சேர்த்து பார்த்தியே perform பண்ணிட்டான்🤷🤷🤷🤷🤷…..

அபி…. பார்த்தி தங்கச்சி….அம்மா மண்டுகமா இருந்தாலும்….இவ சூப்பர் 🤩🤩🤩🤩🤩

ஜீவா….இவளும் சூப்பர்…..

வேணி அம்மா….பெரியவங்க அப்படினு எவளோ தான் பொறுத்து போறது😤😤😤😤😤….

இவங்க பண்றது எல்லாமே தேவை இல்லா ஆணி தான்🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️…..

சரியான காண்டு தான் ஆவுது😬😬😬😬😬

லலிதா….அஜய் கடைசியா கொடுத்தா முதலியே கொடுத்து இருந்து இருக்கலாம்….

ஷீபா….இதுங்க வளர்ப்பு சரி இல்ல….

கதை ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது 👏 👏 👏 👏 👏 👏 👏

எனக்கு ரொம்பவே பிடித்தது ♥️♥️♥️♥️♥️♥️

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐
 
.. இலையின் மேலாடும் பனித்துளி.... விமர்சனம். நாயகன் பேரு பார்த்திபன் ❤️ ❤️ ❤️ நாயகி பவித்ரா. இயல்பான குடும்ப காதல் கதை .. நாயகனோட அண்ணி லலிதா உடைய தங்கச்சி ஷுபாவுக்கு நம்ம பார்த்திபனை பிடிச்சிடும் லலிதா பணக்கார வீட்டு மருமகள் என்பதனால் கிருஷ்ணவேனி அம்மா லலிதா பேச்சை கேட்டு பார்த்திபனுக்கு தெரியாமல் உறுதி கொடுத்திடறாங்க.. தெரிஞ்சவங்க மூலமாக பவியோட சம்பந்தம் பார்த்திபன் வீட்டுக்கு வர நம்ம பார்த்தி ❤️பவியோட போட்டோ பார்த்து ஃப்ளாட் ஆகிறார்...பார்த்தி பவி கல்யாணம் நடந்தும் ஷீபா வந்து பதவியை வெளியே போக சொல்றா பார்த்திபன் பிரச்சினைகளை எப்படி சமாளிச்சார் என்பதே கதை...பவித்ரா ஊமை பெரியவங்க சொன்னா அப்படியே கேட்க்கும் புள்ளை பூச்சி கிருஷ் வேணி சொன்னதும் உடனே வீட்டை விட்டு வெளியே போறது , வீட்டு பிரச்சனையை பார்த்திபன் கிட்ட சொல்லாம மறைகிறது இப்படி சரியான மொக்கை... இப்படி இருக்கிற பவி தான் ஷூபா பார்த்திபன் எனக்குத்தான்னு சொன்னதும் பூவுக்குள் ஒரு புயல் என்னா அடி... பவியோட தங்கச்சி ஜீவா, பொண்ணுண்ணா இப்படி இருக்கணும் வீரம்.... பார்த்திபன் தங்கச்சிய அபி எல்லாம் சூப்பர் கேரக்டர்... தீபனோட பொம்மை இட்ஸ் லவ் அண்ட் ஃபேமிலி சப்ஜெக்ட்... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰
 
Last edited:
Pommu Novels அவர்களின் அப்ளிகேஷனில் நடக்கும் போட்டி கதைகள்.
AP Verses
"இலையின் மேலாடும் பனித்துளி.."
பார்த்திபன்.. பவித்ரா..
பெற்றோர் முடிவு செய்யும் திருமணம். ஆனால் புகைப்படத்தை பார்த்ததும் பிடித்து விடுகிறது பார்த்திபனுக்கு. தன் வீட்டில் எதிர்ப்பு இருந்தாலும் அவன் விருப்பத்தை கூறி தன் மனதில் நுழைந்து விட்டவளை மனமுடித்துக் கொள்கிறான். அதன் பிறகு பல இன்னல்களை சந்திக்கிறான். அண்ணன் மனைவியால் இவன் வாழ்வில் பெரும் சிரமங்கள் ஏற்படுகிறது. அது அனைத்தையும் எப்படி முறியடித்தான் என்பது கதையில்.
பவித்ரா.. கணவனை "ப்பா" என்று அழைப்பதும் அதற்கான காரணமாக அவள் கூறுவதும் வெகு அழகு 🥰
அப்பாவியாக, யாரையும் கஷ்டப்படுத்தாமல், மென்மையான மனம் கொண்டவள்.. ஆனால் தனக்காகவும் தன் கணவனுக்காகவும் பேச வேண்டிய நேரத்தில் சரியாக தைரியமாக பேசுகிறாள்..👏👏
இவளின் தங்கை ஜீவிதா பார்த்திபனின் தங்கை அபிநயா இருவரின் கதாபாத்திரமும் வெகு அருமை. 🥰 இவர்களின் நட்பும் அழகு. ❤️
கிருஷ்ணவேணி.. பார்த்திபனின் தாய்.. சில நேரங்களில் சுயநலமாக தெரிகிறார்.
பாலமுருகன் தேவிகா அருமையான கதாபாத்திரங்கள் 🥰
பார்த்திபன் தன் பொம்மையின் மேல் கொண்ட காதல் அழகோ அழகு 🥰
அவனின் தவிப்புகள் நம்மையும் தவிக்க வைத்தது.
மிக அழகான காதலுடன் கலந்த குடும்ப கதை 🥰
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰❤️
Good luck 🥰❤️

Please read this amazing book on AP Verses App. Click on the link to read the story -
 
# இலையின் மேலாடும் பனித்துளி


# நிலா


பணம் …பணம்‌…பணம் …கொண்ட மனம் என்னவெல்லாம் செய்யும்…


பணத்தை நோக்கிய மனம் எப்படியெல்லாம் தழைந்து போகும்

என்பதை கதையோட்டததின் நடுவே காட்சிகளாக்கி கண்முன்னே பணத்தின் கணம் தான் என்ன என்பதை பார்க்க ,மனித மனங்களின் இன்னொரு பக்கம் விரிக்கப்படுகிறது.



பணம் படைத்தவர்களின் குணம், எதிராளியை இயல்பாய் வார்த்தையால் மட்டம் தட்டி சிந்திக்க இயலாமல் செய்வது.



இங்கும் அது தான் நடக்கிறது.


பணத்தின் மீது தன் மாமியாருக்கும் இருக்கும் ஆசையை பயன்படுத்தி, தன் அதிகாரத்தை செலுத்தும் மருமகள்…



அவரது ஆசைக்கு இரண்டாவது மகனை பகடையாக மாற்ற திட்டம் போடப்படுகிறது…



தங்கை அண்ணணுக்காக சண்டையிட, காதில் வாங்காத தாய்..

தன் குறி ஒன்றே குறியாக…


யாரை தைக்கும் என்று அறியாமல்…



ஆனால் இதை அறியாத அவனோ,பார்த்தவுடன் பாவித்ரா என்னும் பைங்கிளியுடன் விருப்பம் ஏற்பட, பிரச்சினை வெடிக்கிறது.



வாக்கு கொடுத்துவிட்டேன் என தாயார் வாதிட…அதற்காக வாழ்க்கையை பலிகொடுக்க முடியாது என மகன் முரண்டிட, மருமகள் தன் வார்த்தைகள் கொண்டு வெடிக்கிறாள் மாமியாரிடம்.



அமைதியாக இருப்பதனால் அடங்கி இருப்பதாக அர்த்தமில்லையென நாயகன் பார்த்திபன் உணர்த்திட..



கொந்தளிக்கிறாள் மருமகள்,என் தங்கைக்கு என்ன பதில் என,ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டி…


யார் கொதித்தால் என்ன …யார் குதித்தால் எனக்கென்ன..யாரை கேட்டு யாரின் வாழ்க்கை யார் முடிவு எடுப்பது ..என் பிடித்தம் என் வாழ்க்கை …என் முடிவே இறுதியானது என ..தன் திருமண வைபவத்தை நடத்தி கொள்கிறான் மணமகன்.




மகன் வாழ்க்கையே முதன்மையாக பட விழித்து கொண்டாலும் ,முழித்து நிற்க வேண்டிய கட்டாயம்.



மென்மையான பவித்ரா உட்காட்சி பூசல் அறியாமல் தன்மையான நடக்க, அது தான் வினையாகி போகிறது அவளுக்கு…


பார்த்திபனின் திருமண செய்தி அறிய, ஏமாற்றம் மண்டையை குடைய என் அக்கா வீடு என தங்கை இங்கே வந்து செய்யும் அட்டகாசங்கள், விடும் வார்த்தைகள்…பவித்ராவை வதைக்கிறது.அரவணைப்பை நாடி அம்மா வீடு செல்கிறாள்.



நான் இருக்க அம்மா வீடு செல்வது ,என்னை என்னவென்று நினைத்து வைத்திருக்கிறாள்…

என் நம்பிக்கை இல்லையா..என மனம் பொங்கினாலும் மனைவியை காண செல்கிறான்..



கோபம் மனத்தை அழுத்தினாலும்,அவள் மீதான அன்பும் ,அவள் நிலையும் , அவளை அழைத்து கொண்டு இல்லம் திரும்ப ,கணவன் பக்கத்தில் இருப்பதே பலமாக …எதிரில் இருப்பவரை எட்டி நிறுத்திகிறாள், வார்த்தை கொண்டே…நீயெல்லாம் நீ ஒரு பொருட்டா என பார்வையாலேயே

.


மனைவியின் செயல் கணவனை நெகிழ்த்திட இதயம் கனிந்து இதம் பரவுகிறது.



விரட்ட வந்தவரையெல்லாம் மிரட்டி விட்டே வருகிறான் பார்த்திபன்.



வழக்கமான பூச்சாண்டி வேலைகளெல்லாம் மாமியாரிடமும் எடுபடாமல் போக ,வாழ்க்கை முக்கியம் பிகிலு என அமைதியாகிறாள் பெரிய மருமகள்.



இந்த பார்த்திபனின் பவித்திராவின் மீதான காதல்…கல்லெரிய நினைத்தவர்களையெல்லாம், கலைந்தோட செய்கிறது.



இலையின் மேலாடும்‌பனித்துளி…இன்ப சாரல்…மோகன தூரல்


வாழ்த்துக்கள் பா💖

.
 
இலையின் மேலாடும் பனித்துளி
This realistic family drama follows பார்த்தீபன் and பவித்ரா, whose natural romance leads them into a happy marriage that is soon tested by Sheeba’s obsessive, one-sided infatuation. As Sheeba weaves a web of interference to tear them apart, the couple must rely on unwavering trust and resilience to protect their bond. It is a gripping and heartwarming story that proves true love and communication can dismantle any conspiracy, eventually leading the pair back to their "beautiful life" together.✨🩷
 
Top