ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 12- உயிர் வாங்கிடும் மோகினி நீயடி

உயிர் வாங்கிடும் மோகினி நீயடி

வசுந்திரா நம் கதையின் நாயகி. கருப்பா இருக்குறதுனால அம்மா, அக்கா, தங்கச்சி எல்லாரும் அவளை வெறுக்குறாங்க. அப்பா மட்டும் தான் அவளுக்கு ஆதரவா இருக்காரு.

சஞ்சய் நம் நாயகன் அவளை லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கிறான் அதுக்கு அப்புறம் அவ லைப் எப்படி போகுதுனு கதையில் தெரிஞ்சுக்கலாம்.

வசுந்தரா பாவம் அவ அம்மா வெறுக்குறது, அடிமை மாதிரி அவளை நடத்துறதுனு அவளை அவ்வளவு கஷ்டபடுத்துறாங்க. கோகிலா இவ எல்லாம் என்ன அம்மா சுத்தமா பிடிக்கவே இல்ல. அவ கிட்ட காசு வாங்குறது மட்டும் இன்னிக்கும் போகல.😤😤😤😤😤

பிரபு அனுபமா இவங்கள ரொம்பவே பிடிச்சது.அதுவும் அனுபமா சூப்பரோ சூப்பர் 😍😍😍

மருமகளை மகளா தாங்குறது ஒரு டாக்டரா அவளுக்கு சப்போர்ட் பண்றதுனு மனசுல நின்னுட்டாங்க.

வசுந்தரா சஞ்சய் கிட்ட மனசு விட்டு பேசி ரெண்டு பேரும் புரிஞ்சுக்கிட்டது நல்லா இருந்துச்சு.

ஸ்டோரி படிக்க சூப்பரா விறு விறுப்பா இருந்துச்சு 👌👌👌

வாழ்த்துக்கள் 💐💐💐
 
உயிர் வாங்கிடும் மோகினி

ஒரு ஆர்ப்பாட்டம் இல்லாத அழகிய காதல் கதை!!
வசுந்தரா நம்ம நாயகி‌..சொந்த வீட்டுலயே அவளுடைய அம்மா அக்கா தங்கைகளாள நிறம் குறைவா இருப்பதனால் இளக்காரமா பார்க்கப்படுறா..அங்க‌ அவளுக்கு அவளுடைய அப்பா மட்டும்தான் சப்போர்ட்டா இருக்காரு.. இப்படியான நம்ம வசுந்தராவ அவ வேலை பார்க்கற இடத்துல பார்த்து அவள பிடிச்சு லவ் பண்ணுறான் நாயகன் சஞ்சய்.. கல்யாணம் அப்றோம் அவங்க வாழ்க்கை‌ எப்படி போகுது ? சஞ்சய் சறுக்குன விசயத்துல இவ எப்படி அவனுக்கு புரிய வச்சா ? சஞ்சய் எப்படி அவனுடைய‌ தவறை திருத்திக்கிட்டான்றதுதான் கதை !!

வசுந்தரா ரொம்ப அமைதியான பொண்ணு.. வெளியில் தைரியமா பேசவே பயப்படுற‌ பொண்ணு‌..சொந்த வீட்டுலயே வேலைக்காரி மாதிரி இருக்கா அவளுடைய அப்பாவை தவிர்த்து அவமேல பாசம் வைக்க அங்க யாருமில்லை..இப்படி இருக்க வசுந்தரவா கல்யாணம் விரும்பி கல்யாணம் பண்ணிக்கிறான் சஞ்சய்..ஆனா அவளுக்கு இப்படி ஒரு வசதியான வாழ்க்கையானு பொறாமை படுற அக்கா தங்கச்சி.. அவளுடைய அம்மாவும் அவள எப்படியாவது கல்யாணம் பண்ணி அனுப்பிட்டா போதும்னு நினைக்கிறாங்க.. கல்யாணம் பண்ண அப்றோம் அவமேல அன்பை பொழியிற கணவன் மாமனார் மாமியார்..இப்படி சந்தோஷமாக போயிட்டு இருக்கு .. குழந்தை பிறந்த பிறகு சஞ்சயுடைய வேலை காரணமா வேற இடத்துக்கு‌ போயிடுறாங்க..அங்க போன‌பிறகு அவளுக்கு ஒரு வெறுமை உண்டாகிடுது.. சஞ்சயும் அவனுடைய வேலைப்பளுனால அவனுக்கும் இவளை கவனிக்க முடியல.. தாம்பத்திய உறவு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சம அளவுல கிடைக்கனும் ..அது சரியாக நடந்தால் கணவன் மனைவி உறவு ரொம்ப ஸ்டிராங்கா இருக்கும்..ஆனா வசுந்தராக்கு இதை கணவனிடம் சொல்ல கூச்சமா இருக்கு..மருத்துவரான மாமியாரிடம் தன் ஆதங்கத்தை சொல்லும் போது அதை சரியா புரிய வச்சி அவளுடைய கணவன் கிட்ட பேச சொல்றாங்க..பேச தைரியமே இல்லாத வசுந்தரா கடைசில தனக்காக பேசினது ரொம்பவே அருமை..அதை சஞ்சய்க்கு புரிய வைத்ததும் படிக்க நல்லா இருந்தது..!!


இந்த நாயகி வசுந்தரா பெரும்பாலான பெண்களுடைய பிரதிபலிப்பாதான் இருக்கா .கணவனோ மனைவியோ அவங்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி தயக்கம் இல்லாமல் ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சுக்கனும் ..எந்த ஒரு‌விசயத்திலும் ஒளிவு மறைவு இல்லாமல் இருக்கிறதுதான் பெட்டர்.. பெரும்பாலும் பெண்கள் பேச தயங்கும் விசயத்தை சமயோசிதமாக சிந்தித்து அதை கதையின் கருவாக படிக்க விகல்பமில்லாத எழுத்துக்களால் கொடுத்த ஆசிரியருக்கு பெரிய பாராட்டுக்கள்..இப்ப உள்ள கணவன் மனைவி பிரச்சினைகளுக்கு இதுவும் ஒரு காரணம் தான்...கணவனோ மனைவியோ தனக்கான தேவைகளை கூச்சப்படாமல் கேக்கனும் அப்போதான் நல்ல புரிதல் உண்டாகும்...இதை ஆசிரியர் சொன்ன விதம் பிடிச்சது.

சஞ்சய் ஆரம்பத்துல வசுந்தரா மேல வச்ச காதல் கல்யாணம் பண்ண பிறகு கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சது போல பீல்..ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டோம் குழந்தையும் வந்துடுச்சு அவளுக்கு தேவையான காசு பணம் கொடுக்குறோம் அப்றோம் என்ன தேவை இருக்கபோகுதுனு நினைச்சு அசால்ட்டா விட்டுடுறான்..ஆனா ஒரு பொண்ணுக்கு எல்லாத் தேவையும் இருக்குன்றத புரிஞ்சுக்க தவறிட்டான்..ஆனா வசுந்தரா அதை அவனுக்கு புரிய வச்ச விதமாகட்டும் அதை சஞ்சயும் புரிஞ்சி கிட்ட விதமாகட்டும் எல்லாத்தையுமே ரொம்ப அருமையா சொல்லி இருக்காங்க ஆசிரியர்..!!

அனு & பிரபு - சஞ்சையுடைய அம்மா அப்பா ..இவங்க ரெண்டு பேரும் ரொம்ப சூப்பர்ப்பா ..வசுந்தராக்கு தாயாகவும் இருந்தாங்க..அதே சமயம் அவளுக்கு ஒரு நல்ல மருத்துவரா அவளுடைய உணர்வுகளை புரிஞ்சி கிட்டு சரியான அறிவுரையும் கொடுத்தாங்க ,தன்னோட‌ பையனாகவே இருந்தாலும பொண்ணா வசுந்தராவ புரிஞ்சி கிட்டு சஞ்சய் கிட்ட சொன்ன விதம் எல்லாமே நம்ம மனசுல நின்னுட்டாங்க!!

வசுந்தராவுடைய பிரெண்ட் கவல் இவங்க வந்தது கொஞ்ச சீன்ஸ்தான்.. ஆனாலும் அவங்க சீன்ஸ் வித் வசுந்தரா நல்லா இருந்தது...

கோகிலா ஒரு அம்மாவா தோத்துட்டாங்க.

ஆசிரியர் கோகிலா வசுமதி பற்றி அப்றோம் சரியா சொல்லல ..சட்டுன்னு கதைய‌முடிச்ச‌ மாதிரி இருந்தது..

இப்ப உள்ள காலத்துக்கு ஏற்ப எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டிய‌கதை..

ஆசிரியர் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
 
Pommu Novels அவர்களின் அப்ளிகேஷனில் நடக்கும் போட்டி கதைகள்
#AVP12

"உயிர் வாங்கிடும் மோகினி நீயடி"
மோகினியின் எழுத்தில்.

பெண்கள் பேச வேண்டும் என நினைத்தாலும் இதைப் பற்றி எப்படி சொல்வது என பல நேரங்களில் தயக்கம் கொண்டு பேசாமல் தவிர்த்து விடும் ஒன்றைப் பற்றி எழுதி இருப்பது பாராட்டுக்குரியது. 👏
வசுந்தரா... மூன்று பெண்களுக்கு இடையில் நடுவில் பிறந்தவள். அதனாலேயே நிறைய விஷயங்கள் இவளுக்கு கிடைக்காமல் போகிறது. பெற்ற அன்னையே இவளின் நிறம் கொண்டு வெறுப்பது நமக்கு இவளின் மேல் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது 😔 அன்னையும் சகோதரிகளும் இவளுக்கு செய்யும் கொடுமைகளை வாய் மூடி பொறுத்துப் போகிறாள். இவளுக்கு ஒரே ஆதரவாக இருப்பது இவளின் தந்தை ரகுபதி மட்டுமே. ரகுபதி இரண்டாவது மகளின் மீது அதிக பாசம் கொள்கிறார். மனைவியை எதிர்க்க முடியாமல் சில இடங்களில் தவித்தாலும் பல இடங்களில் மகளுக்காக நிற்கிறார் 👏 👏
இப்படி தனக்கு வேண்டியவற்றை கூட கேட்டு பெற்றுக்கொள்ள தைரியம் இல்லாமல் அதற்கு விருப்பமும் கொள்ளாமல் அமைதியாகவே நிறைய விஷயங்களை கடந்து விடும் இவளை விரும்பி மணமுடிக்கிறான் ஒருவன். அவன் காதலில் திளைத்து மகிழ்வுடன் வாழ்ந்தாலும் ஒரு நிலையில் இவளுக்கு ஒரு விதமான விரக்தி நிலை ஏற்படுகிறது. தன் மனதில் உள்ளவற்றை தயக்கம் கொண்டு பேசாமல் எப்போதும் மௌனமாக இருப்பவள் தன் கணவனிடமும் அதே நிலைப்பாட்டை கொண்டுள்ளாளா அல்லது தனக்கானவற்றை தான், தான் பேசி பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் தன் தயக்கத்தை தகர்த்து தன் வாழ்வை வளமாக்கி கொண்டாளா என்பது கதையில்.
சஞ்சய் குமார்..
ஒரு சூழ்நிலையால் வீட்டில் இருந்து வேலை பார்ப்பவனுக்கு தேவதையாகவோ அல்லது மோகினி ஆகவோ கண்களில் அகப்படுகிறாள் வசுந்தரா. தன் மனதிற்கு பிடித்தமான பெண்ணின் பின்னே சென்று காதலித்து அவளையும் காதலிக்க வைத்து திருமணம் செய்து கொள்ள நேரமில்லாமல் தன் பெற்றோரிடம் தன் ஆசையைக் கூற மகனின் ஆசைக்கிணங்க அவன் ஆசைப்பட்ட பெண்ணை அவன் மனைவியாக்கி விடுகிறார்கள் மருத்துவரான அவன் பெற்றோர்கள். நல்ல பெற்றோர் 🥰
மனதிற்கு பிடித்த பெண் மனைவியான பிறகு ஒரு குழந்தையும் வந்துவிட அதற்குப்பின் வேலை மட்டுமே கவனத்தில் இருக்கிறது இவனுக்கு. ஆணைப் போல பெண்ணுக்கும் ஆசைகளும் தேவைகளும் உண்டு என்பதை தெரிந்து கொள்கிறான். தான் தவறவிட்ட விஷயங்களை மருத்துவரான அன்னையின் வழிகாட்டுதலில் தன்னை சரி படுத்திக் கொண்டு தன் வாழ்வை எந்த சிக்கலும் இல்லாமல் வளமாக்கிக் கொண்டானா என்பது கதையில்.

பிரபு...அனுபமா.. ஒரே செல்ல மகனின் மீது உயிரையே வைத்திருக்கிறார்கள். அவன் ஆசைப்பட்ட அனைத்து நல்லவைகளும் அவனுக்கு கிடைக்க வேண்டும் என நினைப்பவர்கள் அவன் ஆசைப்பட்ட பெண்ணையும் இரு வீட்டு சம்மதத்துடன் அவனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.
அனுபமா வசுந்தராவின் பாண்டிங் மிக அழகு 🥰 அன்னையிடம் கிடைக்காத அனைத்து பாசங்களும் மாமியாரிடம் கிடைக்கிறது இவளுக்கு 🥰 மகள் இல்லாத குறையை மருமகளை வைத்து நிறைவேற்றிக் கொள்கிறார் அனுபமா. மாமியாராக இல்லாமல் மருத்துவராக வசுந்தராவிடம் இவர் பேசுவதும் அவளைப் பேச வைத்து அவள் மனதில் உள்ளவற்றை தெரிந்து கொள்வதும் அருமை 👏
கோகிலா.. இதெல்லாம் தாயா சரியான பேய் 😡 வசுமதி.. தங்கைக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைத்து விடக்கூடாது என அதை தடுக்க முயற்சி செய்யும் சதிகாரி.
தன் மனைவியை இவர்களுக்கு பிடிக்காது ஆனால் அவளின் பணம் மட்டும் இவர்களுக்கு தேவையா என்று கோபப்பட்டு சஞ்சய் இவர்களை நிற்க வைத்து கேட்கும் கேள்விகள் அனைத்தும் சபாஷ் 👏👏

திருமணமான பல பெண்கள் பத்து வருட வாழ்க்கைக்கு பிறகு தங்களுக்கு வேண்டிய சிலவற்றை பேச முடியாமல் தயங்கி தவிர்த்து வருவது நிஜமே. வசுந்தராவின் மனக்குமுறல்கள் அனைத்தும் பல பெண்களுக்கு இன்று வரை இருப்பதுதான். தங்களுக்கு வேண்டியதை பெண்கள் தான் பேசி பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு தயங்குவதோ வெட்கப்படுவதோ தேவையில்லாதது. ஒரு ஆணுக்கு எப்படி அனைத்தும் தேவையோ அது போலவே பெண்களும். அவளுக்கும் அனைத்து உணர்வுகளும் இருக்கிறது. அனைத்து இன்பங்களும் அவளுக்கும் சரிசமமாக கிடைக்கத்தான் வேண்டும். அதை எந்த முகச்சுழிப்பும் இல்லாமல் தைரியமாக எழுதிய எழுத்தாளருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் 👏
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰🌹
Good luck 🥰❤️

Please read this amazing book on AP Verses App. Click on the link to read the story -
 
உயிர் வாங்கிடும் மோகினி நீயடி


குடும்பத்தின் அடிப்படை அரசியல் சிக்கலில் அடிப்பட்டதால்,அதன் தாக்கம் பெற்ற பெண் என்றும் பாராமல் தன் மாமரியரின் மீது இருந்த கோபம் ,பிடித்தமின்மை அனைத்தும் பெற்ற மகளின் மீது திசை திரும்பினால் ,அவள் நிலை ..



பெற்ற தாயும், கூட பிறந்தவர்களும், ஒதுக்கி ,ஓரங்கட்டி, வதைக்கு ஆளாக்கும் பெண்ணவள்.



யாரோ வதைத்தாளே தாங்காது, இங்கு பெற்றவளே வதைத்தால்…அதன் வலி சொல்லிட முடியுமா…



இரவென்று ஒன்று உண்டென்றால் பகலும் இயற்கை தானே…



அவளை அன்பை தாங்க…ஆசையாய் பொத்தி பாதுகாக்க..ஆழமாய் நேசிக்க…கண்ட நாள் முலாய் காத்திருக்கிறான் ஒருவன்..



சஞ்சய் இது தான் நாயகனின் பெயர்…அவளோ வசுந்தரா…


இருவருக்குமான பெண் பார்க்கும் வைபவம் நடக்க, அங்கு நடக்கும் சில நிகழ்வுகளே வசுந்தராவிற்கு அவ்வீட்டில் எந்த இடம் காட்டிவிகிடுகிறது.




கரம் பிடித்து உளம் சேர்க்கிறான்,,தன் குடும்பத்தில் ஒருத்தியாக ..பாசகூட்டின் அங்கமாக..



அக்குடும்பத்தில் தன்‌ குடும்பத்தில் கிடைக்காத பாசம், முழுமையாக கிடைக்கிறது இங்கே…அன்னையை விட மேலாக தாங்கும் மாமியார்..அவள் முகம் பார்த்து அகம் காணும் கணவன் என வாழ்க்கை நகர்கின்றது .



சஞ்சய்க்கு வேலை பொருட்டு இடமாற்றம் செய்ய நேரிடுகிறது.



பிடித்தமில்வையென்றாலும் வேறு வழியின்றி தனியே செல்கின்றது.



சிறு கூடு என்றாலும்,கொஞ்சம் நாட்களே என்றாலும்‌அலாதி அன்பில் நனைந்தவளால் ,இங்க தனிமை கொள்கிறது.




தன் கவனத்தை திசை திருப்ப வேலைக்கு செல்கிறாள்.



ஏனோ இன்னும் அந்த வெறுமை விட்டு விலாகமல் இருக்க…தன் சக ஊழியை பள்ளி தோழியிடம் பகிர..அவள் சில உபாயம் கூறுகிறாள்.



அவள் கூறுவதை கேட்டவள் திடுக்கிட்டு இப்படியெல்லாம நடக்கும் என ஆச்சரியம் அதிர்ச்சியும் அடைந்தாலும், அவ்வழி செல்ல மனமில்லாமல்.



தன் மாமியாரையே நாடுகிறாள்.


அன்பான கணவன் இருந்தும், அவள் வெறுமைக்கான காரணம் தான் என்ன..



அவள் பிரச்சனையை மாமியாரின் துணைக்கொண்டு எப்படி சரிசெய்தாள்…


என அழகான இதமான காதல் நகர்வு…


உயிர்வாங்கிடும் மோகினி நீயடி…அன்பின் சாரல்
 
உயிர் வாங்கிடும் மோகினி நீயடி
Growing up, வசுந்தரா was made to believe her worth depended on the shade of her skin. Rejected by her own mother and sisters, she never imagined finding a love that truly saw her heart.
When she marries சஞ்சய், she steps into a world of warmth and care she had never known. But as the honeymoon bliss fades, the realities of life busy schedules, physical and emotional changes, and lingering insecurities begin to weigh on her, leaving her retreating into silence.
Through a journey of patience, understanding, and quiet strength, Vasundhara and Sanjay discover that a flourishing marriage isn’t just about finding the right person it’s about choosing to stay present and connected, even when life gets overwhelming✨
❤️
 
Top