ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 13-மன வானின் விண்மீனே

மனவானின் விண்மீனே
நாயகன்: திருச்சோழன்
நாயகி: வெண்மதி
நம்ம நாயகன் அறிவு செல்வம் புகழ் எல்லாத்திலயும் சிறந்து விளங்குபவர் அவரை நிறத்தை காரணம் காட்டி அம்மா அதுக்கு தகுதியே இல்லாதவங்க ஜெயந்தி ஒதுக்கி வைக்கிறாங்க...
பெரியப்பா- குருபரன் பெரியம்மா-ஸ்வர்ணாம்பிகை தங்கள் சொந்த பிள்ளைகளை போல வளர்க்கின்றனர் சோழனும் அம்மாவை விட்டு விலகிடறார்...
நம்ம நாயகி வெண்மதி குணத்திலும் அந்த நிலவு போன்ற குளிர்மையானவள் வேலை பார்க்கும் இடத்தில் வெண்மதியை சோழன் பார்த்து பெண் கேட்டு திருமணம் புரிகிறார்...சில புரிதல்கள் இல்லாமல் வெண்மதியை நாயகன் தவிர்க்கிறார்.. சதாசிவம் ஐயா சோழனை வழிநடத்தும் வழிகாட்டியாக உள்ளார்..சோழனின் அண்ணன் அருட்சோழன் சுயநலத்தின் மறு உருவம்....வெண்மதி யின் மனதை சோழன் புரிந்து கொண்டாரா .. ஜெயந்தி மனம் திருந்தி சோழனை ஏற்றுக்கொண்டாரா என்பதே கதை...சோழனின் தகப்பன் வேல்முருகன் மிக்சர் மாமாவாவே இல்லாமல் கடைசியாக மதிக்கு சப்போட் பண்ணியது சூப்பர் ..மொத்தத்தில் மதியின் அய்யனார் சோழன்... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰 💐 ❤️
 
Last edited:
Pommu Novels அவர்களின் அப்ளிகேஷனில் நடக்கும் போட்டி கதைகள்
#AVP13
"மன வானின் விண் மீனே "
Uma nathan அவர்களின் எழுத்தில்.
திருச்சோழன் தன் ரெட்டை சகோதரன் அருட்சோழன் போல் வெண்மை நிறத்தில் இல்லாமல் கார்மேக நிறத்தில் இருந்ததால் பெற்ற தாயாலேயே ஒதுக்கி வைக்கப்படுகிறான். குழந்தை இல்லாத அவன் பெரியப்பா குருபரன் மற்றும் பெரியம்மா ஸ்வர்ணாம்பிகை இவன் மீது அன்பு கொண்டு சொந்த மகனாக அவனை வளர்த்து வருகிறார்கள். அவனும் பெற்ற அன்னை தந்தை மேல் கொள்ளாத பாசத்தை இவர்களின் மேல் கொட்டுகிறான். பெரியம்மா கூறும் எதையும் தட்டாமல் செய்பவனின் குணத்தை தெரிந்து கொண்டு அருட்சோழன் அவனின் தேவைக்காக இவனிடம் இருந்து தொடர்ந்து பணத்தை பெற்று வருகிறான். அனைவரும் இருந்தும் தனக்கென பார்ப்பதற்காக யாரும் இல்லையே என்ற வருத்தம் மனதில் இருக்க அதை போக்கவே வருகிறாள் வெண்மதி. திருவின் கம்பெனியில் வேலை செய்பவளின் மீது விருப்பம் ஏற்படுகிறது அவனுக்கு. இரு வீட்டு சமத்துடன் அவளை மணம் முடிக்கிறான். ஆரம்பத்தில் காதலாக நகரும் இருவரின் வாழ்விலும் பெரும் துன்பமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாத நிலை ஏற்படுகிறது. தங்களின் மனக்குமுறல்கள் தீர்ந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டார்களா என்பது கதையில்.
கார்த்திகேயன் அஞ்சலி சதாசிவம் நிரஞ்சன் அருமையான கதாபாத்திரங்கள்.
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதை. நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰🌹
 
மனவானின் விண்மீனே

உமாநாதன்


திருசோழன்

வெண்மதி

அழகு மனதை பொருத்ததே,ஆம் இக் கதையில் சரியாய் பொருந்திருக்கும் நம் நாயகனும், பெற்ற

தாயால் ஒதுக்கப்பட, தாயாய் மடி தாங்குகிறார் பெரியதாய்.


ஆயிரம் இருந்தாலும் அன்னையின் மடி தேடும் குழந்தை , தன் இரட்டையை மட்டும் தாங்கி, தன்னை ஒதுக்குவதற்கான காரணத்தை அறியாமல், ஏங்கி தவித்து காலம் அதற்கான விடையை அளிக்க,தானே அவர்களை தவிர்த்து விலகி நிற்கிறான்.


ஒரு கட்டத்தில் மகனின் ஒதுக்கம் தந்தையை தாக்க, மகனை நெருங்க முயல,முயல மட்டுமே முடிந்தது.



அழகான ஆழமான புரிதலுடனான நட்பு கிடைத்திட, தோள் தாங்கி ஆறுதல் படுத்தி அன்பு காட்டிடும் அழகான நட்பு.



வாழ்க்கையின் ஆக சிறந்த வழிகாட்டி அற்புதமாய்அமைந்ததும் வரமே.


பெற்ற அன்னையை பெரியன்னையிடம் பாசம் மிகுந்த இருந்தாலும், இரு பிள்ளைகளையும் ஒன்றை பாவிக்கும் அவரது குணம் அவனை வதைக்க, தனக்கே தனக்கான உறவு, தன்னை மட்டுமே முன்னிருத்தி,தன்னை விட்டுகொடுக்காத உறவுக்காக மனம் ஏங்கி தவிக்க தான்‌ செய்தது.



பணத்திற்கு தான் பஞ்சம் , பாச்த்திற்கோ பஞ்சமில்லா குடும்பத்தில் பிறந்து , நம்பிக்கை துரோகத்தால் சொந்த ஊரை விட்டு வெளியோறி வயிற்று பிழைப்புக்காக வேலைக்கு செல்லுமிடத்தில் நாயகனை, ஒரு சிக்கலான சூழ்நிலையில் சந்திக்க, இருவருக்கிடையே ஏற்படும் விருப்பம் திருமண பந்த்தத்தில் முடிகிறது.



ஆசையான திருமணம் தான் ஆனால் ஏனோ, ஒரு மெல்லிழையில் இருவரும் பிணக்குடன் தான் செல்கிறான்.



காரணம் தெரியாமல் நாயகி குழம்ப, நாயகனோ, வாய் திறந்தால் தானே…

மீண்டும் பிரிவுக்கு வழிவகுக்கிறது.



இவர்கள் பிரிவதற்கான காரணம் தான் என்ன


நாயகனின் மனதின் ஏக்கம் பெண்ணவளால் பூர்த்தி ஆனாதா


தாயாள் நிராகரிக்கப்படுவதற்கான காரணம் தான் என்ன


இவனது நட்பின் அழகியல் , நாயகன் தாய் தந்தையரை ஏற்றானா,என பல நகர்வுகளுடன்

மனவானின் விண்மீனே…மின்னல் கீற்று


வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி
 
மன வானின் விண்மீனே
This story is about two people திருச்சோழன், who was rejected for his skin color from a young age, and வெண்மதி, who stood by him through everything. They try to understand each other without saying much, but the story shows how they truly connect.
It explores their mutual understanding, overcoming emotional barriers, and coming together✨
While the theme of color-based bias is handled well, I didn’t find it very engaging since I’ve read similar stories before🙃
 
மன வானின் விண்மீனே!



நிறத்தை வெச்சு பெற்ற தாயே நாயகனை ஒதுக்க, அவனை அரவணைக்கும் அன்பாய் நம் நாயகி வெண்பா.

இரட்டை குழந்தைகளாக நம் நாயகன் பிறந்திட, அவனின் சகோதரன் போல் வெண்மை நிறத்தில் இல்லாமல் கருமை நிறத்தில் இருப்பதால் பெற்ற தாயே அவனை ஒதுக்கி வைக்கிறார்.

குழந்தை இல்லாமல் தவிக்கும் அவனின் பெரியன்னை இவனை மகனாக பாவித்து பாசத்துடன் வளர்க்கவும் செய்கிறார். இவனின் மன வெறுமையை போக்கவே வருகிறாள் நம் நாயகி வெண்பா..

அவன் சகோதரன் செய்யும் தவறுகளையும் சரியாக சுட்டி காட்டுகிறாள்.

ஆரம்பத்தில் இருவரும் புரிதலுடன் இருக்க, பின்பு புரிதல் இல்லா நிலையில் சிக்கி தவிக்கிறார்கள். அதை கடந்து எப்படி வாழ்க்கை என்னும் பயணத்தில் நீந்தினார்கள் என்பதே மீதி கதை.

கதை படிக்க நன்றாக இருந்தது.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்து
க்கள் சிஸ்டர்..
 
Top