ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 10- அனலவனின் ஆலியவள்

அனலவனின் ஆலியவள்

இது ஒரு ஆன்டி ஹீரோ கதை!!!

இந்த கதையோட நாயகன் ருத்ர ராவணன் ..இவன் பெரிய சினிமா ஹீரோ ..தனக்கு இருக்க ocd problem வெளிய தெரியகூடாதுன்றதுக்காக சினிமால ரொம்ப அழகா இருக்க ஹீரோயின் மைதிலிய கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறான் ..ஆனா மைதிலி ஆகாஷ்னு ஒரு‌ பையன லவ் பண்ணுறா ..ருத்ரா மைதிலியை அவனை‌கல்யாணம் பண்ற தவிர வேற வழி இல்லாத சிச்சுவேசன்ல நிறுத்திடுறான்..மைதிலி கிட்ட வேலை பார்க்கிற பொண்ணுதான் நம்ம நாயகி சீதா மகாலட்சுமி.. எதிர்பாராத விதமாக ராவணனுக்கு மைதிலி கூட நடக்க இருந்த கல்யாணம் சீதா கூட நடந்துடுது .. இதனால சீதாவோட நிலைமை என்னாச்சு? அவளை ராவணண் ஏத்துக்கிட்டானா ? இதை எல்லாம் கதைல படிச்சு தெரிஞ்சுக்கலாம்..

சீதா மகாலட்சுமி - ரொம்ப சாந்தமான பொண்ணு அப்பா அம்மா இல்லாம மாமா கிட்ட வளர்ரா .. அத்தையின் கொடுமைக்கு பயந்து மைதிலிகிட்ட வேலைக்கு வர்ரா ..மைதிலிக்கு உதவ போய் ராவணன் கிட்ட மாட்டிகிட்டு இவ படுற பாடு இருக்கே பாவம்பா இந்த பொண்ணு.‌.

ராவணண் பேருக்கு ஏத்த மாதிரி தான் யாருக்கும் அடங்காதவன் ..தன் சொந்த குடும்பத்தையே ஒதுக்கி வச்சிருக்கவன் ..அவனுடைய அன்பை எதிர்பார்த்து இருக்கும் அவனுடைய தாய் தாட்சாயணி.அவனுக்கு நெருக்கமான நட்பு வித்யுத் ...திட்டம் போட்டு மைதிலியை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறான்..ஆனா அவளுக்கு பதிலாக சீதா இவனுக்கு மனைவியாகிடுறா ..இதனால் சீதாவ ரொம்ப கஷ்டப்படுத்துறான்.. தன்னை ஏமாத்துனதுக்காக மைதிலியையும் நடுத்தெருவுக்கு கொண்டு வந்துடுறான்.. சீதாவை வெறுப்பேத்தனுங்கிறதுக்காக சில பல வேலைகள் செய்யுறான் இதனால சீதா ரொம்ப கஷ்டப்படுறா. ஆனால் ராவணணுக்கே புரியாமல் அவளை லவ் பண்ணிட்டு இருக்கு பயபுள்ள ஆனாலும் ஈகோ அவனுக்கு அவ எப்படி என் மனசுக்குள்ள நுழையலாம்னு ... கொஞ்சம் கொஞ்சமா சீதாவை பிடிக்க ஆரம்பிக்குது ராவணணுக்கு ..அவனுக்கு ஆக்ஸிடென்ட் ஆன டைம்ல அவன் குடும்பம் அவன் மேல் எவ்ளோ பாசம் வச்சு இருக்காங்கன்னு புரிஞ்சிகிறான் ..சரி சீதா கூட வாழலாம்னு அவனுக்கு தோணுற நேரம் சீதாவுடைய அப்பா யாருன்னு தெரிய வருது .. தெரிஞ்ச‌ பிறகு அவன் ஒரு திட்டம் போடுறான்.. அதுக்கப்புறம் சீதாவோட‌ காதலா வாழ ஆரம்பிக்கிறான் ராவணன்..சீதாவும் அவனை காதலிக்க ஆரம்பிக்கிறா.... இரண்டு பேரும் ஹனிமூனுக்கு போயி வாழ ஆரம்பிக்கிறாங்க ..

அங்கதான் ராவணன் அடிச்ச ட்விஸ்ட் ..சீதாவ நாகராஜ் வீட்டுல கொண்டு போயி விடுறான்.. நாகராஜ் தான் சீதாவோட அப்பா..சின்ன வயசுல ஹீரோவா நினைச்ச தன்னோட அப்பா இறக்க காரணம் இந்த நாகராஜ் தான் ... சோ அவர பழிவாங்க அவர் குடும்பத்துல குழப்பத்தை ஏற்படுத்த தான் சீதாவை இங்க கொண்டு வந்து விட்டுட்டு போயிடுறான்..பட் அந்த டைம் சீதா அழுதது கெஞ்சுனது எல்லாமே ரொம்ப பாவம்பா 😒😒😒அங்க அவளை அரவணைக்கிறது அவளுடைய அக்கா வெண்பா தான் ..

சீதாவை விட்டு பிரிஞ்சு ராவணனும் ரொம்ப பீல் பண்ணிட்டு தான் இருக்கான் ...இப்ப பீல் பண்ணி என்ன பண்ண 😬😬😬 அவள அங்க விடும்போது யோசிச்சு இருக்கனும் ..அவளை விட்டு பிரிஞ்சு இருக்க முடியாதுனு அவளை கூப்பிட்டு வர அங்க போறான் ராவணன்...இவன் கூப்பிட்ட‌உடனே அவ‌ வருவாளா ? இவனை பதிலுக்கு இவ வச்சி செய்யுறா..ஆனா இன்னும் கொஞ்சம் ராவணனை அலைய விட்டு இருக்கனும் சீதா ..கடைசில ராவணணுடைய காதலை புரிஞ்சி கிட்ட சீதா இரண்டு பேரும் சேர்ந்துடுறாங்க.தன்னோட பையனை இந்த அளவுக்கு மாத்தின மருமகள்கிட்ட நன்றி சொல்றாங்க தாட்சாயணி

வித்யுத் - நண்பனுக்கு நல்லவன்..ஏன்னா நண்பனுக்காக காதலை கூட விட தயாரா இருந்தவன் ..ஆனா காதலிச்ச‌பொண்ணையும் யோசிக்கனும்ல .நட்புக்காக காதலை விடக்கூட தயாரானவன்.. நல்ல நண்பண்தான்..ஆனா நல்ல காதலனா இல்லை தான்..ஆனா பரவாயில்லை கடைசில ரித்விகாவையே கல்யாணம் பண்ணி அவனுடைய காதலை மீட்டுக்கிட்டான்

வெண்பா & ராகினி - இவங்க வந்தது பிற்பாதி தான்.ஆனா சீதாவுக்கு ரொம்ப சப்போர்ட்டா இருந்தாங்க..அதேபோல் அவங்க அம்மா லதாவும் ..வெண்பா கேரக்டர் நல்லா இருக்கு..

நாகராஜ் - இவரால தான் சீதாரொம்ப கஷ்டப்பட்டா..இப்படி ஒரு அப்பா சீதாக்கு தேவையில்லை..

சீதா அத்தை குடும்பம் - ச்சை இதுங்கள்ளாம் என்ன குடும்பம்..சீதாவுக்கே தெரியாம அவளுடைய காசுலயே சாப்பிட்டுக்கிட்டு அவளையே வேலைக்காரி மாதிரி நடத்தினாங்க..ஆனா கர்மா சும்மா விடாது ..கடைசில அவங்களுக்கு அந்த நிலைமை வந்ததுலாம் செம்ம 👍

அதேபோல் மைதிலி ஆகாஷ் காதலும் அருமை.. தங்களுடைய காதலுக்காக ரொம்ப effort போட்டாங்க..மைதிலி சீதாவின் பிணைப்பும் ரொம்ப நல்லா இருந்தது.!! 💕

காதல் ஒருவனை எப்படி மாற்றும் அப்படின்றதுக்கு உதாரணம் நம்ம ருத்ராதான்..அடங்காத ராவணணையும் தன் விழியசைவில் ஆட்டுவிக்கும் சீதா மகாலட்சுமியையும் சிறப்பாக கொடுத்தார் ஆசிரியர்...!!

சீதாவின் ராவணன் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!!
 
Last edited:
Pommu Novels அவர்களின் அப்ளிகேஷனில் நடைபெறும் போட்டி கதைகள்.
#AVP10
RJ novels
அவர்களின் எழுத்தில்
அனலவனின் ஆழியவள்
ஆன்டி ஹீரோ கதை இது.
ருத்ர ராவணன்.. தன் நீல நிற விழிகளால் அனைவரையும் வசியப்படுத்துபவன். முன்னணி ஹீரோ மற்றும் ப்ரொடியூசர். பணம் புகழுக்கு பஞ்சமே இல்லை இவனிடம். அதுவே இவனுக்கு திமிரையும் கொடுத்ததோ ..?
தன் துறையிலேயே பிரபலமாக இருக்கும் கதாநாயகி மைதிலியை கட்டாய திருமணம் செய்து கொள்ள முனைகிறான். இவனிடம் பணம் வாங்கி அதை திருப்பி கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் மைதிலியின் தந்தையை பணத்திற்காக நிர்பந்தப்படுத்தி அவர் மகளை மணம்முடிக்க நிச்சயதார்த்தமும் இனிதே நடந்து முடிகிறது. ஆனால் இடையில் வந்த மாட்டிக் கொள்கிறாள் சீதா மகாலட்சுமி. இராவணனிடம் மாட்டிக் கொண்ட சீதையின் நிலை போல் இவள் நிலையாகிறது. சீதை ராவணனிடம் இருந்து தப்பியது போல இவள் தப்பித்தாளா அல்லது அல்லது ராவணன் ராமனாக மாறினானா என்பது கதையில்.
மைதிலி ஆகாஷ் காதல் அருமை 🥰
வெண்பா கதாபாத்திரம் அழகு 🥰
சீதாவின் அத்தை குடும்பம்.. என்ன நல்ல நல்ல வார்த்தைகள் ஒருவரை திட்ட பயன்படுத்தலாமோ அதைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் 😡😡😡
நிறைய இடங்களில் சீதாவின் நிலை பாவமாக இருந்தது 😔
வித்யூத் ராவணனுக்கு மட்டும் நல்ல நண்பன்.
மைதிலி சீதா பாண்டிங அழகு 🥰
தனக்கு இருக்கும் பிரச்சனையால் கோபக்காரனாக வலம் வருபவனையும் மென்மையானவனாக மாற்றுகிறது காதல்.
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Good luck 🥰 ❤️
 
அனலவனின் ஆலியவள்


ஆர்.ஜே


நாயகன் : ருத்ர ராவணன்


நாயகி: சீதா மகாலஷ்மி



திரை துரையில் உச்சத்தில் இருக்கும் நாயகன்..பெண்கள் சூழ் உலகில் பெண்களை விரும்பாதாதால் சிலபல விமர்சனத்திற்கு ஆளாகிறான்.



அதே துரையில் உச்சத்தில் இருக்கும் நாடிகையை திருமணம் செய்து எல்லோருடைய வாயையும் அடைக்க நினைக்கிறான்.



இருவருக்குமே பிடித்தமில்லை..பிடிவாத திருமணம் செய்ய இடையில் சிக்குகிறாள் நாயகி




தாய் இல்லாமல் தந்தை இருநதும் இல்லாமல் அன்றைய நாள் தள்ளவதற்கே அவ்வளவு சிரமம் படும் இவள் ருத்ரனின் வாழ்க்கையால் அவனின் அனுமதியின்றி நுழைகிறாள் சந்தர்மவசத்தால்.



பின் என்ன வசவுகளும்,வலிகளுமாக வாழ்க்கை நகர, பெண்ணவளின் தந்தை யார் அறிய நேரிடுகிறது ஒருகட்டத்தில்.



கடந்த கால கசப்புகளில் கரும் புள்ளி வைத்து,மகழ்ச்சியான ருத்ரனின் சிறுவயது பிராயத்தை கலங்களாய் மாற்றி , இளம்வயது முழுவதும் இருக்கத்துடன் உலா வர செய்தவனின் மேல் வளர்த்த பகை, வன்மமாய் மாறி பழி வாங்க துடிக்கிறான்.



கோபம் கண்ணை மட்டுமா மறைக்கும்,அறிவையையும் அடகு கடைக்கு அனுப்பி விடுகிறது.


இவன் எடுக்கும் இந்த முடிவு இவன் வாழ்க்கையையும் சேர்த்து திண்டாட விடுகிறது.



பெற்ற பிள்ளைக்காக கவலைப்படாதவனா அவள் வாழ்க்கைக்காக கவலைப்பட போகிறான் என யோசனையில்லாமல் பழிவாங்க கிளம்பி அந்தரத்தில் ஊசலாடியது என்னமோ இவர்கள் இருவரது வாழ்க்கை தான்.


தந்தை ஆதரவே இல்லாத இடத்தில் தனித்த விடப்பட்ட பெண்ணவளின் நிலை என்ன?

கடைமட்ட பெண்ணவள் உச்சந்தில் இருக்கும் அவனை எவ்வாறு கரம்பிடித்தாள்.

ருத்ர ராவனின் இருக்கத்திற்கான காரணம் தான் என்ன


இதனுடைய சேர்ந்த அழகிய இன்னொரு காதலும்,ஒரு தாயின் வெகுகால வலியும் ,அன்பு தங்கையின் அண்ணுக்கான பாச ஏக்கமும் என கலவையான கதைக்களம்.வாசித்து மகிழுங்கள்


அனலவனின் ஆலியவள் …சுவாசிப்பு

வாழ்த்துக்கள்‌பா💖💖💖
 
அனலவனின்
ஆலியவள்

ருத்ர ராவணன் lives up to his name as a villain. His betrayal of Seetha’s innocent love and his cruel schemes for revenge make him a very difficult character to like.
The Suffering Heroine சீதா மஹாலக்ஷ்மியி
her life is a series of hardships. The "suffering" felt a bit overdone and exhausting to read.

The bond and friendship between the female characters (Mythili, Seetha, Venba, and Raghavi) were the only positive and heartwarming parts of the story.
The endless suffering of the heroine felt overwhelming, and the ending lacked a sense of true justice, as Ravanan didn't seem to face enough consequences for the trauma he caused. Overall, despite a fast-paced plot, the lack of emotional depth and the unsatisfying character arc left me disappointed.🙂
 
அனலவனின் ஆழியவள்

போட்டியில் நான் படித்த முதல் கதை..
அதுவும் ஆன்டி ஹீரோ கதை.

நம் நாயகன் ஹீரோ அண்ட் ப்ரொடியூசர்.. நீலநிறக்கண்ணன். பணம் இருக்கும் இடத்தில் கர்வமும் திமிரும் இல்லாமல் இருக்குமா.? நம் நாயகனிடமும் இருக்கிறது.

திரைத்துறையில் பிரபலமாக இருக்கும் மைதிலியை திருமணம் செய்ய முயல்கிறான். காரணம் மைதிலியின் தந்தை நாயகனிடம் பணம் வாங்கி திருப்பி தராமல் போனதன் விளைவு.

ஆனால் இடையில் சீதா ருத்ரனிடம் மாட்டிக் கொள்ள, மைதிலி தப்பித்து விடுகிறாள்.

ராவணனிடம் மாட்டிக் கொண்ட சீதையின் நிலை தான் இந்த சீதாவுக்கும். அவனை தன் குணத்தால் மாற்றினாளா.? இல்ல அவனின் குணத்தையே ஏற்றுக் கொண்டாளா.? என்பது தான் கதை.

மைதிலி ஆகாஷ் காதல் அருமையாக இருந்தது. வித்யூத் இவனை எனக்கு பிடித்தது. ஆனால் இவன் ராவணனுக்கு மட்டுமே நல்லவன்.

கதை சுவாரஸ்யமாக இருந்தது. போட்டியில் வெற்றி பெற வா
ழ்த்துக்கள்..
 
Top