ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 31- என் ரோஜா நீயே...

ஆரூஷிக்கும் விஹான்க்குமான காதல் தான் கதை ❤❤ காதல், நட்பு ,பாசம் ,பிரிவு மற்றும் வலினு எல்லாமே இருக்கு கதையில்😍


ஆரூஷி துரு துரு சுட்டி பெண் 😍 அவளின் சுட்டித்தனத்தினால் அவள் விஹானை மட்டுமல்ல என்னையும் ஈர்த்துட்டாள்❤


ஆரூஷி ரோகி நட்பு அருமை ❤ ஆரூ ரோகியை மாட்டிவிடுவது எல்லாம் சிரிப்பா இருந்தது ❤


விஹானின் காதல் அழகு ❤ ஆரூ அப்பாவின் பாசமும் அவரின் பயமும் புரிஞ்சுக்ககூடியதா இருந்தது 😞


ஆரூ இப்படி ஒரு முடிவு எடுப்பானு எதிர்ப்பார்க்கவில்லை 😰😰 அவளின் நிலை அச்சோ ரொம்ப கஷ்டமா இருந்தது 😞😞


எழுத்துப்பிழைகளை தவிர்த்திருக்கலாம் மற்றும் , சின்ன சின்ன பத்திகளாக பிரித்து எழுதி இருந்தால் இன்னும் சிறப்பான கதையாக இருந்திருக்கும் ❤ அழகான கதை ❤


போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊👍
 
என் ரோஜா நீயே!



நம் கதையோட நாயகன் விஹான்.. அப்பா இல்லாத பையன் தறுதலையா வளரும்னு சொல்றதுக்கு எதிராக இவன் பொறுப்பா ஒரு கம்பெனியை வெச்சு நடத்தறான்..

அங்க வேலைக்கு வர்ற நம் நாயகி ரூஹி.. அவளோட அவள் ப்ரெண்டு ராமும் வர்றான்..இவனோட பட்டப்பேரு ரோகி..

ரூஹியோட குழந்தை தனத்துல விஹான் விழ, இருவரும் சொல்லாமலே காதலை வளர்கிறாங்க..

இந்த காதலுக்கு வில்லனா வர்றது ரூஹியோட அப்பா தான்.. ஆனா பொண்ணுகிட்ட அவ்ளோ பாசமா இருக்கற மனுசன்.. அதுவும் மனைவி போனதுக்கு அப்பறம் தன் பொண்ணுக்காக வேற கல்யாணம் கூட பண்ணிக்காம இருக்கற மனுசன்.. இப்படி செய்வாருனு நான் நினைக்கல.. இவரு மேல இன்னும் கடுப்பு தான் இருக்கு..

ரூஹிக்கு காதலனா.? அப்பாவா.? என்ற நிலை வந்த போது பாவம் அவ..

அவ அப்பா பக்கமே நிற்க.. கோவப்பட்டு விஹான் வெளிநாடு போக.. மறுபடியும் வந்து ரூஹியை பார்த்தப்ப அவளோட நிலைமை🥺🥺🥺

பிறகு அவளை எப்படி சரி பண்ணி கல்யாணம் பண்ணுனான் என்பதே கதை..

ரூஹி ரோகி நண்பர்கள் அலப்பறை எல்லாம்😍🤣😂🤣😂

விஹான் ரூஹி காதல் மனசுல நின்னுருச்சுங்கோ😍😍😍


போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்டர்..
 
என் ரோஜா நீயே

ஆருஷி நம் நாயகி அடாவடி சுட்டி பொண்ணு. விஹான் நம் நாயகன்.அழுத்தம் நிறைந்த ஹீரோ. அவனுக்கு ஆருஷி மேல லவ் வருது. 2 பேரும் நல்லா சுத்திட்டு லைப்பை ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருக்கும் போது ஆரு அப்பா கபிலன் கண்ணுல படுறாங்க ரெண்டு பேரும்.

பணக்காரங்க மேல அவ்வளவு நல்ல எண்ணம் இல்லாதவரு தன்னோட பொண்ணை எதுவும் பண்ணிடுவாங்கனு நினைத்து ஆருவை மிரட்டி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குறாரு.

விஹான் கிட்ட ஆரு உன்னை லவ் பண்ணலனு சொல்லி அவனை மனசு நோக பேசிடுறாரு. விஹான் அவ கல்யாணம் நடக்குற சமயத்துல மனசு வருந்தி சிங்கப்பூர் போயிடுறான்.

3 வருஷம் கழிச்சு அம்மாவுக்கு உடம்பு முடியலனு ஊருக்கு வரான். ஹாஸ்பிடல்ல வைச்சு ஆருஷியை பார்க்குறான். அவ நிலைமையை பார்த்துட்டு ஷாக் ஆகிடுறான்.மனநலம் பாதிக்க பட்டு இருக்கா ஆருஷி.

எல்லாரையும் பார்த்து பயந்து நடுங்குறா. அவளுக்கு என்னாச்சு. ஆருஷி விஹான் சேருவாங்களானு கதையில் சொல்லி இருக்காங்க.

அழகான லவ் ஸ்டோரி. விஹான் ஒரு விதத்துல அவ மேல லவ் வைச்சு இருக்கான்னா. ஆருஷி அவன் மேல உள்ள லவ்க்காக உசுரை விட துணிஞ்சு அவ காதலை ப்ரூப் பண்றா.

2 பேருக்கும் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு அவ்வளவு லவ்.

ஆரு ராக்கி பிரண்ட்ஷிப் நல்லா அழகா இருந்துச்சு.

ராக்கி அவங்க அம்மா ரதி அவளுக்கு எல்லாமா இருக்குறது அழகா இருந்துச்சு.

ராக்கி ஆரு பண்ற அலப்பறை ரசிக்க முடிஞ்சுது.

ராக்கி நிலா லவ் இவங்க ஜோடி நல்லா இருந்துச்சு. கடைசியில் இவங்க பிரஸ்ட் நைட்ல ஆரு பண்ணின வேலை வேற லெவல் 🤣🤣

ஆருவை மாத்தி அவளை பழைய நிலைமைக்கு கொண்டு வந்து விஹான் கூட சேர்த்து வைச்சு ஆதிரை கூட முடிச்சது நிறைவாக இருந்துச்சு. 🥰🥰🥰

வாழ்த்துக்கள் 💐💐💐
 
என் ரோஜா நீயே
ஆருஷி, our sweet heroine, and விஹான், our intense hero, share a love that’s playful, deep, and unforgettable. When fate and family come in the way, their love is tested but true love always finds its path. 🥰
There are a few small typing mistakes they could have been adjusted a little..

Friendship, family, heartbreak, second chances, and pure romance all packed in one beautiful story. Vihaan and Arushi’s love will make your heart melt! 💖
 
Top