ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 11

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 11

சற்று நேரத்தில் சமையலறைக்குள் இருந்து வந்த பத்மாவோ, "மாமா சாப்பாடு ரெடி, வாங்க" என்று அழைக்க, ரத்னம் எழுந்துக் கொண்டார்...

"தேவ் நீ வரலையா?" என்று கேட்க, "பசிக்கல" என்றான்...

பத்மா அவனை முறைத்துக் கொண்டே, "நீங்க போய் சாப்பிடுங்க மாமா, நான் அழைச்சிட்டு வர்றேன்" என்று சொல்லிக் கொண்டே தேவ் அருகே செல்ல, ரத்னம் சாப்பிடுவதற்காக உள்ளேச் சென்று விட்டார்...

அவன் முன்னே வந்து நின்றாள்.

"தள்ளு, டி வி பார்க்கணும்" என்றான்...

"டி வி தான் இப்போ முக்கியமா?" என்று கேட்டுக் கொண்டே, அவன் கையில் இருந்த ரிமோர்ட்டை பறித்து தூக்கி போட, அவளை உறுத்து விழித்தவனோ, "ஏய்" என்றான் அதட்டலாக...

நீண்ட நாட்கள் கழித்து அவன் நீல விழிகளில் அனலைப் பார்க்கின்றாள்...

கொஞ்சம் பயமாக தான் இருந்தது... எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டே, "இப்போ எதுக்கு கோபம்? என் விஷயத்துல நான் தானே முடிவு எடுக்கணும்... நான் எங்க வேலை பார்க்கணும்னு நான் தான் டிஸைட் பண்ணனும்" என்றாள்.

ஒன்றும் பேசாமல் அவன் எழுந்து அவ்விடம் விட்டு நகர, "பேசிட்டு இருக்கேன்ல" என்றாள்.

"என்னடி?" என்றான் அவளை திரும்பிப் பார்த்துக் கொண்டே...

"நீங்க கேட்டது தப்பு தானே" என்று அவள் கேட்க, அவளை உறுத்து விழித்தவன், "உன் விஷயத்துல நீ முடிவு தாராளமா எடுத்துக்கலாம்... பட் நம்ம விஷயத்துலயும் நீ மட்டும் தான் முடிவு எடுக்கிற" என்று சொல்லிக் கொண்டே நகர, "வாட்?" என்று அவள் புரியாமல் கேட்க, "ஓகே லீவ் தட்" என்று சொல்லிக் கொண்டே நகர, கையை எட்டி பிடித்தவளோ, "சாப்பிட வாங்க" என்றாள்.

தன்னை நிலைப்படுத்தி ஆழ்ந்த மூச்சை எடுத்தவன், "பசிக்கல பத்மா" என்றான்...

அவள் முன்னே வந்து நின்றவளோ, "யூ ஆர் டூ ஸ்டபேர்ன் தேவ்" என்றாள்.

"எனக்கு உன் மேல கோபம் இல்லை... பசிக்கல அவ்ளோ தான்" என்று சொல்ல, "கோபம் இருக்கா இல்லையான்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தெரிஞ்சுது" என்றாள் எரிச்சலாக...

சட்டென அவன் புருவம் சுருங்க, "இப்போ என்னாச்சு?" என்று கேட்டான்...

"என்ன ஆகணும்... கொஞ்ச நேரம் முன்னாடி நான் வேலைய விட்டு நிற்க முடியாதுன்னு சொன்ன கோபம் எல்லாம் வச்சு என்னை ஹேர்ட் பண்ணுனீங்க தானே" என்றாள்.

சட்டென நெற்றியை நீவிக் கொண்டான்...

அவன் எதுவுமே வேண்டும் என்று செய்யவில்லை...

கோபத்தின் காரணமாக வேகமும் அழுத்தமும் அதிகமாக இருந்தது உண்மை தான்...

அவளும் 'வலிக்கின்றது' என்று ஒரு வார்த்தை சொல்லவே இல்லையே...

தன்னை நிதானப்படுத்திக் கொண்டே, "ரொம்ப ஹார்ஷ் ஆஹ் நடந்துக்கிட்டேனா?" என்று கேட்க, "அது கூட நினைவுல இல்லையா?" என்று கேட்டுக் கொண்டே, அவன் கையை பற்றி இழுத்துச் செல்ல, "எங்கடி அழைச்சு போற?" என்று கேட்டான்...

அறைக்குள் அவனை அழைத்து வந்தவளோ, கதவை தாழிட்டு விட்டு, அணிந்து இருந்த உடையை அகற்றி தன்னை காட்டினாள்...

"என்ன பண்ணி இருக்கீங்கன்னு பாருங்க" என்றாள்...

அவள் மேனி அவன் கரத்தின் அழுத்தம் தாங்க முடியாமல் சில இடங்களில் கன்றி சிவந்து இருக்க, ஆங்காங்கே பற்தடங்களின் அடையாளங்கள் வேறு...

அதனை பார்த்தவனுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது...

இரு கைகளாலும் முகத்தை அழுந்த தேய்த்துக் கொண்டே, "ஐ ஆம் சாரி" என்று தட்டு தடுமாறி சொல்லிக் கொண்டே, அவள் மேனியில் கையை வைக்க போக, சட்டென கையை தட்டி விட்டவளோ, "டோன்ட் டச் மீ" என்று சொல்லிக் கொண்டே ஆடையை அணிந்துக் கொண்டாள்.

"வலிக்குதுன்னு சொல்லி இருக்க வேண்டியது தானே... வாய்க்குள்ள கொழுக்கட்டையா வச்சு இருந்த?" என்று சீறினான் தனது கையை தட்டி விட்ட கோபத்தில்...

"ஓஹோ இப்போவும் நான் பண்ணுனது தான் தப்புல்ல?" என்று கேட்டாள்.

"இப்போ எதுக்கு பிரச்சனை பண்ணனும்னே பேசிட்டு இருக்க? வலிக்குதுன்னு சொல்லி இருந்தா விட்டு இருக்க போறேன்" என்று சொல்ல, "நீங்களா புரிஞ்சுக்குவீங்கன்னு நினைச்சேன்" என்றாள் கடுப்பாக...

"எல்லாமே புரிஞ்சுக்க நான் ஒன்னும் கடவுள் இல்லை... உன் மனசுல என்ன இருக்குன்னு வாய் விட்டு சொன்னா தான் தெரியும்" என்றான்.

அவன் சொன்ன வார்த்தைகளுக்குள் ஆயிரம் அர்த்தங்கள்...

பெண்ணவள் அதனை இப்போதும் உணர்ந்துக் கொள்ளவில்லை...

"எல்லாமே சொல்ற அளவுக்கு நம்ம நெருங்கலன்னு நினைக்கிறேன், நீங்களும் என் கிட்ட எல்லாமே சொன்னது இல்லையே, யூ ஆர் எ குட் ஆக்டர் தேவ்" என்றாள்.

அவள் வார்த்தைகளுக்குள்ளும் ஆயிரம் அர்த்தங்கள்...

அவனுக்கு அது புரியவில்லை...

"என்ன நெருங்கல? இதுக்கு மேல உனக்கு என்ன நெருக்கம் வேணும்? நான் என்ன நடிச்சேன்?" என்று கேட்க, "ஃபிஸிக்கல் ரிலேஷன் ஷிப் அப்புறம் இப்போ வரைக்கும் விலகி தான் படுக்கிறோம்" என்று சொல்லி விட்டு அவள் செல்ல, "ஏன் நீ கட்டிப்பிடிக்க வேண்டியது தானே... வேணாம்னு சொல்லிடவா போறேன்?" என்று சொல்ல, "கட்டிப்பிடிக்க தோணல" என்றாள் அவள் அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே...

"உனக்கு தோணாத போல, எனக்கும் தோணல" என்றான் அவன்...

"அது எனக்கு தெரியும்" என்று சொல்லிக் கொண்டே எச்சிலை கூட்டி விழுங்கியவளோ, "சாப்பிட வாங்க" என்று சொல்லி விட்டு வெளியேற, அவனும் மறுக்க தோன்றாமல் சாப்பிடச் சென்றான்...

இருவர் மனதிலும் ஒரு அழுத்தம்...

அடுத்தவர் தன்னிடத்தில் உண்மையாக இல்லையே என்கின்ற ஆதங்கம் இருவருக்கும் அதிகமாகவே இருந்தது...

அன்று மௌனம் தான்...

கட்டிலில் வழக்கம் போல முதுகு காட்டி படுத்துக் கொண்டார்கள். அதன் பிறகு அவன் அவளை நாடவே இல்லை...

அடுத்த நாள் ரிசெப்ஷனுக்கு ஆடை எடுக்கச் சென்றார்கள்...

சிவப்பு நிற லெஹங்கா அவள் எடுக்க, அவனோ, மெரூன் நிற கோட் ஷூட் எடுத்தான்...

அடுத்தவருக்கு பிடித்து இருக்கின்றதா என்று ஒரு வார்த்தை கேட்க இருவருக்கும் தோன்றவில்லை...

தங்கள் இஷ்டத்துக்கு எடுத்துக் கொண்டே கிளம்பி விட்டார்கள்...

ரிசெப்ஷனுக்கான நாளும் நெருங்கியது...

தேவ் தனது நண்பர்களுக்கும், அலுவலக ஊழியர்களுக்கும் அழைப்பு விடுத்து இருக்க, பத்மாவும் தனது அலுவலக நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தாள்.

இரவு நேர பார்ட்டி தான்... பெரிய ஹால் ஒன்றில் தான் எல்லாமே ஏற்பாடு செய்து இருந்தார்கள்...

நேரத்துக்கே தேவ், பத்மா மற்றும் ரத்னம் என்று எல்லோரும் ஹாலுக்குள் சென்று இருக்க, பத்மா அங்கே இருந்த அறைக்குள் அமர்ந்து ஆயத்தமாகிக் கொண்டு இருக்க, தேவ் அடுத்த அறைக்குள் ஆயத்தமாகி விட்டு, அப்படியே கைகளை கோர்த்தபடி கட்டிலில் அமர்ந்து இருந்தான்...

அன்று அவளை நாடி, அவளை காயப்படுத்திய பின்னர் அவளை அவன் நெருங்கவில்லை...

காயப்படுத்தி விடுவோமோ என்கின்ற பயம் தான்...

'ஏன் தேவ் இப்படி இருக்க?' என்று தனக்கு தானே கேட்டும் கொண்டான்...

அவள் இடத்தில் இருந்து யோசித்தான்...

அவனுக்கு இப்படியே வாழ்க்கைச் செல்வதில் இஷ்டம் இல்லை... சரி செய்ய வேண்டும் என்கின்ற முனைப்பு...

அவளை பிடிக்காமல் தான் திருமணம் செய்துக் கொண்டான்... இப்போது பிடித்து இருக்கின்றது... மிகவும் பிடித்து இருக்கின்றது...

'எனக்கு ஒரு மாசத்துல பிடிச்சதுக்காக அவளுக்கும் பிடிக்கணும்னு அவசியம் இல்லையே... கொஞ்சம் டைம் எடுத்துக்கட்டும்... என் மேல நம்பிக்கை வர்ற நேரம் அவளே எல்லாம் என் கிட்ட சொல்லுவா... அவ மேல கோபப்பட்டு அவளை ஹேர்ட் பண்ணி, அவ என்னை வெறுக்கிறத விட, வெய்ட் பண்ணுறது பெட்டர்... அவளுக்கு பிடிச்ச போல நடந்துக்கிறது பெட்டர்... முட்டாள் தனமா இருக்காம, நிதானமா இரு தேவ்' என்று தனக்கு தானே அறிவுரைகளை சொல்லி தன்னை நிலைப்படுத்தியவனுக்கு, இப்போது அவளை பார்க்க வேண்டும் என்று தோன்றியது...

தனது அறையை திறந்துக் கொண்டே, அவள் அறையை தேடிச் சென்று கதவை தட்ட, அவளும் கதவை திறந்தாள்.

லெஹங்கா மட்டும் அணிந்து இருந்தாள்.

இன்னும் அலங்காரம் செய்யவில்லை... தலைமுடியை தூக்கி கொண்டை போட்டு இருந்தாள்.

அவனோ கோட் ஷூட் என்று பக்காவாக வந்து இருக்க, "டைம் இருக்கு தானே?" என்று கேட்டுக் கொண்டே நேரத்தைப் பார்க்க, அவளை பார்த்ததில் இருந்தே அவன் சித்தம் கலங்கிப் போனது...

அவன் பார்வை மோகமாக மாற, அவள் இடையினை பற்றி பிடித்துக் கொண்டே உள்ளே நுழைந்து கதவை தாழிட்டான்...

"தேவ், ரெடி ஆகணும்" என்று சொல்ல, "செம்ம அழகா இருக்க, பத்மா" என்று சொன்னபடி, கழுத்தை பற்றி இதழில் இதழ் பதிக்க, "தேவ் ப்ளீஸ்" என்று அவள் கெஞ்சினாலும் அவள் மேனியும் அவனை நாடியது என்னவோ உண்மை தான்...

ஓரிரு நாட்கள் தான் விலகி இருந்தார்கள்... ஆனால் வருட கணக்கில் விலகி இருக்கும் உணர்வு தான் இருவருக்கும்...

அவன் கைகளோ அவளை அணைத்தபடியே, அவளது ஜாக்கெட்டின் பின் பக்க நாடாக்களை அவிழ்க்க ஆரம்பிக்க, "ரெடி ஆக வேணாமா?" என்று முனகிக் கொண்டே கேட்டாள் பெண்ணவள்..

"ஐ வில் ஹெல்ப் யூ" என்று சொன்னவனோ, சட்டென விலகி தனது கோட்டை கழட்டி விட்டு, ஷேர்ட்டையும் கழட்ட, அவன் திண்ணிய மார்பை பார்த்த பெண்ணவளுக்கும் அவன் நெருக்கம் தேவைப்பட்டது...

அவன் மார்பில் அவள் கையை வைக்க, அவள் ஜாக்கெட்டில் அவன் கையை வைத்தான்.

அதன் பின்னர் இருவரும் சேர்ந்து எழுதியது என்னவோ தாம்பத்திய கதை தான்...

அரை மணி நேரம் கடந்து இருக்கும், அங்கே இருந்த கட்டிலில் படுத்துக் கொண்டே, தலைக்கு பின்னே கையை வைத்தபடி கண்ணாடி முன்னே நின்று இருந்த பத்மாவை பார்த்தான் தேவ்...

"இத கட்டி விடுங்க" என்று சொல்லிக் கொண்டே, அவன் அருகே வந்து அவள் கட்டிலில் அமர்ந்து இருக்க, அவனும் குரலை செருமிக் கொண்டே எழுந்தவன், "வன்ஸ் மோர்" என்றான்...

அவளோ, "டைம் ஆயிடுச்சு... நான் ரெடி ஆகவும் இல்லை... ஆட்கள் வந்திடுவாங்க... நீங்க குயிக் ஆஹ் ரெடி ஆயிடுவீங்க.. நான் மேக்கப் போடணும், லிப்ஸ்டிக் போடணும். எவ்ளோ வேலை இருக்கு" என்று சொல்ல, "லிப்ஸ் சிவப்பா தானே இருக்கு" என்றான் அவள் ஜாக்கெட்டின் நாடாக்களை கட்டிக் கொண்டே...

"ஆஹ் இது நீங்க கடிச்சு வந்த சிவப்பு" என்று சொன்னவளுக்கு சிரிப்பும் வந்து விட்டது...

இந்த சில நாட்கள் அவன் அருகே வராமல் விட்டது அவளுக்கு என்னவோ போல இருக்க, இன்று தான் அந்த இறுக்கம் தளர்ந்து அவளால் புன்னகைக்க கூடியதாக இருந்தது... பிடித்து இருக்கின்றது, ஆனால் கோபம் இருக்கின்றது என்கின்ற மனநிலை தான் இருவருக்கும்...

"இன்னும் சிவக்க வச்சுடலாம்" என்று சொல்லிக் கொண்டே, அவள் இதழ்களை அவன் மீண்டும் கவ்வி இருந்தான்...

முத்தமும் சிணுங்கலுமாக ஆயத்தமாகி வெளியே வந்து விட்டார்கள்...

மனதுக்குள் எத்தனையோ சங்கடங்கள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு அடுத்தவர் அருகாமையை அனுபவிக்க ஆரம்பித்து இருந்தார்கள்...

ஒதுக்கி தான் வைத்தார்கள் தவிர, மறந்து விடவில்லை... என்றோ அவை பூகம்பமாக வெடிக்க கூடும் என்று அப்போது அவர்களுக்கு தெரியவும் வாய்ப்பில்லை...

அவன் அழைத்தவர்கள் எல்லோரும் வந்து இருந்தார்கள்...

பார்ட்டி களை கட்டியது...

ஆத்மன் மற்றும் பூர்விகாவும் வந்து இருக்க, ஆத்மனோ, "அன்னைக்கு சும்மா தான் சொன்னேன், உண்மையாவே கல்யாணம் பண்ணிட்டியா?" என்று கேட்க, தேவ் சிரித்துக் கொண்டான்...

பத்மாவும் மெலிதாக புன்னகைத்துக் கொண்டாள்.

அதனை தொடர்ந்து எல்லோரையும் தேவ் பத்மாவுக்கு அறிமுகப்படுத்தினான்... அவள் வெற்றிடையை அவன் பற்றிக் கொண்டே இருந்தான்...

ஒரு இன்ச் கூட விலகவில்லை...

அடிக்கடி அந்தரங்க ரகசியம் வேறு பேசி அவளை சிவக்க வைத்துக் கொண்டு இருந்தான்...

அவன் அலுவலக ஊழியர்களும் வந்து சேர்ந்து இருக்க, ஒவ்வொருவரும் தேவ் மற்றும் பத்மாவை வந்து வாழ்த்தி விட்டுச் சென்றார்கள்...

ஒவ்வொருவரையும் யார் என்று விசாரித்துக் கொண்டாள்.

அப்போது ஸ்டெல்லாவும் அங்கே வந்து இருக்க, அவளும் தேவ்விற்கு கையை குலுக்கி வாழ்த்து தெரிவிக்க, "இவங்க?" என்று கேட்டாள் தேவ்...

அதுவரை இயல்பாக இருந்த தேவ்விற்கு சட்டென ஒரு தடுமாற்றம்...

பத்மா தவறாக நினைத்து விடுவாளோ என்கின்ற தடுமாற்றம் தான் அது...

தன் மீது தவறு இல்லை... பிறகு ஏன் பயப்பட வேண்டும் என்று அவன் மனசாட்சி கேட்க, குரலை செருமிக் கொண்டே, "திஸ் இஸ் ஸ்டெல்லா" என்றான்...

ஒரு கணம் சட்டென பத்மாவின் முகம் இறுக, அவன் கவனிக்க முதலே முக பாவனையை சரி செய்தவள் வலுக்கட்டாயமாக சிரித்துக் கொண்டாள்.

அவள் விழிகள் ஸ்டெல்லாவில் ஆராய்ச்சியாக படிந்தன...

வெண்ணையை குழைத்து எடுத்த நிறம் அவளுக்கு...

ஒரு குழந்தையின் தாய் என்று சொல்ல முடியாத அளவு, அங்க வனப்பு கன கட்சிதமாக இருந்தது...

சிரிக்கும் போது, பேரழகியாக இருந்தாள்.

தன்னை விட அழகாக இருக்கின்றாள் என்று தான் அவள் மனம் யோசித்தது...

ஸ்டெல்லாவும் அவளை அணைத்து வாழ்த்தி விட்டு, அங்கிருந்து நகரந்து இருக்க, இப்போது தேவ்வை பக்கவாட்டாக திரும்பிப் பார்த்த பத்மாவோ, "ரொம்ப அழகா இருக்கா" என்றாள் மெல்லிய புன்னகையோடு...

அவனும் அவளை திரும்பிப் பார்த்தபடி, "எஸ்" என்றான்...

"சைட் அடிச்சீங்களா?" என்று கேட்டாளே பார்க்கலாம்...

தூக்கி வாரிப் போட்டது அவனுக்கு...

"எக்ஸ்கியூஸ் மீ" என்றான்...

அவன் காதருகே எம்பி, "அவளை ரசிச்சு பார்க்காம அவ அழகா இருக்கானு எப்படி தெரியும்?" என்று கேட்டாள்.

அவன் முகம் இறுக, இப்போது அவள் இடையை பற்றி இருந்த கை தானே விலக, பாக்கெட்டில் இரு கைகளையும் விட்டபடி பெருமூச்சு விட்டவனோ, அவளை திரும்பிப் பார்த்துக் கொண்டே, "அவ இப்போ என்னோட ஸ்டாஃப். தட்ஸ் இட்" என்றான்...

"அப்போ பழைய நினைவு ஒரு தடவை கூட வரலையா?" என்று கேட்டாள்.

"நோ" என்று அவளை பார்க்காமல் சொன்னவனை ஆழ்ந்து பார்த்தவள், "ஹஸ்பண்ட் ஐ விட்டுட்டு இருக்கானு கேள்விப்பட்டேன்..." என்று ஆரம்பிக்க, "இதெல்லாம் உனக்கு யார் சொன்னா?" என்று கேட்டான் அவன்...

"சோ மறைக்க ட்ரை பண்ணி இருக்கீங்க" என்றாள் அவள்...

"ஓஹ் மை காட்" என்று ஆரம்பித்தவன், கண்களை மூடி திறந்துக் கொண்டே சுற்றிப் பார்த்தான்...

இப்போது பேசினால் அங்கே இருப்பவர்களுக்கு காட்சி பொருளாகி விடுவோம் என்று புரிய, "வீட்டுக்கு போய் பேசிக்கலாம்" என்றான்...

அவளுக்கும் அதே எண்ணம் வர, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டே அவன் அருகே நின்று இருந்தாள் தவிர எதுவும் பேசவில்லை...

இருவருக்கும் சற்று முன்னர் உண்டான மோகம், கிளர்ச்சி எல்லாம் வடிந்து போன உணர்வு...

ஒருவர் கையை அடுத்தவர் பற்றிக் கொள்ள கூட இல்லை...

நிகழ்வு முடிந்து வீட்டுக்கு வந்த போதும் மௌனம் தான் இருவரிடம்...


தூக்கத்தை கெடுத்துக் கொள்ள விரும்பாமல் அடுத்த நாள் பேச முடிவெடுத்து இருந்தார்கள்...
 

CRVS2797

Active member
ஐஸ்க்ரீம் சிலையே ..!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மூ
(அத்தியாயம் - 11)


ஆமாங்கடா.. எதை பேசனுமோ அதை உடனே பேசி தீர்த்துக்காதிங்க, ஆனா உடலால மட்டும் அடிக்கடி நாடுங்க. என்ன குடும்பமோ ? என்ன தாம்பத்தியமோ..? போங்கடா... நீங்களும், நீங்க குடும்பம் நடத்துற விதமும்.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top