அத்தியாயம் 12
அடுத்த நாள் காலையில் அலுவலகத்துக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டு இருந்த தேவ்வின் விழிகள் புடவையை உடுத்திக் கொண்டு இருந்த பத்மாவில் படிய, "பத்மா பிரச்சனையை முடிச்சிட்டு கிளம்பலாம்" என்றான்.
அவளோ, "இப்போ மூட் இல்ல" என்று சொல்ல, "என்னடி விளையாடுறியா?" என்று கேட்டுக் கொண்டே, அவள் முன்னே வந்து நிற்க, "ஒரே ஒரு கேள்வி கேக்கிறேன்... என்னை பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா?" என்றாள் அவன் விழிகளை பார்த்துக் கொண்டே...
சற்று தடுமாறி விட்டான்...
"பிடிச்சு தான்" என்றான் அவள் விழிகளை பார்க்காமல்.
"கண்ணை பார்த்து சொல்லுங்க" என்றாள்.
"பிடிச்சு தான் டி" என்று சொன்னவன் இப்போதும் அவள் கண்களை பார்க்கவில்லை...
"பொய், உங்க அப்பாவுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க தேவ்... அன்னைக்கு மாமாவும் பாட்டியும் பேசுன எல்லாமே கேட்டேன்" என்றாள்.
அவனுக்கோ எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை...
'ஒன்னு ஒட்டு கேக்கிறா, இல்லன்னா எட்டிப் பார்க்கிறா' என்று மனதுக்குள் புலம்பியவன், "ஆனா இப்போ உன்னை ரொம்ப பிடிச்சு இருக்கு" என்றான்...
"என்னையா? என் உடம்பையா?" என்று அடுத்த கேள்வி கூர்மையாக வந்தது...
"எல்லாம் தான்" என்றான் அவளையே துளைத்தெடுக்கும் பார்வை பார்த்துக் கொண்டே...
"நீங்க நல்ல நடிகன்" என்று கடுப்பாக சொல்லிக் கொண்டே, அவள் புடவை மாராப்பை போட்டவள், விலக முற்பட, அவள் கையை பற்றியவன், அவளை இழுத்து அவள் இதழில் இதழ் பதித்து விலகிக் கொண்டே, அவள் கலங்கிய விழிகளை பார்த்தவன், "பிடிக்காம தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... ஆனா இப்போ ரொம்ப பிடிச்சு இருக்கு" என்றான்...
"நான் நம்பமாட்டேன்" என்று சொல்லி, அவனை உதறி விட்டு அவள் செல்ல, அவனோ, சலிப்பாக இரு பக்கமும் தலையாட்டிக் கொண்டான்.
அவன் விளக்கத்தையும் கேட்க மாட்டேன் என்கின்றாள்...
அவன் சொல்வதையும் நம்ப மாட்டேன் என்கின்றாள்...
என்ன செய்வது என்று தான் அவனுக்கு தெரியவே இல்லை...
அன்றில் இருந்து மீண்டும் அவர்களுக்கு இடையே மௌன யுத்தம்...
இரவில் அவளை நெருங்க கூடாது என்று நினைத்தாலும் தன்னையும் மீறி நெருங்கி விடுவான்...
என்ன தான் அவன் மீது கோபம் இருந்தாலும், அவனை அவள் உள்வாங்கிக் கொள்வாள்...
மௌனமான கலவி தான் அவர்கள் தினசரி வாடிக்கை...
இப்படியே ஒரு மாதம் நகர்ந்து இருக்கும், ரத்னமோ, "ஆன்டனி உனக்கு லன்ச் கொடுக்கிறதா சொல்லி இருக்கான் தேவ்... நாளைக்கு ஃப்ரீயா?" என்று கேட்க, "ம்ம், ஈவினிங் பூர்விகா கூட கன்ஸ்ட்ரக்ஷன் மீட்டிங் இருக்கு... முடிச்சிட்டு போயிடலாம்" என்று சொல்லிக் கொண்டே, பத்மாவைப் பார்க்க, "நான் ஃப்ரீ தான்" என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டே...
அடுத்த நாள் நேரத்துக்கே வீட்டுக்கு பத்மா வந்து விட, அவளை ஏற்றிக் கொண்டே மீட்டிங்குக்குச் சென்றான்...
கன்ஸ்ட்ரக்ஷன் நடக்கும் இடத்தில் காரை நிறுத்தியவன், "இறங்கு" என்று சொல்ல, "என்னால முடியாது" என்று சொன்னாள் பெண்ணவள்...
"சரி உள்ளேயே இரு" என்று சொன்னவன் மீட்டிங்குக்கு போன கணம் தான், அங்கே வந்த ஆத்மனுடன் ஐஸ்க்ரீம் சாப்பிட்டு விட்டு திரும்பி இருந்தாள் பத்மா...
தன்னுடன் முகத்தை நீட்டிக் கொண்டே இருப்பவள், ஆத்மனுடன் சிரித்துப் பேசியதை அவனால் சட்டென ஜீரணிக்க முடியவில்லை...
தான் செய்வது அதிகப்படி என்று தெரியும்...
ஆனாலும் அந்த கோபத்தில் தான், "ஐஸ்க்ரீமுக்கு செத்தவ" என்று திட்டி இருக்க, அவளோ, அவனுடன் வர மாட்டேன் என்று அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டாள்.
அவளை தூக்கிக் கொண்டே காரில் உட்கார வைத்தவன், அவளுக்கு சீட் பெல்ட்டை போட்டுக் கொண்டே, இதழில் ஆழ்ந்து இதழ் பதிக்க, பெண்ணவளுக்கோ அதிர்ச்சி...
"வெனிலா ஃபிளேவர் ஆஹ்?" என்று கேட்டுக் கொண்டே, அவனே அவளை விட்டவன், கார் கதவை மூடி விட்டு, சுற்றி வந்து ட்ரைவர் சீட்டில் அமர்ந்துக் கொள்ள, தனது இதழ்களை புறங்கையால் துடைத்தவளோ, "எதுக்கு இப்போ கிஸ் பண்ணுனீங்க?" என்று கேட்டாள்.
"கிஸ் நமக்கு புதுசா?" என்று கேட்டுக் கொண்டே காரை ஸ்டார்ட் செய்ய, "யாரும் பார்த்து இருந்தா என்ன ஆகி இருக்கும்?" என்று கேட்க, "பார்க்காத போல தான் சீட் பெல்ட் போடும் போது கிஸ் பண்ணுனேன்... பார்த்து இருந்தா போல என்ன? என் பொண்டாட்டி தானே" என்று சொல்ல, அவனை முறைத்து விட்டு ஜன்னலினூடு பார்க்க ஆரம்பித்து விட்டாள் பத்மா...
சற்று நேரத்தில் ஆன்டனியின் வீட்டுக்கும் டின்னருக்காக வந்து விட்டார்கள்...
அவர்களை ஆன்டனியின் மனைவி ஜெனியும் சேர்ந்து நின்று வரவேற்க, "ஹவ் ஆர் யூ ஆன்ட்டி?" என்று கேட்டுக் கொண்டே இறங்கினான் தேவ்...
அவனை தொடர்ந்து பத்மாவும் இறங்க, "ஐ ஆம் குட் மை சன்" என்று சொல்லிக் கொண்டே, அவனை அணைத்து விடுவித்து இருந்தார் ஜெனி...
ஆன்டனியும் இருவரையும் வரவேற்று இருக்க, ஒன்றாக உள்ளேச் சென்றார்கள்...
பத்மாவுடன் பேச்சு கொடுக்க ஆரம்பித்து இருந்தார் ஜெனி...
கலகல பேர்வழி அவர்...
பத்மாவும் கலகலப்பாக பேசக் கூடியவள் தானே...
சட்டென ஒட்டிக் கொண்டாள்.
ஹாலில் இருந்த புகைப்படங்களை பார்த்தவளோ, "உங்களுக்கு ஒரு பையன் தானா?" என்று கேட்க, "எஸ், அவன் இப்போ கனடாவுல இருக்கான்... அடுத்த வாரம் நாங்களும் கிளம்புறோம்" என்று சொல்ல, "வாவ் சூப்பர்" என்று சொன்னாள் பத்மா...
தேவ் அருகே தான் அமர்ந்து இருந்தாள்.
தேவ் அவளைப் பார்த்து விட்டு ஆன்டனியுடன் பேச ஆரம்பித்து இருந்தான்...
"நீ தான் ட்ரின்க் பண்ண மாட்ட... நாங்களாச்சும் பண்ணலாமா?" என்று கேட்க, "கண்டிப்பா" என்று அவன் சொல்ல, அவரும் ஜெனியும் மதுவை அருந்தினார்கள்...
கொஞ்சம் மேற்கத்தேய பழக்கவழக்கங்கள் தான் அவர்களுக்கு...
பத்மாவுக்கு சற்று நெருடலாக இருந்தாலும், முகத்தில் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை...
அதனை தொடர்ந்து சாப்பாடு அருந்த உட்கார்ந்தார்கள்...
ஆன்டனியோ, "அப்புறம், விசேஷம் இல்லையா?" என்று தேவ்விடம் கேட்க, பத்மாவுக்கோ தூக்கி வாரிப் போட்டது...
இத்தனை நாட்கள் யாரும் கேட்டது இல்லை...
அவளுக்கு மாதவிடாய் நாட்களில் அவனும் விலகி இருப்பான்...
அவனும் எதுவும் கேட்டதும் இல்லை...
ஒரு வித பதட்டம் அவளுக்கு...
தேவ், கடைக்கண்ணால் ஒரு கணம் பத்மாவை பார்த்து விட்டு, "கொஞ்ச நாள் போகட்டுமே... லைஃபை என்ஜாய் பண்ணனும்ல" என்றான்.
"தட்ஸ் குட், உங்களுக்கு ஒன்னும் வயசாகவே இல்லையே... என்ஜாய்" என்று சொல்ல, அவனும் சிரித்துக் கொண்டான்...
இதனிடையே ஜெனிக்கு சற்று போதை ஏறி விட்டது...
"தேவ், நீ ஸ்டெல்லாவை தான் கல்யாணம் பண்ணுவன்னு நினைச்சேன்" என்று கண்கள் சொருக ஆரம்பித்து இருக்க, சாப்பிட்டுக் கொண்டு இருந்தவனுக்கு புரையேறி விட்டது...
தலையில் தட்டிக் கொண்டே, அவரை விழி விரித்துப் பார்க்க, பத்மா, பக்கவாட்டாக திரும்பி அவனை முறைத்துப் பார்த்தாள்.
அவர்களுக்கு இந்த கல்யாணத்துக்கு முன்னால் வரும் காதல் எல்லாம் சாதாரணம் தான்...
அதனால் அவரும் இயல்பாக பேச ஆரம்பித்து இருக்க, தடுமாறி போனது என்னவோ தேவ் தான்...
"ஓஹ்" என்று மட்டும் சொன்னான்...
மேலும் தொடர்ந்த ஜெனியோ, "பத்மா, யூ க்னோ, காலேஜ் படிக்கும் போது ஸ்டெல்லாவை பைக்ல ஏத்திட்டு எல்லா இடமும் சுத்தி வருவான்" என்று சொல்ல, 'குடிச்சிட்டு உளர்றத பாரு, நாசமா போச்சு' என்று நினைத்த தேவ்வோ, "பாஸ்ட் இஸ் பாஸ்ட் ஆன்ட்டி" என்றான்...
அவரோ, "ஹா ஹா, எஸ் தேவ்... ஆனா அதெல்லாம் இனிய நினைவுகள்ல" என்று சொல்ல, அவன் கடைக்கண்ணால் பத்மாவை பார்க்க, அவளோ அவனை முறைத்துப் பார்த்து விட்டு, சாப்பிட ஆரம்பித்தாள்.
ஜெனி அத்துடன் நிறுத்தவில்லை...
"பாத்திமா" என்றார்.
"பத்மா" என்று அவள் திருத்தினாள்...
"சாரி சாரி, கொஞ்சம் அதிகமா ட்ரிங்க்ஸ் எடுத்து இருக்கேன்" என்று சொன்னவரோ மேலும், "ஒரு நாள் செமயா எங்க கிட்ட சினிமா படம் பார்க்கும் போது சிக்கிட்டாங்க" என்று சொன்னதுமே, அவனுக்கு அவர் சொல்ல வருவது புரிந்து விட, "ஆன்ட்டி, நீங்க ஸ்டெடி இல்ல... தூங்கலாமே" என்று சொல்ல, ஆன்டனியோ, "அவ ஸ்டெடியா தானே இருப்பா" என்று சொல்ல, 'படுபாவி கிழவன்' என்று வாய்க்குள் திட்டிக் கொண்டான்.
பத்மாவோ, 'இவன் பதறுறத பார்த்தா, ஏதோ இருக்கும் போல' என்று நினைத்துக் கொண்டே, "எப்படி சிக்கினாங்க?" என்று கேட்டாள்.
அவளை முறைத்தவன், "உனக்கெதுக்கு அது?" என்று கேட்க, "ஐ நீட் டு க்னோ" என்றாள்.
ஜெனியோ, "நானும் ஆண்டனியும் படம் பார்த்துட்டு இருந்தோம்... அப்போ கீச்சு கீச்சுன்னு பின்னாடி ஒரு சத்தம்..." என்று சொல்ல, "பத்மா லெட்ஸ் கோ" என்று சொல்லிக் கொண்டே எழுந்தே விட்டான் தேவ்...
"நான் சாப்பிட்டு முடிக்கல" என்று அவனை முறைத்துக் கொண்டே சொன்ன பத்மா, வேண்டுமென்று சாப்பிட, அவனுக்கு அவளை இழுத்துச் செல்லவும் முடியாத நிலை...
உஷ்ண மூச்சுக்களை விட்டபடி அவள் அருகே அமர்ந்து விட, ஜெனியோ, "திரும்பி பார்த்தா நம்ம தேவ்வும் ஸ்டெல்லாவும்... செம்ம லிப்லாக்" என்று சொன்னதுமே, கண்களை மூடி திறந்துக் கொண்டான் தேவ்...
கீழ் அதரங்களை கடித்து, தன்னை நிலைப்படுத்த முயன்றவனோ அருகே அமர்ந்து இருந்த பத்மாவை திரும்பிப் பார்க்க, அவளோ, புறங்கையால் கண்ணீரை துடைத்துக் கொண்டே, சிரிக்க முயன்றாள்...
'ஓஹ் மை காட்' என்று வாய்க்குள் முணுமுணுத்தவனோ, "அங்கிள் ப்ளீஸ் ஆன்ட்டியை உள்ளே அழைச்சு போறீங்களா?" என்று கெஞ்ச, அவரும், "ஜெனி, கம்" என்று அவரை இழுத்துக் கொண்டே உள்ளேச் செல்ல, "பை தெ வே யூ ஆர் எ குட் கிஸ்ஸர் தேவ்" என்று உளறிக் கொண்டே, அவர் உள்ளேச் சென்று விட, அவரை சலிப்பாக பார்த்து தலையை இரு பக்கமும் ஆட்டியவன், இப்போது பத்மாவைப் பார்த்தான்...
அவள் தலையை குனிந்தபடி உணவை பிசைந்தவளுக்கு உணவு தொண்டைக்குழிக்குள் இறங்கவே இல்லை...
அப்படியே அமர்ந்து இருந்தாள்.
கண்ணில் வழியும் நீரை அடிக்கடி துடைத்தும் கொண்டாள்.
குரலை செருமிக் கொண்டே, "பத்மா" என்றான்... திரும்பி பார்த்து ஒரு முறைப்பு மட்டுமே...
ஆன்டனியும் அங்கே வந்து சேர, "தேங்க்ஸ் ஃபோர் தெ டின்னர் அங்கிள்... வீ ஆர் லீவிங்" என்று சொல்லிக் கொண்டே எழ, அவளும் எழுந்துக் கொண்டாள்.
அவனை பார்க்காமலே அவனுடன் கூட நடந்தவள் காரிலும் ஏறிக் கொள்ள காரும் புறப்பட்டது...
சற்று தூரம் வந்ததும், காரை ஓரமாக நிறுத்தி விட்டு, அவளைப் பார்த்தான்...
அழுதழுது கண்கள் வீங்கி இருக்க, கண்ணீரை துடைத்துக் கொண்டே இருந்தாள்.
"இப்போ எதுக்கு அழற?" என்று கேட்டான்...
அவனை முறைத்துக் கொண்டே திரும்பியவள், "வேற என்ன எல்லாம் என் கிட்ட மறைச்சு இருக்கீங்க?" என்று கேட்க, "ஹேய், மறைக்கிறதுக்கு எதுவும் இல்லை... காலேஜ் டைம்... கொஞ்சம் ஃபீல் ஆகி ரெண்டு மூணு தடவை கிஸ் பண்ணி இருக்கேன், தட்ஸ் ஆல்" என்றான்...
"ரெண்டு மூணு தடவை தானா?" என்று அவள் சந்தேகமாக கேட்க, "லவ்வே ஒரு ஆறு மாசம் தான் டி... மூணு நாலு தடவை வெளிய போய் இருப்போம் அவ்ளோ தான்" என்று சொல்ல, "சோ ஃபெர்ஸ்ட் கிஸ் அவ தான்ல" என்று கேட்டாள்.
அவனிடம் மௌனம்...
ஸ்டீரிங் வீலை அழுந்த பற்றிக் கொண்டான்...
"சொல்லுங்க" என்று ஒரு அதட்டல் அவளிடம்...
"மூணு வயசுலயே கிஸ் பண்ணி இருக்கேன்னு பாட்டி சொன்னாங்க தானே... ஃபெர்ஸ்ட் கிஸ் யாரோ தெரியல" என்றான்...
"அதுவும் இதுவும் ஒண்ணா? ஃபீல் பண்ணி கிஸ் பண்ணுனது அவளுக்கு தானே ஃபெர்ஸ்ட்டா?" என்று கேட்டாள் பத்மா அழுகையுடன்.
"ஆமா, போதுமா?" என்று கேட்டான்...
அவளுக்கு மீண்டும் அழுகை...
கண்ணீரை துடைத்துக் கொண்டே, "வேற என்ன எல்லாம் மறைச்சு இருக்கீங்க? கிஸ் மட்டுமா? அதுக்கு மேலயுமா?" என்று கேட்டாள்.
"கிஸ் மட்டும் தான் டி" என்றான் கடுப்பாக...
"குட் கிஸ்ஸர்ன்னு ஜெனி ஆன்ட்டி சொல்ற அளவுக்கு கிஸ் அடிச்சு இருக்கீங்க" என்றாள்.
"மை காட்" என்று சொல்லிக் கொண்டே கண்களை அழுந்த தேய்த்தவன், "அவங்க குடிச்சிட்டு உளறுறாங்க" என்றான்...
"அவங்க ஒன்னும் உளறல, நீங்க கிஸ் பண்ணுனதை பார்த்து தான் சொல்றாங்க... பிடிக்காம கல்யாணம் பண்ணிட்டு முதல் நாளே என் மேல பாய்ஞ்ச ஆள் நீங்க, பிடிச்ச பொண்ண விட்டு வச்சு இருப்பீங்களா?" என்று சீறினாள்...
அவனுக்கு கோபம் வந்து விட்டது...
"வாய்க்கு வந்ததை பேசாதே பத்மா... இதுல அவ லைஃப்பும் இருக்கு... லவ் பண்ணுனேன் தான் இல்லன்னு சொல்லல, அதுக்கப்புறம் பிரேக் அப் ஆகி இத்தனை வருஷம் கடந்து போச்சு, இன்னும் அதையே பேசிட்டு இருக்க" என்று சீறினான்...
"இதெல்லாம் என் கிட்ட சொல்லவே இல்லையே... மறைச்சு இருக்கீங்க... அவ குழந்தைக்கு அப்பா யாரு?" என்று அடுத்த கேள்வி கேட்க, "செவில்லையே விடுவேன்" என்று கையை ஓங்கி விட்டான்...
அவனை வெறித்துப் பார்த்தாள்.
சட்டென கையை இறக்கியவனோ, "இப்படி எல்லாம் பேசாதே" என்று கேட்க, "அந்த குழந்தைக்கு அப்பா யாரு?" என்று மீண்டும் கேட்டாள்.
"ஆஹ், முத்தம் கொடுத்தா குழந்தை பிறக்கும்னா, நான் தான் அப்பா போதுமா?" என்று எரிச்சலாகவும் கோபமாகவும் சொல்ல, "நான் தான் அப்பான்னு சொல்ல அவ்ளோ ஆசைல" என்றாள் அழுதுக் கொண்டே...
"ஏய் அரை மென்டல் கொஞ்சம் வாயை மூடுடி... நீ பேசுற பேச்சுக்கு எதையாவது தூக்கி அடிச்சிடுவேன்... பார்த்துக்கோ" என்றான்.
அவளோ விம்மலுடன், "அடிச்சு என்ன கொன்னுட்டு அவ கூட போகலாம்னு முடிவு பண்ணிட்டீங்க தானே" என்றாள்...
அவனுக்கு அவள் தலையை பற்றி டங்கு டங்கு என்று அடித்தால் என்ன என்று தோன்றும் அளவுக்கு ஆத்திரம்...
"என்னடி கிரிமினல் ரேஞ்சுக்கு பேசிட்டு இருக்க?" என்று கேட்க, "நீங்க பண்ணுவீங்க... நீங்க தான் அவளுக்கு ஃபெர்ஸ்ட் கிஸ் பண்ணி இருக்கீங்க... ஆனா நான் உங்கள தான் ஃபெர்ஸ்ட் ஆஹ் கிஸ் பண்ணி இருக்கேன் தெரியுமா?" என்று சொன்னவள், முகத்தை மூடி அழ, அவனுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது...
அவளை இழுத்து அணைத்தான்...
"தொடாதீங்க, கம்பளி பூச்சி ஊறுற போல இருக்கு" என்றாள்.
"மௌன ராகம் ரேவதின்னு நினைப்பு... கம்பளி பூச்சி, பாம்பு, பல்லின்னு எல்லாம் ஊறட்டும்... ஐ டோன்ட் மைண்ட்" என்று சொல்லிக் கொண்டே, அவள் முகத்தை ஒற்றைக் கையால் நிமிர்த்தி, அவள் இதழில் ஆழமாக இதழ் பதிக்க, அவளோ, அவனை தள்ளி விட முயன்றாள்...
முடியவில்லை...
அவன் முத்தம் இன்னும் அழுத்தமானது தான் மிச்சம்...
அவன் முத்தம் அருவருக்கவும் இல்லை...
இன்னும் வேண்டும் என்று தான் அவளுக்கு தோன்றியது...
'மானம் கெட்ட உடம்பே, அவளை கிஸ் பண்ணுன வாயால உன்னை பண்ணுறான்... இப்படி உருகி போய் இருக்க?' என்று தனக்கு தானே திட்டியவளுக்கு அவள் வலிக்கு அந்த முத்தம் இதமாக இருந்தது...
நீண்ட நேரம் முத்தமிட்டு விட்டே விலக, அவனை முறைத்து விட்டு, ஜன்னலினூடு வெளியில் பார்க்க ஆரம்பித்து விட்டாள். அவன் ஸ்பரிசத்தை அவள் வெறுத்து விடுவாள் என்று அவனுக்கு பயம் இருந்தது என்னவோ உண்மை தான்... இப்போது அவன் முத்தத்துக்கு அவள் உருகி நின்றதும் அந்த பயம் தானாக விலகிக் கொள்ள, மனதில் ஒரு வித இதம் பரவியது அவனுக்கு...
அவனோ காரை ஸ்டார்ட் செய்து ஓட்டிக் கொண்டே, "இங்க பாரு பத்மா, நீ நினைக்கிற போல எல்லாம் நான் இல்லடி... முதல் நாள் உன் மேல பாய்ஞ்சத வச்சு பேசாதே... என் லைஃப்ல நாலு பொண்ணுங்க தான்" என்றான்...
"ஒஹோ நாலு போதாதோ?" என்று கடுப்பாக கேட்க, அவனோ, "மொத்தமா சொல்றேன் கேட்டுக்கோ" என்று ஆரம்பித்து, நித்யா, ஸ்டெல்லா, பூர்விகா என்று எல்லாமே சொன்னான்...
எதுவும் மிச்சம் வைக்கவில்லை...
திறந்த புத்தகமாக சொன்னான்...
சொல்லி முடித்தவன், "மக்சிமம் கிஸ் தான் டி பண்ணி இருக்கேன், இதுக்கு மேல என் கிட்ட மறைக்க எதுவும் இல்லை வெளியவும் சரி, உள்ளேயும் சரி" என்றான்...
அவனை முறைத்தவள், "இந்த நேரத்துல கிளு கிளுப்பா ஒரு பேச்சு, இப்படி பேசி பேசி தான் என்னை மயக்கி வச்சு இருக்கீங்க" என்று திட்டிக் கொண்டாள்.
குரலை செருமியவனோ, "இங்க பாரு பத்மா... பிடிக்காம தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... ஆனா அப்புறம் ரொம்ப பிடிச்சு போச்சு... நான் ட்ரெஸ் இல்லாம நேர்ல பார்த்த ஒரே பொண்ணு நீ மட்டும் தான்... கன்னி கழிஞ்சதும் உன் கிட்ட தான்..." என்றான்...
அவனை திரும்பி பார்த்து முறைத்தவள், "ஆனா ஃபெர்ஸ்ட் கிஸ் அவ தானே" என்று ஆரம்பிக்க, "திரும்ப திரும்ப அதையே ஏன் டி பேசுற?" என்று திட்டியவனோ, அவளை இழுத்து, இதழில் மீண்டும் இதழ் பதித்தவன், "ஃபெர்ஸ்ட் கிஸ் யார் வேணும்னாலும் இருக்கலாம், ஆனா என் லைஃப்ல லாஸ்ட் ஆஹ் நான் கிஸ் பண்ண போறது நீயா மட்டும் தான் இருப்ப" என்று சொல்லிக் கொண்டே, நீல நிற மயக்கும் விழிகளால் அவளை ஆழ்ந்து பார்க்க, அவளுக்கு அவன் பேசியதில் ஒரு மாதிரி ஆகி விட்டது...
அவன் மேல் இருந்த கோபம் பாதியாக சட்டென குறைந்த உணர்வு...
'அடியேய் வெட்கம் கெட்ட பத்மா, அவன் இந்த கண்ணால பார்த்தே உன்னை கவுத்துடுவான்.. ஸ்டெடியா இரு' என்று தனக்கு தானே திட்டிக் கொண்டே, "டோன்ட் கிஸ் மீ" என்று சொல்லி அவன் மார்பில் கையை வைத்து தள்ளி விட, அவளை முறைத்தவனோ, "வீடு வந்திடுச்சு இறங்கு" என்றான்...
அவளும் அவனை முறைத்துக் கொண்டே இறங்கியவள் முன்னேச் செல்ல, அவனோ சலிப்பாக பின்னேச் சென்றான்.
குளித்து விட்டு வந்தவர்கள் பேசிக் கொள்ளாமலே தூங்கியும் விட்டார்கள்...