அத்தியாயம் 13
அடுத்த நாள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவும் இல்லை...
தேவ்விற்கு அவள் ஸ்டெல்லாவை பற்றியே பேசிக் கொண்டு இருப்பாள் என்கின்ற சலிப்பு...
அதனாலேயே அவளை தவிர்த்து இருக்க, அவளுக்கோ அவன் அலுவலகத்தில் ஸ்டெல்லா இன்னும் வேலை செய்வதை ஜீரணிக்க முடியவில்லை...
அவளை வேலையை விட்டு தூக்க சொல்லவும் மனம் இல்லை...
இதே போல சந்தர்ப்பத்தை பூர்விகா விஷயத்தில் அவளும் கடந்து வந்தவள் தானே...
ஒருவேளை ஸ்டெல்லா மற்றும் தேவ் இடையே எந்த வித தப்பான மனநிலையும் இல்லாத பட்சத்தில் வேலையை விட்டு தூக்குவது எல்லாம் பாவமான விஷயம் என்று அவளுக்கும் தெரியும்...
தனது அலுவலகத்திற்கு வந்தவளுக்கு நிலை கொள்ளவே முடியவில்லை...
என்ன செய்வது என்று தெரியாத நிலை...
'தேவ் அலுவலகத்தில் என்னவோ நடக்கட்டும்' என்று கடந்து விடவும் முடியவில்லை...
அதுவும் அவன் ஸ்டெல்லாவை முத்தமிட்டு இருக்கின்றான் என்று அறிந்ததில் இருந்தே, ஒரு வித தடுமாற்றம்...
நீண்ட நேரம் மௌனமாக இருந்தபடியே யோசித்தவளுக்கு, 'தேவ் ஆஃபீஸில் வேலை செய்தால் என்ன?' என்று தான் தோன்றியது...
காலையில் வந்ததும் வராததுமாக பிரதீப்பை தேடிச் சென்றாள்.
உள்ளே வந்தவளிடம், "சிட் பத்மா" என்று பிரதீப் சொல்ல, அவன் முன்னே அமர்ந்த பெண்ணவளோ, " சார்" என்றாள் இழுவையாக...
"என்ன விஷயம்?" என்று பிரதீப் கேட்க, "நான் இந்த வேலையை விடலாம்னு இருக்கேன்" என்றாள்.
அவன் புருவம் சுருங்க, "என்னாச்சு?" என்று கேட்டான்.
"மிஸிஸ் தேவ் ஆதித்யாவா அவரோட போட்டி கம்பெனில வேர்க் பண்ணுறது குட் ப்ராக்டிஸ் இல்லன்னு தோணுது" என்று சொல்ல, பிரதீப்போ, "வெல், அதுவும் சரி தான்... வன் மந்த் நோட்டீஸ் கொடுக்கிறீங்களா?" என்று கேட்டான்.
"இன்னைக்கே நின்னுடலாமா சார்?" என்றாள் இழுவையாக...
பிரதீப்போ யோசனையுடன், "இது எதிக்ஸ் இல்ல பத்மா" என்று சொல்ல, "ப்ளீஸ்" என்றாள் கெஞ்சுதலாக...
அவனும் சற்று மனம் இலகுபவன் ஆயிற்றே...
"ஓகே ஃபைன், உங்களுக்காக விட்டு கொடுக்கிறேன்... எல்லாம் ஹாண்ட் ஓவர் பண்ணிட்டு கிளம்புங்க" என்று சொல்ல, "தேங்க்ஸ் சார்" என்று மென் புன்னகையுடன் சொன்னவள், அங்கிருந்து கிளம்புவதற்காக ஆயத்தம் செய்தாள்.
அவளுடன் வேலை பார்த்த எல்லோருக்கும் கவலை தான்... இருக்கும் இடத்தையே கல கலவென வைத்து இருக்கும் பெண்ணல்லவா?
"என்னாச்சு?" என்று ஆளாளுக்கு கவலையுடன் விசாரிக்க, அவளிடம் கைவசம் இருந்த பதிலை சொன்னவளோ, அன்று மதியமே கிளம்பி விட்டாள்.
வீட்டுக்குச் செல்லவில்லை, தனது ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டே நேரே சென்றது என்னவோ தேவ் உடைய அலுவலகத்துக்கு தான்...
பைக்கை பார்க்கிங்கில் விட்டவளோ, 'சும்மா சொல்ல கூடாது, பெரிய கம்பெனி தான்' என்று அதன் பிரம்மாண்டத்தை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே உள்ளே நுழைய, வாசலில் இருந்த செக்கியூரிட்டி தொடக்கம், ரிசெப்ஷனிஸ்ட் வரை அவளிடம் யாரும் எதுவும் கேட்கவில்லை...
அவளை தான் எல்லோருக்கும் தெரியுமே...
தேவ் உடைய அறைக்குள் செல்ல அதில் வைக்கப்பட்டு இருந்த அம்புக்குறி இருக்கும் பலகைகளை தொடர்ந்துச் சென்று தேவ்வின் அறையையும் நெருங்கி விட்டாள்.
அவன் அறைக்குள் செல்லும் கணம், அவள் கண்ணில் பட்டது என்னவோ அந்த வழியால் சென்ற ஸ்டெல்லா தான்...
"ஹாய், எப்படி இருக்கீங்க?" என்று கேட்டுக் கொண்டே, பத்மா அருகே வர, அவள் கொஞ்சம் தடுமாறி தான் விட்டாள்.
"ஹாய், நான் நல்லா இருக்கேன், நீங்க?" என்று கேட்க, "நானும் நல்லா இருக்கேன்" என்று மென் சிரிப்புடன் சொன்னவளோ, "சாரை பார்க்க வந்து இருக்கீங்களா?" என்று கேட்க, "ம்ம்" என்றாள் பத்மா...
அவளுக்கோ தன்னையும் மீறி அவள் விழிகள் ஸ்டெல்லாவின் இதழ்களில் படிய, சட்டென கண்களை மூடி தன்னை நிலைப்படுத்தியவளின் மனசாட்சியோ, 'நீ பண்ணுறது தப்பு பத்மா' என்று எடுத்து உரைக்க, கண்களை திறந்தவளோ, மீண்டும் ஸ்டெல்லாவின் விழிகளைப் பார்த்து ஒரு தலை அசைப்புடன் நகர்ந்துச் செல்ல, அவளும், மென் சிரிப்புடன் தனது பகுதியினுள் நுழைந்துக் கொண்டாள்.
சட்டென திரும்பிப் பார்த்தாள் பத்மா...
ஸ்டெல்லா வேலை செய்வது என்னவோ அக்கவுண்ட்ஸ் ப்ரான்ஞ்சில் தான்...
அதனை பார்த்து விட்டு, தேவ் உடைய அறையை நோக்கிச் சென்றாள்.
கதவை தட்டவும் இல்லை...
திறந்துக் கொண்டே உள்ளே நுழைந்து விட்டாள்.
விறு விறுவென அனுமதி கேட்காமல் தனது அலுவலக அறைக்குள் வந்த பத்மாவை புருவம் சுருக்கி பார்த்த தேவ்வோ, "நீ எங்க இங்க??" என்று கேட்டான்.
"வேலையை விட்டுட்டேன்" என்றாள் எங்கோ பார்த்தபடி.
தேவ்வும் அருகே நின்று இருந்த ஜெயனைப் பார்த்து வெளியேறும்படி கண்களால் சைகை செய்ய அவனும் வெளியேறி விட்டான். அவள் தன்னை தேடி வந்தது அவனுக்கு ஒரு வித கிளர்ச்சியை தான் உண்டாக்கியது...
தனக்குள் சிரித்துக் கொண்டான்.
"சோ ??" என்றான் அவளை பார்த்தபடி கேள்வியாக.
"எனக்கு வேலை வேணும்" என்றாள். இப்போதும் அவனை பார்க்கவில்லை...
மேசையில் முஷ்டியால் தட்டினான்.
திரும்பிப் பார்த்தாள்.
"கண்ணை பார்த்து பேசு" என்றான்.
"கண்ணை பார்த்து பேசுனாலும் மயங்க மாட்டேன்... எனக்கு வேலை வேணும்" என்றாள்.
"ஷப்பா" என்று பெருமூச்சு விட்டவனோ, "உன்னை எதுக்குடி வேலை மெனக்கட்டு நான் மயக்கணும்" என்று கேட்க, "அப்போ அந்த ஸ்டெல்லாவை மட்டும்" என்று ஆரம்பிக்க, "ஷட் அப்... இங்க வந்து லூசு தனமா பேசிட்டு இருக்காதே" என்றான் அதிகாரமாக...
"ஓகே பேசல... எனக்கு வேலை வேணும்" என்றாள் மீண்டும்...
"வேவு பார்க்க தானே வந்த... வேலை எல்லாம் கொடுக்க முடியாது... கிளம்பு" என்றான்.
"எக்ஸுக்கு எல்லாம் வேலை கொடுப்பீங்க எனக்கு கொடுக்க மாட்டீங்களா??" என்று கேட்டு முடிக்க முதல், "ஷட் அப்" என்று மேசையில் ஆக்ரோஷமாக தட்ட, அவள் விழிகள் கலங்கின.
அதனைக் கண்டவனோ பெருமூச்சுடன் முகத்தை இரு கைகளாலும் அழுந்த தேய்த்துக் கொண்டே, "இப்போ என்னடி??" என்றான் மென்மையான குரலில்...
"எனக்கு வேலை வேணும்" என்றாள்.
"எக்ஸ் வைன்னு பைத்தியக்காரத்தனமா பேச கூடாது" என்றான் கண்டிப்பாக.
ஒரு மௌனத்தின் பின்னர், "சரி பேச மாட்டேன்" என்றாள்.
"உன்னோட சி வி ய வாட்ஸ் அப் பண்ணு" என்றான். அலைப்பேசியை எடுத்தவளோ, "பொண்டாட்டி என்ன படிச்சிருக்கானு கூடவா தெரியாது" என்று கேட்க, "நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது உனக்கு வேலை கொடுக்கிறதுக்காக இல்ல" என்றான் அழுத்தமாக.
"எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னு நல்லாவே தெரியுதே" என்று சொன்னவளை முறைத்தவன், "ரொம்ப பேசுறியே என்னோட குவாலிஃபிகேஷன் சொல்லு பாப்போம்" என்றான்.
திரு திருவென விழித்தவளோ, "நானும் உங்களுக்கு வேலை கொடுக்க கல்யாணம் பண்ணிக்கல" என்று சமாளிக்க, "அப்போ எதுக்கு பண்ணிக்கிட்ட??" என்று கேட்டான்.
"நீங்க எதுக்கு பண்ணிக்கிட்டீங்களோ அதுக்கு தான்" என்றாள் அலைப்பேசியில் அவனுக்கு சி வி யை அனுப்புவதற்காக தேடிக் கொண்டே.
அவள் அவனை பார்க்கவில்லை என்றாலும் அவளையே பார்த்து இருந்தவன் இதழ்களுக்குள் ஒரு புன்னகை தோன்ற, 'என்னை படுத்தி எடுக்கிறா' என்று நினைத்துக் கொண்டான்.
அவளும் சி வி யை தேடி அவனுக்கு வாட்ஸ் அப் பண்ணி விட்டு நிமிர்ந்தவள், "அனுப்பி இருக்கேன்" என்றாள்.
தனது அலைப்பேசியை எடுத்து பார்த்தவன் அதனை ப்ரிண்டுக்கு கொடுத்து விட்டு எட்டி பிரிண்டாகி வந்த அவள் சி வியை எடுத்தான்.
"பத்மா தேவ் ஆதித்யா" என்று தான் அவள் பெயர் ஆங்கிலத்தில் இருக்க, "புருஷனோட பேருக்கு ஸ்பெல்லிங் தெரியாம இருக்க பாரு" என்று சொல்ல அவளும் யோசனையுடன் அவன் முன்னே இருந்த பெயர் பலகையை பார்த்தாள்.
ஆதித்யாவிற்கு இரு ஏ எழுத்துக்கள் ஆரம்பத்தில் இருந்தன... அவள் ஒரு ஏ தான் போட்டு இருந்தாள்.
அவனே பேனையால் தனது பெயரை திருத்த, "பெயரா முக்கியம் வேலை தான் முக்கியம" என்றாள்.
"ஹெலோ மேடம் அது என்னோட பேர்... சரியா இருக்கணும்" என்றான் அழுத்தமான குரலில்...
"ரொம்ப தான்" என்று அவள் வாய்க்குள் முணுமுணுக்க, "சொல்லணும்னு நினைச்சேன்... அந்த தோடை மாத்திடு... எப்போ பார்த்தாலும் குத்தி கிழிச்சிட்டு இருக்கு" என்றான் அவளது சி வியை பார்த்தபடி...
"இப்போ இத அவசியமா இங்க வச்சு சொல்லணுமா??" என்று கேட்க அவளை ஏறிட்டு பார்த்தவன், "நிறைய நாளா சொல்ல நினைச்சு மறந்து போறேன்... அதான் நினைவு வர்ற நேரம் சொன்னேன்" என்றான்.
"இப்போ எதுக்கு அந்த நினைவு வந்திச்சு??" என்று அவள் புருவம் உயர்த்தி கேட்க வாயடைத்து போனவனோ குரலை செருமியபடி, மீண்டும் குனிந்து சி வியை பார்த்தவன், "உன்னோட சாரீயை கொஞ்சம் சரி பண்ணு... புருஷன் என்கிறதுக்காக இப்படி ஓபன் ஹார்ட் ஆஹ் இருக்கணும்னு இல்ல... இங்க சி சி டி வியும் இருக்கு" என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.
அவளோ அவனை முறைத்தபடி புடவை மாராப்பை சரி செய்தவளோ, "அப்போ இவ்ளோ நேரம் பார்த்திட்டா சும்மா இருந்தீங்க?" என்று கேட்க, "வந்ததுல இருந்து பார்த்திட்டு தானே இருக்கேன்..பை தெ வே ஆஃபீஸ் என்கிறதால தான் சும்மா இருக்கேன்..." என்று பதில் வந்தது.
"ஐயோ நான் கேட்டது ஏன் பார்த்துட்டு சொல்லல என்கிற மீனிங்ல" என்று கடுப்பாக சொல்லிக் கொள்ள அவனோ அடக்க முடியாமல் சத்தமாக சிரிக்க அவள் முறைத்துப் பார்த்தாள்...
சிரித்தபடி அவளைப் பார்த்தவன், "பார்க்கணும்னு தோணிச்சு... அது தான் உடனே சொல்லாம விட்டேன்" என்று சொல்ல, "சரியான காஜிப்பய" என்று வாய் விட்டே திட்டிக் கொள்ள, "உன் கிட்ட மட்டும்" என்று அவள் விழிகளை பார்த்து சொல்லி விட்டு, இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன், "ஐ டி டிபார்ட்மென்ட்ல" என்று ஆரம்பிக்க, "எனக்கு அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்ட்ல வேலை வேணும்" என்றாள்.
"நீ படிச்சது ஐ டி, உன்னோட குவாலிஃபிகேஷனும் ஐ டி" என்று சொல்ல, "புதுசா கத்துக்க ஆசைப்படுறேன்" என்றாள்.
இதழ்களை கடித்தபடி அவளை அழுத்தமாக பார்த்தவன், "ஸ்டெல்லா எங்க வேலை பார்க்கிறானு பார்த்துட்டு வந்தியா?" என்று சரியாக கேட்க, அவளோ, "இல்லையே" என்றாள்.
"அசிங்கமா பொய் சொல்லாதே..." என்று திட்டியவனோ மேலும், "அக்கவுண்ட்ஸ்ல உனக்கு என்ன தெரியும்?" என்று கேட்டான்.
"ஒன்னும் ஒன்னும் ரெண்டுன்னு தெரியும்... சொல்லி கொடுத்தா கத்துப்பேன்" என்றாள்.
"நீ புதுசா கத்துக்க வேணாம்... ஐ டி ல வேலை பாரு, போதும்" என்று அவன் குரல் உறுதியாகவும் அழுத்தமாகவும் வர, அவளுக்கே ஒரு கட்டத்தில் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்ட் வேண்டும் என்று கேட்பது அபத்தமாக தோன்றியது...
"ஓகே" என்றாள்.
"உனக்கு எந்த எக்ஸ்ட்ரா சலுகையும் இல்ல, புரியுதா?" என்று கேட்க, "நான் உங்க கிட்ட சலுகை கேட்டேனா?" என்று கேட்டாள்.
"சொல்ல வேண்டியது என்னோட கடமை" என்றான்.
"எனக்கு ஒரு சலுகையும் தேவை இல்லை... நான் சாதாரண ஸ்டாஃப் ஆஹ் வேலை பார்ப்பேன்" என்று சொன்னவளை மெச்சுதலாக பார்த்தவன், "குட்" என்று சொல்ல, அவனையே பார்த்து இருந்தாள்.
அவனும், பெல்லை அழுத்தி, ஜெயனை உள்ளே வர சொல்லி விட்டு, அவளைப் பார்த்தவன், "இப்போ என்ன?" என்று கேட்க, குரலை செருமியவாளோ, "சாரி" என்றாள்.
"எதுக்கு?" என்று கேட்க, "நான் பண்ணுறது தப்புன்னு தெரியும்... ஆனா என் மூளை சொல்றத மனசு கேட்க மாட்டேங்குது" என்றாள்.
அவனிடம் சின்ன மௌனம்...
ஒரு பெருமூச்சுடன், "தட்ஸ் ஃபைன், டேக் யோர் டைம்" என்று சொல்ல, சற்று நேரத்தில் ஜெயனும் உள்ளே வர, "பத்மா நம்ம ஆஃபீஸ்ல தான் இனி வேர்க் பண்ண போறா... ஐ டி டிபார்ட்மென்ட்... நான் சொல்ற பொசிஷனுக்கு அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் அடிச்சு கொடுங்க, பை தே வே, பத்மாவை எல்லோர் போலவும் ட்ரீட் பண்ணுனா போதும்... அதிகமா இம்பார்ட்டன்ஸ் கொடுத்து, அடுத்த ஸ்டாஃப்ஸுக்கு சங்கடம் கொடுக்க வேணாம்" என்று சொன்னான்...
ஜெயனும், "ஓகே சார்" என்று சொல்ல, பத்மாவோ தேவ்வை ரசனையாக பார்த்துக் கொண்டே எழுந்தவள், "குட் குவாலிட்டிஸ் நிறையவே இருக்கு தேவ் உங்க கிட்ட" என்று சொல்ல, "சார்" என்று அவளை அழுத்தமாக பார்த்துக் கொண்டே நிறுத்தினான் தேவ்...
அவளும், குரலை செருமிக் கொண்டே, 'ரொம்ப தான்' என்று மனதிற்குள் சொல்லி விட்டு, "சார்" என்றாள் ஒரு மென் சிரிப்புடன்...
"சரி கிளம்பு" என்று சொன்னவன் இதழ்களுக்குள் ஒரு குறும்பு புன்னகை ஒழிந்து இருந்ததை அவள் மட்டுமே கண்டுக் கொண்டாள்.
அதனை தொடர்ந்து ஜெயனுடன் தனது டிபார்ட்மென்ட்டினுள் நுழைந்தாள்.
அங்கே இருந்தவர்களோ பத்மாவை கண்டதும் எழுந்து நிற்க, "ஐயோ நானும் உங்கள போல தான்" என்று சொல்லிக் கொண்டே, "ஐ ஆம் பத்மா" என்று ஒவ்வொருவரிடமும் சென்று அறிமுகமாக, எல்லோரும் சங்கடத்துடன் தங்களை அறிமுகப்படுத்தினார்கள்...
"யாரும் என்னை பார்த்து பயப்பட வேணாம்... எம் டி யை பத்தி காஸிப் பேசுறதுன்னா நானும் சேர்ந்து பேசுவேன்... எதுவும் போட்டு கொடுக்க மாட்டேன், நம்ம சில் பண்ணலாம்... ஓகே யா?" என்று கண் சிமிட்டி கேட்க, அங்கிருந்தவர்களுக்கு சிரிப்பும் வந்து விட்டது...
"ஓகே" என்று சொல்லிக் கொண்டார்கள்...
"அவ்ளோ தான்" என்று சொன்னபடி, அங்கே நின்ற பெண் அருகே வந்தவள், "உங்க பேர் ஷர்மிளா ரைட்?" என்று கேட்க, "ம்ம்" என்றாள்.
"உங்க சாரீ அழகா இருக்கு" என்று சொல்லிக் கொண்டே, தனது இருக்கையில் அமர்ந்து விட, எல்லோருக்கும், அவள் கலகலப்பு பிடித்து விட்டது... ஜெயனும், அவளை ஒரு மென் சிரிப்புடன் பார்த்து விட்டு, தேவ் உடைய அறைக்குள் செல்ல, "என்னாச்சு?" என்று கேட்க, அவனும் அவள் பேசிய எல்லாமே சொல்ல, தேவ் உடைய இதழ்களில் ஒரு மென் புன்னகை...
'ஷீ இஸ் சோ கியூட்' என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவனோ, "ஓகே" என்று சொல்லி விட்டு வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான்.