ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 14

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 14

அன்றே பத்மா வேலையை தொடங்கி இருந்தாள்.

ஏற்கனவே பழக்கப்பட்ட வேலை என்பதால் அவளுக்கு சிரமமாக இருக்கவே இல்லை...

எல்லோருடனும் கல கலவென பேசி பழகியவள் அன்று மாலை ஸ்கூட்டியை எடுக்க வந்த போது, தேவ் காரில் ஏறப் போனவன், "பத்மா" என்று அழைத்தான்.

அவளும் திரும்பிப் பார்க்க, கண்களால் அருகே அழைத்தான்...

தன்னை நோக்கி வந்தவளிடம், "ட்ராப் பண்ணிடுறேன்" என்றான்...

"எனக்கு எந்த சலுகையும் வேணாம்" என்று அவன் விழிகளை பார்த்துக் கொண்டே, அவள் சொல்ல, "ஓகே" என்று கண் சிமிட்டி சொல்லிக் கொண்டே, அவன் காரில் ஏற, அவளும் ஸ்கூட்டியில் ஏறிப் புறப்பட்டு இருந்தாள்.

அன்று இரவு வீட்டுக்கு வந்ததுமே, "எப்படி இன்னைக்கு இருந்திச்சு?" என்று கேட்டான்...

"நல்லா இருந்திச்சு" என்று அவள் சொல்ல, "ஐ நீட் டு பீ க்ளோஸர் வித் யூ டுடே" என்று வெளிப்படையாகவே அவன் கேட்டு விட, அவளுக்கும் மறுக்க தோன்றவில்லை...

"ஓகே" என்று சொல்லிக் கொண்டவள் அன்று இரவு அவனுக்குள் அடைக்கலமாகி இருந்தாள்.

அலுவலகத்துக்கு வந்த பத்மாவுக்கு தன்னையும் மீறி ஸ்டெல்லா பற்றி ஆராய தோன்றும்... அடக்கிக் கொள்வாள்...

ஸ்டெல்லா பெரிதாக தேவ்வுடைய அறைக்குள் செல்வது இல்லை என்று அறிந்தவளுக்கோ ஒரு வித இதம் மனதில் பரவ ஆரம்பித்து இருந்தது...

ஓரளவு சரியாக அவர்கள் வாழ்க்கை அடுத்த இரு வாரங்கள் நகர்ந்து இருக்கும், மீண்டும் பூகம்பமாக வந்தது, தேவ் உடைய அறைக்குள் இருக்கும் பரண் மேல் வைக்கப்பட்டு இருந்த பெட்டி...

அன்று அவள் வீட்டில் நின்று இருக்க, தேவ் அலுவலக வேலையாக வெளியேச் சென்று இருந்தான்...

அவளோ அறையை சுத்தம் செய்ய நினைத்து, பரணில் இருந்த பெட்டியை எட்டி எடுத்தவள், அதனை திறந்ததும், மனதில் ஒரு வலி...

கடக்க வேண்டும் என்று நினைத்தாலும் முடியவில்லை...

அன்று இரவு தேவ் வீட்டுக்கு வரவே பத்து மணி ஆகி விட்டது...

ரத்னமும் தூங்கி விட்டார்...

பத்மாவோ கட்டிலில் யோசித்துக் கொண்டே அமர்ந்து இருந்தாள்.

அறைக்குள் வந்த தேவ்வோ, "என்னடி யோசிக்கிற?" என்று கேட்டுக் கொண்டே, குனிந்து அவள் நெற்றியில் முத்தம் பதித்தவன், குளிக்கச் சென்று விட, அப்படியே அமர்ந்து இருந்தாள்.

குளித்து விட்டு ஷார்ட்ஸ் மற்றும் டீ ஷேர்ட் போட்டு வந்தவனோ, கட்டிலில் அவள் அருகே அமர்ந்துக் கொண்டே, "செம்ம டயர்ட் தான்... ஆனாலும், நீ வேணும்னு தோணுது" என்று சொன்னபடி, அவள் கழுத்தை பற்றி இதழில் இதழ் பதிக்க, அவன் மார்பில் கையை வைத்து தள்ளியவளோ, "எனக்கு பீரியட் தேவ், அத கூட யோசிக்காம இப்படி நடக்கிறீங்களே, உங்களுக்கு படுக்க மட்டும் தான் நான் தேவைல?" என்று கேட்டாளே பார்க்கலாம்...

தூக்கி வாரிப் போட்டது அவனுக்கு... என்ன பேசி விட்டாள் அவள்...

"மைண்ட் யோர் வேர்ட்ஸ் பத்மா" என்று சொல்லிக் கொண்டே எழுந்தவனோ, கழுத்தை வருடியபடி கண்களை மூடி திறந்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டே அவளை குனிந்து பார்த்தான்...

அவனையே பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தவளது கண்ணில் இருந்து கண்ணீர் வழிய, "நீ பேசுற பேச்சுக்கு நான் தான் டி அழணும்... நீ ஏன் அழுற? நீ பீரியட்ன்னு சொன்னாலே விலகி தானே போய் இருக்கேன்... அந்த நேரத்துல உன் மேல பாயுறதுக்கு நான் என்ன மிருகமா? எதுக்கு இவ்ளோ மோசமா பேசுற? உன் மனசுல என்ன தான் டி இருக்கு? எதுவும் இல்லன்னு சொன்னா செவில்லையே விடுவேன்" என்று மிரட்டலாக சொல்ல, அவளும் கண்களை துடைத்துக் கொண்டே எழுந்தவளோ, அங்கே எடுத்து வைத்து இருந்த பெட்டியை தூக்கி அவன் முன்னே வைத்தாள்.

சட்டென அவன் விழிகள் சுருங்க, அதனை திறந்தவள், "இதெல்லாம் என்ன தேவ்? யாரையும் மறக்கிற எண்ணமே இல்லையா?" என்று கேட்டுக் கொண்டே, ஹெயார் கிளிப்பை எடுத்து நீட்டியவள், "இது யாரோடது?" என்று கேட்டான்.

நெற்றியை வருடிக் கொண்டே, "ஹேய், அது ஏதோ ஒரு மூட்ல சேர்த்து வச்சேன்... அப்புறம் தூக்கி போட மறந்துட்டேன். இதெல்லாம் ஒரு மேட்டர்னு பேசிட்டு இருக்க" என்றான்...

"எனக்கு இது பெரிய விஷயம் தான்" என்று சொல்லிக் கொண்டே, கையில் இருந்த ஹெயார் கிளிப்பை கண்களால் காட்டியவள், "இது யாரோடது?" என்று மீண்டும் கேட்க, "நித்யாவோடது" என்றான்...

அடுத்து ஒரு பொலித்தீன் பைக்குள் போட்ட பப்பிள் கம்மை எடுத்து நீட்டியவள், "இது யாரோடது?" என்று கேட்க, "ஸ்டெல்லாவோடது" என்றான்...

"காஜி பய" என்று திட்ட, அவளை உறுத்து விழித்தான்...

"என்ன முறைப்பு, காஜி தான்" என்று சொல்லி விட்டு, ஒவ்வொன்றாக கேட்டவளோ, இறுதியாக இரு மோதிரங்களை எடுத்து நீட்டினாள்...

"இது யாரோடது?" என்று கேட்க, "ஒன்னு நான் பூர்விகாவுக்கு போட்டது, அடுத்தது பூர்விகா எனக்கு போட்டது" என்றான்.

"பாரபட்சம் இல்லாம எல்லாமே சேர்த்து வச்சு இருக்கீங்க... இதுக்குள்ள, என் மனசுல நீ தான் இருக்க, அப்படின்னு லவ் டயலாக் வேற" என்று சொல்ல, "இதெல்லாம் ஒரு நினைவா சேர்த்து வச்சேன்... இப்போ தூக்கி போட சொன்னாலும் தூக்கி போடுவேன்... எனக்கு இதெல்லாம் ஒரு மேட்டர் இல்லை... நீ நம்பலான்னாலும், என் மனசுல இப்போ நீ மட்டும் தான் இருக்க" என்றான் நிதானமாக...

"அப்போ என்னோடது ஒண்ணுமே இல்லையே" என்றாள் கலங்கிய கண்களுடன்...

"நீயே என் கிட்ட இருக்கும் போது உன்னோட திங்க்ஸ் எதுக்குடி?" என்று கேட்டான்.

அவனை முறைத்தவள், "இப்படி பேசி பேசி தான் என்னை மயக்கி வச்சு இருக்கீங்க" என்று சொல்ல, சட்டென அவள் வைத்து இருந்த பெட்டியை எடுத்து மூடியவன், "நீ அரை மென்டல்ன்னு நினைச்சேன், ஆனா இப்போ தான் தெரியுது, நீ முழு மென்டல்" என்று சொல்லிக் கொண்டே அந்த பெட்டியை தூக்கிய படி, வெளியேற, அவளோ, "இப்போ எங்க போறீங்க?" என்று கேட்டாள்.

"ஆஹ் தெரு முனைல இருக்கிற குப்பை தொட்டிக்குள்ள போட" என்று சொல்லிக் கொண்டேச் சென்றவன், அதனை போட்டு விட்டு தான் அறைக்குள் நுழைந்தான்...

பத்மாவுக்கே தெரியும் தான் செய்துக் கொண்டு இருப்பது அதிகப்படி என்று...

அறைக்குள் வந்தவன், அங்கே அமர்ந்து இருந்தவளை முறைத்து விட்டு நகர, "அந்த டயமென்ட் ரிங் எவ்ளோ?" என்று கேட்டாள்.

"அது எதுக்கு உனக்கு ?" என்றவனிடம், "அதையும் தூக்கி போட்டீங்களா?" என்று கேட்க, "ம்ம்" என்றான்...

"அநியாயம்ல" என்று சொன்னவளை பார்க்காமல் டீ ஷேர்ட்டை கழட்டி ஹங்கேரில் போட்டவன், அவளுக்கு முதுகு காட்டி படுத்தபடி, "நிறைய கஷ்டப்படுறவங்க அந்த குப்பையை கிளறுவாங்க, யாரோட கைலயாச்சும் கிடைச்சு நல்லா வாழட்டும்" என்றான்...

அவளுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது...

அவன் அருகே படுத்தவள், அவனை பார்த்துக் கொண்டே படுத்தாள்.

அவன் முதுகு தான் அவளுக்கு தெரிய, "ஐ ஆம் சாரி" என்றாள்.

பதில் இல்லை...

"இன்னைக்கு எனக்கு பீரியட் இல்ல" என்றாள்.

"ஐ க்னோ, உனக்கு எப்போ வரும்னு எனக்கு தெரியாதா?" என்று கேட்டான்...

"கோபத்துல தான் சொன்னேன்" என்றாள்.

அவனிடம் பதில் இல்லை...

கையை நீட்டி முதுகை வருடினாள்.

"கையை எடுடி" என்று அதட்டல் அவனிடம்...

"மாட்டேன்" என்று சொல்லிக் கொண்டே, அவனுடன் ஒட்டிக் கொண்டவள், பின்னால் இருந்து அவனை அணைத்துக் கொண்டே, அவன் முதுகில் முகம் புதைத்தபடி அவன் மார்பை வருடினாள்.

அவனிடம் இருந்து எந்த அசைவும் இல்லை...

"நான் வேணாமா?" என்று கேட்டாள்...

"இல்லை" என்று சொல்ல, "எனக்கு நீங்க வேணும்" என்றாள்.

"தேவைன்னா எடுத்துக்கோ" என்று சொல்ல, அவளோ, அவனை திருப்பி, அவனை அணைத்துக் கொண்டே இதழில் இதழ் பதித்து விலகியவள், "உங்க இஷ்டம் இல்லாம எப்படி?" என்று கேட்க, கண் மூடி இருந்தவனோ, "நான் தான் எதுவும் பண்ண மாட்டேன், என் உடம்புல ஃபீலிங்ஸ் அப்படியே தான் இருக்கு... என்ன தான் வெட்கம் கெட்ட உடம்போ தெரியல" என்றபடி அவள் கைகளை பற்றி தனது மேனியில் படர விட்டான்.

அவன் செயலாலும் பேச்சாலும் வெட்கத்துடன் சேர்ந்து சிரிப்பும் வந்து விட்டது அவளுக்கு...

அவளும் அப்படி தானே தனக்கு தானே திட்டிக் கொள்வாள்...

"அப்போ ஓகே" என்று சொல்லிக் கொண்டே, அவனை இன்று அவளே ஆட்கொண்டாள்.

அவன் என்ன தான் கோபம் என்றாலும், அவள் அசைவுகளை ரசிக்கவும் தவறவில்லை, அவள் அங்க வனப்புகளை ஸ்பரிசிக்கவும் தவறவில்லை... இதழ்களுக்குள் சிரித்தும் கொண்டான்...

கோபமும் தாபமுமாக அவர்கள் நாட்கள் நகர்ந்து இருக்க, இப்படியான ஒரு நாளில், அலுவலகத்தில் இருந்த ஸ்டெல்லாவிற்கோ அவசர அழைப்பு வந்தது...

எடுத்தது என்னவோ அவள் தாய் தான்... காலையிலேயே மகளுக்கு கொஞ்சம் உடல் நிலை மோசமாக இருந்தது... அதே சிந்தனையுடன் இருந்தவளுக்கு வந்த செய்தியும் அதிர்ச்சியாகி விட்டது.

"பொண்ணுக்கு கொஞ்சம் உடம்பு மோசமா இருக்கும்மா, டாக்டர் அவசரமா ஆபரேஷன் பண்ண சொல்றார், நீ சீக்கிரம் வாம்மா" என்று சொல்ல, அவளுக்கோ கண்களில் கண்ணீர்...

ஆபரேஷன் பண்ணும் அளவுக்கு கைகளில் பணம் இல்லை...

என்ன செய்வது என்று தெரியாமல், வேகமாக தேவ்வை தேடி தான் சென்றாள்.

அவள் தேவ் உடைய அறைக்குள் செல்வது பத்மாவின் விழிகளில் இருந்து தப்பவும் இல்லை.

அறைக்குள் நுழைந்ததுமே, அழுகையுடன், "சார்" என்றாள்.

தேவ்வோ, "என்னாச்சு?" என்று கேட்க, "குழந்தைக்கு உடம்பு முடியல சார், அவசரமா ஆபரேஷன் பண்ணனும்... இப்போ உடனே ஹாஸ்பிடல் போகணும்" என்று விம்மலுடன் சொல்ல, அவனுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.

"உன் கிட்ட கைல பணம் இருக்கா?" என்று கேட்டான்... இல்லை என்று தலையாட்டினாள்...

"நான் பார்த்துக்கிறேன்... ஆபரேஷனுக்கு ஏற்பாடு பண்ணிடு, ஹாஸ்பிடல் டீடெய்ல்ஸ் சொல்லு, நான் வந்திடுறேன்" என்று சொல்ல, "ஓகே சார்" என்று சொல்லிக் கொண்டே, அவள் வெளியேறிய சற்று நேரத்தில் அவனும் வெளியேறி இருக்க, இருவரும் அடுத்தடுத்து போவதை பார்த்துக் கொண்டே இருந்தாள் பத்மா...

'ஜோடியா எங்க போறாங்க? நம்மளும் பின்னாடியே போவோம்' என்று நினைத்துக் கொண்டே, தனது மேலாளரிடம் அனுமதி பெற்று அவள் வெளியேறி வந்தாள்.

அங்கே ஸ்டெல்லா பதட்டத்துடன் நடந்துச் செல்ல, தேவ்வோ, "ஸ்டெல்லா, இஃப் யூ டோன்ட் மைண்ட், நானே டிராப் பண்ணுறேன்" என்று சொல்ல, அவளும், "ஓகே சார்" என்றாள்.

அவளுக்கு குழந்தையிடம் செல்ல வேண்டும் என்கின்ற அவசரம்...

அவனும் காரை எடுத்துக் கொண்டே அவள் அருகே வர, ஸ்டெல்லாவும் காரில் ஏறிக் கொண்டாள்.


இதனை சற்று தள்ளி நின்று பார்த்த பத்மாவோ, வாயில் அதிர்ந்து கையை வைத்துக் கொண்டே, 'மோசம் போய்ட்டியே பத்மா, உன் கண் முன்னாடியே ஜோடியா போறாங்க, நீ இல்லாத நேரம் என்ன எல்லாம் ஆகி இருக்குமோ, ஃபெர்ஸ்ட் லிப்லாக் வேற... அவன் கண்ண பார்த்தாலே மயங்கிடுறியே... சொரணை கெட்டவ' என்று தனக்கு தானே திட்டியவள், தனது பைக்கை எடுத்துக் கொண்டே, அவர்களை பின் தொடர ஆரம்பித்தாள்.
 

CRVS2797

Active member
ஐஸ்க்ரீம் சிலையே ..!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மூ
(அத்தியாயம் - 14)


ஆனாலும் இவ செய்யுறது, இவளுக்கே அநியாயமா தெரியலையா...? அவன் கல்யாணத்துக்கு முன்னாடி தான் எப்படியெப்படியோ இருந்தான், ஆனா இப்ப பர்ஃபெக்ட்டா தானே இருக்கிறான், அது தெரிஞ்சும் அவனை வார்த்தையால சீண்டி, அவன் கற்புக்கு சோதனை வைக்குறாளோ...? ஆக மொத்தம், ராமன் மட்டும் தான் அக்னியில இறங்கச் சொல்லனும்ன்னு கிடையாது,
சான்ஸ் கிடைச்சா சீதையும் சொல்லி காட்டுறதோட, அவனை நெருப்புல இறங்கி நிருபிக்கச் சொல்லுவா போல.
அப்படின்னா, இங்க யாருமே உத்தமர் கிடையாது அப்படித்தானே..?


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
  • Like
Reactions: grg
Top