அத்தியாயம் 15
"போச்சு போச்சு, என் வாழ்க்கையே போச்சு" என்று புலம்பிக் கொண்டே வண்டியை ஓட்டியவளுக்கு அவன் காரின் வேகத்தை ஈடு செய்ய கஷ்டமாக இருந்தாலும் ஓரளவு அவன் வந்திறங்கிய இடத்தை கண்டும் பிடித்து விட்டாள்.
அவன் கார் பார்க் செய்யப்பட்டு இருந்தது...
நிமிர்ந்து பார்த்தாள்.
ஹாஸ்பிடல் வளாகம்...
'இங்க எதுக்கு வந்தாங்க? ஐயோ' என்று நெஞ்சில் கையை வைத்தவளுக்கு நினைவுகள் தப்பு தப்பாக சுழல, 'பத்மா தப்பு தப்பா யோசிக்காதே' என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டாள்.
'எப்படி யோசிக்காம இருக்க முடியும்? அவ வேற அழகா இருக்கா... இவன் வேற காஜி பய' என்று நினைத்துக் கொண்டே, இருக்க, "ஏய்" என்று ஒரு குரல்...
திரும்பிப் பார்த்தாள்.
தேவ் தான் காரின் மற்றைய பக்கம் சாய்ந்து நின்று இருந்தான்.
அவள் பின் தொடர்வதை கண்டுக் கொண்டவன், அவள் வரும் வரை காத்துக் கொண்டு நின்று இருப்பான் போலும்...
'ஐயோ இவன் உள்ளே போகலையா?' என்று நினைத்துக் கொண்டே ஹெல்மெட்டை மாட்டியவள், அங்கே இருக்கும் பூ விற்கும் பெண் அருகே வந்து, "பூ கொடுங்க" என்று சொல்ல, அவள் பின்னே வந்து ஹெல்மெட்டை இழுத்து கழட்டி இருந்தான் தேவ்...
"நான் பூ வாங்க வந்தேன்" என்று சொல்லிக் கொண்டே அவனை நோக்கி திரும்பினாள்.
"வேவு பார்க்க வந்த தானே, முழுசா வந்து பார்த்துடு" என்று அவளை நீல நிற விழிகளால் உறுத்து விழித்தபடி சொல்ல, "இல்ல அது" என்று பயத்தில் எச்சிலை கூட்டி விழுங்கினாள்...
அவன் இவ்வளவு தைரியமாக பேசுவதே அவன் மேல் தப்பு இல்லை என்று அவளுக்கு உணர்த்தி இருக்க, தான் செய்தது பெரிய பிழை என்று நினைத்தாள்.
கொஞ்சம் பயமாகவும் இருக்க, "உள்ளே வாடி" என்று சொல்லிக் கொண்டே, அவள் ஹெல்மெட்டை அவளது பைக்கில் வைத்தவன், ஒற்றைக் கையால் அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டேச் செல்ல, அவளுக்கோ வலி உயிர் போனது...
அவன் பற்றி இருந்ததே அவள் மீது அவன் எந்தளவு கோபத்தில் இருக்கின்றான் என்று எடுத்து உரைக்க, "வலிக்குது விடுங்க" என்று சொன்னாலும் கேட்காமல் அவளை இழுத்துக் கொண்டே, ஸ்டெல்லாவின் குழந்தை அனுமதிக்கப்பட்டு இருக்கும் ஐ சி யூ அருகே சென்றான்...
ஸ்டெல்லா உள்ளே குழந்தையை பார்க்கச் சென்று இருக்க, வாசலில் நின்று இருந்தார் அவள் தாய்...
"எட்டிப் பாரு" என்று பத்மாவிடம் சொல்லி விட்டு, ஸ்டெல்லாவின் தாயிடம், "குழந்தைக்கு எப்படி இருக்கு?" என்று கேட்க, அவரும், "அவசரமா ஆபரேஷன் பண்ணனும் தம்பி" என்று அழுதுக் கொண்டே சொன்னார்...
உள்ளே எட்டிப் பார்த்த பத்மாவின் மனம் பிசைய ஆரம்பித்தது...
சின்ன குழந்தையை வைத்திய உபகரணங்கள் நடுவே வைத்து இருக்க, ஸ்டெல்லா விம்மி அழுதுக் கொண்டே குழந்தையை பார்த்தபடி நின்று இருந்தாள்.
இப்போது பத்மா அருகே வந்த தேவ்வோ, "உன் சந்தேகம் தீர்ந்திடுச்சா?" என்று கேட்டான்...
அவனை பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தவள், "என்னாச்சு?" என்று கேட்க, "ஹோல் இன் தெ ஹார்ட், உடனே ஆபரேஷன் பண்ணனும்... அவ கிட்ட பணம் இல்ல" என்று சொல்லி முடிக்க முதல், "நீங்க ஹெல்ப் பண்ணலாம்ல" என்று அவள் கேட்க, அவளை ஆழ்ந்து பார்த்தான்.
அவளை அவனால் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை...
"அதுக்கு தான் வந்திருக்கேன்" என்று சொன்னவன் குரலில் சற்று முன்னர் இருந்த கடினம் இல்லை...
மென்மையாக இருந்தது...
"அப்போ பணம் கட்டிடலாமே" என்று அவளே அவசரப்படுத்த, அவனும், "கட்டிட்டு வந்திடுறேன்" என்று சொன்னபடி அவன் செல்ல, "நானும் வந்திடுறேன்" என்று சொல்லிக் கொண்டே, அவனுடன் கூட சென்றாள் பத்மா...
பணம் கட்டும் இடத்தில், குழந்தையின் பெயரை சொல்லிக் கொண்டே தனது டெபிட் கார்டை தேவ் நீட்டி இருக்க, "இந்த கார்ட்ல எடுத்துக் கொள்ளுங்க" என்று சொல்லி, அவன் அருகே ஒரு கை. திரும்பிப் பார்த்தான் ஸ்டெல்லாவின் கணவன் ஸ்டீஃபன் தான் நின்று இருந்தான்...
தேவ்விற்கோ தடுமாற்றம்...
தன்னையும் ஸ்டெல்லாவையும் தவறாக நினைத்து விடுவானோ என்று சங்கடம் தோன்ற, "என்னோட ஸ்டாஃப் தான் ஸ்டெல்லா, திஸ் இஸ் மை வைஃப்" என்று அருகே நின்ற பத்மாவையும் அறிமுகப்படுத்த, "ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்காதீங்க தேவ்... எனக்கு என் வைஃப் மேல நம்பிக்கை நிறையவே இருக்கு... சின்ன பிரச்சனைல பிரிஞ்சிட்டோம்... என் குழந்தை இப்படி இருக்கும் போது, நான் எப்படி அவ மேல கோபத்தை இழுத்து பிடிச்சிட்டு இருக்கிறது... அவளுக்கு என் சப்போர்ட் தேவை" என்று கலங்கிய கண்களுடன் பேசினான்...
பத்மாவுக்கு அவன் பேசுவதை கேட்டதுமே, மனம் கூசிப் போனது...
எப்படி எல்லாம் அவள் மீது நம்பிக்கையை அவள் கணவன் வைத்து இருக்கின்றான்...
அந்த நம்பிக்கையை தான் வைக்க தவறி விட்டோமே என்கின்ற அவமானம் தான் அவளுக்கு... தலையை குனிந்து ஆழ்ந்த மூச்சை எடுத்தவளோ, தேவ்வைப் பார்க்க, அவன் அவளை பார்க்கவில்லை...
ஸ்டீஃபனிடம் பேசிக் கொண்டே இருந்தான்...
பணத்தை ஸ்டீஃபன் கட்டி முடிய, அவனுடன் சேர்ந்து தேவ் நடக்க, அவனுக்கு மறு பக்கம் வந்த பத்மாவுக்கு தன்னை நினைத்தே ஆத்திரம்...
ஐ சி யூ வை ஸ்டீஃபன் நெருங்கிய சமயம், உள்ளே இருந்து வந்த ஸ்டெல்லாவோ, அடுத்த கணமே எதையும் யோசிக்காமல், "ஸ்டீஃபன், நம்ம குழந்தை" என்று விம்மியபடி அவன் மார்பில் தஞ்சம் புகுந்துக் கொண்டாள்.
"அது தான் நான் வந்துட்டேன்ல, எதுவும் ஆக விட மாட்டேன்" என்று சொல்லிக் கொண்டே, அவளை அணைத்துக் கொண்டான் ஸ்டீஃபன்.
இதனை பார்த்த தேவ் உடைய இதழ்களும் மெலிதாக விரிய, "அப்போ நாங்க கிளம்புறோம், எல்லாம் நல்லாவே நடக்கும்" என்று சொல்லி விட்டு அவன் புறப்பட்டு இருக்க, பத்மாவும் அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை கூறி விட்டு கூடவே புறப்பட்டு இருந்தாள்.
அவன் பத்மாவை பார்க்கவில்லை...
ஸ்டீஃபன் பேசியதில் இருந்தே ஒரு அழுத்தம்...
அவன் மனைவியை அவன் நம்பும் அளவுக்கு பத்மா தன்னை நம்பவிலையே என்கின்ற ஏக்கம்...
பத்மாவை திரும்பிக் கூட பார்க்காமல் காரில் ஏறியவன், அங்கிருந்து புறப்பட்டு இருக்க, அவன் காரையே பார்த்துக் கொண்டு இருந்த பத்மாவும் கனத்த மனதுடன் தான் வீட்டை நோக்கிச் சென்றாள்.
அவன் அலுவலகத்திற்குச் சென்று இருக்க, அவளோ வீட்டில் அவனுக்காகவே காத்துக் கொண்டு இருந்தாள்.
நீண்ட நேரம் கட்டிலில் அமர்ந்து இருந்தவள், மெதுவாக எழுந்து அலுமாரியை திறந்தாள்.
திருமணம் செய்து இத்தனை நாட்கள் கடந்து விட்டன.
இன்னும் அவள் கருத்தடை மாத்திரை பாவிக்கும் விஷயத்தை அவனிடம் சொல்லவில்லை.
கிட்டத்தட்ட தினமும் அவளுடன் கலந்து விடுபவன், குழந்தை பற்றி ஒரு வார்த்தை கேட்கவும் இல்லை...
இனி இந்த மாத்திரைகள் தேவை இல்லை என்று தோன்றியது...
அப்படியே தூக்கிக் கொண்டு போய் குப்பை கூடைக்குள் போட்டு இருந்தாள்.
குளித்து விட்டு வந்தவள், இரவில் அணியும் பைஜாமா மற்றும் ஷேர்ட்டை அணிந்துக் கொண்டே, அவனுக்காக காத்துக் கொண்டு இருந்தாள்.
இரவு எட்டு மணிக்கு தான் அவன் வீட்டுக்கு வந்தான்...
ரத்னமோ, "என்னப்பா இவ்ளோ நேரம்?" என்று ஹாலில் அமர்ந்தபடி கேட்க, "வேலைப்பா" என்று சொல்ல, "உனக்கு பிடிச்சது எல்லாம் இன்னைக்கு பத்மா சமைச்சு வச்சு இருக்கா" என்றார்.
"ம்ம்" என்று மட்டும் சொன்னவன் அறைக்குள் சென்றான்...
கட்டிலில் அமர்ந்துக் கொண்டே, அவனையே பார்த்தபடி இருந்ததாள் பெண்ணவள்...
அவன் அவளை திரும்பிக் கூட பார்க்கவில்லை...
டவலை எடுத்துக் கொண்டே குளிக்கச் சென்று விட்டான்.
'இவர் எப்போ குளிச்சு வந்து, நான் எப்போ மன்னிப்பு கேட்டு' என்று பெருமூச்சுடன் நினைத்துக் கொள்ள, டவலை இடையில் கட்டிக் கொண்டே வெளியே வந்தவன், இரவு உடையை அணியும் பொருட்டு அலுமாரியை திறந்த கணம், அவனை பின்னால் இருந்து அணைத்து இருந்தாள் பத்மா...
தனது கன்னத்தை அவன் வெற்று முதுகில் வைத்தாள்.
ஏற்கனவே அவன் முதுகில் இருந்த நீர் துளிகள், அவள் கன்னத்தினால் சூடேறிப் போக, தனது வயிற்றை சுற்றி பிணைந்து இருந்த அவள் கரத்தை விலக்க முயன்றான்...
அவள் பிடி இறுகியது...
"கையை எடுடி" என்றான்...
"மாட்டேன்" என்றாள்.
"இப்போ என்ன?" என்று கேட்டான்.
"சாரி" என்றாள்.
"சரி கையை எடு" என்று அவன் பெருமூச்சுடன் சொல்ல, "நான் இன்னைக்கு பண்ணுனதை நியாயப்படுத்தவே முடியாது... ரொம்ப பெரிய தப்பு அது" என்றாள்.
அவள் மேனி அழுகையில் குலுங்கியது...
அவள் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் அவன் முதுகையும் நனைக்க, கண்களை மூடி திறந்தவனோ, பெருமூச்சுடன், அவள் கரத்தை அழுத்தமாக பற்றி அகற்றிக் கொண்டே, அவளை நோக்கி திரும்ப, அவளும் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
இருவரின் விழிகளும் கலந்தன...
அவன் நீல விழிகள் அவளை அள்ளி சுருட்டி இருக்க, அவன் பாதம் மேல் பாதம் வைத்து ஏறினாள். இருவரின் இடைவெளியும் பூஜ்ஜியம் ஆனது...
அவன் மேனியில் இருந்த நீர் துளிகள், அவள் ஆடையினுள் ஊடுருவி அவளை அடைந்து இருக்க, சிலிர்த்து எழுந்தது அவளுக்கு...
அவன் கழுத்தை பற்றிக் கொண்டே, "சாரி" என்றாள்.
கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது...
இவ்வளவு நெருக்கத்தில் நின்று குழந்தை போல மன்னிப்பு கேட்கும் அவளை அவனால் ஒதுக்க முடியவில்லை...
அவளை ஆழமாக பார்த்தவன், "இது தான் லாஸ்ட் பத்மா... என் மனசுல நீ மட்டும் தான் இருக்க... இதுக்கு அப்புறம் என்னை நீ சந்தேகப்பட்டா நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்" என்று சொல்லிக் கொண்டே, அவள் கழுத்தை பற்றியவன், அவள் இதழில் இதழ் பதித்து இருந்தான்...
அவள் விழிகள் அவன் முத்த தாக்குதலை தாங்க முடியாமல் மோகமாக மூடிக் கொள்ள, அவன் கரமோ, அவள் அணிந்து இருந்த ஷேர்ட்டின் பட்டன்களை களைய ஆரம்பித்தது...
அவள் தடுக்கவில்லை...
'உன் உடமை, அனுபவித்துக் கொள்' என்கின்ற தோரணை தான்...
அவனும் அவளும் இறுதியில் ஒரே நிலையில் இருக்க, அவளை தூக்கி இடையில் வைக்க, அவளும் அவன் இடையை சுற்றி கால்களை பின்னிக் கொண்டாள்.
அவன் மேனியில் இருந்த நீர்த்துளிகள் அவள் மேனிக்கு இடம் மாறின..
அப்படியே முத்தமிட்டபடி தூக்கிக் கொண்டே, கட்டிலுக்குச் சென்றவன், அவள் இதழில் இருந்து இதழ்களை பிரித்தெடுத்து, அவளை ஆழ்ந்து பார்த்தான்...
அவளும் அவனையே பார்த்துக் கொண்டே, "ஒழுங்கா நீங்க துடைக்கல, உங்களால நானும் ஈரமாயிட்டேன்" என்றாள்.
அவன் விழிகள் அவள் விழிகளில் இருந்து கீழிறங்கி பயணம் செய்தபடி, "அட ஆமால, நீ இருக்கும் போது நான் எதுக்கு டவலால துடைச்சிக்கிட்டு" என்றவனோ கீழ் அதரங்களை கடித்துக் கொண்டே, அவள் மேனியின் அங்க வனப்புகளை விழிகளால் சுருட்டிக் கொண்டான்.
அவன் பார்வையில் கூசிப் போன பெண்ணவளோ, சிணுங்கிக் கொண்டே, தன்னை இரு கைகளாலும் மறைத்துக் கொள்ள, அவனோ அவள் இரு கைகளையும் பற்றி, தனது விரல்களுடன் அவள் விரல்களை கோர்த்துக் கொண்டே, "என்னடி புது பொண்ணு போல வெட்கப்படுற? நான் குடியிருக்கிறேதே அங்கே தானே" என்றான்...
அவன் பேச்சில் அவள் சிவந்து போக, "ச்சீ" என்று வெட்கப்பட்டு பார்வையை அவனில் இருந்து அகற்ற, அவனும் புன்னகை முகமாக, அவள் கழுத்துக்குள் முகம் புதைத்து அவளை தன்னுடைமை ஆக்க ஆரம்பித்து விட்டான்... சொன்ன போலவே, அவள் மேனி அவனுக்கு இக்கணம் பூந்துவாலை ஆகி போனது.
அவளை ஆட்கொண்ட முடிவில், விலகிப் படுத்தவனிடம், "பசிக்கலையா?" என்று கேட்டாள் பெண்ணவள்...
"இப்போ தானே மொத்தமா சாப்பிட்டேன்" என்றான் அவன் குறும்பாக...
அவன் கையில் மெதுவாக அடி போட்டவள், "ஐயோ அத கேட்கல, உங்களுக்குன்னு சமைச்சு இருக்கேன்" என்று சொல்ல, "சரி சாப்பிடலாம் வா" என்று சொல்லிக் கொண்டே, ஆயத்தமாகி வெளியேச் சென்றார்கள்...
ரத்னம் சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்று இருக்க, அவனும் அவளும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள்...
உணவுகளுடன் சேர்த்து, அவர்கள் இதழ்களும் அடிக்கடி கலந்துக் கொண்டன...