ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 18

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 18

இப்படியே அடுத்த நாள் விடிந்தது...

கட்டிலில் விட்டத்தை பார்த்துக் கொண்டே படுத்து இருந்தாள் பத்மா...

மனம் எல்லாம் அடித்துப் போட்ட போல ஒரு உணர்வு...

எதிலுமே ஆர்வம் இல்லை...

ஆனால் இப்படியே இருந்து விட முடியாதே...

நேரத்தைப் பார்த்தாள்.

ஏழு மணியாக இருந்தது...

இனி வேலைக்கு கிளம்ப வேண்டும்...

ஏற்கனவே தாமதமாகி விட்டது...

சலிப்புடன் எழுந்து கதவை திறந்து பார்க்க, ஹாலில் அமர்ந்து காஃபி குடித்தபடி இருந்தான் தேவ்.

கதவு நிலையில் சாய்ந்து நின்று தன்னையே பார்த்துக் கொண்டு இருந்தவளை, கொஞ்சமும் சட்டை செய்யாது தனது அறைக்குள் நுழைந்து விட்டான்...

அவளும் பெருமூச்சுடன் குளித்து ஆயத்தமாகி வெளியே வந்த சமயம், அவனோ சாப்பிட்டு விட்டு கிளம்பி இருந்தான்.

'பைத்தியமா பத்மா உனக்கு... வாய வச்சுட்டு சும்மா இருந்து இருக்கலாம்ல, இப்போ உன்னை நிமிர்ந்து கூட பார்க்கிறார் இல்ல' என்று தனக்கு தானே திட்டியவளுக்கு பசி வேறு...

தனக்கு தானே உணவு தயாரித்து சாப்பிட்டவளோ, 'நாளைக்கு தான் துர்கா வருவா' என்று நினைத்தபடி அலுவலகத்துக்கு கிளம்பி விட்டாள்.

அங்கே சென்றாலும் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை...

சலிப்பாகவே இருந்தது...

'மாமா வந்தா கொஞ்சம் சரி ஆகும்... அவர் வர ஒரு மாசம் ஆகுமே' என்று மனதுக்குள் புலம்பி தீர்த்தாள்...

வீட்டுக்கு அவள் சென்ற நேரமும், அவன் அவளை பார்க்காமல், இரவு உணவை தயாரித்து சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்று விட்டான்...

வெறுப்பாகி விட்டது அவளுக்கு...

அவளும் நாய்க்குட்டி போல, அவனை சுற்றி சுற்றி வந்தாலும் அவன் கண்டுக் கொண்ட போலவே இல்லை...

அடுத்த நாள் காலையில் துர்கா வேலைக்கு வந்திருக்க, அவளே சமைத்து இருந்தாள்.

அதனால் தனி தனியே சமைக்க வேண்டிய தேவை இருக்கவில்லை...

இருவரும் தனி தனி அறைக்குள் இருப்பது அவள் கண்களுக்கும் தப்பவில்லை.

ஆனாலும் கேட்காமல் மௌனமாகி விட்டாள்.

ஒன்றாக வேலைக்குச் செல்வார்கள், இரவில் உணவு அவர்கள் தான் தனி தனியே தயார் செய்ய வேண்டும்...

தனி தனியே சாப்பிட்டு விட்டு தூங்கி விடுவார்கள்...

சனி ஞாயிற்றுக் கிழமைகளிலும் அவன் வீட்டில் நிற்பது இல்லை...

கிட்டத்தட்ட ஒரு வாரம் கடந்து விட்டது.

அவனிடம் எந்த வித முன்னேற்றமும் இல்லை...

இன்னுமே பாராமுகம் தான்...

பத்மாவுக்கு பொறுமையும் போய் விட, அன்று இரவு ஹாலுக்குள் கடுப்புடன் அமர்ந்து இருந்தாள்.

அவன் பக்கத்திலேயே வரமாட்டேன் என்கின்றானே... எப்படி அவனை சாமாதானப்படுத்துவது என்றும் தெரியவில்லை. அறைக்குள் சென்றால் தாழிட்டுக் கொள்வான்... அதற்குள்ளும் அனுமதி இல்லை அவளுக்கு.

'எவ்ளோ நாள் இப்படி மூஞ்சை திருப்பிட்டே இருப்பார்... நானும் பாவம்ல ... மன்னிக்கலாம்ல, ஒரு வாரமா நான் இல்லாம, என்னை கிஸ் பண்ணாம எப்படி தான் இருக்காரோ தெரியல... எனக்கு இருக்கவே முடியல... நம்ம தான் உண்மையான செக்ஸ் அடிக்ட் போல' என்று நினைத்துக் கொண்டே சமையலறைக்குள் எட்டிப் பார்த்தாள்.

தனக்காக சமைத்துக் கொண்டு இருந்தான்.

'படுக்கிறது சாப்பிடுறதுன்னு எல்லாமே தனியா பண்ணுனா நான் எதுக்கு??' என்று முணுமுணுத்துக் கொண்டே தன்னை குனிந்து பார்த்தாள்... சுடிதார் அணிந்து இருந்தாள்.

'இத போட்டுட்டு எப்படி மயக்குகிறது?? புடவை கட்டுவோம்' என்று நினைத்தபடி அறைக்குள் நுழைந்தவளோ நேரத்தைப் பார்த்தாள்.

இரவு எட்டரை...

'எட்டரை மணிக்கு புருஷன மயக்க புடவ கட்டுறது நான் ஒருத்தியா தான் இருப்பேன்' என்று நினைத்தபடி மெல்லிய சிவப்பு நிற சேலையை கட்டிக் கொண்டாள்.

நெற்றியில் குங்குமத்தை வைத்தவள், தாலியையும் வெளியே போட்டபடி, 'இந்த பின் எல்லாம் குத்த தேவல... அப்போ தான் பார்த்ததும் கிளுகிளுப்பா இருக்கும்' என்று நினைத்துக் கொண்டே இடை அப்பட்டமாக தெரியும் வண்ணம் புடவையை சரி செய்து விட்டு, மாராப்பையும் தெரிந்தும் தெரியாத போல விலக்கியபடி கண்ணாடியில் தன்னை பார்த்தாள்.

'அவ் இவரை மயக்க என்ன வேலை எல்லாம் பண்ண வேண்டி இருக்கு??' என்று நினைத்தபடி சமையலறைக்குள் நுழைந்தாள்.

அவன் ஷார்ட்ஸ் மற்றும் டி ஷேர்ட் அணிந்து சமைத்தபடி இருக்க, குரலை செருமினாள் அவன் திரும்பவே இல்லை...

"என்ன சமையல்?" என்று கேட்டபடி அவனை உரசிக் கொண்டே எட்டிப் பார்த்தாள்.

ஒரு அடி விலகி நின்றுக் கொண்டான். 'ரொம்ப தான்' என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி அங்கே இருந்த சமையல் கட்டில் ஏறி அமர்ந்துக் கொண்டே, "நான் எப்படி இருக்கேன் தேவ்?" என்று கேட்டாள்.

அவன் அவளை பொருட்டாக கூட மதிக்கவில்லை...

கடுப்பாகி விட்டது...

"உங்களுக்காக ரெடி ஆகி இருக்கேன்... என்னை பார்க்கவே தோணலையா??" என்று சிணுங்கலாக கேட்டாள்.

சட்டென திரும்பி பார்த்தான்.

மாராப்பை இன்னும் கொஞ்சம் கீழே இறக்கி விட்டாள்.

அவளை நோக்கி அடிமேல் அடி மேல் வைத்து வர, 'வேர்க் அவுட் ஆகுது... வேர்க் அவுட் ஆகுது' என்று நினைத்தபடி ஆர்வமாக அமர்ந்து இருக்க அவளை நெருங்கி விட்டான். அவளது இருபக்கமும் சமையல்கட்டில் கையை வைத்துக் கொண்டே அவளை நீல நிற விழியால் ஆழ்ந்து பார்க்க பெண்ணவளின் விழிகள் மோகமாக மூடிக் கொண்டன. அவனோ அவளை ஒரு கணம் பார்த்து விட்டு அவளுக்கு பின்னே இருந்த உப்பு பாட்டிலை எடுத்துக் கொண்டே விலகி நிற்க அவன் மூச்சுக் காற்று விலகி விட்டதை உணர்ந்து விழிகளை திறந்தாள்.

உப்பு பாட்டிலை தூக்கி காட்டி விட்டு அவன் நடக்க, கோபம் வந்து விட்டது அவளுக்கு...

"நானும் பார்த்திட்டே இருக்கேன்... அப்படி என்ன தான் கோபம்?" என்று கேட்டபடி அவனது டீஷேர்ட்டை இழுத்து திருப்ப அவனோ, அருகே இருந்த கத்தியை எட்டி எடுத்தபடி அவளை நோக்கி திரும்பியவன் அதன் கூர்மையை விரல்களால் பரிசோதித்தபடி அவளை பார்த்து ஒற்றை புருவத்தை உயர்த்த, அவளும், 'கொலை வெறியில இருக்கார் போல' என்று நினைத்துக் கொண்டே, "ஹி ஹி சும்மா" என்று சொன்னபடிஅங்கிருந்து விறு விறுவென வெளியேறி இருந்தாள்.

'சரியான அராத்து' என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான் அவன்.

தனது அறைக்குள் நுழைந்து கதவை மூடியவளோ, 'ஜஸ்ட்டு மிஸ்ஸு' என்று நினைத்தபடி கட்டிலில் அமர்ந்தாள்.

'இவரை என்ன பண்ணி வழிக்கு நான் கொண்டு வர்றது... ஒரு வாரமா என் முகத்தை கூட சரியா பார்க்க மாட்டேங்குறார்... என்னவோ போல இருக்கு' என்று முணுமுணுத்தவளுக்கு என்ன செய்வது என்று தான் தெரியவில்லை...

கெலெண்டரைப் பார்த்தாள்.

ரத்னம் வர இன்னும் மூன்று வாரங்கள் மீதம் இருந்தன...

'மாமா வந்தா தான் இதுக்கு எல்லாம் முடிவு கட்டலாம்' என்று நினைத்துக் கொண்டே, வெளியே வர, அவனோ சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்...

அவன் முன்னே வந்து நின்றவள், "பசிக்குது" என்றாள்.

அவளை பார்க்காமல் அவன் சாப்பிட, வேண்டும் என்றே, அவன் தட்டை இழுத்து எடுத்து, சாப்பிட ஆரம்பித்து விட்டாள்.

அவனோ, "ப்ச்" என்று சலித்துக் கொண்டே, எழுந்தவன், சமையலறைக்குள் சென்று, தனக்கு உணவை இன்னொரு தட்டில் போட்டு எடுத்துக் கொண்டே, வந்து சாப்பிட, "சாப்பாடு நல்லா இருக்கு" என்றாள்.

அதற்கும் பதில் இல்லை...

அவளுக்கு ஒரு கட்டத்தில் சலித்து விட, பேசாமல் சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்று விட்டாள்.

இப்படியே அடுத்த வாரமும் கடந்து விட்டது...

அவனிடத்தில் சின்ன மாற்றம் கூட இல்லை...

தனக்குள் சலித்து சோர்ந்து போனது என்னவோ அவள் தான்...

அவன் பேசாமலே நாட்களை கடத்தி, அவளை மனதளவில் சோர்வாக்கி இருக்க, அவளால் வேலை கூட ஒழுங்காக செய்ய முடியவில்லை...

அவன் எண்ணம் தான் சுற்றி சுற்றி வந்தது...

இப்படியான ஒரு நாளில், தேவ் உடைய அலுவலக அறைக்குள், "சார்" என்று தயங்கியபடி உள்ளே வந்தான் ஜெகன்.

"ம்ம்" என்று சொன்னபடியே லேப்டாப்பில் தேவ் முக்கிய வேலைகளை பார்த்துக் கொண்டே இருக்க, "ஒரு கம்ப்ளைண்ட்" என்றான்.

"யார் மேல?" என்று கேட்டவன் இப்போவும் அவனை பார்க்கவில்லை...

"பத்மா மேல" என்று சொன்னதுமே சட்டென அவனை ஏறிட்டு பார்த்தவன், "என்னாச்சு?" என்றான்.

"கொடுத்த டாஸ்க் எதுவும் முடிக்கல" என்று சொல்ல, "என்ன தான் பண்ணிட்டு இருக்கா அவ ??" என்று எரிச்சலாக கேட்க, அவன் மேசையில் ஒரு பேப்பரை வைத்தான். அதில், "சாரி சாரி" என்று தொடர்ந்து கையால் எழுதப்பட்டு இருந்தது...

"பேப்பர் பேப்பரா எழுதி வச்சு இருக்கா" என்று சொன்ன ஜெகனை பார்த்தவனோ, 'படுத்துறா' என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி, "உள்ளே வர சொல்லுங்க" என்றான்.

சற்று நேரத்தில் அவளும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே உள்ளே நுழைய, அவளை முறைத்துப் பார்த்தவன், "மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க??" என்று கேட்டான்.

"உங்கள தான்" என்றாள்.

"செருப்பால அடிப்பேன்... இப்போ டாஸ்க் முடிக்க போறியா இல்லையா??" என்று கேட்க, "முடியாது" என்றாள்.

"ஆஃபீசை விட்டு வெளிய போ" என்றான்.

"மாட்டேன்" என்றவளிடம், "கழுத்தை பிடிச்சு தள்ளுவேன்" என்றான்.

"வாசலுல உட்கார்ந்து போராட்டம் பண்ணுவேன்" என்று சொல்ல, "என்ன தான் டி வேணும் உனக்கு ??" என்று எகிறினான்.

அவளோ, "மனசெல்லாம் சோர்வா இருக்கு..." என்று சொல்ல, "தட்ஸ் யோர் ப்ராப்லம்" என்று சொல்ல, "ஒண்ணே ஒன்னு கிடைச்சா எனெர்ஜியை ஏத்திட்டு வேலை பார்க்க தொடங்கிடுவேன்" என்றாள்.

"என்ன வேணும்??" என்று கேட்க, "கிட்ட வாங்க" என்று சொல்லி மேசையில் இரு கைகளையும் வைத்தபடி எழுந்தவள் அவனை நோக்கி சரிந்து, "காத கொடுங்க சொல்றேன்" என்றாள்.

"முடியாது..." என்று சொல்ல, "சத்தமா சொன்னா உங்களுக்கு தான் சங்கடமா இருக்கும், அப்புறம் வெளிய கூட வச்சு சத்தமா சொல்லுவேன்" என்று மிரட்டியவளை ஒரு மார்க்கமாக பார்த்தவன், 'இவளை நம்ப முடியாது ஏதாவது ஏடாகூடமா கேட்பா' என்று நினைத்தபடி அவனும் மேசையில் இரு கைகளையும் வைத்துக் கொண்டே அவளை நோக்கி எழுந்தவனின் டையை பற்றி இழுத்தவள், அவன் இதழில் ஆழமாக இதழ் பதிக்க, அதிர்ந்து விரிந்தது என்னவோ அவன் விழிகள் தான்.

ஆழ்ந்த முத்தமிட்டு விலகியவள், அதிர்ந்து நின்றவனின் விழிகளை மையலுடன் பார்த்துக் கொண்டே, "எப்படி இவ்ளோ கன்ட்ரோல் ஆஹ் இருக்கீங்க? என்னால முடியல" என்றாள்.

அவனோ அவளை முறைத்துக் கொண்டே, தனது டையை பற்றி இருந்த அவள் கையை தட்டி விட்டபடி, "ஹாவ் யூ லாஸ்ட் யோர் மைண்ட்?" என்று கேட்டுக் கொண்டே, அங்கே இருந்த சி சி டி வியைப் பார்க்க, அவளோ, "இப்போ கொஞ்சம் எனெர்ஜியா இருக்கு" என்றாள் மென் சிரிப்புடன்...


"நான் என்ன பேசிட்டு இருக்கேன், நீ என்னடி பேசிட்டு இருக்க?" என்று அவன் சீற, "அப்போ நான் இனி டாஸ்க் முடிச்சு கொடுக்கிறேன்" என்று சம்பந்தமே இல்லாமல் பேசி விட்டு அவள் வெளியேறி இருக்க, அவள் முதுகை வெறித்துப் பார்த்தபடி தொய்ந்து இருக்கையில் அமர்ந்தவனோ, 'என்னை படுத்தி எடுக்கிறா... இப்போ சி சி டி வி ஃபூட்டேஜை அழிக்கணும்' என்ற முணுமுணுத்துக் கொண்டான்.
 

CRVS2797

Active member
ஐஸ்க்ரீம் சிலையே ..!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மூ
(அத்தியாயம் - 18)


தேவ்வை நாய் மாதிரி சுத்துற, செக்ஸ் அடிக்ட் ஆகிட்டா, செக்ஸ் இல்லாம இருக்க முடியாதுன்னு வாய்க்கு வந்தபடியெல்லாம் வசை பாடி விட்டுட்டு, இப்ப உல்ட்டாவா அவளே மாறிட்டா.
இப்ப பத்மாவுக்கும் கிறுக்கு பிடிச்சு போயுடுச்சு போல.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top