அத்தியாயம் 19
அன்று இரவு வீட்டுக்கு வந்த தேவ் எதுவும் பேசவில்லை...
அவள் இன்று நடந்துக் கொண்டதில் கோபம் இருந்தாலும், அதனை காட்டி பிரச்சனையை பெரிது பண்ண விரும்பாதவன் சாப்பிட்டு விட்டு தூங்கி விட்டான்...
'என்ன ஒரு ரியாக்ஷனையும் காணோம்?' என்கின்ற ரீதியில் அவளும் தூங்கி விட, அடுத்த நாள் இருவரும் அலுவலகத்துக்குச் செல்ல ஆயத்தமாகி வெளியே வந்தார்கள்...
'இன்னைக்கு இவரை விட கூடாது' என்று நினைத்தபடி அவன் முன்னே வந்து நின்றாள்.
அவளை சலிப்பாக பார்த்துக் கொண்டே, நெற்றியை நீவியவன், அவளை தாண்டிச் செல்ல முயல, அவன் கையை பற்றியவள், "கிஸ் பண்ணிட்டு போங்க தேவ்" என்று சொல்ல, அவள் பற்றி இருந்த கையை உதறி விட்டு, அவளை நீல நிற விழிகளால் உறுத்து விழித்து விட்டு அவன் கடந்துச் செல்ல, உடைந்து விட்டாள் பெண்ணவள்...
"இப்போ மட்டும் நீங்க கிஸ் பண்ணலன்னா, இன்னைக்கு ஆஃபீஸ்ல வச்சு பண்ணுவேன், அதுவும் எல்லார் முன்னாடியும்" என்று முடிக்க முதல், வேகமாக திரும்பி, அவளை நோக்கி வந்தவன், அவள் கழுத்தை பற்றி, இதழில் இதழ் பதித்தான்...
இதழ்கள், நா, உமிழ்நீர் என்று எல்லாமே கலந்து விடும் அளவுக்கு, மிக மிக ஆழமான முத்தம்... அவள் உயிரையே உறிஞ்சு குடிக்கும் அளவுக்கு முத்தமிட்டான்... அவள் இதழ்களில் ரத்தம் கசியும் அளவுக்கு ஒரு வன்மையான முத்தம்...
ஒற்றை முத்தத்திலேயே அவளால் நிலை கொள்ள முடியாமல் போய் விட, அவளை முத்தமிட்டு நிமிர்ந்தவன், அவளை அனல் தெறிக்க பார்த்துக் கொண்டே, "இது மட்டுமா? இதுக்கு மேலயும் வேணுமா?" என்று கேட்டுக் கொண்டே, அவள் மாராப்பில் கையை வைக்க, அவளோ அவன் விழிகள் காட்டிய கோபத்தில் மிரண்டும் விட்டாள்.
"தேவ், என்ன பண்ணுறீங்க?" என்று கேட்டுக் கொண்டே, அவன் கையை தட்டி விட, "நான் உன் உடம்புக்காக அலையுற போல தானே இப்போவும் நினைச்சுட்டு இருக்க?" என்று சீறினான்...
இதுவரை அவன் அடக்கி வைத்து இருந்த கோபம் எல்லாம் வெளியே வர, பெண்ணவளுக்கு புரியவில்லை...
"என்ன பேசுறீங்க? நான் சும்மா விளையாட்டுக்கு" என்று ஆரம்பிக்க, "எதுடி விளையாட்டு? ஆஃபீஸ்ல கிஸ் பண்ணுறது உனக்கு விளையாட்டா? அத விடு, செக்சியா சாரி உடுத்துட்டு வந்தா, அப்படியே நான் உன் மேல பாய்ஞ்சுடுவேன்னு தானே நினைக்கிற... சோ இப்போ வரைக்கும், நான் செக்ஸுக்கு நாய் போல அலையுறேன்னு நினைப்பு தான் உன் கிட்ட இருக்கு" என்று சொன்னதுமே, அவளுக்கு கண்களில் கண்ணீர்...
அவள் இப்படி எல்லாம் நினைக்கவே இல்லை...
"தேவ் எதுக்கு இப்படி பேசுறீங்க... யூ ஆர் ஹேர்டிங் மீ" என்று சொன்னவளை வெறித்துப் பார்த்தவன், "யூ ஆர் ஹேர்டிங் மீ பத்மா... இப்போவும் என்ன செடியூஸ் பண்ணனும்னு தான் எல்லாமே பண்ணுற, இப்போ நான் கிஸ் பண்ணுனா, உடனே சமாதானம் ஆகி, உன்னை பெட்க்கு கூப்பிடுவேன்னு நினைக்கிற... என்னை ஃபிஸிக்கல் ஆஹ் தான் அப்ரோச் பண்ணுற... எமோஷனலா என் கூட நீ கனெக்ட் ஆகணும்னு நினைக்கவே இல்லை" என்றான்...
குரலில் அப்படி ஒரு வேதனை...
"அப்படி எல்லாம் இல்ல தேவ்" என்று அவள் அழுகையுடன் சொல்ல, "அப்படி தான்... இதுக்கு வேற என்ன அர்த்தம் உன்னால கொடுக்க முடியும்?" என்று திட்டியவனோ, நெற்றியை வருடி விட்டு, ஒற்றை விரலை நீட்டி, "இங்க பாரு பத்மா, நீ ட்ரெஸ் இல்லாம வந்து நின்னா கூட, நான் உன்னை தொட கூடாதுன்னு நினைச்சா என் நுனி விரல் கூட உன் மேல படாது... ஐ கேன் கன்ட்ரோல் மை செல்ஃப்... நம்ம ஃபெர்ஸ்ட் நைட் மட்டும் தான் லஸ்ட் ஓட ஆரம்பிச்சுது... அதுக்கப்புறம், உன்னை பிடிச்சதால தான் உன் கூட ஆல்மோஸ்ட் டெய்லி ரிலேஷன்ஷிப் வச்சுக்கிட்டேன்... அத கூட நீ புரிஞ்சுக்கல... நீ சொல்ற போல நான் அடிக்ட் தான்... ஆனா உன் மேல தான்... செக்ஸ் மேல இல்லை... திரும்ப திரும்ப நீ இப்படி சீப்பா பண்ணிட்டு இருக்கிறது எனக்கு ஹேர்ட் ஆகுது..." என்று சொல்ல, அவனை வெறித்துப் பார்த்தவளுக்கு மனமெல்லாம் வலி...
"தேவ் நீங்க இப்படி நினைப்பீங்கன்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணல, ஜஸ்ட் விளையாட்டுக்கு" என்று ஆரம்பிக்க, "ஷட் அப், உனக்கு எல்லாமே விளையாட்டா இருக்கலாம்... எனக்கு அப்படி இல்ல..." என்று சொன்னவனோ விறு விறுவென வெளியேற, அவளோ தொய்ந்து சோஃபாவில் அமர்ந்தவள் முகத்தை மூடி அழ ஆரம்பித்து விட்டாள். கோபம் என்றாலும் சரி, காதல் என்றாலும் சரி, காமம் என்றாலும் சரி, அளவுக்கு அதிகமாகவே அள்ளிக் கொட்டுகின்றான்.
அவன் பேசிச் சென்றது அவள் மனதை காயப்படுத்தி இருந்தது...
அடுத்து என்ன செய்வது என்று தெரியாத தடுமாற்றம் அவளுக்கு...
அவன் இவ்வாறெல்லாம் பேசிய பிறகு, இனி அவனை அவளால் நெருங்க முடியுமா என்ன?
கண்ணீரை துடைத்துக் கொண்டே, சாப்பிட்டவளுக்கு உணவும் இறங்கவில்லை...
கஷ்டப்பட்டு சாப்பிட்டு முடித்தவள், அலுவலகத்துக்கு கிளம்பி இருந்தாள்.
வழக்கமாக இருக்கும் கலகலப்பு அவளிடம் இல்லை...
மௌனமாகவே வேலை பார்த்தாள்...
அவனை தொந்தரவு செய்யவும் இல்லை...
அவனை ஏறிட்டுப் பார்க்கவும் இல்லை...
மனம் மிகவும் சோர்வாக வேறு இருந்தது...
அன்றில் இருந்து அவனைப் போலவே, அவளும் தனது வேலைகளை பார்த்துக் கொண்டே இருந்தாள்.
இப்படியே ஒரு வாரமும் கடந்து விட்டது...
ரத்னம் அழைத்து இருந்தார்.
"சொல்லுங்கப்பா" என்று தேவ் சொல்ல, "இன்னொரு மாசம் நிற்க சொல்லி ஃப்ரெண்ட்ஸ் கேக்கிறாங்க தேவ்" என்று சொல்ல, "என்ஜாய் யோர் டேய்ஸ், இதுக்கெதுக்கு என் கிட்ட கேட்கிறீங்க?" என்று கேட்டான்.
"பத்மா என்ன பண்ணுறா?" என்று கேட்க, அவள் அந்நேரம் அங்கே தான் அமர்ந்து டி வி பார்த்துக் கொண்டு இருக்க, "டி வி பார்த்துட்டு இருக்கா" என்றான் இறுகிய குரலில்...
"ம்ம் கொடு, நான் பேசணும்" என்று சொல்ல, அவனும் அலைப்பேசியை அவள் முன்னே நீட்டி இருக்க, அவனை பார்க்காமலே அதனை வாங்கி காதில் வைத்தாள்.
"எப்படிம்மா இருக்க?" என்று கேட்டார்...
"நல்லா இருக்கேன் மாமா" என்றாள்.
"நான் வர இன்னும் ஒரு மாசம் ஆகும் மா" என்றார்.
"சரி மாமா" என்றாள்.
"எப்போ நல்ல சேதி சொல்ல போற?" என்று கேட்டார்...
அவள் முகம் இறுகி விட்டது...
எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டே, "சீக்கிரம்" என்றாள்.
"சந்தோஷம்மா" என்று அவர் வைத்து விட, அலைப்பேசியை தேவ்விடம் கொடுத்து விட்டு, அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
அவசரமாக மேசையை திறந்து தேடினாள்...
அவள் தேடியது வேறு எதுவும் இல்லை கர்ப்பத்தை உறுதி செய்யும் எச் சி ஜி ஸ்டிக்கை தான்...
கடைசியாக தேடி எடுத்தவளோ, அவசரமாக குளியலறைக்குள் நுழைந்தாள்.
அவள் கருத்தடை மாத்திரையை நிறுத்தி நாளாகி விட்டது...
அதன் பிறகு அவனுடனான கலவி நடந்துக் கொண்டு தான் இருந்தது...
இடையில் இந்த பிரச்சனையால் தனது மாதவிடாய் பற்றியும் அவள் மறந்து இருக்க, இன்று ரத்னம் கேட்டதும் தான் அவளுக்கு நினைவே வந்தது...
'இவ்ளோ நாள் ஆயிடுச்சே' என்று நினைத்தபடி, குளியலறைக்குள் சென்று பரிசோதித்தாள்.
இரு சிவப்பு கோடுகள்...
ஆம் கர்ப்பமாக இருக்கின்றாள்...
சுவரில் சாய்ந்து கண் மூடி நின்றாள்.
கண்ணில் இருந்து கண்ணீர் துளிகள்...
சந்தோஷப்படுவதா? இல்லையா? என்றும் தெரியவில்லை...
அவனுடன் இப்படி பிரச்சனை இருக்கும் போது, இதனை நினைத்து அவளால் சந்தோஷமாக சிரிக்கவும் முடியவில்லை...
வீட்டில் தான் இருக்கின்றான்...
சொல்வதா? வேண்டாமா? என்று தடுமாற்றம்...
மறுபடி குழந்தையை காரணம் காட்டி சேர நினைக்கின்றாள் என்று சொல்லி விட்டால் அவள் மொத்தமாக நொறுங்கி விடுவாளே...
ரத்னம் வந்த பின்னர் தான் இந்த பிரச்சனையை சுமூகமாக்க முடியும் என்று நினைத்தவளோ, இதனை அவனிடம் சொல்லாமலே விட்டு விட்டாள்.
அடுத்த நாள் இருந்து வழக்கம் போல வேலைக்குச் சென்று வந்தாள்.
இடையில் விடுப்பு எடுத்துக் கொண்டே வைத்தியரை பார்க்கவும் சென்றாள்.
எதுவும் தேவ்விடம் அவள் சொல்லவே இல்லை.
இப்படியே அடுத்த இரு வாரங்களும் கழிந்து இருக்க, ஜெயாவின் வீட்டில் ஒரே பரபரப்பாக இருந்தது.
நிரூபனோ அழுதுக் கொண்டே ஜெயா முன்னே அமர்ந்து இருந்தான்.
"என்னடா பண்ணி தொலைச்ச?" என்று கேட்க, "ஆஃபீஸ் பார்ட்டில கொஞ்சம் கை கலப்பு ஆயிடுச்சும்மா, கூட வேலை பார்க்கிற ஒருத்தன கண்ணாடி பாட்டிலால அடிச்சுட்டேன்... வேலையை விட்டு தூக்கிட்டாங்க, அது கூட பரவாயில்லை, போலீஸ் கேஸ் போட போறேன்னு எம் டி நிக்கிறார்... என் வாழ்க்கையே போயிடும் மா" என்று சொல்ல, "கையை கால வச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா? அடிப்பட்ட பையன் சேஃப் தானே" என்று கேட்க, "ஹாஸ்பிடல்ல இருக்கான்... எம் டி விட மாட்டேன்னு நிக்கிறார்..." என்று சொல்ல, "ப்ச், இப்போ என்னடா பண்ணுறது? நான் பேசி பார்க்கட்டுமா?" என்று கேட்க, "அது சரி வராதும்மா, நான் காலுல விழாத குறையா கெஞ்சிட்டேன்" என்று சொன்னான்...
அவருக்கும் கண்களில் கண்ணீர்...
"லாயர் கிட்ட பேசி பார்ப்போமா?" என்று கேட்க, "அம்மா, நான் அடிச்ச சி சி டி வி இருக்கு... நம்ம பக்கம் கேஸ் நிற்காது... கண்டிப்பா என்னை உள்ள தள்ளாம விட மாட்டாங்க..." என்று சொன்னான்...
"என்னடா சொல்ற?" என்று அவர் பதற, "ஒரே ஒரு வழி இருக்கு" என்றான்...
"என்ன வழி?" என்று கேட்க, "எம் டி கிட்ட மச்சானை பேச சொல்றீங்களா?" என்று கேட்க, அவருக்கோ தூக்கி வாரிப் போட்டது.
"என்ன விளையாடுறியா? அவனை தேடி போனா என்னை கொன்னுடுவான்... அப்படி என் மேல கொலை வெறில இருக்கான்" என்று சொல்ல, "அம்மா, ப்ளீஸ் மா" என்று சொல்லி, அவர் கையை பற்றி கெஞ்ச ஆரம்பித்து விட்டான்...
தாய் மனம் அல்லவா? சற்று பதறியது...
அன்று இரவு அவருக்கு தூக்கமும் இல்லை...
நிரூபனை கைது செய்வது போல தான் கனவும் வர, பதறி எழுந்துக் கொண்டார்...
அதன் விளைவு அடுத்த நாள் காலையிலேயே அவர் நின்றது என்னவோ தேவ் உடைய வீட்டில் தான்...
என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கின்ற நம்பிக்கையில் வந்து விட்டார்...
ஆனால் இப்போது பயமாக இருந்தது...
வாசலில் அவர் நின்று இருக்க, அலுவலகத்துக்கு ஆயத்தமாகி வெளியே வந்த தேவ் உடைய முகமோ அவரை கண்டதுமே இறுகியது...
அவரை பார்க்க கூட அவனுக்கு பிடிக்கவில்லை... அவரை கடந்துச் சென்றவனை, "தேவ்" என்று அழைத்தார்.
பதில் சொல்லாமல் அவன் நடக்க, வேகமாக வந்து அவனை மறித்தவர், "முக்கியமான விஷயம் தேவ்" என்றார்.
அந்த நேரம், பத்மாவும் வேலைக்குச் செல்வதற்காக வெளியே வந்திருக்க, இருவரையும் பார்த்துக் கொண்டே நின்று இருந்தாள்.
தேவ்வோ, "உங்க கையால சாப்பிட்ட ஒரே காரணத்துக்காக உங்கள சும்மா விட்டு இருக்கேன், இனி இங்க வந்திடாதீங்க" என்று அவரை பார்க்காமல் சொல்லிக் கொண்டே நகர, "என்னை மன்னிச்சுடுப்பா, ஆஃபீஸ் பையன் மேல கையை வச்சுட்டான்னு நிரூபனை அரெஸ்ட் பண்ண போறாங்க, ஆத்மன் உன் ஃப்ரெண்ட் தானே... நீ நினைச்சா காப்பாத்தலாம்..." என்று சொல்லிக் கொண்டே இருக்க, நடந்துச் சென்று காரில் ஏறியவன், "அது உங்க பிரச்சனை" என்று சொல்லிக் கொண்டே காரை கிளப்பி இருக்க, அவருக்கோ அழுகை...
மகள் வெறுத்து விட்டாள்...
மகனும் இல்லை என்றால் தனித்து விடுவார்...
தேவ்வும் வீட்டில் சேர்க்க மாட்டான்...
மனம் எல்லாம் ரணமாக வலித்தது...
முகத்தை மூடி அவர் அழுதுக் கொண்டே இருக்க, அவரையே பார்த்துக் கொண்டு நின்ற பத்மா, என்ன நினைத்தாளோ தெரியவில்லை, அவர் அருகே வந்தாள்.
"நான் உதவி செய்யட்டுமா?" என்று கேட்டாள்.
அவர் அதிர்ந்து அவளைப் பார்க்க, "என் அம்மாவால உங்க வாழ்க்கையே போய் இருக்கு... அதுக்கு என்னோட பிராயச்சித்தமா நினைச்சுக்கோங்க..." என்று சொல்ல, "அன்னைக்கு நான் நித்யா கிட்ட சொல்லி" என்று ஆரம்பித்தவருக்கு வார்த்தைகள் வராமல் தடுமாற, "அது நீங்க பண்ணி இருக்க கூடாது... புருஷன் வேற ஒருத்தி கூட இருந்தா எப்படி வலிக்கும்னு உங்களுக்கு தெரியும்... அதே வலியை எனக்கு நீங்க கொடுக்க நினைச்சு இருக்க கூடாது... ஆனாலும் நான் இப்போ பண்ணுறது, என் அம்மா பண்ணுன பாவத்துக்கு பிராயச்சித்தம் மட்டும் தான்" என்றாள்.
குரலில் எந்த உணர்வும் இல்லை...
அவளே மரத்துப் போய் இருக்கும் போது, அவள் குரல் என்ன உணர்த்தி விட முடியும்?
"உன்னால முடியுமாம்மா?" என்று கேட்டார்...
"என்னாச்சுன்னு சொல்லுங்க, ஆத்மன் கிட்ட பேசி பார்க்கிறேன்" என்றாள்.
அவரும் எல்லாமே சொல்ல, "ம்ம், பேசிட்டு சொல்றேன்... நிச்சயமா சொல்ல முடியாது... ஆனா முயற்சி பண்ணுறேன்" என்று சொல்ல, அவரோ அழுகையுடன் கையை கூப்ப, அவரது கூப்பிய கையை ஒரு வெற்றுப் பார்வை பார்த்து விட்டு கடந்துச் சென்று தனது ஸ்கூட்டியில் ஏறி புறப்பட்டு இருந்தாள்.

Last edited: