ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 20

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 20

அன்று அலுவலகத்துக்குச் சென்றவளோ, அங்கே இருந்து மெசேஜ் அனுப்பியது என்னவோ ஆத்மனுக்கு தான்...

"ஆத்மன் மீட் பண்ணலாமா?" என்று கேட்டாள்.

அவனும், "எஸ், இன்னைக்கு ஃப்ரீ தான்... எந்த ஐஸ்க்ரீம் கடை?" என்று கேட்க, அவள் இதழ்கள் மெலிதாக புன்னகைக்க, சற்று தள்ளி இருக்கும் ஐஸ்க்ரீம் கடையின் பெயரை போட்டவள், நேரத்தையும் போட்டு விட்டு, அரை நாள் விடுப்பை கேட்டாள்.

அவளுக்கும் விடுப்பு கிடைத்து இருக்க, அவள் செல்வதை சி சி டி வியில் பார்த்த தேவ்வோ, 'இவ அடிக்கடி ஏன் இப்போ லாம் லீவு எடுக்கிறா?' என்று யோசித்துக் கொண்டான்...

போன வாரமும் டாக்டரிடம் செக்கப்புக்குச் செல்ல லீவு எடுத்துக் கொண்டாள் அல்லவா?

சொன்ன போலவே ஸ்கூட்டியில் கடையை அடைந்து விட்டாள்.

அங்கே ஆத்மனின் பைக் நின்றது...

ஒரு மென் சிரிப்புடன் கடைக்குள் நுழைய, "இங்க வா" என்று கையை நீட்டி அழைத்தான்...

அவளும் அவ்விடம் சென்று அமர்ந்தவள், "எப்படி இருக்கீங்க?" என்று கேட்க, "சூப்பரா இருக்கேன்... நீ?" என்று கேட்டான்...

அவன் புன்னகையே சந்தோஷமாக இருக்கின்றான் என்று எடுத்து உரைத்தது.

அவளும் மெலிதாக சிரித்துக் கொண்டே, "நல்லா இருக்கேன்" என்றாள்.

"ஏன் முகம் இவ்ளோ டல்லா இருக்கு?" என்று கேட்டான்.

பார்த்ததுமே கண்டு பிடித்து விட்டானே...

தேவ் உடைய விஷயம் தான் அவள் சோர்வுக்கே காரணம்...

ஆனால் நிரூபன் தான் காரணம் என்கின்ற ரீதியில், "அத பத்தி பேச தானே வந்து இருக்கேன், வீட்ல எல்லோரும் எப்படி இருக்காங்க?" என்று கேட்டாள்.

"எல்லோரும் நல்லா இருக்காங்க, உன் துறு துறுப்பு தான் காணாம போயிடுச்சு" என்றான்...

கஷ்டப்பட்டு சிரித்தவளோ, "ஐஸ்க்ரீம் ஆர்டர் பண்ணலாமா?" என்று கேட்க, "ம்ம்" என்று சொன்னவன் ஐஸ்க்ரீமையும் ஆர்டர் செய்து இருந்தான்...

"ம்ம் சொல்லு" என்று சொல்லிக் கொண்டே ஐஸ்க்ரீம் சாப்பிட, "நிரூபன் தெரியுமா?" என்று கேட்டாள்.

"எந்த நிரூபன்?" என்று அவன் கேட்க, "ஆஃபீஸ்ல சண்டை போட்டு" என்று அவள் இழுக்க, "ஆஹ், தேவ்வோட மச்சான்" என்றான்...

"என்னோட அண்ணாவும் தான்" என்றாள்.

"வாட்?" என்கின்ற அதிர்ச்சி ஆத்மனிடம் இருந்து...

அவளை பற்றி தெரியாத விஷயத்தை முதல் முறை சொல்கின்றாள்...

அவளும் பெருமூச்சுடன், "நான் அப்பாவோட ரெண்டாவது சம்சாரத்தோட பொண்ணு" என்று சொல்ல, "ஓஹ் ஓகே" என்று சொன்னவன், அவளது தனிப்பட்ட விஷயத்தை அலச விரும்பவில்லை...

"நவ் வாட்?" என்று கேட்டான் மேலும்.

"கேஸ் போட்டு உள்ளே தள்ள போறீங்கன்னு கேள்விப்பட்டேன்" என்று இழுவையாக சொன்னாள்.

"சண்டை பிடிச்சு மண்டையை உடைச்சது தப்பு தானே... பை தெ வே, இது பிரதீப் டிசிஷன்... நாட் மைன்" என்று சொல்ல, "ம்ம்" என்று சொன்னவளோ சற்று நேரம் மௌனமாக இருந்தாள்.

அவனும் எதுவும் பேசவில்லை...

என்ன கேட்க போகின்றாள் என்று தெரியும்...

ஆனால் பிரதீப் எடுத்த முடிவில் அவன் தலையிட விரும்பவில்லை...

அதனாலேயே அவனிடமும் அந்த மௌனம்...

"அத விடு வேற பேசலாமா?" என்று கேட்டான்...

'நீ கேட்டாலும் நான் செய்ய போவது இல்லை' என்கின்ற தோரணை அவன் பேச்சில் தெரிய, ஒரு பெருமூச்சுடன், "பூர்விகா எப்படி இருக்காங்க?" என்று கேட்க, "அவ சூப்பரா இருக்கா. என்ஜாயின்ங் ஹேர் ப்ரேக்னன்சி" என்று சொன்னவனோ ஒரு கணம் நிறுத்தி, "நாங்க செகன்ட் ரிலீசுக்கு ரெடி ஆயிட்டோம், நீ ஒரு நல்ல விஷயமும் சொல்லலையே" என்று சிரித்தபடி கேட்க, அவளுக்கு ஏனோ அதனை ஆத்மனிடம் மறைக்க தோன்றவில்லை...

"ஐ ஆம் ப்ரெக்னன்ட்" என்றாள்.

"வாவ் கங்கிராட்ஸ்" என்று வாழ்த்தினான்...

மெலிதாக சிரித்துக் கொண்டே, "தேங்க்ஸ்" என்று சொல்ல, இப்போதும் அவள் விழிகளில் உயிர்ப்பு இல்லை...

அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, "சரி என்ன பண்ணனும்ன்னு சொல்லு?" என்று கேட்டான்.

"முடியுமா?" என்று அவள் தயங்கி தயங்கி கேட்க, "ப்ரெக்னன்ட் ஆஹ் இருக்க... என் கிட்ட முதலில ஒரு ஹெல்ப் கேட்டு வந்து இருக்க... இல்லன்னு சொல்ல ஒரு மாதிரி ஃபீல் ஆகுது" என்று சொல்ல, அவளும், "அந்த கேஸ் போடாம செட்டில் பண்ணனும்" என்றாள்.

"இது தான் கேட்க போறேன்னு நினைச்சேன்... ஓகே பிரதீப் கிட்ட பேசுறேன்" என்றான்...

"சாரி, என்னால உங்களுக்கு சிரமம்" என்றாள் தவிப்பாக...

"தட்ஸ் ஃபைன், ஐஸ்க்ரீமை சாப்பிடு" என்று சொன்னவனோ, அலைப்பேசியை எடுத்துக் கொண்டே, சற்று தள்ளிச் சென்று பிரதீப்புக்கு அழைத்தான்...

அவனும், "ஹெலோ" என்க, "டேய் ஃப்ரீயா இருக்கியா?" என்று கேட்டான்.

"ஆஹ் ஃப்ரீ தான்" என்று அவன் சொல்ல, "நிரூபன், விஷயம் என்னாச்சு?" என்று கேட்டான்...

"கேஸ் போடணும்... அது தேவ் மச்சான் தானே... அவன் கிட்ட சொன்னேன்... உன் அண்ணா இந்த இடத்துல இருந்தா என்ன பண்ணுவானோ அத பண்ணுன்னு சொன்னான்" என்றான்...

"உன்ன ஏத்தி விட்டு இருக்கான் அப்போ" என்று ஆத்மன் சொல்ல, "கைண்ட் ஒஃப்" என்று சொன்னான்.

"செட்டில் பண்ணிட்டு ஃப்ரீயா விட்டுடு" என்றான் ஆத்மன்...

"வாட்?" என்று பிரதீப் கேட்க, "பத்மா வந்திருக்கா, அவளுக்கு அண்ணன் முறை போல... ஹெல்ப் ஆஹ் கேட்டா... ப்ரெக்னன்ட் ஆஹ் வேற இருக்கா... சோ ஹெல்ப் பண்ணலாம்னு யோசிச்சேன்" என்று சொல்ல, "ஓகே ஃபைன், நான் பார்த்துக்கிறேன்" என்று பிரதீப் சொல்லி விட்டான்...

ஆத்மன் பேச்சுக்கு மறுபேச்சு அவனிடம் ஏது?

"பை" என்று சொல்லி விட்டு அலைப்பேசியை வைத்த ஆத்மனும் பத்மா முன்னே வந்து அமர்ந்துக் கொண்டே, "ப்ராப்லம் சால்வ்ட்" என்று சொல்ல, "தேங்க்ஸ்" என்றாள் மென் சிரிப்புடன்...

"பட் உன் கண் இப்போவும் சோகமா இருக்கு... ஐ டோன்ட் க்னோ வை" என்று சொல்ல, "கொஞ்சம் ஹெல்த் ப்ராப்லம்" என்று சொல்ல, "தட்ஸ் ஃபைன், டேக் கெயார்" என்றான்.

அதனை தொடர்ந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டு விட்டு இருவரும் கிளம்பி விட்டார்கள்...

பத்மாவும் வீட்டுக்கு வந்து ஜெயாவுக்கு அழைத்து, விஷயத்தை சொல்ல, "ரொம்ப நன்றிம்மா" என்று சொன்னவரோ, ஒரு தயக்கத்துடன், "மன்னிச்சிடும்மா' என்றார்.

"தட்ஸ் ஓகே" என்று ஒரு வெறுமையான குரலில் சொல்லி விட்டு அலைப்பேசியையும் துண்டித்து இருந்தாள் பெண்ணவள்...

அவளுக்கு இப்போது வரை தேவ்வுக்கும் அவளுக்கும் இடையான விலகல் பற்றி தான் மனம் யோசித்துக் கொண்டே இருந்தது.

இப்படியே மூன்று நாட்கள் கடந்து இருக்கும், பிசினஸ் பார்ட்டி ஒன்றுக்காக சென்று இருந்தான் தேவ்...

அங்கே அவனைக் கண்ட பிரதீப்போ, "ஹாய் மச்சி, கங்கிராட்ஸ் சொல்லவே இல்லை" என்று சொல்லி அணைத்து விடுவிக்க, அவனுக்கு எதுவும் புரியவில்லை...

நெற்றியை சுருக்கி யோசித்தவன், "என்ன சொல்லல?" என்று கேட்க, "ஆஹ் ப்ரோமோஷன் கிடைச்சதை தான்" என்றான்...

"ப்ரோமோஷனா?" என்று கேட்டவனுக்கு அவன் சொல்ல வருவது தெரியவே இல்லை...

"ப்ச், அது தான் பத்மா மாசமா இருக்காளே... இன்னுமாடா புரியல?" என்று கேட்டதுமே, அவன் விழிகள் இடுங்கியது...

எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டான்...

யாரோ ஒருவன் சொல்லி, தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் விடயத்தை தெரிந்துக் கொள்வது எவ்வளவு வலி...

கஷ்டப்பட்டு சிரித்தவன், "ஓஹ் அதுவா? மூணு மாசம் முடிய சொல்லலாம்னு தான்" என்று சமாளித்தவனோ, "உனக்கெப்படி தெரியும்?" என்று கேட்க, "ஆஹ், ஆத்மன் தான் சொன்னான்... நிரூபன் மேட்டர் விஷயமா ஆத்மன் கிட்ட பத்மா பேசா வந்து இருக்கா... சரின்னு அவ கேட்டதால பிரச்சனையை பூசி மெழுகியாச்சு..." என்று சொன்னதுமே, அது அவனுக்கு அடுத்த இடி...

கீழ் அதரங்களை கடித்து, தனது கோபத்தை அடக்கிக் கொண்டாலும், அவன் கழுத்து நரம்புகள் தன்னை மீறி புடைத்து கிளம்பின...

அவன் செய்ய இஷ்டம் இல்லை என்று சொன்ன விஷயத்தை செய்து இருக்கின்றாள்...

அதனை கூட மன்னித்து விடுவான்...

உரியவனிடம் கர்ப்பமாக இருப்பதை கூறாமல் யார் யாருக்கோ அந்த விஷயங்கள் தெரிந்து இருக்கின்றன...

அவன் முகம் லேசாக சிவந்தும் விட்டது...

"சரி வா, நம்ம சாப்பிடலாம்" என்று சொல்லி பிரதீப் அழைத்துச் சென்ற போதும், அவனால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை...

உணவும் இறங்கவில்லை...

பாதி சாப்பிட்டு வைத்தவன், "ஐ ஆம் நாட் வெல், ஐ ஆம் லீவிங்" என்று சொல்லிக் கொண்டே, காரில் ஏறி புறப்பட்டு இருந்தான்...

கார் மின்னல் வேகத்தில் பயணம் செய்தது...

மனம் எல்லாம் வலி...

அவனை இன்னும் இன்னுமே அவள் வலிக்க வைத்துக் கொண்டு இருக்கின்றாளே...

அப்படி ஒரு சோர்வும் அவனிடத்தில் உருவானது...

எப்படி தான் வீட்டுக்கு வந்து சேர்ந்தான் என்று தெரியவில்லை...

அவன் வீட்டை அடையும் போது இரவு எட்டரை இருக்கும்... ஹாலில் அமர்ந்து இருந்த பத்மாவோ, கார் சத்தத்தை கேட்டுக் கொண்டே, 'இப்போ தானே பார்ட்டின்னு போனார், அதுக்குள்ள வந்துட்டார்' என்று நினைக்க, விறு விறுவென வேகமாக உள்ளே வந்தான்...

வந்த வேகத்தில், அவள் கையில் இருந்த ரிமோர்ட்டை பறித்து, ஓடிக் கொண்டு இருந்த டிவியை நோக்கி ஆக்ரோஷமாக வீசி இருக்க, டி வி யின் ஸ்க்ரீன் நொறுங்கியது...

பெண்ணவளுக்கு தூக்கி வாரிப் போட, "தேவ்" என்று சொல்லிக் கொண்டே, அவள் எழுந்து நிற்க, அவளை நீல நிற விழிகளால் உறுத்து விழித்தவன், "நான் உனக்கு மூணாவது மனுஷனா?" என்று கேட்டான்...

ஒரே கேள்வி தான்...

அவன் இருந்த கோபத்துக்கு வார்த்தைகள் தாறு மாறாக கூட வந்து இருக்கும்...

ஆனால் கர்ப்பமாக இருப்பவளை காயப்படுத்த கூடாது என்று பார்த்து பார்த்து பேசினான்...

தனது வலிகளை, கோபத்தை, ஆதங்கத்தை, ஆக்ரோஷத்தை எல்லாம் தனக்குள் புதைத்துக் கொண்டே பேசினான்...

"தேவ், என்னாச்சு?" என்றாள் தழுதழுத்த குரலில்...

அவன் விழிகளில் கோபத்தை விட, ஆதங்கமும் வலியும் அதிகமாக இருந்தது...

அவனது இந்த நிலைக்கான காரணம் அவளுக்கு புரியவே இல்லை...

"நான் அப்பாவாக போறேன்னு இன்னொருத்தன் சொல்றான் பத்மா... ஆனா எனக்கு தெரியல... ஓஹ் அப்படியான்னு கேட்டுட்டு வர்றேன்... எவ்ளோ பெரிய அசிங்கம்ல... இட்ஸ் ஹேர்டிங்" என்று அந்த வீடே அதிரும் வண்ணம் கத்தினான்...


இப்போது அவள் விழிகள் அதிர்ச்சியில் விரிந்துக் கொண்டன.
 

CRVS2797

Active member
ஐஸ்க்ரீம் சிலையே ..!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மூ
(அத்தியாயம் - 20)


நல்லா கேளு, இன்னும் நாக்கை புடுங்கிக்கிற மாதிரி நல்ல நாலு வார்த்தை கேளு. ஆனா, கேட்டும் ப்ரயோஜனம் இல்லை, எருமை மாட்டு மேல மழை பொழிஞ்ச மாதிரி தான்.
அவ தான் முதல்ல இருந்தே தப்புக்கு மேல தப்பு, தப்புக்கு மேல தப்புன்னு.... அடுக்கடுக்கா பண்ணிட்டேயிருக்காளே. இத்தனைக்கும் தேவ் செஞ்சது ஒரே தப்பு, அது பத்மாவை அவனோட அப்பா ஃபோர்ஸ் பண்ணதால கல்யாணம் பண்ணது. ஆனா, அதற்கப்புறம் இஷ்டப்பட்டு தான் அவளோட வாழுறான். ஆனா, அவ அரைகுறையா ஒட்டுகேட்டுட்டு
இன்னை வரைக்கும் அவனோட
அடி மனசை உடைச்சிட்டே இருக்கா. இது எங்க போய் முடியப் போகுதோ தெரியலை.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top