ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 5

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 5

மருதநாயகமோ, "எவ்ளோ தைரியம் இருந்தா அவளை போட்டு அடிப்ப?" என்று பற்களை கடித்துக் கொண்டே மணியைப் பார்த்து உறுமினார்... மணிக்கு சர்வஜித்தைப் பார்த்து பயம் வந்தாலும் பேச வேண்டிய நிலையில் இருந்தவனோ, "அவ என் முறைப் பொண்ணு, அத கேட்க நீங்க யாரு?" என்று கேட்டான்.

"நான் யாரா? அடிச்சேன்னா" என்றபடி மருதநாயகம் முன்னே செல்ல, அவர் கையை பிடித்த சர்வஜித்தோ, "கொஞ்சம் இருங்க தாத்தா, பேசிக்கலாம்" என்றான்...

"உன் வீரம் எல்லாம் அமெரிக்காவில தானா?" என்று அவனை பார்த்து முறைத்துக் கொண்டே கேட்க, அவனோ ஆழ்ந்த மூச்சை விட்டுக் கொண்டே மணியைப் பார்த்தவன், "என்ன பிரச்சனை உனக்கு?" என்று கேட்டான்.

"அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கேன்... கல்யாணம் பண்ண மாட்டேங்குறா" என்றான் மணி... இப்போது ஆதிரையாழைப் பார்த்த சர்வஜித்தோ, "கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே" என்றான்...

ஆதிரையாழுக்கு கண்கள் கரித்துக் கொண்டு வந்தாலும் சர்வஜித் அன்று பேசி விட்டுச் சென்ற பின்னர் அவனுடன் பேச அவளுக்கு பிடிக்கவில்லை...

அவனை பார்க்காமலே, "எனக்கு பிடிக்கல" என்று சொல்லிக் கொண்டே தலையை குனிந்துக் கொண்டாள்.

மருதநாயகமோ, "டேய் நீ இந்த பக்கமா? அந்த பக்கமா? அவன் பார்க்கிற மாப்பிள்ளைக்கு எத்தனை வயசு தெரியுமா? நாற்பது வயசு... ரெண்டு புள்ளைங்க வேறு இருக்கு" என்றார்...

சர்வஜித்தோ, "வயசெல்லாம் ஒரு மேட்டர் ஆஹ்?" என்று கேட்க, அவனை முறைத்த மருதநாயகம், "நீ பேசவே தேவல" என்று அடக்கி விட்டு, மணியை பார்த்தவர், "இங்க பாரு மணி... அவளுக்கு இஷ்டம் இல்லனா விட்ரு" என்றார்...

மணியோ மாப்பிள்ளையிடம் ஒரு தொகை பணம் ஆதிரையாழை வைத்து வாங்கி இருக்க, அவனுக்கு இந்த கல்யாணத்தை முடித்தே ஆக வேண்டிய கட்டாயம் அவனுக்கு...

"இது எங்க குடும்ப விஷயம்... இதுல தலையிடாதீங்க" என்றான் அவன்...

"அப்படி தான்டா தலையிடுவேன்... அவ என் பேத்தி மாதிரி" என்று உறுமினார் மருதநாயகம்...

மணியோ, "பேத்தின்னா உங்க பேரனை கல்யாணம் பண்ணி கொடுக்க முடியுமா? முடியாது தானே... சும்மா பம்மாத்து காட்டாதீங்க... அவளை யாருமே கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க... அந்த மாப்பிள்ளை அம்மா, அப்பா இல்லாத பொண்ணாச்சேனு சரினு சொன்னார்... இவளுக்கு என்ன கேடு வந்திச்சு... அவரை கட்டிக்க வேண்டியது தானே" என்று பொரிந்து தள்ளியவன் மருதநாயகத்துக்கு ஒரு புது ஐடியாவையும் பேச்சு வாக்கில் எடுத்து கொடுத்து இருந்தான்...

மருதநாயகத்தின் கண்கள் இப்போது மின்னியது...

"என்னடா நானும் பார்த்துட்டே இருக்கேன்... பேசிட்டே இருக்க... அவளை கல்யாணம் பண்ண யாரும் இல்லனு இவ்ளோ கீழ்த்தரமா பேசாத, நீ சொன்ன போல என் பேரனையே கல்யாணம் பண்ணி கொடுக்கிறேன்..." என்று அருகே நின்ற சர்வஜித் தோளில் கையை போட்டு மருதநாயகம் பேச, அவனுக்கோ தூக்கி வாரிப் போட்டது...

"யோவ் பெருசு" என்று சொன்னான் அவரை அதிர்ந்து பார்த்துக் கொண்டே...

"என்னது?" என்றார் அவர்...

சட்டென்று, "ஐயோ தாத்தா" என்று மாற்ற, "அது" என்று அவனை ஒரு முறைப்புடன் சொன்னவரோ, "அமெரிக்காவுல மல்டி மில்லியனர் அவன்... அவனுக்கு இந்த தண்ணி அடிக்கிற பழக்கம், தம் அடிக்கிற பழக்கம் எல்லாம் கொஞ்சமும் இல்லை... அவனை போல மாப்பிள்ளை கிடைக்க கொடுத்து வச்சு இருக்கணும்" என்றார். அவனுக்கோ வட்டம் வட்டமாக தான் புகை விடுவது நினைவுக்கு வந்து போக, மருதநாயகத்தை புருவம் சுருக்கி பார்த்தவன், "குடிச்சு இருக்கீங்களா? இப்படி உளறுறீங்க?" என்றான்...

அவரோ, "ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணலாம், நீ கம்முனு இரு" என்று அவனுக்கு கேட்கும் குரலில் சொல்லி விட்டு, மணியை பார்த்தவர், "இங்க பாரு, அடுத்த முகூர்த்தத்திலேயே, அட எதுக்கு அடுத்த முகூர்த்தம்? நாளைக்கே என் பேரனுக்கும் யாழுக்கும் கல்யாணம்... நான் சொன்னா சொன்னது தான்" என்றபடி மீசையை முறுக்கிக் கொண்டார்...

அவனோ தலையை உலுக்கிக் கொண்டான்... அவர் பேசுவதை அவனுக்கு இன்னுமே கிரகிக்க முடியவே இல்லை...

என்ன பேசினாலும் இப்போது மருதநாயகம் சொத்தை காட்டி அவனை அடக்கி விடுவார் என்று அவனுக்கு நன்கு தெரியும்... அவருடன் ஏட்டிக்கு போட்டி நிற்க முடியாது என்று அவனுக்கு தெரியும்...

அவருடன் தன்மையாக பேசி அவரை சரி செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டே மௌனமாக நின்று இருந்தான்...

அவன் நிதானமாக இருந்தாலும், கண்களில் அப்படி ஒரு அனல்...

"அதெல்லாம் முடியாது" என்றான் மணி அவசரமாக...

"உன் சம்மதம் எனக்கு எதுக்குடா? யாழ் சொல்லட்டும்" என்றார் மருதநாயகம்...

அவளுக்கு சர்வஜித்தை திருமணம் செய்ய கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை...

ஆனால் இப்போது இந்த பிரச்சனையில் இருந்து வெளி வர வேண்டும்... வேறு வழி இல்லை...

"உங்க பேரனை கட்டிக்க சம்மதம் ஐயா" என்று சொல்லி சர்வஜித்தின் தலையிலும் தூக்கி குண்டை போட்டு விட்டாள்.

சர்வஜித்தின் கழுத்தெலும்புகள் புடைத்தெழுந்தன...

கோபத்தை அடக்கிக் கொண்டான்.

அதனைக் கேட்டு வாயெல்லாம் பல்லாக, "அப்புறம் என்ன மணி? கிளம்பு கிளம்பு... அவ இனி எங்க வீட்டு பொண்ணு" என்று சொன்னார்...

மணிக்கு கோபம் வந்தாலும் காட்டிக் கொள்ள முடியவே இல்லை...

அவர்களின் ஆள் பலமும் பண பலமும் அதிகம் அல்லவா?

ஆதிரையாழை முறைத்துப் பார்த்து விட்டு, "வாங்க கிளம்பலாம்" என்று சொல்லிக் கொண்டே, அவன் தாய் தந்தையுடன் அங்கிருந்து கிளம்பி விட்டான்...

அவன் செல்லும் வரை பார்த்துக் கொண்டே இருந்த மருதநாயகமோ, "நீ இனி இங்க இருக்க வேணாம் யாழ்... வீட்டுக்கு வா... இங்க உனக்கு பாதுகாப்பு இல்லை" என்று சொன்னதோடு மட்டும் அல்லாமல் அவளை கையுடன் அழைத்துச் செல்லவும் முடிவெடுத்து விட்டார்...

அவளுக்கும் மறுக்க முடியவில்லை...

மணியை நம்ப முடியாது, எதுவென்றாலும் பண்ணுவான் என்று அவளுக்கு தெரியும்... அதனாலேயே, "சரி ஐயா" என்று அவள் சொல்ல, "இனி தாத்தானு சொல்லு" என்றார்...

"சரி தாத்தா" என்றவளுக்கு கண்கள் கலங்கி போனது...

ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே, அவருடன் நடந்துச் சென்றாள்.

சர்வஜித்தை அவள் பார்க்கவில்லை என்றாலும் அவளை அவன் பார்த்துக் கொண்டே இருந்தான்...

அதுவும் கொலைவெறி நிறைந்த பார்வை அது...

அவளை வீட்டுக்கு அழைத்து வந்ததுமே, அங்கிருந்த வேலை செய்யும் பெண்ணிடம், "நாகம்மா, யாழுக்கு ஒரு ரூம் ஏற்பாடு பண்ணி கொடு" என்று சொன்னார்...

அவரும் அவளுக்கு ஒரு அறையை ஏற்பாடு செய்து கொடுக்க, சென்று இருக்க, மருதநாயகமோ தோட்டத்தை சுற்றி நடக்க ஆரம்பிக்க, "தாத்தா கொஞ்சம் பேசணும்" என்றான் சர்வஜித்...

அவனை திரும்பி பார்த்தவரோ, "கல்யாணமா? சொத்தானு நீயே முடிவு பண்ணிக்கோ" என்றார்...

"என்னை பேச விடுங்க" என்றான் அவன்...

"கல்யாணம் வேணாம் என்கிறத தவிர வேற ஏதாவது பேசு" என்றார் அவர்... அவன் பேச வந்ததே அதை தானே... அதையே பேச வேண்டாம் என்று சொல்லும் போது என்ன பண்ணிட முடியும்...

"எனக்கு இஷ்டம் இல்லனாலும் கல்யாணம் நடக்கும், அந்த பொண்ணுக்கு இஷ்டம் இல்லனா?" என்று கேட்க, "அவ தான் இஷ்டம்னு சொல்லிட்டாளே" என்று சொன்னவரோ மேலும், "நாளைக்கு கல்யாணம்னா இன்னைக்கு நிறைய வேலை இருக்கு... என்னை கொஞ்சம் விடு" என்று சொல்லி விட்டு விறு விறுவென செல்ல, அவர் முதுகை வெறித்துப் பார்த்தான் அவன்...

அடுத்த கணமே, அவன் தேடிச் சென்றது என்னவோ ஆதிரையாழை தான்...

கதவை அவன் தட்டிய வேகத்தில், கட்டிலில் அமர்ந்து இருந்த பெண்ணவளோ பதறி வந்து கதவை திறந்தாள்.

முன்னே நின்ற சர்வஜித்தைப் பார்த்ததுமே அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது...

அவனை விழி விரித்துப் பார்க்க, அவனோ, அவளை அனல் தெறிக்க பார்த்துக் கொண்டே உள்ளே வந்து கதவை தாழிட, அவளுக்கு நெஞ்சில் நீர் வற்றி போனது...

அவனையே மிரட்சியாக பார்த்துக் கொண்டே அவள் நிற்க, "எதுக்கு கல்யாணத்துக்கு சம்மதம்னு சொன்ன?" என்று கேட்டான் அவன்...

"அங்க இருந்து தப்ப எனக்கு வேற வழி தெரியல" என்று சொன்னவள் அழுது விடுவாள் போல தான் இருந்தாள்...

அவனோ ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே தலையை கோதியவன், "சரி விடு, இப்போ கூட ஒன்னும் கெட்டு போகல, என்னை பிடிக்கலனு தாத்தா கிட்ட சொல்லிடு... இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்... நான் எல்லாம் கடைஞ்செடுத்த பொறுக்கி, என்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறியா?" என்று கேட்க, அவளோ, "சரி நான் தாத்தா கிட்ட பேசுறேன்" என்றாள்.

"அது" என்று அவன் சொல்லி விட்டு வெளியேற தான் அவளுக்கு மூச்சே வந்தது...

அவளுக்கும் இந்த கல்யாணத்தில் பெரிய இஷ்டம் இல்லை...

அவன் சொல்லவில்லை என்றாலும் அவளே பேச வேண்டும் என்று தான் இருந்தாள்.

அடுத்த கணமே கதவை திறந்துக் கொண்டு வெளியேறியவள் தேடிச் சென்றது என்னவோ மருதநாயகத்தை தான்...

அவரோ தோட்டத்தில் நிற்க, அவளும் அவரை தேடிச் சென்றாள்.

அவள் செல்வதை தனது அறையின் பால்கனியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த சர்வஜித்துக்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது...

மருதநாயகம் கல்யாணத்துக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகளை அங்கே நின்றவர்களிடம் சொல்லிக் கொண்டு இருக்க, "ஐயா" என்றாள் ஆதிரையாழ்...

"தாத்தா" என்று அவளை திருத்தியபடியே அவளை நோக்கி திரும்ப, "கொஞ்சம் பேசணும் தாத்தா" என்று தயக்கமாக சொன்னாள்.

அங்கே நின்றவர்களை மருதநாயகம் திரும்பி பார்க்க, அவர்களும் அங்கிருந்து கிளம்பி விட, இருவருக்கும் தனிமை கிடைத்தது...

அவளோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டே, "இந்த கல்யாணம் வேணாம் தாத்தா, நான் மாமா கிட்ட இருந்து தப்பிக்க தான் சம்மதம் சொன்னேன்" என்றாள். அவரோ பெருமூச்சுடன் இருக்கையில் இருந்து எழுந்தவர், "ம்ம்... அந்த ராஸ்கல் உன் ரூமுக்குள்ள வந்தான்னு கேள்விப்பட்டேன் இப்போ தான்... அப்போவே இத எதிர்பார்த்தேன்" என்றார்...

அவளோ, "ஐயோ இல்ல தாத்தா, நானே தான் சொல்றேன்" என்று சொல்ல, அவரோ, "அவன் உன் கிட்ட என்ன சொன்னான்னு தெரியல... எனக்காக அவனை கல்யாணம் பண்ணிக்கோ... பாசம்னா என்னனே தெரியாம வளர்ந்த பையன் அவன்... பணம் தான் வாழ்க்கைனு நினைச்சுட்டு இருக்கான்... வாழ்க்கைனா என்னனு புரியணும் அவனுக்கு... தம்,தண்ணி பழக்கம் எல்லாம் இருக்கு தான்... ஆனா பொண்ணுங்க விஷயத்துல ரொம்ப நல்லவன்... என்ன நம்பி கல்யாணம் பண்ணிக்கோ" என்றார்... அவளுக்கு முதல் முறை ஒரு உறுத்தல்... அவனோ கற்பழிப்பது பொழுது போக்கு என்று சொல்கின்றான்... இவரோ அவன் பெண்கள் விஷயத்தில் நல்லவன் என்று சொல்கின்றார்... எது உண்மை என்று தெரியாத நிலை...

ஆனாலும் மருதநாயகம் சொல்வதை மறுக்கவும் முடியவில்லை...

"ஆனா தாத்தா" என்றாள் அவள்...

"எனக்காக கல்யாணம் பண்ணிக்க மாட்டியா? என் மேல நன்றி விசுவாசம் இருந்தா இத நீ பண்ணி தான் ஆகணும்" என்று இறைஞ்சலாக ஆரம்பித்து கட்டளையாக முடிந்தது அவர் வார்த்தைகள்...

அதற்கு மேல் அவளால் மறுக்க முடியுமா என்ன?

"சரி தாத்தா பண்ணிக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே அவள் அறைக்குள் செல்ல முற்பட, அவள் முதுகை பெருமூச்சுடன் பார்த்தார் மருதநாயகம்...

அவருக்கு சர்வஜித்தை வழிக்கு கொண்டு வர வேண்டும்... அவன் தனக்கு முன்னே நடிக்கிறான் என்று அவருக்கு நன்றாகவே தெரியும்...

பணம் எல்லாம் ஒன்றும் இல்லை, உறவுகள் தான் முக்கியம் என்று அவனுக்கு புரிய வைக்க வேண்டும்... அதற்கு அவர் கையில் எடுத்த பகடைக் காய் தான் இந்த திருமணம்... அதில் தூண்டிலில் அகப்பட்ட மீன் போல சிக்கிக் கொண்டது என்னவோ ஆதிரையாழ் தான்...
 
Super sis
 
உனக்குள் உறையும் அனல் நானடி...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மூ
(அத்தியாயம் - 5)

நினைச்சேன்... இப்படித்தான் நடக்கும்ன்னு. சர்வஜித் மாட்டிக்கிட்டான்னு பொய் சொல்ல மாட்டேன். ஆனா, பாவம் ஆதுரியாழ் தான் அவன் கிட்ட நல்லா மாட்டிக்கிட்டு முழிக்கப்போறான்னு தோணுது.

பட், அதைக்கூட முழுசா ஒத்துக்க முடியாது. ஏன்னா, அவளை பார்த்த முதல் சந்திப்பிலயே வாய்ல கிஸ்ஸடிப்பேன்னு சொன்னவன். ஒருத்தடவை அடிச்சிட்டா, மகுடிக்கு மயங்கின நாகமா ஆகிடப் போறான் அம்புட்டுத்தானே... ? இதானே எல்லா ஆம்பிளைங்களும் பண்றது.

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top