அத்தியாயம் 7
கதிரையில் அதுவரை எழும்பாமல் இருந்த சாணக்கியனை கூர்ந்து பார்த்துக் கொண்டு பிஸ்டலை சுழட்டியபடி வந்தவன் அவனருகில் நின்று தன்னை வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருக்கும் மித்ரா முன்னால் சொடக்கு போட்டான்.
உணர்வு வந்து மித்ரா கௌதமை பார்க்க, "அர்ரெஸ்ட் ஹிம்" என்றபடி விஷ்வாவை பார்த்து, "தாங்க் யு ஜென்டில் மேன்" என்று கண்ணடித்து ஒரு மெல்லிய சிரிப்பை உதிக்க விஷ்வாவோ சினம் தெறிக்க அவனை எரித்து விடுவது போல பார்த்துக் கொண்டு நின்றான்.
அதை சட்டை செய்யாமல் சாணக்கியனை நோக்கி திரும்பி தனது பிஸ்டலால் தனது நெற்றியை தட்டியபடி யோசித்தவன், "எனக்கு ஒரே ஒரு சந்தேகம்" என்றான். அவனுக்கு சளைக்காமல் பார்த்த சாணக்கியன் என்ன என்று கண்களால் கேட்க,
"ஐ நோ யு பவுண்ட் மீ, பட் ஏன் எந்த ஆக்ஷனும் எடுக்கல ?" என்று சாணக்கியனை உற்று நோக்கி கேட்க அதுக்கு சாணக்கியனோ கண்ணை சிமிட்டி, "அதையும் நீங்களே கண்டு பிடிங்க மிஸ்டர்.கெளதம் கிருஷ்ணா" என்றான் கம்பீரம் குறையாமல்.
அவனின் பேச்சில் சினம் பொங்க அதுவரை அர்ரெஸ்ட் பண்ணாமல் தயங்கி நின்ற மித்ராவை சினம் கொண்டு பார்த்த கெளதம், "ஐ சே அர்ரெஸ்ட் ஹிம்" என்று சிம்ம கர்ஜனையில் உறுமினான்.
சாணக்கியன் தானாகவே எழும்பி தயங்கி நின்ற மித்ரா முன் இரு கைகளையும் நீட்ட இடுப்பில் சொருகி இருந்த கை விலங்கை எடுத்தவள் கண்களால் சாணக்கியனிடம் மன்னிப்பு வேண்டியப்படி அதை அணிவித்தாள்.
சாணக்கியன் முகத்தில் இருந்து எந்த உணர்ச்சியும் வெளிப்படவில்லை. "அவரோட வண்டியிலேயே ஏத்துங்க, வி. ஐ. பி ஆச்சே" என்றவன் அனைவரையும் நோட்டமிட்டான் கயல்விழியை தவிர. அவன் கண்ணில் தனக்கு பெல்டினால் அடித்த அடியாள் பட, அவனை கூர்ந்து பார்த்தான். அந்த அடியாளோ தன்னை வேறு ஒருவனுக்கு பின்னால் மறைத்துக் கொள்ள போராட இரு பக்கமும் தலையாட்டி சிரித்தவன் அவனை நோக்கி தனது கழுத்தில் கை வைத்து "சீவிடுவேன்" என்ற தோரணையில் சைகை காட்டினான்.
அனைத்தையும் பார்த்துக் கொண்டு நின்ற கயல்விழியோ அதிர்ச்சியிலிருந்து மீளாமல் தான் காண்பது கனவா என்ற நிலையில் நின்றவளுக்கு தனது அண்ணனை அர்ரெஸ்ட் பண்ணும் ஒரே நோக்கத்துக்காக தன்னை கல்யாணம் பண்ணிய கெளதம் மேல் கொலை வெறி எழும்பியது.
'என்ன காரியம் பண்ணி விட்டான் மன நலம் பாதிக்க பட்ட போல நடித்தது இதற்காக தானா? தனது தேவைக்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழிப்பவனா இவன் ச்ச?' என்று வெறுப்புடன் நினைத்தவளின் மனமானது மனநலம் பாதிக்கப்பட்ட காத்தமுத்துவை ஏற்றுக் கொள்ள முடிந்த அதே நேரம் கௌதமை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தது.
அவ்வளவு நேரமும் வாயடித்த மகாலிங்கம் கூட இப்போது கப் என்று வாயை மூடிக் கொண்டார். "ஐயோ என் மகன்" என்று சித்ரா பதற கெளதம் மகாலிங்கத்தை திரும்பி பார்த்ததும் மகாலிங்கம் சித்ராவை நோக்கி பேச வேண்டாம் என்று தலையை ஆட்டினார்.
'இந்த மனுசனுக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு...' என்று மனதுக்குள் மறுகியபடி கண்ணீருடன் சித்ரா ஒதுங்கி நின்றார். விஷ்வாவுக்கோ சற்று முன் கர்ஜித்த தந்தை அமைதியடைந்தது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அதற்கு மேலாக கெளதம் மேல் சினம் பொங்க கையாலாகாத நிலையில் அவனை வெறித்து பார்த்தபடி நின்றான்.
தன்னை வெறித்து பார்த்த விஷ்வாவை நோக்கி நெருங்கி நின்ற கெளதம், "படிச்சிருந்தா மட்டும் போதுமா உன் அண்ணன் புத்தியில பாதியாவது இருக்க வேணாமா?" என்று நக்கலாக கேட்டுவிட்டு வெளியேற போனவனை ஒரு கை தடுத்தது. அந்த கையானது அவன் பார்க்க சங்கடப்பட்ட ஒரே ஜீவனுடையது.
அவனுக்கு ஊட்டி விட்டு கழுவாமல் இருந்த கையை வைத்து கயலை அடையாளம் கண்டவன் தன்னை சுதாரித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தான். இறுகிய முகத்துடன் அவளின் கலங்கிய விழிகளின் துளைக்கும் பார்வையை தாங்கி நின்றவன், "எதுவா இருந்தாலும் டிபார்ட்மெண்டில் வந்து பேசிக்கோங்க மிஸ்... மிஸஸ் கயல்விழி" என்று அவள் கண்களை பார்த்து உரைத்தபடி அவள் கையை பிஸ்டல் கொண்டு கீழிறக்கியவன் அவளை தாண்டிச் செல்லும் போது தன் கீழ் பணி புரியும் அதிகாரியின் பாக்கெட்டில் இருந்து சன் கிளாஸை எடுத்து அணிந்தபடி அவ்விடத்தில் இருந்த ஜீப்பில் பாய்ந்து ஏறினான்.
வி.ஐ.பி என்பதால் அதிகாரிகள் சாணக்கியனை அவன் வாகனத்தில் ஏற்றியபடி அழைத்து முன்னால் செல்ல இறுகிய முகத்துடன் வாகனத்தை எடுக்க சொல்லி சாரதியை சைகை செய்தான் கெளதம்.
அவன் சென்றதும் சினம் பொங்க மகாலிங்கம் முன்னால் வந்த விஷ்வா, "அப்பா என்னாச்சுப்பா? உங்க பெயரை பாவித்து அண்ணாவை விட சொல்லாம அவன் சொன்னதுக்கெல்லாம் தலையை ஆட்டுறீங்க" என்று சீற மனதில் தோன்றிய கையாளாக தனத்தை மறைத்தவர், "கொலைகாரனுக்கு நான் உடந்தையா இருக்கணுமா?" என்று கேட்டபடி விறு விறுவென அறைக்குள் நுழைந்து விட்டார். விஷ்வாவுக்கோ அந்த சந்தர்ப்பத்தில் ஏதோ தவறாக தோன்றியது.
உடனே கயல்விழியையும் மித்ராவையும் அழைத்துக் கொண்டு விருதாச்சலத்தின் முன்னால் போய் நின்றான் விஷ்வா. நடந்ததை கேள்விப்பட்டு அதிர்ந்த விருத்தாச்சலம் கௌதமுக்கு அழைக்க தொலைபேசியை எடுத்தவன், "எஸ் சார்" என்றான். "எம்.பி சாணக்கியனை விடு" என்ற ஒற்றை வார்த்தைக்கு, "கேஸ் பைல் பண்ணியாச்சு சார், கோர்ட்ல பார்த்துக் கொள்ள சொல்லி அவர் தம்பிகிட்ட சொல்லுங்க" என்று நிமிர்வாய் பதில் சொல்ல அதில் விருத்தாச்சலம் சினம் பொங்க, "சொன்னதை செய்ய போறியா இல்லையா?" என்று சீறினார். அவனோ கொஞ்சமும் அசராமல், "முதலமைச்சர் சொன்னா கூட செய்ய மாட்டேன் சார்" என்று கம்பீரம் குறையாமல் சொல்ல அதில் கடுப்பானவர் தொலைபேசியை வைத்து விட்டு விஷ்வாவை பார்த்து இல்லை என்ற தோரணையில் தலையாட்டினார்.
"அவனை எதுவும் பண்ண முடியாதா?" என்று விஷ்வா கேட்க, கொஞ்சம் யோசித்த விருத்தாச்சலம், "அவனுக்கு ஏதோ பெரிய பின் புலம் இருக்கு... அது இல்லாம இப்படி தைரியமாக பேச மாட்டான். சம்திங் ராங்" என்றார்.
உடனே, "நான் போய் பேசவா?" என்று கயல் கலங்கிய விழிகளுடன் கேட்க, "சரி" என்று விருத்தாச்சலம் தலை ஆட்டினார்.
"நீ ஏன் போகணும்?" என்று விஷ்வா தான் துள்ள தொடங்க மித்ரா அவனை பார்வையாலே அடக்கினாள்.
சற்று நேரத்தில் க்ரைம் இன்வெஸ்ட்டிகேஷன் டிபார்ட்மென்ட் என்ற பெயர்ப்பலகை தாங்கிய கட்டடத்தின் முன் வாகனத்தை நிற்பாட்டிய விஷ்வா, "நீ போ... நான் வரல" என்று உள்ளேயே இருந்து கொண்டான்.
உள்ளேச் சென்றவளுக்கு அவன் பெயர் கூட நினைவு வரவில்லை.திரும்ப திரும்ப யோசித்தும் காத்தமுத்து என்ற பெயரே மனசில் வந்து பதிந்தது. 'என்ன பெயர் சொல்லி கேட்பது?' என்று தடுமாறியவள் வழியில் வந்த அதிகாரியை பிடித்து, "சார் அந்த தலைமுடி தாடி வளர்த்த ஆஃபீசர் எங்கே இருப்பார் ?" என்று கேட்க அவரோ அவளை வித்தியாசமாக பார்த்து விட்டு கடந்துச் சென்றார்.
அறையில் கதிரையில் சாய்ந்துக் கொண்டு கோப்புகளை பார்த்துக் கொண்டு இருந்த கௌதமின், தொலைப்பேசி சிணுங்க கோப்பிலிருந்து கண்ணை எடுத்து தொலைபேசியை காதில் வைத்து, "ஹெலோ" என்றபடி தற்செயலாக சி.சி.டி வியை நோக்கினான். அதில் தடுமாறியபடி நின்றுக் கொண்டிருந்த கயல்விழியை கண்டவன், 'சும்மா சொன்னா உடனே வந்திடுவாளா?' என்று யோசித்தபடி, தொலைபேசியில் "வெயிட் எ செகண்ட்" என்றவன் மேசையிலிருந்த மணியை அழுத்தினான்.
அவன் அழைத்ததும் அவன் அறைக்குள் வந்து, "எஸ் சார்" என்று சலியூட் அடித்த கான்ஸ்டபிளிடம், "அந்த சிவப்பு சாரி உடுத்தி இருக்கும் பொண்ண கூட்டி வா" என்று அவளை சிசிடிவி யில் காட்டியவன் தொலைபேசியில் மீண்டும் உரையாட தொடங்கினான்.
உடனே அவளை நோக்கிச் சென்ற கான்ஸ்டபிள், "உங்கள கெளதம் சார் கூட்டி வர சொன்னார்" என்றதும் அவளுக்கு அவன் பெயர் கெளதம் என்று அப்போது தான் நினைவு வந்தது.
கதவு வாசலில், "கெளதம் கிருஷ்ணா S P" என்ற பெயர் பலகையை பார்த்தபடி உள்ளே நுழைந்தவள் ஒரு கணம் அதிர்ந்து நின்றாள்.
ஆறடி உயரமும் பழுப்பு நிற ஹாஃப் ஸ்லீவ் சட்டையும், இறுக்கி பிடித்த புஜங்களும் பரந்து விரிந்த மார்புடனும், ஷர்ட்டை இன் பண்ணி டெனிம் அணிந்து அதுக்கு சிம்ம லட்சணையுடன் கூடிய பெல்ட்டும் அணிந்திருந்தவனின் உருவத்தை பார்த்து அவள் மலைத்து விழாத குறை தான். மேலும் அவனின் முகத்தை பார்த்தவளுக்கு இது காத்தமுத்து தானா என்று சந்தேகமாகவே இருந்தது.
தலைமுடியை போலீஸ் கட்டில் வெட்டி இருந்தவன் தாடியை மழித்து கம்பீரமான மீசை மட்டும் வைத்திருந்தான். அவனின் கூரான விழிகளும் கூரான நாசியும் செப்பமான உதடுகளும் அவன் அழகை கூட்ட, அவன் இறுக்கமான தாடை அவனின் கடின உருவத்தை மேலும் மெருகூட்டியது.
தாடி மீசையுடன் முகம் மறைத்த காத்தமுத்துவில் அவளால் இது அனைத்தையும் அவதானிக்க முடியவில்லை. "இவன் காத்த முத்து தானா?" என்ற சந்தேகப்பட்டவள் அவன் மேசையிலிருந்த பெயர் பலகையை பார்த்தாள். அதில் கூட கெளதம் கிருஷ்ணா என்று எழுத பட்டிருந்தது. தாலி கட்டியவனின் பெயரும் தெரியாமல் அவனை கண்டு பிடிக்கவும் முடியாமல் தவிக்கும் இந்த நிலை எந்த பெண்ணுக்கும் வர கூடாது என்று நினைத்தவள் அவனை கூர்ந்து பார்த்தாள். முகத்தை பக்கவாட்டில் காட்டியபடி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவனின் உருவம் நன்றாக தெரியாததால் தலையை சரித்து குனிந்து எட்டி அவனை முழுதாக பார்க்க முயற்சி செய்தாள்.
அவள் தலையை திருப்பி தன்னை பார்க்க கஷ்டப்படுவதை கடைக்கண்ணால் பார்த்தவன் தொலைபேசியை அணைத்துவிட்டு அவளை நோக்கி நிமிர்ந்து பெருமூச்செடுத்து கதிரையில் இருந்து கோப்பை பிரித்தபடி, "உனக்கு தாலி கட்டிய புருஷன் நான் தான். வந்த விஷயத்தை சொல்" என்றான்.
தன் நிலைமையை நினைத்து நொந்தவள், "அண்ணாவை விட முடியாதா?" என்று நேரடியாக கேட்டவளை, 'லூசா!' நீ என்பது போல் பார்த்தவன், அவளை கூர்ந்து நோக்கி இளக்காரமாக புன்னகைத்து விட்டு உடனே முகத்தை கடினமாக்கி, "உன் அண்ணனை பிடிக்கிறதுக்காகவே பைத்தியம் போல நடிக்க மூணு மாசம் ட்ரைனிங் எடுத்து அதுக்காகவே உன்னையும் கல்யாணம் பண்ணி அது போல உன் வீட்டுல நடிச்சு... கஷ்டப்பட்டு உன் அண்ணனை பிடிக்க சாட்சி தேடி அரெஸ்ட் பண்ணினா... நீ ஒற்றை வார்த்தையில் விட சொல்லுற... என்ன பார்த்தா எப்படி தெரியுது?" என்று சீறினான்.
அவன் சீறலில் பயந்தவள், தன்னை சுற்றி சிரித்தபடி வலம் வந்த காத்தமுத்துவையும் இவன் சினத்தையும் ஒப்பிட்டு மனமுடைந்து போனாள்.
வெளியே வர துடித்த கண்ணீரை கட்டுப்படுத்தியபடி அவனை அடிபட்ட பார்வை பார்க்க அவன் அவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். உடனே பெருமூச்சை எடுத்தவன், "உன் அண்ணனை கோர்ட்டில் வந்து ஜாமீன்ல எடு" என்று அவளுக்கு இலவச அறிவுரையை வழங்கியவனை, "சார்" என்று அழைத்தபடி ஒரு அதிகாரி உள்ளே வந்தார்.
அவர் தான் கௌதமுக்கு கீழ் வேலை செய்யும் அதிகாரி கௌதமுக்கு அப்பாவாக நடித்தவர்.
உள்ளே இருவரும் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்தவர், "சாரி சார்" என்றபடி வெளியேற போக, "மாமா" என்றழைத்தபடி அவர் பின்னால் ஓடினாள் கயல். அவள் அழைத்ததால் மனசு கேட்காமல் திரும்பி கௌதமை பார்த்தபடி நிமிர்ந்து நின்றார். "மாமா நீங்களாச்சும் அண்ணனை விட சொல்லுங்க மாமா" என்று கெஞ்ச அதை பார்த்து வந்த சிரிப்பை அடக்கியபடி தாடையை தடவியவாறே கதிரையில் சாவகாசமாக சாய்ந்து அவளை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்த அதிகாரியோ மனசுக்குள், 'மாமாவா ? நான் சொல்லி கெளதம் சார் கேட்கிறதாவது... இந்த பொண்ணு என்ன ஒரு வழி பண்ணாம விடாது போல' என்று மனதில் நினைத்தவாறே கௌதமை பார்த்து நின்றவர் மறந்தும் கயல்விழியை பார்க்கவில்லை.
அவர் கையை பிடித்து, "ப்ளீஸ் மாமா" என்று கெஞ்ச அவருக்கோ தர்மசங்கடமாக இருந்தது. அவ்வளவு நேரமும் தாடையை தடவியவாறு பார்த்துக் கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து கதிரையிலிருந்து பாய்ந்து எழும்பியவன், "லீவ் ஹிம் மிஸிஸ். கயல் விழி கெளதம் கிருஷ்ணா" என்று உறும அவள் அவர் கையை விட்டு பயத்தில் தள்ளி நின்றாள். "நீங்க போங்க" என்று அந்த அதிகாரியை பார்த்து கூறியதும் அவர் அரக்க பறக்க வெளியேற கயல்விழியை கூர்ந்து பார்த்தவன், "இங்கே பார் அவர் உன் மாமா இல்லை. எனக்கு கீழே வேலை செய்பவர்... சும்மா இங்கே வந்து அண்ணனை விட சொல்லி கெஞ்சாம நான் சொல்றதை செய்... இப்போ தயவு செய்து வெளியே போ" என்று கைகளால் வாசலை காட்டியபடி உறுமினான்.
அவனின் கர்ஜனையை பார்த்து முதலில் அதிர்ந்தவளுக்கு, 'தப்பெல்லாம் செய்துட்டு தெனாவெட்ட பாரு' என்று மனதில் நினைத்தபடி, "எங்கண்ணனுக்கு நீதி சொல்லாவிட்டாலும் பரவாயில்லை இந்த தாலிக்கு என்ன பதில் சொல்ல போறீங்க?" என்று கழுத்தில் கிடந்த தாலியை தூக்கி கேட்டாள்.
ஒரு கணம் தோன்றிய குற்ற உணர்ச்சியை கண நேரத்தில் மறைத்தவன் அவளை நோக்கி அழுத்தமான காலடியில் நெருங்கி வந்தான். "இங்க பாரு கயல் நான் செய்தது எப்போவும் சரி என்று சொல்ல வரல... என் சுயநலத்துக்காக உன்னை ஏமாற்றியது தப்பு தான்... எனக்கு உன் மேல நல்ல மரியாதை எப்போவும் இருக்கு. உன் அக்கறையான கவனிப்பில் நான் வியந்தும் இருக்கிறேன்" என்றவன் ஒரு பெரு மூச்செடுத்து விட்டு, "இப்போ கூட என்னால உன் கூட வாழ்க்கையை தொடங்க முடியும். ஆனால் அதில் காதல் இருக்குமா என்றால் நிச்சயம் இல்லை என்று தான் பதில் சொல்லுவேன்" என்றான்.
அவள் மேல் அவனுக்கு இருக்கும் அளவு கடந்த காதல் பற்றிய உண்மையை மறைத்தபடி. அவனின் கூற்றால் மனம் உடைந்தவள் அவனை நோக்கி அடிபட்ட பார்வையை பார்த்து, "ஒரு பொண்ண ஏமாத்துறது தப்பில்லையா?" என்று அவனை பார்த்து இயலாமையுடன் கேட்டாள். "நான் உன்ன ஏமாத்துனதுக்கு காரணம் உன் ஏமாளி தனம். ஒரு மன நல மருத்துவர் உன்னால என்னை கண்டு பிடிக்க முடியலையா? உன் மூத்த அண்ணனுக்கு இருக்கும் புத்திசாலி தனம் உன் இளைய அண்ணனுக்கும் இல்லை... உனக்கோ அறவே இல்லை" என்று பதிலுக்கு நக்கலடிக்க அவமானத்தில் தலை குனிந்து நின்றாள்.
அவள் முகத்தை தனது ஒற்றை விரல் கொண்டு நிமிர்த்தியவன் அவள் கண்களில் தனது விழிகளை கலக்க விட்டவாறு, "உனக்கு என் கூட மனைவியா வாழ ஆசையா இருந்தா சொல்லு... எனக்கு பிடிக்கா விட்டாலும் கடமைக்காக உன்னோட குடும்பம் நடத்த நான் ரெடி... நீயா வர ஆசைப்படும் போதும் வேணாம் என்று சொல்லும் அளவுக்கு நான் ஒன்றும் முனிவர் இல்லை" என்று நக்கலாக சிரித்தபடி கண்ணடித்தவனின் கையை தட்டி விட்டு விலகி நின்று அனல் தெறிக்க அவனை பார்த்தாள்.
சற்று நேரத்துக்கு முன் நன்றாக பேசியவன் தற்போது வித்தியாசமாகவும் கிண்டலாகவும் பேச அவனை புரிந்துக் கொள்ள முடியாமல் தவித்தவள், "எனக்கும் உங்க கூட வாழ விருப்பமில்லை... உங்கள போல கடமைக்காக பெண்கள் வாழ்க்கையை சீரழிக்கும் ஆளோட நான் வாழ மாட்டேன். எனக்கு விவாகரத்து கொடுங்க." என்றவளை கூர்ந்து நோக்கி சத்தமாக சிரித்தவன் கைகளை கட்டி கம்பீரமாய் நின்றபடி, "முடியாது" என்று தலை ஆட்டினான்.
அவனின் நக்கலாலும் புறக்கணிப்பாலும் மனமுடைந்து போனவள், "உங்களுக்கு என்ன தான் வேணும்?" என்று இயலாமையில் கண்ணீர் மல்க கேட்க அவளை உற்று நோக்கியவன், "உன் குடும்பத்திலுள்ள ஒருவரின் உயிர்" என்றபடி கண்களில் பழி வெறியுடன் போய் கதிரையில் இருந்தான்.
அவன் கண்களில் தெரிந்த வெறியில் பதறி, 'யாரின் உயிர்? ஒரு வேளை அண்ணாவுடையதாக இருக்குமோ!' என்று யோசித்தவள், "ப்ளீஸ் அண்ணாவை ஒன்றும் செய்யாதீங்க" என்றாள்.
அவளை நிதானமாக பார்த்தவன், "அவ்வளவு சீக்கிரம் யாரையும் எதுவும் செய்ய மாட்டேன். மனம் வெதும்பி சாகணும்" என்று கொடூரமாக உரைத்துவிட்டு பாய்ந்து எழுந்தவன் வெளியேறி விட்டான்.
அவன் சென்றதும் வெளியில் வந்தவளுக்கு மனம் பாரமாக இருந்தது. தளர்ந்த நடையுடன் அழுது வீங்கிய கண்களுடன் வந்த தங்கையை பார்த்து விஷ்வாவின் ரத்தம் கொதிக்க காரில் இருந்து இறங்கி உள்ளேச் செல்ல போனவனை கை கொண்டு தடுத்தவள் வேணாம் என்று தலையாட்டினாள்.
அவளின் சொல் கேட்டு கொஞ்சம் நிதானித்தவன் காரில் ஏறியதும், "என்ன நடந்தது?" என்று விசாரிக்க, "அண்ணா அவர் கண்ணில் கடமை உணர்ச்சி இல்ல... பழி உணர்ச்சி மட்டுமே இருக்கு" என்றவளை யோசனையாக பார்த்தான். அவனுக்கு எல்லா முடிச்சுகளையும் கயலின் கல்யாணத்தில் இருந்து அவிழ்க்க வேண்டி இருந்தது.
வீட்டுக்குள் சென்ற விஷ்வா விறு விறுவென மகாலிங்கம் முன்னால் போய் நின்றான். அவனை நிமிர்ந்து பார்த்தவரிடம், "எதுக்காக அவனை கயலுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க???" என்று கேட்க அவரால் அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. தனது இயலாமையை மறைக்க, "உன் வாழ்க்கையை மட்டும் பார்" என்று உரைத்தவர் மகனை சமாளிக்க முடியாமல் அங்கிருந்து அகன்றார்.
அவனுக்கோ அனைத்தும் மர்மமாக இருந்தது. "மீடியாவுக்கு ஏன் இன்னும் செய்தி போகவில்லை?" என்ற கேள்வியும் அவனை துளைத்தது.
சாணக்கியன் கைது செய்யப்பட்டதை நினைத்து அதிர்ந்த வசுந்தரா நேரடியாகவே கௌதமை தேடிச் சென்றாள்.
அவளை பார்த்ததும் எழுந்து நின்றபடியே, "இன்னும் எத்தனை பேர்தான் வர போறாங்களோ" என்று சலித்தவன் அவள் பேச முதல், "இங்க பாருங்க மேடம் உங்க கணவனை பற்றி கோர்ட்டில் பேசிக்கோங்க... இப்போ என்னோடு பேசுவது வீண்." என்றவனிடம் மேலும் எதுவும் பேச முடியாமல் வெளியேறினாள்.
வீட்டுக்கு வந்ததும், "என்னம்மா ஆச்சு?" என்று விருத்தாசலம் கேட்க அவளோ நடந்ததை கூற சினந்தவர் தனது அதிகாரத்தை பயன் படுத்தி உடனடியாக அவனை வேறு இடத்துக்கு மாற்ற ட்ரான்ஸ்பர் கடிதம் உடனடியாக அனுப்பி இருந்தார்.
மேசையிலிருந்த ட்ரான்ஸ்பர் கடிதத்தை இளக்காரமாக பார்த்தப்படி பேப்பர் வெயிட்டை உருட்டிக் கொண்டிருந்தவன், எட்டி தொலைபேசியை எடுத்து ஒரு கால் போட்ட ஐந்தாவது நிமிடத்தில் அவன் ட்ரான்ஸ்பர் கான்செல் பண்ணப்பட்டதாக அடுத்த கடிதம் வந்திருந்தது.
"என்கிட்டயேவா?" என்று சிரித்தபடி கர்ஜித்தவன் விருத்தாச்சலத்துக்கு தொலைபேசியில் அழைத்தான்.
அவர் எடுத்த உடனே, "இங்க பாருங்க சார். நீங்க பிளான் பண்ணி அனுப்பிய ட்ரான்ஸ்பர் ஆர்டர் கான்செல் ஆயிடுச்சு... இந்த பிரச்சனைல தலையிடாம விலகி இருப்பது உங்களுக்கு நல்லது." என்றவன் அவரின் பதிலை எதிர் பார்க்காமல் தொலைபேசியை வைத்து விட்டான்.
முதல் முறை இப்படி தன்னிடம் தைரியமாக பேசிய போலீஸ் காரன் என்று நினைத்தவருக்கு என்ன நடந்தது என்று புரியாமல் தவித்தார். தொலைபேசியில் விசாரித்தவருக்கு அவன் ட்ரான்ஸ்பரை கான்செல் பண்ணிய நபரை கேட்டு அதிர்ந்து நின்றார்.
அடுத்த நாளுக்கு இடையில் கெளதம் செய்ய வேண்டிய முக்கியமான வேலை இருந்தது. சாணக்கியனின் சாணக்கியம் அறிந்தவன் அவன். உடனே தனது லேப்டாபை தேடியவன் அப்போது தான் அது மகாலிங்கம் வீட்டில் இருப்பது நினைவு வர ஜீப்பை எடுத்துக் கொண்டு மகாலிங்கம் வீட்டுக்கு புறப்பட்டான்.