ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 8

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 8

கட்டிலில் எழுந்து அமர்ந்துக் கொண்டே, தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டாள்.

நேற்று நடந்ததை நினைக்க, ஒரு பக்கம் அடி வயிற்றில் பட்டாம் பூச்சி பறந்தாலும், 'ஐயோ இவன் கூட இதெல்லாம் பண்ணி இருக்கேனே' என்று ஒரு புலம்பலும் அவளுக்குள்...

அதனை தொடர்ந்து உடைகளை எடுத்துப் பார்த்தாள்.

எல்லாமே கிழிந்து இருந்தது...

'சரியான காஜி பய' என்று வாய்க்குள் திட்டிக் கொண்டே குளிக்கச் சென்றவளுக்கு அணிய புடவையும் இல்லை...

அவனது பூந்துவாளையை தான் மார்பில் சுற்றி இருந்தாள்.

'இப்படியேவா வெளிய போக முடியும்?' என்று நினைத்துக் கொண்டே அலைப்பேசியை எடுத்தவள், "எனக்கு ட்ரெஸ் வேணும்" என்று தேவ் எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப, அவனும் வள்ளியம்மாவுடன் பேசிக் கொண்டே அலைப்பேசியை பார்த்தவன் பெருமூச்சுடன், "துர்கா" என்று அழைத்தான்...

அவளும் அவ்விடம் வந்திருக்க, "பத்மாவுக்கு ட்ரெஸ் எடுத்து கொடு" என்று சொல்ல, அவளோ சிரித்துக் கொண்டே பத்மாவின் அறைக்குள் செல்ல, "இவ வேற எதுக்கு எடுத்தாலும் சிரிச்சிட்டு" என்று முணுமுணுத்துக் கொண்டான்...

துர்காவும் பத்மாவுக்கு உடையை கொண்டு போய் நீட்ட, அவளும் கையை மட்டும் நீட்டி அதனை வாங்கிக் கொண்டாள்.

அந்த கணம், வள்ளியம்மாவிடம் பேசிக் கொண்டே இருந்த தேவ் உடைய விழிகள் அவன் கையில் படிந்தது...

குரலை செருமியபடி கழுத்தை வருடிக் கொண்டான்...

சற்று நேரத்தில் நீல நிற புடவையுடன் வெளியே வந்தாள் பத்மா...

அறைக்குள் இருந்து தயங்கி தயங்கி வந்தவளை, "இங்க வாம்மா" என்று அழைத்தார் வள்ளியம்மா..

அவர் அருகே தான் தேவ் அமர்ந்து இருந்தான். வேஷ்டி அணிந்து நீல நிற டீஷர்ட் போட்டிருந்தவனோ விழிகளை உயர்த்தி அவளை பார்க்க, அவள் யாரையும் பார்க்காமல் தலையை குனிந்தபடி வள்ளியம்மா அருகே வர, "இங்க உட்காரு" என்று தனக்கும் தேவ்வுக்கும் நடுவே அமர வைக்க அவள் தோள்கள் அவன் தோள்களில் தாராளமாக உரசிக் கொண்டன...

இருவரும் விலகவில்லை... விலக வேண்டிய அவசியமும் இல்லையே...

"நேத்து சந்தோஷமா இருந்தீங்களா??" என்று கேட்டார். சங்கடமாக இருந்தது அவளுக்கு... தேவ் குரலை செருமியபடி வேறு பக்கம் பார்த்துக் கொண்டு இருக்க, அவனை கடைக்கண்ணால் பார்த்து விட்டு, "ம்ம்" என்றாள்.

அவரோ, "இப்போ தான் நிம்மதியா இருக்கு... நித்யாவை கல்யாணம் பண்ணுவான்னு யோசிச்சு பயந்தேன். அவ இவனுக்கு சரி வர மாட்டானு எனக்கு தோணிட்டே இருக்கும்... நல்ல வேளை பண்ணல... அப்புறம் ஸ்டெல்லாவை பண்ணிடுவானோன்னு பயந்தேன்... அதுவும் அறுபட்டு போயிடுச்சு. அப்புறம் பூர்விகாவை பண்ணுவானோன்னு நினைச்சேன்... ஆண்டவன் புண்ணியத்துல அதுவும் நடக்கல... நல்ல வேளை நீ அவனுக்கு அமைஞ்ச" என்றார்.

"லிஸ்ட் அவ்ளோ தானா??" என்றாள் பத்மா.

"ஏய்" என்றான் தேவ் அதட்டலாக.

அவனை இப்போது பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தவள், "லிஸ்ட் பெருசா போகுதுல" என்றாள்.

இப்போது தான் இருவரின் விழிகளும் ஒன்றோடு ஒன்று கலந்தன...

அவன் விழிகள் தன்னையும் மீறி அவளது சிவந்த காயம்பட்ட இதழ்களில் படிய, அவளோ குரலை செருமி அவனை நிதானத்துக்கு கொண்டு வந்தாள்...

இப்போது விழிகளைப் பார்த்தவன் "அவ்ளோ தான்" என்றான். அந்த நீல விழிகளில் அதே மயக்கம்...

அதனைக் கண்ட பெண்ணவளோ, 'மூடோடையே திரிவான் போல, சரியான பொம்பள பொறுக்கி... நேத்து காய்ஞ்ச மாடு பாய்ஞ்ச போல பாய்ஞ்ச நேரமே சுதாரிச்சு இருக்கணும்... பொம்பளைன்னு எழுதினாலே ஜொள்ளு விடுற கேஸ்' என்று நினைத்துக் கொண்டே, "ஊர்ல யாரையும் விட்டு வச்சது இல்ல போல" என்றாள் கிண்டலாக.

அவளை முறைத்தவன், "வில் யூ ப்ளீஸ் ஷட் அப்" என்றான்.

அவனை பக்கவாட்டாக திரும்பி ஆழ்ந்து பார்த்தவள், "உண்மையை தானே சொல்றேன்" என்று சொல்ல, அவளை நோக்கி குனிந்தவன், "ஓவரா பேசிட்டே இருந்தா கடிச்சு வச்சிடுவேன்" என்றான்...

அவன் குரலில் கோபம் இருக்கவில்லை, கட்டுக்கடங்காத மோகம் தான் இருந்தது...

அவன் விழிகளை நோக்கியவளோ, "நேத்து கடிச்சது பத்தாதா?" என்று கேட்க, அவன் விழிகள் அவள் கழுத்தில் இருந்த காயத்தில் பதிய, "மறைக்கலையா?" என்று கேட்டான்...

"இத கடிக்க முதல் யோசிக்கணும்... சாரீல எப்படி மறைக்கிறது?" என்று கேட்க, அவளை பார்த்து விட்டு, "பாட்டி, தலைக்கு வைக்க பூ இருக்கா?" என்று கேட்க, "ஆஹ் இருக்கு ராசா" என்று சொன்னவரோ, "துர்கா, பூ எடுத்து வா" என்று சொல்ல, அவளும் பூவை எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள்.

"நானா தலைல வைக்க முடியும், அவ கிட்ட கொடு" என்றான்...

"நீங்க அவங்க தலைல வச்சு விடுவீங்கன்னு நினைச்சேன்" என்று அவள் சிரித்துக் கொண்டே சொல்ல, அவ்விடம் வந்த ரத்னமோ, "நேத்து செம்ம தூக்கம்" என்று சொல்லிக் கொண்டே அமர்ந்தவர், "துர்கா, காஃபி" என்று சொல்ல, அவளும் பூவை தேவ்வின் மடியில் வைத்து விட்டு விட்டுச் செல்ல, அவனோ பெருமூச்சுடன், அதனை எடுத்து பத்மாவிடம் நீட்ட, அவளும் அதனை தலையில் வைத்துக் கொண்டாள்.

அவள் கழுத்தில் இருந்த காயத்தை அவளால் சரியாக மறைக்க முடியாமல் போக, அவனே பூச்சரத்தினால் அதனை மறைத்து இருந்தான்...

அவர்கள் நெருக்கமாக இருப்பதையும் இயல்பாக பேசுவதையும் பார்த்த ரத்னத்தின் முகத்தில் ஒரு திருப்தி உணர்வு உண்டாகி இருக்க, அது தேவ்வின் கண்களுக்கு தப்பவும் இல்லை.

அவர்கள் சிரிப்பிற்கு தடையாக வந்து வாசல் முன்னே வந்து நின்றது அந்த கார்...

ஆம் அதில் வந்தது ஜெயா, நிரூபன் மற்றும் நித்யா தான்...

கோபமாக உள்ளே வந்த ஜெயாவோ, "என்னடா நினைச்சிட்டு இருக்க? கல்யாணம் பண்ணிட்டியாமே... அதுவும் இவளை? உன்னை மயக்கிட்டாளா அவ? என் கிட்ட ஒரு வார்த்தை சொல்ல தோணவே இல்லையே... நான் வர்ற நேரம் அவ இருக்க மாட்டானு சொன்ன, இப்போ கூடவே வச்சு இருக்க முடிவு பண்ணிட்டியா?" என்று கேட்டுக் கொண்டே ஆக்ரோஷமாக அவனை நோக்கி வர, "அத்தை ப்ளீஸ்" என்று அவன் சொல்லிக் கொண்டே எழுந்து நிற்க, அவரோ வந்த வேகத்தில் கோபம் குறையாமல், அதிர்ச்சியுடன் எழுந்து நின்ற பத்மாவின் முடியை பிடித்து இழுத்து விட்டார்...

"ஏன் டி நீயும் உன் அம்மாவும் எங்கே எவன் கிடைப்பான் வளைச்சு போடலாம்னு தான் ஆடிட்டு இருக்கீங்களா?" என்று கேட்க, அவளுக்கோ சட்டென கண்கள் கலங்க, கண்ணீர் வழிந்து விட்டது...

"அவளை விடு ஜெயா" என்று வள்ளியம்மா ஒரு பக்கம் கத்த, ரத்னமோ, "ஏய் ஜெயா" என்று அதட்ட, தேவ்வோ, அவர் கையை அழுந்த பற்றியவன், "விடுங்கன்னு சொல்றேன்ல" என்று அந்த இடமே அதிரும் வண்ணம் சீறினான்...

அவன் பற்றியதில் அவர் கை வலித்து இருக்க வேண்டும்...

"ஆஹ்" என்று சொல்லிக் கொண்டே, அவள் தலையில் இருந்து கையை எடுக்க, அவன் உறுத்த விழிகளோ அவரை தான் நோக்கியது...

"அவளுக்காக என்னையே காயப்படுத்துற அளவுக்கு வந்துட்டல்ல" என்று கேட்டுக் கொண்டே, அவன் பற்றியதில் சிவந்து இருந்த மணிக்கட்டை வருடி விட்டார்...

அவனோ நெற்றியை வருடிக் கொண்டே, "அத்தை, சாரி, நான் சொல்றத" என்று ஆரம்பிக்க, "நீ எதுவும் சொல்ல வேணாம், உன் அம்மா இல்லாத நேரம் நான் தானே டா உனக்கு எல்லாம் பண்ணுனேன்... என்னை மறந்துட்ட தானே... என் குடும்பத்தை அழிச்சவ அவ... அவளையே எப்படி உனக்கு கட்டிக்க மனசு வந்திச்சு... அதுவும் திருட்டு கல்யாணம் பண்ணி இருக்க..." என்று சொன்னவர் விம்மி அழ, "அத்தை ப்ளீஸ், அழாதீங்க" என்று சொல்லிக் கொண்டே, அவரை அணைக்க போக, அவன் மார்பில் கையை வைத்து தள்ளியவர், "போடா, இனி உனக்கும் எனக்கும் சம்பந்தம் இல்ல" என்று சொல்லிக் கொண்டே நிரூபனையும் நித்யாவையும் பார்த்தவர், "வா, போகலாம்" என்று சொல்லிக் கொண்டே நடக்க, அவரை நிரூபன் பின் தொடர, நித்யா அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டே நின்று இருந்தாள்.

ரத்னமோ, "நான் சொல்றத கேளும்மா" என்று ஆரம்பிக்க, "நீங்க பேசாதீங்க... நீங்க எனக்கு அண்ணாவும் இல்லை, நான் உங்களுக்கு தங்கச்சியும் இல்ல" என்று சொன்னார்.

அதனை தொடர்ந்து, நித்யாவை "வாடி" என்று ஜெயா அழைக்க, "நீங்க போங்க, பக்கத்து தெரு தானே, நான் நடந்து வந்திடுறேன்... மச்சான் கூட பேசணும்" என்றாள்.

"இதுக்கப்புறம் என்ன பேச போற?" என்று ஜெயா கேட்க, "நான் பேசணும்" என்று சொன்னவளோ, "என் கூட பேசுவீங்களா?" என்று தேவ்வை பார்த்துக் கொண்டே கேட்க, அவனோ, "ம்ம்" என்று சொன்னான்.

ஜெயாவோ, "என்னவோ பண்ணி தொலை" என்று சொல்லிக் கொண்டே நிரூபனுடன் வெளியேறி இருக்க, "வெளியே வாங்க" என்று சொல்லிக் கொண்டே நித்யா வெளியேச் செல்ல, அவனும் பின் தொடர்ந்துச் சென்றான்.

தன்னை தாண்டிச் செல்பவனை பார்த்த பத்மாவோ கண்ணீரை துடைத்துக் கொண்டே, அறைக்குள் சென்றாள்.

'எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டார்... இவ்ளோ பேச்சு நான் வாங்கணுமா?' என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டே கட்டிலில் படுத்து அழ ஆரம்பித்து விட்டாள்.

ஏனோ அவர் வார்த்தைகள் அவளை குத்தி கிழித்துக் கொண்டே இருந்தன...

அவர் மீதும் தவறு சொல்ல முடியாது... அவள் தாயினால் பாதிக்கப்பட்டவர் அவர்...

எல்லாவற்றிற்கும் தேவ் தான் காரணம் என்று நினைத்தவளுக்கு அவன் மீது தான் கொலைவெறி ஆத்திரம்...

இதே சமயம், வெளியே வந்த நித்யாவோ, தனக்கு முன்னே கையை கட்டிக் கொண்டே நின்ற தேவ்வைப் பார்த்து, "பத்மா தான் கடைசியா? இல்லை இன்னும் லிஸ்ட் போகுமா?" என்று கேட்டாள்.

கேள்வியில் ஆதங்கம்...

"நித்யா ப்ளீஸ் ஸ்டாப் திஸ்" என்றான் அவன்...

அவள் கண்கள் கலங்க, "உங்கள சின்ன வயசுல இருந்தே பிடிக்கும்... உங்களுக்கும் என்னை பிடிக்கும்... குடும்பத்துக்குள்ள கல்யாணம் பண்ண கூடாதுன்னு உங்க அப்பா பிரிச்சு வச்சுட்டார்... திரும்ப ஸ்டெல்லான்னு ஒருத்தி வந்தா... அப்புறம் பூர்விகான்னு ஒருத்தி வந்தா... கடைசியா பத்மாவை கல்யாணம் பண்ணி இருக்கீங்க... ஆனா நான் உங்கள மட்டும் தான் நினைச்சிட்டு இருந்தேன்... அது உங்களுக்கு தெரியுமா?" என்று கேட்டவளுக்கு கண்ணீர் வழிய, கண்களை துடைத்துக் கொண்டாள்...

அவள் பேச பேச, அவனுக்கு இதயத்தில் பாரம் ஏறிப் போக, "நித்யா, அது தான் அப்பா ஆல்ரெடி சொல்லி இருக்கார்ல... எதுக்கு என்னை நினைச்சிட்டு இருக்க? சரி வராதுன்னா கடந்து போயிடணும்... உனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைச்சுக்கோ" என்று சொல்ல, "முடியலையே, என்னால முடியலையே" என்று உடைந்து அழுதுக் கொண்டே அவனைப் பார்த்தாள்...

இதனை ஜன்னலினூடு வீட்டினுள்ளே இருந்து பார்த்துக் கொண்டே இருந்த வள்ளியம்மாவோ விறுவிறுவென வந்து பத்மாவின் கதவை தட்ட, அவளும் கண்களை துடைத்துக் கொண்டே, தலையை சரி செய்தபடி கதவை திறந்தாள்.

"நீ என்ன உள்ளேயே இருக்க? அங்கே உன் புருஷன நித்யா கொத்திட்டு போயிடுவா... வா சீக்கிரம்" என்று சொல்ல, 'கொத்திட்டு போகட்டும்' என்று மனதுக்குள் திட்டிக் கொண்டே, அவருடன் சென்றாள்.

அவரும் அவளும் ஜன்னல் அருகே நின்று இருக்க, அவர்கள் பேசுவது கேட்கவில்லை என்றாலும், காட்சி தெரிந்தது...

"ஹேய் உனக்கு நல்ல பையன் கிடைப்பான்... இதுக்கு எதுக்கு அழுதுட்டு இருக்க... அது டீனேஜ் க்ரஷ் அவ்ளோ தான்..." என்று சொன்ன தேவ்வை முறைத்தவள், "அது உங்களுக்கு எனக்கு இல்ல" என்று சொன்னாள்.

"இங்க பாரு, உனக்குன்னு ஒரு வாழ்க்கை" என்று அவன் முடிக்கவில்லை, "எனக்கு நீங்க தான் வேணும் மச்சான்" என்று சொல்லிக் கொண்டே அவனை இறுக அணைத்து விட்டாள் பெண்ணவள்...

இதனைக் கண்ட வள்ளியம்மாவோ, வாயில் கையை வைக்க, பத்மாவுக்கு நெஞ்சில் பாரம் ஏறிய உணர்வு...

'எனக்கு ஏன் ஒரு மாதிரி ஆகுது?' என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டாள்.

எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டாள்.

ஜன்னல் கம்பியை அழுந்த பற்றிக் கொண்டாள்.

வள்ளியம்மாவோ, "பாரு, இவ இடம் கொடுத்தா, உன் இடத்தையே பிடிச்சிடுவா... அவனை முந்தானைல முடிஞ்சு வச்சுக்கோ... ஆம்பிளைங்களுக்கு ஊசி இடம் கொடுத்தா நுழைஞ்சிடுவானுங்க... எவனும் இங்க ராமன் இல்லை... புரியுதா?" என்று சொல்ல, அவளும் கலங்கிய கண்களுடன், அவர்களை பார்த்துக் கொண்டே, "ம்ம்" என்று சொன்னாள்.

தேவ்வோ, "ஹேய், விடு நித்யா... யாரும் பார்த்தா என்ன நினைப்பாங்க" என்று கேட்டுக் கொண்டே, அவளை பற்றி தன்னை நோக்கி விலக்கி வைத்தவன், அழுதுக் கொண்டு இருந்தவளின் தோள்களை பற்றி, அவளை நோக்கி கொஞ்சம் குனிந்து, "உனக்குன்னு யாரும் கிடைப்பாங்க நித்யா, நானே நல்ல பையனா பார்த்து கட்டி வைக்கிறேன்" என்று சொல்ல, "எனக்கு உங்கள தானே பிடிச்சு இருக்கு" என்றாள்.

"ஹேய் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு டி" என்றாள்.

"ஆனா நீங்க தானே வேணும்னு மனசு சொல்லுது" என்று அழுதுக் கொண்டே குழந்தை போல சொல்ல, "உன்னை வீட்ல விட்டு வர்றேன் வா" என்று சொல்லிக் கொண்டே, அவளை காரில் ஏற்றி விட்டு உள்ளே வந்தவனோ, கார் கீயை எடுத்துக் கொண்டே, யாரையும் பார்க்காமல் வெளியேறி இருந்தான்.

அழுதுக் கொண்டே இருக்கும் பெண்ணை தனியே அனுப்ப அவனுக்கு இஷ்டம் இல்லை...

காரில் ஏறியவனும், அவள் வீட்டை நோக்கி காரை செலுத்த, நித்யாவோ, "கல்யாணம் மட்டும் தானா ஆச்சு, மீதியும் ஆச்சா?" என்று கேட்க, அவளை திரும்பி பார்த்து முறைத்தவன், "என்ன கேள்வி நித்யா இது?" என்றான்...

"தெரிஞ்சுக்கணும்ல... பிடிக்கலன்னு தொடாம" என்று அவள் ஆரம்பிக்க, "ஆஹ் அதெல்லாம் பிடிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... எல்லாமே ஆச்சு... போதுமா?" என்று கேட்க, அவள் மீண்டும் விம்மி அழ ஆரம்பித்து விட்டாள்.

"சின்ன வயசில, நானும் நீங்களும் கல்யாணம் பண்ணி, நாலு குழந்தை பெத்துக்கலாம்னு பேசுனோமே மச்சான்... அதெல்லாம் பொய்யா?" என்று கேட்டாள்.

"ஐயோ முருகா" என்று சொல்லிக் கொண்டே ஒற்றைக் கையால் கண்களை அழுந்த தேய்த்தவனோ, "அந்த வயசில பேசுனது எல்லாம் மனசுல வச்சுக்கலாமா?" என்று கேட்டான்...

"நான் வச்சு இருக்கேனே... அம்மா அப்பா விளையாட்டு விளையாடும் போதெல்லாம், நீங்க அப்பா, நான் அம்மா தானே" என்றாள்.

சட்டென ப்ரேக் போட்டவனோ, "உன் வீடு வந்திடுச்சும்மா, இறங்கிக்கோம்மா" என்றான்.

அவளோ, "நீங்க பதில் சொல்லவே இல்லையே" என்றான்.

"என்னடி பதில் வேணும்?" என்றான் சலிப்பாக...

"என்னை நிஜமாவே மறந்துட்டீங்களா?" என்று கேட்டாள்.

அவனோ, "இங்க பாரு நித்யா, நான் எதார்த்தமா வாழுறவன், ஒன்னு கிடைக்காதுன்னு தெரிஞ்சா, அதுக்காக காத்துட்டு இருக்கிறது முட்டாள் தனம்... அத தான் நீ பண்ணிட்டு இருக்க... உனக்குன்னு ஒருத்தன் வருவான்... ப்ளீஸ் அழாம போ, மனச மாத்திக்கோ... எனக்கு கல்யாணம் முடிஞ்சு, ஃபெர்ஸ்ட் நைட்டும் முடிஞ்சு, இன்னொருத்தியை தொட்டவன் உனக்கெதுக்கு? ஃப்ரெஷ் ஆஹ் ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கோ" என்றான்.

"எதுக்கு அவளை கல்யாணம் பண்ணுனீங்க? அவ எங்க குடும்பத்துக்கு செஞ்சது மறந்திடுச்சா?" என்று அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே கேட்டாள்.

அவனிடம் பதில் இல்லை...

"அவ இல்லை, அவ அம்மா" என்றான்...

"அவ தானே எல்லாத்துக்கும் காரணம்" என்று சொல்ல, "அவ அறிஞ்சு எந்த தப்பும் பண்ணலையே நித்யா" என்றான்...

"மொத்தமா அவ புருஷனாவே மாறிட்டீங்க மச்சான்... அவளுக்கே சப்போர்ட் பண்ணி பேசிட்டு இருக்கீங்க" என்று சொல்ல, இதழ் குவித்து ஊதியவன், "நீ போம்மா, இத பத்தி யோசிக்காதே" என்று சொல்ல, "நீங்க பண்ணுனது துரோகம் தான்" என்று சொல்லிக் கொண்டே, அவள் இறங்கிச் சென்று விட, அவள் முதுகை வெறித்துப் பார்த்து விட்டு காரை வீட்டை நோக்கி கிளப்பி இருந்தான்...

இதே சமயம், அறைக்குள் கட்டிலை சுத்தம் செய்து விட்டு, புது படுக்கை விரிப்பை விரித்துக் கொண்டே நின்று இருந்தாள் பத்மா...

அவளுக்கு இன்னுமே நித்யா அவனை கட்டி அணைத்த நினைவுகள் தான்... ஜெயா பேசியது கூட மறந்து விட்டது... ஆனால் நித்யா கட்டி அணைத்ததை மறக்க முடியவில்லை... அதுவும் அவனுக்கு அவள் மீது சின்ன வயதில் ஈர்ப்பு இருந்து இருக்கிறது என்று அறிந்த பிறகு சாதாரணமாக கடந்தும் விட முடியவில்லை.

தலையை உலுக்கிக் கொண்டவளோ, 'யார் யாரை கட்டி பிடிச்சா எனக்கு என்ன?' என்று யோசித்துக் கொண்டே இருக்கும் போது கதவை திறந்துக் கொண்டே உள்ளே வந்தான் தேவ்...

அவனை அவள் பார்க்காமல் படுக்கை விரிப்பை சரி செய்ய, அவனோ, அவள் கையை பற்றியவன், "ஆர் யூ ஓகே?" என்று கேட்டான்...

"ஐ ஆம் ஓகே" என்று சொல்ல, அவனும் ஒரு பெருமூச்சுடன் அவளை அணைக்க முற்பட, சட்டென மார்பிலே கையை வைத்து எட்ட நிறுத்தினாள்...

"வாட்?" என்று கேட்டான்...

"லேடீஸ் பெர்ஃபியூம் ஸ்மெல் வருது... குளிச்சிட்டு வாங்க" என்றாள்.

அவன் விழிகள் ஆழமாக அவளை நோக்கின...

"ஜன்னலுக்குள்ளால எட்டி பார்த்தியா?" என்று கேட்டான்...

இப்போது அவன் விழிகளை பார்த்தவள், "கட்டிப்பிடிக்கிறது தப்பில்ல, ஆனா எட்டி பார்க்கிறது தப்பா?" என்று கேட்டாள்.

"அவ தான் கட்டி பிடிச்சா நான் இல்ல" என்று சொல்ல, "உங்க கிட்ட விளக்கம் கேட்கல... பக்கத்தில வர்றதுனா குளிச்சுட்டு வர சொன்னேன்" என்று சொல்ல, "நீ சொல்லி, நான் பண்ணனுமா? நான் குளிக்கவே போறது இல்லை... ரொம்ப தான் பண்ணிட்டு இருக்க... பக்கத்துலேயே வரல போடி" என்று சொல்லிக் கொண்டே வெளியேற போனவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை, சட்டென யூ டேர்ன் போட்டு குளியலறைக்குள் நுழைந்துக் கொள்ள, குளியலறை அடித்து சாத்தும் தொனியில் கண்களை மூடி திறந்தாள் பத்மா...

ஷவரின் கீழ் நின்றவனுக்கு தன்னை நினைத்தே அதிர்ச்சி...

இப்போது தான் குளித்தான்.

அவள் சொல்கின்றாள் என்று மீண்டும் குளிக்கின்றான்...


'டேய் தேவ், நேத்து வரைக்கும் நல்லா தானே இருந்த, இப்போ எதுக்கு அவ லூசு போல உளறுனானு நீயும் வந்து குளிச்சிட்டு இருக்க?' என்று தனக்கு தானே புலம்பியும் கொண்டான்.
 
ஐயோ 😂😂😂. இந்த நித்யா என்ன லூசா 🤧🤧🤧🤧. பொண்டாட்டி சொன்னா கேக்கணும் தான் 🤭😁😁😁😁
 

CRVS2797

Active member
ஐஸ்க்ரீம் சிலையே ..!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மூ
(அத்தியாயம் - 8)


அது தான் டா... நல்ல மனைவியோட மகத்துவம். அது புரிய இன்னும் கொஞ்சம் நாளாகும். ஆனா அது வரைக்கும், அதோட போக்கிலேயே போக விடு.
காமத்துல இருந்தும் காதல் பிறக்கலாம், காதலில் இருந்தும் காமம் பிறக்கலாம்.
மொத்தத்துல போர்த்திகிட்டு
படுத்தா என்ன ? படுத்துக்கிட்டு போர்த்திக்கிட்டா என்ன ? ரெண்டும் ஒண்ணு தான்.
இப்பத்தானே கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்க.


ஆனா, நடுவில கொஞ்சம் பக்கத்தை காணோம்ங்கிற மாதிரி நித்யாவுக்கு ரூட் விட்டுட போயிடாதா. அப்புறம், பத்மாவோட நிலைமை தான் நாளைக்கு உன் குழந்தைக்கும்.
நினைவில வைச்சுக்க.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top