அத்தியாயம் 9
வீட்டுக்குள் அவன் நுழைந்ததுமே, "என்ன தம்பி, யாழ் பொண்ணுக்கு மாங்காய் சாப்பிட ஆசை வந்துடுச்சா?" என்று முத்து கேட்க, அவனை ஒரு முறைப்புடன் கடந்து மாடி ஏறிச் சென்றான்.
இதே சமயம் அறைக்குள்ளே நகத்தை கடித்துக் கொண்டே சுவரில் சாய்ந்து நின்றாள் ஆதிரையாழ்.
அவளே எதிர்பாராமல் தான் அவன் வேஷ்டியை உருவினாள்... அது கூட பரவாயில்லை... அவள் ஏதோ அவனை பார்க்க ஏங்கி வேஷ்டியை உருவிய போல அவன் பேசியதை தான் அவளால் ஜீரணிக்க முடியவே இல்லை...
ஆனால் அதற்காக அவனிடம் வாதாடும் அளவுக்கு அவளுக்கு தைரியம் இல்லை...
அவனை எதிர்கொள்ள சங்கடமாக இருந்தது...
தன்னை பற்றி அவன் மனதில் இருக்கும் எண்ணம் அவளை என்னவோ செய்தது...
நகம் கடித்துக் கொண்டே சுவரில் சாய்ந்து நின்றவள் கதவு திறக்கும் சத்தம் கேட்டு சட்டென்று அறை வாசலைப் பார்க்க, உள்ளே வந்தது என்னவோ சர்வஜித் தான்...
மேசையில் அவள் பறித்த மாங்காய்களை வைத்தவனோ, அவளை அழுத்தமாக பார்த்து விட்டு மீண்டும் வெளியேற, அவனை மிரட்சியாக பார்த்துக் கொண்டே நின்றவளுக்கு அப்போது தான் மூச்சே வந்தது...
அவன் சென்றதுமே, மாங்காய் ஒன்றை எடுத்து கடித்தவளோ, "அட நல்லா தான் இருக்கு" என்று சொல்லிக் கொண்டாள்.
அடுத்த ஒரு வாரம் மின்னல் வேகம் தான்... அத்தனை வேலைகள் ஆதிரையாழுக்கு...
அங்கிருந்து மொத்தமாக அல்லவா கிளம்ப வேண்டும்...
மருதநாயகமோ, "அவளுக்கு தேவையான ட்ரெஸ் எல்லாம் வாங்கி கொடு சர்வா" என்று கட்டளை வேறு இட்டு இருக்க, வேறு வழி இல்லாமல் அவளை அழைத்துக் கொண்டே கடைக்குச் சென்றான்...
அவளுக்கு அமெரிக்காவின் காலநிலை தெரியாது அல்லவா?
புடவை செக்ஷனுக்குள் அழைத்துச் செல்வான் என்று பார்த்தால் அவனோ ஜீன்ஸ் டீ ஷேர்ட் செக்ஷனுக்குள் அழைத்துச் சென்றான்...
குழம்பி விட்டாள்.
"இதெல்லாம் நான் போடுறது இல்லை" என்றாள்.
அவனோ, "இனி போட்டு பழகணும்... இப்ப அங்கே சம்மர் தான்... நீ புடவை கட்டிக்கலாம், ஆனா வின்டர்க்கு புடவை எல்லாம் கட்ட முடியாது... முக்கியமா ஃபிளைட்ல குளிரும்" என்றான்...
"ஐயோ எனக்கு இதெல்லாம் போட்டு பழக்கம் இல்ல" என்றாள் சிணுங்கலாக...
"சரியான பட்டிக்காடு" என்று வாய்க்குள் திட்டியவனோ, "சாரி உள்ளே போட்டுக்கோ" என்று சொல்லிக் கொண்டே, அவளுக்கு உடைகளை வாங்கி எடுத்தவனோ, "வின்டர் ட்ரெஸ் அங்க போய் எடுத்துக்கலாம், இங்க குவாலிட்டி கம்மி, என் கடைல இருந்து எடுத்து கொடுக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டான்...
'கடை எல்லாம் வச்சு இருக்கார் போல' என்று நினைத்தவளும் அவன் சொன்னதற்கு எல்லாமே பூம் பூம் மாடு போல தலையாட்டி விட்டு, உடைகளை வாங்கிக் கொண்டே வீட்டை நோக்கி வந்தாள்...
அன்று இரவு அவளுக்கு ஒரே அழுகை...
ஊரை விட்டுச் செல்ல வேண்டும் என்ற அழுகை...
அழுதழுதே உடைகளை அவன் வாங்கிக் கொடுத்த பெட்டியில் அடுக்கினான்.
'ரொம்ப தான் ட்ராமா பண்ணுறா' என்று நினைத்த சர்வஜித்துக்கு அவளுக்கு திட்டவும் முடியவில்லை...
திட்டினால் மருதநாயகம் வில்லன் போல வந்து நின்று விடுவார் அல்லவா?
பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டே அடுத்தடுத்த நாட்களையும் கடத்த, அவர்கள் புறப்படும் நாளும் வந்து சேர்ந்தது...
அன்று காலையிலேயே சர்வஜித்தை சோஃபாவில் அமர வைத்து வகுப்பு எடுக்க தொடங்கி விட்டார் மருதநாயகம்...
"இங்க பாருடா, அவ அம்மா, அப்பா இல்லாத பொண்ணு, நல்ல விதமா நீ பார்த்துக்கலனா, நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்" என்றார்...
அவரையே பார்த்துக் கொண்டு இருந்த சர்வஜித்தோ, "ஓகே" என்று மட்டும் சொல்லிக் கொண்டான்...
அவரோ, "பேரனையோ பேத்தியையோ சீக்கிரம் பெத்து கொடுக்கணும்" என்றார்...
ஒரு அழுத்தமான பார்வை மட்டுமே அவனிடம்...
அவனுக்கு ஒரு மணி நேரம் அறிவுரை...
எரிச்சலாக இருந்தது... பொறுத்துக் கொண்டான்... வேறு வழி இல்லை அல்லவா?
அவனை அறுத்து தள்ளி விட்டு, அங்கே ஓரமாக நின்று அழுதுக் கொண்டு இருந்த ஆதிரையாழை நோக்கி வந்தார்...
"இப்போ எதுக்கு அழுற?" என்று கேட்க, "உங்கள எல்லாம் விட்டு போக முடியல தாத்தா" என்றாள்.
"அப்படினா இங்கேயே நின்னுடு, நோ ப்ராப்ளம்" என்றான் சர்வஜித்...
அவனை முறைத்த மருதநாயகமோ, "பேசுற பேச்சை பாரு" என்று அவனுக்கு திட்டி விட்டு, "அது தான் நாம ஃபோன்ல வீடியோ கால் பேசுவோமே... நேற்று நான் எல்லாம் சொல்லி கொடுத்தேன்ல, ஃபோன் எங்க?" என்று கேட்க, "வச்சு இருக்கேன் தாத்தா" என்றாள்.
"அதுல பேசிக்கலாம்..." என்று சொல்லிக் கொண்டே அவர் தலையை வருட, சர்வஜித்துக்கு இப்போது தான் மருதநாயகம் ஆதிரையாழுக்கு தொலைப்பேசியை வாங்கிக் கொடுத்ததே தெரிந்தது...
'ஓஹோ, பெருசு ஃபோன் எல்லாம் வாங்கி கொடுத்து இருக்கா' என்று அவன் நினைத்துக் கொள்ள, மருதநாயகமோ, "இந்த பய ஏதும் சேட்டை பண்ணுனா சொல்லு, அவனை வகிந்துடுவேன்" என்றார்... அவளும் "சரி தாத்தா" என்று தலையாட்ட, இருவரையும் பார்த்த சர்வஜித்தோ, 'ஆடுங்க ஆடுங்க, இங்க மட்டும் தான் உங்க ஆட்டம்... அங்க வச்சு நான் ஆடுறேன் ஒரு ஆட்டம்' என்று நினைத்துக் கொண்டான்...
சற்று நேரத்தில் அனைவரிடமும் விடை பெற்று இருவரும் விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டு இருந்தார்கள்...
புடவை அணிந்து, மேலே ஸ்வெட்டர் அணிந்து, உள்ளே ஜீன்ஸ் அணிந்து வந்த ஆதிரையாழை பார்த்த சர்வஜித்தோ, 'ஷப்பா, இவ ட்ரெஸ்ஸிங் சென்ஸ்ல தீயை வைக்க' என்று நினைத்துக் கொண்டான்...
"அமெரிக்கா போனதும் எங்களை மறந்துடாதே புள்ள" என்று ஆளாளுக்கு சொல்லி அனுப்பி இருந்தார்கள்... அவளும், "உங்கள எப்படி மறப்பேன்" என்று சொல்லி விட்டு புறப்பட்டு இருந்தாள்.
விமானநிலையம் வந்தவளுக்கு எல்லாமே புதிதாக இருந்தது...
வழக்கமாக மருதநாயகம் சர்வஜித்தை வழி அனுப்ப விமான நிலையத்துக்கு எல்லாம் வருவதில்லை, இன்று வந்து இருந்தார்...
ஆதிரையாழுக்காக வந்து இருந்தார்...
அவளும் அழுதழுதே அவனுடன் புறப்பட்டு இருக்க, மருதநாயகமோ, "கவனமா பார்த்துக்கோடா" என்று இத்துடன் பத்து தடவைக்கு மேலே சொல்லி இருப்பார்... சர்வஜித் இதனை எல்லாம் காதில் வாங்கினால் தானே... அவனோ, "சீக்கிரம் வா" என்று சொல்லிக் கொண்டே முன்னே செல்ல, அவளும் அவனை தொடர்ந்து மிரட்சியுடனேயே சென்றாள்.
அவன் தான் செக்கின் தொடக்கம் எல்லாமே பார்க்க வேண்டிய கட்டாயம்...
எக்கனாமி க்ளாசில் போவது அவனுக்கே புதிது தான்...
பிறந்ததில் இருந்தே பணத்தில் புரள்பவன் அவன்...
இத்தனை மணி நேரம் எக்கனாமி சீட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்க கடுப்பாக இருந்தது...
'பேசாமல் ரெண்டு நாள் விட்டு ஃபெர்ஸ்ட் க்ளாஸையே புக் செய்து இருக்கலாமோ' என்று அவனால் நினைக்காமல் இருக்க முடியவே இல்லை...
இப்போது நினைத்து என்ன பயன்? காலம் கடந்து விட்டதே...
அவனோ அங்கே இருக்கும் செக்கின் அலுவலகரிடம் பாஸ் போர்ட்டை நீட்டினான்...
வழக்கம் போல அவன் க்ளாசியாக தான் வந்து இருந்தான்...
கண்ணில் சன் க்ளாஸ், காதில் ப்ளூ டூத், கையில் ஆப்பிள் வாட்ச், உயர் ரக ப்ராண்டட் உடைகள், ஜெர்க்கின், என்று இருந்தவனை ஏறிட்டு பார்த்த பெண்ணோ, "சார் நீங்க ஃபெர்ஸ்ட் க்ளாஸ் தானே போவீங்க, இந்த முறை" என்று இழுத்தாள்... அவனை அவளுக்கு நன்றாகவே தெரியும்...
குரலை செருமியவனோ, "திஸ் டைம் எக்கனாமி" என்று சொல்லிக் கொண்டே ஆதிரையாழின் பாஸ்போர்ட்டையும் டிக்கெட்டையும் நீட்டினான்...
ஆதிரையாழோ என்ன செய்வது என்று தெரியாமல் விமான நிலையத்தை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டே இருந்தாள்.
அவன் பாஸ்போர்ட்டை நீட்டியதுமே, "வீட்டு வேலைக்கு அழைச்சு போறீங்களா சார்?" என்று ஆதிரையாழை எட்டி பார்த்துக் கொண்டே அந்த பெண் கேட்க, "தட்ஸ் நன் ஒஃப் யோர் பிசினஸ்" என்றான்... அவள் கேள்வி அவனுக்கு எரிச்சல் தான்...
ஆனால் பொருத்தமே இல்லாமல் அவள் இருக்கும் போது இப்படி தானே நினைப்பார்கள் என்று அவனுக்கு புரிந்தது...
தன்னை இந்த நிலைக்கு தள்ளி விட்ட மருதநாயகம் மேல் கொலை வெறி வந்தது...
கோபத்தை அடக்கிக் கொண்டான்...
அந்த பெண்ணுக்கு ஒரு மாதிரி ஆகி விட, பாஸ்போர்டை திறந்து பார்த்தாள்.
பெயரோ, "ஆதிரையாழ் சர்வஜித்" என்று இருந்தது...
அந்த பெண்ணுக்கு அதிர்ச்சியும் சங்கடமும் ஆகி விட்டது...
அவன் தோற்றத்துக்கும் அவன் ஆளுமைக்கும் கொஞ்சமும் பொருத்தம் இல்லாமல் இருந்தாள் ஆதிரையாழ்...
"சாரி சார், நான் அப்படி கேட்டு இருக்க கூடாது தான்" என்று அந்த பெண் சர்வஜித்திடம் மன்னிப்பு கேட்க, "கோ எஹெட்" என்று சொல்லிக் கொண்டே, ஜெர்க்கினின் இரு பாக்கெட்டுகளிலும் கையை விட்டபடி நின்று இருந்தான் சர்வஜித்...
அந்த பெண்ணும் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு, பாஸ்போர்டை அவனிடம் நீட்ட, அதனை வாங்கிய சர்வஜித்தோ, ஆதிரையாழை பார்த்தான்... அவள் எங்கேயோ பார்த்துக் கொண்டே நின்றாள்.
குரலை செருமிப் பார்த்தான்...
அவள் பார்க்கவே இல்லை...
இதுவரை அவள் பெயரை அழைத்தது இல்லை...
இப்போது அழைக்க வேண்டிய கட்டாயம்...
அனைவரும் அவளை "யாழ்" என்று அழைப்பார்கள்...
அவனுக்கு ஏனோ அப்படி அழைக்க விருப்பம் இல்லை...
"ஆதிரா" என்றான், சட்டென திரும்பினாள்...
"என்னனு கூப்பிட்டீங்க?" என்றாள்.
அவனோ, "ஆதிரா" என்றான் புருவத்தை சுருக்கியபடி...
அவளுக்கோ சட்டென கண்கள் கலங்கி போக, கண்ணீர் கீழே விழுந்து விடாமல் புடவை முந்தானையால் துடைத்துக் கொண்டாள்...
அவனோ, "இன்னும் நீ அழுது முடிக்கலையா?" என்று எறிந்து விழுந்தான்.
அவளோ அவனை ஏறிட்டுப் பார்த்து, "அம்மா தான் ஆதிரானு கூப்பிடுவாங்க, அவங்க நினைவு வந்திடுச்சு" என்றாள். அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன், "உன்னோட சென்டிமென்ட் எல்லாம் பெருசோட நிறுத்திக்கோ... இரிட்டேட்டிங்" என்று தலையை இரு பக்கமும் ஆட்டியபடி இதழ் குவித்து ஊதியவன், அங்கிருந்து நகர, அவனை பின் தொடர்ந்துச் சென்றாள் பெண்ணவள்...
அவனை அறிந்தவர்கள், "என்ன சார், இந்த முறை எக்கனாமி?" என்று கேட்டு கேட்டே ஒரு வழி பண்ணி விட்டார்கள்... அவனோ, "தட்ஸ் நன் ஒஃப் யோர் பிசினஸ்" என்றபடி கடந்துச் சென்றான்...
இப்போது தான் சர்வஜித்தின் மாற்றத்தை அவதானித்தாள்...
விசித்திரமாக இருந்தது...
ஊரில் அவன் இப்படி இளக்காரமாகவோ அலட்சியமாகவோ யாரிடமும் நடக்க மாட்டான்...
நடக்க மாட்டான் என்பதனை விட நடக்க மருதநாயகம் விட மாட்டார்...
வேஷ்டி சட்டையில் பார்க்கும் போதெல்லாம் பவ்வியமாக தெரிபவனை ஜீன்ஸ் ஷேர்ட் என்று பார்க்கும் போது சற்று வித்தியாசமாக தெரிந்தான்...
அனைத்தும் முடிய ஃப்லைட்டில் ஏற காத்துக் கொண்டு இருந்தார்கள் இருவரும்...
அவன் அருகே தான் ஆதிரையாழ் அமர்ந்து இருந்தாள்.
அவளுக்கோ அவன் ஏன் இப்படி தன்னிடம் பேசுபவர்களிடம் எல்லாம் எரிந்து விழுகிறான் என்று தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது...
"என்னங்க" என்றாள்.
அவன் திரும்பவில்லை... கையில் இருந்த லேப்டாப்பில் முக்கியமான வேலை ஒன்று செய்துக் கொண்டு இருந்தாள்.
திரும்பவும் அழைத்தாள்... அவனிடம் பதில் இல்லை...
அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, சட்டென அவன் டைப் பண்ணிக் கொண்டு இருந்த கையில் கையை வைத்தாள்.
"கையை எடுடி" என்று சீறிக் கொண்டே, அவளை திரும்பி பார்க்க அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது...
அவன் ஊரில் அவளுடன் மென்மையாக நடந்துக் கொள்ளவில்லை தான்...
ஆனால் இந்தளவு உக்கிரமாகவும் நடக்கவில்லை...
இரண்டுக்கும் நடுவில் தான் அவளை கையாண்டான்...
அவளோ அவனை அதிர்ந்து பார்த்தவள், "இப்போ எதுக்கு இப்படி வித்தியாசமா நடந்துக்கிறீங்க?" என்று தழுதழுத்த குரலில் கேட்டாள்.
சட்டென சன்கிளாஸை மேலே ஏற்றி அவள் விழிகளுடன் விழிகளை கலக்கி விட்டபடி, அவளை ஆழ்ந்து பார்த்தவன், "இது தான்டி நான்" என்றான்...