அத்தியாயம் 9
அண்ணனின் உதாசீனத்தில் மனமுடைந்த விஷ்வா சாணக்கியனின் கைதுக்கு காரணமான தனது முட்டாள் தனத்தை நினைத்துக் கொண்டிருந்தான்.
**************************************************************************
அன்று சாணக்கியன் விஷ்வநாத் இருக்கும் இடத்துக்கு விரைவாக சென்றுவிட வேலை விட்டு வந்த விஷ்வா காரை எடுத்துக் கொண்டு ரகசிய இடத்துக்கு புறப்பட்டான். அங்கு இறங்கியதும் டிக்கியில் தட்டும் சத்தம் கேட்டு பதறி திறந்தவன் அதற்குள் காத்தமுத்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தான்.
மீண்டும் அவனை வீட்டுக்கு கொண்டு செல்ல போக அவனோ முரண்டு பிடிக்க தொடங்கினான்.
எரிச்சலடைந்தவன், "வா... வந்து தொலை" என்று முன்னால் நடக்க பின்னால் விஷ்வா அறியாவண்ணம் தனது பாக்கெட்டிலிருந்த டைனி கேமராவை எடுத்து ஷர்ட் பட்டனில் பொருத்திக் கொண்டான்.
ரகசிய இடத்துக்குள்ளே சென்ற சமயம் பார்த்து சாணக்கியன் விஷ்வநாத்தின் கையை வெட்ட அது அழகாக கேமராவில் பதிவு செய்யப்பட்டது. வெட்டியதும் திரும்பிய சாணக்கியன் காத்தமுத்துவை கண்டு அதிர்ச்சியடைந்தபடி, "டேய் விஷ்வா எதுக்கு இவனை கூட்டி வந்த ?" என்று சீற விஷ்வாவும் நடந்ததை கூறினான்.
"ச்ச..." என்று கத்தியை கீழே போட்டவன் காத்த முத்துவை நோக்கி வந்து அவன் கேமரா பொருத்தி இருந்த இடம் கண்ணில் பட அதை உற்று பார்த்தான்.
அவன் பார்வையை அறிந்துக் கொண்ட கெளதம் அவனை கூர்ந்து பார்க்க சின்ன பயம் கூட தெரியாத அவன் தைரியத்தை மனதில் மெச்சிய சாணக்கியன், இதழில் மெல்லிய புன்னகையுடன், "வந்த வேலை முடிஞ்சதா? போகலாமா?" என்று கேட்டபடி அவனின் தோளில் கை போட்டு அழைத்துச் சென்றான்.
கௌதமுக்கோ அவனின் செயல் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.
பல கேஸுகளை சாமர்த்தியமாக கையாண்ட கௌதமுக்கு சாணக்கியன் புரியாத புதிராக இருந்தான். அனைத்தையும் நினைத்த விஷ்வா அன்று தான் மட்டும் இப்படியான முட்டாள் தனத்தை செய்து இருக்காவிட்டால் அண்ணனுக்கு இப்படியொரு நிலை வந்திருக்காதே என்று நினைத்து மனதுக்குள் மறுகி போனான்.
கயல் விழி வேறு கௌதமுக்கு பழி உணர்ச்சி இருப்பதாக கூறியதும் விஷ்வாவுக்கு நினைவு வர கௌதமை பற்றி அறியும் பொருட்டு மித்ராவுக்கு அழைத்தவன், "என் ரூமுக்கு வா" என்றான்.
மித்ராவோ, "நான் என்ன உன் பொண்டாட்டியா நீ கூப்பிட்டதும் வர்றதுக்கு? போனை வைடா ராஸ்கல்" என்று எகிற, "இவ வேற நேரம் காலம் தெரியாம" என்று சலித்தவன் "இங்க பாரு மித்ரா எனக்கு கௌதமை பற்றி தெரியணும். எனக்கு நிறைய குழப்பம் இருக்கு. அடம்பிடிக்காம வாடி" என்று அழைக்க அவன் பேச வேண்டியதின் அவசியம் அறிந்தவள், "சரி" என்றபடி விஷ்வாவின் அறையை நோக்கி யாரும் அறியாத வண்ணம் சென்றாள்.
அறைக்குள் சென்றதும் போலீஸ் உடையில் அவளின் அழகை ரசித்தபடி சோபாவில் கால் மேல் கால் போட்டு இருந்தவன் கதவை சாத்த சொன்னான். கதவை சாத்தியவள் அவன் முன்னிருந்த கதிரையில் இருக்க விஷ்வாவுக்கோ அவளை பார்த்ததில் பேச வந்த அனைத்தும் மறந்து போனது.
அவன் எதுவும் பேசாமல் தன்னை பார்த்துக் கொண்டிருப்பது எரிச்சலை மூட்ட அவனை நோக்கி சொடக்கிட்டாள்.
அவள் சொடக்கில் தன்னிலை அடைந்தவன் தலையை உலுக்கி சமன் செய்தபடி, "கௌதமை பற்றி கொஞ்சம் தெரியணும்" என்றான்.
"எங்க பாட்ச் போலீஸ் ட்ரைனிங்ல தான் அவரை தெரியும்.அவர் தான் எங்க கோச்... ரொம்ப ஸ்மார்ட் செம ஷார்ப்" என்று அவள் கூற கடுப்பானவன், "அவன் உனக்கு அண்ணன் முறை" என்றான். அது அவளுக்கு சுவாரசியத்தை கூட்ட, "அது தான் உங்க தங்கச்சி கூட இப்போ இல்லையே...சோ அவரை நான் தாராளமா சைட் அடிக்கலாம்" என்று அவனை சீண்டி விட்டாள்.
அவள் சீண்டுவதை அறிந்தவன் எழுந்த கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தபடி, "அதை விடு... எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்?" என்று கேட்டான். அவளோ, "அது இந்த காலத்துல நடக்காது" என்றவள் எழுந்து செல்ல போக பாய்ந்து எழுந்து அவளை பின்னால் இருந்து அணைத்தவன், "வாட் அபவுட் லிவிங் டுகெதர்?" என்று கேட்க தூக்கி வாரி போட்டது அவளுக்கு.
அவனை உதறி தள்ள அவனை நோக்கி திரும்பியவளுக்கு அவனை ஒரு இன்ச் கூட தள்ள முடியவில்லை. அவன் தனக்கு வசதியாக அவளை இன்னும் அணைத்திருக்க எப்படி வெளிவருவது என்று தெரியாமல் தவித்து போனாள்.
ஒரு கட்டத்துக்கு மேல், "ப்ளீஸ் விடுங்க" என்று கலங்கிய கண்களுடன் தலையை திருப்பி கெஞ்ச சிரித்தபடியே அவளை விட்டவன், "போ" என்றான்.
அவளும் பயந்த படியே கதவை திறந்து வெளியேற அது அவன் அறையின் முன்னால் பேசிக் கொண்டிருந்த சித்ரா கண்ணிலும் கயல் விழி கண்ணிலும் பட இருவரும் அதிர்ச்சியடைந்தார்கள். அதிர்ச்சியான அவர்கள் முகத்தை பார்த்த அவளும் தர்ம சங்கடத்துடன், "அத்தை... அது வந்து..." என்று இழுக்க அவளை சினம் கொண்டு பார்த்தவர், "எத்தனை நாளைக்கு இப்படி தாலி கட்டாமல் குடும்பம் நடத்துறதா உத்தேசம் ?" என்று கேட்க மித்ரா கூனி குறுகி போனாள். வெளியில் சத்தம் கேட்டு கதவை திறந்த விஷ்வாவும் அதிர்ந்து தான் போனான்.
அவனை முறைத்தவாறே சித்ரா மேலும் தொடந்தார். "இங்க பாரும்மா இது நல்லதுக்கு இல்ல...பார்க்கிறவங்க தப்பா நினைப்பாங்க... நீ அவன் ரூமுக்கு வந்தது முதல் கல்யாணம் பண்ண முடியாது என்று சொன்ன வரைக்கும் எல்லாம் எனக்கு தெரியும்" என்றதும் அதிர்ந்து விஷ்வாவை முறைத்து பார்க்க அவனோ தான் சொல்ல வில்லை என்று தலையாட்டினான். கயலை பார்க்க அவளோ வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள். அதிலிருந்து கயலால் தான் விஷயம் போய் இருக்கிறது என்று அறிந்துக் கொண்டாள். மேலும் தொடர்ந்தவர், "இதுக்கு மேல உங்க ரெண்டு பேரையும் விட்டு வச்சா குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வைப்பீங்க. உங்க அம்மா அப்பாகிட்ட பேசி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண இருக்கிறேன். அதுக்கு நீ மறுப்பு சொல்ல மாட்டனு நம்புறேன்" என்றவர் அவ்விடத்தை விட்டு நகர புன்னகை மன்னனாக நின்ற விஷ்வாவை முறைத்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்ட மித்ராவுக்கு முன்னாடியே செய்தி அனைத்தும் அனைவர் காதையும் எட்டி இருந்தது.
செய்தியை ஏற்கனவே அறிந்த விருத்தாச்சலம் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை. ஆனால் வசுந்தராவும், லக்ஷ்மியும் அவளை லெப்ட் ரைட் வாங்கி விட்டார்கள். "அப்பா நீங்க இதெல்லாம் கேட்கமாட்டீங்களா?" என்று வசுந்தரா கடைசியாக எகிற எழுந்த விருத்தாச்சலம், "எனக்கு ஏற்கனவே விஷ்வா எல்லாம் சொல்லிட்டான்மா. அவனும் இவளை கட்டிக்க முடிவா இருக்கிறான். உன் தங்கச்சி தான் உன் வாழ்க்கைக்காக அவனை கல்யாணம் பண்ணிக்க மாட்டாளாம்." என்று கூற அனைவரும் மித்ராவை பார்க்க அவளுக்கோ அவமானமாக இருந்தது. 'அப்பா கிட்ட எத சொல்றதுன்னு ஒரு விவஸ்தை வேணாமா?' என்று மனசுக்குள் விஷ்வாவை திட்டியவள், "கல்யாணத்துக்கு சம்மதமப்பா" என்றபடி யாரையும் பார்க்காமல் தனது அறைக்குள் சென்று அடைந்துக் கொண்டாள்.
அன்று முழுக்க சாணக்கியன் தனது அறையை விட்டு வெளி வரவில்லை.
அடுத்த நாள் எழுந்தவன் யாருடனும் பேசாமல் ஏதோ யோசனையிலேயே இருந்தான். யார் கேள்விக்கும் பதில் சொல்லாமல் இருக்க நடந்ததை பற்றி மகாலிங்கம் டிபார்ட்மெண்டில் விசாரித்தபோது விஷ்வநாத் கேஸ் பற்றி எந்த ஆதாரமும் இல்லை எனவும் யாரும் கைது செய்ய படவில்லை எனவும் சொல்ல பட்டது. இதெப்படி சாத்தியம் என்று யோசித்த அனைவரும் அதிர்ந்து போனார்கள்.
மேலும் கொலைக்கான தடயங்கள் முற்றாக அழிக்கபட்டிருந்தது.
அது சந்தோஷமான விஷயமாக இருந்தாலும் நடந்தது என்ன என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை விருத்தாச்சலம் உட்பட. அதில் அதிகமாக சந்தோஷப்பட்ட கயல்விழி கெளதமை மேலும் எரிச்சல் படுத்துவதற்காக அவன் நம்பரை தேடி அழைத்திருந்தாள்.
ஆஃபிஸில் இருந்தவன் கயல்விழி எண்ணை பார்த்ததும் அவள் எதுக்காக அழைக்கிறாள் என்று யூகித்தவன் அவள் அழைப்பை துண்டிக்க அவளோ மேலும் மேலும் அழைத்தாள்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவள், "என்ன SP என்னோட பேச அவமானமா இருக்கா?" என்று குறுஞ்செய்தி அனுப்ப அதை திறந்தவன் கேலியாக புன்னகைத்தபடி, "பேசணும்னா என் ஆபீஸ்க்கு நேரில் வா..." என்று பதிலனுப்ப அவளுக்கோ இருப்பு கொள்ளவில்லை.
அவனை எப்படியாச்சும் அவமானப்படுத்த வேண்டுமென்ற வெறியில் வண்டியை எடுத்துக் கொண்டு அவன் அலுவலகத்தை நோக்கி புறப்பட்டாள்.
அவள் வருவதை சிசிடிவி யில் அறிந்தவன் மெலிதாக புன்னகைத்தபடி லாப்டாப்பில் வேலையாக இருந்தான்.
அவன் அறைக்குள் வந்தவள் அவனை கேட்காமலே அவன் முன்னால் உட்கார்ந்த போதும் அவனோ அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
"என்ன சார் எங்களை பார்த்து பயந்துட்டீங்க போல" என்று நக்கலாக அவள் கேட்க லாப்டாப்பை மூடிவிட்டு நிமிர்ந்தவன், "எனக்கா ??? பயமா? அதுவும் உங்கள பார்த்து" என்று சத்தமாக சிரித்தவன், "சில்லி கேர்ள்" என்றான்.
அவன் சிரிப்பு சினத்தை மூட்ட, "பெருசா நான் தான் புடிச்சேன் நான் தான் புடிச்சேன்ன்னு மார் தட்டினீங்களே. இப்போ எல்லாம் புஸ் வானம் ஆயிடுச்சே" என்றாள் இளக்காரமாக.
அவனோ அதுக்கும் சத்தமாக சிரித்தபடி, "என்னம்மா பண்றது? விதி வலியது..." என்றான்.
அவன் கலங்காமல் நின்றது அவளுக்கு கோபத்தை கொடுக்க, "உங்களுக்கு கொஞ்சம் கூட கவலை இல்லையா?" என்று அவனை அவமானப் படுத்த முடியவில்லை என்ற இயலாமையுடன் கேட்டாள்.
"இல்லையே" என்றவனிடம், "ஏன்?" என்று புருவம் சுருங்க கேட்டாள். "உங்க அண்ணன் ஒண்ணும் சொல்ல வில்லையா?" என்று கேட்க இல்லை என்று அவள் தலையாட்டினாள்.
பெருமூச்செடுத்தவன், "உங்க அண்ணன் மேல நான் கேஸ் போடல" என்றவன் நெற்றியை தேய்த்தபடி, 'நீ கேட்டால் மட்டும் எப்படி தான் என் வாயில இருந்து எல்லாம் வருதோ' என்று மனசுக்குள் நினைத்தவன், "அவ்வளவு தான்" என்றான்.
அவளோ அவனை சந்தேகமாக பார்த்து, "விழுந்தாலும் மீசைல சிலருக்கு மண் ஒட்டாது" என்று நக்கலாக கூற அவனோ சலித்தபடி, "என்னால முடியலடி... கடுப்படிக்காம போடி" என்றான். அவனின் உதாசீனம் கோபத்தை கிளப்ப, "நான் பேசும் போது நல்லா குத்துதா? குத்தட்டும்" என்றவளை விசித்திரமாக பார்த்தவன், "நீ மனோதத்துவ டாக்டர் தானா ? இல்லை உனக்கும் பைத்தியமா?" என்று கேட்க சினமும் கவலையும் ஒரு சேர, "நான் பைத்தியம் தான்... உங்க மேல அவ்வளவு நம்பிக்கை வைத்தேன் பாருங்க நான் பைத்தியம் தான். நீங்க மன நிலை சரி இல்லாம நடிச்ச போது உங்க நிலைய கூட கருத்திலே கொள்ளாமல் உங்கள காதலிச்சேன் பாருங்க நான் பைத்தியம் தான். நீங்க அவ்வளவு துரோகம் செய்தும் இப்போ கூட உங்கள முழுசா வெறுக்க முடியாம உங்கள பார்க்க என் மனசு துடிக்குது பாருங்க நான் பைத்தியம் தான்...எனக்கும் ஆசை, கனவு இருக்கும் தானே? ஒரே ஒரு கல்யாணத்தினால் என் வாழ்க்கையையே சிதைச்சிட்டீங்களே.!" என்றவள் தன்னை அறியாமல் மனதிலுள்ள அனைத்தையும் கொட்டி விட்டு ஏங்கி ஏங்கி அழுதாள்.
அவள் கூறியது அவனுக்கு அதிர்ச்சியாகவும் ஆனந்தமாகவும் இருந்தது. அவளை அணைத்து ஆறுதல் சொல்ல விளைந்த உணர்ச்சிகளை அடக்கியபடி கையாளாக தனத்துடன் தாடையில் கை குற்றி பரிதாபமாக அவளை பார்த்துக் கொண்டிருந்தான். நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் இரு உள்ளங்கள் அங்கு தத்தளித்தன.
அவளுடனான காதல் அவன் குறிக்கோளுக்கு தடை என்று அறிந்தவன் மனம் தவித்துக் கொண்டிருந்தது. கண்ணை துடைத்தவள் நிமிர்ந்து பார்க்க அவன் ஒன்றும் சொல்லாமல் தாடையில் கை குற்றி இருக்கும் தோரணை எரிச்சலை உருவாக்க, "மனுஷனா நீ... மிருகம்... நான் அழுறத கை குற்றி ரசிச்சிட்டு இருக்கியா? ராட்சசன் நீ..." என்று திட்டியவளை பார்த்து மெலிதாக புன்னகைத்தான். அவன் புன்னகை அவளுக்கு கொலை வெறியை கொடுக்க எழுந்தவள் மேசையிலிருந்த லத்தியை எடுத்து அவன் தோளில் பலமாக ஒரு அடி விட்டதும், "ஆ..." என்று கத்தியவன் எழும்பி அவளை பிடிக்க போக லத்தியை போட்டு விட்டு கதவை திறந்து வெளியில் ஓடிவந்தாள்.
அவள் செல்வதை பார்த்து சிரித்தவன் மனசில் ஒரு சேர சந்தோஷமும் வேதனையும் குடி கொள்ள தலையை கோதியபடி அவள் விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் முதல் முறை வாழ்க்கையில் தடுமாறினான்.
இதே சமயம் சாணக்கியன் குடும்பத்தினர் அனைவரையும் தவிர்த்து தனது அலுவலக வேலையில் மட்டும் ஈடுபட்டான். அவனின் ஆக்ரோஷத்துக்கு பயந்து விஷ்வா கூட அவனிடம் நெருங்க பயப்பட்டான்.
நாட்கள் உருண்டோட தொகுதியில் சில அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு அனைத்து அரசாங்க உயர் அதிகாரிகளுக்கும் சாணக்கியன் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது.
வசுந்தராவும் கூட்டத்தில் கலந்துக் கொண்டாள். கோப்புகளை ஒவ்வொன்றாக பிரித்த போது கொடுக்கபட்ட வேலை அவள் பகுதியில் முடிக்காமல் மீதமிருந்ததை அறிந்தான்.
அவனுக்கு அவளுடைய உடல் நிலை மன நிலை தான் அனைத்து அலுவலக வேலைகளுக்கும் தடங்கல் என்று தெரிந்தாலும் அவளிடம் கேள்வி கேட்க வேண்டியது அவனின் கடமை என்பதால் கோப்பை தூக்கி மேசையில் போட்டவன் அவளை பார்த்தான்.
வேலை முடிக்காததால் மனதில் கொஞ்சம் பயம் தோன்றினாலும் அதை மறைத்தபடி தைரியமாக அவன் முன்னால் இருக்க, அவனோ சுழல் நாற்காலியில் சாய்ந்து இருந்தபடி ஒரு கையை கதிரையில் குற்றி மற்றைய கையால் தாடையை தடவியவாறு அவளை சிறிது நேரம் கூர்ந்து பார்த்தவன் திடீரென, "மிஸிஸ் வசுந்தரா சாணக்கியவர்மன்" என்ற அழைப்பில் அவள் மனம் கொஞ்சம் அடித்துக் கொள்ள அதை மறைத்தவாறு அவனை நிமிர்ந்து பார்த்து, "சார்" என்றாள்.
"உங்களுக்கு முடியாவிட்டால் ஏற்கனவே சொல்லி இருக்க வேண்டும்... பொறுப்பை எடுத்தால் முடிக்க பாருங்க. ஏன் உங்களால இதை முடிக்க முடியவில்லை?" என்று கணீர் குரலில் அழுத்தமாக கேட்க கொஞ்சம் பயந்தவள் அதை காட்டிக் கொள்ளாமல், "சார் நான் கர்ப்பமாக இருப்பதால் நீங்கள் குறிப்பிட்ட சில இடங்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலை, அதனால்..." என்று தொடர வந்தவளை கை நீட்டி தடுத்தவன், "உங்கள் விருப்பு வெறுப்புக்கு இங்கு இடமில்லை. அடுத்த கூட்டத்துக்கு முதல் அனைத்து வேலைகளும் எனக்கு முடிக்கப் பட்டிருக்க வேண்டும்" என்று கறார் குரலில் கூறியவனை அடிபட்ட பார்வை பார்த்தவள், 'கல் நெஞ்ச காரன்' என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டாள்.
சில பல அறிவுரைகளும் கண்டிப்புகளும் வழங்கிய பிறகு கூட்டம் கலைய மேடிட்ட வயிற்றுடன் வெளியேற எழும்பியவளை கதிரையில் சாய்ந்து இருந்தபடி, "வசுந்தரா" என்று அழைத்து அருகில் வரும்படி கூப்பிட, 'இன்னும் என்ன குண்டு போட போகிறானோ?' என்று பதறியபடி அவனை நோக்கி வந்தவள் கொஞ்சம் தள்ளி நின்றாள்.காட்டன் சாரியில் மேடிட்ட வயிற்றுடன் தலையை கொண்டை போட்டிருந்தவள் நெற்றி வகிட்டில் குங்குமம் தாலி என மகாலட்சுமி போல இருந்தவளை மேலிருந்து கீழ் பார்த்தவன் முதல் முறை அவள் அழகை ரசித்தான்.
அவன் பார்வை அவளை என்னமோ செய்ய அவனை பார்க்க முடியாமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
அவளை நோக்கி சொடக்கிட்டவன், அவள் அவனை பார்த்ததும் தனக்கருகில் உள்ள இருக்கையில் இருக்க சொல்லி கை காட்டினான் .
அவளோ, "பரவாயில்லை." என்று கூற வாயெடுத்தவள் அவனின் முறைப்பில் சர்வ நாடியும் ஒடுங்க அவன் காட்டிய இடத்தில் இருந்து கொண்டாள் . அப்போது தான் கவனித்தாள் அவனின் பாதுகாப்பு படை உட்பட அனைவரையும் வெளியேறி இருக்க இருவர் மட்டும் உள்ளே இருப்பதை.
அவனுக்கு இதுவரை இருந்த இறுக்கம் மனையாளை கண்டதும் குறைந்ததை நினைத்து அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. அவள் அருகாமையை தனது மனம் முதல் முறை விரும்புவதை நினைத்து வியந்து போனான்.
என்ன பேச போகிறானோ என்று மனம் தவித்தாலும் அதை காட்டிக் கொள்ளாது, "என்ன விஷயம்?" என்று கேட்க அவளை கூர்ந்து பார்த்தவன், "ஏன் கலெக்டர் மேடம் உங்களுக்கு கஷ்டம் என்றால் உங்க கணவரிடம் கேட்டால் கண்டிப்பா உதவி செய்வாரே இந்த வேலை எல்லாம் முடிப்பதற்கு..." என்றான் தான் உதவி செய்ய தயார் என்பதை மறை முகமாக சுட்டி காட்டி.
அவன் சொன்னது அதிர்ச்சியை தந்தாலும் அவனின் செயலால் பாதிக்கப்பட்ட மனம் அவனுக்கு திரும்ப பதிலடி கொடுக்க வேண்டும் என சொன்னது.
உடனே அவனை அழுத்தமாக பார்த்தபடி, "அதெல்லாம் சரி வராது சார்... அதுக்கு பல காரணங்கள் இருக்கு முதலாவது எனக்கு என் வேலையை அடுத்தவர் தலையில் கட்டுவது பிடிக்காது மற்றும் குடும்பம் வேற வேலை வேற" என்றவளை புருவம் உயர்த்தி மெச்சுதலாக பார்த்தான்.
மேலும் தொடர்ந்தவள், "என் கணவருக்கு என்னை விட நிறைய வேலை இருக்கு. முக்கியமாக அவர் நிழல் உலக வேலை." என்று நிழல் உலகத்தில் ஒரு அழுத்தம் கொடுத்தாள்.
அதுவரை சிரிக்காமல் இருந்தவன் உதட்டில், அவள் கதையை ரசிப்பதற்கு அடையாளமாக ஒரு மெல்லிய புன்னகை உதிர்த்தது.
அவன் சிரித்ததை கண்டு கொண்டவளுக்கு ரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிற, "எல்லாத்துக்கும் முக்கியமாக நான் அவருடன் இல்லை... அவருக்கு என்னோடு வாழ விருப்பமில்லை என்று என்னை வீட்டை விட்டு அனுப்பி விட்டார்" என்றவளை புன்னகை தொலைத்து புருவம் இடுங்க பார்த்தவன், "நான் அறிந்தவரை உங்களுக்கு தான் அவருடன் வாழ விருப்பமில்லை என்று முதலில் சொன்னதாக ஞாபகம்... முக்கியமாக அவர் தொட்டால் உங்களுக்கு அருவருப்பாக இருக்கும் போது எப்படி உங்களோடு அவர் வாழ முடியும்?" என கேட்டதும் கொஞ்சம் ஆடி போனவள் தழு தழுத்த குரலில், "பல கொலை செய்த கையால் என்னை தொட்டால் அருவருக்க தான் செய்யும்... மற்றபடி அந்த அருவருப்பு அவரை பிடிக்காமல் வந்ததல்ல" என்றாள் மெல்லிய குரலில் தலையை குனிந்தபடி.
அவள் முகத்தை தனது விரல் கொண்டு நிமிர்த்தியவன் அவள் கண்களுடன் தனது கண்களை கலக்க விட்டபடி, "திரும்ப திரும்ப சொல்றேன் நான் கொலை செய்த எவனும் நல்லவன் இல்ல... கடைசியாக செத்த விஷ்வநாத்தையும் சேர்த்து" என்றான் சற்று கடினமாக.
அவன் கண்களில் என்ன கண்டு கொண்டாளோ முதல் முறை அவனை பார்த்து, "எனக்கும் சில ஆசைகள் இருக்கு" என்றாள்.
புருவம் இடுங்க அவளை விட்டு விலகி தனது கதிரையில் சாய்ந்தவன், "என்ன ஆசையோ?" என்றான் கேள்வியாக.
அப்போது தான், 'என்ன உளறல் இது?' என்று மனசுக்குள் தன்னை தானே கடிந்தவள், "ஒண்ணுமில்ல சாரி" என்றபடி எழ போனவளை சுழல் நாற்காலியில் நெருங்கியவன் அவள் கதிரையில் இருபக்கமும் கைகளை வைத்து, "சொல்லாமல் உன்னை விடமாட்டேன்" என்றான். இருவரின் முழங்கால்களும் உரச அவன் நெருக்கம் அவளை பாடாய் படுத்தியது.
சற்று தடுமாறியவள், "நீங்க கொலை பண்ண கூடாது" என்றாள். "அப்புறம்" என்றவனிடம், "அவ்வளவு தான்... என்னை விடுங்க ப்ளீஸ்" என்றவளிடம் இல்லை என்று தலை ஆட்டியவன், "சில என்று சொல்லிட்டு ஒன்றை மட்டும் சொன்னால் எப்படி?" என்றான்.
அவளுக்கோ ஏன் தான் வாயை திறந்தோமோ என்பது போல் இருந்தது. "இப்போ சொல்லா விட்டால் நான் உன்னை விடமாட்டேன்" என்றவனை தள்ளி விட்டு போக கூட அவள் உடல் இடம் கொடுக்கவில்லை.
மனதில் சினம் மூல, "சொன்னால் மட்டும் செய்து கிழிச்சிருவீங்க பாருங்க" என்றவளிடம், "நீ சொல்லு கிழிக்கிறதை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றான்.
பொறுமை இழந்தவள் அவனை கூர்ந்து பார்த்தபடி, "நான் உங்களை காதலுடன் தான் கல்யாணம் பண்ணினேன். ஆனால் நீங்களோ கடமைக்கு வாழ்ந்தீங்க. உங்க அணைப்பிலோ உங்கள் நெருக்கத்திலோ கொஞ்சம் கூட காதல் இருக்கல. இந்த குழந்தை கூட உங்கள் நேரம் தவறாத கடமைக்கு கிடைத்த பரிசு... கடைசியாக கூட நீங்க சொன்னீங்க உங்களுக்கு குழந்தை வேணும்னு... அப்போ தான் உங்க மனசில் என் இடம் என்னன்னு தெரிந்தது" என்றாள் கண்களில் கண்ணீர் வழிய. அவள் கண்ணீர் அவன் மனசை மேலும் அசைக்க தான் அதுவரை செய்த தவறை நினைத்து முதன் முதலில் மனதுக்குள் வருந்தியவன், அவள் கண்ணீரை துடைக்க போக, "ஒன்றும் வேண்டாம்" என்று அவன் கையை தட்டி விட்டாள்.
அவள் கோபம் அவனுக்கு சிரிப்பை அளிக்க, "எனக்கு நீ சொன்ன முதல் ஆசை நிறைவேறுமா தெரியவில்லை... கண்டிப்பா இனி சில கொலைகள் செய்ய வேண்டி வரும்" என்று யோசனையாக சொன்னவனை அடிபட்ட பார்வை பார்த்தாள்.
"ஆனால் இப்போ சொன்னது எனக்கு முடியும்... உன்ன லவ் பண்ணனும் அவ்வளவு தானே... பண்ணிட்டா போச்சு" என்று அவன் கண்ணடிக்க அவளுக்கு சினம் தான் அதிகரித்தது.
"நீங்க கொலை பண்ணிக்கோங்க என்ன விடுங்க நான் போகணும்" என்றவளை பார்த்தவன், "அதென்னடி நான் லவ் பண்றேன்னு சொன்னது உன் மண்டைல ஏறவே இல்லையா? கொலையிலேயே வந்து பிடிச்சிட்டு தொங்குற?" என்று ஆதங்கமாக கேட்டான்.
"நடக்காததை பற்றி நான் எதுக்கு பேச" என்று எழும்ப போனவளை தோள் பிடித்து எழுப்பி விட்டவன் அவள் போவதை கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியபடி பார்த்துக் கொண்டிருந்தான் வாசலுக்கு சென்றவளிடம், "ஓய்... இனி உன் சாணக்கியன் காதல் மன்னன்டி" என்றவனை திரும்பி முறைத்தவள் அடுத்த கணம் வெளியேறி இருந்தாள்.