ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 9

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 9

இதே சமயம் ரத்னமோ அறைக்குள் யோசனையுடன் அமர்ந்து இருந்தார்.

ஜெயா நடந்துக் கொண்டதை அவரால் சட்டென கடந்து விட முடியவில்லை...

எதிர்பார்த்த விஷயம் தான் என்றாலும் ஒரு நெருடல் இருந்தது...

தேவ் சமாளிப்பான் என்கின்ற நம்பிக்கை இருந்தது...

தன்னை நிதானப்படுத்த சற்று நேரம் கட்டிலில் கண் மூடி சாய்ந்து படுத்துக் கொண்டார் ரத்னம்...

பத்மாவோ அறைக்குள் இருந்து வெளியே வந்தாள்.

ஹாலில் அமர்ந்து துர்காவும் வள்ளியம்மாவும் அன்று மதிய உணவுக்காக காய்கறிகளை வெட்டிக் கொண்டு இருக்க, அவர்கள் அருகே வந்து அமர்ந்தவளோ, "இனி தான் காலை சமையலா பாட்டி?" என்று கேட்டுக் கொண்டே, அவளும் காய்கறிகளை வெட்ட எடுக்க, "நீ சும்மா இரு புள்ள, நாங்க பார்த்துக்கிறோம்... களைச்சு போய் இருப்ப" என்று சொல்லி அவள் கையில் இருந்த வெண்டைக்காயை பிடுங்கிக் கொள்ள, அவரது வெளிப்படையான பேச்சில் அவளுக்கு சற்று சங்கடம் உண்டானது உண்மை தான்...

துர்கா வேறு சிரிப்பை அடக்கிக் கொண்டே காய்கறிகளை வெட்ட, வள்ளியம்மாவோ, "காலைல உப்புமா செஞ்சு இருக்கு... போய் சாப்பிட்டு வா" என்று சொல்ல, "அவரும் வரட்டும்" என்றாள் பத்மா...

அவளுக்கே தானா இப்படி பேசுவது என்று அதிர்ச்சி இருந்தது...

தேவ் வரும் வரை சாப்பிடாமல் இருக்க நினைத்து இருக்கின்றாள்...

'ச்ச, நம்மளும் ஒரே நாளுல டிபிக்கல் பொண்டாட்டி ஆயிட்டோம் போல' என்று நினைத்துக் கொண்டாள்.

தேவ்வும் குளித்து விட்டு, வேஷ்டி மற்றும் சிவப்பு நிற டீ ஷேர்ட்டை அணிந்தவன் பத்மாவை தேடினான்...

அவள் அறைக்குள் இல்லை...

இன்னும் அவன் உணர்வுகள் அடங்கிய பாடு இல்லை...

அவள் வேண்டும் என்று மீண்டும் மீண்டும் தோன்றிக் கொண்டே இருந்தது.

இப்படி பத்மா மீது கட்டுக்கடங்காத மோகம் தோன்றும் என்று அவன் கனவிலும் நினைத்தது இல்லை...

கண்களை மூடி தன்னை நிலைப்படுத்திக் கொண்டே அறைக் கதவை திறந்து ஹாலுக்குள் வந்தான்.

காய்கறிகளை வெட்டிக் கொண்டு இருந்த வள்ளியம்மா அருகே அமர்ந்து இருந்தாள் பத்மா...

அப்போது அறைக்குள் இருந்து வந்த தேவ்வின் விழிகள் பத்மாவில் படிய அவள் அருகே வந்து நெருங்கி அமர்ந்தான். சட்டென பத்மா அவனை திரும்பி பார்க்க, "குளிச்சிட்டேன் டி" என்றான் இதழ் பிரித்து...

அவளும் எதுவும் சொல்லாமல் வள்ளியம்மாவை பார்த்தவள், "அப்புறம் ஏதும் பழைய கதை சொல்லுங்க பாட்டி" என்று சொல்ல, அவரோ, "இந்த பயலை பத்தி தான் சொல்லணும்" என்று சொல்ல அங்கே இருந்த துர்கா பக்கென்று சிரித்து விட்டாள்.

"இவ ஒருத்தி" என்று முணுமுணுத்த தேவ்வோ, "ஒரு காஃபி துர்கா" என்று சொல்ல அவளும் சமையலறைக்குள் சென்று விட, "இப்போ எதுக்கு என்னை பத்தி பேசிட்டு இருக்கீங்க??" என்று கேட்டான்.

"உன்னை பத்தி தானே டா உன் பொண்டாட்டி கிட்ட பேச முடியும்" என்று சொல்ல, அவனை ஒரு கணம் பார்த்து, "அப்படி என்ன கதை??" என்று கேட்டாள்.

வள்ளியம்மாவோ சிரித்துக் கொண்டே, "இவனுக்கு ஒரு மூணு வயசு இருக்கும்... மோசமான பையன்... பொண்ணுங்கள கண்டாலே குதூகலமாயிடுவான்" என்றார்.

"மூணு வயசிலேவா??" என்று பத்மா கேட்க, அவர் என்ன சொல்ல போகின்றார் என்று அறிந்த தேவ்வோ, "பாட்டி ப்ளீஸ் இதெல்லாம் சொல்லாதீங்க" என்றான் அவசரமாக.

அவனிடம் தான் பல தடவைகள் சொல்லி அவர் சிரித்து இருக்கின்றார் அல்லவா.

வள்ளியம்மாவோ, "உன்னோட சில்மிஷம் உன் பொண்டாட்டிக்கு தெரிய வேணாமா?" என்று கேட்க, "சில்மிஷமா ??" என்று பத்மா ஆர்வமாக கேட்க, "அத கேக்கிறதுல உனக்கென்ன ஆர்வம்??" என்று பத்மாவிடம் கேட்டான்.

"நான் அப்படி தான் கேட்பேன்" என்று சொல்லிக் கொண்டே, "பாட்டி நீங்க சொல்லுங்க" என்று கேட்டாள்.

"பாட்டி ப்ளீஸ் சொல்லாதீங்க" என்று முடிக்க முதலே அவர், "பொம்பளைங்கள கண்டா போதும் ஓடி போய் உதட்டுல முத்தம் கொடுப்பான். ஜாக்கெட்டுக்குள்ள கைய விடுவான்..." என்று சொல்ல அவனோ இதழ்களை கடித்துக் கொண்டே பின்னந்தலையை தர்மசங்கடத்துடன் வருட அவனை பக்கவாட்டாக திரும்பி ஆழ்ந்து பார்த்தவள், "இப்போ தான்னு நினைச்சேன், அப்போவேயா ??" என்று கேட்டாள்.

"ஏய்" என்று அவளை அதட்டிக் கொண்டே நிமிர்ந்து பார்த்தவனோ, வள்ளியம்மாவிடம், "இப்போ இதெல்லாம் ரொம்ப முக்கியமா??" என்று கேட்க, அவரோ சிரித்தபடி, "இன்னும் கேளு புள்ள அவன் அம்மா தான் அடிச்சு அடிச்சு திருத்தி வச்சா... உடுப்பு போடவே மாட்டான் ... பின்னாடியே காற்சட்டையை தூக்கிட்டு ஓடணும்" என்று சொல்ல, "பாட்டி" என்று பற்களை கடித்துக் கொண்டே சீறியவனோ, இரு கைகளாலும் முகத்தை அழுந்த தேய்த்து விட்டு நிமிர பத்மா அவனையே அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தாள்.

"இப்போ என்னடி ??" என்றான் அவன் அதட்டலாக...

ஒன்றும் இல்லை என்கின்ற ரீதியில் தலையை ஆட்டியவளோ அடக்க முடியாமல் சிரித்து விட, "இப்போ எதுக்கு சிரிக்கிற?? நீயும் இப்படி தான் இருந்து இருப்ப" என்று அவளை உறுத்து விழித்தபடி சொல்ல அவளோ கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டே, "எங்களுக்கு மூணு வயசோட முடிஞ்சு போச்சு... உங்களுக்கு முப்பது வயசு வரை தொடருது..." என்றாளே பார்க்கலாம்.

அவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தவன், "ஹெலோ நான் முழுசா ட்ரெஸ் பண்ணி தான் இருக்கேன்" என்று தனது வேஷ்டியையும் டீ ஷேர்ட்டையும் பார்த்தபடி சொல்ல, "நான் இத மட்டும் சொல்லல... பொண்ணுங்கள பார்த்தா குதூகலம் ஆகுறத பத்தி பேசுறேன்" என்றாள்.

அவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தபடி நெருங்கி அமர்ந்தவன், "பொண்ணுங்களன்னு பன்மைல சொல்லாதே... பொண்டாட்டியை பார்த்தானு ஒருமைல சொல்லு" என்று சொல்ல, அவளோ அவன் நீல நிற அவளை வாரி சுருட்டும் விழிகளை நோக்க முடியாமல் பார்வையை வள்ளியம்மாவை நோக்கி திருப்பி இருந்தாள்...

அதே கணம், துர்காவும் காஃபியுடன் வந்து இருக்க, அதனை வாங்கிக் குடித்தவனோ, "பத்மா நீ குடிக்கலையா?" என்று கேட்க, "பாவம் துர்கா, திரும்ப காஃபி போடணும்... நான் சாப்பிட்டுக்கிறேன்" என்றாள்.

புதுமையாக இருந்தது அவனுக்கு...

அவள் மேனியை தாண்டி, மனதை முதல் முறை அறிய முற்படுகின்றான்...

அவள் இப்படி சொன்னதுமே இதழ்களில் ஒரு புன்னகை...

காஃபி கப்பை அவளை நோக்கி நீட்டியவன், "எனக்கு போதும், நீ குடிச்சுக்கோ" என்றான்...

அவனை பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தவளோ, "ஐயோ வேணாம்" என்று சொல்ல, "குடிச்சுக்கோன்னு சொல்றேன்ல" என்றான் அழுத்தமாக...

"ம்ம்" என்று சொல்லிக் கொண்டே, அதனை வாங்கி பருகினாள்...

அவன் இதழ் பட்ட இடத்தில் இதழ் வைத்து பருகியவளுக்கு ஒரு வித கிளர்ச்சி...

அவள் மனமோ, 'அவன் தான் காஜியா இருக்கான்னா, நீயும் ஏன் டி இப்படி இருக்க' என்று தனக்கு தானே கேட்டும் கொண்டாள்.

அதனை தொடர்ந்து கொஞ்ச நேரத்தில், "அப்பா சாப்பிட்டாரா?" என்று வள்ளியம்மாவிடம் கேட்க, "எல்லோரும் சாப்பிட்டாச்சு, நீங்க ரெண்டு பேரும் தான் மீதி" என்று சொல்ல, "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே, பத்மாவை பார்த்தவன், "சாப்பிடலாமா?" என்று கேட்க, "ம்ம்" என்றாள்.

ஒன்றாக டைனிங் அறைக்குள் நுழைந்தார்கள்...

சமையலறையுடன் சேர்ந்த அறை தான்...

சற்று தனிமையும் கிடைக்கும் இடம் தான்...

மேசையில் உணவுகள் இருக்க, முதலில் அமர்ந்த தேவ்வோ, தட்டை திருப்பி வைத்துக் கொண்டே, பத்மாவைப் பார்த்தவன், "உட்காரு" என்று சொல்ல, அவளோ, "தண்ணி எடுத்து வர்றேன்" என்று சொல்லிக் கொண்டே, சமையலறைக்குள் சென்றவள், நீரை எடுத்து வந்து குவளைகளில் ஊற்றிக் கொண்டு இருந்தாள்.

தேவ் அருகே அவள் நெருங்கி நின்று இருக்க, புடவையூடு தெரிந்த அவள் வெற்றிடை அவன் முகத்துக்கு அருகே இருக்க, அதனை பார்த்தவனுக்கு முதல் நாள் நினைவுகள் சுழல ஆரம்பித்தன...

கஷ்டப்பட்டு அடக்கி இருந்த உணர்வுகளும் சற்று மேலெழுந்து விட, அவனோ, எம்பி, அவள் இடையில் பற்களை பதித்து இருக்க, "ஐயோ" என்று பதறிக் கொண்டே விலகி நின்றாள் பெண்ணவள்...

அவள் கத்திய சத்தம் கேட்டு அங்கே வள்ளியம்மாவும் துர்காவும் ஓடி வந்து இருக்க, தேவ்வோ, 'நாசமா போச்சு' என்று நினைத்துக் கொண்டே, உணவை தட்டில் எடுத்து வைத்துக் கொண்டே அவளை ஏறிட்டுப் பார்க்க, அவளோ, புடவையை சரி செய்து இடையை மறைத்தபடி அவனை முறைத்து விட்டு, வள்ளியம்மாவை பார்க்க, "என்னாச்சும்மா?" என்று அவர் கேட்டார்.

"ஒன்னும் இல்ல பாட்டி, கட்டெறும்பு" என்று சொல்ல, தேவ் அடக்கப்பட்ட சிரிப்புடன் சாப்பிட ஆரம்பித்து விட, "பார்த்தும்மா" என்று சொல்லிக் கொண்டே, அவரும் துர்காவும் வெளியேறி விட்டார்கள்...

அவர்கள் சென்றதுமே, "எதுக்கு இப்படி பண்ணுனீங்க?" என்று ரகசியமான குரலில் திட்டியபடி அவன் அருகே அமர, அவளை பக்கவாட்டாக பார்த்தவன், "என்னை பார், என் அழகை பார்னு பக்கத்துல வந்து நின்னா நான் என்ன பண்ணுறது?" என்று கேட்டான்.

"நான் எங்க அப்படி நின்னேன்?" என்று கேட்க, "இப்போ எதுக்கு நீ லோ ஹிப்ல சாரீ கட்டி இருக்க? என்னை டெம்ப்ட் பண்ணனும்னு தானே?" என்று கேட்டான்.

"வழக்கமா ஊசி குத்துவேன்... நேத்து ஊசி எல்லாம் நெளிஞ்சு போயிடுச்சு... அது தான்" என்று கடுப்பாக சொல்ல, "சரி சாப்பிடு" என்றான்...

அவனை முறைத்துக் கொண்டே அவள் அமர்ந்து இருக்க, "என்னடி?" என்று கேட்டான்...

ஒற்றை விரலை நீட்டியவன், "இனி இப்படி பண்ணுனா நடக்கிறது வேற?" என்று சொல்ல, "என்ன பண்ணுவ?" என்று கேட்டுக் கொண்டே, அவள் தாடையை ஒற்றைக் கையால் பற்றி கண நேரத்தில் இதழில் இதழ் பதித்து விலகியவன் சாப்பிட ஆரம்பிக்க, "தேவ்" என்று கோபமாக சிணுங்கிக் கொண்டே இதழ்களை புறங்கையால் துடைத்தவள், "யாரும் பார்த்து இருந்தா?" என்று கேட்டாள்.

"பேசிட்டே இருந்தா, திரும்ப திரும்ப கிஸ் பண்ணிட்டே இருப்பேன்... சாப்பிடு" என்றான்...

அவளும் கடுப்புடன் உணவை சாப்பிட தொடங்கியவளோ, 'ரொம்ப தான் என்னை படுத்துறான்' என்று நினைத்துக் கொண்டாள்.

சாப்பிட்டு முடித்ததுமே, ஹாலில் வந்து தேவ் டி வி பார்க்க ஆரம்பித்து விட, பத்மாவோ, வள்ளியம்மா மற்றும் துர்காவுடன் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்து இருந்தாள்.

தேவ்விற்கு அறைக்குள் சென்றாலே, அவள் எண்ணம், அவள் வாசம்...

இந்த உணர்வை அடக்கி விட வேண்டும் என்று நினைத்தாலும் முடியவில்லை...

அவனை மேலும் கிளர்ந்தெழ செய்வது போல, அவள் செய்கையும் இருந்தது...

புடவையை இழுத்து இடையில் சொருகியவளோ, ஹாலில் கொட்டி இருந்த குப்பையை கூட்டி அள்ள, அவன் நீல விழிகளுக்குள் அவளை சுருட்டிக் கொண்டவன் பெருமூச்சு ஒன்றையும் விட்டுக் கொண்டான்...

அவன் அருகே அமர்ந்து இருந்த ரத்னமோ, "ஜெயா கிட்ட நாளைக்கு பேசிடுப்பா, மனசு என்னவோ பண்ணுது" என்று சொல்ல, "நான் பார்த்துக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே, கொஞ்ச நேரம் டி வி பார்த்தான்...

அவன் கவனம் மீண்டும் சிதறியது, அவர்களது அறைக்குள் காயப்போட்ட உடைகளை எடுத்துக் கொண்டேச் சென்ற பத்மாவைப் பார்த்ததும்...

'இதுக்கு மேல முடியாது சாமி' என்று நினைத்துக் கொண்டே எழுந்தவன், அவளுக்கு பின்னேச் சென்று, கதவை தாழிட, கட்டிலில் உடைகளை போட்டவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.

"இப்போ எதுக்கு கதவை மூடுறீங்க?" என்று கேட்க முதல், அவள் இடையை பற்றி தன்னை நோக்கி இழுத்தவன், ஒற்றைக் கையால் அவள் தாடையை பற்றி, இதழில் இதழ் பதிக்க, அவளோ, "வியர்த்து போய் இருக்கேன்... விடுங்க" என்று முனக, அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, அவள் இதழ்களுக்கு விடுதலை அளித்தவன், "அப்போ வா சேர்ந்து குளிக்கலாம்" என்று சொல்லிக் கொண்டே, மீண்டும் இதழ்களை கவ்விக் கொண்டே, அவளை தனது உயரத்துக்கு ஒற்றைக் கையால் தூக்கிக் கொண்டே, குளியலறைக்குள் நுழைய, அவளோ, அவனிடம் இருந்து விடுபட போராடி தோற்றுப் போனாள்.

அவளை இறக்கி விட்டவன், குளியலறை கதவையும் மூடி விட்டான்...

அவனை முறைத்தவள், "நான் காலைல தான் குளிச்சேன்" என்றாள்.

"ஆஹ் என்னை மறுபடி குளிக்க வச்ச தானே... திரும்ப குளி" என்றான்...

"இப்படியும் யாரும் பழி வாங்குவாங்களா? பட்ட பகலிலே என்ன இது? பாட்டி தேடுவாங்க" என்று சொல்லிக் கொண்டே, இருக்கும் கணம், டீ ஷேர்ட்டை கழட்டி ஹங்கேரில் போட்டவனோ, "மூணு வயசுல பண்ணுனது, முப்பது வயசுல பண்ண வேணாமா?" என்று அவளை மார்க்கமாக பார்த்துக் கொண்டே கேட்டவன் விழிகள் அவள் மேனியில் பதிய, அவளுக்கு புரிந்து விட்டது...

ஒற்றை விரலை நீட்டியவள், "இதெல்லாம் நல்லா இல்ல தேவ், நைட் பார்த்துக்கலாம், இப்போ வேணாம்" என்று முடிக்க, முதல், அவளை இழுத்து அணைத்து, இதழில் இதழ் பதித்தவன், சொன்ன வார்த்தைகளை நிறைவேற்ற முயல, முதலில் திமிறியவள், கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி, பின்னர் முனகினாள்...

அவன் குளியலறையை விட்டுச் சென்ற சமயம், பூந்தூவாளையை மார்பில் பற்றி பிடித்துக் கொண்டே சுவரில் கண் மூடி சாய்ந்து நின்றாள்.

இன்னும் அவன் கொடுத்துச் சென்ற இன்பங்களில் இருந்து அவளால் மீள முடியவில்லை...

"ச்சீ பாத்ரூம்ன்னு பார்க்காம என்ன பண்ணி இருக்கார்" என்று முணுமுணுத்தவளுக்கு இப்போது வெட்கத்தில் கன்னங்களும் சிவந்தன...

சங்கடமும் வெட்கமும் சேர்ந்த ஒரு உணர்வு...

அதனை தொடர்ந்து அவள் வெளியே வர, அங்கே ஆர்ம் கட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து இருந்த தேவ் கட்டிலில் கிடந்த உடைகளை அடுக்கிக் கொண்டு இருந்தான்...

"இதெல்லாம் நீங்க பண்ணுவீங்களா?" என்று கேட்க, அவனோ, "என் அம்மா இருந்து இருந்தா பண்ண விட்டு இருக்க மாட்டாங்க... தனியா வளர்ந்தேன், சோ நான் தான் பண்ணுவேன்" என்று சொல்லிக் கொண்டே, அவளைப் பார்த்தவன், "ட்ரெஸ் இருக்கா?" என்று கேட்க, "எடுத்து கொண்டு வச்சேன்" என்று சொல்லிக் கொண்டே, அவள் கொண்டு வந்து வைத்த உடைகளை எடுத்தவள், மீண்டும் குளியலறைக்குள் நுழைய போக, "இங்கேயே சேன்ஜ் பண்ணு, ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருக்க" என்றான்...

"கூச்சமா இருக்கு" என்றவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தவன், "கொஞ்ச நேரம் முன்னாடி எப்படி இருந்தோம்னு மறந்து போச்சா?" என்று கேட்டான்...

"அதையும் கேட்க தான் நினைச்சேன்" என்று சொல்லிக் கொண்டே, அவன் அருகே வந்தவள், "பாத்ரூம்ல வச்சு பண்ணுற வேலையா இது? அதுக்கு தான் பெட்ரூம் இருக்குல்ல?" என்று கேட்க, "போர் அடிக்காம வேற வேற ப்ளேஸ்ல" என்று கண்களை சிமிட்டி சொல்ல, அவனை அவள் முறைத்துப் பார்த்து விட்டு நகர, "ரொம்ப ஃபீலிங் ஆஹ் இருந்துச்சுன்னா சொல்லு, உன் ஆசைக்காக இங்க ஒரு தரம்" என்று அவன் கட்டிலை கண்களால் காட்டிக் கொண்டே சொல்ல, அவளை ஆழ்ந்து பார்த்த பத்மாவோ, "எத்தனை தடவை? சத்தியமா முடியல. ரொம்ப டயர்ட் ஆஹ் இருக்கு" என்றாள்.

குழந்தை போல சிணுங்குபவளை பார்த்தவனுக்கு சிரிப்பும் வந்து விட்டது...

இதழ் பிரித்து சிரித்துக் கொண்டே, "சரி, நைட்டுக்கு பார்த்துக்கலாம்" என்று சொல்லிக் கொண்டே வெளியேற போக, "நைட்டுக்கா? மீண்டும் மீண்டுமா?" என்று அதிர்ந்தாள் அவள்.


அவளை திரும்பிப் பார்த்து ஒற்றைக் கண்ணை அடித்தவன், "தோணுற நேரம் எல்லாம்" என்று சொல்லி விட்டுச் செல்ல, "ஹையோ" என்று தலையில் கையை வைத்துக் கொண்டே கட்டிலில் அமர்ந்தவள் மனசாட்சியோ, 'ஓவர் ஆக்ட் பண்ணாதடி, அது தான் உனக்கும் பிடிச்சு இருக்குல்ல' என்று காறி துப்ப, 'கெத்தை மெயின்டெய்ன் பண்ண வேணாமா?' என்று தனக்கு தானே கேட்டும் கொண்டாள்.
 

CRVS2797

Active member
ஐஸ்க்ரீம் சிலையே ..!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மூ
(அத்தியாயம் - 9)


அட ராமா..! என்னடா இது எங்களுக்கு வந்த சோ(ரோ)தனை காலம்..?
ஹேய் பக்வான் பச்சாஹூ..!


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top