அத்தியாயம் 1
இரவு பதினோரு மணி போல் அந்த வைத்தியசாலைக்குள் நுழைந்து இருந்தான் கரிகாலன், அந்த மாவட்டத்தின் கலெக்டர் ஆக இருப்பவனின் வருகையை அறிந்ததுமே அங்கு கூடி இருந்த மீடியாக்கள் அவனை சூழ்ந்து கொள்ள, அவனுக்கோ பதில் சொல்லும் நிலைமை இல்லாவிடினும் பதில் சொல்லி ஆக வேண்டிய கட்டாயத்தில் கோபத்தை அடக்கிக் கொண்டு மீடியக்காரர்களின் கேள்வியை எதிர் கொண்டான்.
அதில் ஒருவனோ "உங்க கட்டுப்பாட்டுல இருக்கும் பகுதில இப்படி ஒரு விஷயம் நடந்து இருக்கே சார், அதுக்கு நீங்க என்ன ஆக்ஷன் எடுக்க போறீங்க?" என்று கேட்க அவனோ "கண்டிப்பா குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்" என்றான் நறுக்கென்று.
உடனே இன்னொருவன் "இது முதல் கேஸ் இல்ல சார், இப்படி பல காங் ரேப் பல்வேறு இடத்துல நடந்து இருக்கு, ஆனா எந்த குற்றவாளியும் தண்டிக்கப்பட்டதா சரித்திரம் இல்லையே" என்று ஒரு நக்கல் தொனியில் கேட்க அவனை உறுத்து விழித்தவன் "அத நீங்க அந்த அந்த இடத்துக்கு பொறுப்பானவங்க கிட்ட கேட்கணும், நான் கண்டிப்பா இந்த பாதிக்கப்பட்ட பொண்ணுக்கு நீதி வாங்கி கொடுப்பேன்" என்று சொன்னான் அழுத்தமாக.
உடனே அங்கிருந்த பெண், "நீதி வாங்கி கொடுத்தா மட்டும் போதுமா சார், அந்த பொண்ணோட வாழ்க்கையை பற்றி யோசிச்சீங்களா?" என்று கேட்க அவனுக்கோ "என்னமா ஏதோ நான் ரேப் பண்ணின போல கேட்கிற?" என்று தான் கேட்க தோன்றியது. ஆனால் அவனது பதவி இப்படி தரம் இறங்கி பேச அனுமதிக்காத ஒரே காரணத்தினால் "கண்டிப்பா அந்த பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய இறைவனை வேண்டி கொள்ளலாம்' என்று பட்டும் படாமல் முடிக்க, வேறு ஒருவனோ "நீங்க இப்படி பட்ட பொண்ணுக்கு வாழ்க்கை கொடுப்பீங்களா சார்?" என்று கேட்டான் அடுத்தவன்.
அவனுக்கோ அந்த கேள்வியில் எங்கேயாவது சென்று முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது. "திஸ் இஸ் நாட் எ ரிலவண்ட் குவேஷன் " என்று அந்த கேள்விக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு அந்த பெண்ணைப் பார்க்க அவன் முன்னேற " சும்மா பந்தாக்கு தான் பேச தெரியும் இவங்களுக்கு, வாழ்க்கை கொடுப்பீங்களான்னு கேட்டதும் நழுவுறத பார்த்தீங்களா?" என்று இருவர் பேசியது காதில் தெளிவாக விழுந்தது.
ஆனாலும் அந்த முட்டாள் தனமாக பேச்சுகளுக்கு பதில் சொல்லி தனது தரத்தை குறைக்க விரும்பாதவன் , கோபத்தை அடக்கிக் கொண்டு முன்னேற அந்த சமயத்தில் அங்கு வந்து நின்றது மேயரின் கார். அந்த சத்தத்தில் திரும்பிப் பார்க்க அதிலிருந்து ஒய்யாரமாக இறங்கினாள் மதுபாலா.
பேரழகி பெண்ணவளுக்கு திருமிருக்கும் ஆணவத்துக்கும் கொஞ்சமும் குறைவே இல்லை. அவளைக் கண்டதுமே கண்களை மூடித் திறந்த கரிகாலன் வேறு வழி இன்றி அவளை தாண்டி செல்ல முடியாத நிலையில் இருந்தவன் அவளுக்காக காத்திருக்க, அங்கு இருந்த மீடியாக்காரர்கள் இருவரையும் பார்த்து கிசு கிசுக்க ஆரம்பிக்க அவனுக்கோ அவர்கள் என்ன பேசுவார்கள் என்று தெளிவாக தெரிந்தது. வைத்தியசாலையை நோக்கி வந்த மதுபாலாவை மீண்டும் மீடியா காரர்கள் சூழ்ந்து கொள்ள கரிகாலன் அவள் பதவிக்கு மதிப்பளித்து அவள் பின்னே சற்று விலகி நின்றான்.
மதுபாலா முன்னே மைக்கை நீட்டியவர்கள் "இந்த விஷயத்துக்கு என்ன சொல்ல வர்றிங்க மேடம்?" என்று கேட்க அரசியல்வாதி அவளோ " இந்த வேலையை பண்ணுன நாயை தூக்குல போடணும், இதுக்கு சரியான தண்டனை நான் வாங்கி கொடுப்பேன்" என்று நீட்டி முழக்க, அதை உணர்ச்சி துடைக்கப்பட்ட முகத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தான் கரிகாலன். மேலும் தொடர்ந்த மீடியா காரர்கள் "அந்த பொண்ணுக்கு யார் மேடம் இனி வாழ்க்கை கொடுப்பாங்க, ரொம்ப சின்ன பொண்ணு வேற" என்று கேட்க அவளோ "நான் அவளுக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கட்டி வைப்பேன்" என்று சொல்ல கரிகாலன் முகத்தில் அலட்சியம் அப்பட்டமாக தெரிந்தது.
அவளது சாக்கடை அரசியலை கேட்க வேண்டிய நிலையை நினைத்து தன்னை தானே நொந்தவன் வேறு வழி இன்றி அப்படி இருக்க , செய்தி சேகரிக்கவே பிணம் தின்னி கழுகை போல அலையும் மீடியா காரர்களும் அடுத்த கேள்வியை முன் வைத்தார்கள்.
"கரிகாலன் சார், அந்த பொண்ண கல்யாணம் பண்ணுறத பத்தி ஏதும் ஆட்சேபனை இருக்கா?" என்று அவர்கள் கேட்க அவளோ நக்கலாக "எனக்கொரு ஆட்சேபனையும் இல்ல, அதுக்கு நல்ல பரந்த மனசு வேணும், அது அவருக்கு இருக்கான்னு எனக்கு தெரில" என்று சொல்ல அவன் பொறுமை காற்றில் பறந்து போனது. ஆவேசமாக அவளை பார்த்தவன் "நோ வன் ஹாஸ் தெ ரைட்ஸ் டு டாக் அபவுட் மை பெர்சனல்" என்று சீற, அதுவே அடுத்த நாள் தலைப்பு செய்தியாக வந்தவர்களுக்கு அமைந்து கொண்டது. உடனே அவளோ "நான் என்ன மிஸ்டர் தப்பா சொல்லிட்டேன்? கற்பழிக்கப்பட்ட பொண்ணை கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்த நல்ல மனசு வேணும்" என்று சொல்ல அவன் பொறுமை காற்றில் பறந்து போனது.
கரிகாலன் மிகவும் நிதானமாவன்,. அவ்வளவு அவசரமாக பாரிய முடிவுகள் எடுப்பவன் அல்ல, அவனையே அவள் பேச்சு தூண்டி விட, "எனக்கு அந்த மனசு தாராளமா இருக்கு மேடம், சின்ன பொண்ணுன்னு பார்க்கிறேன், அண்ட் அவளுக்கு நான் ரெண்டாம் தாரமா தான் வாழ்க்கை தரணும், அந்த பொண்ணு அதுக்கு சம்மதிக்குமான்னு தெரில" என்று சொல்ல, அவளோ "ஆட தெரியாதவன் அரங்கு பிழை என்றானாம்" என்று ஒரு பஞ்ச் வேறு சொல்ல அவனுக்கோ கோபம் எல்லை கடந்து போனது.
உடனே மீடியா காரர்களை அழுத்தமாக பார்த்தவன் "நாளைக்கு தலைப்பு செய்தியா போடுங்க, கலெக்டர் கரிகாலனுக்கும் பாதிக்கப்பட்ட பொண்ணுக்கும் அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம்," என்று சொல்லி விட்டு விறு விறு வென உள்ளே செல்ல அவன் முதுகை வன்மமாக முறைத்துப் பார்த்தாள் மதுபாலா.. உள்ளே வந்தவனுக்கு ஆயிரத்தெட்டு என்ணங்கள், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் என்ன? ஊரென்ன? எப்படி இருப்பாள்? என்று எதுவுமே தெரியாத சந்தர்ப்பத்தில் தன்னை விட பத்து வயது குறைந்து பதின் வயதின் விளிம்பில் இருக்கும் பெண்ணை திருமணம் செய்ய சம்மதித்து பேட்டி வேறு கொடுத்து விட்டான் அல்லவா?
ஆனால் அந்த பெண்ணின் மனநிலை என்ன? இந்த விஷயம் தெரிந்தால் அந்த பெண் எவ்வாறு எதிர்வினை ஆற்றுவாள்? என்று பல யோசனைகளில் உழன்று கொண்டே வைத்தியரின் அறைக்குள் அவளை பற்றி விசாரிக்க நுழைந்தான். அதே சமயம், வெளியே மீடியா காரர்களிடம் மதுபாலா அரசியல் பேசிக் கொண்டு இருந்தாள்.. அவள் நிஜமாக வந்தது அந்த பெண்ணை பார்க்க அல்லவே, மீடியா காரர்களுக்கு தான் சமூக அக்கறை உடையவள் என்று படம் காட்ட மட்டுமே ஆகும்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவ்வளவு பணம் கொடுப்பேன் இவ்வளவு பணம் கொடுப்பேன், என்று வாய்க்கு வந்த வாக்குறுதிகளை எல்லாம் அள்ளி விட்டாள்.
தனது அறைக்குள் நுழைந்த கரிகாலனை எழுந்து வரவேற்ற வைத்தியர் முகமோ சற்று தளர்ந்து போய் தான் இருந்தது.
கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளித்த வலி அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிய, அவனோ அவரிடம் "அந்த பொண்ணு எப்படி இருக்கா? " என்று கேட்டான். அவரும் "இரக்கமே இல்லாம அந்த பொண்ணை ரொம்ப டாச்சர் பண்ணி இருகாங்க சார், அவ சாவோட விளிம்புல போய் பிழைச்சு இருக்கா, இங்க அந்த பொண்ண கொண்டு வரும் போது என்னால பார்க்கவே முடில, என் மெடிக்கல் ஹிஸ்டரில நான் பார்த்த கொடூரமான கேஸ்ல இதுவும் ஒன்னு" என்று சொல்லும் போதே அவர் குரல் தழுதழுத்தது. பல வருட அனுபவம் பெற்றவரே உடைந்து பேசும் போது அந்த பெண்ணின் நிலை என்னவாக இருக்கும் என்று நினைத்த கரிகாலன் மனமும் கனத்து போனது. இந்த நிலையில் அந்த பெண்ணை அவன் மணப்பதாக பேட்டி வேறு வீம்புக்கு கொடுத்து விட்டு வந்து இருக்கிறான்.
"நான் ஒன்றும் தாம்பதியத்துக்காக அந்த பெண்ணை மணக்கவில்லையே , அவளுக்கான ஒரு துணையாக தானே மணக்க சம்மதித்தேன். எதிர் காலத்தில் இது பல ஆண்களுக்கு இந்த புரட்சி திருமணம் முன்னுதாரணமாக இருக்குமே" என்று தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டாலும் மன ஓரத்தில் ஒரு உறுத்தல் இருக்கத் தான் செய்தது. திருமணம் என்றதுமே அந்த பெண் இருக்கும் நிலையில் சம்மதிக்கவே மாட்டாள் என்று அவன் ஆணித்தரமாக நம்பினான். இறுதியாக "நடப்பதெல்லாம் நன்மைக்கே" என்று நினைத்தவன் பெருமூச்சுடன் எழுந்து வெளியேறி அந்த பெண்ணை பார்க்க போனான்.
அவனுடன் எழுந்து சென்ற டாக்டர் அவள் அனுபவித்த கொடுமைகள் பற்றி விபரிக்க ஒரு கட்டத்தில் இரும்பு மனம் படைத்த அவனாலேயே கேட்க முடியாமல் போனது. "போதும் டாக்டர் என் மனசில இதுக்கு மேல கேட்க சக்தி இல்ல" என்று அவரை தடுத்தவன் அந்த பெண் அனுமதிக்கட்டப்பட்டு இருக்கும் அறையை நெருங்க, அறை வாசலில் அழுது கொண்டு இருந்த நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த அவள் தாயும் தந்தையும் கரிகாலனை கண்டதும் ஓடி வந்தவர்கள் "என் பொண்ணை பார்த்தீங்களா சார் ? சின்ன பொண்ணு சார் அவ.... படுபாவி பசங்க, இப்படி மொத்தமா சிதைச்சுட்டாங்களே.. பிரென்ட் வீட்ட போறேன்னு போன பொண்ணு " என்று கண்ணீர் விட, அவனுக்கோ மனம் இன்னும் பாரமாகி போனது. மேலும் தொடர்ந்த அவர் தந்தை "அவனுங்கள சும்மா விடக் கூடாது சார், தூக்குல போடணும்," என்று சத்தமாக அழ , அவனோ பெருமூச்சுடன் அருகே நின்ற போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் "யாருன்னு கண்டு பிடிச்சாச்சா?" என்று கேட்டான். அவனோ "இல்லை சார், இந்த பொண்ணை அங்க இருந்த கால்வாயில் வீசி இருக்காங்க, அப்போ தான் கடைய சாத்திட்டு வந்த இட்லீ கடைக்காரம்மா வெத்தல பாக்கு துப்ப கால்வாய்க்குள்ள எட்டி பார்த்த நேரம் , அலங்கோலமா இருந்த இந்த பொண்ணை பார்த்து இங்க கொண்டு வந்து சேர்த்து இருக்காங்க, அவங்கள விசாரிச்சதுல அவங்களுக்கு ஒண்ணுமே தெரில, " என்றான்.
கரிகாலனோ "அவங்கள ரொம்ப கஷ்டப்படுத்தி விசாரிக்க வேணாம், இந்த பொண்ணை கொண்டு அட்மிட் பண்ணினவங்க கண்டிப்பா தெரிஞ்சதை சொல்லுவாங்க, சோ அவங்களுக்கு நிஜமா ஒண்ணுமே தெரிலன்னு தான் நினைக்கிறேன் " என்றவன் "பொண்ணோட பேர் என்ன?" என்று கேட்டான். அங்கு அழுதபடி நின்ற பெண்ணின் தாய் "மாதவி" என்று விம்மியபடி சொல்ல, பாதிக்கப்பட்ட பெண்ணைப் பார்க்க அந்த அறைக்குள் நுழைந்தான் கரிகாலன்.
மெல்லிய உடல் வாகு கொண்ட பெண்ணவள் முகத்தில் குழந்தை தனம் கொஞ்சமும் அகலவில்லை. பால் போன்ற மாசுமருவற்ற முகத்தில் அந்த கயவர்களின் நக கீறல்களும் பற்தடங்களும் அழுத்தமாக பதிந்து இருக்க, முகத்தின் ஒரு பக்கமோ அறைந்தத்தில் வீங்கி போய் இருந்தது. அந்த பெண்ணின் முகத்தைப் பார்த்தவனுக்கோ பரீட்சியமாக இருக்க, இப்போது அடையாளம் காண முடியாமல் கன்றி சிவந்த அவளது முகத்தை உறுத்து விழித்தவன் "எங்கேயோ இந்த பொண்ண பார்த்து இருக்கேனே" என்று நினைத்தான். சிறிது நேரம் அந்த பெண்ணின் முகத்தை பார்த்தவனோ "குழந்தை தனம் போகாத இந்த பெண்ணை சீரழிக்க எப்படி மனசு வந்திச்சு?" என்று அந்த கயவர்களை கெட்ட வார்த்தையில் மனதுக்குள் திட்டியவன் கண்கள் அந்த பெண்ணின் கன்றி சிவந்த கையில் பதிந்தது. அடுத்த கணமே தனது நெஞ்சில் கை வைத்தவன் அங்கிருந்த சுவரில் அதிர்ச்சியுடன் சாய்ந்து நின்று கொண்டான்.
அவள் கையில் அவன் கட்டி விட்டிருந்த கயிறு அவனைப் பார்த்து சிரித்தது. அந்த பெண் அவனுக்கு பரீட்சியமான பெண் தான். சில வருடங்கள் முன்னே பாடசாலை ஒன்றில் நடந்த பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தான் கரிகாலன். அங்கு அனைத்து பாடங்களிலும் முதன்மை பெற்று அவன் கையினால் கேடயம் பெற்றுக் கொண்டவள் தான் இந்த மாதவி. அப்போது அவளை மனதார பாராட்ட, அவளோ தான் பெரிய வைத்தியராக வர வேண்டும் என்று தனது மன ஆசைகளை மேடையில் அவனிடம் கூறியவள் அவன் காலில் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கி இருந்தாள்.
சில மாதங்கள் கழித்து அவனை கலெக்டர் ஆபீஸில் சந்தித்து மனு கொடுக்க பாடசாலை ஆசிரியருடன் வந்து இருந்தாள். அப்போது அவள் பாடசாலை கல்வியை முடிக்கும் தருவாயில் இருக்க, அவர்கள் பாடசாலைக்கு அருகே திறந்திருக்கும் வைன் ஷாப்பை மூட சொல்லி இருந்தது அந்த மனு.. கரிகாலனும் அவளை "நல்லா படிச்சு பெரிய டாக்டரா வரணும்" என்று உற்சாகப்படுத்தியவன் அடுத்த நாளே அந்த வைன் ஷாப்புக்கு சீல் வைத்தான்.
அதன் பிறகு சில நாட்கள் கழித்து அவளை அவன் கோவிலில் வைத்து சந்தித்து இருந்தான். அவளாக அவனைத் தேடி வந்தவள் , அவன் கரத்தில் தவழ்ந்த குழந்தையை பார்த்து "சார், உங்க பையனா, ரொம்ப கியூட்டா இருக்கான்" என்று சொல்லி பையனை வாங்கி முத்தமிட்டாள். அவனும் அவளை இத்துடன் மூன்றாவது தடவை சந்திக்கிறான், சகஜமாக பேசி குழந்தை தனத்துடன் இருப்பவள் வாழ்க்கை சிறக்க வேண்டும் என்று அவன் மனம் அந்த கணத்தில் வேண்ட, அவளோ குழந்தையை பக்கத்தில் நின்ற கரிகாலனின் தாயிடம் கொடுத்து விட்டு "சார் உங்க தயவால அந்த வைன் ஷாப் மூடிட்டாங்க, நீங்க வேற லெவல் சார், முதல் எல்லாம் அந்த இடத்தால பயந்து பயந்து தான் வர்றனாங்க, குடிச்சிட்டு கலாட்டா பண்ணுவாங்க அங்க இருக்கிறவங்க.. இப்போ நிம்மதியா நடந்து வரோம். நீங்க இருக்கும் மட்டும் நம்ம ஊருல பொண்ணுங்க தைரியமா வெளிய போகலாம்... இப்போ நான் உங்க ரசிகை ஆயிட்டேன்" என்று வாயெல்லாம் புன்னகையுடன் சந்தோஷமாக சொன்னாள். அதைக் கேட்டவனுக்கோ மனம் திருப்தியாக உணர, மெலிதாக புன்னகைத்தவன் "பெரிய மனுஷி போல பேசுற" என்று சொல்ல அவளோ "இன்னைக்கு எனக்கு பைனல் எக்ஸாம், இனி பெரிய மனுஷி தான்" என்று சொல்லி சிரித்தாள். அந்த கணம் அவளை தேடி வந்த அவள் நண்பி, "இந்தாடி, இந்த சாமி கயிறை கட்டிக்கோ.. எக்ஸாம் பாஸ் பண்ணிடலாம்" என்று கொடுக்க, மாதவி அந்த கயிறை நீட்டியது என்னவோ கரிகாலனிடம் தான்.
"சார், உங்கள போல நானும் இந்த சமூகத்துக்கு நல்லது செய்யணும்.. நல்லா படிச்சு இருக்கேன்.. கண்டிப்பா பாஸ் பண்ணி பெரிய டாக்டர் ஆயிடுவேன்.. இத நீங்களே கட்டி விடுங்க சார்" என்று நீட்ட அவனும் சின்ன பெண்ணவளுக்கு அந்த கயிறை கட்டி விட, அவளோ அங்கேயும் அவனிடம் வாழ்த்தை பெற்று விட்டு பரீட்சைக்கு புறப்பட்டு இருந்தாள்.
அனைத்தையும் நினைத்தவன் இதயமோ வலியில் வெளியே கேட்குமளவுக்கு துடிக்க அவன் காதில் அவள் சொன்ன "நீங்க இருக்கும் மட்டும் நம்ம ஊருல பொண்ணுங்க தைரியமா வெளிய போகலாம்" என்ற வாக்கியமே ஒலிக்க, அவன் இதழ்களோ "நான் தோத்து போய்ட்டேன்மா" என்று முணு முணுத்தது.