Sunitha Bharathi சிஸ்டர் எழுதிய "என் ஆசை எதிராளி"
இந்த கதையை வாசிப்பதற்காக நான் எடுத்து வைத்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறது ஏனோ கதையை தொடங்குவதில் தாமதமாகிக் கொண்டே இருந்தது.. இந்த கதையை வாசிக்க எடுத்து விட்டு வேறொரு கதை வாசிக்க சென்று விடுவேன்

நேற்று இந்த கதையை வாசிக்க எடுத்த பின்பு இவ்வளவு நாள் தாமதமாக வாசிப்பதற்கு நானே என்னை திட்டிக் கொண்டேன்

அவ்வளவு சூப்பராக இருந்தது கதை

நிறைய இடங்களில் சிரித்துக் கொண்டே படித்தேன்.. அதுவும் சத்தமாக


நிரலிகா மலைவாழ் பெண்.. தன் மச்சாவின் மீது தீராத காதல் இவளுக்கு

அவனுக்கும் தன் சிறு வயது தோழியான இவள் மீது அன்பும் பாசமும்

துருவ்.. அம்மாவின் பிறந்து வளர்ந்த இடமான மலை கிராமத்திற்கு செல்வதில் அலாதியான இன்பம் இவனுக்கு.. பட்டணத்தில் இருந்து வரும் இவனையும் இவன் கொண்டு வரும் விளையாட்டு சாதனங்களையும் கண்டு ஆச்சரியப்படும் நண்பர்களை பார்ப்பதில் பெருமிதம் இவனுக்கு.. அத்தோடு மச்சா.. என்று அழைத்துக் கொண்டு இவன் பின்னோடு சுற்றும் நிராவை அவ்வளவு பிடிக்கும்

ஒரு கட்டத்தில் தாயின் கட்டளை படி சிறு வயதிலேயே அவளுக்கு தாலி கட்டி மனைவியாக்கி கொள்கிறான் சூழ்நிலையால்.. தன் குட்டி மனைவியின் பழக்கவழக்கங்களை சரிப்படுத்துவதிலேயே சோர்ந்து விடுகிறான்

இவன் செய்யத் துணிந்த ஒரு செயலால் இவன் தந்தை இவன் மேல் கோபம் கொள்ள இவனின் கோபம் திரும்புகிறது நிரலிக்காவின் மீது.. அதில் வீட்டை விட்டு படிப்பிற்காக அயல்நாடு செல்லும் இவன் பத்து வருடங்கள் நாட்டை திரும்பியும் பார்க்காமல் இருக்கிறான்

அதன் பின் தன் காதலி தியானா உடன் தாயகம் திரும்பும் இவன் சொத்துக்களை கேட்டு வருகிறான்.. ஆனால் இவனின் தந்தை நிராலிகாவை மறுபடியும் திருமணம் முடித்தால் மட்டுமே சொத்து கிடைக்கும் என சேக் வைக்க விழி பிதுங்கி நிற்கிறான்

அவன் மனதிலும் அவள் மட்டுமே நிரந்தர இடம் பிடித்திருப்பதை அறிந்தாலும் கோபம் கொண்டு அதை மறைத்து அவளோடு சண்டை பிடித்துக் கொண்டே சொத்திற்காக அவளோடு மூன்று மாத கெடு முடிய காத்திருக்கிறான்..இந்நிலையில் பெண் அவள் மீது காதல் கொண்டு ரிஷி அவளுக்காக காத்திருக்கும் போது.. முட்டிக்கொள்கிறது இருவருக்கும் பெண் அவளை மத்தியில் வைத்து

நிரலிகா... சிறுவயதிலிருந்தே அளவுக்கு அதிகமான காதல் இவளுக்கு அவன் வெறுத்த போதும்

அவனுக்காகவே அவனை விட்டுக் கொடுத்து பிரிந்து செல்லும் இவள் காதலையும் இவள் மேல் அவனுக்கு இருக்கும் காதலையும் உணர்ந்து இவளை தேடி வந்தானா துருவ் என்பது கதையில்..
தனேஷ்.. அருமையான கதாபாத்திரம் தன் பாசின் மேல் இவன் கொண்டுள்ள அபிமானம் அருமை

துருவ்வின் தாய் தந்தை தயாளின் தேவகியின் காதல் அவ்வளவு அழகு

விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை வாழ்த்துக்கள் ரைட்டர்ஜி



Good luck dear



Keep rocking

