Kaviya Tamilraj
Member
Super 

Super sisபிரம்மா 19
அவளோ நீண்ட நேரமாக வீதியிலேயே நின்று இருக்க, அவன் தனது வேலைகளில் மூழ்கி இருந்தாலும் அடிக்கடி அவளது நினைவுகள் வந்து அவனை தொந்தரவு செய்து கொண்டு தான் இருந்தது. அவனுக்கு கோபம் ஒரு பக்கம் இருந்தாலும் அவள் மீதான அக்கறையும் மறுபக்கம் இருக்கின்றது அல்லவா? அந்நேரம் பார்த்து அவனது போன் அலற, அதனை எடுத்துக் கொண்டு "எக்ஸ்கியூஸ் மீ" என்று சொல்லி விட்டு வெளியே வந்து காதில் வைத்தான். மறுமுனையில் பேசியது வேறு யாருமல்ல, காயத்ரியின் தந்தை தான். அவனுக்கு யார் எடுத்தது என்று தெரியாமல் இருக்க, "ஹெலோ சித்தார்த் ஹியர்" என்று சொன்னான். ஒரு சின்ன மௌனத்துக்கு பிறகு, "ஹெலோ சித்தார்த், நான் காயத்ரியோட அப்பா பேசுறேன்" என்று சொல்ல, அவன் குரல் சற்று கீழிறங்கி "சொல்லுங்க சார்" என்று சொன்னது.
அவரோ "எப்படி பேசுறதுன்னு தெரியல, ஆனா ஒரு அப்பாவா என்னால பேசாம இருக்கவும் முடியல, காயத்ரி அம்மா இல்லாத பொண்ணு, எனக்கும் பொண்ண எப்படி வளர்க்கணும்னு தெரியல, அவளுக்கு என்ன பிடிக்கும்னு கூட தெரியல, அவளா தான் வளர்ந்தா.. போலீஸ் டிபார்ட்மென்ட் அவளுக்கு பிடிக்குமா இல்லையான்னு கூட தெரியல.. ஆனா நான் ஆசைப்பட்டதுக்காக அதுலயும் சேர்ந்துக்கிட்டா.. என் கிட்ட இது வேணும் அது வேணும்னு எதுவுமே கேட்டது இல்ல, ஆனா நான் கண்டிப்பான அப்பா கூட இல்ல, ஏனோ அவளுக்கு என் கிட்ட ஒரு விலகல் எப்போவுமே இருக்கும். நான் வீட்ல இல்லாம அவ கூட டைம் ஸ்பென்ட் பண்ணாம இருக்கிறது கூட அந்த விலகலுக்கு காரணமா இருக்கலாம். அதனால தான் அஜய் கூட கல்யாணம் பிக்ஸ் பண்ணுன நேரம் கூட அவ ஒண்ணுமே சொல்லல்ல, அவ என் கிட்ட மனசு விட்டு பேசுனதே கிடையாது.. அதனால தான் அவ மனசுல என்ன இருக்குன்னு கூட தெரியாம என் இஷ்டப்படி எல்லாமே பண்ணிட்டேன்.. அவ கல்யாணத்த நிறுத்துன நேரம் தான் அவ மனசுல நீங்க இருக்கீங்கன்னு தெரிஞ்சுது.. அவ இப்போ தான் வாய் விட்டு அவ ஆசைப்பட்டதை கேட்டு இருக்கா.. உங்கள சந்திக்க வந்து ஏமாற்றத்தோடு திரும்பி வந்தப்புறம் அவ சாப்பிடவே இல்ல.. புறப்பட்டு வரும் வரைக்கும் அவ சாப்பிடாம தான் இருந்தா.. கதவை சாத்திட்டு அழுதுட்டே இருந்தா.. அவ சின்ன குழந்தை இல்லையே அடிச்சு சாப்பாடு ஊட்டி விடுறதுக்கு.. என்ன கேட்டாலும் அழுகையை தவிர எதுவுமே வரல, மனசே பதறி போச்சு.. அப்போ தான் திடீர்னு வந்து உங்களை பார்க்கணும்னு சொன்னா, அது கூட ஒரு இன்போர்மேஷன் ஆஹ் தான்.. நான் தடுக்காம அனுப்பி வச்சேன்.. ஏன்னா என் பொண்ண இப்படி என்னால பார்க்க முடியல" என்று சொல்லும் போதே அவர் குரல் உடைந்து அழுத வலியைக் காட்டியது. அவனுக்கும் அவர் பேசியது சற்றே வலியை கொடுக்க, அவரை சமாதானப்படுத்த நினைத்தவன் "சரி நான் பார்த்துக்கிறேன் சார்" என்று சொல்ல, அவரும் "இப்போ உங்க கூட பேசுன அப்புறம் தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு. என் பொண்ண கவனமா பார்த்துப்பீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு" என்று சொல்லி விட்டு வைத்து விட்டார். அவனோ போனை வெறித்துப் பார்த்து விட்டு , இதழ் குவித்து "ஊப்" என்று ஊதியபடி நேரத்தைப் பார்க்க, அதுவோ இரவு 7 மணியைக் காட்டியது.
மழையோ அந்த கணத்தில் அடித்து பெய்ய ஆரம்பிக்க, தனது அறைக்குள் சென்றவன் அங்கிருந்த கண்ணாடியூடு பார்க்க, அங்கே அவள் அதே இடத்தில் அசையாமல் நின்று இருந்தாள். "ரொம்ப தான் அழுத்தக் காரி" என்று முணு முணுத்த கணத்தில் சாப்பிடாமல் இருந்த காரணத்தினாலும், நீண்ட நேரம் நின்ற உடல் சோர்வினாலும் அவளால் அதற்கு மேல் நிற்க முடியாமல் போக அப்படியே சுருண்டு விழுந்து இருந்தாள் அவன் கண் முன்னே. அடுத்த கணமே "ஷீட்" என்று வாய் விட்டு சொல்லிக் கொண்டே விறு விறுவென கீழே இறங்கிச் சென்றவன் மழை என்றும் பாராமல் அவளை நோக்கி ஓடிச் செல்ல, அவளோ உணர்வின்றி இருந்தாள். சற்றும் யோசிக்காமல் அவளை குழந்தை போல ஏந்திக் கொண்டவன் தனது அறையை நோக்கி சென்றான். ஈரம் சொட்ட சொட்ட நடந்து வருபவனைப் பார்த்த அங்கிருந்த ஒரு செக்கியூரிட்டி "சார், நான் தூக்கி வரேன்" என்று சொல்ல, அவனோ "ஐ வில் மேனேஜ்" என்று சொல்லிக் கொண்டே அவளை கொண்டு சென்றான். கொண்டு செல்லும் போது அவள் முகத்தைப் பார்த்தவனுக்கு ஒரு வித பரிதாபம் அவளிடத்தில்.. அஜய்க்கு அவள் செய்த துரோகத்தினால் உண்டான கோபத்தின் நடுவே இப்படி அவள் கஷ்டப்படுவதைப் பார்க்கும் போது அவளை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் விலக்கி வைக்கவும் முடியாத தவிப்பு. என்ன தான் துரோகம் செய்தாலும் அவன் அனைவர் மீதும் அக்கறையானவன்.. காதலித்த பெண் மீது அந்த அக்கறை இல்லாமல் இருக்குமா? அவளை கட்டிலில் படுக்க வைத்து விட்டு அவள் கை கால்களை உஷ்ணம் நீங்க உரசியவன், அவள் பலயீனமாக இருப்பதை உணர்ந்து கொண்டான். அவனிடம் இல்லாத மருந்துளா என்ன? ஆனாலும் அவளுக்கான சிகிச்சையை வழங்க முதல் அவள் உடையை மாற்ற வேண்டிய கட்டாயம் அவனுக்கு.
முதலில் தான் போட்டு இருந்த ஈரமான உடையை மாற்றியவன் வேறு வழி இல்லாமல் அவள் உடையில் கையை வைத்தான். சின்ன சின்ன தயக்கங்கள், சங்கடங்கள் என்று அவளது உடையை மாற்ற அவன் பட்ட பாடு அவன் மட்டுமே அறிவான். தனது ஷேர்ட் ஒன்றை அவளுக்கு அணிவித்து விட்டு, அவளது பலவீனத்துக்காக ஊசியும் போட்டவன் அவளை தூங்க வைத்தான். அவன் மனமோ அங்கும் இங்கும் என்று நிலை இல்லாமல் அல்லாடிக் கொண்டு தான் இருந்தது. அவளை ஏற்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் தடுமாறும் நிலை. தலையை கோதிக் கொண்டே "எதுக்குடி இப்படி பண்ணுற?" என்று வலி நிறைந்த குரலால் கேட்டுக் கொண்டே அவள் அருகே இருந்தவன் பெருமூச்சுடன் பக்கத்திலேயே படுத்துக் கொண்டான்.
காலையில் முதலில் கண் விழித்தவன், டிராக் ஷூட்டை போட்டுக் கொண்டு ஜிம் அறைக்குள் நுழைந்து கொண்டான். அவன் திரும்பி வந்த போதும் கூட அவள் தூங்கிக் கொண்டு தான் இருந்தாள். பெருமூச்சுடன் சமயலறைக்குள் நுழைந்து அவளுக்கும் சேர்த்து காபியை போட ஆரம்பித்தான்.
அந்த சமயம், கட்டிலில் இருந்து கண் விழித்த காயத்ரிக்கோ அந்த இடம் சற்று மங்கலாக தான் தெரிந்தது. கஷ்டப்பட்டு எழுந்து அமர்ந்தவள் கண்களை கசக்கி விட்டு பார்த்த போது அது சித்தார்த்தின் அறை என்று கண்டு கொண்டாள்.. யோசனையாக புருவம் சுருக்கியவளுக்கு அறையுடன் சேர்ந்த சமயலறையில் இருந்து காபி கலக்கும் சத்தம் வர கட்டிலில் இருந்து எழுந்தவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.. அவளோ சித்தார்த்தின் ஷேர்ட் மட்டுமே அணிந்து இருக்க முட்டி வரை இருந்த ஷேர்ட்டை கண்டவள் "யார் எனக்கு டிரஸ் மாத்தி இருப்பாங்க?" என்று யோசித்துக் கொண்டே நடக்க முற்பட சமயலறைக்குள் இருந்து கையில் இரு காபி கப்களுடன் டிராக் ஷூட் மட்டும் அணிந்து கொண்டே நடந்து வந்தான் சித்தார்த். அவனைக் கண்டதுமே சட்டெனெ கட்டிலில் அமர்ந்தவள் அங்கிருந்த போர்வையால் தன் இடுப்பின் கீழே போர்த்திக் கொள்ள அவனோ அவளை புருவம் சுருக்கி பார்த்து விட்டு அருகே இருந்த டீபாயில் காபியை வைத்தவன் "குடிச்சிட்டு கிளம்பு" என்று சொல்லிக் கொண்டே அங்கே இருந்த கண்ணடியூடு வெளியே பார்த்துக் கொண்டே காபியை அருந்தினான். அவளுக்கு அவனது வெற்று முதுகு மட்டுமே காட்சியளிக்க "என் டிரஸ் எல்லாம் எங்க?? யார் எனக்கு டிரஸ் செஞ் பண்ணி விட்டாங்க" என்று கேட்டுக் கொண்டே அவன் போட்டு வைத்து இருந்த காபியை அருந்தியவளுக்கு அங்கிருந்து போகும் எண்ணம் துளியும் இருக்கவில்லை.. உள்ளே வரக் கூடாது என்று சொன்ன சித்தார்த்தின் அறைக்குள் அவனுடன் அவன் உடையை அணிந்து இருக்கின்றாள். இதை விட அவளுக்கு வேறு என்ன வேண்டும்?
அவனோ பக்கவாட்டாக திரும்பி அவளை பார்த்தவன் "உன் டிரஸ் எல்லாம் காய வச்சு டிராக்ல போட்டிருக்கேன். நான் தான் ட்ரெஸ் சேன்ஞ் பண்ணினேன்" என்று சொல்லிக் கொண்டே காபியை குடித்தான். அவன் முகத்தில் கொஞ்சமும் புன்னகை இருக்கவே இல்லை. அவளோ அதிர்ச்சியுடன் "வாட் நீங்களா?" என்று கேட்க "ம்ம்" என்று தோளை உலுக்கியவன் அவளை நோக்கி அடிமேல் அடி வைத்து வர அவனை இமைக்காமல் பார்த்தவளுக்கு மூச்சடைத்தது.
அவன் உடை மாற்றினான் என்று எண்ணும் போதே உடலில் ஒரு கூச்சம் உருவாகி இருக்க அவன் படிக்கட்டு மேனியுடனான தோற்றதை பார்த்தவளுக்கு ஒரு வித சிலிர்ப்பு.
அவனோ அவளது கையில் இருந்த கப்பை வாங்கியவன் "சீக்கிரம் ரெடி ஆகு.. கொண்டு போய் விட சொல்றேன்" என்று சொல்லிக் கொண்டே சமயலறையை நோக்கி நடக்க , அவளோ "நான் போகமாட்டேன்" என்று சொன்னவள் கட்டிலில் சாவகாசமாக அமர்ந்து கொள்ள அவனோ "வாட்?" என்று கேட்டபடி அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்தான்.
அவளோ "நான் போக மாட்டேன்" என்று அவன் விழிகளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே சொல்ல, அவனோ "இரு வரேன்" என்று அடக்கப்பட்ட கோபத்துடன் சொல்லிக் கொண்டே சமயலறைக்குள் நுழைந்தவன் கப்பை கழுவி வைத்து விட்டு விறு விறுவென வந்து கட்டிலில் அமர்ந்து இருந்தவள் முன்னே நிற்க, அவளோ அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்துக் கொண்டே "எழுந்திரு காயத்ரி" என்று சொல்ல, அவளோ "முடியாது" என்று சொன்னவள் கையில் இருந்த போர்வையை பற்றிப் பிடித்துக் கொண்டபடி தலையை குனிந்து கொண்டாள். அவனுக்கோ அவள் செயல் கடுப்பாக, அருகே சென்று அவள் உடைகளை எடுத்து வந்து அவள் அருகே போட்டவன் "ட்ரெஸ் போட்டுட்டு ரெடி ஆகு" என்றான் கட்டளை இடும் தோரணையில். அவளோ உடைகளை தூக்கி தள்ளி வைத்தவள் "மாட்டேன்" என்று சொல்லிக் கொண்டே அவனைப் பார்க்க அவனுக்கு தான் அடுத்து என்ன செய்வதென்று தெரியவே இல்லை. குழந்தை போல அடம் பிடிப்பவளை என்ன தான் செய்ய முடியும் அவனால். அடுத்த கணமே கண்களை மூடி திறந்தவன் "என்னை கோபப்படுத்தாதே காயத்ரி, மழையில நனைஞ்சு நீ அப்படி கஷ்டப்படுறத பார்த்துட்டு இருக்கிற அளவுக்கு நான் ஒண்ணும் மனசாட்சி இல்லாதவன் இல்ல. அதனால தான் உன்னை தூக்கிட்டு வந்து ட்ரீட்மென்ட் கொடுத்தேன். ஆனா எனக்கு உன் மேல கோபம் இல்லன்னு மட்டும் நினைக்காதே.. மரியாதையா கிளம்பு" என்று சொல்ல, அவள் கையை எட்டிப் பிடித்தவள் "ப்ளீஸ், சித்தார்த், நான் பண்ணுனது தப்பு தான். ஆனா ஏமாத்தணும்னு நான் பண்ணல, சென்ஸ் இல்லாம அடுத்தவங்க மனசு புரியாம நடந்துக்கிட்டேன்.. அதுக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க, ஆனா இங்க இருந்து மட்டும் என்னை போக சொல்லாதீங்க.." என்று சொல்ல, அவனோ அவள் பிடித்து இருந்த கையை உதறியவன் "லூசா நீ? இப்படி உளறுற?" என்று சொல்லி விட்டே நெற்றியை நீவியவன், "நீ சொன்னா கேட்க மாட்ட" என்று சொல்லிக் கொண்டே அவளை குனிந்து தூக்கிக் கொண்டே வெளியே நடக்க போக, "என்னை விடுங்க" என்று திமிறினாள் அவள். ஆனால் அவனது உடும்பு பிடியில் இருந்து அவளால் வெளியேற முடியுமா என்ன? அவனோ அவளை தூக்கிக் கொண்டே வாசலை நோக்கி நடக்க, அவன் கழுத்தை கட்டிக் கொண்டவள் அவன் இதழில் தன்னிதழை பதிக்க, இப்போது விரிந்து கொண்டது என்னவோ அவன் விழிகள் தான். அடுத்த கணமே அவளை தூக்கி கட்டிலில் போட்டவன், அவளை அனல் தெறிக்க பார்த்து, "சாவடிச்சிடுவேன் உன்ன" என்று ஒற்றை விரல் நீட்டி எச்சரிக்க, அவளோ அதிர்ச்சியுடன் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்..
அவனோ "உனக்கு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லையா? அஜய் வேற பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டான் தான். நான் இல்லன்னு சொல்லல.. ஆனா அவன் சந்தோஷமா இருக்கிறானா இல்லையான்னு உனக்கு தெரியுமா? இப்போ வரை நீ சந்தோஷமா இருந்தா போதும்னு தானே நினச்சிட்டு இருக்க" என்று சொல்ல, அவளோ "அப்படி இல்ல சித்தார்த்" என்று நலிந்த குரலில் கூறும் போதே அவன் ஆக்ரோஷம் தாங்க முடியாமல் அவள் கண்ணில் இருந்து நீர் துளிர்த்தது. அவனோ "இங்க பாரு, உனக்கு குற்ற உணர்வா இருக்கோ இல்லையோ எனக்கு அதிகமாவே இருக்கு.. அவனோட மனசை உடைக்க நான் காரணமா ஆயிட்டேன்னு குற்ற உணர்வு,. பிடிக்காம அவன் எனக்காக கல்யாணம் பண்ணிகிட்டான்னு நினைக்கும் போது எனக்கு அவ்ளோ பெயின் ஆஹ் இருக்கு.. ஆனா நீ அத பத்தி எல்லாம் கவலை படாம, வீட்டை விட்டு இங்க வந்து இருக்க, உன் அப்பா எவ்ளோ பாவம்னு நினைச்சியா? அதுவும் இல்ல, மோசமான பொண்ணுடி நீ" என்று சொல்ல, அவளுக்கோ சுர்ரென்று வலித்தது. எந்த வாயால் "நீ நல்ல மகள், நல்ல காதலி, நல்ல மனைவியா இருக்க கூடியவ" என்று சொன்னானோ அதே வாயால் அவளை மோசமான பெண் என்று சொல்லி விட்டான் அல்லவா? அவளோ கண்ணில் இருந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே "நான் மோசமான பொண்ணு தான்.. சின்ன வயசுல இருந்து எதுக்கும் ஆசைப்பட்டது இல்ல, இந்த போலீஸ் வேலை எனக்கு பிடிக்கும்னு நினைக்கிறீங்களா? கொஞ்சமும் பிடிக்காது. ஆனா அப்பா ஆசைப்பட்டார்ன்னு அவருக்காக சேர்ந்துக்கிட்டேன்.. இப்படி எல்லாமே அடுத்தவங்களுக்காக தான் பண்ணி இருக்கேன். எனக்கு மனசு விட்டு பேச கூட யாரும் இல்ல, ஆனா நான் என்னை தவிர எல்லாருக்காகவும் தான் எல்லாமே பண்ணினேன்.. ஆனா இந்த காதல் வந்த பிறகு தான் நான் சுயநலமா யோசிக்க ஆரம்பிச்சேன்.. உங்க மேல அளவுக்கதிகமான காதல், எப்படி வந்திச்சு எப்போ வந்திச்சுன்னு எனக்கு தெரியல.. ஆனா கண் மூடி தனமான காதல்.. அதுக்கு முன்னாடி யாருமே எனக்கு பெருசா தெரியல.. தப்பு தான் சித்தார்த், எனக்கு புரியுது.. ஆனா எப்போவுமே உங்க கூட இருக்கணும்னு மட்டும் தான் தோணுது.. அத தவிர எனக்கு எதுவுமே தோண மாட்டேங்குது.. ஏன்னு எனக்கும் தெரியல.. நான் இப்படி இல்ல சித்தார்த்.. என் கரெக்டர் இது இல்ல.. ஆனா ஏன் இப்படி ஆனேன்னு எனக்கே தெரியல.. லவ்வுக்கு இவ்ளோ பவர் இருக்கும்னு எனக்கு இப்போ தான் தெரியுது.. தாலி கட்டணும்னு கூடி யோசிக்காம உங்கள தேடி வந்து இருக்கேன்.. உங்களுக்கு நான் பண்ணுறது முட்டாள் தனமா இருக்கலாம்.. என்னை நீங்க சைக்கோன்னு கூட நினைக்கலாம்.. நிறைய கேஸ்ல பொண்ணுங்க காதலுக்காக சூசைட் பண்ணுறது, கையை கிழிச்சுகிறதுன்னு எல்லாமே பார்த்து இருக்கேன், அப்போ புரியல, ஆனா இப்போ நான் கூட அதே கேடகரி தானே.. நேற்று அந்த மழையில சாப்பிடாம அவ்ளோ நேரம் நின்னு இருக்கேன்.. என் அம்மாக்கு அப்புறம் உங்க கூட தான் இன்டிமேட் ஆஹ் பேசி இருக்கேன்.. அவங்களை இழந்துட்டேன்.. ஆனா உங்கள எப்போவுமே இழக்க கூடாது.. கூடவே இருக்கணும்னு ஒரு வெறி... ஏன் நான் இப்படி ஆகிட்டேன்னு எனக்கு தெரியல..." என்று சொன்னவளோ முகத்தை மூடி விம்மி விம்மி அழ ஆரம்பிக்க, அவளை கோபமாக பார்த்த அவன் விழிகளோ அவளை இப்போது பரிதாபமாக தழுவியது. இப்படி மனதால் வலியை சுமந்து கொண்டு அழுபவளை அவனால் என்ன தான் செய்ய முடியும்?
அவள் அருகே அமர்ந்தவன் அவள் முகத்தை இரு கைகளாலும் தாங்கிக் கொண்டான். அவளோ அவனைப் பார்க்க முடியாமல் விழிகளை தாழ்த்திக் கொள்ள, அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை இரு விரல்களாலும் துடைத்தவன் "இப்போ எதுக்கு இப்படி எல்லாம் யோசிக்கிற? எனக்கு புரியுது நீ சொல்றது.. ஆனா என்னோட நிலைல இருந்து கொஞ்சம் யோசிச்சு பாரு, என்னால அஜய் லைஃப் நல்லா இருக்கும் வரைக்கும் உன் கூட கண்டிப்பா சந்தோஷமா வாழவே முடியாது. அந்த குற்ற உணர்வே என்னை கொன்னுடும்.. இப்போவும் சொல்றேன் நீ பண்ணுனது பெரிய தப்பு.. ஆனா அதையே பேசி பேசி டிஸ்டெர்ப்ட் ஆஹ் இருக்கிற உன்னை டாச்சர் பண்ண நான் விரும்பல.. எனக்கு கொஞ்சம் டைம் கொடு.. அவன் லைஃப் ஹாப்பியா இருந்தா தான் என்னால என்னோட வாழ்க்கையை பற்றியே யோசிக்க முடியும்.." என்று சொல்ல, அவளோ "ஆனா நான் போக மாட்டேன்.. உங்க மனசு மாறும் வரைக்கும் பீட்டரை பார்த்துகிட்டே இங்கேயே இருந்திடுறேன்" என்று முடித்துக் கொள்ள, அவனுக்கு கோபத்துக்கு பதிலாக சிரிப்பு தான் வந்தது. இந்த பொம்மை தான் வேண்டும் என்று அடம் பிடிக்கும் குழந்தையின் மனநிலையில் இருப்பவளை அவனால் என்ன தான் செய்ய முடியும்? அவள் தாயின் இழப்பால் மௌனியாகி போனவள் அவனிடம் தான் இப்போது மனம் விட்டு பேசுகிறாள். தனக்கு தீமை செய்பவர்களுக்கே நன்மை செய்ய நினைப்பவன் தன்னையே உருகி உருகி காதலிப்பவளை விட்டுக் கொடுப்பானா என்ன? அடுத்த கணமே "சரி இருந்துக்கோ.. ஆனா என்னை டிஸ்டர்ப் பண்ண கூடாது.. ரைட்டா?" என்று கேட்க அவளோ "ம்ம் பண்ண மாட்டேன்" என்று சொன்னாள்.