ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வேல்விழி 25

pommu

Administrator
Staff member

வேல்விழி 25

யுவராஜ்ஜோ பெருமூச்சுடன் எழுந்து அவளை நோக்கி நடந்து வந்து அவள் அருகே மண்டியிட்டு அமர, ராமோ, "நான் கொஞ்சம் வெளியே நிக்கிறேன் சார்" என்று சொல்லிக் கொண்டே கதவை மூடி விட்டு வெளியேறி அங்கே இருந்த சுவரில் சாய்ந்து நின்றவன் மனமோ, "இத யார் பண்ணி இருப்பாங்க?" என்ற எண்ணத்திலேயே உழன்று கொண்டு இருந்தது.

அதே சமயம் உள்ளே இருந்த யுவராஜ்ஜோ, தலையை குனிந்தபடி அழுதவளின் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தி அவள் விழிகளுடன் விழிகள் கலக்க விட்டவன், "உனக்கு என்ன தான்டி வேணும்?" என்று கேட்க, அவளோ, "எனக்கு தெரியல" என்றாள் தழுதழுத்த குரலில். பழைய நினைவுகளினால் அவன் மீது வெறுப்பு இருந்த போதிலும் அவன் மேல் காதலும் இருக்க, அவளுக்கு என்ன தான் வேண்டும் என்று அவளுக்கே தெரியவில்லை.

அவனோ அவள் முகத்தை தாங்கி இரு பெருவிரல்களாலும் கண்ணீரை துடைத்தவள், "சத்தியமா நான் வேற பொண்ணு கிட்ட போக மாட்டேன் நந்திதா" என்று சொன்னவன் குரலோ கரகரத்து போக, அவளோ, "அப்படி தானே உங்கள முதலும் நம்புனேன்" என்று பழைய பல்லவியை பாட, அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தால் என்ன என்று தான் தோன்றியது. ஆனாலும் குழப்பத்தில் இருப்பவளை காயப்படுத்த விரும்பாமல், அவள் விழிகளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, "நான் உனக்கு வேணுமா? வேணாமா?" என்று கேட்டான்.

அவன் காதல் பொங்கும் விழிகளை ஆழ்ந்து பார்த்தவளுக்கோ அவனைத் தவிர எந்த எண்ணமும் மறந்து விட, "வேணும்... உங்க மேல கோபமும் இருக்கு, என்னை விட்டு போய்டுவீங்களோன்னு பயமும் இருக்கு" என்று சொன்னவளது முகத்தை நோக்கி குனிந்தவன் இதழ்களோ அவள் இதழ்களை நெருங்கி இருக்க, நூலளவு இடைவெளி மட்டுமே எஞ்சி இருந்தது.

அவள் இதழ்களோ அழுந்த மூடி இருக்க, அவனோ அவள் விழிகளைப் பார்த்துக் கொண்டே அவள் இதழ்களுடன் இதழ்களை உரசி, மூடி இதழ்களை திறக்க வைத்தான். தொட்டால்சுருங்கியோ ஸ்பரிசம் பட்டால் தன்னை மூடிக் கொள்ளும், ஆனால் விந்தையாக, இந்த இதழ் என்னும் தொட்டால்சுருங்கியோ அவன் ஸ்பரிசம் பட்டதுமே தானாக விரிந்து கொண்டது. அவள் கரமோ மேலே எழுந்து அவன் தோளில் அழுத்தமாக பதிய, இதழுடன் இதழ் உரசி அவள் உணர்வுகளை தூண்டி விட்டவன், உன்னிதழுக்கு ஜோடியாக என்னிதழ்களை எடுத்துக் கோள் என்கின்ற தோரணையில் இருவரின் இதழ்களும் அழகாக பொருந்திக் கொண்டன.

நீண்ட நாள் கழித்து மனங்கள் இணைந்த ஆழ்ந்த முத்தம் அது. அவன் தோளில் பதிந்து இருந்த அவளது கரமோ தானாக மேலெழுந்து அவன் சிகைக்குள் கையை கோர்த்து நெரிக்க, இருவரின் விழிகளும் தாமாக மூடிக் கொள்ள, அவன் ஒற்றைக் கரமோ அவள் கழுத்தை அழுந்த பற்றி இருக்க, அடுத்த கரமோ கீழிறங்கி, அவளை அழுத்தமாக வருட ஆரம்பிக்க, உணர்ச்சி வேகத்தில் தன்னை மறந்து இருக்கும் இடம் மறந்து அத்து மீற ஆரம்பித்து விட, அவள் சட்டென்று விழித்துக் கொண்டாள்.

தன்னை உணர துடிக்கும் அவன் கரத்தை வெடுக்கென்று தட்டி விட்டவளோ அவன் மார்பில் கையை வைத்து தள்ளிக் கொண்டே அவனை முறைத்துப் பார்த்தவள், "இப்படி தான் என்னை பேசி பேசியே மயக்க வேண்டியது" என்று கோபமாக சொல்லிக் கொண்டே எழ, அவனுக்கு சுர்ரென்று கோபம் எகிறினாலும் அதனை கடுபடுத்தியபடி அவளை முறைத்துக் கொண்டே எழுந்தவன், "என்னை பேச வைக்காத நந்திதா, கஷ்டப்பட்டு கன்ட்ரோல் ல இருக்கேன்" என்று சொல்ல,

அவனை முறைத்துக் கொண்டே வெளியேற போக, அவள் கையை பிடித்து அதிரடியாக தன்னை நோக்கி இழுத்து இருந்தான். அவளோ அவன் மார்பில் மோதியவளோ, அவனிடம் இருந்து கையை உருவ முயன்று கொண்டே, "என்னை விடுங்க" என்று திமிறினாள். அவனோ, "ஹேய், ட்ரெஸ்ஸை சரி பண்ணிட்டு போடி" என்று சொல்லிக் கொண்டே அடுத்த கையால் அவள் உடையை சரி செய்து விட,

அவளோ, "அதுக்கும் நீங்க தானே காரணம்" என்று சொன்னபடி அவன் கையில் இருந்து தனது கையை உருவி எடுத்தாள். அவனோ, "ஆமா நான் தான் காரணம் அதுக்கு என்ன இப்போ?" என்று கேட்டபடி அவளை தாண்டி வெளியே சென்றவனோ, "உள்ள வாடா" என்று சுவரில் சாய்ந்து நின்ற ராமை அழைக்க அவனும் யோசனையாக உள்ளே நுழைந்தவனோ, "இவ்ளோ தூரம் பிளான் பண்ணி இருக்கான்னா அவ சும்மா ஆளா இருக்க மாட்டா சார்" என்று சொன்னான்.

யுவராஜ்ஜோ, "என்னை யுவான்னு கூப்பிடு, சார் சார்ன்னு கூப்பிடும் போது ரொம்ப டிஸ்டன்ஸ் ஆஹ் தெரியுது" என்று சொல்ல, இருவரையும் முறைத்துப் பார்த்துக் கொண்டே அங்கே இருந்த சுவரில் சாய்ந்து நின்ற நந்திதாவோ மார்புக்கு குறுக்கே கைகளை கட்டி இருந்தாள்.

ராமோ, "இல்ல சார் அது" என்று இழுக்க, யுவராஜ்ஜோ, "ப்ளீஸ் டா, ரொம்ப டிஸ்டன்ஸ் ஆஹ் போன போல பீல் ஆகுது" என்று சொல்லிக் கொண்டே அவன் தோளில் கையை போட்டபடி அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்தவன் ஏறிட்டு முன்னே நின்ற நந்திதாவைப் பார்த்தான். அவள் முகமோ கோபத்தில் அநியாயத்துக்கு சிவந்து போய் இருக்க, "வந்து இரு நந்திதா" என்று அருகே இருந்த இருக்கையை காட்ட, "இல்ல நான் நிக்கிறேன்" என்றாள் அழுத்தமான குரலில்.

யுவராஜ்ஜோ, "ஓகே" என்று தோள்களை உலுக்கியவன், ராமுக்கு வந்த கடித உறையை பார்த்து விட்டு, "இங்க இருந்து தான் போஸ்ட் பண்ணி இருக்கா, ஆள் யாருன்னு தெரியல... சூப்பரா பிளான் பண்ணி, ரெண்டு பேரையும் சந்திக்க வச்சதும் இல்லாம என்னையும் அத பார்க்கிற போல பண்ணி இருக்கா, சோ அவளுக்கு நான் இங்க வர்றது தெரிஞ்சு இருக்கு" என்று சொல்லிக் கொண்டே இருக்கும் போது யுவராஜ்ஜின் போன் அலறியது. மறுமுனையில் வேறு யாருமல்ல ஸ்ரீ தான்,. "என்னடா பண்ணுற? இன்னுமே காணோம்" என்று கேட்க,

அவனோ, "இதோ வரேன், இன்னும் ரெண்டு பேருக்கு டேபிள் ரெடி பண்ண சொல்லு" என்று சொல்லி விட்டு வைக்க, ராமோ, "அதே தான் யுவா, நம்மள சுத்தி தான் அவ இருக்கா… ஆனா ஆள் யாருன்னு தெரியல" என்று சொன்னான். யுவராஜ்ஜோ எதுவும் பேசாமல் மௌனமாக நின்ற நந்திதாவிடம், "நீ என்ன நினைக்கிற?" என்று கேட்க, அவளோ, "ஒண்ணும் நினைக்கல" என்றாள் வெடுக்கென்று.

சலிப்பாக தலையாட்டியவன், "ராம் என்னோட கெஸ்ட் ஹவுஸுல தான் இன்னும் டூ டேய்ஸ்ல பர்த் டே, இன்னைக்கு நைட் அங்கே டின்னர் இருக்கு, நீயும் கண்டிப்பா வந்திடு, பேசிக்கலாம், என்னோட பிரெண்ட் ஜெய்யையும் வர சொல்றேன், அவன் போலீஸ்… சோ யார்னு சீக்கிரம் கண்டு பிடிச்சிடலாம்" என்று சொல்லிக் கொண்டே எழுந்தவனோ, "இப்போ சேர்ந்து லன்ச் சாப்பிடலாம் வா" என்று சொன்னான். அவனோ, "இல்லை" என்று இழுக்க, அவனை முறைத்தவன், "வாடா" என்று உரிமையாக அவன் கையை பிடித்தவன்,

அருகே நின்ற நந்திதாவிடம், "மேடம் என்ன பண்ண போறீங்க?" என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி கேட்டான். அவளோ, "நான் வரல" என்று சொல்ல, யுவராஜ்ஜோ, "அப்போ கிளம்பு" என்று சொல்லிக் கொண்டே முன்னே செல்ல, அவளோ அவனை தாண்டி சென்றவள், "நான் வருவேன், என்னை கிளம்ப சொல்ல நீங்க யாரு?" என்றாள். ராமும் யுவராஜ்ஜூம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, அவளோ, "நான் ஒண்ணும் உங்களுக்காக வரல, ராம் கண்ணால அழைச்சார்" என்று சொல்ல, ராமோ, "நான் எப்போ கூப்பிட்டேன்" என்று நாடியை நீவியபடி யோசனையாக கேட்டான். அவளோ, "கூப்பிடிங்க ராம், பயப்படாம சொல்லுங்க" என்று சொல்ல,

அவனோ, "எதுக்கு நான் பயப்படணும்" என்று கேட்க, யுவராஜ்ஜோ, அடக்க முடியாமல் இதழ் பிரித்து சிரித்தவன், "சரி அவன் தான் கூப்பிட்டு நீ வர்ற... போதுமா?" என்று நந்திதாவிடம் கேட்க, அவளோ இருவரையும் முறைத்து விட்டு விறுவிறுவென முன்னே சென்றாள். ராமோ, "நான் நிஜமா கூப்பிடல" என்று சொல்ல, ஒற்றை கண்ணை அடித்த யுவராஜ், "நீ அநியாயத்துக்கு நல்லவன், அது தான் பிரச்சனை" என்று சொல்லிக் கொண்டே நடக்க, அவனோ, "ஒண்ணுமே புரியல" என்று சொல்லிக் கொண்டே அவர்களுடன் நடந்தான்

அவர்கள் அனைவரும் சாப்பாட்டு அறையினுள் நுழைய, அங்கே இருந்தவர்களோ எழுந்து நிற்க, யுவராஜ் அங்கிருந்த மேசையில் அமர்ந்தபடி இருவரையும் அமர சொன்னான். ஸ்ரீயோ, "நீ எங்கடா இங்க?" என்று ராமிடம் கேட்க, அவனோ, "அது ஒரு பெரிய கதை" என்று சொல்லிக் கொண்டே அமர, அவர்களுக்கான உணவு பரிமாறப்பட்டது. நந்திதாவோ யுவராஜ்ஜூக்கு அருகே அமர்ந்து இருக்க, அவனோ அனைவரிடமும் பேசிக் கொண்டே சாப்பிட்டவன், நந்திதாவை போட்டோ எடுக்க வந்தவனை நோக்கி சொடக்கிட்டவன், "என்னை மட்டும் எடு" என்று சொன்னான்.

அவளோ அவனை யோசனையாக திரும்பிப் பார்க்க, அவள் காது நோக்கி குனிந்தவன், அவள் செவிகளில் இதழ்கள் உரச, "அழுதழுது உன் முகம் எப்படி இருக்குன்னு பாரு, இத பார்த்தாலே இஷ்டத்துக்கு பேசுவானுங்க" என்று சொல்ல, அவளுக்கும் அது சரியாக பட, குனிந்தபடி சாப்பிட ஆரம்பித்தாள். யுவ்ராஜ்ஜூம், "எக்ஸ்ரா ஆடினரி லன்ச்" என்று பாராட்டி விட்டு அவர்களுக்கு கைகளை குலுக்கியவன், அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்து விட்டு வெளியேறி வந்தான்.

அவர்களை வழியனுப்ப ராம் வெளியே வந்து நிற்க, ஸ்ரீயிடம், "நைட் வரும் போது ராமையும் அழைச்சிட்டு வாடா, நீ என் கார்ல போ, நான் நந்திதா கூட போறேன், அப்படியே நைட்டுக்கு ஜெய்யையும் வர சொல்லிடு" என்று சொல்லிக் கொண்டே அவளை பார்க்க, சுற்றி பலர் இருந்ததால் அவனை அவமானப்படுத்த விரும்பாதவள் அவனுடன் காரை நோக்கி நடந்தாள்.

அவனோ கரத்தை நீட்ட, அதில் கார் கீயை வைத்தவள், பக்கத்து சீட்டில் ஏறிக் கொள்ள, அவனோ ட்ரைவர் சீட்டில் ஏறிய அடுத்த கணம் காரை வேகமாக கிளப்பினான். நீண்ட நேரம் வெவ்வேறு சிந்தனைகளில் இருக்க, அவன் போன் அலறியது. காதில் இருந்த ப்ளூ டூத்தை அழுத்தியவன், "சொல்லுடா ஸ்ரீ" என்க, மறுமுனையில் இருந்த ஸ்ரீயோ, "ஜெய்யோட அம்மாவுக்கு உடம்பு முடியலன்னு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்காங்களாம் யுவா, நைட் வர முடியாதாம்" என்க,

பெருமூச்சுடன், "ம்ம்" என்று சொல்லி விட்டு போனை வைத்தவன் பக்கவாட்டாக திரும்பி நந்திதாவைப் பார்த்தான். அவள் முகமோ முன்னால் வெறித்தபடி பார்த்து இருக்க, அவள் மூக்கோ சிவந்து இருக்க, அவள் மனதில் என்ன ஓடிக் கொண்டு இருக்கின்றது என்று அவனுக்கும் தெரியவே இல்லை.

அவளை மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல் காரை ஓட்டியவனோ, "ஆதி கூட இரு, நான் கெஸ்ட் ஹவுஸ் எல்லாம் பார்த்துகிறேன்… நைட் கார் அனுப்புறேன் வந்துடு" என்று சொல்லிக் கொண்டே அவன் வாசலில் நிறுத்த, அவளோ பதில் எதுவும் கூறாமல் மௌனமாக காரில் இருந்து இறங்கி உள்ளே சென்றாள். அவள் முதுகை வெறித்தவனோ, "வருவாளா இல்லையான்னு கூட சொல்லாம போறா" என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து காரில் கிளம்பினான்.

அன்று இரவு அவன் கார் அனுப்பி இருக்க, ஆயத்தமாகி இருந்தவளோ குழந்தையை நீலாம்பரியிடம் கொடுத்து விட்டு புறப்பட்டு தான் இருந்தாள். அவர்களது கெஸ்ட் ஹவுஸ் முழுதும் அலங்காரத்தினால் ஜொலித்துக் கொண்டு இருக்க, காரில் இருந்து இறங்கியவள் கண்ணில் அப்போது தான் உள்ளே வந்த ஸ்ருதி தென்பட்டாள்.

"என்னமா வீட்டுக்காரியே லேட்டா வர்றதா?" என்று கேட்டுக் கொண்டே நந்திதாவுடன் உள்ளே நுழைய, ஹாலில் பிறந்த நாளுக்காக அனைத்து அலங்காரங்களும் கோலாகலமாக செய்யப்பட்டு இருந்தது. அனைத்தையுமே சிறிது நேரம் நின்று சரி பார்த்துக் கொண்டிருக்க, அப்போது தான் மொட்டை மாடியில் இருந்து இறங்கி வந்த ஸ்ரீயோ, ஸ்ருதியை மென் சிரிப்புடன் பார்த்துக் கொண்டே வர, அவளுக்கும் கன்னங்கள் அவன் பார்வை வீச்சில் சிவந்து தான் போனது. அவனோ ஸ்ருதியின் அருகே வந்தவன், "மேல வா" என்று சொல்ல,

அவளும் அருகே நின்ற நந்திதாவிடம், "மேல வா நந்திதா" என்று சொல்லி விட்டு ஸ்ரீயுடன் முன்னே சென்று விட்டாள். நந்திதாவும் அலங்காரங்களை பார்த்து விட்டு, "ரொம்ப தாகமா இருக்கே" என்று சொல்லிக் கொண்டே அங்கே இருந்த குளிர்சாதன பெட்டி அருகே சென்று நீரை அருந்துவதற்காக அதனை திறந்தாள். அங்கே கண்ணாடி பாட்டில்களில் தான் நீர் வைப்பதே வழக்கம், அவளும் அங்கிருந்த பாட்டிலை திறந்து வாய்க்குள் ஊற்றியவளுக்கு வித்தியாசமான உணர்வாக இருக்க, "இது என்னன்னு தெரியலையே, ஆனா நல்லா இருக்கு" என்று சொல்லிக் கொண்டே அதனை மீண்டும் மீண்டும் வாய்க்குள் ஊற்றினாள்.

அதன் விளைவு, வொட்கா குடித்தவளுக்கு போதை எல்லை இல்லாமல் ஏற நிலை தடுமாறி தான் போனாள். அவளோ, "எனக்கு ஏன் எல்லாமே மங்கலா தெரியுது?" என்று நினைத்துக் கொண்டே தள்ளாடி தள்ளாடி நடந்தவளோ மொட்டை மாடிக்கு மெதுவாக ஏறினாள். இதே சமயம், மொட்டை மாடியில், யுவராஜ், ஸ்ரீ, பிரகாஷ், ஸ்ருதி, மதனா மற்றும் ராம் என்று அனைவருமே மித்ராவின் விஷயத்தை பற்றி பேச கூடி இருக்க,

யுவராஜ்ஜோ, "நந்திதா இன்னுமே கீழ நின்னு என்னடா பண்ணுறா?" என்று கேட்க, ஸ்ரீயோ, "டெக்கரேஷன் எல்லாமே பார்த்துட்டு இருக்கா" என்று சொன்னான். அனைவருமே அங்கே பால்கனியில் சாய்ந்து நின்று தான் பேசிக் கொண்டே இருக்க, யுவராஜ்ஜோ, "சரி அது வரைக்கும் நாம ஏதும் ட்ரிங்க் பண்ணலாம், இரு கொண்டு வர சொல்றேன்" என்று சொல்லிக் கொண்டே கீழே நின்ற வேலையாளை அழைக்க போனை எடுத்தவன், "ஸ்ருதி அண்ட் மதனாவுக்கு சாஃப்ட் ட்ரிங்க்ஸ் சொல்றேன்" என்று சொல்ல,

ராமோ, "நானும் குடிக்க மாட்டேன்" என்றான். அவனை பக்கவாட்டாக திரும்பி பார்த்த யுவராஜ்ஜோ, "அநியாயத்துக்கு நல்லவன் டா நீ" என்று சொல்லிக் கொண்டே போனை பார்க்க, அங்கே இருந்த மேசை தள்ளுப் பட்ட சத்தம் கேட்டது. அனைவரும் உடனே அந்த திசையில் திரும்பிப் பார்க்க, ஆடி ஆடி அவர்களை நோக்கி வந்து கொண்டு இருந்தது வேறு யாருமல்ல நந்திதாவே தான்.

யுவராஜ்ஜோ, "என்னடா இது ஆடி ஆடி வர்றா?" என்று யோசனையுடன் கேட்க, ஸ்ரீயோ, "குடிச்ச போலவே பீல் ஆகுதே" என்றான். உடனே யுவராஜ், "அவளுக்கு அந்த பழக்கம் எல்லாம் இல்லையே" என்க, பிரகாஷோ, "பிரிட்ஜில இன்னைக்கு வாங்கி வச்சோம்ல, அத எடுத்து இருப்பாங்களோ" என்று கேட்டுக் கொண்டு இருக்கும் போதே அந்த இடத்தை அடைந்து இருந்தாள் நந்திதா.
 
Super sis
 
Top