வேல்விழி 42
அதுவரை குழந்தைகளுடன் இருந்த நீலாம்பரியோ அவள் வந்ததுமே, "என்னாச்சு நந்திதா? இப்போ எப்படி இருக்கு?" என்று கேட்க, அவளோ அவனை திரும்பி யோசனையாக பார்க்க, அவனோ, "என்னோட அம்மா" என்று சொன்னான். நீலாம்பரி மீண்டும் நெஞ்சில் கையை வைத்தவள், "மறுபடி மறந்துட்டாளா?" என்று கேட்க,
அவனோ, "இல்லம்மா திரும்ப நினைவு வந்திடுச்சு… ஆனா கல்யாணத்துக்கு முன்னாடி மட்டும் தான் நினைவு வந்திருக்கு" என்று சொன்னான். அதைக் கேட்ட நீலாம்பரியோ, "என்ன தான் பொல்லாத அம்னீசியாவோ" என்று சலிப்பாக சொல்ல, யுவராஜ்ஜின் தந்தையோ, "போச்சு போ, இது வேறையா?" என்று நினைத்துக் கொண்டார்.
நந்திதா, "என்னோட அப்பா, அண்ணா அண்ணி, அவங்க பாப்பா, எல்லாரும் என்ன பண்ணுறாங்க?" என்று கேட்க, அவன் முகம் மட்டும் அல்ல அங்கிருந்த அனைவரின் முகமும் இறுகி போக முதலில் சுதாரித்த யுவராஜ், "உன்னோட குடும்பம் பாரின்ல இருக்காங்க, அத கொஞ்சம் கொஞ்சமா சொல்றேன், நீ முதல்ல ரெஸ்ட் எடு" என்று மேலோட்டமாக மட்டும் சொன்னவனுக்கோ, அவள் குடும்பத்தை பற்றி கேட்டால் சமாளிப்பது தான் பெரும் தலை வலியாகி போனது.
அவளும் நேரே குழந்தைகள் அருகே மண்டியிட்டு இருவரையும் முத்தமிட்டவளோ நீலாம்பரியிடம் திரும்பி, "எனக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்கன்னு நம்பவே முடியல அத்தை" என்று சொல்ல, அவளை மேலிருந்து கீழ் பார்த்த நீலாம்பரியோ, "நீ நம்பலைன்னாலும் அது தான் நெசம்" என்றார். உடனே யுவராஜ்ஜோ, "அம்மா அவ திரும்ப ப்ரெக்னன்ட் ஆஹ் இருக்கா" என்று சொல்ல, மெலிதாக புன்னகைத்த நீலாம்பரியோ அவள் அருகே வந்து கையினால் சுத்தி போட்டவர், "நீ முதல் போய் ரெஸ்ட் எடு… போக போக எல்லாமே சரி வரும்" என்று சொன்னார்.
அவளும் குளித்து விட்டு தூங்கி விட, அவளையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டு இருந்தவன் வைத்தியருக்கு அழைத்து இருந்தான். வைத்தியரோ, "சார் சொல்லுங்க" என்று சொல்ல, அவனோ, "இப்போ வரைக்கும் ஓகே டாக்டர், அவளுக்கு நினைவு வருமா இல்லையா?" என்று கேட்க, அவரோ, "சொல்ல முடியாது யுவராஜ், வரலாம் வராமலும் போகலாம், இது வரைக்கும் அவங்களுக்கு நினைவு வந்ததே பெரிய விஷயம் தானே?
அவங்கள வெளியே அடிக்கடி அழைச்சிட்டு போங்க… வீகென்ட் பிகினிக் போங்க, நினைவு வருதோ இல்லையோ, உங்க கூட நல்ல ரிலேஷன்ஷிப் பில்ட் ஆகும்" என்று சொல்ல, அவனோ, "ஷோர் டாக்டர்" என்று சொல்லிக் கொண்டே போனை வைத்து இருந்தான். அவளும் தூங்கி எழுந்த நேரம், அவளை பார்க்க ஸ்ரீ, ஸ்ருதி, மதனா மற்றும் பிரகாஷ் என்று அனைவரும் வந்து இருக்க, அவளை ஹாலுக்கு யுவராஜ் அழைத்து வந்து அமர வைக்க அனைவரையும் திரு திருவென ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் கண்களோ ஸ்ருதியின் மேடிட்ட வயிற்றில் பதிய "நீங்களும் ப்ரெக்னன்ட் ஆஹ்?" என்று கேட்டாள்.
ஸ்ருதியோ, "நீங்களுமா? அப்போ நீயும் ப்ரெக்னன்ட் ஆஹ்?" என்று கேட்க, அனைவரின் பார்வையும் யுவராஜ்ஜில் பதிய, அவனோ கண்களை மூடி திறந்தவன், ஆம் என்கின்ற தோரணையில் தலையை ஆட்ட, ஸ்ரீயோ, "அவளுக்கு நினைவு இருக்கோ இல்லயோ உன் வேலையை மட்டும் கரெக்ட் ஆஹ் பார்க்கிற" என்று சொன்னான்.
அவர்கள் பேசுவதை புரிந்து கொள்ள முடியாமல் அப்படியும் இப்படியும் நந்திதா பார்க்க, யுவராஜ்ஜோ, "நந்திதா, இது தான் என் பிரென்ட் ஸ்ரீ, இது அவன் வைஃப் ஸ்ருதி, இது மதனா இது பிரகாஷ்" என்று அனைவரையும் அறிமுகப்படுத்தியவன் அவர்களின் தொழில் பற்றியும் சொல்ல, அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்தவளோ அவர்களை பார்த்து மென்மையாக புன்னகைத்தவள், "இப்போ எத்தனை மாசம்?" என்று ஸ்ருதியுடன் பேச ஆரம்பித்து விட்டாள்.
மதனாவும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள, ஸ்ரீயோ கண்களை யுவராஜ்ஜை நோக்கி காட்டியவன் பால்கனிக்கு வரும்படி சைகை செய்ய, அவனும் எழுந்து பால்கனிக்கு வந்தான்.
அங்கே இருந்த கம்பியில் கையை அழுந்த பற்றி இருந்த யுவராஜ் அருகே ஸ்ரீ நின்று இருக்க, "டாக்டர் என்னடா சொன்னார்?" என்று கேட்க, அவனோ பெருமூச்சுடன், "நினைவு வரலாம் வராமலும் போகலாம்" என்று சொன்னான்.
ஸ்ரீயோ, "உன்னோட பாய்ண்ட் என்ன? நினைவு வரணுமா இல்ல வரக் கூடாதா?" என்று கேட்க, பெருமூச்சுடன் அவனை பக்கவாட்டாக திரும்பி பார்த்த யுவராஜ்ஜோ, "அவ எப்படி இருந்தாலும் என் கூடவே இருப்பா டா, அவ பார்வதியா இருந்த சமயமே எனக்கு அது புரிஞ்சுது… இப்போ அவளுக்கு ராம் கல்யாணம் பண்ணிக்க போற விஷயம் கஷ்டமா இருக்கலாம், ஏன்னா அவள பொறுத்தவரை நான் புது மனுஷன், ஆனா கண்டிப்பா அவ என்னை லவ் பண்ணுற போல நடந்துப்பேன்.
ஆனாலும் மனசில ஒரு உறுத்தல் இருந்துட்டே இருக்கும்… அவளை ஏமாத்தி வாழுறேனோன்னு ஒரு தவிப்பு கண்டிப்பா இருக்கும். அதே சமயம் அவளுக்கு எல்லாமே நினைவு வந்து என்னை மன்னிச்சு ஏத்துக்கிட்டு வாழ்ந்தா அந்த வாழ்க்கை அவ்ளோ சூப்பரா இருக்கும்… ஆனா அவ நினைவு வந்தாலும் மன்னிப்பாளான்னு தான் தெரியல" என்று சொன்னவனின் குரல் கம்ம, அவனை இறுக அணைத்த ஸ்ரீயோ, "எல்லாமே நல்லா நடக்கும் யுவா, இவ்ளோ தடை பிரச்சனை தாண்டி வந்தாலும் அவ இன்னுமே உன் கூட தான் இருக்கா... சோ கண்டிப்பா ரெண்டு பேரும் ஹாப்பியா இருக்கிற நாள் வந்து சேரும்" என்று சொல்ல,
மென் புன்னகையுடன் அவனில் இருந்து விலகிக் கொண்ட யுவராஜ், "உன் வேர்ட்ஸ் எனக்கு எக்ஸ்டரா எனெர்ஜி தருது" என்று சொன்னான். ஸ்ரீயோ, இதழ் பிரித்து சிரித்து விட்டு, "உன் பொண்டாட்டியை கரெக்ட் பண்ணுற வழிய பாரு" என்று சொல்ல, பெருமூச்சுடன், "அவளை எத்தனை தடவை தான் கரெக்ட் பண்ணுறது… முடியல டா" என்று சலித்துக் கொள்ள, "ரொம்ப பண்ணாதே, அதெல்லாம் உனக்கு ஐஸ்க்ரீம் சாப்பிடுற போலன்னு எனக்கு நல்லாவே தெரியும்" என்று சொல்ல, அவனோ, "சரி சரி வாடா" என்று வெட்கம் கலந்து சொன்னபடி அவனை அழைத்துக் கொண்டே ஹாலுக்குள் வந்தான் யுவராஜ்.
அவர்கள் அனைவரும் பேசி விட்டு செல்ல, நந்திதாவோ குழந்தைகளுடன் அறைக்குள் வந்தவளோ, அவர்களிடம் சிரித்து பேச ஆரம்பித்து விட, நினைவு இல்லை என்றாலும் குழந்தைகளுடன் குழந்தையாக இருப்பவளை ரசனையாக பார்த்துக் கொண்டே ஷேர்ட்டை கழட்டினான் யுவராஜ். பேசிக் கொண்டு இருந்தவள் விழிகளோ யுவராஜ்ஜின் மீது படிய அவன் படிக்கட்டு தேகத்தை பார்த்து ஒரு கணம் ஸ்தம்பித்து போனவளுக்கு பேச்சு வர மறுக்க,
அவனோ அவள் பார்வை போகும் இடத்தை குனிந்து பார்த்து விட்டு அவளை பார்த்து, "என்ன?" என்கின்ற ரீதியில் ஒற்றைப் புருவத்தை உயர்த்த, இல்லை என்ற தோரணையில் தலையை ஆட்டி விட்டு குழந்தைகளை பார்க்க, அவனோ அடக்கப்பட்ட சிரிப்புடன் குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.
அவனோ அடுத்தடுத்த நாட்களை அவளுடனேயே கழிக்க, அவளோ தனது குடும்பத்தை பற்றி தொடர்ச்சியாக கேட்க, அவனும் எரிச்சலாக, "சொல்ற நேரம் சொல்லுவேன்… கொஞ்சம் சும்மா இரு" என்று கடுப்பில் சொல்லி விட்டான். உடனே அவள் கண்ணில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிய, அவள் முகத்தை தாங்கியவனோ, "இப்போ எதுக்குடி அழுற? கண்டிப்பா எல்லாமே சொல்லுவேன்… குழந்தைங்க கூட இரு" என்று சொன்னான்.
அவளும் கண்களை துடைத்து விட்டு குழந்தைகளுடன் விளையாட ஆரம்பித்து விட்டாள். அன்றிரவு, பால்கனியில் நின்று வானத்தின் நட்சத்திரங்களையே பார்த்துக் கொண்டு இருந்தவள் அருகே வந்த யுவராஜ், "நாளைக்கு ராமோட கல்யாணம், நான் கண்டிப்பா போகணும், நீ?" என்று இழுவையாக கேட்க, அவளோ அவனை திரும்பி பார்த்தவள், "உங்க வைஃப்பா நான் வர தானே வேணும்" என்று சொல்ல, அவனும் அவளை பெருமையாக பார்த்து விட்டு அறைக்குள் புகுந்து கொள்ள, அவளும் அறைக்குள் சென்று குழந்தைகளை அணைத்துக் கொண்டே தூங்கி விட்டாள்.
அடுத்த நாள் இருவரும் ஆயத்தமாகி திருமணத்துக்கு புறப்பட்டு இருக்க, அங்கே அவர்களை அனைவரும் வரவேற்க, அவனோ அவள் கையை பற்றி இருந்தவன் விடவே இல்லை. வழமையாக அவளை விட்டு விட்டு தனது நண்பர்களிடம் பேச போய் விடுவான். ஆனால் இப்போது அவளுக்கு தானே எதுவும் நினைவிலேயே இருக்கவில்லை… அதனாலேயே அவள் கரத்தை பற்றிக் கொண்டு நடந்தவன் ஒவ்வொருவர்களின் பெயரையும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றும் சொல்லிக் கொண்டே வர, அவளும் பார்த்துக் கொண்டே வந்தாள்.
இதே சமயம், பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்த திருமண மேடையில் வந்து ராம் அமர, அவனைப் பார்த்து விட்டு யுவராஜ்ஜை பார்க்க, அவனோ, "கல்யாணத்தை நிறுத்தலாமா?" என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்டான்.
அவளோ, "பையன் அந்த பொண்ண ரொம்ப லவ் பண்ணுறான் போல… முகத்தை பாருங்க ஆயிரம் வாட்ஸ் பல்ப் போல பிரகாசமா இருக்கு, சந்தோஷமா இருக்கட்டும்" என்று சொல்ல, சத்தமாக சிரித்தவன், "நீ நினைக்கிற போல இல்ல, அவன் பாலே கில்லாடி… அக்ஷரா ப்ரெக்னன்ட் தெரியுமா?" என்று சொல்ல, வாயில் கையை வைத்த நந்திதாவோ, "உண்மையாவா?" என்று அதிர்ந்து கேட்க, அவனோ, "ம்ம்" என்றான்.
அவளோ, "ராமா காரணம்?" என்று மறுபடி நம்பாமல் கேட்க, அவனோ, "ம்ம்" என்றான் மறுபடியும் அடக்கப்பட்ட சிரிப்புடன். அவளோ கடுப்பாக, "ச்ச, பொறுக்கி, என்ன வேலை பார்த்து இருக்கான். நான் அவன் மேல எவ்ளோ மரியாதை வச்சு இருந்தேன் தெரியுமா?" என்று சரமாரியாக திட்ட, அவனோ, "பாவம்டி, விடு விடு" என்று சொன்னான். அவளோ, "க்கும்" என்று இதழ்களை சுழித்தவள் அங்கே வந்து பக்கத்தில் அமர்ந்து ஸ்ருதியுடன் பேச ஆரம்பித்து விட, அக்ஷராவும் தேவதை போல நடந்து வந்து மண்டபத்தில் அமர்ந்தாள்.
ராமோ அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருக்க, அவளோ அவனை நோக்கி சரிந்தவள், "நைட் பார்த்துக்கலாம் ராம்... எல்லாருமே பார்க்கிறாங்க" என்று சொல்ல. அவனோ தலையை உலுக்கி தன்னை சமன் செய்தவன் மாங்கல்யத்தை அவள் கழுத்தில் அணிவித்து அவளை தனது சரிபாதி ஆக்கி இருந்தான்.
அவர்களை வாழ்த்தி விட்டு சாப்பிட்டவர்கள் வீட்டுக்கு புறப்படும் நேரம் நெருங்கி விட, ஸ்ரீ அருகே வந்த யுவராஜ்ஜோ, "இந்த வீகென்ட் பிக்னிக் போகலாம்டா” என்றான். அவனோ, "ஓகேடா எங்க போகலாம்" என்று சொல்ல, அவனோ குரலை செருமிக் கொண்டே, "நந்திதா விழுந்த இடத்துக்கு" என்று சொன்னதுமே ஸ்ரீயின் விழிகள் விரிய, "என்னடா சொல்ற?" என்று கேட்க,
அவனோ, "ம்ம் அவளோட இப்படி ஏமாத்தி வாழ முடியல ஸ்ரீ, ஒண்ணுமே தெரியலன்னா கூட எனக்கு பிரச்சனை இல்ல… ஆனா பாதி மட்டும் தெரிஞ்சு இருக்கிறது ஏனோ நெருடலா இருக்கு, அவளுக்கு எல்லா உண்மையும் தெரியணும்" என்று சொன்னதுமே அவனை பெருமிதத்தோடு பார்த்த ஸ்ரீயோ, "கண்டிப்பா போகலாம்டா" என்று சொல்லிக் கொண்டான்.
அவர்களது படமோ போஸ்ட் ப்ராடக்க்ஷன் வேலையில் இருக்க, பிராகாஷ் அதில் பிசியாக இருக்க, மதனாவோ ஊருக்கு புறப்பட்டு இருக்க, ராம் மற்றும் அக்ஷரா ஹனிமூன் புறப்பட்டு இருந்ததால் பிக்னிக்குக்கு வந்தது என்னவோ ஸ்ரீயின் குடும்பமும் யுவராஜ்ஜின் குடும்பமும் தான். நீலாம்பரியோ, "குழந்தைகள் அங்கே இங்க அழைச்சிட்டு போகாதேடா, நீயும் நந்திதாவும் மட்டும் போயிட்டு வாங்க" என்று சொல்ல, அவர்கள் இருவரும் தான் புறப்பட வேண்டிய நிலை.
ஒரே வண்டியில் அவர்கள் செல்ல ஸ்ரீ அருகே ஸ்ருதியும் யுவராஜ் அருகே நந்திதாவும் இருக்க, அந்த மலை அருகே ஒரு கெஸ்ட் ஹவுஸ் புக் பண்ணி இருந்தார்கள். அன்று குளித்து ஆயத்தமாகி அன்று மாலை அந்த மலைக்கு புறப்பட்டு இருக்க, அதனை நெருங்கும் போதே நந்திதாவின் உடலில் ஒரு அதிர்வு உண்டானது.
அவள் விழுந்த இடத்தையே பார்த்துக் கொண்டு இறங்கியவளிடம், "என்னாச்சு நந்திதா?" என்று கேட்க, அவளோ, "இந்த இடத்தை பார்க்கும் போது என்னவோ பண்ணுது" என்று சொல்லிக் கொண்டே அவன் கையை பற்றிக் கொண்டு நடந்தவளுக்கு உடல் நடுங்க, நிலை தடுமாறி விழ போனாள். உடனே அவளை இறுக பற்றிய யுவராஜ்ஜோ, "ஆர் யூ ஓகே?" என்று கேட்க. அவளோ, "என்னால இங்க இருக்க முடியல யுவராஜ், இங்க இருந்து கிளம்பலாம் ப்ளீஸ்" என்று சொல்ல,
அர்த்தமுள்ள பார்வையை ஸ்ரீயை நோக்கி வீசியவன் அவளை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான் அவர்கள் ரூம் புக் செய்து இருந்த இடத்துக்கு… அன்று இரவு அனைவரும் ரெஸ்டாரண்ட்டில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு தத்தமது அறைக்குள் நுழைந்து கொண்டார்கள். அறைக்குள் வந்ததுமே கதவை தாளிட்ட யுவராஜ்ஜைப் பார்த்தவளோ, "இந்த கொஞ்ச நாளுல எனக்கு உங்கள எப்படி புடிச்சுதுன்னு தெரியலையே" என்று சொல்ல,
அவனோ அடக்கப்பட்ட சிரிப்புடன் அவள் அருகே வந்து அமர்ந்தவன், "இத உனக்கு எல்லாம் நினைவு வந்ததுமே சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன்" என்றான். அவளோ, "அப்போ என் கூட நிறையவே சண்டை போடுவீங்களா?" என்று கேட்க, அவனோ அவளை ஆழ்ந்து பார்த்தவன், "உன்னை எவ்ளோ முடியுமோ அவ்ளோ கஷ்டப்படுத்தி இருக்கேன்" என்று சொல்லி விட்டு படுக்க போக, அவன் கையை பிடித்தவள், "கொஞ்சம் பேசிட்டு இருக்கலாமே" என்றாள்.
அவனோ, பெருமூச்சுடன் அவள் கரம் மீது கரம் வைத்தவன், "பேசுறது ஒண்ணும் பிரச்சனை இல்ல, எனக்கு தான் உன்னை கட்டி பிடிக்கணும் கிஸ் பண்ணனும்னு எல்லாம் தோணும், ஆனா இப்போ அத பண்ண முடியாது" என்று சொல்ல, அவளோ, "ஏன் முடியாது?" என்று கேட்டாள். அவனோ அவளை விசித்திரமாக பார்த்தவன், "உனக்கு தான் இன்னும் நினைவே வரலையே, உனக்கு பிடிக்குமான்னு தெரியலையே" என்று சொல்ல,
அவளோ, "நினைவு வரலைன்னாலும் உங்க வைஃப் தானே? வாழ்க்கை முழுக்க நினைவு வரலைன்னலும் இப்படியே இருப்பீங்களா? இன்பாக்ட் இப்போ தானே பிடிச்சு இருக்குன்னு சொன்னேன்" என்று கேட்க. அவனோ இதழ் பிரித்து முத்துப் பற்கள் தெரிய சிரித்தவனோ அவள் இதழ்களை நோக்கி குனிந்து இருந்தான்.
அடுத்த நாள் காலையில் போர்வைக்குள் தன்னை இறுக அணைத்துக் கொண்டே படுத்தவளின் உச்சியில் முத்தம் பதித்தவனோ அவளை படுக்க வைத்து விட்டு எழுந்து கொண்டான். சிறிது நேரத்தில் அவர்கள் அறைக்கே காஃபி வந்து சேர, அதனை எடுத்துக் கொண்டே மேசையில் வைத்தவனோ, அவளை நெருங்கி அவள் காதில் முத்தம் பதித்து, "நந்திதா" என்று சொல்ல, மெதுவாக கண்களை திறந்தவள் பதறி எழுந்து அமர்ந்து கொண்டவள் போர்த்தி இருந்த போர்வை நழுவாமல் நெஞ்சுடன் இறுக பற்றிக் கொள்ள,
சிரித்துக் கொண்டே, "என்னடி பயப்படுற? நான் தான்… இருந்த நினைவும் போய்டுச்சா? இப்படி பார்க்கிற?" என்று கேட்டான். அவளோ தலையை உலுக்கி சமன் செய்தவள், "கல்யாணத்துக்கு முதல் வரைக்கும் தானே நினைவு இருந்திச்சு? அதுவும் போய்டுச்சான்னு கேட்டேன்" என்று சொல்ல, அவளோ, "ஓஹ் அதுவா?" என்று கேட்க, அவனோ அவள் கையில் காஃபியை கொடுத்தான். அவளோ அதனை வாங்கி முதல் வாயை பருக, அவள் இதழ்களில் இருந்த காஃபியை நோக்கி குனிந்து இருந்தான் அவன்.
முத்தமிட்டு சென்றவனின் முதுகை வெறித்துப் பார்த்தவளோ காஃபியை பருகி விட்டு அருகே இருந்த டீபாயில் காஃபி கப்பை வைத்து விட்டு, "என் ட்ரெஸ் எல்லாம் எங்க போச்சோ" என்று முணுமுணுத்துக் கொண்டே தேடி எடுத்தாள்.
இதே சமயம் வெளியே வந்த யுவராஜ்ஜோ அங்கே இருந்த பூங்காவை நோக்க, அதில் ஸ்ரீயுடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தது என்னவோ ஜெய் தான். "டேய் ஜெய்" என்று சொல்லிக் கொண்டே அவனை நோக்கி செல்ல, ஜெய்யோ, "யுவா, என்னடா ரெண்டு குழந்தைக்கு அப்புறமும் ஹனிமூன் ஆஹ்?" என்று கேட்க, அவனை ஒரு மார்க்கமாக பார்த்த யுவராஜ், "அத விடு, நீ என்ன இந்த பக்கம்?" என்று கேட்டான். ஜெய்யோ, "சும்மா பேமிலி கூட பிக்னிக் வந்தேன் டா" என்று சொல்ல, யுவராஜ்ஜோ அவனுடன் கையை அடித்துக் கொண்டான்.