ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வேல்விழி 8

pommu

Administrator
Staff member

வேல்விழி 8

யுவராஜ் உட்பட அனைவருக்குமே அது ஆச்சரியமாக இருக்க, யுவராஜோ, "இந்த டிசைன் ரொம்ப பிடிச்சு தான் நான் குத்திகிட்டேன்" என்று சொல்லி விட்டு யோசனையுடன் அறைக்குள் நுழைந்து கொள்ள, அவனை தொடர்ந்து நந்திதாவும் உள்ளே நுழைந்த கணம் அந்த அறைக் கதவு சாற்றப்பட்டது. கதவை மூடியதுமே பதறி நிமிர்ந்தவள் கண்ணில் பட்டது என்னவோ அவனை அனல் தெறிக்கப் பார்த்துக் கொண்டு இருந்த யுவராஜ் தான்.

அவளுக்கோ கண்கள் பயத்திலேயே கலங்கி போக, அவளை நோக்கி அடி மேல் அடி வைத்து வர, பயத்துடன் பின்னால் சென்றவளுக்கோ ஒரு கட்டத்தில் பின்னால் செல்ல முடியாமல் சுவர் தடுப்பாக இருந்தது. அவன் எதற்காக முறைக்கின்றான் என்று அவளுக்குமே தெரியவே இல்லை.

ஓரிரெண்டு விஷயங்களில் சொதப்பி இருந்தால் பரவாயில்லை, இப்போது வரை பல சொதப்பல்களை மேற்கொண்டு இருக்கிறாள் அல்லவா? அவனை பயத்துடன் ஏறிட்டுப் பார்க்க, அவனோ தனது மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டவன், "ஒவ்வொரு கேள்விக்கும் நீ பதில் சொல்லணும்" என்றான் கணீர் குரலில்.

அவளோ, "ம்ம்" என்று நலிந்த குரலில் பதிலளிக்க, "ராம் கூட எவ்ளோ நாள் காதல்?" என்று முதல் கேள்வியை வைத்தான். அதனைக் கேட்டு எச்சிலை கூட்டி விழுங்கியவள் "காலேஜ் படிக்கும் போது தான், ஒரு ரெண்டு வருஷமா தான்" என்று சொல்ல, அவனோ, "சோ அவனை லவ் பண்ணி ஏமாத்திட்டு என்னை கல்யாணம் பண்ணி இருக்க ரைட்?" என்று கேட்க, "ஏமாத்த நினைக்கல, அப்பா தான் போர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணி வச்சார்" என்று சொல்லும் போது அவள் கண்கள் கலங்கியது.

அவனோ இறுகிய முகத்துடன், "அப்போ என்னை நீ இஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணிக்கல, அப்படி தானே" என்று கேட்ட தோரணையிலேயே அவனது அடக்கப்பட்ட கோபம் அப்பட்டமாக தெரிய, அவளோ, "பிடிக்காம தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்… ஆனா இப்போ அப்படி இல்ல" என்று சொன்னாள். அவனோ, "ஓஹ் அப்போ என்ன ரொம்ப பிடிக்குமோ?" என்று கேட்க, அவளோ, "பிடிக்கும்" என்றாள் தலையை தாழ்த்திக் கொண்டே.

அவனும் அவளை எரித்து விடுவது போல பார்த்தவன், "நடிக்காதடி, என்னை கல்யாணம் பண்ணினாலும் உனக்கு அவனை மறக்க முடியல, அது தான் நான் உன்னை தொடமாட்டேன்னு சொன்னதுமே அவ்ளோ சந்தோஷப்பட்ட! தெரியாம தான் கேக்கிறேன்.. எந்த பொண்ணு பிஸிக்கல் ரிலேஷன்ஷிப் இல்லாம வாழ விரும்புவா? நீ என் கிட்ட அத பத்தி பேசவே இல்ல, சோ உனக்கு அவன் மேல இப்போ வரைக்கும் காதல், அதனால தான் அவனை இப்போ இங்க அழைச்சு இருக்க… ரைட்?" என்று கேட்க,

அவளோ அவனை கண்ணீருடன் ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே, "அபாண்டமா பேசாதீங்க… அப்படின்னா நான் குழந்தை பெத்துக்க சம்மதிச்சு இருக்கவே மாட்டேன்" என்று முதல் முறை வாயை திறந்து பேச, அவனோ, "அந்த விஷயம் மட்டும் தாண்டி எனக்கு இப்போ வரைக்கும் இடிக்குது” என்று சொன்னவனோ நெற்றியை நீவிக் கொண்டே, "சரி அத விடு, அது வேற டிபார்ட்மென்ட், அடுத்த கேள்விக்கு போகலாமா?" என்று கேட்டான்.

அவள் மனமோ பதற, "அடுத்து என்னன்னு தெரியலையே" என்று யோசித்துக் கொண்டே அவனை பயத்துடன் பார்க்க, "எதுக்குடி பஸ்ல வச்சு கட்டிப் பிடிச்ச?" என்று அடுத்த கேள்வி ஈட்டியாக பாய்ந்தது. "பாலன்சுக்கு" என்று நலிந்த குரலில் அவள் பதிலளிக்க, "பாலன்சுக்கு பஸ் கம்பியை பிடிக்க வேண்டியது தானே" என்று உறுமல் குரலில் கேட்க, அவளும் எங்கனம் பதில் சொள்வாள்?

சட்டென விழிகளை தாழ்த்திக் கொள்ள, "உன் லவ்வரை வர சொல்ற… என்னை கட்டிப் பிடிக்கிற? என்னடி நினைச்சிட்டு இருக்க? உனக்கு யார் தான் வேணும்? ரெண்டு பேரும் வேணுமா?" என்று கேட்க, அவளோ, "நீங்க கேட்கிறது அசிங்கமா இருக்கு" என்று சொன்னவளுக்கு தாரை தாரையாக கண்ணீர் வழிய, "நீ பண்ணுறதும் அசிங்கமா தாண்டி இருக்கு" என்று சொன்னவனோ கண்களை மூடி திறந்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்டே வெளியேறி இருந்தான்.

அவளோ முகத்தினை மூடிக் கொண்டே அப்படியே நிலத்தில் அமர, அவளுக்கோ கண்ணீர் மட்டுமே துணையாகி போனது.இதே சமயம் அவன் வெளியே வந்த நேரம் மழையும் நின்று இருக்க, நேரமோ மாலை ஐந்து மணியை நெருங்கி இருந்தது. நடேசனோ, "பசியா இருபீங்க சார்" என்று சொல்லிக் கொண்டே, முறுக்கும் காஃபியும் கொண்டு வந்து கொடுக்க, திண்ணையில் ஸ்ரீ அருகே அமர்ந்தவனோ ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தான்.

இதே சமயம், அனைவர்க்கும் கொடுத்து விட்டு, நந்திதாவின் அறைக் கதவை தட்டினான். யுவராஜ் ஒரு கணம் திரும்பி நடேசனைப் பார்த்தான் தவிர எதுவுமே பேசவே இல்லை. நந்திதாவோ கண்களை துடைத்துக் கொண்டே எழுந்தவள் கதவை திறக்க, அவனிடம் முறுக்கும் காஃபியும் இருந்த தட்டை நீட்டியவன், "பசியா இருப்பீங்க மேடம்" என்க,

அவளோ, "இல்ல வேணாம்" என்று ஆரம்பித்தவள் சட்டென அவள் குரலைக் கேட்டு யுவராஜ் திரும்பிப் பார்த்ததில் வார்த்தைகளை விழுங்கிக் கொண்டே, "ம்ம்ம்" என்று சொல்லிக் கொண்டே அதனை வாங்கியபடி கதவை மீண்டும் மூடிக் கொண்டாள். கையில் இருந்த தட்டை தள்ளி வைத்து விட்டு கட்டிலில் தொய்ந்து அமர்த்தவளுக்கு மார்பில் ஊசியால் குத்துவது போல வலி உண்டாக ஆரம்பிக்க, சட்டென கைகளை வைத்து தன்னை பரிசோதிக்க, மார்போ இறுகி போய் இருந்தது.

ஆம் முதல் நாள் இரவில் இருந்தே சுரந்த பால் அவள் மார்பிலேயே தேங்கி வலியை உண்டாக்கி கொண்டு இருந்தது. அவளோ, "பம்ப்" என்று முணுமுணுத்தவளுக்கு அதிர்ச்சியில் கண்கள் விரிந்து கொண்டன. அது தான் அவளது கைப்பையில் இருந்தது அல்லவா? அதை தான் குரங்கும் தூக்கிச் சென்று விட்டதே.

இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தவளோ வலியை எப்படி குறைப்பது என்று தெரியாமல் திணறி போனாள். கையை கூட நெஞ்சில் வைக்க முடியாதளவு வலி உயிர் போக, சத்தம் கூட போட முடியாத நிலை அவளுக்கு… பெண்களோ தமது அந்தரங்கத்தை கணவனிடம் பகிர்ந்து கொள்வார்கள்.

ஆனால் அதற்கும் கூட முடியாத துர்ப்பாக்கிய நிலையில் கட்டிலை இறுக பற்றிக் கொண்டே அமர்ந்து இருந்தவளுக்கு வலியின் வீரியத்தில் அடுத்து என்ன செய்வது என்று கூட யோசிக்க முடியவே இல்லை. இதே சமயம், மழை பெய்ந்து ஓய்ந்து இருக்க, அந்த இதமான சூழ்நிலையில் குளிரான வேளையில் மரங்கள் நடுவே, இருக்கும் அந்த காட்டேஜின் முன்னே இருக்கும் புற்தரையில் முருகனுடன் அமர்ந்து இருந்தான் ராம். முருகனோ மேலே வானத்தைப் பார்த்துக் கொண்டே "இன்னைக்கு பௌவுர்ணமியா?" என்று கேட்க,

சட்டென ஏறிட்டு வானத்தைப் பார்த்தவனோ, "ம்ம், ஆமால" என்று சொன்னவனோ, ஏதோ நினைவு வந்தவனாக, "அந்த சித்தர் இன்னைக்கு பௌர்ணமி வரைக்கும் காத்திருன்னு சொன்னார், இன்னைக்கு தான் பௌர்ணமின்னு சொல்லவே இல்லையே" என்று சொல்ல, சிரித்த முருகனோ, "எல்லாமே வெளிப்படையா சொல்லிட்டா அப்புறம் நாம யோசிக்க மாட்டோம்ல" என்று சொல்லிக் கொண்டான். இதே சமயம், உடையை மாற்றிக் கொண்டு வந்து அமர்ந்த ஸ்ருதியோ, "யுவா, நந்திதா எங்க?" என்று கேட்க,

அவனோ, "உள்ள" என்று ஒரு சொல்லில் பதில் அளித்து விட்டு கண்களை மூடிக் கொண்டே திண்ணையில் இருந்த சுவரில் சாய்ந்து அமர்ந்து இருந்தான். ஸ்ருதியும் மதனாவும் சாப்பிட்டு விட்டு காஃபியையும் அருந்தி முடித்த போதும் கூட நந்திதா வெளியே வருவதற்கான அறிகுறி தென்படவே இல்லை. மதனாவோ, "யுவா, நந்திதா உள்ளே என்ன பண்ணிட்டு இருக்கா?" என்று கேட்க,

கண்களை திறந்தவனோ எரிச்சலாக அவளை திரும்பிப் பார்த்துக் கொண்டே, "நானும் உன் கூட இங்க தானே இருக்கேன், எனக்கெப்படி தெரியும்? நீயே போய் பாரு" என்று சொல்ல, அவனுடன் மேலும் பேச பயந்து கொண்டே இருவரும் எழுந்து சென்று நந்திதாவின் அறைக் கதவை தட்டினார்கள். உள்ளே இருந்து எந்த பதிலும் வராமல், இருக்க, "நந்திதா" என்று சொல்லிக் கொண்டே கதவை அவர்கள் திறக்க, அவளோ கட்டிலைப் பற்றிக் கொண்டே கண் மூடி இதழ்களை பற்களினால் கடித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவளுக்கு வலி தாங்கவே முடியவில்லை.

அவள் பற்கள் அழுத்தியதில் இதழ்களில் இருந்து உதிரம் வேறு கசிய, அவளை நோக்கி சென்றவர்கள், "என்னாச்சு நந்திதா?" என்று கேட்க, அவளோ தழு தழுத்த குரலில், "ரொம்ப பெய்ன்னா இருக்கு" என்றாள். அந்த கணத்தில், வெளியே கதிரவன் மொத்தமாக தன்னை மறைத்துக் கொள்ள, முழு நிலவோ உச்சத்தில் வந்து இருக்க, தீபங்களை தாண்டி ஒரு மெல்லிய வெளிச்சம் அந்த இடம் முழுதும் பரவி இருந்தது.

பிரகாஷோ தனிமையில் அமர்ந்து அந்த இரவு நேரத்தை ரசித்துக் கொண்டு இருக்க, ராகவனும் சதீஷும் நடேசனுடன் கொள்ளி தேடி கானக பக்கம் சென்று இருக்க, முருகனும் ராமும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு இருந்தார்கள். இதனிடையே ஸ்ரீ அருகே இருந்த யுவராஜோ மௌனமாகவும் கடுப்பாகவும் தான் அமர்ந்து இருந்தான்.

அவனுக்கோ முதல் கோபம் பூபாலசிங்கம் மீது தான் வந்தது. அவனை வலுக்கட்டாயப்படுத்தி மிரட்டி அல்லவா இந்த திருமணத்தை செய்து வைத்தார். அடுத்து தன் மீதே வெறுப்பு தான் அவனுக்கோ அவனைப் பொறுத்தவரை அவனுக்கு எந்த குறையுமே இல்லை. அவன் போகாத வைத்தியர்களும் இல்லை, நந்திதா கருவில் உருவான குழந்தை கூட அவன் உயிர்நீரில் செயற்கை முறையில் உருவானது தான்…

திருமணம் செய்து ஒரு வருடம் ஆகி விட்ட நிலையில், அனைவரும் குழந்தை இல்லையா என்று கேட்க ஆரம்பிக்கவும் நந்திதா தடுமாறி போனாளோ இல்லையோ அவன் தடுமாறி தான் போனான். தனக்கு ஆண்மை இல்லை என்று பேச ஆரம்பித்து விடுவார்களோ என்று பயந்து அவளிடம் கூட சொல்லாமல் அவளை ஒரு நாள் வைத்தியரிடம் அழைத்து சென்ற போது தான் அவளுக்கே தெரியும் தன்னை அவன் கர்ப்பமாக்க அழைத்து வந்து இருக்கின்றான் என்று.

அவள் நினைத்து இருந்தால் இல்லை என்று சொல்லி விட்டு அவன் ஷர்ட்டை பிடித்து கேள்வி கேட்டு இருக்கலாம்... ஆனால் ஏனோ மனம் அதற்கு சம்மதிக்கவில்லை, அவன் குழந்தையை சுமக்க தான் சம்மதித்தது. வெறுமையான வாழ்க்கையில் குழந்தை ஒரு உயிர்ப்பை கொடுக்கும் என்னும் நினைப்பில் சரியென்று சொல்லி விட, அவன் உயிர்நீர் மூலம் அவள் கருவில் குழந்தையும் உருவானது.

ஆனாலும் அவன் கொடுத்தது அவனுடைய உயிர் நீர் தானா என்கின்ற சந்தேகம் அவள் ஆழ் மனதில் இருக்க தான் செய்தது. அவன் தான் எந்த பெண்ணையும் தீண்டியது இல்லை, ஆண்களை கூட தீண்டியது இல்லை அல்லவா? கட்டை பிரம்மச்சாரியாக இருப்பவன் ஆரோக்கியமானவனாக இருந்தால் இப்படி இருப்பானா? என்கின்ற சராசரி சந்தேகம் அவள் மனதில் இருந்தது. அவளுக்கு தான் அவனது அருவருப்பான குணம் பற்றி எதுவும் தெரியவில்லையே. அவள் கர்ப்பமானதுமே பெருமையாக சமூகவலைத்தளத்தில் அறிவித்து இருந்தான்.

ஏன் என்றால் அவனுக்கு தன் மீது இருக்கும் விம்பத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் இருந்தது. அந்த செய்தியின் பின்னரே அவன் பற்றிய வதந்திகள் மெல்ல மெல்ல அடங்கி போக ஆரம்பித்தன. அவள் கர்ப்பமாக இருந்த நேரங்களில் கூட பாசமாக அவன் பேசியது இல்லை. ஆனால் அவளை காயப்படுத்தியதும் இல்லை. நேரத்துக்கு செக்கப்புக்கு அழைத்து செல்வான் அவ்வளவு தான். அவளுக்கும் குடும்பத்தினருடன் நல்ல உறவு இல்லாமல் இருக்க, அவள் அண்ணாவும் அண்ணியும் பெயருக்கு வந்து பார்த்து விட்டு போனார்கள். அவளை முழுக்க முழுக்க வைத்து தாங்கியது என்னவோ நீலாம்பரி தான்.

அவளுக்கோ சுக பிரசவம் தான் நடைபெற்றது… ஆனால் அவனை வைத்தியர் எவ்வளவு அழைத்தும் உள்ளே வர முடியாது என்று கூறியவன் பிறந்த குழந்தையை மட்டும் தூக்கி நெற்றியில் முத்தம் பதித்தான். குழந்தைக்கு அவன் தான் "ஆதித்ரி" என்று பெயரும் சூட்டினான். குழந்தை அவளிடம் இல்லாத நேரத்தில் மட்டும் தூக்கி வைத்துக் கொள்வான், முத்தம் பதிப்பான் அவ்வளவு தான். அவளிடம் உடல் நிலை பற்றியோ அவளை பற்றியோ எதுவும் விசாரித்தது கிடையாது.

அனைத்தையும் மீட்டிப் பார்த்தவன் மனமோ இப்போது முதன் முறை துடிக்க ஆரம்பித்தது. அவளைப் பற்றி இதுவரை அவன் யோசித்தது இல்லை. ஆனால் அவள் மனதில் ஏற்கனவே ராம் இருந்தான் என்று அறிந்த கணத்தில் இருந்து அவன் அவனாக இல்லை. முதல் முறை அவள் விட்டுப் போய் விடுவாளா என்கின்ற பயம் உருவாக ஆரம்பித்த தருணம் அது. அவன் இயலாமையும் அந்த சந்தேகத்தை ஆழ விதைத்து விட, "எனக்கு ஏன் பொண்ணுங்கள பிடிக்க மாட்டேங்குது?" என்று சுய பரிசோதனை செய்ய ஆரம்பித்தான்.

அவனுக்கு அடுத்த பெண்கள் மீது அருவருப்பு உணர்வு… ஆனால் நந்திதா மீது வித்தியாசமான உணர்வு, அவளை தீண்டும் போதெல்லாம் குதிரை ஓடும் சத்தம் தான் காதுக்குள் கேட்டுக் கொண்டு இருக்க, என்னவென்றே தெரியாமல் தான் குழம்பிப் போனான். குதிரை சத்தம் கேட்கும் போது எங்கனம் அவனுக்கு மோக உணர்வு உண்டாகும்? ஆழ்ந்து யோசித்தவன் மனமோ, "டாக்டர் தான் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லன்னு சொல்றார். அப்புறம் ஏன் என்னால நார்மலா பிஸிக்கல் ரிலேஷன்ஷிப் வச்சுக்க முடியல" என்று யோசித்தவனுக்கு பதில் கிடைக்கவே இல்லை.

இதே சமயம், இப்போது புதிதாக ராம் என்னும் கதாபாத்திரம் வேறு அவன் வாழ்க்கையில் வில்லனாக நுழைந்து இருக்க, நிம்மதியை மொத்தமாக இழந்து தான் போனான். நீண்ட நேரம் யோசித்து விட்டு ஆழ்ந்த மூச்செடுத்தபடி கண்களை திறந்த யுவராஜ்ஜோ, "எப்போ இங்க இருந்து கிளம்பலாம்னு இருக்குடா" என்று சொல்லிக் கொண்டே, அவன் விழிகள் ஓரமாக புற்தரையில் முருகனுடன் பேசிக் கொண்டு இருந்த ராமில் வன்மமாக படிந்தது.

அவன் நிலைமையோ இவ்வாறு யோசனையிலேயே சென்று கொண்டு இருக்க, உள்ளே நந்திதாவோடு பேசிக் கொண்டு இருந்த ஸ்ருதியோ, "இப்போ என்ன தான் பண்ண முடியும்?" என்று கேட்க, நந்திதாவோ, "கொஞ்சம் ஹாட் வாட்டர் கொடுக்க சொல்லு, அத வச்சு மசாஜ் பண்ணினா ஓகே ஆகும்னு நினைக்கிறன்" என்று சொல்ல,

அவளோ, "இப்போ நடேசன் கூட இல்ல, நைட் டின்னர் செய்ய கொள்ளி எடுக்க போய் இருக்கான், எங்க ஹாட் வாட்டருக்கு போறது?" என்று கேட்டவர்களுக்கும் இது சம்பந்தமான அனுபவம் இல்லை அல்லவா? அவள் வலியில் துடிப்பதை அவர்களால் கண் கொண்டு பார்க்கவே முடியவில்லை. இதழ்களை கடித்து கஷ்டப்பட்டு வலியை அடக்கிக் கொண்டே அமர்ந்து இருந்தாலும் அவளால் தாங்க முடியாமல் கண்ணீர் சுரந்து கொண்டு தான் இருந்தது.

ஸ்ருதியோ, "யுவா கிட்ட சொல்லிடலாம்" என்று சொல்லிக் கொண்டே எழ ஆரம்பிக்க, சட்டென அவள் கையை அழுந்த பிடித்த நந்திதாவோ, "ப்ளீஸ் வேணாம்" என்று சொன்னாள். ஸ்ருதியோ அதிர்ச்சியாக அவள் அருகே அமர்ந்தபடி, "எதுக்கு யுவா கிட்ட சொல்ல வேணாம்னு சொல்ற?" என்று கேட்க, அவளோ வலியின் பிடியில், "சொன்னா கேளு... வேணாம் ப்ளீஸ்" என்றாள் அழுத்தமாக.
 
So sad
 
Top