கதை எண் 25
பேரன்பின் பிறவி நீ
துறு துறு அழகியாக நம் நாயகி இவளுக்கு மாப்பிளையாக வருபவனுக்கு சில கண்டிஷன் இருக்கு ??அதை எல்லாம் பூர்த்தி செய்ய ஒரு மணமகன் கிடைப்பானா??
ராஜன் அழகியை விரும்ப இனியனும் விரும்ப அழகியின் மணவாளன் யார்??
சந்தோஷ் அமைதியின் பிறப்பிடம் இவன் இவனின் வலியும் வேதனையும் அதனால் ஏற்படும் இன்னல்களும் ??? அருமையான நண்பன் அழகிக்கு அதுவும் அந்த காட்சியில் ??? இவனுக்கு ஒரு காதல் அது கை கூடுமா?? அழகியின் நம்பிக்கையை தக்க வைப்பானா??
ராஜன் இவனை பற்றிய என்னுடைய யூகங்கள் கரெக்டா இருந்துச்சு ???என்ன மனுஷன் டா நீ இப்படித்தான் தோணுச்சு ??
அழகி இது ஒரு வளர்ந்த குழந்தை தான் தானும் சந்தோசமாக இருந்து தன்னை சுற்றி இருப்பவர்களும் சந்தோசமாக இருக்க வைத்து எப்போவும் கலகலப்பு நிறைந்த சுட்டி பெண் இவ்வளவு விளையாட்டாக சுற்றும் இவளுக்குள் இவ்வளவு காதல் அவ்வளவும் அழகு அதுவும் அந்த டீல் பேசும் சீன், சென்னை செல்வது, டாட்டூ சீன் இது எல்லாமே பார்க்கவே சூப்பரா இருக்கு ??
கயல், பத்மா உறுதுணையாக தோழிகள் அதுவும் பத்மா ?? இவள் அழகிக்கு துணை நிற்கும் விதம் இவளுக்குள் பல வருடமாக இருக்கும் காதல் கை நழுவி செல்ல அதனை கை பற்றுவாளா??
இனியன் எல்லாம் இடத்திலும் ஜெயித்தாலும் ஒரு இடத்தில் விழுந்து தானே ஆகணும் ?? இவனின் காதலும், இவனுக்குள் இருக்கும் வலியும், மீளா துயரில் இருந்து மீண்டு வருவதும் ??? இவனின் புத்திசாலி தனமும், விவேகமும், வேகமும் செம மாஸ் ??
டைரியின் பக்கங்கள் கண் கலங்க வைத்து விட்டது ???அவ்வளவு ஆத்மார்த்தமான அழகிய பொக்கிஷம் ஆனால் ???
அடுத்து அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத கதைகளம் செம சஸ்பென்ஸ் ?? அதுவும் அந்த பிளாக் ????
உங்களின் எழுத்து மிகவும் அருமை எதிர்பாராத பல ட்விஸ்ட் சில யூகிக்க முடிந்தது சில விஷயம் அதிர்ச்சி &ஆச்சர்யம்
ட்விஸ்ட் என்பதற்கு ஜஸ்டிஸ் பண்ணி இருக்கீங்க சூப்பர் ??
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ???
லிங்க் ???
பேரன்பின் பிறவி நீ -கதை திரி
pommutamilnovels.com