ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 14- பூ மஞ்சம் தருவாயோ

பூ மஞ்சம் தருவாயோ

இது ஒரு அழகான கூட்டு குடும்ப கதை.

அர்ஜுன் யாருக்கும் அடங்காத தான் சொல்றது தான் கரெக்ட்னு நினைக்குறவன். கர்ணன், ஆதவன், ராகவன் அவனோட அண்ணனுங்க.கர்ணன், ராகவன், அர்ஜுன் இவங்க மூணு பேருக்கும் ஒரே நேரத்துல கல்யாணம்.

ரேவதி ராகவனுக்கு பார்த்து இருக்குற பொண்ணு அவ தங்கச்சி தாரணி அவளை அர்ஜுன்க்கு பார்த்து இருக்காங்க. அர்ஜுன் ஏகப்பட்ட கண்டிஷனோட கல்யாணத்துக்கு ஓகே சொல்றான்.

தாரணி வேற ஒருத்தரை லவ் பண்ணி அவன் கூட ஓடி போயிடுறா. அதுனால அவனோட அண்ணனுங்க அர்ஜுன் கல்யாணம் நடக்காமல் நாங்களும் கல்யாணம் பண்ண மாட்டோம்னு சொல்லிடுறாங்க. சுகந்தி கர்ணனுக்கு பார்த்து இருக்குற பொண்ணு அவளோட சித்தி பொண்ணு யாழினி அவளை கட்ட சொல்றாங்க அர்ஜுனக்கு.

அண்ணனங்களுக்காக அவளை கல்யாணம் பண்ணிக்கிறான். பிடிக்காமல் அவளை கட்டிக்குறான். அப்புறம் அவங்க லைப் போச்சுனு அழகா சொல்லி இருக்காங்க 😍😍😍

4 ஜோடி நாலும் நாலு விதம். கூட்டு குடும்மா இருந்த அக்கா தங்கச்சி ஒற்றுமையா இருந்து இவங்கள போல அழகா இருக்கணும்னு ஏங்க வைச்சு இருக்காங்க. எனக்கு ரொம்ப பிடிச்சது இவங்க 4பேரோட பாண்டிங்.

அழகா ரசிக்கும் படியா இருந்துச்சு.
ரேவதி எல்லாரையும் வைச்சு செய்யுறது வேற லெவல் 🤣🤣🤣
கல்யாணி எல்லாருக்கும் அக்காவா அழகா குடும்பத்தை தாங்குறா.

அண்ணன் தம்பிங்க அவங்களோட பாண்டிங்கும் அழகா ரசிக்கும் படியா இருந்துச்சு.

அர்ஜுன் யாழினியை லவ் பண்ணிட்டு அவ கிட்ட சொல்ல முடியாமல் தவிக்குறது பாவமா இருந்துச்சு.

தாரணி அவளுக்கு இது தேவை தான் அவளுக்கு அவ அப்பா கையால தண்டனை கிடைச்சுருச்சு. அவளா திருந்தி இருக்கலாம்.

ஸ்டோரி முழுக்க இதுங்க பண்ற ரொமான்ஸ் செம யா இருந்துச்சு 😍😍😍

கடைசியில் அழகா பிள்ளை குட்டியோட முடிச்சது சூப்பரா நிறைவாக இருந்துச்சு 🥰🥰🥰

வாழ்த்துக்கள் 💐💐
 
பூ மஞ்சம் தருவாயோ


இது ஒரு கூட்டு குடும்பம் கதை ..

அண்ணண்களுக்கும் தம்பிக்கும் ஒரே மேடையில் கல்யாணம் பண்ண நினைக்கிற குடும்பத்துக்கு பேரிடியாக வந்து சேருது தம்பிக்கு பார்த்த பொண்ணு ஓடி போயிடுறானு.அதனால சந்தர்ப்ப சூழ்நிலையால் அர்ஜூனுக்கும் யாழினிக்கும் கல்யாணம் நடக்கது .. விருப்பமில்லாத திருமணம் இரண்டுபேரும் ஒன்னா சேர்ந்தாங்களா ? அர்ஜூன் யாழினியை ஏத்துக்கிட்டானான்றது தான் கதை...!!

நல்ல ஒற்றுமையுடன் இருக்கக்கூடிய அண்ணண் தம்பி நால்வரை சுற்றியுள்ள கதை‌..அண்ணண் தம்பிகளின் பாசப்பிணைப்புகளாகட்டும் ஓரகத்திகளின் ஒற்றுமையாகட்டும் அனைத்துமே வியந்து பார்த்த ஒன்று..!!

அர்ஜூன் தான் குடும்பத்துல அதிகமாக படிச்சதனால அவன் சொல்ற முடிவு சரியா இருக்கும்னு நினைக்கிற குடும்பம்..இதனால இவருக்கு அதிமேதாவினு நினைப்பு ..தன்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட யாழினி கிட்ட அர்ஜூன் நடந்துகிட்ட விதம் பார்த்து சரியான சாடிஸ்ட்னு தோணுச்சு..!!ஆனா இந்த சிடுமூஞ்சி மேலயும் காதல் வருது யாழினிக்கு ..இதுதான் மஞ்சள் கயிறு மேஜிக் ஆ தெரில..!! ஆனால் இவள கண்டுக்காத அர்ஜூன் தாரணிய எதார்த்தமா பார்க்கிறான் ..அவள பழிவாங்க சில வேளைகள் பார்த்து அவளை நடுத்தெருவுக்கு கொண்டு வந்துடுறான்.. ஆரம்பத்துல யாழினி மேல இன்ட்ரெஸ்ட் இல்லாத அர்ஜூனுக்கு அப்றோம் யாழினி‌மேல லவ் வருது ..சரி‌ லவ்வ சொல்லலாமேனு அவன் நினைக்கும்போது தான் யாழினி‌ ஐஏஎஸ் பாஸ் பண்ண விசயம் தெரிய வருது ..இப்போ லவ்வ சொன்னா தப்பா நினைச்சுபாங்கன்னு லவ்வ சொல்லாம மனசுக்குள்ள வச்சிட்டே இருக்கான்...லவ்வ சொல்ற சூழ்நிலை சரியாவே அமையல அர்ஜூனுக்கு.. அப்போ அர்ஜூன பார்க்க பாவமாக இருந்துச்சு!!


ஆதவன் மூத்தவனா அவனுடைய கடமையை சரியாக பண்ணுறான்..அவன் தம்பிகளுக்கு அறிவுரை சொல்லுறதுல இருந்து எல்லாமே சரியா பண்ணுறான்..அவன் மனைவி மேல் உள்ள காதல் அவனின் சீமாட்டி ன்ற செல்ல பேர் மூலமா நல்லாவே தெரியுது...கல்யாணியும் மூத்த மருமகளா எல்லாரையும் அரவணைக்கிறதும் சரி , தன் ஓரகத்திகளின் பிரச்சினைகளில் சரியான அறிவுரை சொல்லுறதுல சரி சூழ்நிலைகளை சிறப்பா கையாளுறதுலயும் நம்மல கவர்ந்துட்டாங்கப்பா இவங்க..!!

இவங்களுக்குள்ள நடக்குற உரையாடல்கள்லாம் சூப்பர் 🙈🫣

ராகவன் ரேவதி செம்ம ரொமான்டிக் ஜோடிப்பா இவங்க ..இவங்க ரொமான்ஸ் படிக்கும் போது நமக்கே வெக்கமா இருக்கு..அதுவும் சண்டை‌போட்டுட்டு ராகவன் ரேவதிய சமாதானப்படுத்த ஐடியாலாம் அச்சச்சோனு இருந்துச்சு 🙈🤭இது சரியான முரட்டு ஜோடிஸ் ..ரேவதி எல்லாரையும் கலாய்க்கிறதுலாம் நல்லா இருக்கு படிக்க...சில இடங்களில்ல ரேவதி மேல கோபம் வந்துச்சு ,ஆனா அவளுடைய சூழல் அப்படின்னு தோணிடுச்சு..!!

கர்ணன் சுகந்தி ஜோடி , இவங்க முரட்டு ஜோடிஸ் இல்ல சாஃப்ட் ஜோடிஸ்..கர்ணன் சாஃப்ட் ஆனா அழுத்தக்காரன் ..இவங்களோட காதலும் அருமை..பிரசவ நேரத்தில் கர்ணன் தவிச்ச தவிப்பு அவனுடைய காதலை காட்டுச்சுப்பா!!

தாரணி இவ சுயநலவாதி தான் ..முதல்ல வேண்டாம்னு ஓடி போயிட்டா... அப்றோம் திருந்தி அர்ஜூன் அவளுக்கு மனிதாபிமான உதவி பண்ணுறத வச்சு யாழினி மேலயே கோபப்பட்டு அவ வாழ்க்கையவே பறிக்கனும்னு நினைச்சா..ஆனா அன் எக்ஸ்பெக்ட் கடைசில அவங்க அப்பா கையாலேயே இறந்துபோற மாதிரி ஆகிடுச்சு..

வன்ம குடோன் அர்ஜூன் கடைசில காதல் மன்னனாக மாறிட்டான் ... ஆரம்பத்துல திட்டு வாங்குனாலும் அப்றோம் சந்தோஷமாக இருந்துச்சு..

யாழினி யின் பொறுமையான காதலுக்கு பதில் காதலை அர்ஜூன் அள்ளி கொடுத்துட்டு இருந்தத பார்க்கும்போது நமக்கு ஹேப்பிபா !!


ஒவ்வொரு ஜோடியுடைய காதலும் வித்தியாசமானவை....அதனை அற்புதமாக சொல்லிய‌ ஆசிரியருக்கு வெற்றிபெற வாழ்த்துக்கள்!!
 
Pommu Novels அவர்களின் அப்ளிகேஷனில் நடக்கும் போட்டி கதைகள்
#AVP14
RJ Virsaly அவர்களின் எழுத்தில்
"பூ மஞ்சம் தருவாயோ.."
ஒரு கூட்டு குடும்ப கதை.
வீட்டின் கடைக்குட்டி ஆன அர்ஜுன் இந்த கதையின் நாயகன். நன்றாக படித்து ப்ரொபசர் ஆக இருக்கும் இவனுக்கு கொஞ்சம் திமிரு அதிகம் தான். படித்தவர்கள் மட்டுமே புத்திசாலிகளாக இருப்பார்கள் அவர்களுக்கு மட்டுமே சமயோசிதமாக சிந்திக்க தெரியும் என்ற நினைப்பு இவனுக்கு. அதனாலேயே வீட்டில் யார் பேச்சையும் கேட்காமல் தனக்கு என்ன தோன்றுதோ அதை மட்டுமே செய்து வருபவன். கொஞ்சம் இல்லை நிறையவே திமிர் இவனுக்கு 😡 தனக்கு மனைவியாக வருபவள் இந்த இந்த குவாலிபிகேஷன் உள்ளவளாக இருக்க வேண்டும் என நினைப்பவனுக்கு அதற்கேற்றார் போல் மணமகள் அமைய திருமணத்தன்று அந்த மணமகள் காதலனுடன் வெறியறிவிட திடீர் மனைவியாகிறாள் யாழினி. கிராமத்து பெண்ணாக இருக்கும் அவளை பிடிக்கவில்லை இவனுக்கு
இவன் திருமணம் நின்றதால் தங்களுக்கும் திருமணம் வேண்டாம் என மறுக்கும் அண்ணன்களை சமாளிப்பதற்காகவே தன் அப்பத்தாவின் வற்புறுத்தலால் யாழினியை மனைவியாக ஏற்றுக் கொள்கிறான். அவளுடன் வாழ்வதில்லை என்ற முடிவுடன். இவன் முடிவு என்ன ஆனது படிக்காதவள் என நினைக்கும் மனைவியின் கல்வி நிலை என்ன பிரிந்து விட வேண்டும் என நினைக்கும் பெண் அவளை பிரிய முடியாமல் தவிக்கும் நிலை இவனுக்கு ஏற்படுமா என்பது கதையில்.
யாழினி.. அன்னையின் சொல்லுக்கு இணங்க அர்ஜுனை மணமுடித்துக் கொள்கிறாள். முதல் நாளே தன்னோடு வாழ விருப்பமில்லை என்ற கணவனின் பேச்சு அவளுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் நாட்கள் செல்ல செல்ல அவனை விரும்ப ஆரம்பித்து விடுகிறாள். தன் மனதில் உள்ளவற்றை அவனிடம் சொல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க அனைத்தும் சரியாகும் நிலையில் பெரும் புயல் அடிக்கிறது இவர்களின் வாழ்வில். அனைத்தையும் சரி செய்து இவர்கள் வாழ்வை வளமாக்கி கொண்டார்களா என்பது கதையில்.
மூன்று அண்ணன்களுடன் அர்ஜுன் கொண்டிருக்கும் பாசமும் அவர்கள் மூவரின் அன்பும் அருமை 🥰
அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக இருப்பது பெரிதல்ல அவர்களை மணமுடித்துக் கொண்ட பெண்களும் ஒற்றுமையாக இருப்பது சிறப்பு 🥰 ஒருவருக்கொருவர் கிண்டல் கேலி செய்து கொண்டு உடன்பிறவா சகோதரிகளாக அவர்கள் வாழ்வது அவ்வளவு அருமை 🥰
கல்யாணி ரேவதி சுகந்தி யாழினி இவர்களின் பாண்டிங் மிக அழகு 🥰❤️
ஆதவன் ராகவன் கர்ணன் அர்ஜுன் இவர்களின் பாசமும் அழகு 🥰
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰🌹
 
பூ மஞ்சம் தருவாயோ
In a deeply bonded joint family, four brothers Aadhavan, Raghavan, Karnan, and அர்ஜுன் and their sister Kasthuri live with immense love for one another. A grand triple wedding is arranged for Raghavan, Karnan, and Arjun. However, on the wedding day, Arjun’s bride, Dharani, elopes with her lover.
To save the family's honor, யாழினி (the sister of another bride, Suganthi) marries Arjun. Arjun, who considers himself a "super-intellectual," looks down on Yazhini. He assumes she is uneducated and unrefined, and as a result, he emotionally distances himself and refuses to live with her
The story explores whether Arjun and Yazhini overcome obstacles and misunderstandings to be together. It’s a heartfelt tale of family bonds, love, and second chances, with emotions and relationships at its core
❤️✨
 
Top