ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 15- அகம் கொய்தாய் காவலனே

அகம் கொய்தாய் காவலனே விமர்சனம்


போலீஸ் அதிகாரியான‌ நம்ம நாயகன் விக்ரம் மேகமலை கிராமத்தில் நடக்கிற கொலையில் குற்றவாளியா நினைக்குற மாறனை கைது செய்யுறதுக்காக மேகமலை கிராமத்துக்கு வர்ரான் ..அவன் வர்ர‌நேரம் மாறனின் தங்கைக்கு அவன் அண்ணண் பார்த்த மாப்பிள்ளையான தினேஷ் கூட கல்யாணம் நடக்க ஏற்பாடு நடந்துக்கிட்டு இருக்கு..மாறன் கிடைக்காதனால மாறனோட தங்கையான நம்ப நாயகி தேன்குழலிய கைது பண்ணுற மாதிரி கடத்திட்டு போயி அவனுடைய வீட்டுல கஸ்டடியில‌வைக்கிறான் .. மாறன் தன் அண்ணனா நினைக்கிற நண்பன் மருது சொல் கேட்டு கொலைப்பழில மாட்டிக்கிட்டு தலைமறைவாக இருக்கான் ..தலைமறைவா இருக்கிற மாறனை தேடுற விக்ரம் முதல்ல தேன்குழலி மேல கோபம் கொண்டு அவளை ரொம்ப கஷ்டப்படுத்துறான்.அங்க அவளுக்கு சப்போர்ட்டா‌ இருக்கிறது விக்ரமுடைய‌நண்பன் சந்தோஷ் மட்டும் தான்..விக்ரமோட பிடியில கஷ்டப்பட்டுக்கொண்டு தன் அண்ணணை பத்தி நினைச்சு கவலைப்படுறா நம்ம குழலி..!! ஆரம்பத்துல குழலிமேல கோவமா இருக்க விக்ரம் கொஞ்சம் கொஞ்சமா குழலி மேல காதல் வயப்படுறான் ..!! ஆரம்பத்துல விக்ரம பார்த்து பயப்படுற குழலிக்கும் பின்னாடி விக்ரம் மேல காதல் வருது..இவங்க காதல் ஒரு பக்கம் இருக்க , மாறனுக்கு உதவற மாதிரி அவன கடத்தி வச்சி இருக்கான் மருது... மருதுவோட‌ சூழ்ச்சில தெரியாம மாட்டிக்கிறான் நம்ம மாறன் .மருது எதுக்காக இப்படி பண்ணுறான் ? விக்ரம் மாறனை கண்டுபுடிச்சானா ? மாறன்தான்‌‌ உண்மையான குற்றவாளியா ? விக்ரம் எப்படி குற்றவாளிய கண்டுபிடிச்சான்? விக்ரம் குழலி‌ இருவரும் சேர்ந்தார்களா ? இதை எல்லாம் கதைல படிச்சு தெரிஞ்சுக்கலாம்!!!

விக்ரம் ரொம்ப நேர்மையான விறைப்பான போலீஸ் அதிகாரி.. உண்மையை கண்டுபிடிக்க எந்த எல்லைக்கும் போகக்கூடியவன்..அவனுடைய அப்பா அம்மா கிட்ட கூட விறைப்பாதான் இருக்கான் அதே கோவத்தோடு குழலி கிட்ட ஆரம்பத்துல நடந்துகிட்டது ஓவர்.. வெறப்பா திரிஞ்ச‌ நம்ப விக்ரம் ரெமோ மோடுக்கு மாறிட்டான் 🤭🤭அவள சீண்டுறது என்ன😉😉 ரொமான்ஸ் என்ன🤭 ஆனா அதே சமயம் அவளுக்கு ஆபத்துன்னா அவளை பாதுகாக்குறதுனு எல்லாமே நல்லா இருக்கு...காதல் வந்த அப்புறம் அவளுக்காக அவன் பண்ணுற எல்லாமே சூப்பர்..குழலியோட வார்த்தையை நம்பி மாறனை தேடி உண்மையை கண்டுபிடிச்சு அவனை கேஸூல இருந்து காப்பாத்துறதுனு எல்லாமே நல்லா இருந்துச்சு...!!

மேகமலை கிராமத்து பொண்ணாண நம்ம குழலிக்கு அம்மா அப்பா இல்லை..அண்ணணோடு‌ பாசத்துல வளர்ரா .. இவங்க அண்ணண் தங்கச்சி பாச பிணைப்பு பாக்க நல்லா இருக்கு.!!அண்ணணுக்காக இவ துடிக்கிற துடிப்பு தன் தங்கச்சிய நினைச்சு மாறன் துடிக்கிற துடிப்புனு எல்லாமே நம்மல நெகிழ வைக்குது.. ஆரம்பத்துல விக்ரம பார்த்தாலே பயந்து நடுங்குற குழலிக்கு போகப்போக விக்ரம் மேல காதல் வந்துடுது .. பயந்தாங்கொல்லி மாதிரி இருந்த நம்ம குழலி பண்ணுண வேலை இருக்கே அவ்வ் 🙈🙈🙈‌அதுலாம் படிக்கும் போது அடிப்பாவி நீயா இது அப்படினு தோணுச்சு..பாசத்துக்கு கட்டுப்பட்டவ நம்ம குழலி ..சந்தர்ப்ப வசத்தால் தன் அண்ணணா இல்லை விக்ரமானு சூழ்நிலை வரும்போது அண்ணன தேர்ந்தெடுத்துடுறா குழலி..

குழலியோட இந்த முடிவுனால விக்ரமோட கோவம் ரொம்ப அதிகமாகிடுச்சு..ஆனா குழலியும் தன் காதலை இன்னும் கொஞ்சம் தெளிவா அழுத்தமா அவள் அண்ணணுக்கு புரிய வச்சு இருக்கலாம்னு தோணுச்சு..!!‌இதனால் குழந்தை உண்டான விசயம் கூட குழலி விக்ரமுக்கு தெரியப்படுத்த நினைச்சும் சந்தர்ப்ப சூழ்நிலையால் விக்ரமுக்கு தெரிய வரல..அதேசமயம் விக்ரம்கூட தன் தங்கையை சேரவிட கூடாதுனு நினைக்கிற மாறன்..ஆக மொத்தம் ரெண்டு பேரோட‌ ஈகோவால மாட்டிக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுறது நம்ம குழலி தான்..
ஆனால் அவங்க ரெண்டு பேரோட‌காதலை கொண்டு போன விதம் அருமை!!

சந்தோஷ் விக்ரமுக்கு நல்ல நண்பனா இருக்கான் ..நல்ல போலீஸ் அதிகாரியாகவும் குழலிக்கு நல்ல அண்ணணாகவும் இருக்கான் .. சந்தோஷ் பார்வதி லவ்லாம் நல்லா இருந்துச்சு படிக்க..

அதே போல பார்வதி தாமரை நட்பும் வெகு அருமை.தேனுவுடைய சுக துக்கங்களில் எல்லாம் அவளுக்கு ரொம்ப சப்போர்ட்டிவா இருந்தாங்க ..!!

அதே போல மாறன் மீதான தாமரையின் காதலும் அருமை..!! தாமரை மாறனுக்கு குழலியின் நிலைமையை எடுத்து சொன்ன‌விதம்👏 எல்லாருக்கும்‌ ஜோடி‌ சேர்த்திட்டாங்க நம்ம ரைட்டர்..!!

குத்துனவன் நண்பணா இருந்தால் செத்தாலும் சொல்ல கூடாதுனு சொல்வாங்க..ஆனா மருது நண்பண்றதுக்கு தகுதி இல்லாத நம்பிக்கை துரோகி ..மருதும் அவனோட கூட்டாளிகளும் மாட்டிக்கிட்டது சூப்பர்.!! அவனை விக்ரம் பிடிச்சது ம் போட்டு அடிச்சதும் அடிதூள் !!

விக்ரமோட அம்மா அப்பா ரொம்ப ஜோவியலான டைப் !!

விக்ரமை புரிஞ்சி கிட்ட மாறனும் தன் தங்கையோட காதலை விக்ரமுக்கு புரிய வச்சதும் சிறப்பு!!

தேன்குழலியின் அகத்தினை கொய்த நம்ம‌ காவலன் விக்ரம் வெற்றி பெற ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!! ❣️
 
Last edited:
#அகம்_கொய்தாய்_காவலனே….
#கௌரிஸ்ரிவ்யூ….

மாறன் & அவன் தங்கச்சி குழலி கூட ஹேப்பியா இருக்காங்க…..மலை காட்டில்….

அந்த குட்டி ஊரில் எல்லாரும் ஒரே குடும்பமா இருக்காங்க….

குழலிக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்க நிலையில் மாறன் காணாம போறான்…..

அண்ணன் இல்லாத கல்யாணமா அப்படினு குழலி பரிதவிச்சிட்டு இருக்கும் போது….

மாறன் ஒரு கொ****லை குற்றவாளி….அவன் எங்க அப்படினு குழலியிடம் கேட்டகிரான் விக்ரம்…..

அவளுக்குகோ அதிர்ச்சி…..ஆன அதை எல்லாம் கணக்கில் எடுக்காமல் அவளை கூட்டி வந்து வீட்டில் சிறை வைக்கிறான்…..

மாறனை வெளிவர வைக்க…..

மாறன் வந்தானா???

சிறை வைக்கப்பட்ட குழலியின் நிலை?????

கொ***லை யாரு.?????

இது எல்லாம் மீதி கதை…..

குழலி….பாவம் பாச பறவை…. அண்ணனின் நிலை ஒரு பக்கம்….அவன் குற்றம் அற்றவன்னு அவளுக்கு தெரிஞ்சாலும்….ஆதாரம் எல்லாம் அவனுக்கு எதிரா இருக்கு…..

விக்ரம் மேல் கொண்ட காதல் ஒரு பக்கம்னு….நிறைவே தவிச்சிட்டா……

விக்ரம்….. சரியான அவசரக்காரன்…..ஆனாலும் காதல்காரன் தான் பா…

சிடுசிடுனு இருந்தாலும் இவன் காதல் ரொம்ப cute…..

சந்தோஷ்….விக்ரம் ஓட ப்ரெண்ட்….இவங்க பாண்டிங் நல்லா இருக்கு…. பாரு கிட்ட வாய் ஆடறது எல்லாம் செம்ம ஃபன்……

மாறன்….விக்ரம்க்கு கிடைச்ச ப்ரெண்ட் போல இவனுக்கு கிடைக்கல…. கிடைச்சது எல்லாரும் துரோகிகள் தான்….

இவனோட நிலைக்கு அவங்க தான் காரணம்…. பாவம்…

மாறன் பக்கம் இருக்கற கோவம் நியாயம் தான்….

மாறன் என்னன்ன தான் தான் தங்கைக்கு பாதுகாப்பு அப்படினு அவளை ஓவர் protect பண்ண…..

அது எப்படி அண்ணன் தான் வேணும்னு குழலி மாறன் கூட போலாம்னு அதில் செம்ம கோவம் விக்ரமுக்கு….

இதில் சிக்கினது குழலி தான்….பாச டார்ச்சர் பண்றாங்க ரெண்டு பேரும் அவளை…..

கதை நல்லா விறுவிறுப்பா சூப்பரா இருந்தது👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

போட்டியில் வெற்றி
பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐
 
அகம் கொய்தாய் காவலனே!

is an exciting mix of crime, family, and romance. விக்ரம், a police officer, investigates a murder case where evidence points to தேன்குழலி’s brother, Maran.
The story beautifully shows the brother-sister bond while Vikram works to reveal the real culprit. Along the way, love blossoms between Vikram and Thenkuzhali. Suspense, family ties, and romance keep the story engaging
❤️✨
 
Pommu Novels அவர்களின் அப்ளிகேஷனில் நடக்கும் போட்டி கதைகள்
#AVP15
Zeeraf Novel அவர்களின் எழுத்தில்
"அகம் கொய்தாய் காவலனே"
விக்ரம் பிரதாப்.. ஏ சி பி
கஞ்சி போட்டது உடுப்புக்கு மட்டுமல்ல அவனுக்கும் தான் என்பதைப் போல விரைப்பாக சுற்றி திரிபவன். அவனையும் காதல் பாடாய்படுத்துகிறது. கொலை வழக்கில் குற்றவாளியாக கருதப்படும் மாறனை பிடிப்பதற்காக அவன் தங்கையை பனைய கைதியாக பிடித்துக் கொண்டு வருகிறான். அவளின் பயமும் வெகுளித்தனமும் சில நேரக் கோபமும் இவனுக்கு சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. திருமணத்தைப் பற்றி நினைக்காமல் பெண்களை ஏறெடுத்தும் பார்க்காமல் அந்த நினைவும் இல்லாமல் இருப்பவனை தலை குப்புற விழ வைக்கிறாள் தன் அப்பாவி தனத்தால் தேன் குழலி. கதையின் நாயகி. தன் அண்ணன் மாறன் மீது உயிரையே வைத்திருக்கிறாள். அவன் ஆபத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் போது தவித்து பயம் கொள்ளும் இவள் மனம் இவளை கைதியாக சிறைபிடித்தவனிடம் களவு போனது.
அண்ணனா..? மனம் கவர்ந்தவனா..? என்ற நிலை வரும் போது அண்ணன் தான் என்று சென்று விடும் பெண்ணின் மீது பெரும் கோபத்தில் இருக்கிறான் விக்ரம். இவர்கள் கோபம் நீங்கி சமாதானம் ஆகினார்களா அண்ணனின் மனதை மாற்றி மனம் கவர்ந்தவனின் கைப்பற்றினாளா தேன்குழலி என்பது கதையில். மாறன் மீது விழுந்த கொலை பழி என்னானது உண்மையான குற்றவாளி யார் என்பதும் கதையில்.
சந்தோஷ் விக்ரமின் உற்ற நண்பன். அழகான கதாபாத்திரம் 🥰 தேன்குழலியை சகோதரியாக நினைத்து அவளுக்கு துணையாக இருப்பதும் விக்ரமுக்கு நந்தியாக இருப்பதும் அழகு 😀😀
பார்வதி குழலியின் தோழி.
சந்தோஷோடு இவளை இணைத்து வைத்தது அருமை 🥰
ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும் போகப்போக சூடு பிடித்தது கதை🥰 விறுவிறுப்பாகும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை. நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰🌹❤️
 
Top