என் ரோஜா நீயே
ஆசிரியர்: சஸ்னா சர்ஜான்
நாயகன்: விகான் விக்ரம்
நாயகி: ஆரூஹி
நம்ம நாயகன் இளம் தொழில் அதிபர் VV Global அப்படின்னு ஒரு கம்பெனி ரன் பண்றார்..... அவருக்கு அப்பா கிடையாது அம்மா சாரதா அவரை கஷ்டப்பட்டு இந்த நிலையில் உயர்த்திஇருப்பாங்க...
நம்ம நாயகி நல்ல ஜாலியான டைம் அவங்களுக்கு அம்மா கிடையாது அப்பா கபிலன் மட்டும் தான் அவர் சின்ன வயசில் இருந்தே ஆரூக்காக வேண்டி மறுமணம் கூட செய்து கொள்ளாமல் வாழும் பாசமுள்ள அப்பா
ஆரூஹி சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனிலியா மாதிரி சிரிச்சு சந்தோஷமா இருக்காங்க அவங்க நண்பன் ரோக்கி அதாவது ஒரிஜினல் பெயர் ராமகிருஷ்ணன்...நாயகிவிவி குளோபல்ல வேலைக்கு சேருறாங்க அங்கே நாயகன் நாயகியோட குழந்தைத்தனமான மனதில் ஈர்க்கப்பட்டு காதலிக்க ஆரம்பிக்கிறாங்க இரண்டு பேரும் அவங்க காதலை சொல்லிக் காமல் இருக்காங்க...கபிலன் அப்பா காதல் லாம் சரியா வராது அப்படின்னு வீட்ல ரூஹிக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணுறதுக்கு ஏற்பாடு செய்யும் போது நாயகன் காதல் சொல்ல ரூஹி காதலிக்கலைன்னு சொல்லிட்டாங்க... நாயகன் கோவத்தில் சிங்கப்பூர் போயிடறார் ..நாயகி கல்யாணம் நடந்ததா அவங்க காதல் நிறைவேறுச்சா சிங்கப்பூர் சென்ற மூன்று வருட காலகட்டத்தில் நாயகி வாழ்க்கையில் நடந்த துயரங்கள் நடந்ததுஎன்பதை அருமையாக சொல்லி உள்ளார் ஆசிரியர்.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
குடும்பத்தை விட்டு ஓடின தகப்பன் மேல இருந்த வைராக்கியத்தில உழைச்சு பெரிய தொழிலதிபனாகிற நாயகன் விஹானோட சென்னை ஆஃபீஸுக்கு வேலைல சேருறாங்க நாயகி ஆரூஹியும், அவ நண்பன் ராதாகிருஷ்ணன் அலைஸ் ரோக்கியும். தாயை இழந்து தகப்பனால மட்டுமே வளர்க்கப்படுற ரூஹி குணத்திலே குழந்தையாவே இருக்கிறா. அந்த குழந்தைத்தனத்தால ஈர்க்கப்படுற விஹான் அவக்கிட்ட காதலை சொல்றான். முதல்ல அவங்களோட அந்தஸ்து பேதத்தை மனசில வைச்சுக்கிட்டு மறுக்குற ரூஹி ஒரு கட்டத்தில அவனோட ஆழமான காதலை புரிஞ்சுக்கிட்டு அவனை லவ் பண்றா. இந்த காதலுக்கு தடையா இருக்கிறாரு ரூஹியோட அப்பா. அந்த தடையை கடந்து இவங்க காதல் கல்யாணத்தில முடிஞ்சுதா இல்லையான்னு கதை படிச்சு தெரிஞ்சுக்கோங்க தோழிகளே.
தகப்பன் இல்லாத பிள்ளைங்க தறுதலையாகிடும்னு சொல்ற கருத்தை பொய்யாக்கிட்டு அதையே வைராக்கியமா எடுத்திட்டு பெரிய ஐடி நிறுவனத்தை சென்னையிலேயும், சிங்கப்பூர்லேயும் நிறுவி தொழில்ல ஜெயிச்சு ஒரு பெரிய தொழிலதிபனாகவும், அம்மா பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாம அவனுக்காகவே வாழ்ந்துக்கிட்டு இருக்கிற அம்மாக்கிட்ட காமிக்கிற அளவில்லாத பாசமும், ரூஹியோட குழந்தைத்தனத்தால சிலபல இன்னல்கள் இருந்தாலும் அவ மேல காமிக்குற அழுத்தமான காதலும், அவளுக்கு ஒரு துன்பம் வந்தப்போ அவன் துடிச்ச துடிப்பும் அதில இருந்து மீட்டெடுக்க அவன் செஞ்ச முயற்சியும், எந்த இடத்திலேயும் காசுக்கும், அழகுக்கும் விலை போகாத அவனோட குணமும் எல்லாம் விஹானை சூப்பர் ஹீரோவா காட்டுது.
ஆளு வளர்ந்த அளவுக்கு அறிவு வளரலைன்னு சொல்ல முடியாத அளவுக்கு தன்னோட குழந்தைத்தனத்தால தன் நெருக்கமானவங்களுக்கு பயத்தை குடுத்தாலும் குமாரியா அவ எடுக்கிற தெளிவான முடிவுகளும், தனக்காகவே வாழ்ந்துக்கிட்டு இருக்கிற அப்பாவை நோகடிக்காத குணமும், சொல்லாம இருந்தாலும் விஹான் மேல வச்சிருந்த ஆழமான காதலும் னு ரூஹியும் விஹானுக்கு ஏத்த ஜோடியாக ஜொலிக்குறா. ஒரு கட்டத்தில அப்பாவா காதலனான்னு தீர்மானிக்க முடியாம அவ எடுத்த முடிவு பிரச்சனைக்கு நல்ல தீர்வு இல்லைனாலும் ரெண்டு பேரும் அவளுக்கு எவ்வளவு முக்கியங்குறதுக்கான வெளிப்பாடு.
விஹான் ரூபி காதல் எவ்வளவுக்கு அழகானதோ அவ்வளவுக்கு அழகு ரூஹி ரோக்கி நட்பு. எல்லா இடத்திலேயும் அவளுக்கு இன்னொரு அப்பாவா நடந்துக்கிற ரோக்கி நட்புக்கு இலக்கணம்னா அம்மா இல்லாத ரூஹிக்கு அம்மாவா இருக்கிற ரோக்கியோட அம்மா ரதியும், கணவன் விட்டுட்டு போன உடனே மூலைல மொடங்காம விஹானை பெரிய ஆளாக்கினதோட அவனோட எல்லா செயல்களுக்கும் ஆதரவு குடுத்த விஹானோட அம்மா சாரதாவும் நல்ல அம்மாக்களோட இலக்கணங்கள். நிலா ரோக்கியோட காதல் தென்றலா மனசில அடிக்குது.
ரோக்கி ஃபாரின் போகும் போது ரூஹி அழுறது, அதுக்கப்புறம் தனிமையை உணர்ற ரூஹியை விஹான் வெளிய கொண்டு வர்றது, கபிலனோட பிடிவாதத்தால ரூஹி கலங்கி நிக்குறது, விஹான் ரூஹிக்கிட்ட காதலை எதிர்பார்க்க அவ அவனை காதலிக்கலைன்னு சொல்ல அதைக் கேட்டு விஹான் கலங்கி நிக்குறது, விஹான் நாட்டை விட்டு போறது, திரும்ப வந்தப்போ அவளோட நிலைமை பாத்து கலங்கி நிக்குறது இதெல்லாமே நம்ம கண்களை கலங்க வைச்ச தருணங்கள்.
விஹானை பணத்துக்காக சுத்தி சுத்தி வந்து அது நடக்காதுன்னு தெரிஞ்சு ரூஹியை ஆபத்துக்கு கொண்டு போற திவ்யாவும், யாருக்கோ நடந்தது நமக்கும் நடக்கக்கூடாதுன்னு யோசிச்சு மகளோட மனசை உடைக்குறோம்னு தெரிஞ்சே உடைச்சு அதுக்கு அவ மேல இருக்கிற அக்கறைதான் காரணம்னு சப்பைக்கட்டு கட்டி அவளை ஒரு மோசமான முடிவுக்கு தள்ளின கபிலனும் ரொம்பவே எரிச்சல்படுத்திட்டாங்க என்னை. கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் மாதிரி இருந்தது அவரு தப்பு உணர்ந்த தருணம். அவ்வளவு பாத்து பாத்து வளர்த்து அவளோட முக்கியமான நேரத்தில தன்னோட அவசியமில்லாத பயத்தால அவ விருப்பத்துக்கு முக்கியத்துவம் குடுக்காம அவளை அப்படி ஒரு நிலைமைக்கு தள்ளிட்டாரேன்னு ரொம்ப கோபம் எனக்கு அவர் மேல.
ரூஹி தப்பான ஒரு முடிவெடுத்து விஹான் மீதான காதலை நிரூபிக்கிறா அதுபோல ரூஹியோட மோசமான நிலைமைல இருந்து அவளை வெளிக் கொண்டு வர விஹான் போராடின போராட்டம் அவனோட காதலோட ஆழத்தை படம் போட்டு காமிக்குது.
காதல்,பாசம், நட்பு, கொஞ்சம் ரொமான்ஸ், கொஞ்சம் அழுத்தம்னு இந்த ரோஜா ரீடர்ஸ் மனசில மணம் வீசுது. போட்டியில ஜெயிக்க வாழ்த்துக்கள் ரைட்டரே.
அழகான ஒரு காதல் கதை..காதல் இருந்தாலே வலி இல்லாம இருக்குமா ? காதல் பிரிவு வலி நட்பு இணைவுனு எல்லாம் சேர்ந்த கதை..
நாயகன் விஹான் விக்ரம் ..தந்தை மறுமணம் செய்து கொண்டு போக தாய் சாரதாவால்
வளர்க்கப்படுகிறான்..தந்தையால் இறுக்கம் கொண்டு வளர்ந்து உழைத்து பெரிய தொழிலதிபராக இருக்கிறான் ..இவனின் கம்பெனியில் வேலை பார்க்க வருகிறாள் நாயகி ஆருஹி ..தாய் இல்லாமல் தந்தையால் மட்டுமே வளர்க்கப்படுற ஆருஹி ஹ ஹா ஹாசினி ஜெனிலியா கேரக்டர்..இவளின் குழந்தைதனத்தால் ஈர்க்கப்படும் விஹான் அவளின் மேல் காதல் வயப்பட அதை அவளிடம் சொல்லிடுறான்..அந்தஸ்து பேதத்தால் அவன் காதலை ஏற்க மறுக்கும் ஆருஹி பின் அவன்மேல் காதல்வயப்பட அவங்க காதலுக்கு ஆப்பா வந்து நிக்கிறாரு அவ அப்பா கபிலன்...பல தடைகள் தாண்டி இவங்க காதல் எப்படி சேர்ந்ததுதான் கதை ..
விஹான் பெரிய தொழிலதிபர்..இவனுடைய கம்பெனியில் தான் வேலைக்கு வர்ரா ஆருஹி..ஆரம்பத்துல இவங்க இரண்டு பேருக்கும் முட்டிக்கிட்டாலும் போகப்போக அவளின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்படுறான்..அவன் ரூஹியின் மேல் அவன் காட்டும் அன்பும் தன் தாயின்மேல் அவன் கொண்ட பாசமும் அவனை நல்ல மனிதனாக காட்டுது.ரூஹியிடம் தன் காதலை வெளிப்படுத்திய விதமும் , அவளுக்காக கூடவே சுத்துறதுன்னு எல்லாமே சூப்பர்...அவள் அப்பா கூறிய திருமணத்திற்கு சம்மதம் சொல்வதை கேட்டு அவன் கலங்கிய விதம் ரூஹியின் நிலையை கண்டு அவன் கலங்கிய தருணம் , அவளை மீட்டெடுக்க அவன் பட்ட கஷ்டங்கள் நம்மை கண்கலங்க வைத்தது.
ஆரூஹி சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனிலியா கேரக்டர் மாதிரிதான்..ரொம்ப குழந்தைத்தனம் கொண்டவள் இவள் ஆரம்பத்துல பேசுற வசனங்கள் நெட்டையன்னு விஹானை கலாய்க்கிறதுலாம் ஒரே சிரிப்பு அதுவும் அவன் பிரண்ட் ரோக்கின்ற ராமகிருஷ்ணாகூட சேர்ந்து பண்ணுற லூட்டி இருக்கே அது அல்ட்டி இவங்க காம்பினேஷன் நல்லா காமெடியா இருந்தது படிக்க..
குழந்தைதனமான குணமுடையவளா இருந்தாலும் சில இடங்களில் நானும் தெளிவான பெண்தான் அப்படின்றத இவளின் சில முடிவுகள் மூலமா நமக்கு காட்டிடுறா .. சின்ன வயசுல இருந்தே பாசத்தை காட்டி வளர்க்குற தகப்பன் பாசத்தை தட்ட முடியாமல் தன் காதலை மறைக்கும் ரூஹி விஹானுக்கும் அவளின் அப்பாவின் முடிவுக்கு இடையில் மாட்டிக்கொண்டு தவிப்பது நமக்கு கஷ்டமா இருக்கு படிக்க..விஹானை மறக்க முடியாது திருமணத்தை நிறுத்த அவள் எடுத்த முடிவு அவளின் காதல் ஆழத்தை காட்டுது.. அதற்குப்பின் அவள் படும் வேதனைகள் அப்பப்பா
ரோக்கி அலைஸ் ராமகிருஷ்ணா இவன் ஆரூஹிக்கு ஒரு நல்ல நட்பு.. இவங்க இரண்டு பேரின் நட்பும் காமெடியா இருந்தாலும் ரோக்கியும் இவளுக்கு ஒரு கார்டியனா இருந்தான் எல்லா சூழலிலும்..ரோக்கி ஜெர்மன் போகும்போது ஆருஹி அழுத அழுகையும் , ஆருஹியின் நிலையை கண்டு ரோக்கியின் வருத்தமும் அவர்கள் அன்பின் ஆழத்தை நமக்கு காட்டுது..இவனுக்கும் நிலாவுக்கும் இடையே உள்ள காதல் சூப்பரா இருந்தது... ஆனால் இவன் முதலிரவு அன்னிக்கு ஆருஹி பண்ணி வச்ச வேலை இருக்கே ..
கபிலன் நல்ல தகப்பனா ஆரம்பத்தில் தோன்றினாலும் யாரோ ஒருவருக்கு நடந்ததை கேட்டு அதேபோல் தன் மகளுக்கும் நடந்திடும் நினைச்சு அவள் பாசத்தை பகடைகாயாக வைத்து அவளின் காதலை ஏற்காமல் அவளை அந்த நிலைமைக்கு தள்ளின பிறகு கபிலன் பிடிக்காம போயிடுச்சு
சாரதா அம்மாவும் ரதி அம்மா கேரக்டரும் நல்லா இருந்தது...நல்ல அம்மாக்கள் இரண்டு பேரும்
தன் காதலை நிரூபிக்க தன் உயிரையும் மாய்த்துக்கொள்ள நினைச்ச ரூஹியும் அவளை மீட்டெடுக்க விஹானின் போராட்டங்களும் இருவரின் காதலையும் நமக்கு அழகா காட்டுது..
அழகான காதல் கதை.. இடையிடையே சிறு எழுத்துப்பிழைகள் மட்டுமே..அதை தவிர்த்து இருக்கலாம்னு தோணுச்சு
விஹானின் ரோஜாவாகிய ஆருஹி இந்த போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!