ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 32- ஆழகாலனின் காதல் நேசம்

ஆழகாலனின் காதல் நேசம்
ஆசிரியர் :மதுஷா
நாயகன்: கரிகாலன், ரோஹன்
நாயகி: உமையாள், நந்தினி
நந்தினி பிரபலமான தொழில் அதிபர் அவங்களுக்கு சிறு வயதிலேயே பெற்றோர்கள் கிடையாது....சொத்திற்க்காக பல ஆபத்துக்களை தாண்டி வாழ்க்கையை எதிர்நோக்குகிறார் அதாவது ஆண்ட்டி ஹூரோயின்....
கரிகாலனும் ஒரு தொழிலதிபர்..அவர் ஒரு பெண்ணை ஒரு தலையாக காதலிக்கிறார்...

இதற்க்கிடையே கரிகாலன் தாத்தா ராஜேந்திரன் மற்றும் நந்தினியின் தாத்தா அர்ஜுன் சேர்ந்து கரிகாலனுக்கும் நந்தினிக்கும் திருமணம் செய்ய விரும்ப முடிவெடுத்திருப்பார்கள்...
அதைப் பிடிக்காமல் நந்தினி சில வார்த்தைகள் விட அதை கேள்வி பட்டு கரிகாலன் தங்கைவிதுனா நந்தினியை அடிக்க என கலோபரம் ஏற்படுகிறது...நந்தினி தன்னை அடித்த விதுனாவை பழிவாங்க ஒன்று செய்ய அதில் விதுனா மிகவும் மோசமாக பாதிக்கப்படுகிறாள்.... விதுனாவின் பிரச்சினை என்ன அவளுக்கான நியாயம் கிடைத்ததா...
நந்தினி மனம் திருந்தினாலா...
கரிகாலன் காதல் கைக்கூடியதா...

நந்தினி ரோஹனை கல்யாணம் செய்துக் கிட்டா லா போன்றவற்றை எழுதியுள்ளார் எதார்த்தமான நடைமுறையில் சொல்லி உள்ளார்...
உமையாள் வீரா அக்கா தம்பி பாசம் கிராமத்து பிண்ணனியில் மாமா என்று அழைக்கும் முறை நல்ல வித்தியாசமான காதல் அழகு❤️❤️❤️❤️❤️❤️
வீரா நல்ல மனிதன் நல்ல புருஷன் 🥰🥰🥰
பத்து வயதில் இருந்தே கஷ்டப்பட்டு தங்கைக்கு பாதுகாப்பு தந்து சொந்த பந்தங்களில் சூழ்ச்சிகள் தங்கையை நெருங்காமல் பாதுகாக்கும் நந்தினி பாசத்தின் மொத்த உருவமாக 🥺🥺🥺🥺. சேகர் நீ என்ன ஒரு கேவலமான அப்பாவோ

தீஷி ❤️❤️❤️❤️ஆகாஷ் சைலண்ட் டா இவனுங்க ஒரு ட்ராக் ஓடுது... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 💐 🧡 🧡 🧡 🧡 🧡
 
Last edited:
#ஆழகாலனின்_காதல்_நேசம்….
#கௌரிஸ்ரிவ்யூ…..

நல்ல வேலை இதை நா ongoingலா படிக்கல….. ஏன்னா

ஒரு ஒரு எபிலையும் டுவிஸ்ட்…..ஒரு ஒரு கேரக்டர் பின்னாடி ஒரு ஒரு பின்னணி😳😳😳😳😳….

ஆழகாலன் அப்படினு வெச்சதுக்கு பதிலா…..அதை பெண்பாலில் வெச்சி இருக்கலாம்…..

கரிகாலனுக்கும், நந்தினிக்கும் தொழில் முறையில் நிறைய போட்டி….

இந்நிலையில் ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க அவங்க தாத்தாக்கள் திட்டம் தீட்ட…..

நந்தினிக்கு சுத்தமா பிடிக்கல….கரிகாலனுக்கும் தான்…..

ஆன நந்தினி சும்மா இல்லாம, கரிகாலன் பத்தி தப்பா பேச….

அதை தட்டி கேட்க சுனிதா, கரிகாலன் தங்கை போக…

அவளையும் அவமான படுத்திரா நந்தினி……

இந்த அவமானம் போதாத நந்தினி செய்த செயல் ஒண்ணு சுனிதாவின் வாழ்க்கையையே கேள்வி குறி ஆக்கிட்டு…..

அதை அறியும் கரிகாலனின் எதிர்வினை?????

கரிகாலன் விரும்பும் உமை …..நந்தினியின்??????

இனி சுனிதாவின் வாழ்க்கை?????

இது எல்லாம் பரபரப்பா விறுவிறுப்பா சொல்லி இருக்காங்க ரைட்டர் 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 …..

கரிகாலன்….தங்கை மீது கொண்ட சொல்லாத பாசம் ஆகட்டும்…..தனியாக தன் காதலை வளர்த்து கொள்வதாகட்டும்…..எல்லாமே ரொம்ப cute 🥰 🥰 🥰 🥰 🥰…..

உமையை கல்யாணம் பண்ணினதுக்கு அப்பறம் இவனோட transformation🤭🤭🤭🤭🤭…..

என்னடா இப்படி ஒரேடிய சாஞ்சிட்ட🤩🤩🤩🤩…..

உமை….சரியான பாசக்காரி…..கொஞ்சமே கொஞ்சம் அவசரக்காரி 🤣🤣🤣🤣…..

நந்தினி…..ஆரம்பத்தில் இவளை கொஞ்சம் பிடிக்கல தான்…..

பட் ஸ்டோரி முடியும் போது நந்தினி மட்டும் தான் மனதில் நிக்கறா…..

உமை மேல இவள் கொண்ட பாசம்…..ப்பா…இப்படி ஒரு பெண்ணா…..வியக்காமல் இருக்க முடியல….

ரோஹன்…..நந்தினிக்கு இவன் மட்டும் தான் சரி….என்ன ஒரு unconditional லவ் ❤️❤️❤️❤️❤️

வீரா…..இவன் கேரக்டர் பின்னணி…கொஞ்சம் கூட யோசிக்க முடியாதா இருக்கு…..

சுனிதா மேல இவன் கொண்ட நேசமும் ரொம்ப நல்லா இருந்தது…..

ஆட்டத்தின் மையம் உமை🤩🤩🤩🤩….

ஆடுகளத்தின் காவலன் வீரா🥰🥰🥰🥰……

ஆடுகளத்தின் சூத்திரதாரி நந்தினி🔥🔥🔥🔥🔥🔥…..

மத்தவங்க எல்லாம் சைட் கேரக்டர்ஸ் தான்…..

கதை ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது ரைட்டர் 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐
 
ஆழகாலனின் காதல் நேசம் விமர்சனம்

இது ஆன்டி ஹீரோ ஆன்டி ஹீரோயின் சேர்ந்த கதை..

நாயகன் கரிகாலன் நம்பர் ஒன் பிசினஸ்மேன்..ஆன்டி ஹீரோக்கு உள்ள பத்து பொருத்தமும் பக்காவா இருக்க கேரக்டர்.. அவனை போலவே தான் நந்தினியும் தாய் தந்தை இல்லாம சின்ன வயதிலிருந்தே வளருவதால் மென்மைன்னா கிலோ என்ன விலைன்னு கேக்குற ஆளு..பக்கா ஆன்டி ஹீரோயின் 🤩..கரிகாலனை விட தான் பிசினஸ்ல முதல் ஆளாக வரணும்னு நினைக்கிறவ ..இரண்டு பேரோட தாத்தாவான ராஜேந்திரனும் அர்ஜூனனும் நண்பர்கள்..இவங்க இரண்டு பேருக்கும் திருமணம் செய்ய நினைக்கிறாங்க..ரெண்டு பேருக்கும் விருப்பமேஇல்லை..

ஒரு பிரச்சினையில் கரிகாலனின் தங்கை சுனிதா தன் அண்ணணுக்காக நந்தினியை அடிச்சிடுறாங்க..நந்தினி பதிலுக்கு சுனிதாவுக்கு அடிக்க வர அது கரிகாலன் மேல விழுந்துடுது..ரெண்டு பேருக்கும் பழிவாங்கனும் தோண நந்தினி சுனிதாவ அவளுடைய பாடிகார்ட் சுந்தர் கூட சேர்த்து வச்சு தவறான வீடியோ எடுத்து பரப்பிடுறா.. இதனால ரொம்ப பாதிக்கப்படுறா சுனிதா.. தன் தங்கைக்காக நந்தினியின் தங்கை உமையாளின் வீடியோவை பரப்பிடுறான் கரிகாலன்.

நந்தினி கரிகாலன் இவர்களில் மோதலின் முடிவு என்ன ? நந்தினி கரிகாலன் திருமணம் நடந்ததா ? நந்தினி தன் தவறை உணர்ந்தாளா? விடை கதையில்...

நந்தினி ரொம்ப ரக்கர்ட் கேர்ள்..இவ சுனிதாக்கு பண்ணது ரொம்ப தப்பு தான்..எல்லாருக்கும் ஒரு வீக்னஸ் இருக்க மாதிரி நந்தினியின் வீக்னெஸ் அவள் தங்கை உமையாள்...உமையாளுக்காக அவ பண்ண விஷயங்கள் எல்லாமே நல்லா இருந்தது..அக்கா தங்கை பாசம் ஓவர்டேக் பண்ணிடுச்சு..தன் தங்கையை காப்பாற்ற சின்ன வயதிலிருந்தே அவ பண்ண விசயங்கள் எல்லாமே அருமை..எல்லாமே பண்ணாலும் தன் தவறை அவள் உணர்ந்து சுனிதா கிட்ட மன்னிப்பு கேட்கவே இல்லை அது பண்ணியிருக்கலாம்னு தோணிச்சு..


இப்படி இருக்க நம்ம நந்தினியையும் காதலிக்கும் ரோஹன்..நந்தினிக்காக அவன் பார்த்து பார்த்து செய்த விஷயங்கள் எல்லாமே படிக்க அருமையா இருந்தது..ரோஹனின் நந்தினி மீதான காதல் ❤️எந்த சூழலிலும் அவளை விட்டுக்கொடுக்காத பாங்குன்னு இவனின் காதலும் அழகு..


கரிகாலன் சுனிதா பாசம் நல்லா இருந்தது.. உமையாள் மீதான அவனின் காதல் அவங்க ரொமான்ஸ்லாம் அவ்வ்வ்🙈🙈என்னடா டெரர்ரா இருந்தவன் சட்டுன்னு சாக்லேட்பாயா மாறிட்டான் அவன் ட்ரான்ஸ்பர்மேஷன்😆😆 உமையாள பார்த்து ஆள் பிளாட்🤭🤭 உமையாள் கரிகாலனின் இருவரின் ஒருதலைக்காதலும் சிறப்பு..உமையாள் நந்தினி பிணைப்பு ❣️உமையாளின் நந்தினி மீதான பாசம் உமையாள் வீரா அக்கா தம்பி பாசம்னு எல்லா கேரக்டரும் சூப்பர்ப்பா ❣️


சுனிதா மீதான வீராவின் காதல் அவளை புரிந்துகொண்ட விதம்..வீரா யாருன்றதை பிரேக் பண்ண விதம் நல்லா இருந்தது..👍


விதுனா இவ என்ன பொண்ணு..சுனிதாக்கு தெரியாமல் நடந்த தவறுக்காக இவள் அவளை திட்டிய விதம் பிடிக்கல😒 லாஸ்ட் டா சுனிதா இவளுக்கு திருப்பி கொடுத்தது சூப்பரு ..


தன் தங்கை உமையாளை காக்க போராடுகிறாள் நந்தினி,


ஆடுகளத்தில்

களத்தின் நாயகியாய் உமையாள்

சக்கரவியுகம் போல நந்தினி

சூத்திரதாரியாய் கரிகாலன் இருக்க

களம் எப்படி ஆட்டம் கண்டது ? இதை ஆசிரியர் நல்லா சொல்லி இருக்காங்க ...
சச்சிதானந்தா சுவாமி கேரக்டர் லாஸ்ட்டா வந்தாலும் அவரை எதுக்காக கொண்டுவந்தாங்கன்னு யோசிச்சேன்.பட் எப்படியோ சரியா வந்துட்டு .. சேகர் இவரெல்லாம் என்ன தகப்பனோ😬😬😬

மோதிக்கொண்ட இரு சிங்கங்களையும் தங்கள் காதலினால் கட்டுவிக்கின்றனர் உமையாளும் ரோஹனும் 🧡
ஆழகால விசத்தை போலத்தான் நந்தினியின் உமையாள் மீதான பாசம் ❤️


ஆசிரியர் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
 
Last edited:
ஆண் சிங்கம் 🦁 கரிகாலனுக்கும் பெண் புலி 🐯 நந்தினிக்கும் நடக்கும் மோதலில் இடையில் மாட்டும் மான் 🦌 சுனிதாவிற்க்கும் மயில் 🦚 உமையாளுக்கும் என்ன நேர்ந்தது? பழிவாங்கும் முயற்சியில் வென்றது வன்மமா? அன்பா ? என்பதே கதை ❤❤


இடையில ஒரு பன்னியும் 🐷 வந்து தலையை குடுத்து வசமா புலிகிட்ட சிக்கிக்கிடுச்சு . மூடநம்பிக்கைகள் நிறையந்த இந்த சமூதாயத்தியை சரியா பயன்படுத்திக்குது இந்த பன்னி 🤬🤬


புலியின் செயல்களை கொஞ்சமும் ஏற்கமுடியல என்ன இவ இப்படி பண்ணுறானு தோணாமலில்லை ஆனாலும் மயிலினூடே இவள் கொண்ட நேசம் மெய் சிலர்க்க வெய்க்கிறது 💚💚


ரோஹனின் தூய்மையான நேசம் அழகு 😍💓 புலிகிட்டயும் மயில்கிட்டயும் மாறி மாறி அடிவாங்குவது சூப்பர்😄😄🤣🤣


சிங்கம் கொஞ்சம் உர்ருனு வளம் வந்தாலும் பாசக்காரன் 😍 சிங்கத்தின் காதலும் ரொமான்ஸும் வேற மாதிரி🙈🙈🙈


புலி மற்றும் மயிலின் முன் கதை சற்றும் எதிர்பார்க்காத கொடுமைகள் 😓😓 மயிலின் பேச்சும் உரிமையான செயல்களும் மானின் சுட்டித்தனமும் நல்லா இருந்தது ❤


சுந்தர் சுயநலவாதி 😰😰 இவனின் செயல்கள் எரிச்சலைதான் வரவைக்குது. வீராவின் ட்விஸ்டும் அவனின் உண்மையான பாசமும் நல்லா இருந்தது❤


மானின் இந்த நிலைக்கு முழுக்க முழுக்க புலிதான் காரணமா இல்லை இடையில ஏதாவது விஷக்கிருமிகள் வேற வேலை பார்த்துச்சானு கொஞ்சம் தெளிவா சொல்லீருக்கலாம்.


பெரிசா லாஜிக்காக எல்லாம் யோசிக்காமல் நல்லா ஜாலியா என்ஜாய் பண்ணி படிக்க கூடியதா இருந்தது கதை ❤


போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍
 
Top