ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 34- என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்

pommu

Administrator
Staff member
APV 34- என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்
 
#என்_உள்ளத்தை_ஈர்த்த_பூமுகம்_விமர்சனம்
சஸ்பென்ஸ், க்ரைம், ட்விஸ்ட், காதல், குடும்பம் பாசம், வலி, பிரிவு, நட்பு, துரோகம், கலகலப்புனு மொத்த உணர்வுகளின் குவியல் இந்த கதை ❤

ஆரம்பத்திலிருந்து முடிவு வரை எதிர்ப்பார்க்காத ஏகப்பட்ட ட்விஸ்ட்ஸ் அருமை 👏👏

கதையின் நாயகன் ஜெயதீரன் நாயகி யாருனு கதையில தெரிஞ்சுகோங்க ஏன்ன அங்கயும் ட்விஸ்ட் வெச்சுருக்காங்க 😍😍

ஜெய் காவல் துறை அதிகாரி, குழந்தை கடத்தல் வழக்கில் உண்மையான குற்றவாளி யாருனு கண்டுப்பிடிக்கும் முயற்சியில் மனைவி குழந்தையை பிரிய வேண்டி வருது. ஐந்து வருட பிரிவுக்கு பிறகு குற்றாவளியை கண்டுப்பிடித்தானா? மீண்டும் குடும்பத்துடன் இனணந்தானா என்பதே கதை❤❤❤

ஏகபட்ட கதாபாத்திரங்கள் கதையில்❤ அதில் முக்கியமா தீரா ஜோதிகா நட்பு அட்டகாசம்❤ எல்லா சந்தர்பத்திலும் துனணயா இருக்கான் ❤ கலகலப்புக்கும் பஞ்சமே இல்லை அவனால் 🤣

முகி கிருபா நட்பும் நல்லா இருக்கு❤
தீரா மனைவியை பிரிந்து படும் துன்பம் 💔
மயல் அவளின் அம்மாவிற்கான தேடல் இரண்டும் சொல்ல வார்த்தையில்லா வலி 😢😢 கொஞ்சமே கொஞ்சம் காதலும் ரொமான்ஸும் கதைக்கு சுவை கூட்டுது 🙈🙈

கயல் வச்சு ஒரு ட்விஸ்ட் இருக்கே அப்பப்பா நான் பதரிட்டேன்🫣 கடைசியில் யாரு குற்றவாளிங்கற கேள்வியை பரேக் பண்ண விதம் சூப்பர் 🫰🫰

இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதைனு சொன்னாங்க. இப்படி எல்லாமா மனிதர்கள் இருப்பாங்கனு யோசிக்க வைக்குது 😓😓

அனனவரின் உள்ளத்தையும் இந்த பூமுகம் ஈர்த்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍
 
என் உள்ளத்தை ஈர்த்த பூ முகம்
ஆசிரியர்:ஆஷா ஷாரா
நாயகி: மயல்மொழி
நாயகன்:ஜெயதீரன் ஏ சி பி
நம்ம நாயகன் குடும்பம் பெரிய கூட்டு குடும்பம்
தாத்தா- மாணிக்கவேல் பாண்டியன் அப்பா- சக்திவேல்பாண்டியன் மீனாட்சி
மாமா- கருணாகரன் வரலெட்சுமி
குமரவேல்- வேதவல்லி
எல்லாரும் ஒரே வீட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்...வீட்டின் மூத்த பேரன் நம் நாயகன் இப்படி ஒரு கூட்டு குடும்பத்தில் பிறந்து வீட்டிற்க்கு தெரியாமல் கல்யாணம் செய்து கொள்கிறார் அதனால் அவங்க அப்பா விற்க்கும் அவருக்கும் ஐந்து வருடமாக பேச்சு வார்த்தை இல்லாமல் இருக்கிறார்....
குழந்தைகள் கடத்தல் வழக்கில் நாயகன் தீவிரமான தேடலில் உள்ளார் அதில் மருத்துவம் சார்ந்த பல திடுக்கிடும் சம்பவங்கள் பல நடக்கின்றன....
அண்ணண் எவ்வழியோ நானும் அவ்வழி என்பது போல் தம்பி முகிலின்பனும் அண்ணன் மனைவி மயில்மொழியின் ட்வின் சகோதரி அக்கா கயல் மொழியை வீட்டிற்க்கு தெரியாமல் கல்யாணம் செய்து கொள்கிறார்....மயல் மொழி கயல் மொழி இவர்கள் பெற்றோர் பூங்கோதை ராம் பிரசாத் மருத்துவமாணவிகள் அவர்களின் பெற்றோர்கள் மருத்துவர்கள்...
குழந்தை கடத்தல், கர்ப்பத்தில் குழந்தை சிதைவு இதுக்கெல்லாம் காரணம் யார் என்பதை நல்ல விறுவிறுப்பாக த்ரில்லர் கலந்து நிறைய ட்விஸ்டோடு எழுத்தாளர் கொடுத்துள்ளார்...தீரா ஜோதி நட்பு செம்ம.. நான் முதலில் சமரச பாண்டியனை சந்தேகப்பட்ட ஏன் பிறகு ராம் பிரசாத் ஏன்னா இந்த முரளிதரன் விஷால் இவங்களோட பார்ட்னர் அவங்களோட இருப்பவராதான் இருப்பாங்க என்று அங்கேயும் ட்விஸ்ட் வெட்கமே இல்லாமல் ஆப்பரேஷன் சி.ஈ எர்த் தி கிளீனா இப்படி எல்லாம் செய்து என்ன கிடைத்தது அந்த சைக்கோவுக்கு அந்த சைக்கோ பெயரை கூறாமல் நானும் ட்விஸ்ட் வைக்கிறேன்.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰 💐 ❤️ ❤️ 🧡 🧡 குறிப்பு:::: அரோரா ரோட்ரிக்ஸ் கார்பயேலேரா அவள் மகள் ஹில்டெகார்ட்டுக்கு ஜெனிடிக் ஆராய்ச்சிக்காக செய்த பாவத்தின் சம்பளம் எவ்வளவு பெரிய அசிங்கம் தாய் என்று சொல்லி அந்த வார்த்தையின் புனிதத்தை அசிங்கப்படுத்தகூடாது
 
Last edited:
என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம் விமர்சனம்..

எதிர்பாராததை எதிர்பாருங்கள்ன்ற மாதிரி இது சஸ்பென்ஸ்+ ட்விஸ்ட் + லவ் + பிரிவு + நட்புன்னு எல்லாமே சேர்ந்த கதை ..

நாயகன் ஜெயதீரன் வேதநாயகபுரத்தின் போலீஸ் அதிகாரி..ஐந்து வருடங்களுக்கு முன் குழந்தை கடத்தல் கேஸில் தன் மனைவியே தனக்கு எதிரானதால் அவளை விட்டு பிரிந்து வாழ்கிறான்..தன் தந்தை குற்றமற்றவர் என்பதை நிரூபித்தே தன் ஜெய்யுடன் மீண்டும் இணைவேன் என நிற்கும் நம் நாயகி அவன் மனைவி மயல்மொழி ..இருவரும்‌ மீண்டும் இணைந்தார்ளா ? உண்மையான குற்றவாளி யார்‌? என்பதை ஆசிரியர் சஸ்பென்ஸ் கலந்து‌‌சொல்லிருக்காங்க...

விட்ட‌ இடத்திலிருந்து தான் மீண்டும் ஆரம்பிக்கும்ன்ற மாதிரி மறுபடியும் தீரா கிட்டயே அந்த குழந்தை கடத்தல் கேஸ் வருது...முதல் தடவை போல இல்லாமல் தீரன் அதை சரியா தேடி ஆதாரத்துடன் கண்டுபிடிச்ச‌விதம் அருமையோ அருமை 👍👍👍


தீரன் அவனுடைய‌ மனைவி பையனை பிரிஞ்சு வாழ்றது கஷ்டமா இருந்தது...😒தன் தந்தைக்காக மயல் பொய் சொன்னதும் கோபம்தான் வந்தது..மயலின் தன் தாய் மீதான தேடல் நம்மை கலங்க வைத்தது..🥺தாய் தந்தை இருந்தும் அனாதை போல வாழும் வலி அவளின் நிலையை எடுத்துக்கூறியது..ஆனால் இருவரிடம் உள்ள காதல் கொஞ்சம் கூட குறையாம அழகா இருந்தது.❤️


தீரா ஜோதிகா 🤭🤭🤭நட்பு சூப்பரோ சூப்பரு... சைட் கேரக்டர் யாராவது ஸ்கோர் பண்ண‌முடியுமா 🤭🤭அட ஆமாங்க நம்ப ஜோதிகா செம்மயா ஸ்கோர் பண்ணிட்டாங்க 🤣 ஜோதிகா புலம்புறதும் தேன்மொழிய பார்த்து பம்முறதும் 🤣🤣 ஆனால் தன் நண்பனுக்காக எப்போதும் உறுதுணையாக நின்னாங்க..❤️


முகில் கிருபா நட்பும் அருமை..அதேபோல முகில் கயல் காதலும் செம்ம..மயலோட அக்கா தான் இந்த கயல் ..இதுங்க ரொமான்ஸ் சீன்ஸ்லாம் 🤭கிருபா மலர் ஜோடியும் சூப்பரு...


நான் கூட பயந்துட்டேன் கயலுக்கு இப்படி ஆகிடுச்சேன்னு 😳 ஆனா நல்லவேளை அப்படி ஒன்னும் நடக்கல..


ராம்பிரசாத்தான் இதுக்கெல்லாம் காரணமா இருப்பாருன்னு எல்லாரையும் கெஸ் பண்ண வச்சி கடைசில ட்விஸ்ட் டா வில்லன்‌யாருன்னு வச்சது அல்ட்டி👏

ஆனால் ராம்பிரசாத் பாவம் மனுசன் உடைஞ்சுட்டாரு.. ஆரம்பத்துல இருந்து தப்பானவரா‌தெரிஞ்சது..ஆனால் இதை கண்டுபிடிக்க ஜெய்ய வரவழைக்க மனுசன்‌போட்ட திட்டம்தான் இதுன்னு தெரிஞ்ச அப்றோம்தான் இவருமேல நம்பிக்கை வந்தது..


வில்லன் யாருன்னு கதைல படிச்சு தெரிஞ்சுக்கோங்க பிரண்ட்ஸ் 🫣

ஆனா நான் இதற்காகத்தான் வில்லன் இப்படி பண்ணேன்னு சொல்லும் போது இப்படிலாம்மா மனிதர்கள் இருப்பாங்கன்னு தோணுச்சு..இதுவும் ஒரு வகையான பைத்தியக்காரத்தனம் தான்..ஆனால் இறுதியில் கிடைத்த தண்டனை சிறப்பு...


கதாபாத்திரங்களும் கதையின் நகர்வும் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை சுவாரஸ்யமானதாகவே இருந்தது...

எங்கள் உள்ளங்களை ஈர்த்த பூமுகமாக ஆசிரியர் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
 
என் உள்ளத்தை ஈர்த்த பூ முகம்
ஜெயதீரன், ACP, the eldest in a big joint family, secretly marries மயல்மொழி, creating a five-year silence with his father. His brother Mugilinban also secretly marries Kayalmozhi, Mayalmozhi’s twin.
When a child kidnapping case intersects with shocking medical crimes, pregnancy-related harm, and hidden agendas, the story takes you through twists you never expect.
From family loyalty, friendship, and love to suspense, betrayal, and psycho villains, the author keeps you on edge. Characters like Samaran Pandiyan, Ram Prasad, Muraleedharan, and Vishal make every twist unpredictable.
The story is intense, gripping, and full of surprises a perfect mix of emotion, thrill, and mystery.✨❤️
 
Top