நைஸ் ஸ்டோரி..கலகலப்பான திடீர் திருமணத்தில் ஆரம்பித்த வெற்றி அனுவின் வாழ்க்கை பயணம் நகைச்சுவையோடு கூடிய காதல் கதையாக கொடுத்தது ரசணை.
அனு ஒரு யூனிக் பீஸ்..குறும்பான சுட்டி பெண் அதே சமயத்தில் குடும்பத்திற்கு ஏற்ற குணவதியாகவும் இருந்து வெற்றியின் குடும்பத்திற்கு மட்டுமல்ல நம் மனதையும் முட்டும் மேகமாய் இருக்கிறாள்.. சமூகத்தில் நடக்கும் அவலங்களை கண்டு பொங்குவது.தவறு செய்ய தூண்டுகோலாய் அமையும் பெற்றோரின் நடவடிக்கையை சுட்டிக்காட்டுதல் என அனு பெண் புலியாய் சீறுகிறாள்..
வெற்றி அக்மார்க் ஹீரோவாக மனதில் பதிகிறான்...அனுவின் கலாட்டாக்களில் முழிபிதுங்கி போவதாகட்டும், அதில் மதிமயங்கி அவளை சேர அவன் தவிக்கும் தவிப்பாகட்டும்..அவளோடு மட்டும் கலவாமல் அவளின் சிந்தனை கோபம் என்ற எல்லா உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அவளுடன் இணைந்து அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்க அறக்கட்டளை ஆரம்பித்ததாகட்டும் எல்லாவற்றிலும் சபாஷ் போட வைக்கிறான்.
அருமையான மாமனார் , மாமியார் நாத்தனார் என் பெண்களையும் ஏங்க வைக்கும் குணாதிசயங்களுடன் கூடிய கதாப்பாத்திரங்கள்.
சிறுபெண்ணிற்கு ஏற்பட இருந்த அவலம் சமுதாயத்தில் நடக்கும் கொடூரம் மனதை தகிக்க வைக்கிறது.
மொத்தத்தில்
கலகலப்பு#காதல்#கலாட்டா#குடும்பம்#ஒற்றுமை#சமூக அக்கறை என கலவையான பதத்தில் ஒரு அருமையான கதையை கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்??
All tha best for ur story????