ஓய்வதில்லை காதல் மழை விமர்சனம்
தந்தைக்காக ஏங்கி தாயுடன் வசிக்கும் அதர்வா ..தந்தையை விட்டு அதர்வாவுக்கு தெரியாமல் பிரிய நினைக்கும் அவன் தாய் ஈழநிதி . தகப்பனிடமே தன் தந்தையை தேடி கண்டுபிடிக்கச்சொல்லும் அப்பு (அதர்வா) .விதி வசத்தால் தந்தை யாரென்று தெரியவர மனம் விட்டு தாய் தந்தை இருவரையும் விட்டு ஓடிச்செல்லும் அப்பு..வெறுப்பின் உச்சத்தில் இருக்கும் இருவரும் அப்புவிற்காக மீண்டும் ஒன்று சேர நினைக்கின்றனர்.இவர்களை பிரிக்க நினைக்கும் குடும்பத்திடமிருந்து இவர்கள் மீண்டும் எப்படி தங்கள் துணையுடன் இணைந்தார்கள் ? அப்புவின் ஏக்கம் தீர்ந்ததா? விடை கதையை வாசித்து தெரிஞ்சுக்கலாம்...!!!
இப்போது உள்ள காலகட்டத்திற்கு ஏற்ப உள்ள கதை !!
பள்ளி பருவத்தில் காதல் தோன்றுவது இயல்பானது..ஆனால் பருவ வயதிலேயே திருமணம் சற்று அவசரமானதுதானோ . பக்குவமில்லாத வயதில் காதலை பிரிய வேண்டுமோ என்று எண்ணிதிருமணம் செய்ய , செய்த திருமணத்தால் சந்தித்த இன்னல்கள் பல..இரு குடும்பங்களின் பிடிவாதத்தால் இணைந்தவர்கள் பிரிய நேரிட அவர்களை இணைக்கும் பாலமாக உதிக்கும் அதர்வா ..
தந்தையை தேடி அழையும் அதர்வாவின் நிலை ரொம்ப பாவம்


கோர்ட்ல தனிமையா இருக்கும்போதும் , தந்தை யாரென்று தெரியாமல் தவிக்கும் போதும் தந்தை யாரென்று தெரியவந்த பிறகு வீட்டை விட்டுச் சென்ற அதர்வாவின் மனநிலை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது..
செம்பா அப்பு கான்வோ எல்லாமே அழகா இருந்தது

தன் தந்தைன்னு தெரியாமல் பரிதி கூட அவன் சீன்ஸ் சூப்பர் ..தாய் தந்தையை மீண்டும் இணைக்க அவன் செய்த செயல்கள், அதர்வா தன் தந்தையோடு சேர்ந்து செய்யும் சேட்டைகள் எல்லாமே அருமையா இருந்தது...

நம் நாயகன் பரிதி வழக்கறிஞர் ..செம்பா அப்பு பர்ஸ்ட் மீட்டிங் ரொம்ப நல்லா இருந்தது.. பரிதி கிட்ட அப்பு தன் அப்பாவை கண்டுபிடிச்சு தர சொல்லி கேட்க தகப்பன் தன் கிட்ட தன்னையே கண்டுபிடிக்க சொல்லி கேட்கிற அப்புவிடம் உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கும் பரிதி பாவமா இருந்தது பார்க்க


அப்பு காணாமல் போனபோது அவனின் தவிப்பு , போலீஸ் ஸ்டேஷனில் தலைகுனிந்து இருந்த விதம் எல்லாமே மனசு ரொம்ப கஷ்டமா இருந்தது

ஈழ நிதி நம் நாயகி ஒரு கம்பெனியில ஹெச் ஆர் ஆ வொர்க் பண்ணாறா..இவளுக்கு 11 வயசுல அதர்வான்னு ஒரு பையன் இருக்கான் ..ஈழ நிதி தன் பையன்கிட்ட அவன் அப்பா யாருன்னு சொல்லாம வளர்க்கிறா.
அப்புவிற்காக இவள் செய்த செயல்கள் எல்லாம் மனச நிறைச்சது ..அம்மா பிள்ளை பாசம் செம்ம..அப்பு காணாமல் போனபோது அவளின் தவிப்பு , அவன் பேரன்ட்ஸ்கூட போக மாட்டேன்னு சொல்லும்போது அவளின் வலி, அப்பு மறுபடியும் அம்மாகிட்ட போயிருக்கும் போது அவளின் வலி நிறைந்த பாசம் மனதை கரைத்தது
ஈழ நிதியின் செம்பா குடும்பத்தின் மீதான பயமும் புரிந்தது.. திருமணம் ஆகி அவள் பட்ட வேதனைகள் அப்பப்பா



மீண்டும் செம்பா தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவானோ என்று அவளின் பயமும் கவலையும் சொல்லியது அவளின் கடந்த கால வடுக்களை..பரிதி குடும்பம் இவளை பண்ணிய கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல
விவாகரத்து என்பது சாதாரண விசயமல்ல.. இங்கு பரிதியின் சூழலும் நிதியின் சூழலுமே இவர்கள் பிரிவு விவாகரத்தின் முக்கிய புள்ளியாக இருந்தது...
இவங்க இரண்டு பேருக்கும் வில்லன்ஸ் இவங்க ரெண்டுபேரு பேமிலிஸ் தான்



இரண்டு குடும்பமும் ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை...இரண்டு குடும்பத்தின் வீண் பிடிவாதத்தில் பாதிக்கப்பட்டது இருவரின் வாழ்க்கை ..
பருவ வயதில் இல்லாத பக்குவத்தால் இருவரின் பிரிவும் நேர்ந்தது..ஆனால் பக்குவ வயதில் இருவரும் தங்கள் துணையைம புரிந்து கொண்டது அருமை... இவங்க ரெண்டு பேரோட காதல் அழகா இருந்தது..பருவக் காதல் பக்குவக்காதல் இரண்டையும் ஆசிரியர் அழகா சொல்லி இருக்காங்க..
மகிழ்ச்சியாக சென்ற வாழ்க்கையில் மீண்டும் பெற்றோர்களால் பிரச்சினை வர , இணைந்த இருவரையும் மீண்டும் பிரிக்க எண்ணிய பெற்றோர்களுக்கு இவர்கள் இருவரும் கொடுத்த பதிலடி கள் அடிதூள்.!! முக்கியமா காந்திமதிக்கும் வித்யாவுக்கும் பரிதி கொடுத்த பதிலடி ரொம்ப திருப்தியா இருந்தது...
இவர்களின் முதிர்ச்சியான காதலில் தோன்றும் அன்பின் வெளிப்பாடும் இருவரும் தங்கள் மேல் கொண்ட நம்பிக்கையும் பிடித்தது..இடையிடையே வரும் இவங்க ரொமான்ஸ்

தாய் தந்தை இரண்டுபேரும் சேர்ந்து வாழம இருந்தா பசங்க எவ்ளோ கஷ்டப்படுவாங்கன்றத அதர்வா மூலமா அழகா சொல்லி இருக்காங்க ரைட்டர் ..கதை ரொம்ப நல்லா இருந்தது படிக்க ..
செம்பா அன்ட் நிதுவின் ஓயாத காதல் மழை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!