ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 2- வித்தகனின் நர்த்தகி

#வித்தகனின்_நர்த்தகி
#கௌரிஸ்ரிவ்யூ

டுவிஸ்ட் & சஸ்பென்ஸ்+ காதல் கதை…..

ஏகன், ரொம்ப பாப்புலர் டைரக்டர்….வெளி வாழ்க்கை எவளோ வெற்றி & புகழை தேடி தந்து மகிழ்வித்ததோ…

அது போல இல் வாழ்க்கை இல்ல அவனுக்கு😔😔😔😔😔

கல்யாணம் ஆகி குழந்தை இருந்தாலும் காதல் வாழ்க்கை அவனுக்கு அமையல….

அதுக்கு காரணம்….

அவனின் முன்னால் காதல் & இப்ப இருக்கும் மனைவியின் செயல்கள்….

பாவணி…. டான்ஸ் டீச்சர்…பெரிய ஸ்கூல் ஆரமிக்கணும்னு கனவு….

ரெண்டு பிள்ளைகள்….இதழ் & இனியன்….

இவளின் கணவன்??????

ஏகனின் காதல் யார்????

எடுத்து இவங்க வாழ்க்கை எப்படி போகுது அது தான் கதை🥰🥰🥰🥰🥰🥰

ஏகன்….ரொம்ப பொறுமைசாலி….எவளோக்குனா பொண்டாட்டி குடிச்சிட்டு வந்தாலும் அவளை ஒண்ணும் சொல்ல முடியா நிலை….

பாவணியிடம் இவன் காட்டும் நெருக்கும்…ஆரம்பத்தில் நெருடலா இருந்தாலும்….

இவனின் காதல் தெரிஞ்சதும் ரொம்ப பாவமா போச்சி🤧🤧🤧🤧🤧…..

பாவணி…. காதலுக்குகாக தவ வாழ்க்கை வாழரா….உண்மைய இவ கேரக்டர் சூப்பரா இருந்தது 👏👏👏👏👏

தமயந்தி…. ச்சீ இவங்களும் ஒரு தாயா????? என்ன பிறவி அப்படினு தோனமா இல்ல….

கலை….இவங்களும் தாய் தான்….ஆன இவங்க சூப்பர்…..

அனிதா…இந்த டிரான்ஸ்பர்மேஷன் எதிர்பார்க்கல….நல்லா இருந்தது ♥️

கதை நல்லா விறுவிறுப்பா போச்சி ரைட்டர் ஜி 👏👏👏👏👏👏

போட்டியில் வெற்றி பெற வா
ழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐
 
வித்தகனின் நர்த்தகி விமர்சனம்

இது ஒரு ஆத்மார்த்தமான ஆழமான காதல் கதை..

நாயகன் லலித் ஏகலைவன் சினிமா இயக்குனர்..சினிமாவுல சிறப்பாக சாதித்த லலித்க்கு அவனுடைய திருமண வாழ்க்கை என்னவோ பூச்சியம் தான்.. அவனுடைய மனைவி மஹதி .. அவனின் பையன் திலக் மெய்யோன்.. விருப்பமில்லா வாழ்வில் அவனுக்கு வசந்தம் கொடுத்தவன் அவனுடைய பையன் தான்.விரக்தியான வாழ்க்கையில் இருக்கும் நம்ம நாயகன் லலித் அவனுடைய சூட்டிங் காரணமா அகமதாபாத் போறான்.அங்க சந்திக்கும் சின்ன குழந்தை நனிஇதழ் ..அவனுக்கு அவகூட அழகான பாண்டிங் உருவாகுது..அவங்ககூட வந்த டான்ஸ் மாஸ்டர் பிரச்சினை பண்ணி கிளம்பி போக நடன இயக்குனரை தேடி அழைகிறான்.. தேம்பாவணி ஒரு விதவை பொண்ணு .. இரண்டு குழந்தைகள் வச்சிட்டு ஒரு டான்ஸ் ஸ்கூல் நடத்துறா ..டான்ஸ் சூட்டிங்காக அவகிட்ட பேசவர்ர லலித்க்கு நம்ப நாயகி தேம்பாவணிய சந்திக்கும்‌போது இரண்டு பேருக்கும் அதிர்ச்சி.. அதற்கு காரணம் என்ன? தேம்பாவணிக்கும் ஏகலைவனுக்கும் உண்டான காதலின் பிரிவு எதனால் ஏற்படுகிறது? இருவரும் மீண்டும் எப்படி தங்கள் காதலில் இணைந்தார்கள்? விடை கதையை வாசித்து தெரிஞ்சுக்கலாம்..


நாயகன் லலித் ஒரு நல்ல மகன் .. அதேபோல் தன் குழந்தைகளுக்கு ஒரு நல்ல அப்பா..திலக் தன்னோட பையனே இல்லைன்னாலும் அவனுக்கு ஒரு நல்ல அப்பாவா இருந்தான்..சினிமா துறையில் சில நல்லவங்களும் இருக்காங்க அப்படின்றதுக்கு உதாரணம் ..இவன் பாவணி மேல வச்சு இருந்த காதல் ❣️ இவங்க ரெண்டு‌பேரும் லவ் ஆழத்தை பார்க்கும் போது ப்பா அழகான காதல் அப்படினு தோணுச்சு..காதல் எல்லாருக்கும் எப்போதும் சந்தோஷம் மட்டுமே தராது..அதனுடைய வலி எப்படி பட்டது..அதை இவங்க ரெண்டு பேரூம் அனுபவிச்ச விதம் எல்லாம் ரொம்ப சோகம் தான்.. இறுதியில் இருவரும் இணைந்து தங்கள் காதலில் வெற்றி பெற்றதுனு எல்லாமே அழகா இருந்தது..


நாயகி தேம்பாவணி நல்ல பொண்ணு .இவளின் பக்குவமான பேச்சு அருமை .லலித்க்கு ஒரு நல்ல மனைவியா இருந்தா.. இவளும் தன்னுடைய காதலுக்கு சலைச்சவ இல்லை‌..தன் மனைவியை பிரிஞ்சு லலித் எப்படி ஒரு தவ வாழ்க்கை வாழ்ந்தானோ அதேபோல் தன்னவனை நினைத்துக்கொண்டே இவளும் வாழ்ந்தா .. ஃப்ளாஷ் பேக் ஸ்டோரில இவங்க காதல் ரொம்ப அழகா இருந்தது..தன்னவனுக்காத தன் காதலை விட்டு கொடுத்து பிரிஞ்ச அப்ப பாவமா இருந்தது..தாய்பாசம் அறியாத திலக்கை தன்‌சொந்த பையன் போலவே இவ ஏத்துக்கிட்டது இவளுடைய அருமையான குணத்தை காட்டுது...


தமயந்தி - இவங்க ஒரு சுயநலவாதியான அம்மாதான்..தன் பொண்ணுக்காக யோசிச்சாங்கலே தவிர தன்‌ பையனை யோசிக்கவே இல்ல.. அவனின் மனநிலை புரியாம மற்றொரு பந்தத்தில் இணைய வைக்க மிரட்டியதுல இவங்க அம்மாவா தோத்துட்டாங்க..


கலை நிலா - தேம்பாவணியுடைய அம்மா இவங்க கேரக்டர் சூப்பர்..தன் பெண்ணுக்கு எந்த சூழலிலும் உறுதுணையாக நின்னாங்க..


மஹதி என்ன சொல்கிறது இவள்மாதிரி நிறைய பேர் இருக்காங்க..தான் பெத்த‌பையனையை தொல்லையா நினைச்சுட்ட இவ அம்மான்ற தகுதிய இழந்துட்டா..யார் எப்படி போணா என்ன நான் என் விருப்பப்படி இருப்பேன்னு இருந்தா..


அனிதா - ஆரம்பத்தில இவளும் அவ அம்மா மாதிரி தன் சுகபோக வாழ்க்கைக்காக பேசுறானு நினைச்சேன் ..பட் லாஸ்ட்டா தன் அண்ணணுக்காக நின்னா


தேவேந்திர பிரசாத் - இவரும் ஒரு சுயநல அப்பாதான்..இவருக்கு தன் பொண்ணு வாழ்க்கை சரியா அமையனும் அதுக்காக போட்ட கண்டிஷன்னால தமயந்தி அப்படி ஒரு முடிவு எடுத்தாங்க..இறுதியில் தன் பொண்ணுடைய உண்மையான குணத்தை கண்டு தலைகுனிந்து நின்னாரு... இறுதியில் பாவணியை தன் மகளாக ஏத்துக்கிட்டாரு..

சாதாரண காதல் கதைதான்.. ஆனால் அதன் வலிகளிலும் மகிழ்ச்சியிலும் நம்மை ஆத்மார்த்தமாக பயணிக்க வைத்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள்...

காதல் ஒரு அழகான பாதை..ஆனால் சில சூழல்களில் அந்த பாதையில் கரடுமுரடான சூழல் ஏற்படும்... அந்த காதலில் தங்கள் வலிகளையும் கஷ்டங்களையும் வென்று ஜெயித்த நம் பாவணியும் அவனின் ஏகாவும் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
 
# வித்தகனின் நர்த்தகி

# மகாமணி





ஒரு தாயின் தராசில் மகனின் வாழ்க்கையா, மகளின்‌ வாழ்க்கையா என்று வரும்பொழுது,மகளின் பக்கமே தன்னை நிறுத்தி தாயின் தராசு மகனின் வாழ்க்கையை அந்தரத்தில் ஆட விட்டுவிடுகிறது.


மேம்போக்காக பார்த்தால் மகனிடம் தான் அதித பாசத்தை காட்டுவது போல் தெரியும்.கூர்ந்து கவனித்தால் மாட்டுமே அதன் உள் அரசியல் புரியும். ஆம் பெண் பிள்ளைகள் இருக்கும் வீட்டில், ஆண் பிள்ளைகளின் முக்கியத்துவம் அதிகம் காணப்பட்டாலும்,அதன் பின்னனியிலும் பாசம் இருந்தாலும்,தங்களது பாதுகாப்பும் சேர்ந்தே பயணிக்கும்.





ஆம் இங்கேயும் ஒரு தாய் மகளிற்கான வாழ்க்கை யோசித்து,தெரிந்தே ,மகனின் இதயம் கொன்று…அதன் சுவடு மறைத்து அதனுள்ளே மகளுக்கான சந்தோஷமான பாதுகாப்பான வாழ்ககையை ஏற்படுத்துகிறாள்.




மகன் வாழ்க்கையை தொலைத்துவிட்டு கண்முன்னே நடைபிணமாக,என்னதான் தன் இலட்சியம் என்று ஓடினாலும்,அவன் ஓட்டத்திற்கு பின்னான வலியும் அறிந்தும், மௌனமாக வேடிக்கை பார்த்துகொண்டு எப்படி தான் வாழ இவரால் முடிந்ததோ…



பட்டு படாத அவன் வாழ்க்கையை அறிந்தும்,நாளடைவில் சரியாகிவிடும் என்னும்‌அறிவுரை…அய்யோ. அவன் தாய் என்று மனமிறங்கி மன்னித்தாலோ. அல்லது மறந்தாலோ அவன் பாடு….ஆனால் நான் என்னால் எப்பொழுதும் இயலாது.




ஆம் நான் கூறுவது லலித் ஏகலைவன் என்னும் நம் நாயகனின் தாயை தான்..



இவனை பெற்றதால் அவர் பாக்கியவதி தான்..


ஆனால் அவன்…?????




இவனது ஊருக்கும் உலகுக்குமான மனைவி, அருமை தமயந்தியின் செல்வ மருமகள்…பெற்றெடுத்த பிள்ளையை கூட‌பேணாத தாய்…கட்டிய கணவனை,சொல்வும் வேண்டுமோ…அப்படி என்ன தான் பெற்ற பிள்ளை மீதும் கட்டிய கணவன் மீதும் கோபம்…ம்கூம் …வெறுப்பு…


யாரின் மீதான இவ்வெறுப்பு..யாரின் மீது பாய்வது…காலம் தான்‌ பதில் சொல்லும்..



ஒருவனின் வாழ்க்கை இப்படி செல்ல ,கணவனை இழந்த கைம்பெண்ணாக, இரு குழந்தையின் தாயாக,பரிச்சயமில்லா மக்கள்,பரிச்சயமான மொழியின் துணை கொண்டு ,தங்களது ஸ்திரபடுத்தி கொள்கின்றாள் நாட்டியத்தின் துணைகொண்டு நாயகி தேம்பாவணி..

ஆனாலும் இந்த சிட்டுகளுடன் சிறைவாசம் தான் ஏனோ???



ஒரு தாய் அப்படி இருக்க,இங்கே ஒரு தாய் தன் மகளின்‌ வாழ்க்கையில் நடந்ததை அனைத்தும் அறிந்தும் வாயிருந்தும் ஊமையாக…தன் மகளுக்கான பிடிப்பாக அவளை தாங்குகிறார்…



வாழ்க்கை துணை சரியில்லாத அவனும்,வாழ்க்கையை தொலைத்துவிட்டு ஒருவரும் தொடர்பு கொள்ள இயலா தூரத்தில் அவளும் வாழ…விதியின் வசத்தால் சந்திக்க நேரிட…


அதன் பின்னான அவர்கள் வாழ்க்கை…


பலர் கண்ணைகள உறுத்த…

சிலர் கண்ணைகளை சீற செய்ய..

உறுத்தலுக்கும்,சீறலுக்கும் நடுவே இவர்களின் வாழ்கையின் சிக்கல் அவிழ்ந்ததா..


மூடுபனியாக மூடி வைத்த இரகசியம் தான் என்ன


இரகசியம் வெளிச்சத்திற்கு வந்ததினால் சின்னாபின்னமாக ஆனவர் யாரோ???



பணத்தின் பின்னே ஓடும் தந்தை…

திரும்பி பார்ககையில் தரிகெட்டு திரியும் பிள்ளைகள்..

அவர்களின் வாழ்க்கையை நல்வழிப்படுத்த முடியாமல், பணத்தின்‌ உதவி கொண்டு இன்னொருவரின் வாழ்கையை சிதைக்க எப்படி தான்‌ மனம் வந்ததோ…இவரை என்னவென்று கூற…பணத்திற்கு தலையாட்டி பல்லிளிக்கும் பதர்கள் இருக்க ,இவரை‌ போன்றோர்க்கு என்ன‌ கவலை…


இவர் கணக்கு ஒன்றாக அவன்‌ கணக்கு வேறாகி போனாதால் தலைதாழ்ந்து போனது தான் மிச்சம்.



தன் பிள்ளை எங்கோ வளர்வது அறியாமல், தத்துபிள்ளை தாலாட்டி வளர்க்க…மொத்தமும் அவனாகி போனான்..அவனியில் அவன் வாழ காரணமாகி போனான்.


தன் பிள்ளை இருப்பு, அறியும் நேரம்…அவன் தவிப்பு …ப்ப்பா…சொல்லிட இயலுமோ…வார்த்தை கொண்டே வடித்திட தான் முடியும்.



முற்றும் போட்டாலும் முழுதாய் நம் மனம் மீளாமல்,கடந்த காலங்கள், அவர்கள் வாழ்க்கையில் பதித்து விட்ட சுவடுகள் வருடலில் வலிக்க தான் செய்கிறது,நிகழாமல் இருந்திருக்கலாமென….



நிகழ்காலம் அவர்களின் நிம்மதி கொஞ்சமே வருட..நித்தமும் அவர்கள் இந்த சந்தோஷம் நிலைத்திட வாழ்த்துகளுடன்‌ விடைகொடுப்போம்.



வித்தகனின் நரர்த்தகி…வாழ்க்கையின் பல பக்கங்களில் சதிராடினாலும்…ஏங்க வைக்கும்‌ இனிய ஸ்வரங்களே…


வாழ்த்துக்கள் பா❤️🌹
 
வித்தகனின் நர்த்தகி
Ever wondered what keeps the world together? It’s not just luck it’s the power of deep, soulful love.
Meet லலித் ஏகலைவன் and தேம்பாவணி in Vithaganin Narthagi. This isn't just a romance; it’s a tribute to the kind of love that survives every storm and heals every wound. If you believe that true love is the strongest force in the universe, this story is for you. 📖🌹
 
Top