ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 1

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 1

அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் மையத்தில் அமைந்து இருந்தது அந்த பிரம்மாண்டமான ஹோட்டல்... பனிப்பொழிவு ஒரு பக்கம் இருந்தாலும் விலை உயர்ந்த கார்கள் அந்த ஹோட்டலை மொய்த்துக் கொண்டு இருந்தன...

ஆம் அன்று முக்கியமான வர்த்தக பிரமுகர்கள் கலந்துக் கொள்ளும் வருட இறுதி விருந்து உபச்சாரம் அவர்களது அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது...

அந்த கார்களின் நடுவே, அனைவரையும் ஈர்த்து இருந்தது சாம்பல் நிற லம்போர்கினி அவென்டேடர்... இந்திய பண மதிப்பின் படி, அதன் விலை கிட்டத்தட்ட நாற்பத்து இரண்டு கோடி இருக்கும்...

அந்த காரில் வந்து இறங்குபவன் அவ்வளவு சாதாரணமானவனாக இருக்கவே முடியாது என்று பார்ப்பவர்களுக்கே புரிந்து விடும்...

அவனும் சாதாரணமானவன் அல்ல...

மல்டி மில்லியனரா இல்லை மல்டி பில்லியனரா என்று குழம்ப கூடிய அந்தஸ்த்தில் இருப்பவன்...

அவனுக்கு ஒன்றும் வயதாகி விடவும் இல்லை... முன் முற்பது தான்...

பணத்தில் புரண்டாலும் சாரதி வைத்து அவன் காரை ஓட்டவே இல்லை...

அவனே ஓட்டிக் கொண்டு வந்தான்...

அவனுக்கு தனது வேலைகளை தானே செய்து தான் பழக்கம்...

அதுவும் இந்த கார் அவன் ஆசைப்பட்டு வாங்கியது...

தனக்கு பிடித்த உடமைகளை யார் தொட்டாலும் அவனுக்கு பிடிக்காது... அப்படி மீறி தொட்டால் ருத்ரமூர்த்தி ஆகி விடுவான்...

அவனுக்கு பிடித்த காரை மட்டும் தொட விட்டு விடுவானா என்ன?

எதிலும் நேர்த்தி அவனுக்கு வேண்டும்... சொன்ன நேரத்துக்கு எல்லாமே நடந்தாக வேண்டும்...

ஒரு நிமிடம் கூட அவன் தனது நேரத்தை வீணடிக்க மாட்டான்...

இன்றும் சொன்ன நேரத்துக்கே அவன் கார் அங்கே வந்து நின்றது...

அவன் வரவை எதிர்பார்த்து பலர் நின்று இருந்தார்கள்...

இந்த வயதில், இந்த இமாலய உயரத்தில் இருப்பவன் மீது அனைவர்க்கும் பிரமிப்பு இருந்தது உண்மை தான்...

அவன் காரையே அங்கிருந்தவர்கள் புன்னகையுடன் பார்த்துக் கொண்டே இருக்க, கார் கதவை திறந்துக் கொண்டு இறங்கி இருந்தான் அவன்...

அவன் சர்வஜித்...

பெயரின் அர்த்தத்துக்கு ஏற்ற போலவே அவன் வெற்றியும் இருந்தது...

தொட்டது எல்லாமே பொன்னாகி இருந்தது...

வெற்றி பெற்றவர்களுக்கு இருக்கும் அதே திமிர், அதே கர்வம்... யாருக்கும் அடங்காத அதே தெனாவட்டு அவனிடத்திலும் இருந்தது...

அவனது ஹேசல் விழிகளில் ஒரு அலட்சிய பார்வை...

ஆறடிக்கு சற்று அதிகமான உயரம் இருப்பான்...

கருப்பு நிற கோட் ஷூட் அணிந்து, கையில் ஆப்பிள் வாட்ச் அணிந்து, தலையை ஜெல் வைத்து வாரி இருந்தவனின் நடையில் அப்படி ஒரு கம்பீரம்... அவனது ஷேர்ட்டின் இரு பட்டன்களையும் அந்த குளிரையும் பொருட்படுத்தாமல் திறந்து விட்டு இருந்தான்... அனல் அவனை குளிர் கூட தாக்க மறுக்கின்றதோ என்னவோ? அவன் திண்ணிய மார்பின் தோற்றத்தில் அங்கே இருந்த சில பெண்கள் பெருமூச்சு விட்டுக் கொண்டார்கள்...

எல்லாமே எல்லாரிடத்திலும் அமைந்து விடுவது இல்லை அல்லவா? இவனிடம் பணம், பதவி, அழகு, ஆளுமை, கம்பீரம் என்று அனைத்தும் சேர்ந்து இருக்கும் போது பெண்களின் கண்களில் அப்படி ஒரு மயக்கம்... ஆண்களின் கண்களில் ஒரு வித பொறாமை...

அவன் உச்சி முதல் பாதம் வரை எல்லாமே ப்ராண்டட்...

அவன் விழிகளில் அப்படி ஒரு காந்த சக்தி...

அதனால் தான் எல்லாரையும் மயக்கி வைத்து இருக்கிறானோ என்னவோ...

தன்னை பார்க்கும் எந்த விழிகளையும் அவன் சட்டை செய்யவே இல்லை... ஒற்றைக் கையால் தலையை கோதிக் கொண்டே உள்ளே நுழைந்தவனோ, முதலில் கையை குலுக்கியது என்னவோ அவனது பிஸினஸின் முக்கிய பார்ட்னர் ஆன ஜேம்ஸிடம் தான்...

அவருக்கு கிட்டத்தட்ட எழுபத்தைந்து வயது இருக்கும்... மேற்கத்தேய நாட்டவர்...

தனது மகன்களை கூட நம்பாமல் அவர் நம்பும் ஒரே ஒருவன் சர்வஜித் தான்...

"சர்வா, உன்னை தான் பார்த்துட்டே இருந்தேன்" என்றார்...

"குட் ஈவினிங் ஜேம்ஸ்" என்று அவனும் சொல்லிக் கொண்டே அவர் அருகே இருந்த இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்...

அங்கே வயதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை... பெயர் சொல்லி அழைப்பது எல்லாமே சாதாரணம் தான்...

சர்வஜித் பெயர் சொல்லி அழைத்தாலும் அவர் மீது அவனுக்கு மரியாதை இருந்தது என்னவோ உண்மை தான்...

ஜேம்ஸோ, "செம ஸ்மார்ட் ஆஹ் இருக்க... யாரையும் டேட் பண்ணுறியா?" என்று கேட்க, இதழ்களை பிதுக்கியவன், "நாட் இன்டெர்ஸ்டெட்" என்றார்...

"ஆர் யூ கே?" என்றார் அவர் நக்கலாக சிரித்துக் கொண்டே...

அவரை முறைத்தவனோ, "திஸ் இஸ் ரப்பிஷ் ஜேம்ஸ்... டேட் பண்ண மட்டும் தான் இன்டெரெஸ்ட் இல்லை... வன் நைட் ஸ்டான்ட்ல இன்டெர்ஸ்ட் இருக்கு" என்று புருவத்தை ஏற்றி இறக்கி சொன்னான்.

"ஹ்ம்ம், அப்போ லைஃப் முழுக்க சிங்கிள் ஆஹ் இருந்து என்ஜாய் பண்ண பார்க்கிறியா?" என்று ஜேம்ஸ் கேட்க, அழகாக இதழ் பிரித்து முத்து பற்கள் தெரிய சிரித்தவன், "தட்ஸ் மை ஐடியா, கல்யாணம் எதுக்கு பண்ணிக்கிறோம்? ஜஸ்ட் ஃபிஸிக்கல் ரிலேஷன்ஷிப்புக்கு தானே... இங்க டாலரை விசிறி அடிச்சா விதம் விதமா பொண்ணுங்க கிடைக்கும்... சோ அதுக்கு மேல என்ன வேணும்?" என்று கேட்டான்...

ஜேம்ஸோ இரு பக்கமும் தலையாட்டி சிரித்துக் கொண்டே, "நான் இப்போ என்ன பேசுனாலும் உனக்கு புல் ஷீட் ஆஹ் தெரியும்... உனக்கே லைஃப்னா என்னன்னு புரியும்" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவர் அருகில் அவர் மனைவி க்ளாரா வந்து அமர்ந்தார்...

"ஹாய் சர்வா... எப்படி இருக்க?" என்று அவர் விசாரிக்க, "பெர்ஃபெக்ட்லி ஃபைன் க்ளாரா" என்று சொல்ல, அவரோ புன்னகைத்தபடி ஜேம்ஸின் கையை பிடித்தவர், "இந்த வருஷமும் சிங்கிள் ஆஹ் பார்ட்டிக்கு வந்து இருக்கானே" என்றார்...

ஜேம்ஸோ, "அவனுக்கு சிங்கிள் ஆஹ் இருக்கணுமாம்" என்று சொல்ல, க்ளாராவோ, "ஓஹ் மை காட்" என்று சொல்லிக் கொள்ள, சர்வஜித் சிரித்துக் கொண்டான்...

அவன் அவ்வளவு இலகுவாக சிரிக்க மாட்டான்...

இவர்களிடம் மட்டும் தான் சிரித்து பேசுவான்...

முதல் காரணம் அவன் இப்படி உழைத்து உச்சாணி கொம்பில் இருக்க, அவனது தாத்தாவுக்கு அடுத்ததாக அவனுக்கு வழி காட்டியாக இருந்தது என்னவோ ஜேம்ஸ் தான்...

அந்த நன்றிக்கடனுக்காக தனது இறுக்கத்தை அவர்களிடம் மட்டும் தளர்த்தி இருப்பான்...

இப்படியே பேசிக் கொண்டு இருந்த சமயம் ஜேம்ஸோ, "ஊருக்கு போறேன்னு கேள்விப்பட்டேன்" என்றார்.

"எஸ், நெக்ஸ்ட் மந்த் தாத்தாவை பார்க்க போறேன்... போகலன்னா என்ன நடக்கும்னு தெரியும் தானே" என்றான்...

ஜேம்ஸோ, "ஐ க்னோ மை சன், சேஃப் ஜேர்னி, தாத்தாவை விசாரிச்சேன்னு சொல்லு" என்று சொல்ல, "ஷோர்" என்று அவனும் முடித்துக் கொண்டான்...

அதனை தொடர்ந்து நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின...

விஸ்கி க்ளாஸை வைத்துக் கொண்டே, அங்கே நடந்த கலை நிகழ்ச்சிகளை கால் மேல் கால் போட்டபடி பார்த்துக் கொண்டே இருந்தான்.

அவனுடன் பேச வரும் முக்கிய பிரமுகர்கள் ஏராளம்...

அவனும் அவர்களது தராதரத்துக்கு ஏற்ற போல பேசி விட்டு அமைதியாகி விடுவான்...

அப்போது அவன் அருகே வந்து ஒரு பெண் அமர்ந்தாள்...

அங்கே வந்த வர்த்தகர் ஒருவரின் மகள்.

சர்வஜித்தை பார்த்ததில் இருந்தே அவன் மேல் மயக்கம்...

அவன் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து, "ஹாய்" என்றாள்.

அவளை ஒரு கணம் பார்த்து விட்டு, மீண்டும் நிகழ்ச்சிகளை பார்த்தவன், "ஹாய்" என்றான்...

ஒரு பெண் தன்னிடம் எந்த நோக்கத்துக்காக அணுகுகின்றாள் என்று சரியாக கணிப்பவன் அவன்...

அவனது அலட்சியம் அந்த பெண்ணுக்கு ஒரு மாதிரி ஆகி விடும், "ஐ ஆம் எம்மா" என்று கையை குலுக்க நீட்டினாள்...

அப்படியே திரும்பி அவள் கையையும் அவளையும் பார்த்து விட்டு, இதழ் குவித்து ஊதி, சலிப்பாக முன்னே திரும்ப, அவளுக்கோ செருப்பால் அடித்த உணர்வு...

"சச் எ ஈகோயிஸ்ட்" என்று வாய்க்குள் முணு முணுத்துக் கொண்டே எழுந்துச் செல்ல, அவனோ அவளை ஏன் என்றும் கண்டுக்கொள்ளவே இல்லை...

நிகழ்ச்சி முடிய விருந்தும் ஆரம்பமானது...

தனக்கு தேவை உடையவர்களிடம் மட்டுமே பேசினான் சர்வஜித்...

தேவை இல்லாதவர்களுடன் அவன் எப்போதும் பேசுவதும் இல்லை... அன்று பார்ட்டி முடிய, அவனே காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்...

அவன் சென்ற பின்னரும் அங்கே இருந்த சிலர் அவனை பற்றி தான் பேசிக் கொண்டு இருந்தார்கள்...

அவன் திமிரும் அலட்சியமும் அவர்களை ஆழமாக அடிவாங்க வைத்தது என்னவோ உண்மை தான்...

அவன் வீடு அதே நியூயோர்க் ஸ்டேட்டில் தான் இருந்தது...

பிரம்மாண்டமான மாளிகை...

மன்சன்ஸ் என்று சொல்வார்கள்...

பல படுக்கை அறைகள், பல குளியலறைகள் என்று பார்க்கவே பிரம்மாண்டத்தின் உச்சம்...

நவீன முறைக்கு ஏற்ப அமைக்கப்பட்டு இருந்த அவன் வளாகத்தினுள் கார் நுழைந்தது...

காவலுக்கு காவலாளிகள் இருந்தார்கள்...

வீட்டினுள் நுழைந்தான்...

யாரும் இல்லை...

அவன் மட்டும் தான்...

வீட்டை சுத்தம் செய்வதற்கு காலையில் எட்டு மணிக்கு வருவார்கள் இரு பெண்கள்...

மாலை நேரமானதும் கிளம்பி விடுவார்கள்...

அந்த பெரிய வீட்டை சுத்தமாக வைத்து இருக்க அவனால் மட்டும் முடியாது அல்லவா...

அவனுக்கு பல பேரை வேலைக்கு அமர்த்தும் பண பலம் இருந்தாலும் தனது வேலையை தானே செய்துக் கொள்வான்... மேலும் வீட்டினுள் ஆட்கள் எப்போதும் இருப்பது அவனது ப்ரைவசிக்கு தடையாக உணர்ந்தவன், தனக்கு தானே சமைத்து சாப்பிடுவான்...

அவன் ஒன்றும் பெரிதாக கறி சோறு எல்லாம் சமைப்பது இல்லை... ஜிம் போவதாலும் எய்ட் பேக் வைத்து இருப்பதாலும் அதற்கேற்ப உணவுகளை தான் எடுத்துக் கொள்வான்... அங்கேயே அதற்கேற்ப உணவுகளை அவனால் கடையிலேயே ரெடி மேட் ஆக பெற்றுக் கொள்ளவும் முடியும் அல்லவா?

இரவில் மட்டும் தான் வீட்டில் வாசம்... காலையில் ஜிம் போவான், அதனை தொடர்ந்து அலுவலகத்துக்கு கிளம்பி விடுவான்...

மாலை ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்தால் வீட்டினுள்ளேயே இருக்கும் நீச்சல் தடாகத்தில் நீந்த ஆரம்பித்து விடுவான்...

அதனை தொடர்ந்து அவன் வீட்டில் இருந்து அலுவலகங்களை நிர்வகித்து விட்டு தூங்கச் சென்று விடுவான்...

இது தான் அலுவலக நாட்களில் அவனது தினசரி நடவடிக்கை...

அலுவலகத்திற்கு தினமும் அவன் செல்ல மாட்டான்...

வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே... மீதி நாட்களில் வீட்டில் இருந்தே அனைத்தையும் கட்டி ஆளும் திறமை உடையவன்...

அவனுக்கு அலுவலகத்தை தாண்டி ஒரு உலகமும் இருந்தது...

நண்பர்களும் இருந்தார்கள்...

குறுகிய வட்டத்தில் இருக்கும் நண்பர்கள்...

பணத்தில் புரளும் நண்பர்கள்...

ஞாயிற்றுக் கிழமைகளில் அவர்களுடன் தான் அவன் நாட்கள்...

பப்புக்குச் செல்வது தொடக்கம் எல்லா பழக்கங்களும் அவனிடம் இருக்கும்... பெண்களின் பழக்கம் தவிர...

வன் நைட் ஸ்டான்ட்டில் ஈடுபாடு உண்டு என்று அவன் ஜேம்ஸிடம் சொன்னாலும், அவனுக்கு நிஜமாகவே அதில் ஈடுபாடு இல்லை... உண்மையை சொல்ல போனால் இது வரைக்கும் பெண் வாசனையே அவன் அறியவில்லை... அதற்கு முக்கிய காரணம் அவனிடம் இருக்கும் பணம்...

எங்கே ஒரு நாள் அவர்களுடன் தங்கினால் கூட தன்னில் உரிமை எடுத்து விடுவார்களோ என்ற எண்ணம் அவனுக்கு...

இதுவரை எத்தனையோ பிரமுகர்களின் லீக் ஆன அந்தரங்க வீடியோக்கள் அவன் பார்த்து இருக்கின்றான்...

அதில் தானும் ஒன்றாகி விடுவோமோ என்கின்ற எண்ணம்...

அதற்கு மேல் உடல் தேவையுடன் அந்த உறவு முடிந்து போனால் பரவாயில்லை, எங்கே எமோஷனல் பாண்டிங் வந்து விடுமோ என்றும் ஒரு எண்ணம்...

அதனாலேயே பெண்கள் என்றால் சற்று விலகி போய் விடுவான்... அவனுக்கு நண்பிகள் உண்டு... ஆனால் எல்லாமே ஒரு எல்லையில் தான்...

அவன் பெண்களை நாடாமல் இருக்க இன்னொரு காரணமும் இருந்தது... இதுவரை எல்லாமே புதிதாக தான் அவனுக்கு வேண்டும்... எப்படியும் அவன் பணத்துக்கு மயங்கி வர போகும் பெண் அதற்கு முதலே பல ஆண்களிடம் சென்று இருப்பாள்... அதனை நினைக்கும் போது அவனுக்குள் ஒரு அருவருப்பு... அதனாலேயே பெண் வாசனை இல்லாமல் இருக்கின்றான்...

ஆனால் எங்கே தன்னை தப்பாக பேசி விடுவார்களோ என்று பெண்களுடன் வன் நைட் ஸ்டான்ட்டில் இருப்பது போல பேசிக் கொள்வான்...

திருமணத்திலும் அவனுக்கு இஷ்டம் இல்லை...

திருமணம் தாண்டிய உறவிலும் அவனுக்கு நாட்டம் இல்லை...

ஆனால் பெண்ணுடல் தேவை அவனுக்குள்ளும் இருந்தது... பின் விளைவுகளை நினைத்து அடக்கிக் கொள்ள பழகிக் கொண்டான்...

தொடர்ந்து வேலை செய்துக் கொண்டு இருப்பதால் அவனுக்கு காதல் என்கின்ற அத்தியாயம் கேள்விக்குறியாக தான் இருந்தது...

சுருங்க சொல்ல போனால், அவனது அந்தரங்க வாழ்வு வெறுமையான காகிதம் தான்...

மெஷின் போலவே வாழ பழகி விட்டான்... அதில் இருந்து மீண்டு வரவும் அவன் யோசிக்கவே இல்லை...

இப்படியே வாழ்ந்து விடலாம் என்றும் யோசித்து விட்டான்...

அவனுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை அடிக்கடி பெண்களை நாட சொல்லி அவனை உசுப்பேற்றும் அவன் மேனி தான்...

ஏதாவது உடற்பயிற்சியில் கவனத்தை செலுத்தி தன்னை அடக்கிக் கொள்வான்... அவனுக்கே அவனது அந்தரங்க வாழ்க்கை பற்றி முடிவு எடுக்க முடியாத நிலை...

ஆனால் விரும்பிய போல வாழ்ந்துக் கொண்டு இருந்தான்...

யாரை பற்றியும் அவனுக்கு கவலை இல்லை...

இஷ்டப்படி வாழ்பவனை கட்டுப்படுத்தும் ஒரே சாவி இருந்தது என்னவோ அவனது தாத்தா மருதநாயகத்திடம் தான்...

தாத்தா என்பதற்காக எல்லாம் அவன் கட்டுப்படவில்லை, அவனது மொத்த சொத்தின் ஆளுமை அதிகாரம் என்னவோ அவரிடம் தான்...

அவரும் மிகப்பெரிய வர்த்தகராக இருந்தவர்...

இப்போது ஊரில் சென்று செட்டில் ஆகி விட்டார்... அமெரிக்கா புளித்துப் போய் விட்டது அவருக்கு...

அவருடைய ஒரே மகனும் மருமகளும் கார் விபத்தில் இறந்து விட, அதில் தப்பிய அவரது பேரன் தான் சர்வஜித்...

அவரை தொடர்ந்து பிசினஸை கையில் எடுத்தவன், மில்லியன்களை பில்லியன்களாக்கினான்...

ஆனால் என்ன அவரது மொத்த சொத்தும் அவன் கைக்கு இன்னுமே வரவில்லை...

அவர் இறப்புக்கு பிறகு தான் அனைத்தும் அவன் கைக்கு வரும் என்று உயிலெழுதி வைத்து விட்டார்... ஒரு பங்கு மட்டுமே அவன் பெயரில் இருக்கின்றது...

அவருக்கு மொத்த சொத்தையும் எழுதி கொடுப்பது ஒன்றும் பெரிய விடயம் அல்ல, ஆனால் அவன் குணம் அறிந்தவர் அவர்...

பணம் தவிர அவன் எதற்கும் கட்டுப்பட போவது இல்லை...

பந்த பாசம் அன்பு எல்லாம் அவன் அகராதியில் இல்லை...

அதனை கற்றுக் கொடுக்க அவனுக்கு தாயும் இருக்கவில்லை...

தறி கெட்டு வளர்ந்தவனை இழுத்து பிடிக்க அவருக்கு கிடைத்த கடிவாளம் தான் இந்த சொத்து... வருடத்தில் ஒரு தடவை தன்னை பார்க்க வரவேண்டும் என்று அவர் கட்டளை...

அவனும் செல்வான்.... அவன் கடிவாளம் அவரிடத்தில் அல்லவா?

ஒரு மாதம் அவனுக்கு நரகம் தான்....

அவன் அவனாக இருக்க முடியாத ஒரு மாதம்...

மருதநாயகம் என்ன சொன்னாலும் தலையாட்ட வேண்டிய தலையெழுத்து அவனுக்கு...

அவர் இருப்பது சற்று கிராமத்து பண்ணை வீட்டில் தான்...

அவனை வேஷ்டி தான் அணிய சொல்வார்... எரிச்சலுடன் அணிந்துக் கொள்வான்...

ஜிம்மில் முறுக்கேறிய உடலை உடையவனுக்கு இட்லி, தோசை, கூழ் என விதம் விதமான உணவுகள் வரும்...

விருப்பமே இல்லாமல் சாப்பிடுவான்... அந்த ஒரு மாதத்தில் அவன் ஏற்றிய எடையை அமெரிக்கா வந்து குறைக்க வேண்டிய கட்டாயம் வந்து விடும்...

ஊரில் நடக்கும் கோவில், திருமண நிகழ்ச்சிக்கு எல்லாம் அழைத்துச் செல்வார்... அவனும் கோபத்தை அடக்கிக் கொண்டேச் செல்வான்...

அமெரிக்காவில் காட்டும் அலட்சியம் அங்கே காட்ட முடியாது... தனது சுயத்தை இழந்து சிரிக்க வேண்டிய கட்டாயம்... சிரித்தும் கொள்வான்...
 
Interesting sis
 
CRVS2797

Active member
உனக்குள் உறையும் அனல் நானடி...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மூ
(அத்தியாயம் - 1)

ஆக மொத்தம், இந்த சர்வஜித்
ஒரு ராஜா வீட்டுக் கன்னுக்குட்டின்னு சொல்லுங்க.
ராஜாங்கம் இருக்கு, ஆனா அதுக்கு அவன் முழு சொந்தம் கிடையாது. அதாவது மாப்பிள்ளை இவன் தான், ஆனா இவன் கட்டிக்கிட்டிருக்கிற
வேட்டி மருதநாயகத்தோடது.

ஸோ... பூட்டு இவன் கிட்டவே இருந்தாலும், சாவி மட்டும்
அவோட கோட் பாக்கெட்க்குள்ள.
மொத்தத்துல இவன் குடுமி அவர் கையில... சூப்பரு..!

ரைட்... இப்ப இவன் கிராமத்துக்குப்
போகப்போறான், தாத்தா அங்க ஒரு கிராமத்து கிளியைப் பிடிச்சு அவனுக்கொரு கால்கட்டு போடப்போறாரு.
பாவம் அந்தப் பொண்ணு,
கிளியை வளர்த்து பூனை கிட்ட கொடுத்த மாதிரி... இந்த குரங்கு கிட்ட மாட்டின பூமாலையா தவிக்கப் போகுது அப்படித்தானே..????

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top