அத்தியாயம் 10
அன்று இரவும் இதுவே தொடர்கதையாக அலுவலகத்துக்கு கிளம்பிய தேவ்வின் கார் முதலில் சென்றது என்னவோ ஜெயாவின் வீட்டை நோக்கி தான்...
உள்ளே அவன் நுழைந்த சமயம், அவர்கள் மீண்டும் பெங்களூர் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டு இருந்தார்கள்...
அவனை கண்டதுமே முகத்தை திருப்பிக் கொண்டே, ஜெயா உள்ளேச் செல்ல, "அத்தை" என்று சொல்லிக் கொண்டே, பின்னே சென்றவனோ அவர் கையை பற்ற, "என்னடா?" என்று கேட்டுக் கொண்டே கையை உதறி விட்டார்.
"கொஞ்சம் பேசலாம் ப்ளீஸ்" என்றான்...
"பேச என்ன இருக்கு தேவ், அவ உனக்கு தலையணை மந்திரம் போட்டு மயக்கி வச்சுட்டா தானே" என்று கேட்க, "அத்தை, ப்ளீஸ், கொஞ்சம் நிதானமா பேசலாமா?" என்று கேட்டான்...
"எப்படி பேசுறது? உன் மேல எவ்ளோ நம்பிக்கை வச்சு இருந்தேன்... நித்யாவை கல்யாணம் பண்ணி கொடுக்க கூட நினைச்சேன்... அண்ணா தான் வேணாம்னு சொன்னார்... சரின்னு விட்டாச்சு... நீ பூர்விகா, ஸ்டெல்லான்னு யாரை கல்யாணம் பண்ணி இருந்தாலும் எனக்கு வலிச்சு இருக்காது டா... என் வாழ்க்கையை அழிச்சவ பொண்ண கட்டி இருக்க" என்று சொல்ல, "தப்பு தான்... கல்யாணம் பண்ணிட்டேன் வாழ்ந்து தானே ஆகணும்" என்றான்...
"வாழ்ந்து தான் ஆகணும்னு அவசியம் இல்லை... டைவர்ஸ் பண்ணிடு" என்று சொல்ல, "என்ன பேசிட்டு இருக்கீங்க?" என்று ஆதங்கமாக கேட்டான்...
அவனுக்கு அவர்களை காயப்படுத்தவும் விருப்பம் இல்லை.
அதே சமயம், பத்மாவையும் விட்டு கொடுக்க முடியாது...
ரத்னம் மேல் தான் ஆத்திரம் வந்தது...
அதற்காக அவர் மேல் இப்போது கோபப்படவும் முடியாது...
சலிப்பாக இருந்தது அவனுக்கு...
"உனக்கு நான் தான் முக்கியம்னா அவளை வீட்டை விட்டு துரத்திட்டு வா... உனக்கு நான் நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்" என்று சொன்னார்...
அவனோ தனது இதழ்களை கடித்து விடுவித்தவன், "அது முடியாது அத்தை" என்றான்.
சொல்லும் போதே ஒரு வித தயக்கம் தான்... ஆனாலும் உறுதியாக சொல்ல, அவனை ஒரு அடிப்பட்ட பார்வை பார்த்தவர், "பொண்டாட்டி கிட்ட மொத்தமா மயங்கி இருக்க... இனி உன்னை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது... இனி என் கிட்ட பேசாதே" என்று சொல்லிக் கொண்டே, வாசலில் நின்ற காரில் ஏறிக் கொள்ள, அவனும் பெருமூச்சுடன் சென்று தனது காரில் ஏறி காரை அலுவலகத்தை நோக்கி கிளப்பி இருந்தான்.
மனதில் ஒரு வித அழுத்தம் அவனுக்கு... ஜெயாவை எப்படி சமாளிப்பது என்று தெரியவும் இல்லை...
சட்டென்று அவரை அமைதிப்படுத்தவும் முடியாது...
கொஞ்சம் அழுத்தமானவர் கூட...
'இப்போ எதுக்கு இந்த கல்யாணத்தை பண்ணி தொலைச்சேனோ, அப்பாவுக்கு இதெல்லாம் ரொம்ப அவசியமா?' என்று நினைத்தவனுக்கு இனி வேறு வழி இல்லை... எல்லோரையும் சமாளித்து ஆக வேண்டிய கட்டாயம்...
சுட சுட பேசினால் ஜெயாவை சமாதானப்படுத்த முடியாது என்று நினைத்தவனோ, 'ஆறுதலா பேசிக்கலாம், கொஞ்சம் அவங்களுக்கு தானா கோபம் குறையட்டும்' என்று எண்ணிக் கொண்டே அலுவலகத்துக்கும் வந்து சேர்ந்து விட்டான்.
அலுவலக வேலைகளால் அவன் கவனம் ஒருவாறு சமநிலைப்பட்டு இருந்தது.
இதே சமயம் பத்மாவும் அலுவலகத்தில் யோசனையுடன் அமர்ந்து இருந்தாள்.
அலுவலகத்துக்கு வந்ததுமே, தாலி, குங்குமம் என்று வந்தவளை எல்லோரும் வாழ்த்தி இருந்தார்கள். அவளும் தேவ்விற்கும் தனக்கும் நடந்த திருமணத்தை பற்றி சொல்லியும் விட்டாள்... மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தோன்றியது... மறைக்க ஒரே காரணம் ஜெயா தானே... இனி மறைத்து என்ன பயன் என்கின்ற நிலை தான்.
அவளுக்கு இப்போது யோசனை எல்லாமே தேவ் பற்றி தான். என்ன தான் தேவ்வுடன் உடல் ரீதியாக இணைந்தாலும் மன ரீதியாக இன்னும் ஒன்ற முடியவில்லை...
அவனுக்கு வேறு பல காதல் கதைகள் இருக்கும் போல என்று யூகித்தும் கொண்டாள்.
அவள் அறிந்தது பூர்விகாவின் கதை மட்டும் தான்...
'நித்யா ஸ்டெல்லான்னு லிஸ்ட் பெருசா போகும் போல' என்று நினைத்தவளுக்கு மனதில் ஒரு வித தடுமாற்றம்...
அவன் மேல் முழுமையான நம்பிக்கை இல்லாமல் அவன் குழந்தையை சுமக்க அவளுக்கு இஷ்டம் இல்லை.
சொன்னால் சம்மதிப்பானா? என்றும் தெரியாது...
அவனை பற்றி அவளுக்கு எதுவுமே தெரியாது...
புறம் மட்டுமே தெரியும்... அகம் பற்றி அவளுக்கு ஒரு வீதம் கூட தெரியாத நிலை தான்...
கலவி விஷயத்தில் அவன் நினைத்ததை அடைந்து விடுகின்றான்...
குழந்தை விஷயத்திலும் அப்படி இருந்தால் என்ன செய்வது என்று ஒரு பதட்டம்...
அவனை பற்றி புரிந்துக் கொள்ளாமல், வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குச் செல்ல மனம் இடம் கொடுக்காமல் இருக்க, அன்று அரை நாள் விடுமுறை எடுத்துக் கொண்டே, அவள் வந்தது என்னவோ மகப்பேற்று மருத்துவரான ராதிகாவிடம் தான்...
உள்ளே வந்ததுமே, "வாங்கம்மா" என்று ராதிகா அழைக்க, அவர் முன்னே வந்து அமர்ந்தவளோ, "டாக்டர், எனக்கு சமீபத்துல தான் கல்யாணம் ஆச்சு... பிரெக்னன்சியை தள்ளி போடணும்" என்று சொன்னாள்.
அவளது விபரங்களை கேட்டு அறிந்தவரோ, "ஓகே நோ ப்ராப்லம், எப்போ குழந்தை பெத்துக்கணும்னு தோணுதோ, அது வரைக்கும் நான் கொடுக்கிற டேப்ளேட்ஸ் யூஸ் பண்ணுங்க" என்று சொல்லி, மாத்திரைகளை கொடுக்க, அதனை வாங்கிக் கொண்டே வெளியே வந்தவளுக்கு அப்போது தான் மூச்சே வந்தது...
தேவ் இருக்கும் வேகத்துக்கு, ஒரு மாதம் அதிகம்...
விரைவாக கர்ப்பம் தரித்து விடுவாள் என்று அவளுக்கே தெரியும்...
அதனாலேயே இந்த முடிவை எடுத்தவளுக்கு தேவ்விடம் இதனை சொல்வதா? வேண்டாமா? என்று தான் தெரியவில்லை...
'இப்போதைக்கு தெரிய வேணாம், கொஞ்ச நாள் கழிச்சு பார்த்துக்கலாம்' என்று நினைத்துக் கொண்டாள்.
நாட்கள் நகர, ஒரு நாள் இரவு, ரத்னமோ, "ரிசெப்ஷன் சீக்கிரம் வச்சுடலாம் பா" என்று சொல்ல, "இன்னும் ரெண்டு வாரத்துல வச்சுடலாம்" என்றான் அவன்...
பத்மா எதுவும் பேசாமல் சாப்பிட்டாள்.
அதனை தொடர்ந்து, அடுத்த வாரமே ரிசெப்ஷனுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன...
தேவ்வும் அடுத்த நாளே அலுவலகத்தில் தனது திருமண விஷயத்தை சொல்லி ரிசெப்ஷனுக்கு எல்லோரையும் அழைத்து இருக்க, அவனை தேடி வந்தாள் ஸ்டெல்லா...
உள்ளே வந்ததுமே, "குழந்தை எப்படி இருக்கு ஸ்டெல்லா?" என்று தான் கேட்டான்...
"இப்போ கொஞ்சம் நல்லா இருக்கா... சீக்கிரம் ஆபரேஷன் டேட் ஃபிக்ஸ் பண்ணிடுவோம்... அவ வெய்ட் கொஞ்சம் போடணும்னு சொல்லி இருக்காங்க" என்றாள்.
"எல்லாம் நல்லா நடக்கும்" என்றவனிடம், "கங்கிராட்ஸ்" என்றாள் மென் சிரிப்புடன்...
"தேங்க்ஸ்" என்று அவனும் சொல்லிக் கொண்டான்.
இப்படியே நாட்களும் நகர, வள்ளியம்மா கிளம்புவதற்கு முதல் நாள் அவருடன் பேசிக் கொண்டு இருந்தார் ரத்னம்...
ஹாலில் அவர்கள் பேசிக் கொண்டு இருக்க, அங்கே இருந்த பிரிப்புக்கு அடுத்த பக்கம் தான் பத்மா அமர்ந்து புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டு இருந்தாள்.
அவள் அறைக்குள் இருக்கின்றாள் என்று நினைத்துக் கொண்டே பேசினார்கள்...
ஆனால் அவர்கள் பேசுவது அவளுக்கு தெளிவாக கேட்டது.
"ரொம்ப சந்தோஷமா இருக்கு அத்தை, இந்த கல்யாணம் நிலைக்காதோன்னு பயந்துட்டே இருந்தேன்" என்றார்.
"ஏன் மாப்பிள்ளை அப்படி?" என்று வள்ளியம்மா கேட்க, "அவனை சம்மதிக்க வைக்க எவ்ளோ பாடு பட்டேன் தெரியுமா?" என்று கேட்டார்...
"அப்போ அவன் ஆசைப்பட்டு கட்டிக்கலையா?" என்று வள்ளியம்மா கேட்க, "க்கும், அவன் ஆசைப்பட்டுட்டாலும், அவனுக்கு பத்மாவை பிடிக்கவே பிடிக்காது... ஜெயா விஷயத்துல ரொம்ப கோபம் அவ மேல... ஆனா அவ ரொம்ப நல்ல பொண்ணு, தேவ்வுக்கு பொருத்தமா இருப்பானு தோணிச்சு... கெஞ்சி கூத்தாடி, அவனுக்கு பிடிச்ச போல ட்ராமா பண்ணி தான் இந்த கல்யாணம் நடந்திச்சு" என்றார்...
சட்டென பத்மாவின் கண்களில் இருந்து இரு சொட்டு கண்ணீர் உருண்டு அவள் படித்துக் கொண்டு இருந்த புத்தகத்தில் விழ, கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
"இப்போ எல்லாம் சந்தோஷமா இருக்கு தானே மாப்பிள்ளை" என்று வள்ளியம்மா கேட்க, "ஆஹ், இப்போ தான் நிம்மதி... உங்களுக்கு ஒன்னு தெரியுமா... அந்த ஸ்டெல்லா இவன் ஆஃபீஸ்ல தான் ஜாயின் பண்ணி இருக்கா... அதனால தான் ரொம்ப பயந்துட்டேன்" என்று சொல்ல, "என்னது? இவன் ஆஃபீஸ்லயா? பஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருந்தா பத்திக்குமே" என்று பதற, "ம்ம், அது தான் எனக்கும் பயம்... அவசரமா இந்த கல்யாணம் முடிக்கவும் அது தான் காரணம்... அவ வேற புருஷன பிரிஞ்சு இருக்கா... ஒரு புள்ள வேற இருக்கு... இவனுக்கு இரக்க குணம் ஜாஸ்தி... இனிஷியல் கொடுக்கிறேன்னு போனாலும் போயிடுவான்" என்று சொன்னார்.
"ஆஹ் அந்த பூர்விகா விஷயத்துலயே பார்த்தோமே" என்றார் வள்ளியம்ம்மா...
இவற்றைக் கேட்ட பத்மா நெஞ்சில் கையை வைத்துக் கொண்டாள்.
ஸ்டெல்லா அவன் அலுவலகத்தில் வேலை செய்வது அவளுக்கு இன்று தான் தெரியும்...
ஏதோ ஒரு வலியுடன் சேர்ந்த நெருடல்...
ஆழ்ந்த மூச்சை எடுத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்.
கண்ணில் நிற்காத கண்ணீர்...
அன்றில் இருந்து அவள் மனதில் ஏதோ பாரம் ஏறிய உணர்வு... பிடிக்காமல் தான் இத்தனை நாட்கள் இந்த கலவியா? என்று நினைக்கும் போது ஒரு வித வலி...
அதன் பிறகு அவன் நாடும் போதெல்லாம் மனம் என்னவோ செய்தது...
ஆனாலும் அவனுக்கு ஈடு கொடுத்தாள்... கஷ்டப்பட்டு தன்னை இயல்புக்கு கொண்டு வர முயன்றாள். அழுதுக் கொண்டே, கவலைப்பட்டுக் கொண்டே இருப்பதும் அவளுக்கு பிடிக்காத விஷயம் அல்லவா?
இப்படியான ஒரு நாள், அலுவலகத்தில் இருந்த பத்மாவை தேடி வந்தான் ஆத்மன்...
அவள் வேலை செய்யும் ப்ரான்ச்சுக்கே வந்தவன், "ஹேய் சொல்லவே இல்லை... கல்யாணம் பண்ணிக்கிட்டியாமே" என்று கேட்க, "ம்ம்" என்றாள் சிரித்துக் கொண்டே... "பிரதீப் கூட சொல்லவே இல்ல, ராஸ்கல்... இன்னைக்கு தேவ் கால் பண்ணி ரிசெப்ஷனுக்கு கூப்பிட்ட நேரம் தான் தெரியும்..." என்றான்...
"சாரி அவசரமா நடந்து போச்சு" என்று பத்மா சங்கடத்துடன் இழுக்க, "உன் சாரி எல்லாம் வேணாம், எனக்கு ஐஸ்க்ரீம் வாங்கி கொடு" என்று கேட்க, "இப்போவா?" என்று அவள் கேட்க, "ம்ம், வா வா சீக்கிரம்" என்று சொல்லிக் கொண்டே, அவளுடன் சென்று ஐஸ்க்ரீம் சாப்பிட்டவனோ, "எப்படி போகுது லைஃப்??" என்று கேட்டான்.
அவளோ, "போகுது" என்று பெருமூச்சுடன் சொல்ல, "இப்போ தான் கல்யாணம் ஆச்சு அதுக்குள்ள ஏன் சலிச்சுக்கிற?" என்று கேட்டான்.
அவளோ, "எனக்கு தேவ்வை புரிஞ்சுக்க முடியல" என்றாள்.
"அவன் ரொம்ப நல்லவன் பத்மா... ஜென்டில் மேன்" என்று சொல்ல, "ஊர் எல்லாம் கேர்ள் ஃப்ரெண்ட் இருக்கிற ஜென்டில் மேன் ஆஹ்?" என்று கேட்டாள்.
அவனோ, "என்ன உளறுற? அவன் அப்படி மோசமனாவன் இல்ல" என்று சொல்ல, "நித்யா, ஸ்டெல்லான்னு புதுசு புதுசா ஆட்கள் இருக்கே" என்று சொன்னாள்.
"எனக்கு நித்யா தெரியல... ஸ்டெல்லா எங்க கூட தான் படிச்சா... இவன் லவ் பண்ணுனான்... அப்புறம் பிரேக் அப் ஆயிடுச்சு... அவ கல்யாணம் பண்ணிக்கிட்டா" என்று சொல்ல, "ரொம்ப டீப் லவ்வோ? ஒரே ஆஃபீஸ்ல தான் வேலை பார்க்கிறாங்களாமே?" என்று கேட்டாள்.
அவளை முறைத்தவன், "லூசு போல பேசாதே... உனக்கு எதுக்கு அவனோட பாஸ்ட்... ப்ரெசென்ட்ல ஹாப்பியா இரு... தட்ஸ் ஆல்... மனசை போட்டு குழப்பிக்காதே" என்று சொன்னான்...
அவள் அந்த கணத்தில் ஆம் என்று சொன்னாலும், அவளால் இந்த சிந்தனைகளில் இருந்து வெளியே வரவும் முடியவில்லை...
பழையவற்றை பற்றி ஆராய கூடாது என்று நினைத்தாலும் அவளால் அதனை பற்றி யோசிக்காமல் இருக்கவே முடியவில்லை... அதுவும் அவன் பிடிக்காமல் திருமணம் செய்து இருக்கின்றான் என்று நினைக்க நினைக்க வலித்தது... கடக்க முடியாமல் தவித்துப் போனாள்...
கடந்து விட ரொம்ப சிரமமாக இருந்தது அவளுக்கு...
அவன் மனதில் இப்போது யார் இருக்கின்றார் என்று அவளுக்கு தெரிந்தாக வேண்டும்...
இரவு நேரங்களில் என்ன தான் அவனுடன் ஈருடல் ஓருயிராக இணைந்தாலும், பகலில் இந்த எண்ணங்கள் அவள் நிம்மதியை குலைத்துக் கொண்டு இருந்தது என்னவோ உண்மை தான்...
இதே சமயம், தேவ்விடம் வந்த ஜெயனோ, "நான் ஒன்னு கேக்கிறேன் தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே" என்றான்.
"கோ எஹெட்" என்று சொல்லிக் கொண்டே, ஃபைல்களில் கையெழுத்து இட்டுக் கொண்டு இருந்த தேவ்விடம், "நம்ம போட்டி கம்பெனியில உங்க வைஃப் வேலை பார்க்கிறது, எதிக்ஸ் ஆஹ் ஃபீல் ஆகல சார், இன்னைக்கு மீட்டிங்ல சிலர் பேசிக்கிட்டாங்க" என்று சொல்ல, கையெழுத்தை இட்டவன் ஒரு கணம் அப்படியே நின்று, மீண்டும் கையெழுத்தை இட்டுக் கொண்டே, "நான் பார்த்துக்கிறேன்" என்று சொல்லி இருந்தான்.
அவன் வீட்டினுள் நுழைந்த சமயம், பத்மா டி வி பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.
ஹாலில் அமர்ந்து இருந்த பத்மா முன்னே வந்து அமர்ந்தவனோ, "இங்க பாரு நீ இனி சக்கரவர்த்தி என்டர்ப்ரைசஸ்ஸுக்கு வேலைக்கு போக கூடாது" என்றான். அவன் இப்படி கட்டுப்படுத்துவது அவளுக்கு புதிது... பிடிக்கவும் இல்லை... ஏற்கனவே மனம் குழம்பிப் போய் இருப்பவளுக்கு அவன் பேச பேச கோபம் தான் வந்தது.
அவனை அழுத்தமாக பார்த்தவள், "இல்ல போவேன்" என்றாள்.
அவள் மறுத்ததும் அவனுக்கு கடுப்பாகி விட்டது.
"உனக்கு வேலை பார்க்கணும்னா நம்ம கம்பனில வந்து செய்" என்றான் பற்களை கடித்தபடி.
"உங்க மூஞ்சை அங்கே வேற வந்து பார்க்கணுமா??" என்று கேட்டவளை முறைத்தவன், "நைட்ல கிஸ் பண்ணும் போது நல்லா தானே இருக்கு இந்த மூஞ்சு... காலைல பார்த்தா மட்டும் என்ன?" என்று கேட்டான்...
அவனை முறைத்தவள், "அது வேற இது வேற" என்றாள்.
தான் கோபப்படுவது அவனுக்கு தெரிந்தது...
இரு நாட்களாக ஏன் பத்மா மேல் இந்த கோபம் என்று அவனுக்கு மட்டும் தான் தெரியும்... அந்த கோபத்தின் வெளிப்பாட்டினால் அவள் என்ன பேசினாலும் கோபம் வந்தது.
தன்னை சற்று நிதானப்படுத்திக் கொண்டே, "என் பொண்டாட்டி வேற கம்பெனில வேலை பார்க்கிறத நினைச்சா அசிங்கமா இருக்குடி" என்று சொல்ல, "அசிங்கமா இருந்தா பவுடர் போட்டுக்கோங்க" என்றாள் அவனை சீண்டும் பொருட்டு.
"ஏய் பைத்தியம்" என்று அவன் சீறிக் கொண்டே எழ, "கிவ் ரெஸ்பெக்ட் அண்ட் டேக் ரெக்ஸ்பெக்ட்" என்றாள் கோபமாக எழுந்துக் கொண்டே ஒற்றை விரலை நீட்டி...
அவளை எரிச்சலாக பார்த்துக் கொண்டே நெற்றியை நீவியவன், "நான் வேவு பார்க்க உன்னை வேலைக்கு அனுப்புறேன்னு நினைப்பாங்க... இட்ஸ் நாட் எ குட் ப்ராக்டிஸ்... புரிஞ்சுக்கோ" என்று சொல்ல, "முடியாது முடியாது அங்கே தான் வேலை பார்ப்பேன்" என்றாள்.
"நான் சொல்லி கேட்க கூடாதுன்னு சத்தியம் பண்ணி இருக்கியா??" என்று கர்ஜித்தவனை முறைத்தவள், "நைட்ல கேக்கிறது பத்தாதா பகலிலயும் கேட்கணுமா??" என்றாள்.
"அது வேற இது வேற" என்றான் பற்களை கடித்தபடி.
"எனக்கு எல்லாம் ஒன்னு தான்" என்றவளை முறைத்தவன், "நீ வேலைக்கு போக கூடாதுன்னா நான் என்ன பண்ணனும்??" என்று கேட்க, "அப்படி வாங்க வழிக்கு... ஒரு ஆறு மாசம் என் பக்கத்தில்" என்று ஆரம்பிக்க கையை நீட்டி பேச வேண்டாம் என்று தடுத்தவன், "நீ வேலைக்கே போ" என்று சொல்லி விட்டு நகர்ந்து அறைக்குள் நுழைந்துக் கொண்டான். அவன் முதுகை வெறித்துப் பார்த்தவள் முகம் இறுகியது...
என்ன தான் சுட்டித் தனமாக சண்டை போடுவது போல அவள் காட்டிக் கொண்டாலும், அவள் ஆழ் மனதின் காயத்தின் ஆழம் அதிகம்...
தேவ்வோ அறைக்குள் வந்த வேகத்தில் கோட்டை கழட்டி கட்டிலில் வீசியவன், ஷேர்ட்டையும் கழட்டி போட்டு விட்டு, விறு விறுவென குளியலறைக்குள் நுழைந்துக் கொண்டான்.
ஷவரின் கீழ் நின்றவனுக்கு ஆத்திரம்... பத்மா மேல் தான் ஆத்திரம்..
இரு நாட்களாக அவனுக்கு இதே கடுப்பு தான்...
எப்போது அவள் அலுமாரிக்குள் ஒளித்து வைத்து இருந்த கருத்தடை மாத்திரைகளை பார்த்தானோ அப்போது இருந்தே கோபம்...
குழந்தை வேண்டாம் என்று ஒரு வார்த்தை அவள் சொல்லி இருந்தால் அவளை கட்டாயப்படுத்தி இருக்க மாட்டான்...
அதற்கேற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை அவனே பார்த்து இருப்பான்...
இப்போது அவள் மாத்திரை உபயோகிப்பது கூட அவனுக்கு கோபம் இல்லை, தன்னிடம் ஒரு வார்த்தை சொல்லவே இல்லையே என்கின்ற ஆதங்கம் தான்...
'அவ்வளவு தூரம் விலகி போய் விட்டேனா?' என்கின்ற ஆதங்கம்...
அவளிடம் கேட்டு சண்டை போடவும் அவன் தன்மானம் இடம் கொடுக்கவில்லை...
'ஆம் எனக்கு உன் சம்மதம் தேவை இல்லை' என்று அவள் சொல்லி விட்டால் நொறுங்கி விடுவானே... அதனால் அந்த விஷயத்தை தனக்குள் முழுங்கிக் கொண்டான்...
இதே சமயம், அறைக்குள் வந்த பத்மாவோ கட்டிலில் கிடந்த அவன் உடைகளை பார்த்து விட்டு, "வழக்கமா ஹங்கேர்ல ஒழுங்கா போடுவாரே, இன்னைக்கு என்னாச்சு?" என்று முணுமுணுத்தபடி, அவளே ஹங்கேரில் அதனை மாட்டிக் கொண்டு இருக்க, இடையில் டவலுடன் குளியலறைக்குள் இருந்து வந்தான் தேவ்...
அவளை பார்க்காமலே கண்ணாடி முன்னே நின்று தலையை கையால் துவட்ட, "எப்போ ரிசெப்ஷனுக்கு ட்ரெஸ் எடுக்கிறது?" என்று பத்மாவே கேட்டாள்.
அவளை திரும்பி பார்த்தவன், "ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆஹ் இருக்கு" என்றான் அவளை நீல நிற விழிகளால் துளைத்தெடுக்கும் பார்வை பார்த்துக் கொண்டே...
"அதுக்கு?" என்று அவள் கேள்வியாக கேட்க, அவளை நோக்கி வந்தவன், அவள் கன்னத்தை பற்றி இதழ்களை நோக்கி குனிய, "இப்போ தான் எட்டு மணி... சாப்பிடவும் இல்லை" என்று அவள் சொல்லி முடிக்க முதல், அவள் இதழ்களை ஆட்கொள்ள ஆரம்பித்தவன், அவளை மொத்தமாக ஆட்கொண்டு தான் விடுதலை செய்தான்...
அதனை தொடர்ந்து அவன் வெளியேறி விட்டான்...
அவள் தான் விட்டத்தை பார்த்தப்படியே படுத்து இருந்தாள். இன்று அவன் அழுத்தமும், வேகமும் அதிகமாக இருந்தது... அவள் மேனி அடித்து போட்ட போல வலி வேறு எடுத்தது...
'நேரம் காலம் பார்க்காம பாயுறான்... நல்ல வேலை பேர்த் கன்ட்ரோல் டேப்லெட்ஸ் பாவிக்கிறேன்... இல்லன்னா என் நிலைமை என்ன ஆகி இருக்கும்? இருக்கிற கோபம் எல்லாம் இதுல காட்டுறான் போல... சரியான வன்மம் புடிச்சவன், முறைக்கு கோபப்பட வேண்டியது நான் தானே' என்று யோசித்துக் கொண்டே எழுந்தவளுக்கு, அவள் வேலைக்குச் செல்வதாக சொன்ன கோபத்தில் அவன் இருக்கின்றான் என்று மட்டும் தான் தெரியும்...
அவனது நிஜமான கோபத்தின் காரணம் அவளுக்கு அதுவரை தெரியவும் இல்லை... அவன் அதனை வெளிப்படுத்தவும் இல்லை... சற்று நேரத்தில் அவளும் அறைக்குள் இருந்து வெளியேறி இருக்க, அவனோ ரத்னத்துடன் பேசிக் கொண்டே, டி வி பார்த்தபடி அமர்ந்து இருந்தான்...
அவன் விழிகள் தன்னை கடந்துச் செல்லும் அவளில் படிந்து மீள, பெருமுச்சு அவனிடம்...