ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 12

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 12

மாதுரியை காணவில்லை என்று அவன் அலுவலகத்தில் சொல்லி இருக்க, எல்லா இடமும் விஷயம் பரவியது...

ரிதன்யாவுக்கும் விஷயம் சென்றது.

'ஆத்தாடி, நம்ம மேல சந்தேகம் வரலைன்னா சரி' என்று நினைத்துக் கொண்டவளுக்கு, பொன்முடி அரண்மனையின் நினைவு தான்.

ரிதன்யா வேறு யாருமல்ல, கார்கோடனின் தங்கை...

அங்கே வம்சம் வம்சமாக ஊழியம் செய்து வருபவர்கள்.

அவளும் அரண்மனையில் வேலை செய்தவள் தான்.

அமரேந்திரனை பார்த்தாலே அவளுக்கு உதறல் எடுக்கும்...

அவன் கண்ணசைவில் தானே எல்லாரையும் ஆட்டி வைப்பவன்... கொஞ்ச நாட்கள் அக்கவுன்டிங் வேலைக்கு சென்றவளுக்கு தொடர்ந்து அரண்மனையில் வேலை செய்ய இஷ்டம் இல்லாமல் இருந்தது.

பிறகு நின்று விட்டாள்.

அதற்கு முக்கிய காரணம் திவ்யன்.

அவள் பார்க்கவே பளிச்சென்று இருப்பாள்.

அதனாலேயே அவனுக்கு அவள் மேல் காதல்...

அவளிடம் சொல்லியும் இருக்கின்றான்.

பயந்தே விட்டாள்.

விஷயம் வெளியே போனால் அமரேந்திரன் அவளை தான் தூக்கி போட்டு மிதிப்பான்.

திவ்யனை எதுவும் செய்ய மாட்டான்...

அவனை மயக்கினாயா? என்று கேட்டு ரிதன்யாவை தான் உண்டு இல்லை என்று ஆக்கி விடுவான்.

அவர்கள் வம்சத்தின் ரத்தம் தான் யாருடனும் கலந்து விடவே கூடாது என்று உறுதியாக இருப்பவன் ஆயிற்றே...

அதுவும் வேலை பார்ப்பவர்கள் வம்சம் என்றால் வானுக்கும் பூமிக்கும் குதிப்பான்.

அமரேந்திரனுக்கு பயத்திலேயே, கார்கோடனிடம் சண்டை போட்டு இங்கே வந்து சேர்ந்தவள் தான் ரிதன்யா...

இங்கே அவளுக்கு ராவந்த்தை பிடித்து போனது...

மீண்டும் அரண்மனைக்கு செல்ல இஷ்டம் இல்லை...

ராவந்த்தை திருமணம் செய்து இங்கேயே இருந்து விடலாம் என்று நினைத்து இருந்தால் அவன் மாதுரியை திருமணம் செய்து விட்டானே...

அவளுக்கும் பொன்னிலா தொலைந்த விஷயம் தெரியும்...

காலம் காலமாக சொல்லப்பட்டு வந்த கதை ஆயிற்றே...

வம்சத்தினர் எல்லாருக்கும் முதுகில் மச்சம் இருக்கும் என்றும் தெரியும்...

மாதுரியின் முதுகில் இருக்கும் மச்சத்தைப் பார்த்ததுமே தூக்கி வாரிப் போட்டது...

அமரேந்திரனின் தங்கை என்று கண்டு கொண்டாள்.

விசுவாசத்தின் காரணமாக கார்கோடனிடம் சொல்லி விட்டாள்.

அவன் மூலம் தான் அமரேந்திரனுக்கு தகவல் சென்றது...

வேகமாக நடைமுறைப்படுத்தி மாதுரியை அமரேந்திரன் தூக்கியும் சென்று விட்டான்.

ரிதன்யாவுக்கு சற்று குற்ற உணர்வு தான்...

ராவந்த்தின் முகமும் பெரிதாக விடிந்த பாடு இல்லை...

ஒரு மாதிரி அழுத்தமாகவே இருந்தான். வேலையிலும் அவனால் கவனம் செலுத்த முடியவில்லை...

இப்படியே ஒரு வாரம் கடந்து இருக்கும்... ரிதன்யாவுக்கும் திவ்யன் மற்றும் மாதுரியின் திருமண விஷயம் வந்து சேர்ந்தது...

'அடப்பாவி ராவந்த் சம்பவமே நடக்கலையா? எல்லாம் நடந்த போல பில்ட் அப் பண்ணுனியே' என்று நினைத்தவளுக்கு அவனுக்கு ஆறுதல் சொல்லலாம் என்று தோன்றியது...

அன்று முடிக்க வேண்டிய வேலையை கூட சரியாக செய்யாமல் கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்து இருந்தான் ராவந்த்.

அவன் முன்னே அமர்ந்தவளோ, "ராவ்" என்றாள்.

மெதுவாக கண்களை திறந்தவன், "ம்ம்" என்றான்.

"ஆர் யூ ஓகே?" என்று கேட்டாள்.

"நாட் ஓகே" என்றான்.

"போலீஸ் கிட்ட போனீங்களா?" என்று கேட்டாள்.

"நோ யூஸ், மிஸ்ஸிங் கேஸ் ஆயிரத்துக்கு மேல இருக்கு, அவங்களுக்கு இது ஆயிரத்து ஒன்னு அவ்ளோ தான்" என்றான் ஏமாற்றமாக.

"சோ நெக்ஸ்ட்?" என்று கேட்டாள்.

"ஐ டோன்ட் க்னோ, அவங்கள பத்தி தேடுனாலும் எதுவும் கிடைக்க மாட்டேங்குது" என்றான் நம்பிக்கை போய் விட்ட தொனியில்...

"சரி விடுங்க, வேற என்ன பண்ண முடியும்?" என்று கேட்டாள்.

"எப்படி விடுறது? ஷீ இஸ் மை வைஃப்" என்றான்.

"அது தான் எதுவும் நடக்கலையே" என்று பேசிக் கொண்டு இருந்த வாக்கில் உளறி விட, சட்டென அவன் புருவம் சுருங்கியது...

"வாட்?" என்று கேட்டான்.

"இல்ல, அது" என்று அவள் தடுமாற, "ஓகே லீவ் தட்" என்று சொன்னவனோ, லேப்டாப்பை பார்த்து தனக்கு பேச பிடிக்கவில்லை என்று உணர்த்தினான்.

அவளும், "ஓகே டேக் கெயார்" என்றபடி எழுந்து வெளியே வந்தவள், 'இப்படியாடி உளறி வைப்ப? நல்ல வேளை கண்டு பிடிக்கல' என்று நினைத்துக் கொண்டே தனது மேசையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

அவனுக்கோ அவள் பேச்சில் இன்னுமே நெருடல் இருக்க தான் செய்தது...

நீரை அருந்தி விட்டு, இருக்கையில் கண்களை மூடி கொஞ்ச நேரம் அமர்ந்தவனுக்கு மூளை கொஞ்சம் நிதானமாக வேலை செய்ய ஆரம்பித்தது...

கொஞ்ச நாட்கள் முன்னர் மாதுரியின் ஜாக்கெட்டை ரிதன்யா கிழித்த நினைவு வந்து போனது...

அவள் முதுகில் இருக்கும் மச்சம் பற்றி அவனே சமீபத்தில் தான் அறிந்து கொண்டானே...

தனக்கும் மாதுரிக்கும் எதுவும் நடக்கவில்லை என்று ரிதன்யாவுக்கு எப்படி தெரியும் என்கின்ற எண்ணமும், ஜாக்கெட் கிழிந்த விஷயமும் சேர்த்து ஏதோ புரிவது போல இருந்தது...

எழுந்து வெளியே அவன் வந்த சமயம், ரிதன்யா தனது டெஸ்கில் அமர்ந்து ஏதோ வேலை செய்து கொண்டு இருந்தாள்.

அவள் அருகே வந்தவன், "உன் கிட்ட பேசணும் வா" என்று கூப்பிட்டான்.

திக்கென்று இருந்தது அவளுக்கு...

"என்ன பேசணும் ராவ்" என்று ஆரம்பிக்க, "ரூமுக்குள்ள வா" என்று சொல்லி விட்டு அவன் தனது அறைக்குள் செல்ல, அவள் கொஞ்சம் பதட்டமாக தான் அவன் அறைக்குள் சென்றாள்.

"உட்காரு" என்று சொல்லிக் கொண்டே அமர்ந்தான்.

அவளும் அமர்ந்து கொண்டே, "என்ன ராவ்?" என்று கேட்க, "உனக்கும் அவனுங்களுக்கும் என்ன சம்பந்தம்?" என்று நேரடியாக கேட்டே விட்டான்.

"யாருக்கு?" என்று அவள் திணற, "பொய் சொல்லாதே ரிதன்யா" என்றான்.

அழுத்தமாக.

"இல்ல எனக்கு நிஜமா" என்று அவள் ஆரம்பிக்க, "நான் எவ்ளோ பெயின் ல இருக்கேன் தெரியுமா? என் ஃபீலிங்சோட விளையாடாதே ப்ளீஸ், நான் பிடிக்காம தான் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன், ஆனா இப்போ அவ நினைப்பு மட்டும் தான் மனசுல இருக்கு... கொஞ்சம் புரிஞ்சுக்கோ... உன் கிட்ட கெஞ்சி கேக்கிறேன்... உனக்கு தெரிஞ்சதை சொல்லிடு" என்றான்.

குரலில் வலி தேங்கி நின்றது...

ரிதன்யாவோ, "ராவ் எனக்கு நிஜமா தெரியாது" என்று சொல்ல, "உன் கிட்ட பழகி தொலைச்சிட்டேன், உருட்டி மிரட்டி கேட்க வரமாட்டேங்குது, எனக்கு மனசளவுல தெம்பும் இல்லை... உன்னை தவிர அவ முதுகுல இருக்கிற மச்சம் வெளிய பத்தி நியூஸ் போயிருக்க வாய்ப்பில்லை. அன்னைக்கு நீ தானே அவ ஜாக்கெட்டை கிழிச்ச?" என்று கேட்டான்.

'ஜாக்கெட்டை கிழிச்சது தெரிஞ்சிடுச்சு போல' என்று நினைத்தவளுக்கு அவனை பார்க்கவும் பாவமாக இருந்தது...

ஒரு பெருமூச்சுடன், "கார்கோடன் என் அண்ணா" என்றாள்.

"கார்கோடன்" என்று புருவம் சுருக்கி யோசித்தவனுக்கு சட்டென நினைவு வந்து விட்டது...

"ஆஹ் அவன் தான் மாதுரியை தூக்கிட்டு போனான், யாரு இவனுங்க?" என்று கேட்க, அவளும் பெருமூச்சுடன், "போலீஸ் கிட்ட போனாலும் சரி வராது ராவ், அவங்க பணபலம் முன்னாடி நம்ம எல்லாம் ஒன்னும் இல்லை... அதுவும் அமரேந்திரன் சார், அது தான் மாதுரியோட அண்ணன், அவர் கண்ணாலேயே எல்லாரையும் ஆட்டி வைப்பார்" என்றாள்.

"இப்போ எங்க இருக்கானுங்க?" என்று அவள் கேட்க, "இங்க இருந்து கொஞ்ச தூரம் தான்... ஒரு மலைல அவங்க மாளிகை இருக்கு... முழுக்க முழுக்க தங்கம் மட்டும் தான்... பெரிய இடத்து ஆட்கள்... அவங்கள இந்த சட்டமும் எதுவும் செய்யாது, இந்த போலீசும் எதுவும் செய்ய மாட்டாங்க, இப்போ கூட மாதுரிக்கும் அவ மாமன் பையன் திவ்யனுக்கும் கூட கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டு இருக்காங்க" என்றாள்.

"வாட் கல்யாண ஏற்படா? அவ என் பொண்டாட்டி டி" என்று சொல்ல, அவனை ஆழ்ந்து பார்த்தவள், "அவங்க ரத்தத்துல அந்நிய ரத்தம் கலக்க கூடாதுன்னு இருக்காங்க, அதுவும் அவ இன்னுமே வெர்ஜின் அப்படின்னு தெரிஞ்சதும் இந்த கல்யாணத்தை தைரியமாவே நடத்துறாங்க" என்றாள்.

"எனக்கு வாயில நல்லா வருது, நீ எதுக்கு என் பொண்டாட்டியை பத்தி அவன் கிட்ட சொன்ன?" என்று எகிறினான்.

"ராவ், நான் அங்க வேலை செய்யலன்னாலும், விசுவாசம் நிறையவே இருக்கு" என்றாள்.

"நீ ஏன் அங்க வேலை பார்க்கல?" என்று கேட்க, அவளுமே தனது கதையை சொன்னாள்.

அதனை ஆழ்ந்து கேட்டவன், "நீ சொல்றத கேட்டா அந்த அமரேந்திரன் படு பயங்கரமானவன் போல" என்றான்.

"ம்ம்" என்றாள்.

"ஆனா எனக்கு மாதுரி வேணும்... இப்போ நான் எப்படி அங்க போறது? என்ன பண்ணுனா சரியா இருக்கும்?" என்று தவிப்பாக கேட்டான்.

அவனுக்கு எதையும் யோசிக்க முடியவில்லை...

ரிதன்யாவை விட்டால் வேறு வழியும் இல்லை...

"அங்க இப்படியே போக முடியாது, வேலை பார்க்கிறவங்க மட்டும் போகலாம்" என்றாள்.

"என்னை உன்னோட அண்ணா கிட்ட அழைச்சு போறியா?" என்று கேட்டான்.

"ஐயோ ராவ், உங்க கிட்ட இத சொன்னது தெரிஞ்சாலே அண்ணா என்னை கொன்னுடுவார்" என்றாள்.

"சரி நான் அங்க வேலை பாக்கிற போல போக முடியாதா?" என்று கேட்க, "பொம்பிளை வேஷம் போடுவீங்களா என்ன? ஏன்னா பொண்ணுங்க கூட பொண்ணுங்க மட்டும் தான் பேசலாம்" என்றாள்.

"நம்ப மாட்டாங்கடி, இவ்ளோ உயரமா இருக்கேன் ல" என்றான்.

அவளும் யோசிக்க, " உன் அண்ணா கிட்ட பேசுறது பெட்டர்ன்னு தோணுது" என்று சொல்ல, அவளும், "சரி நாளைக்கே அண்ணாவை பார்க்க கிளம்பலாம்" என்று சொல்ல, "தேங்க்ஸ் அலாட்" என்றான் அவன், அவளும், "தட்ஸ் ஓகே" என்று சொன்னாள்.

"நாளைக்கு மார்னிங் வர்றேன், கிளம்பலாம்" என்று சொன்னான்.

அவளும் மென் சிரிப்புடன் எழுந்து கொண்டாள்.

அவனோ அவள் முதுகை ஒரு கணம் பார்த்து விட்டு அலைபேசியை எடுத்து, அஸ்வந்த்துக்கு அழைத்தான்.

அவனும், "சொல்லுடா" என்று சொல்ல, "நான் சொல்றத பண்ணு" என்று நடந்ததை சொல்லி, என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்லி இருக்க, "ஹேய், பிரச்சனை வந்துடாதா?" என்று கேட்டான்.

"வந்தா பார்த்துக்கலாம், இத தவிர மாதுரியை திரும்ப கொண்டு வர வேற வழி தெரியல" என்று சொல்லிக் கொண்டான்.

அடுத்த நாள் காலையில், ரிதன்யாவை அவளது ஹாஸ்டலின் முன்னே வைத்து ஏற்றிக் கொண்டான் ராவந்த்.

அவன் வண்டி கொஞ்ச தூரம் சென்று இருக்கும், "சாப்பிடலாமா?" என்று கேட்டபடி அவன் வண்டியை நிறுத்த, "ம்ம்" என்று அவள் சொன்னது மட்டும் தான் நினைவில் இருந்தது...

அடுத்த கணமே மயங்கி இருந்தாள்.

அவளை அவன் கொண்டு வந்தது என்னவோ குடோன் ஒன்றுக்கு தான்...

அங்கே அஸ்வந்த் ஏற்பாடு செய்து இருந்த அவனது நண்பர்களும் நின்று இருக்க, அப்படியே தூக்கி வந்து ரிதன்யாவை கட்டி போட்டு விட்டார்கள்...

"அவ அண்ணா கிட்ட போயிருக்கலாமே" என்று அஸ்வந்த் சொல்ல, "அவன் ரொம்ப விசுவாசம் டா, உதவி எல்லாம் செய்ய மாட்டான், நமக்கு உதவி செய்ய ஒருத்தன் இருக்கான்" என்று சொல்லிக் கொண்டே, ரிதன்யாவின் அலைபேசியை எடுத்தான்...

அதில் வரிசையாக எண்களை தேடினான்...

திவ்யனின் எண்ணை கண்டும் பிடித்து விட்டான்.

அவனுக்கு அழைக்க, அவனும் அலைபேசியை காதில் வைத்து, "ரிதன்யா" என்று சொல்ல, "ரிதன்யா எல்லாம் இல்லை, நான் ராவந்த், மாதுரியோட புருஷன், இப்போ உன் ஆளை கட்டி வச்சு இருக்கேன், எனக்கு நீ ஒரு உதவி செய்யணும்... என் ஆளை மீட்க நீ உதவி செஞ்சா, உன் ஆளை விடுவேன், இல்லன்னா, நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்" என்றான்.

பதறி விட்டான் அவன்...

ரிதன்யாவை அவனுக்கு ரொம்பவே பிடிக்கும்...

"இப்போ என்ன செய்யணும்" என்று கேட்டான்.

அவனுக்கும் இந்த திருமணத்தை நிறுத்த தானே வேண்டும்...

பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை, நேரடியாக வழிக்கு வந்து விட்டான்.

"நான் அங்க வரணும், எப்படி வரலாம்?" என்று கேட்டான்.

"எனக்கே இந்த கல்யாணத்த நிறுத்தணும், அவளை நீ கட்டி வைக்காம என் கிட்ட கேட்டாலும் உதவி பண்ணி இருப்பேன்" என்றான் திவ்யன்.

'நம்ம தான் ஓவரா கற்பனை பண்ணிட்டோம் போல, இவன் பொசுக்குன்னு ஓகே சொல்லிட்டான், சரி கெத்தை மெயின்டெய்ன் பண்ணுவோம்' என்று நினைத்த ராவந்த்தோ, "பொசுக்குன்னு நீ மனசு மாறிட்டா என்ன பண்ணுறது?" என்று கேட்டான்.

"நான் அப்படி எல்லாம் மாற மாட்டேன் ப்ரோ, உங்க மன திருப்திக்கு கடத்தி வச்சுக்கோங்க அவளை, ஆனா நேரத்துக்கு சாப்பாடு கொடுங்க, பாவம், பசி தாங்க மாட்டா" என்றான்.

"ரொம்ப தான் லவ்வோ?" என்று கேட்க, "ம்ம் ரொம்ப ரொம்ப" என்றான்.

"சரி தான், இப்போ எனக்கு அங்க வர வழி சொல்றியா?" என்று கேட்க, "இங்க என் இன்ஃப்ளுவென்ஸ் ல உங்கள கொண்டு வரலாம், ஆனா ஒரு பொண்ணு கூடவே வேணும்... அப்போ தான் மாதுரி கிட்ட பேச முடியும்" என்று சொன்னான்.

"சரி நான் எப்படியாவது ஒரு பொண்ண கூட்டிட்டு நாளைக்கே வரட்டுமா?" என்று கேட்க, "என்னது நாளைக்கவே? இங்க ஃபார்மாலிடீஸ் முடிக்க ஒரு வாரம் வேணும்... அப்புறம் வா, எங்க வரணும், எப்படி வரணும்னு எல்லாம் சொல்றேன், நீ வந்தா தான் என் கல்யாணமும் நிற்கும்" என்றான்.

"சரி அப்போ நம்ம எல்லாம் ஒரே கட்சி தான்" என்று சொல்லி விட்டு அலைபேசியை வைத்து விட்டான்.

அஸ்வந்த்திடம் ராவந்த் விஷயத்தை சொல்ல, "அப்போ இவளை கழட்டி விட்டுடலாமா?" என்று கேட்க, "இல்ல, இவ சரியான ஓட்டை வாய், இங்க இருக்கிறத அங்க சொல்லுவா, அங்க இருக்கிறதை இங்க சொல்லுவா, சோ நம்ம கண்காணிப்புல இருக்கட்டும், நேரத்துக்கு சாப்பாடு கொடு, மாதுரியை பத்தி இவ போட்டு கொடுக்கலன்னா இவ்ளோ பிரச்சனையே வந்திருக்காது, அதுக்காக கொஞ்சம் அனுபவிக்கட்டும் தப்பில்ல" என்று சொல்ல, "அப்போ நானா பார்த்துக்கணும்?" என்று கேட்டான் அஸ்வந்த்.

"ஆமா டா, உனக்கு உன் அண்ணி கல்யாணம் பண்ணி வச்சா தானே, அதுக்கு நன்றிக் கடனா பண்ணு" என்றவனோ, "சரி வா, டீ குடிக்கலாம்" என்று ஏனையோரை காவலுக்கு அங்கே விட்டு விட்டு, அவனை அழைத்து சென்றான்...
 

CRVS2797

Active member
இன்ஸ்டன்ட் மாப்பிள்ளை ..!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மூ
(அத்தியாயம் - 12)


பரவாயில்லையே..! இந்த ராவந்த் அதுக்குத்தான் லாயக்கு இல்லை போல. அதனாலத்தானே மாதுரியை ஈஸியா தூக்குனாங்க. ஆனா, ப்ளான் போடறதுல பக்காவா இருக்கானே. எப்படியாவது அமரேந்திரன் மூக்கை உடைச்சு,
நாய்க்கு பொறை பிஸ்கெட் போடற மாதிரி பெண்ணைக் காட்டி இவன் பொண்டாட்டியை கூட்டிட்டு வந்து குடும்பம் நடத்தினா சரித்தான்.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
  • Like
Reactions: grg
Top