அத்தியாயம் 16
அடுத்த நாள் இருந்து மீண்டும் அவர்கள் நெருக்கம் அதிகரித்து இருந்தது...
அலுவலகத்தில் பேசிக் கொள்வது குறைவாக இருந்தாலும், வீட்டிற்கு வந்தால், கட்டிலில் தஞ்சம் அடைந்து விடுவார்கள்...
ஆனால் இன்னுமே அவர்கள் தாம்பத்யத்துக்கு பின்னர் நெருங்கி படுப்பது இல்லை...
அவள் முதலில் அணைக்கட்டும் என்று அவனும், அவன் முதலில் அணைக்கட்டும் என்று அவளும் உள்ளுக்குள் போட்டியாக இருந்தார்கள். குறும்பு கலந்த போட்டி தான் அது...
இடையில் இருவரும் அணைத்துக் கொண்டே தூங்கிய பாடு இல்லை.
பத்மாவே ஸ்டெல்லாவின் நம்பருக்கு அழைத்து, குழந்தையை பற்றி விசாரித்தாள்...
"இன்னைக்கு தான் ஆபரேஷன் முடிஞ்சுது... நல்லா இருக்கா" என்று ஸ்டெல்லா சொன்னதும் தான் அவளுக்கு மனதில் நிம்மதி பரவியது...
அன்று இரவு வந்ததும் வராததுமாக தேவ்விடம் சொன்னாள்.
"ம்ம், நானும் பேசுனேன்... வேலையில இருந்து நிக்கிறதா சொல்லிட்டா... குழந்தையை பார்த்துக்கணுமாம்... ஸ்டீஃபன் வீட்டுக்கே போறேன்னு சொன்னா" என்று சொல்ல, "ஓஹ் ஓகே... சரி ஆயிடும்" என்று மென் சிரிப்புடன் பத்மா சொல்ல, அவனும் அவளை பார்த்து புன்னகைத்தபடி கண்களை சிமிட்டிக் கொண்டான்.
இப்படியான ஒரு நாள், அன்று அலுவலகத்தில் மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது...
பத்மா பெரிதாக தேவ்வை அலுவலகத்தில் தேடிச் செல்வது இல்லை...
தனது மேலாளருடனேயே வேலையை முடித்துக் கொள்வாள்...
அன்று அலுவலக மீட்டிங்குக்கு வந்தவள் விழிகள் தன்னையும் மீறி தேவ்வை ரசிக்க ஆரம்பித்து விட்டது.
அன்று கருப்பு நிற ஷேர்ட் அணிந்து இருந்தான்...
முட்டி வரை மடித்து விட்டு இருந்தான்...
ஷேர்ட்டின் இரு பட்டன்கள் திறந்து வேறு இருந்தன...
அவன் நீல விழிகளை ரசித்தாள்...
என்றுமே அவளை சுருட்டி எடுத்துக் கொள்ளுமே அந்த விழிகள்...
அப்படியே கீழிறங்கிய விழிகள் அவன் இதழ்களில் படிந்தன.
முத்த ராட்சஷன் அவன்...
அவளை முத்தமிட்டே ஐஸ்க்ரீம் போல உருக செய்து விடுபவன் அல்லவா அவன்...
அவனது செப்பமான இதழ்களின் சாகசங்களை நினைத்தவளுக்கு கன்னங்கள் சிவந்து போயின...
கீழ் அதரங்களை கடித்து சிரித்துக் கொண்டாள்.
அப்படியே அவள் விழிகள் அவன் தெரிந்தும் தெரியாமல் இருந்த மார்பில் படிய, ஏதேதோ எண்ணங்கள் அவளுக்குள்...
அப்படியே கீழிறங்கி, அவன் கைகளில் படிந்தது...
கையில் ஒரு பேப்பரை வைத்துக் கொண்டே, ஜெயனுடன் பேசிக் கொண்டு இருந்தான்...
நரம்போடிய கரங்கள் தினமும் அவளை செய்யும் அந்தரங்க இம்சைகளை நினைத்தவளுக்கு தன்னையும் மீறிய புன்னகை...
சிரித்துக் கொண்டாள்.
அவள் துரதிஷ்டம் சத்தம் போட்டு சிரித்து விட்டாள்.
அனைவரும் சட்டென அவளை திரும்பிப் பார்த்தார்கள்...
தேவ் உட்பட, அவன் விழிகள் அவளில் அதிர்ந்து படிய, அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது...
என்ன சொல்வது என்று தெரியவில்லை...
தடுமாற்றம்...
விழிகள் அலைபாய்ந்தன...
"பத்மா" என்றான் தேவ் அழுத்தமாக...
ஏறிட்டு அவனைப் பார்த்தவளோ, "இல்ல அது" என்று தடுமாற, "ஃபோகஸ் ஒன் மீ" என்றான்...
அவள் மனமோ, 'அத தானே இவ்ளோ நேரமும் பண்ணிட்டு இருக்கேன்' என்று நினைத்துக் கொள்ள, "ம்ம்" என்று தலையாட்டிக் கொண்டாள்.
மீட்டிங்கும் முடிந்தது...
எல்லோரும் கிளம்பி விட்டார்கள்...
"பத்மா, யூ ஸ்டே" என்று சொல்லிக் கொண்டே ஜெயனுடன் பேச, அவளும் வெளியேறாமல் நின்று இருந்தாள்.
ஜெயனுடன் பேசி அவனை அனுப்பி விட்டு, அவளை நோக்கி நடந்து வந்தவன், பாக்கெட்டில் இரு கைகளையும் வைத்துக் கொண்டே, "எதுக்கு சிரிச்ச?" என்று கேட்டான்...
அவனை ஏறிட்டுப் பார்த்தவளோ, "சும்மா தான்" என்றாள்.
அவளை ஆழ்ந்து பார்த்தவன், "ஐ டோன்ட் திங்க் சோ" என்று சொல்ல, அவளோ சுற்றிப் பார்த்துக் கொண்டே இதழ் குவித்து ஊதியவளோ, "இங்க வச்சு சொல்லலாமான்னு தெரியல, நீங்க கேக்கிறதால சொல்றேன்" என்றாள்.
"ம்ம்" என்று சொன்னவனின் காதை நோக்கி எம்ப, அவனும் சற்று குனிய, "நேத்து நீங்க பண்ணுன ஒரு விஷயம் நினைவு வந்திச்சு... வெட்கப்பட்டு தான் சிரிச்சேன்" என்றவள் எதற்காக சிரித்தாள் என்றும் விளக்கி இருந்தாள்.
இப்போது அவளை அவன் அதிர்ந்து பார்க்க, அவளோ, ஒரு கண்ணை சிமிட்டி விட்டு, அங்கிருந்து நகர, அவன் கஷ்டப்பட்டு முகத்தை இறுக்கமாக வைத்து இருப்பது போல காட்டிக் கொண்டான்...
அவள் வெளியேறும் வரை அப்படியே நின்றவன் இதழ்கள் சட்டென விரிந்துக் கொள்ள, அவளும் வேகமாக கதவை திறந்தவள், "சிரிக்கிறீங்களான்னு செக் பண்ணுனேன், வெட்கப்பட்டு சிரிக்கிறீங்க" என்றாள் புன்னகையுடன்...
"போடி" என்று திட்டினான்...
இன்னும் சத்தமாக சிரித்துக் கொண்டே அவனைப் பார்க்க, "ஆஃபீஸ்டி" என்றான் இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டே...
"தெரியும் தெரியும், அது தான் சும்மா இருக்கேன்" என்று மீண்டும் கண் சிமிட்டி சொல்லி விட்டு வெளியேறி இருந்தாள்.
அன்று மாலை வீட்டுக்கு வந்ததுமே, "தேவ், நான் அடுத்த வாரம் ஃப்ரெண்ட்ஸ் கூட ஜெர்மன் ட்ரிப் போகலாம்னு இருக்கேன்" என்றார்.
"சூப்பர்பா, என்ஜாய் யோர் செல்ஃப்" என்று சொல்ல, அவரும் புன்னகைத்துக் கொண்டே, "சீக்கிரம் ஒரு பேரனையே பேத்தியையோ பெத்து கொடுத்தா நல்லா இருக்கும்" என்று சொல்ல, அவன் பார்வை இப்போது அங்கே அமர்ந்து டி வி பார்த்துக் கொண்டு இருந்த பத்மாவில் படிய, அவளோ, "சீக்கிரமே" என்று மென் சிரிப்புடன் சொல்ல, அவளை ஒரு ஆர்வம் கலந்த பார்வை பார்த்து விட்டு கடந்து போய் அறைக்குள் நுழைய போனான் தேவ்...
"தேவ்" என்று அழைத்தார் ரத்னம்...
திரும்பிப் பார்த்தான்.
"அடுத்த வாரம் ஜெயா வர்றானு கேள்விப்பட்டேன்" என்று சொல்ல, அவனிடம் சிறு மௌனம்...
அதனை தொடர்ந்து, "நான் பேசுறேன்" என்று சொல்லி இருந்தான்.
இப்படியே நாட்கள் நகர, ரத்னமும் வெளிநாட்டு பயணம் கிளம்பி விட்டார்.
அன்று வேலையில் இருந்து கிளம்பிய தேவ் சென்றது என்னவோ ஜெயா வீட்டுக்கு தான்...
நித்யாவும் ஜெயாவும் நிரூபனும் ஊரில் இருந்து வந்து இருக்க, வீட்டினுள் நுழைந்த தேவ்விடம், "ரொம்ப சந்தோஷமா இருக்க போல தேவ்" என்றார் ஜெயா கிண்டல் தொனியில்...
அவனும் இதழ் குவித்து ஊதிக் கொண்டே, "எத்தனை நாளைக்கு முகத்தை தூக்கி வச்சுட்டு இருக்க போறீங்க?" என்றபடி அவர் அருகே அமர, ஜெயாவோ, "நீ பண்ணுன வேலைக்கு இதோட விட்டேன்னு சந்தோஷப்படு" என்றார்.
அவரையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, அவர் கையை பற்றியவன், "இப்போ கோபம் குறைஞ்சு இருக்கும் தானே" என்று கேட்டான்...
"லைட்டா" என்றார் அவர்...
அவனோ சத்தமாக சிரித்துக் கொண்டே, "அத்தை, சில், எதுக்கு முகத்தை திருப்பிட்டு இருக்கணும்... பத்மாவை நீங்க என் வைஃப்பா மட்டும் பாருங்க" என்று சொல்ல, "அதெல்லாம் கஷ்டம் டா, காஃபி சாப்பிடுறியா?" என்று கேட்டுக் கொண்டே எழுந்து சமயலறைக்குள் செல்ல, நித்யாவும் அவனை பார்த்து புன்னகைத்து விட்டு ஜெயாவை தொடர்ந்துச் சென்றவளோ, "காலைல வரைக்கும் திட்டிட்டு இருந்தீங்க, என்னம்மா இது?" என்று ரகசிய குரலில் கேட்டாள்.
"சில விஷயங்கள் சண்டைல சரி வராது, தந்திரம் பண்ணனும்டி" என்று சொல்லிக் கொண்டே காஃபி போட, "எனக்கு எதுவும் புரியல" என்றாள் அவள் இதழ்களை பிதுக்கி...
"சீக்கிரம் புரியும்" என்று சொல்லிக் கொண்டே காஃபியை கொண்டு தேவ்விடம் நீட்டிய ஜெயாவோ, "நிரூபனுக்கு சக்கரவர்த்தி என்டர்ப்ரைசஸ்ல வேலை கிடைச்சு இருக்கு" என்றார்.
அவனும், "ஓஹ், சொல்லவே இல்லை" என்று சொல்ல, "அதுக்காக தான் இங்க வந்தோம்... இன்னும் ரெண்டு வாரத்துல கிளம்பிடுவோம்" என்று சொல்ல, "ஓஹ் ஓகே, நல்ல கம்பெனி அது... கண்டிப்பா பெரிய எதிர்காலம் இருக்கு" என்று சொன்ன தேவ்வோ, "வீட்டுக்கு ஒரு நாளைக்கு வாங்க அத்தை" என்றான்.
"கண்டிப்பா டா" என்று ஒரு வலுக்கட்டாய புன்னகையுடன் அவனை அனுப்பி வைத்தவர் விழிகள் அவன் வண்டியில் வன்மமாக படிந்தது.
இரு நாட்கள் கடந்து இருக்கும், இரவு சைட்டில் இருந்து தொப்பமாக நனைந்து தான் வந்திருந்தான் தேவ்...
அவன் வந்ததுமே, "என்ன இப்படி நனைஞ்சு இருக்கீங்க?" என்று பத்மா கேட்க, "இவ்ளோ மழை வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல, பெரிய சைட், கார் கிட்ட வர முதல், அடிச்சு பெய்ய ஆரம்பிச்சிடுச்சு" என்று சொல்லிக் கொண்டே, குளித்து விட்டு படுத்தவன் இருமிக் கொண்டான்.
"ஆர் யூ ஓகே?" என்று பத்மா கேட்க, "எஸ்" என்று சொன்னவன், சாப்பிட்டு விட்டு தூங்கியும் விட்டான்...
அடுத்த நாள் காலையில் பத்மா எழுந்த நேரம் அவன் எழவே இல்லை...
'என்ன இவ்ளோ நேரம் தூங்குறார்?' என்று நினைத்துக் கொண்டே, அவன் முதுகில் கையை வைத்தாள்.
மேனி அனலாக கொதித்தது...
'ஐயோ ஜுரம் போல' என்று நினைத்துக் கொண்டே, அவனை நெருங்கியவள், நெற்றியில் கையை வைத்துப் பார்த்தாள்.
மெதுவாக கண்களை திறந்தான்...
கண்கள் ரத்த சிவப்பு...
"என்ன இவ்ளோ ஜுரமா இருக்கு? டேப்ளேட்ஸ் எடுத்து தர்றேன்" என்று சொல்லிக் கொண்டே, அவள் நகர, "ஐ ஆம் ஓகே, இன்னைக்கு ஆஃபீஸ்ல வேலை இருக்கு" என்றவன் எழுந்து அமர, "என்ன ஓகே? இன்னைக்கு இப்படியே எப்படி ஆஃபீஸ் போக போறீங்க? வீட்ல நில்லுங்க" என்றாள்...
அவனோ, "நான் பார்த்துக்கிறேன் டி, டேப்ளேட்ஸ் எடுத்துக்கிட்டா ஓகே ஆயிடும்" என்று சொல்லிக் கொண்டே எழ முற்பட, அவன் கையில் கையை வைத்தவள், "ப்ளீஸ் தேவ், குழந்தை போல பிடிவாதம் பிடிக்காம வீட்ல இருங்க" என்று சொல்லிக் கொண்டே எழுந்தவள், அவனுக்கு மாத்திரைகளை எடுத்து கொடுத்து விட்டு அவனுக்கு சமைக்கவும் சென்று இருந்தாள்.
சற்று நேரத்தில், "பத்மா" என்று அழைத்தான்...
அவளும் அவனை தேடி வர, "நீ கிளம்பு, இன்னைக்கு ஆடிட் இருக்குல்ல" என்றான்...
"இல்ல தேவ், பரவாயில்லை" என்று அவள் ஆரம்பிக்க, "நான் பார்த்துக்கிறேன்... ரொம்ப முடியலைன்னா, அத்தை கிட்ட சொல்றேன்... சமைச்சு கொடுப்பாங்க, கிளம்புடி" என்று அதட்டியவன், அவளை வலுக்கட்டாயமாக வேலைக்கு அனுப்பி வைத்து விட்டு ஜெயாவுக்கு அழைத்தான்...
அவரும் அலைப்பேசியை எடுத்து காதில் வைக்க, "அத்தை எனக்கு ஜுரமா இருக்கு, பத்மா வேலைக்கு போய் இருக்கா" என்று அவன் சொல்ல, "உன்னை விட்டுட்டு அவளுக்கு வேலை முக்கியமா?" என்று அவர் திட்ட, "நான் தான் போக சொன்னேன்... எனக்கு லன்ச் ரெடி பண்ணி கொடுக்க முடியுமா? துர்காவும் ரெண்டு நாள் லீவு எடுத்து இருக்கா." என்று சொன்னான்...
பேசும் போது அடிக்கடி இருமிக் கொண்டான்...
கஷ்டப்பட்டு பேசுகின்றான் என்று தெரிந்தது...
"சரி நானும் நித்யாவும் வர்றோம், அங்கே வந்தே சமைச்சு கொடுக்கிறோம்" என்று சொல்ல, அவனும், "ஓகே" என்று சொல்லி விட்டு வைத்து விட்டான்.
சற்று நேரத்தில் அவர்கள் வீட்டு கதவு தட்டப்பட்டது...
எழுந்து வந்து திறந்தான்...
அவன் முகத்தில் உடலின் அனல் அப்படியே தெரிந்தது...
அவன் மேனி வேறு சிவந்து இருக்க, "என்னடா இப்படி இருக்க?" என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்த ஜெயா, அவன் நெற்றியில் கையை வைத்து பார்த்து விட்டு, "நீ ரெஸ்ட் எடு, நான் கஷாயம் ரெடி பண்ணி கொடுக்கிறேன்" என்று சொல்ல, அவனும் சென்று படுத்து விட்டான்...
இதனிடையே அலுவலகத்தில் இருந்த பத்மாவுக்கு வேலை செய்யவே முடியவில்லை...
'இன்னைக்கு வேலைக்கு நான் வரலைன்னா குறைஞ்சிடுமா?' என்று கடுப்பாக நினைத்துக் கொண்டே, அவனுக்கு அழைக்க, "நான் என்ன பேபியா? வேலையை பாரு" என்று அவன் திட்டி இருந்தான்...
'இனி கால் எடுக்க மாட்டேன்' என்று எரிச்சலாக மனதுக்குள் சொன்னவளோ, வேலையில் வேண்டா வெறுப்பாக மூழ்கி விட்டாள்.
இதே சமயம், தேவ்விற்கு கஷாயம் கொடுத்த ஜெயாவோ அவனுக்கு மதிய உணவை தயார் செய்துக் கொண்டு இருக்க, அவர் அருகே வந்த நித்யாவோ, "அம்மா, நீங்க சொல்றது சரியா வருமா?" என்று கேட்டாள்.
"சரி வரும் டி" என்றார் அவர்...
"தப்பும்மா இது" என்று அவள் சொல்ல, அவளை ஆழ்ந்து பார்த்தவர், "நீயும் நான் சொன்னதை கேட்க மாட்டேன்னு இருக்க தானே" என்றார் கலங்கிய கண்களுடன்...
"அம்மா, ஆனா இது" என்று ஆரம்பிக்க, "நான் சொல்றத பண்ணுற" என்று அழுத்தமாக அவர் சொல்ல, அவளுக்கு எப்படி மறுப்பது என்று தெரியவே இல்லை.
யோசனையுடன் தான் ஹாலில் அமர்ந்து இருந்தாள்.
இதே சமயம், தேவ்வும், மதியம் எழுந்து சாப்பிட்டு விட்டு, மீண்டும் படுக்கச் செல்ல, "உன் பொண்டாட்டி எத்தனை மணிக்கு டா வருவா?" என்று கேட்டார் ஜெயா...
"அஞ்சு மணியாகும் அத்தை, நீங்க கிளம்புறதுன்னா கிளம்புங்க" என்று சொல்ல, "ச்ச ச்ச, கொஞ்ச நேரத்தில நான் கிளம்புறேன், நித்யா இருக்கட்டும்" என்று சொல்லிக் கொண்டே, அங்கேயே இருந்தார்...
"நோ நீட், நித்யாவையும் அழைச்சிட்டு போங்க" என்று சொன்ன தேவ்வும் காய்ச்சலின் வீரியத்தினால் தூங்க ஆரம்பித்து இருக்க, நேரமும் நகர்ந்தது...
நித்யா அருகே வந்த ஜெயாவோ, "நான் சொன்ன போல பண்ணிடு, தெரு முனைல நிக்கிறேன்... பத்மா இங்கே வர்ற நேரம், உனக்கு கால் பண்ணுறேன்" என்று சொல்ல, நித்யாவோ, "அம்மா இதெல்லாம்" என்று ஆரம்பிக்க, "பண்ணுற" என்று அழுத்தமாக சொல்லி விட்டு, கிளம்பி விட்டார்...
நகத்தை கடித்துக் கொண்டே அவள் ஹாலில் அமர்ந்து இருக்க, பத்மாவின் வண்டி, வீட்டை நோக்கி வந்தது...
உடனே அதனை பார்த்த ஜெயாவும், நித்யாவுக்கு அழைத்து, "உள்ளே போடி" என்று சொல்லி இருக்க, நித்யாவும் அறைக்குள் நுழைந்தாள்.
தேவ் தூங்கிக் கொண்டு இருந்தான்...
ஷார்ட்ஸ் மட்டும் தான் போட்டு இருந்தான்...
மெதுவாக கட்டிலில் ஏறியவள், அவன் போர்வைக்குள் நுழைந்து, அவன் கையை தூக்கி, அவன் அணைவுக்குள் சென்றபடி, தான் போட்டு இருந்த ஷேர்ட்டின் மேல் பட்டன்களை திறந்து விட்டாள்.
இதே சமயம், பத்மாவும் வீட்டை அடைந்து உள்ளே நுழைந்து இருக்க, தூக்க கலக்கத்தில் இருந்த தேவ்வுக்கோ தனது கையணைவில் இருப்பது பத்மா என்கின்ற எண்ணம் தான்...
"எப்போ வந்த பத்மா?" என்று கேட்டுக் கொண்டே, அவன் மூடிய விழிகளுடன் நித்யாவின் கழுத்தில் முகம் புதைத்தபடி அவளை இறுக அணைக்க, அவளுக்கோ பயத்தில் மேனி நடுங்கவும் ஆரம்பித்து விட்டது...
அவன் கண்களை விரித்தால் மாட்டிக் கொள்வாள்...
அதற்குள் பத்மா வந்து விட வேண்டும்...
அவள் இதனை யோசித்துக் கொண்டு இருக்கும் போதே, அவர்கள் அறைக் கதவு திறக்கப்பட்டது...
கதவை திறந்த பத்மாவுக்கு விழிகள் அதிர்ந்து விரிந்துக் கொண்டன...
அங்கே அவள் கண்ட காட்சியில், அவர்களது படுக்கை அறையில், தேவ் நித்யாவின் கழுத்தில் முகம் புதைத்து, அவளை இறுக அணைத்துக் கொண்டல்லவா இருக்கின்றான்...
நெஞ்சில் கையை வைத்துக் கொண்டவளுக்கு கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிய, "தேவ்" என்று தழுதழுத்த குரலில் அழைக்க, "ஐயோ மச்சான், நம்ம தப்பு பண்ணுனதை பத்மா பார்த்துட்டா, தள்ளுங்க" என்று சொல்லிக் கொண்டே, அவன் மார்பில் கையை வைத்து தள்ள, அப்போது தான் அவன் விழிகளையே திறந்தான்...
தூக்கி வாரிப் போட்டது அவனுக்கு...
நித்யாவை அணைத்துக் கொண்டே படுத்து இருக்கின்றான்...
பதறி எழுந்து விலகி அமர்ந்துக் கொள்ள, நித்யாவோ, ஷேர்ட் பட்டன்களை போட்டுக் கொண்டே, "நான் கிளம்புறேன்" என்று சொன்னபடி விறு விறுவென வெளியேறி விட்டாள்.