ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 17

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 17

தேவ்வோ, கண்களை அழுந்த தேய்த்துக் கொண்டே, "பத்மா, நீ ன்னு நினைச்சு" என்று ஆரம்பிக்க, "யூ ஆர் எ சீட்டர் தேவ்" என்று சத்தமாக அந்த வீடே அதிரும் வண்ணம் கத்தினாள்...

அவளுக்கோ யாரோ இதயத்தை கிழித்து எடுக்கும் உணர்வு தான்...

தான் படுக்கும் கட்டிலில் இன்னொருத்தி படுப்பதை எந்த பெண்ணால் ஜீரணிக்க முடியும்...

"என்னை பேச விடுடி" என்று அவனும் கஷ்டப்பட்டு குரலை உயர்த்தி கேட்டான்...

"என்ன பேசிடுவீங்க தேவ்... என் கண் முன்னாடியே இன்னொருத்தி கூட... ச்சீ" என்று சொன்னவளோ, முகத்தை மூடி அழ, "என்னை நம்பு பத்மா" என்றான் அவன் ஆதங்கமாக...

"எப்படி நம்புறது? யூ ஆர் எ செக்ஸ் அடிக்ட்... உங்களுக்கு தினமும் என் கிட்ட இருந்து கிடைக்கிறது பத்தாதா? ஊர்ல இருக்கிற எல்லா பொண்ணுங்களும் தேவையா?" என்று தரம் தாழ்ந்து பேசி விட, "வாட் டிட் யூ சே?" என்று அழுத்தமாக கேட்டான்...

"உண்மையை தானே சொல்றேன்..." என்று அவனை இன்னும் காயப்படுத்தி பேசி விட்டாள்.

"இந்த ஃபீவரால என்னால பேச முடியாம இருக்கு பத்மா... இல்லன்னா நீ இவ்ளோ பேசுறதுக்கு நடந்து இருக்கிறது வேற" என்றான்...

"தப்பை பண்ணிட்டு எப்படி தேவ் எதுவும் நடக்காத போல பேசுறீங்க?" என்று கேட்க, அவளை முறைத்தவன், "அப்போ நீ என்னை நம்பல ரைட்?" என்று கேட்டான்...

அவன் விழிகளை பார்த்தவளோ, "இல்ல நம்பல, நீங்க நம்ப கூடிய ஆள் இல்லை... நீங்க ஒரு பொம்பளை பொறுக்கி, ஃபிஸிக்கல் ரிலேஷன் ஷிப்புக்காக நாய் போல அலையுற ஆள்... அன்னைக்கு என் கிட்ட கன்னி கழிஞ்சேன்னு சொன்னதை எல்லாம் பைத்தியக்கார தனமா நம்புனேன்... இப்போ சந்தேகமா இருக்கு... எத்தனை பொண்ணுங்கள தொட்ட கையால என்னை தொட்டீங்களோ தெரியல" என்று அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவனை என்னவோ செய்ய, அவளையே பார்த்து இருந்தவன், மார்புக்கு குறுக்கே கையை கட்டிக் கொண்டே, "என்னை ப்ரூஃப் பண்ண எனக்கு பத்து நிமிஷம் போதும் பத்மா... ஆனா அதுக்கு அப்புறம், பழைய தேவ்வை நீ எப்போவுமே பார்க்க முடியாது" என்றான்...

"ப்ரூஃப் ஆஹ்? எப்படி சார் பண்ணுவீங்க?" என்று கேட்க, அவனோ அழுத்தமாக பார்த்துக் கொண்டே அலைப்பேசியை எடுத்து, நித்யாவுக்கு அழைத்தான்...

"அம்மா மச்சான் எடுக்கிறார்" என்று சொல்லி, நித்யா பதற, "எடுத்து தைரியமா பேசுடி" என்று அவர் சொல்ல, நித்யா அலைப்பேசியை காதில் வைத்த அடுத்த கணம், "நீ இப்போ அஞ்சு நிமிஷத்துல வீட்டுக்கு வரலைன்னா, நீ இன்னைக்கு பண்ணுன விஷயம் உன்னோட பெங்களூர் பாய் ஃபிரென்ட் ராம் கிட்ட போகும்" என்றான்.

பதறி விட்டாள் அவள்...

"ஐயோ வர்றேன் அத்தான், எதுவும் சொல்லிடாதீங்க" என்று சொல்லிக் கொண்டே, அவள் அவன் வீட்டை நோக்கிச் செல்ல, "எங்கடி போற? உண்மைய சொல்லிடாதே" என்றார் ஜெயா...

"அடிமடில கை வைக்காதீங்கம்மா" என்று சொல்லிக் கொண்டே, அவளும் கிளம்பி இருந்தாள்.

இதே சமயம், அவன் முன்னே நின்று இருந்த பத்மா, மார்புக்கு குறுக்கே கையை கட்டிக் கொண்டே அவனையே பார்த்து இருக்க, அவனோ அலைப்பேசியை எடுத்து, ஹாலில் இருக்கும் சி சி டி வியை பார்த்தான்...

சரியாக பத்மா வர இரு நிமிடங்கள் முன்னே தான் அறைக்குள் நுழைந்து இருந்தாள் நித்யா...

அப்படியே தூக்கி அவள் முன்னே அலைப்பேசியை காட்டியவன், "நீ வர்றதுக்கு சரியா ரெண்டு நிமிஷம் முன்னாடி அவ ரூமுக்குள்ள வந்து இருக்கா" என்று சொல்ல, அதனை பார்த்த பத்மாவின் விழிகள் அதிர்ந்து விரிந்தன...

ஆம் அங்கு ஓடிக் கொண்டு இருந்த நேரத்தில் சரியாக இரு நிமிடங்கள் தான் காட்டியது...

அதனை பார்த்து விட்டு, தேவ்வை அவள் அதிர்ந்து பார்க்க, அவனும் அவளை பார்த்துக் கொண்டே கட்டிலில் அமர்ந்தவன், "ரெண்டு நிமிஷத்துல என்ன பண்ணிட போறேன்... ஐ நீட் அட்லீஸ்ட் டுவென்டி மினிட்ஸ்... அது உனக்கே தெரியும்" என்று சொல்லிக் கொண்டே இருக்கும் போது அறைக் கதவை திறந்துக் கொண்டு நித்யா உள்ளே வந்தாள்...

உள்ளே வந்தவளோ, "சாரி, மச்சான், சொல்ல சொல்ல கேட்காம, அம்மா தான் இப்படி பண்ண சொன்னாங்க" என்று சொன்னவள், "இத ராம் கிட்ட சொல்லிடாதீங்க ப்ளீஸ்" என்றாள் கெஞ்சுதலாக...

பத்மாவுக்கு ஆத்திரம் தாங்கவில்லை... அவனை இப்படி சந்தேகப்பட வைத்து விட்டாளே...

வேகமாக வந்து நித்யாவை பிடித்து ஒரே அறை...

"பத்மா" என்று அதட்டினான் தேவ்...

"இவ என்ன வேலை, பார்த்து இருக்கா" என்று பத்மா அழுதுக் கொண்டே கேட்க, கன்னத்தை பொத்தியபடி நித்யா அவளை அதிர்ந்து பார்க்க, "ஷட் அப்" என்றான் தேவ் பத்மாவைப் பார்த்துக் கொண்டே...

"இல்ல தேவ்" என்று பத்மா ஆதங்கமாக ஆரம்பிக்க, "ஐ செட் டு ஷட் அப்" என்று மீண்டும் அழுத்தமாக சொல்ல, வாயை கப்பென்று பத்மா மூடிக் கொள்ள, அவளை முறைத்து விட்டு நித்யாவை பார்த்தவன், "இனி உன் அம்மா சொல்றத கேட்டு நடக்காம, உன் லைஃபை பாரு, பிழைச்சு போடி" என்று திட்ட, அவளும், "சாரி மச்சான்" என்று சொல்ல, "உன் அம்மாவை இந்த வீட்டு பக்கம் வரவேணாம்னு சொல்லு, மனுஷனா இருக்க மாட்டேன்" என்று சொன்னவனது அத்தை என்கின்ற அழைப்பு காணாமல் போய் இருக்க, சம்மதமாக தலையாட்டிய நித்யாவும் கிளம்பி விட்டாள்.

இப்போது பத்மாவை ஏறிட்டுப் பார்த்தான்...

"சாரி" என்று சொல்லிக் கொண்டே, அவனை நெருங்க, கையை நீட்டி அவளை எட்ட நிறுத்தியவன், "நீ பேர்த் கன்ட்ரோல் பில் யூஸ் பண்ணுறது எனக்கு எப்போவோ தெரியும்... ஆனா ஒரு வார்த்தை கூட கேட்கல, ஏன்னா உனக்கு என் மேல நம்பிக்கை வர்ற வரைக்கும் வெய்ட் பண்ண நினச்சேன்... உன் மேல அவ்ளோ நம்பிக்கை வச்சு இருந்தேன் பத்மா... ஆனா உனக்கு என் மேல கொஞ்சமும் நம்பிக்கை இல்லைல" என்றான் ஆதங்கமும் வலியும் சேர்ந்த குரலில்.

"தேவ் ஐ ஆம் சாரி, அவசரப்பட்டு" என்று ஆரம்பிக்க, மேலே பேச வேண்டாம் என்று அவளை கை நீட்டி தடுத்தவனோ, தனக்கு முன்னே கலங்கிய கண்களுடன் நின்றவளை அழுத்தமாக பார்த்துக் கொண்டே, "நீ பேசுன பேச்சுக்கு இதுக்கு மேல உன் கூட வாழ முடியும்னு தோணல" என்றான் ஆணித்தரமாக...

கண்ணீரை துடைத்து விட்டு அவனை முறைத்தவள், "அப்போ உங்கள விட்டு போகணும்னு சொல்றீங்களா??" என்று கேட்க, அவளில் இருந்து பார்வையை அகற்றியவன், "எஸ்" என்றான்.

விறு விறுவென கட்டிலில் அமர்ந்து இருந்தவனை நோக்கி வந்தவள், அவன் தாடையை பற்றி தன்னை நோக்கி திருப்பியபடி, "போக நான் ரெடி தான்... ஆனா என்னை எப்படி அழைச்சு வந்தீங்களோ அப்படியே அனுப்புங்க" என்றாள்.

"வாட்??" என்று அவன் அதிர, "என்னை கை படாத ரோஜாவா திரும்ப அனுப்புங்க, கிவ் மை வெர்ஜினிட்டி பேக்" என்றாள்.

"அதெப்படி டி முடியும்??" என்று அவன் சீறிக் கொண்டே எழுந்து நிற்க, மார்புக்கு குறுக்கே கையை கட்டியபடி அவனை அழுத்தமாக பார்த்தவள், "அப்போ என்னாலயும் போக முடியாது... கல்யாணம் பண்ணி என்னை என்னவோ எல்லாம் பண்ணிட்டு இப்போ போக சொன்னா போகணுமா?? அதெல்லாம் முடியாது... நான் பண்ணுனது தப்பு தான். உங்க கோபம் குறையும் வரைக்கும் பக்கத்து ரூமுல இருக்கேன்... விட்டெல்லாம் போயிட மாட்டேன்" என்றாள்.

"சரியான இம்சை" என்று அவன் முணுமுணுத்தவன், "நான் தான் பொம்பளை பொறுக்கி ஆச்சே... என் கூட வாழணும்னு எதுக்கு ஆசைப்படுற... அப்புறம் என்ன சொன்ன?? ஐ ஆம் செக்ஸ் அடிக்ட்... ரைட்?" என்று ஆரம்பிக்க எட்டி அவன் வாயை பொத்தியவள், "சாரி" என்றாள்.

அவள் கையை தட்டி விட்டவனோ, "எஸ், செக்ஸ் அடிக்ட் தான்... ஆனா உன் கிட்ட மட்டும் தான் அப்படி இருந்தேன்... உன்னை கல்யாணம் பண்ணுன அப்புறம் எந்த பொண்ணையாவது நிமிர்ந்து பார்த்து இருப்பேனா? கொஞ்சம் கூட நாக்குல நரம்பில்லாம பேசிட்ட தானே... என் கூட இஷ்டப்பட்டு தான் நீ இருக்கன்னு நான் நினைச்சுட்டு இருந்தேன்... இப்போ நீ பேசுனத நினைக்கும் போது அதுலயும் சந்தேகம் வருது" என்று சொல்ல, "பிடிச்சு தான் இருந்தேன் தேவ்... இப்படி எல்லாம் பேசாதீங்க ப்ளீஸ்" என்று சீறினாள்...

"உன்னை விட நான் ஒன்னும் தப்பா பேசலையே" என்றான்...

"சாரி தேவ்" என்று அவள் கெஞ்சுதலாக கேட்டபடி அவன் கையை பற்ற, "நான் உன்னை மன்னிக்கிறதா இல்ல" என்றபடி கையை தட்டி விட, "டேக் யோர் டைம்" என்றாள்.

"எனக்கு டைம் கொடுக்க நீ யாரு??" என்றவனை ஆழ்ந்து பார்த்தவள், "யோர் எவெரிதிங்" என்று சொல்லி விட்டு வெளியேறி அடுத்த அறைக்குள் நுழைந்துக் கொள்ள, அவள் முதுகை வெறித்துப் பார்த்துக் கொண்டே நின்று இருந்தான் தேவ்...

அறைக்குள் வந்த பத்மாவோ, கதவை தாழிட்டு விட்டு, நெற்றியை சுவற்றில் டங்கு டங்கு என்று மோதியவள், "வாய வச்சுட்டு சும்மா இல்லாம என்ன எல்லாம் பேசி இருக்க? இப்போ எப்படி சமாதானப்படுத்த போற? பக்கத்தில போனாலே கடிச்சு குதறிடுவார் போல இருக்கே" என்று சொன்னவளுக்கு அழுகை ஒரு பக்கம்...

கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

சற்று நேரத்தில் அவள் அறைக் கதவு தட்டப்பட்டது...

திறந்தாள்.

அவன் தான் நின்று இருந்தாள்.

கையில் அவளது உடைகள்...

"என் ரூம் பக்கம் வந்துடாதே" என்று சொல்லி, உடைகளை தூக்கி கட்டிலில் போட்டவன் விறு விறுவென வெளியேறி இருக்க, அவன் முதுகை வெறித்துப் பார்த்து விட்டு, கட்டிலில் அமர்ந்துக் கொண்ட பெண்ணவளோ, 'மாமா இருந்தாலாச்சும் எப்படியாவது சமாதானப்படுத்தலாம்... அவர் வர ஒரு மாசம் ஆகுமே... அது வரைக்கும், தனி தனி ரூம் தானா?' என்று புலம்பியவள் மனமோ, 'நீ பண்ணுனதுக்கு தேவை தான்... அனுபவி' என்று தனக்கு தானே திட்டியும் கொண்டாள்.

சற்று நேரம் அறைக்குள் இருந்தவளுக்கு சமையலறைக்குள் சத்தம் கேட்டது...

எழுந்து வந்து எட்டிப் பார்த்தாள்.

ஜெயா சமைத்து வைத்து இருந்த உணவுகளை குப்பை கூடைக்குள் கொட்டிக் கொண்டு இருந்தான் தேவ்...

அவளோ சமையலறை கதவு நிலையில் சாய்ந்து நின்று அவனையே பார்த்து இருக்க, அவன் அவளை பார்க்காமலே, தனக்கு தானே சமைக்க ஆரம்பித்தான்...

அவனுக்கோ காய்ச்சல்...

அவன் சிவந்த விழிகளும், சிவந்த மேனியும் அதனை எடுத்து உரைக்க, அவளுக்கோ மனம் கேட்கவில்லை...

"நான் சமைச்சு" என்று சொல்லிக் கொண்டே அவன் அருகே வர, "சாவடிச்சிடுவேன், வெளியே போடி" என்று அவளை பார்க்காமல் திட்டியவன், சமையலை தொடர, "உங்க அத்தை மேல தானே தப்பு" என்று சிணுங்கலாக கேட்டாள்.

அவளை இப்போது ஆழ்ந்து பார்த்தவன், "அவங்க மேல தப்பு இல்லன்னு நான் சொல்லவே இல்லையே" என்றான்...

"ஒரு பொண்ண கட்டிபிடிச்சிட்டு படுத்தா, எந்த பொண்ணா இருந்தாலும் கோபம் வரும் தானே... எப்படி நிதானமா இருக்க முடியும்?" என்று கேட்க, அவளை முறைத்து விட்டு அடுப்பை பற்ற வைத்தவன், "நீ வார்த்தைகளை விட முதல், நிதானமா விசாரிச்சு இருக்கணும்... நான் தப்பு பண்ணி இருக்க மாட்டேன்னு நம்பிக்கை இருந்தா விசாரிச்சு இருப்ப, மனசு முழுக்க சந்தேகம்" என்றவன் வலியுடன் எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டே, அவளை இப்போது நீல விழிகளால் நோக்கிக் கொண்டே, "என்னால ஒவ்வொரு முறையும் ப்ரூஃப் பண்ணிட்டு இருக்க முடியல பத்மா... பெயினா இருக்கு" என்றான்...

குரலில் அப்படி ஒரு வலி...

"ப்ளீஸ் தேவ், ரியலி சாரி" என்று அவள் கலங்கிய விழிகளுடன் கெஞ்ச, ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே சமையலை தொடர்ந்தவன், "என் மேல ஒரு அடிப்படை நம்பிக்கை கூட இல்லாத உன் கூட வாழ முடியாது... தட்ஸ் இட்" என்றான்...

"இது தான் உங்க முடிவா?" என்று கேட்டாள் மீண்டும்...

அவளை முறைத்தவன், "நான் தானே செக்ஸுக்கு நாய் போல அலையுறேன்னு சொன்ன, அப்புறம் என்ன?" என்று கேட்டான்...

அந்த வார்த்தைகளின் வீரியம் அவளுக்கு இப்போது புரிந்தது...

அவசரப்பட்டு வார்த்தைகளை விட்ட தனக்கு மானசீகமாக திட்டிக் கொண்டே, "இல்ல தேவ் அது" என்று ஆரம்பிக்க, "இனஃப், எனக்கு எந்த விளக்கமும் தேவையே இல்லை... நம்ம இன்டிமசிக்கு நீ இப்படி ஒரு விளக்கம் வச்சு இருப்பேன்னு தெரிஞ்சு இருந்தா பக்கத்தில கூட வந்திருக்க மாட்டேன்..." என்று சொல்லிக் கொண்டே சமைக்க, அவளுக்கு அழுகை தான்...

அவன் மனம் வருந்தி பேசுகின்றான் என்று தெரிந்தது...

எப்படி சமாதானப்படுத்துவது என்றே தெரியவில்லை...

"இப்போ நான் என்ன பண்ணட்டும் தேவ்?" என்று கேட்டாள்.

"என்னை விட்டு போயிடு... அது போதும்" என்றான் அவளை பார்க்காமலே.

"நான் மாட்டேன்... எனக்கு நீங்க வேணும்" என்றாள்.

"ஆனா எனக்கு நீ வேணாம்" என்று சொல்லிக் கொண்டே சமைத்து முடித்தவன், அவளை நோக்கி வந்து, "இனி எல்லாமே தனி தனி தான்... உனக்கு தேவைன்னா நீ சமைச்சுக்கோ, தனியா படுத்துக்கோ..." என்று சொல்ல, "எத்தனை நாளைக்கு?" என்று கேட்டாள்.

"வாழ்க்கை முழுக்க" என்று சொல்லிக் கொண்டே, அவளை தாண்டிச் சென்றவன், ஒரு கணம் நின்று அவளை திரும்பிப் பார்த்துக் கொண்டே, "உனக்கு எப்போ தோணுதோ, அப்போ டைவர்ஸ் பண்ணிக்கலாம்... வேற கல்யாணம் பண்ணி வாழுறதுன்னா வாழு, நான் தடையா இருக்க மாட்டேன்" என்றான்.

அவனை முறைத்தவள், "நான் வேற கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னேனா? உங்களுக்கு வேணும்னா நீங்க பண்ணிக்கோங்க" என்று சொன்னாள்.

அவனோ, "இப்போ அனுபவிக்கிறது பத்தாதுன்னு இன்னொன்னா?" என்று முணுமுணுத்துக் கொண்டே சாப்பிட, அவளுக்கு அவன் பாராமுகம் ஒரு மாதிரி ஆகி விட்டது...

விறு விறுவென அறைக்குள் சென்று விட்டாள்.

சாப்பிடவும் இல்லை...

அவன் ஏன் என்றும் கேட்கவில்லை...

ஏதாவது கேட்பான் என்று எதிர்பார்த்தவளுக்கு மனம் இன்னும் சோர்ந்து விட, அப்படியே தூங்கியும் போனாள்.

இதே சமயம், வீட்டுக்கு வந்த நித்யாவுக்கும் ஜெயாவுக்கும் பெரிய பிரச்சனையே நடந்துக் கொண்டு இருந்தது...

"எதுக்கு உண்மையை சொன்ன?" என்று அவர் எகிற, "உங்களுக்காக என் வாழ்க்கையை நான் கெடுத்துக்க முடியாது..." என்று சொன்னவள், "நீங்க என் கூட இனி வரவே வேணாம், அண்ணா கூடவே இருங்க" என்று சொல்லி விட்டு பெங்களூருக்கு கிளம்பி விட்டாள்.

அவருக்கு இப்போது தேவ்வை நினைத்து நடுங்க ஆரம்பித்து விட்டது...

குடும்பத்தை கலைத்து விட்டு பெங்களூருக்குச் சென்று விடலாம் என்று நினைத்தவரை நித்யா வேறு வரவேண்டாம் என்று சொல்லி விட்டாள்.

இப்போது இங்கே தான் இருந்தாக வேண்டும்...

தேவ் கண்ணில் பட்டால் என்ன செய்வது என்று ஒரு படபடப்பு வேறு...

ஆனால் தேவ், அவரை சந்திக்கவே கூடாது என்று நினைத்து இருந்தான்...


சின்ன வயதில் அரவணைத்த நன்றிக்காக அவரை பழி வாங்க அவன் யோசிக்கவே இல்லை.  
 

CRVS2797

Active member
ஐஸ்க்ரீம் சிலையே ..!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மூ
(அத்தியாயம் - 17)


இந்த பத்மா தான் வாய் கொழுப்பெடுத்தவ, சந்தேக புத்திக்காரி, சரியான சண்டைக்காரி. எப்ப பார்த்தாலும் நொய் நொய்ன்னு டார்ச்சர் பண்ணிட்டு, எப்பயோ நடந்ததையெல்லாம் உருட்டிக்கிட்டு, இவ ஏன் தான் இப்படி இருக்கிறாளோ தெரியலை. என்ன வார்த்தையெல்லாம் விட்டுட்டா.
இதே தேவ் அவளை பார்த்து நாக்கை புடுங்கிக்கற மாதிரி நாலு வார்த்தை சொல்லியிருந்தான்னா, இவ அப்ப அவனை வைச்சு செஞ்சிருப்பா தானே...?
ஆனா, அவனா இவளை முதல்லயிருந்தே இஷ்டப்பட்டு விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டதால அவனோட அருமை இவளுக்கு தெரியலையோ என்னவோ..?
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனைங்கிற மாதிரி, பத்தமாவுக்கு தெரியலை தேவ்வோட அருமை அவ்வளவு தான் சொல்லுவேன்.

😀😀😀
CRVS or CRVS 2797
 
Top