அத்தியாயம் 30
சர்வஜித் மருதநாயகத்தை நோக்கிச் செல்ல முதல், அவன் அடித்த விடயம் அவருக்கு சென்று இருந்தது...
அங்கே மகனை தூக்கிக் கொண்டே கோபமாக வந்தவனிடம், "டேய் என்னாச்சுடா?" என்று மருதநாயகம் கேட்க, அவனோ, "என் கண் முன்னாடியே இவ மேல கையை வைக்கிறான்... அவனுக்கு ரெண்டு போட்டா இவ என் கூட சண்டைக்கு வர்றா" என்றான் கடுப்பாக...
ஆதிரையாழோ மௌனமாக நின்று இருக்க, மருதநாயகமோ, "என்னம்மா இது? தப்பு பண்ணுறவங்கள தட்டி கேட்க தானே வேணும்" என்றார்...
"எதுக்கு தாத்தா கோவில்ல வச்சு சண்டை?" என்று ஆதிரையாழ் சொல்ல, சர்வஜித்தோ, "கோவில்ல வச்சு சண்டை போடுறது தப்பு, ஆனா அவன் பண்ணுனது மட்டும் சரியா?" என்றான்...
பதில் இல்லை அவளிடம்...
மௌனம் மட்டுமே... மருதநாயகமோ, "சரி விடுங்க, நாம இப்போ வீட்டுக்கு கிளம்பலாம்" என்று சொல்லிக் கொண்டே, அங்கிருந்து புறப்பட, அவரை தொடர்ந்து ஏனையவர்களும் புறப்பட்டார்கள்...
காரில் சர்வஜித்தும் ஆதிரையாழும் அருகருகே இருந்தாலும் ஒருவருக்கு மாறி அடுத்தவர் வாய்க்குள் திட்டிக் கொண்டு தான் வந்தார்கள்...
வீட்டுக்கும் வந்து சேர்ந்து விட்டார்கள் இருவரும்...
சர்வஜித்துக்கு ஆதிரையாழ் விடயத்தில் நெருடல் தான்...
எப்படி அவளை கையாள வேண்டும் என்று தெரியவே இல்லை...
'பிசினஸ்லாம் ஈஸியா ஹாண்டில் பண்ணிடுவேன்... இந்த பொண்ணுங்கள ஹாண்டில் பண்ணுறது தான் ரொம்ப கஷ்டம் போலவே' என்று நினைத்துக் கொண்டான்...
அன்று மாலை, தோட்டத்தில் சர்வஜித்துடன் அமர்ந்து இருந்த மருதநாயகமோ, "யாழ் ரொம்ப பாவம்பா" என்று சொன்னார்...
அவனும் அவரை ஆழ்ந்த மூச்சுடன் பார்த்துக் கொண்டே, "ம்ம்" என்று சொல்ல, அவரோ, "நீ இல்லாத நேரம் எவ்ளோ கஷ்டப்பட்டா தெரியுமா? தனியா குழந்தையை சுமந்து பெத்து வளர்க்கிறது எவ்ளோ கஷ்டம்... தனியா உட்கார்ந்து அழுவா... பார்க்கவே பாவமா இருக்கும்... அவ வலி அப்படி..." என்று சொல்ல, அவன் ஒன்றும் சொல்லவில்லை, மௌனமாக அமர்ந்து இருந்தான்...
அன்று இரவு ரணதீரன் களைப்பில் விரைவாகவே தூங்கி விட்டான்...
சர்வஜித் இந்த பக்கமும் ஆதிரையாழ் மறுபக்கமும் படுத்து இருந்தாலும் இருவருக்கும் தூக்கம் வரவில்லை...
சட்டென எழுந்து அமர்ந்த சர்வஜித்தோ, "ஆதிரா" என்று அழைத்தான்...
அவளோ கண்களை திறந்து அவனை ஏறிட்டுப் பார்க்க, "உன் கிட்ட பேசணும்" என்றான்...
அவளோ, "என்ன பேசணும்?" என்று கேட்க, "பால்கனிக்கு வா, தீரன் தூங்குறான்ல" என்று சொல்லிக் கொண்டே எழுந்து தலையை கோதிக் கொண்டே பால்கனிக்குச் செல்ல, ஒரு பெருமூச்சுடன் அவனை பின் தொடர்ந்துச் சென்றாள் ஆதிரையாழ்...
அவனோ பால்கனி கம்பியில் கையை அழுந்த பற்றிக் கொண்டே, தனக்கு அருகே வந்து நின்றவளை பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தான்.
அவள் அவனை பார்க்கவே இல்லை...
நிலவை மறைத்துக் கொண்டே நகர்ந்துச் சென்ற மேகத்தை பார்த்தபடி நின்றாள்.
சர்வஜித்துக்கு எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவே இல்லை...
எத்தனையோ மீட்டிங்குகள், எத்தனையோ மேடைகள் ஏறி இருக்கின்றான்...
அப்போதெல்லாம் வராத தயக்கம் இப்போது...
மன்னிப்பு கேட்கும் அளவுக்கு அவனால் ஈகோவை விட்டு இறங்கி வரவும் முடியவில்லை...
செய்தது தவறு என்று தெரியும்...
ஆனால் இதுவரை அவன் மன்னிப்பு கேட்டும் பழக்கம் இல்லாதவன்...
சிறிது நேரம் யோசித்து விட்டு, "இன்னைக்கு நான் பண்ணுனதுல என்ன தப்பு கண்ட?" என அன்று நடந்த விஷயத்தை வைத்து தனது சம்பாஷணையை ஆரம்பித்தான்...
"தப்பு என்கிறத விட இந்த அக்கறை எல்லாம் என்னால ஜீரணிக்க முடியல, ஆறு வருஷம் இல்லாத அக்கறை திடீர்னு வந்தா எப்படி என்னால ஏத்துக்க முடியும்?" என்று அவன் விழிகளை பார்த்துக் கொண்டே கேட்டாள்.
பதில் இல்லை அவனிடம்...
அவனால் தான் அவளை இப்போது பார்க்க முடியவில்லை...
அப்படியே முகத்தை திருப்பி வானத்தைப் பார்த்தவன், "நான் பண்ணுனது சரினு வாதாட மாட்டேன்" என்றான்...
"வாதாடவும் முடியாது" என்றாள் அவள் அழுத்தமாக...
பொறுமை போய் விட்டது அவனுக்கு... இதற்கு மேல் விலகி நின்று பேசவும் முடியாது... அவளை ஆழ்ந்து பார்த்தவன், "தப்பு தான்டி... இப்போ நான் என்ன பண்ணனும்? காலுல விழணுமா?" என்று கேட்டான்...
அவள் இதழ்களில் விரக்தி புன்னகை...
"நீங்க எதுக்கு என் காலுல விழ போறீங்க... அப்படி நடந்தா நான் மன்னிச்சிடணும்... கால்ல விழுந்தாலும் மன்னிக்கிற அளவுக்கு என் மனசு இல்லை..." என்று ஆரம்பித்தவளுக்கு ஆதங்கத்தில் கண்ணீர் வழிய, கண்ணீரை துடைத்துக் கொண்டே, "படுத்ததுக்கு காசு கொடுத்து என்னை விபச்சாரினு சொல்லாம சொல்லிட்டீங்க... வயித்துல குழந்தையோட அப்படியே விட்டு போய்ட்டீங்க... இப்போ ஆறு வருஷம் கழிச்சு வந்ததுமே நான் எல்லாமே மறந்து அப்படியே மன்னிச்சு ஏத்துக்கணுமா? இந்த ஆறு வருஷத்தை உங்களால ஈடு கட்ட முடியுமா? முடியாதுல்ல, அப்பா இல்லாம பையன் ஏங்கி இருக்கான்... அந்த நாளை திருப்பி கொடுக்க முடியுமா? முடியாதுல்ல, தாத்தா உங்கள பார்த்துட்டு ஒவ்வொரு வருஷமும் மே மாசம் காத்துட்டு இருப்பார்... அந்த வலியை ஈடு கட்ட முடியுமா? முடியாதுல்ல... உங்களுக்கு தேவை பணம், சொத்து... இந்த பந்த பாசம் எல்லாம் வெறும் நடிப்பு தானே... பாசத்தை காட்டி நடிச்ச உங்களுக்கு கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லையா? இப்போ கூட எதுக்கு வந்து இருக்கீங்கனு யாருக்கு தெரியும்? மீதி இருக்கிற இந்த சொத்தையும் எழுதி வாங்குறதுக்கா?" என்று அழுதழுதே பேசி முடித்தாள்...
அவள் கேள்விகளுக்கு அவனிடம் பதில் இல்லை... அவளையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தவன், "நான் ஒன்னும் சொத்துக்காக எல்லாம் வரல, பையனை, தாத்தாவை, உன்னைனு எல்லாரையும் பார்க்க தான் வந்தேன்" என்று சொன்னான்...
அவனை ஆழ்ந்து பார்த்தவள், "ஆறு வருஷம் வராத பாசம் ஒரே நாள்ல எப்படி வந்திச்சு சார்?" என்று கேட்டாள்.
நியாயமான கேள்வி...
அவனால் பதில் சொல்ல முடியாத கேள்வி...
பதில் இருந்தும் சொல்ல முடியாத நிலைமை...
"எப்படியோ வந்திச்சு" என்று சொல்லிக் கொண்டே, மீண்டும் வானத்தைப் பார்க்க, அவளோ, "ஓஹோ எப்படியோ வந்திச்சா? வார்த்தைக்கு வார்த்தை குப்பை குப்பைனு சொன்னவ மேல இந்த அக்கறை எங்க இருந்து வந்திச்சு?" என்று கேட்டாள்...
சட்டென திரும்பி அவளை பக்கவாட்டாக பார்த்தவன், "நீ ஒன்னும் குப்பை இல்லை... நான்" என்று ஆரம்பித்து வார்த்தைகளை விழுங்கிக் கொண்டே, "இங்க பாரு ஆதிரா, இவ்ளோ நிதானமா பேசிட்டு இருக்கேன்... என்னை உனக்கு இன்னுமே புரிஞ்சுக்க முடியலையா?" என்று கேட்டாள்.
"புரிஞ்சுக்க என்ன இருக்கு? நான் சொன்ன போல ஏதாவது சொத்து விட்டு போய் இருக்கும்... அதுக்கு அடி போட்டு வந்து இருப்பீங்க... இப்படி தானே போன முறையும் நடிச்சீங்க... நான் உங்கள என் பையன் பக்கத்தில கூட சேர விட்டு இருக்க மாட்டேன்... தாத்தாவுக்காக தான் சும்மா இருக்கேன்... உங்களோட நடிப்பை பையன் கிட்டயும் தாத்தா கிட்டயும் வச்சுக்கோங்க, என் கிட்ட வேணாம்... நான் உங்கள எப்போவுமே நம்ப தயாரா இல்லை" என்றவள் அறைக்குள் செல்ல முற்பட, சட்டென்று அவள் கையை பிடித்தவன், "பேசிட்டு இருக்கேன்ல" என்றான்...
"எனக்கு பேச பிடிக்கலனு அர்த்தம்" என்றாள் அவள் கையை உறுவிக் கொண்டே...
"அப்போ இது தான் உன் முடிவா?" என்று அவன் கேட்க, அவன் விழிகளை பார்த்துக் கொண்டே, "ம்ம்" என்றாள்...
அவள் கையை விட்டவனோ, "அவ்ளோ சீக்கிரம் நான் உன்னை விட மாட்டேன்" என்றான்...
"என்ன பண்ணிட முடியும் உங்களால? மிஞ்சி மிஞ்சி போனா ரேப் தான் பண்ண முடியும்... உங்களுக்கு தேவை என் உடம்பு தானே... மனசை பத்தி எப்போவாவது யோசிச்சு இருக்கீங்களா? அத அடையணும்னு எப்போவாவது நினைச்சு இருக்கீங்களா? உங்களுக்கு மனசுன்னு ஒன்னு இருந்தா தானே அடுத்தவங்க மனச யோசிக்க முடியும்... ஆனா நான் உங்கள் எவ்ளோ காதலிச்சேன்னு தெரியுமா? காசை தூக்கி எறிஞ்சிட்டு விட்டுட்டு போன நேரம் எப்படி இருந்திச்சு தெரியுமா? பிடிக்கலைனா எதுக்கு என் கூட இருந்து என் மனசையும் சேர்த்து கெடுத்தீங்க... எதிரியை கூட மன்னிச்சிடலாம்... ஆனா துரோகியை மன்னிக்கவே முடியாது... நீங்க பண்ணுனது துரோகம்... நம்ப வச்சு கழுத்து அறுத்த துரோகம்... ஒரு பொண்ண ஏமாத்துற குற்ற உணர்வு கொஞ்சம் கூட உங்களுக்கு இல்லையா?" என்று கண்ணீருடன் கேட்டுக் கொண்டே கண்களை துடைத்தவள், "அது சரி, உங்களுக்கு எங்க குற்ற உணர்வு வர போகுது? இத்தனை வருஷம் வளர்த்து சொத்து எல்லாம் கொடுத்த தாத்தாவையே பணத்துக்காக முதுகுல குத்துன ஆள் நீங்க... நான் இடைல வந்தவ தானே" என்று சொன்னாள்.
அவளை உறுத்து விழித்தவன், "திரும்ப திரும்ப துரோகினு சொல்லாத ஆதிரா" என்றான்...
"அப்போ அதுக்கு பேர் என்ன?" என்று அவள் மாறி கேட்ட கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை...
ஆழ்ந்த மூச்சை எடுத்தவன், "ஃபைன், நான் பண்ணுனது துரோகம் தான்... அத நான் நியாயப்படுத்த மாட்டேன்... இப்போ பாய்ண்ட்டுக்கு வருவோம்... உன்னை நான் அவ்ளோ சீக்கிரம் விட மாட்டேன்... என்னடா திடீர்னு நல்லவன் போல பேசுறானே... நடிப்பா இருக்குமோன்னு உனக்கு தோணலாம்... பட் நான் நடிக்கலடி... இது வரைக்கும் நான் உன் கிட்ட சொல்லி இல்ல... இப்போ சொல்றேன் ஐ லவ் யூ... இத்தனை வருஷம் உன்னை பிரிஞ்சு இருந்தாலும் உன் நினைவு எனக்கு ஒரு நாள் கூட வராம இருந்தது இல்லை... உனக்கு எப்போ என் மேல நம்பிக்கை வருதோ அப்போ நாம வாழ்க்கையை அமைச்சுக்கலாம்... அது வரைக்கும் வெய்ட் பண்ணுவேன்" என்று சொன்னான்...
"அப்போ வாழ்க்கை முழுக்க வெய்ட் தான் பண்ணனும்" என்று சொல்லிக் கொண்டே, அவனை அழுத்தமாக பார்த்தவள் அங்கிருந்து நகர, "அடுத்த ஜென்மத்துலயும் வெய்ட் பண்ணுறேன்" என்று சத்தமாக சொன்னான்...
"இந்த டயலாக் மொக்கையா இருக்கு..." என்று கடுப்பாக சொல்லிக் கொண்டே, கட்டிலில் அவள் சென்று படுத்து விட, அவன் இதழில் மெல்லிய விரக்தி புன்னகை தோன்ற, ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே, மீண்டும் நிலவை வெறித்துப் பார்த்தான்.