ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 4

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 4

அலுவலகத்துக்கும் வந்து விட்டாள்.

அவர்கள் வேலை செய்வது ஐ டி நிறுவனம்.

அங்கே அவளுக்கு டீ போட்டு கொடுப்பது, ஃபோட்டோ காப்பி எடுப்பது, ஃபைலை இடம் மாற்றுவது போன்ற வேலைகள் தான்...

அவள் வந்ததுமே, "ஹாய் மாதுரி, கங்கிராட்ஸ்" என்று அங்கே வேலை செய்யும் பெண் நீலா சொல்ல, "ஐயோ எனக்கு கல்யாணம் நின்னுடுச்சு மேம்" என்றாள்.

"அச்சோ என்னாச்சு?" என்று அந்த பெண் விசாரிக்க, "மாப்பிள்ளை ஓடி போய்ட்டார்" என்றாள் வராத சோகத்தை முகத்தில் வரவழைத்தபடி.

"ஓஹ் ஐ ஆம் சாரி" என்று சொன்ன பெண்ணவளது வாயில் ஸ்பீக்கர் வைத்து இருப்பாள் போலும்...

மூச்சு விட முதலே விஷயம் கேம்பனி முழுவதும் பரவியது...

எல்லாரும் அவளிடம் நலம் விசாரித்து விட்டு ஆறுதல் சொல்லி விட்டு செல்ல, "சரியான ஆள் கிட்ட தான் சொல்லி இருக்கோம் போல, இவ்ளோ ஸ்பீட் ஆஹ் பரவிடுச்சே" என்று நினைத்துக் கொண்டாள்.

இதே சமயம் காரில் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தான் ராவந்த்.

உள்ளே வந்தவனிடம், "ராவ் உனக்கு தெரியுமா? நம்ம மாதுரியோட கல்யாணம் நின்னுடுச்சாம்" என்றாள் நீலா.

அவனோ பெருமூச்சுடன், "ம்ம்" என்றபடி நகர, "பாவம் தானே, அவ பார்க்கவே சுமாரா தான் இருப்பா, அவளை யாரு இனி கட்டிப்பா?" என்று கேட்டாள்.

"உனக்கு அடுத்தவங்க பிரச்சனை எதுக்கு?" என்று சற்று காட்டமாகவே சொல்லி விட்டு தனது இருக்கையில் சென்று அமர்ந்து விட்டாள்.

வழக்கம் போல மாதுரி வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

எல்லாருக்கும் காஃபி கொடுத்தாள்.

ராவந்த்துக்கும் கொடுத்தாள்.

இருவரும் தெரிந்த போலவே காட்டிக் கொள்ளவில்லை...

ஃபோட்டோ காப்பி எடுக்கலாம் என்று அதற்குள் சென்றாள்.

அங்கே நீலாவும் மாலினியும் கிசு கிசு பேசிக் கொண்டு இருந்தார்கள்...

ஃபோட்டோ காப்பி எடுத்துக் கொண்டே காதை கூர்மையாக்கிக் கொண்டாள்.

"இந்த ரிதன்யாவுக்கு செட் ஆகிடும் போல டி" என்றாள் நீலா...

"அப்படிங்குற? என்னையே ரிஜெக்ட் பண்ணுனார், அவளை ஓகே பண்ணுவாரா என்ன?" என்று மாலினி கேட்க, "உன் அளவுக்கு அவ அழகு இல்ல தான், ஆனா கொஞ்சம் ரெண்டு பேரும் சிரிச்சு சிரிச்சு பேசுற போல இருக்குல்ல" என்று சொல்ல, 'யாரை பத்தி பேசுறாங்கன்னு தெரியலயே, வெட்கத்தை விட்டு கேட்டுடலாம்' என்று நினைத்த மாதுரியோ, "எனக்கும் கிசு கிசு சொல்றீங்களா மேம்" என்று கேட்க, மாலினியோ, "இதெல்லாம் நீ ஏன் கேக்கிற?" என்று கேட்டாள்.

"பாவம் டி, திட்டதே, கல்யாணம் நின்ன கவலைல இருப்பா" என்று சொன்ன நீலாவோ, "நம்ம ஆஃபீஸ் மன்மதன் பத்தி தான்" என்றாள்.

"நம்ம ஆஃபீஸ் ல மன்மதனா? யார் அது?" என்று கேட்ட மாதுரியிடம், "அது கூட தெரியாதா? நம்ம ராவ் தான்" என்று சொல்ல, மாதுரியின் புருவம் ஏறி இறங்க, "ஓஹோ" என்றாள்.

"ம்ம், அவன் சிங்கிள் தானே, பார்க்கவும் ஹைட் ஆஹ் மேன்லியா சினிமா ஹீரோ போல இருக்கார், நாங்க எல்லாருமே ட்ரை பண்ணுவோம், ஆனா செட் ஆகல" என்றாள் நீலா பெருமூச்சுடன்.

மாலினியோ, "நீ ட்ரை பண்ணலாமே" என்று கிண்டலாக கேட்டாள் மாதுரியிடம்.

மாதுரியே, "ஐயே, எனக்கு வேணாம்" என்றாள்.

"பெரிய உலக அழகின்னு நினைப்பு, நீ வேணும்னு சொன்னாலும் அவர் ஓகே சொல்லணுமே" என்று கேட்க, "ஏன் லவ் பண்ணுறதுக்கும் கல்யாணம் பண்ணுறதுக்கும் உலக அழகியா தான் இருக்கணுமா என்ன? அழகு நம்ம வரையறுக்கிறது தானே... ஹைட்டா, ஸ்லிம் ஆஹ் வெள்ளையா இருந்தா தான் அழகுன்னு உங்க முளைல திணிச்சு வச்சு இருக்காங்க, இந்த பொண்ணுங்க ஆயுள் ல பாதி ஆண்களை கவர்ந்து இழுக்கிறதுலயே போகுது, அவங்க வாழ்க்கையை வாழாமலே விட்டுடுவாங்க, உங்களால மேக்கப் இல்லாம ஒரு நாள் இங்க வர முடியுமா? இல்ல தானே, அப்படி வந்தா கூட, உங்கள யாரும் பார்க்க கூடாதுன்னு எவ்ளோ டென்சன் ஆஹ் இருப்பீங்க, ஆனா நான் அப்படி இல்லை, மேக்கப் இல்ல. ஒன்னும் இல்ல, ஜாலியா வருவேன், ஜாலியா போவேன்... அதுக்குள்ள இருந்து வெளிய வர்ற நேரம் உங்களுக்கு வயசாயிடும்" என்று சொல்லி விட்டு அவள் செல்ல, "என்னடி இவ இப்படி பேசிட்டு போறா?" என்று கேட்டாள் மாலினி...

"அவ நல்லா பேசுவா, சென்சிபிள் ஆஹ்வும் பேசுவா" என்று நீலா சொன்னாள்.

"அவ கிட்ட அப்போ பார்த்து தான் பேசணும் போல" என்று சொல்லிக் கொண்டாள் மாலினி...

'இந்த பொண்ணுங்க என்ன இவ்ளோ ஜொள்ளு விடுறாங்க' என்று மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டே நடந்து சென்றவள் கண்கள், அங்கே ஜன்னல் ஓரத்தில் வெளியே பார்த்துக் கொண்டே ரிதன்யாவுடன் சிரித்து சிரித்து பேசிக் கொண்டு இருந்த ராவந்த்தில் படிந்தது...

'இவன் இப்படி பேசி பேசி தான், இந்த பொண்ணுங்கள மயக்கி வச்சு இருக்கான். பேட் ஃபெல்லோவ்' என்று முணுமுணுத்துக் கொண்டே, வேலையை தொடர்ந்தாள்.

அன்று மாலை நேரம் போல எல்லாருமே வீட்டுக்கு கிளம்பினார்கள்...

வேலையை முடித்துக் கொண்டே, நேரத்தைப் பார்த்தான் ராவந்த்.

ஆறு மணியை நெருங்கி விட்டது..

அப்படியே திரும்பி பார்த்தான்.

அலுவலகத்தை கூட்டி பெருக்கி முடித்த மாதுரியோ கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டு இருந்தாள்.

அவள் பஸ்ஸில் தான் அலுவலகத்துக்கு வந்திருந்தாள்.

ஆங்காங்கே ஓரிரெண்டு பேர் மட்டுமே வேலை செய்து கொண்டு இருக்க, அவனுக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருந்தது... அவளை பார்த்துக் கொண்டே, தனது மேசையில் இருந்த பெல்லை அழுத்த, 'இவன் என்ன இந்த நேரத்துக்கு கூப்பிடுறான்?' என்று நினைத்தபடி கைப்பையை வைத்து விட்டு அவனது கண்ணாடி அறைக்குள் வந்தாள் மாதுரி.

"காஃபி" என்றான்.

அவனை ஒரு மார்க்கமாக பார்த்தவன், "வீட்டுக்கு போய் குடிக்க வேண்டியது தானே" என்றாள் நேரத்தைப் பார்த்தபடி.

"அங்கேயும் நீ தான் டி போடணும்" என்றான்.

"மரியாதையா பேசுங்க, டி போட்டு இங்க பேச வேணாம்" என்றாள்.

"அப்படி தான் டி பேசுவேன், எனக்கு காஃபி வேணும்" என்றான்.

'சரியான இம்சை பிடிச்சவன்' என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே, காஃபி போட சென்றவள், அதனை போட்டு கொண்டு அவன் மேசையில் வைத்தாள்.

"அப்படியே ஃபோட்டோ காப்பி" என்று கையில் இருந்த ஒரு பெரிய ஃபைலை நீட்டினான்.

"பஸ் போயிடும் சார்" என்றாள்.

"ஐ டோன்ட் மைண்ட்" என்றான்.

அவனை முறைத்தபடி அதனை வாங்கிக் கொண்டு சென்று ஃபோட்டோ காப்பி எடுத்து வந்து நீட்டினாள்.

"சரி மேசைல வச்சிடு" என்று சொல்லிக் கொண்டே, அவன் கார் கீயை எடுத்துக் கொண்டே கிளம்பி இருக்க, 'இத நாளைக்கு பண்ணி இருக்கலாம் தானே' என்று முணுமுணுத்தபடி அவளும் அவனுடன் லிஃப்ட்டில் ஏறினாள்.

அங்கே இருவரும் மட்டும் தான்.

"வீட்டுக்கு தான் போறேன், என் கூட வா" என்றான்.

"இல்ல மாட்டேன்" என்றாள்.

"உன்னை விட்டுட்டு போனா, அம்மா திட்டுவாங்க, தாலி கட்டி தொலைச்சிட்டேன், வாழ்க்கை முழுக்க பார்த்துக்கணும் ல" என்றான்.

அவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

"என்ன?" என்று கேட்டான்.

"அப்போ டைவர்ஸ் எல்லாம் கொடுக்க மாட்டிங்களா என்ன?" என்று கேட்க, "எனக்கு ஐடியா இல்லை" என்று அவளை பார்க்காமல் சொல்லிக் கொண்டே அவன் வெளியேற, "எனக்கு இருக்கு" என்றபடி அவள் பின்னே வர, "அப்போ ஜீவனாம்சம் மாசம் பத்து லட்சம் கொடு" என்றான்.

"இது என்ன அநியாயமா இருக்கு?" என்று அவள் முணுமுணுத்தபடி அவனை பின் தொடர்ந்து வந்தவள், அவன் காரில் ஏறியும் கொண்டாள்.

"யாரும் பார்த்து இருக்க மாட்டாங்களே" என்று கேட்டாள்.

"பார்த்தா போல உனக்கு என்ன? லிஃப்ட் கேட்டேன்னு சொல்லிடு" என்றான்.

"இன்ஸ்டன்ட் மாப்பிள்ளைன்னு பார்த்தா, இன்ஸ்டன்ட் ஆஹ் ஐடியா எல்லாம் வேற இருக்கா?" என்று அவள் கேட்க, இப்போது அவனுக்கு மெல்லிய சிரிப்பு இதழ்களுக்குள்...

அவள் தான் மனைவி என்று முடிவு எடுத்து விட்டான்.

கொஞ்சம் கொஞ்சமாக அவனை மீறி ஒரு வித ஈர்ப்பு அவளிடம்...

அதுவும் இப்படி துடுக்கு தனமாக பேசுவதை பார்த்து இன்னுமே பிடித்து போனது...

முக்கியமாக அவள் இன்று மாலினியிடன் பேசியது அவன் காதை வந்து அடைந்தது...

மொத்தமாக வீழ்ந்தே விட்ட நிலைமை தான் அவனுக்கு...

ஏதோ ஒன்று அவனை அவள் பால் ஈர்த்துக் கொண்டு இருக்க, வண்டியை ஓட்டிக் கொண்டே கடைக்கண்ணால் அவளை பார்த்தான்.

ஜன்னலினூடு பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.

புடவை அணிந்து, முடியை பின்னி விட்டு, இருந்தாள்.

பக்கத்து வீட்டு பெண்ணின் தோற்றம்...

அவள் கொஞ்சம் பூசிய தோற்றம் என்பதால், கன்னங்கள் உப்பி இருந்தன...

பெண் என்றால் செய்து வைத்த சிலை போல இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தவனுக்கு இவள் சிலையாக தான் தெரிந்தாள்.

இப்படி ஒரே நாளில் அவளிடம் மனதை பறி கொடுப்பான் என்று அவன் நினைத்ததே இல்லை...

அவளது தன்னம்பிக்கை, தைரியமான பேச்சு என்று எல்லாவற்றிலும் ஈர்த்துக் கொண்டவன் கண்களுக்கு அவள் இப்போது பேரழகி தான்.

ஆனாலும் சட்டென 'சேர்ந்து வாழ வா' என்று அழைக்க தயக்கமாக இருந்தது...

முதலில் அவன் ஈகோ இடம் கொடுக்கவில்லை...

அடுத்தது, அவளுக்கு தன்னை பிடித்த போலவே தெரியவில்லை...

கேட்டு இல்லை என்று சொல்லும் அவமானத்தை அவன் சுமக்கவும் தயாராகவில்லை...

கொஞ்சம் காத்துக் கொண்டு இருப்பதில் தப்பில்லை என்று தோன்றியது...

தாலி கட்டிய கணமே, அவளை தவிர வேறு பெண்ணை பார்ப்பது இல்லை என்று முடிவே எடுத்து விட்டான்...

அதனாலேயே அவளை உற்று நோக்க ஆரம்பித்து முதல் நாளிலேயே மொத்தமாக ஈர்த்தும் விட்டாள்.

சட்டென எல்லாரையும் ஒரே பார்வையில் ஈர்த்து விடும் அவனுக்கு, அவளை எப்படி ஈர்ப்பது என்பது தான் பெரிய சவாலாகவே இருந்தது...

என்னவோ எதிர்பார்த்தான், என்னவோ நடந்து கொண்டு இருக்கிறது...

மென் சிரிப்புடனேயே காரை வீட்டை நோக்கி செலுத்தி இருந்தான்.
 

CRVS2797

Active member
இன்ஸ்டன்ட் மாப்பிள்ளை !
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மூ
(அத்தியாயம் - 4)


எஸ்.. அழகுக்கு வரை முறையே கிடையாது, காக்காவும் அழகு தான், கிளியும் அழகு தான், கூவுற குயிலும் அழகு தான்.
முக்கியமா மனசுத் தான் ரொம்ப அழகா தெரியணும். இது தெரியாம லூஸ் டாக்கிங் விட்டு
இப்ப பேந்த பேந்த முழிச்சிட்டிரு ராவந்த். உன் மனசுல அவ இடம் புடிச்சிட்டா, இனி அவ மனசுல நீ இடம் புடிக்க தலைகீழ நின்னு தான் தண்ணீ குடிக்கணும் போல.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top