ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆத்விகா பொம்முவின் நிறைவடைந்த நாவல்களுக்கான விமர்சனங்கள்

வேட்டையாடு விளையாடு கதையில் மிகவும் ரசிக்க வைத்த ஜோடி தீரன் குழலி....

காதல் இல்லையென்று காதலில் முழுமூச்சாய் வாழ்ந்துவாழ்க்கையை சுவாரஷ்யமாய் நகர்ந்திச் சென்ற காதல் ஜோடிகள்...

படிக்கும் போதே சிரிக்க வைத்தது இருவரின் சேட்டைகளும்...

மிகவும் அருமையான கதைகள் உங்களோடது...

கொஞ்சம் கூட சலிப்பில்லாது வாசிக்கவும் அடுத்த யூடிக்காக காத்திருந்து வாசிக்க தூண்டுவதும் உங்கள் கதைகளே...

????நீங்கள் இன்னும் இன்னும் இது போல நிறைய கதைகள் எழுதனும்...வாழ்த்துக்கள் ...பொம்மு அக்கா??????
thank u ma
 
விளையாடு வேட்டையாடு தி கன்க்ளூஷன்!


நாவலாசிரியர் : ஆத்விகா பொம்மு

காதலுக்காகவே நான் உனக்கு - "இந்திரஜித்"
உன் காதலாலே நான் - "சுலோச்சனா"
நம் காதலால் இருவர் - "அகர்னண், அங்கதன்."

உணர்வில்லாமல் கிடந்தவனில் காதலை தூவி கிளர்ந்தெழச் செய்தவள் நீயடி! - "கர்ணன்"
ஏமாற்றிய என்னை உன் அதிரடிக் காதலில் தொலைந்து போக வைத்தவன் நீயடா! - "வைஷாலி"
நம் காதலுக்கே அதிரடியாய் - "விருஷா, ஆகாஷ்"

காதலுக்காய் நேர்மையை விட்டவன் நானடி! - "ருத்ரன்"
உன் காதலில் கரைந்து மூழ்கியே போனவள் நானடா! - "லீலா"
நம் காதல் ஆழத்திலிருந்து இருவர் - "நயனா, தான்யா"

தந்தைக்காய் என்னை விலை பேசியவள் நீ! இருந்தும் உன் மேல் நான் வைத்த காதல் சொல்லில் அடங்கா உணர்வையும் தாண்டியது - "அர்ஜுன்"
தந்தை பாசத்தில் மூழ்கி இருந்தவள் காதலை பகடையாக்கினேன்! செய்த தவறில் உன் சுடு சொற்களுமே எனக்கு காதல் வார்த்தைகளாய்... - "சுபத்ரா "
வலி துரோகம் தாண்டிய தூய நேசம் தந்த பரிசு - "அபிமன்யு, நித்யா"

நெஞ்சில் ஈரமே இல்லை என திட்டிய போதும் காதலால் காதலையே வெல்ல வைத்தவள் நீ! - "தீரன்"
காதலுக்கே காதலை கற்றுக் கொடுத்தவன் நீ! - "கார்குழலி"
காதலிக்கவில்லை ஆனால் காதலிக்கிறேன் என நீ தந்த பரிசு - "வித்யுத், சாஹித்யா"

காதலிக்கப்பட்டதற்காய் முதன் முறை கர்வம் கொண்டேனடி! - "ரணா"
உனக்கே உனக்கான காதலுக்காய் என்றும் நான் உன் - "ஜான்சி"

பலி தீர்க்க காத்திருக்கும் வேங்கை நான் - "ரோஹித்"

ஆடும் ஆட்டச் சுழலில் சிக்கித் தவிக்க நாம்!!!

நன்றி.
ரிஷி.

25-06-2021.
 

Attachments

  • IMG_20210607_135337.jpg
    IMG_20210607_135337.jpg
    249.8 KB · Views: 2
இரெட்டைக் கதிரே!

Screenshot_20210930_201438.jpg

நாவலாசிரியர் : ஆத்விகா பொம்மு

ஹீரோ : அகர்னண், அங்கதன்
ஹீரோயின் : தான்யா, நயனா

அழகான காதல் கதை...

சிறு வயதுக் காதல் விருட்சமாய் வளர்ந்து நிற்க மனதை திறந்து காட்டியதில் தோழ்வி என்ற ஒரு சொல்லே அவளால் தான் அவனுக்கு அறிமுகம் போலும்!

தமையனின் அன்பை முழுதாகப் பெற்று அவனால் ஜெயிக்க வைக்கப்பட்டவன் மறுத்த காதலில் துவண்டு போக மீண்டும் மீண்டும் தோள் கொடுத்தது சகோதரம் எனும் ஆழமான உறவு!

காதலை புதைத்து விட்டு தம்பிக்காக தியாகியானவன் பாவையின் மீது பித்தாகிப் போனது தான் காதலின் விந்தையோ???

பட்டாம் பூச்சியாய் சுற்றித் திரிந்தவளை தன் காதலினால் சுருட்டிக் கொண்டான் காளை!

சுதந்திரம் தேடாமல் அவனுள் மட்டுமே அடங்கிப் போனவளுள் தான் எத்தனை காதல் அவன் மீது!

அடுத்தவர் மனதை அறிந்து நடப்பவளுக்கு அவள் மனதை அறிந்து நடப்பவன் அவளவனாய் அவன் என்றும்!

தம்பியின் காதலின் வெற்றிக்கு வழியமைத்தவன் வலி மறந்து விலகி விட தமக்கையின் வாழ்க்கையை தான் பறித்துக் கொண்டதாய் பரிதவித்துப் போனாள் காரிகை!

குற்றவுணர்ச்சியில் அவள் விலக சிறு விலகலை கூட தாங்க முடியாதவன் அவள் பெரும் பிழையில் ஒதுக்கியே வைத்து விட்டது தான் விதியின் சதியோ???

வலி மறந்து அவளவனாய் மாறியவன் என்பதை விட வலி மறக்கச் செய்து அவளவனாய் மாற்றியமைத்த அவள் மனம் பேரழகு!

காதல் அழகில் அல்ல மனம் என்ற ஒன்றே அனைத்திற்குமான விடையாய் அவள் என்றும் அவனின் "டான்"

அதிரடிக்கு மட்டுமல்ல காதலில் அவனை வீழ்த்தி மனதை புரிய வைத்தவர்களும் இவளால் "டான்" எனும் பெயராய் மாறிப் போன விந்தை உங்கள் எழுத்து நடைக்கே சமர்ப்பணம் அக்கா!

நீங்கள் மென்மேலும் வளர வேண்டுமென்ற பிரார்த்தனையுடன்,

நன்றி.
ரிஷி.

27-06-2021.
 
#review

என் காதல் இ(ம்)சை நீயடா(டி)

FB_IMG_1633013236609.jpg

நாவலாசிரியர் : ஆத்விகா பொம்மு

ஹீரோ : அபிமன்யு
ஹீரோயின் : உத்ரா

அழுத்தமான காதல் கதை....

உன்னை எனக்குள் திணித்து அடிமையாக்கி விட்டது போல் உணர்ந்திருந்த எனக்கு உன்னை விலக்கி வைத்து நகர்ந்து விடுவதில் அப்படி ஒரு சந்தோஷம்!

ஆறு வயதிலிருந்து உன் பெயரை மட்டுமே நெஞ்சுக்குள் பொத்தி பாதுகாத்து வந்த எனக்கு நீ அடுத்த பெண்களுடன் பேசும் போது வந்த வலி அலாதியானது!

நான் செய்த தவறு உன்னை தவறு செய்யத் தூண்டக் காரணமாய் இருக்குமென தெரிந்திருந்தால் எப்போதோ காதல் செய்திருப்பேனோ என்னவோ???

தவறு செய்து விட்டு விழிக்கும் குழந்தையாய் நான் மன்றாடிய போது உன் கண்களில் தெரிந்த வண்மத்தில் உண்மையில் நொறுங்கியது என் ஒட்டுமொத்த காதல் நெஞ்சமும்!!!

கூடவே இருந்த போது தெரியாத உன் இருப்பு நான் உன்னை விட்டு விலகிய போது அனுமதியில்லாமலேயே வந்து ஒட்டிக் கொள்ள விடையறியா புதிராய் என்னுள் நீ மட்டும்!

நீ சிதற விட்ட வார்த்தைகள் உன்னை விட்டு தள்ளி இருக்க தூண்டினாலும் பல ஆண்டு காதல் நெஞ்சம் உன் ஒற்றை அன்புச் சொல்லில் வீழ்ந்து போனது தான் காதலின் விந்தை போலும்!

உந்தன் காதல் ஆழத்தை ரசிக்க காத்திருப்பவனா(ளா)ய் என்றும் நான் உந்தன் காதல் இம்சை!!!

நீங்கள் மென்மேலும் வளர வேண்டுமென்ற பிரார்த்தனையுடன்,

நன்றி.
ரிஷி.

12-07-2021.

 
Top