அத்தியாயம் 5:
தனது அறையில் சுகமாக உறங்கி கொண்டு இருந்தான் ஷ்யாம் , திடீரென்று கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு பதறி கண் விழித்தான்
போனில் நேரத்தை பார்க்க மணி ஒன்று என்று காட்டியது “இந்த நேரத்துல யாரு” என்று தனக்கு தானே கேட்டு கொண்டே அரை தூக்கத்தில் சென்று கதவை திறந்தான்
வெளியே விஷ்வா தான் நின்று இருந்தான் “என்ன விஷ்வா இந்த நேரத்துல” தூக்கம் வழிந்து கொண்டே கேட்க
“ சீக்கிரம் கிளம்பி வா போலாம்..” என்றான் அவசரமாக “எங்க போறோம்…” என்க “அந்த பொண்ணை பார்க்க” என்றான் “ அதான் அந்த காலைல பாத்த பொண்ணு..” எங்கோ பார்த்து கொண்டு அவன் சொல்ல
“ அந்த பொண்ணு இந்நேரம் கஸ்டமர் கூட இருப்பா , இப்போ முடியாது அப்புறம் போலாம்” என்று சொல்லி கொண்டு அவன் நகர
அவன் சட்டையை பிடித்து இழுத்தவன் “ அந்த பொண்ணு இல்லைடா பிரியாவை பார்க்க..” என்றதும்
தூக்கத்தில் இருந்து விழித்தவன் “ என்னடா சொல்றே இந்த நேரத்துல நீ ஏன் அந்த பொண்ணை பார்க்க போறே..” அதிர்ச்சியாக அவன் கேட்க
“நீ கிளம்பி வா டா சும்மா கேள்வி கேட்காத..” என்றான் சிடு சிதுவென “ டேய் அந்த பொண்ணு இப்போ வீட்ல இருப்பா, பார்த்திபன் வீட்டுக்கு உள்ள போறது ஒன்னும் அவ்ளோ ஈசி இல்லை” என்க
“ அதை நான் பாத்துக்கிறேன் நீ வா..” என்று அவன் நின்ற கோலத்துலையே இழுத்து கொண்டு சென்றான்
கார் அந்த பெரிய வீட்டுக்கு பக்கத்தில் வந்து நின்றது பெரிய பிரமாண்டமான வீடு தான் வெளியே இருந்தவாறே வீட்டினை அளவிட்டான் “விஷ்வா என்ன பண்ண போற இது நல்லதுக்கு இல்லை யாராவது பார்த்தா மாட்டிப்போம் அப்புறம் பெரிய பிரச்சனை ஆயிடும்” என்று ஷ்யாம் அறிவுரை சொல்ல
“ மொத்தம் நாலு வாட்ச்மேன் தான் அவங்கள திசை திருப்பீட்டா ஈசி தான், ஆன அவ ரூம் எங்க இருக்குன்னு தான் தெரியல” அவன் சொல்வதை கேட்காமல் அவன் பாட்டுக்கு சொல்ல
கடுப்பான ஷ்யாம் “ நான் என்ன பேசுறேன் நீ என்ன சொல்ற, வாடா போயிடலாம்” என்க அவனோ கரை கிளப்பி விட்டை சுற்றி வந்தான்
“ விஷ்வா மணி ஒண்ணு இந்த நேரத்துல எல்லாரும் தூங்கி இருப்பாங்க , உன்னால எப்படி ரூம் கண்டு பிடிக்க முடியும் நான் சொல்றதை கேளு வா கிளம்பிடலாம்” என்றான்
ஆனால் அவன் கண்கள் பளிச்சிட்டது ஆம் அவன் தேடியது அவன் கண்ணில் தென்பட்டது உதட்டில் சிரிப்பு வர அவன் பார்வை போகும் திசையை திரும்பி பார்த்தான்
அங்கே பிரியா அவள் அறை பால்கனியில் அமர்ந்து வெளியே வானை வெறித்து பார்த்து அமர்ந்து இருந்தாள்
“ இந்த பொண்ணு எதுக்கு இந்த நேரத்துல இங்க உக்கார்ந்து இருக்கு” என்று ஷ்யாம் திட்ட , அதை எல்லாம் கேட்க நிற்காமல் விஷ்வா காரில் இருந்து இறங்கி இருந்தான்
“ டேய் …. டேய் எங்க டா போறே… என்னால அடி வாங்க முடியாது” என்று ஷ்யாம் பதற
திரும்பி அவனை பார்த்தவன் “ நீ இங்கேயே இரு நான் பாத்துக்கிறேன்…” என்றவன் திரும்பி நிற்காமல் சென்று விட்டான்
அதை தொடர்ந்து ஷ்யாம் கத்தியது காற்றில் தான் கரைந்தது
விஷ்வா அங்கே மதில் சுவர் பக்கம் வந்தான் பெரிய சுவர் எப்படி ஏறுவது என்று அக்கம் பக்கம் பார்த்தான் எந்த வழியும் இல்லை சற்று யோசித்தவன் பின்னால் அடி எடுத்து வைத்து சென்றான்
கொஞ்ச தூரம் சென்றவன் “ ஊஃப் …. ஸ்டே காம்..” என்று தன்னை நிலை படுத்தி விட்டு வேகமாக ஓடி குதித்தான் சுவரின் மேல் பகுதியில் பிடித்தவன் அதில் ஏறி அந்த பக்கம் குதித்தான்
அதை பார்த்து கொண்டு இருந்த ஷ்யாம் “ ஆத்தாடி இவன் நமக்கும் சேர்த்து அடி வாங்கி தராமல் விடமாட்டான்
ஏறி குதித்தவன் எழுந்து அங்கே இருந்த புதர் பக்கத்தில் சென்று நின்று நோட்டம் விட்டான் , அவன் நல்ல நேரத்துக்கு காவலாளிகள் அந்த பக்கம் நின்று பேசி கொண்டு இருக்க
வேகமாக அங்கே இருந்து நகர்ந்தவன் அவள் அறைக்கு கீழே வந்து நின்றான், இனி மேலே ஏறவேண்டும் ஆனால் எப்படி
மேலே ஏறுவது வீட்டை ஒட்டி ஒரு பெரிய மரம் நின்று இருக்க அதன் கிளை அவள் அறை பால்கனி பக்கத்தில் இருந்தது அங்கே இருந்து குதித்தால் அங்கு செல்லலாம்
முடிவெடுத்தவன் அடுத்த கணமே மரத்தில் ஏறி இருந்தான் , வேகமாக மேலே ஏறியவன் அவள் அறை பால்கனியை அடைந்ததும் எகிறி குதித்து விட்டான்
மேலே வானத்தை வெறித்து பார்த்து கொண்டு இருந்தவள் சட்டென்று அவள் பக்கம் ஏதோ வந்து விழவும் “ ஆ…. “ என்று கத்தி கொண்டே எழ சட்டென்று எட்டி அவள் வாயை பொத்தினான்
அப்போது தான் அது அவன் தான் என்று கண்டு கொண்டாள்
விழிகள் விரிய அவனிடம் இருந்து விடுபட போராட, அதே நேரம் சத்தம் கேட்டு காவலாளிகள் அந்த பக்கம் வர
அவளை அழைத்து கொண்டு மறைவாக சென்று நின்றான், சுவற்றில் அவளை சாயவைத்தவன் அவள் வாயை பொத்தி கொண்டு அவள் மேல் சாய்ந்து நின்றவன் “ கத்தாம அமைதியா இருந்தா பேசிட்டு போயிடுவேன், இல்லை அப்புறம் காலைல நடந்தது தான் நடக்கும்” என்க
பெண்ணவள் அதிர்ந்து தான் போனாள் “ பேசமாட்டேல..” என்க இல்லை என அவசரமாக தலை அசைத்தாள்
அப்போது கீழே நின்று இருந்த காவலாளிகளும் எதுவும் இல்லை என்று திரும்பி சென்று விட
நிம்மதி பெருமூச்சு விட்டவன் , திரும்பி நிதானமாக அவளை பார்த்தான்
கண்கள் கலங்கி அழுது வீங்கி இருந்தாள் நிறைய நேரம் அழுது இருப்பாள் போலும் “ எதுக்கு இப்படி அழுதுகிட்டு இருக்க” அவளோ மீண்டும் கண்ணை கசக்கினாள்
“மச்… அதான் எதுவும் பண்ணமாட்டேன்னு சொன்னேன்ல எதுக்கு அழுவுற” என்க “ நான் யார் கிட்டயும் சொல்லமாட்டேன் பிளீஸ் போடுங்க, எனக்கு பயமா இருக்கு” என்றாள் விமலுடன்
அவளை விட்டு தள்ளி நின்றவன் “ ஒண்ணும் பண்ணல டி …. உன்ன பார்க்கணும் போல இருந்துச்சு அதான் வந்தேன்” என்றான்
“ நீங்க எதுக்கு என்ன பாக்கணும்” என்க “ என்னை முதல் முறை ஒரு பொண்ணு கை நீட்டி அரஞ்சு இருக்கா , எப்படி தூக்கம் வரும் அதான் நீ தூங்கிட்டு இருந்தா எழுப்பி விடலாம்னு வந்தேன் “ என்றான்
அவன் நேரே கையை கூப்பியவள் “ பிளீஸ் நான் தெரியாம பண்ணிட்டேன் விடுங்களேன்” என்றாள்
“ எப்படி விட சொல்ற , அதெல்லாம் விட முடியாது…” என்றவன் அவளை கூர்ந்து நோக்க துடிக்கும் இதழ்களை தனதாக்க ஆவல் பிறந்தது
எதுவும் செய்யமாட்டேன் என்று அவளிடம் சொன்னாலும் மனம் அதில் மீண்டும் சாய இன்னும் நெருங்கினான்
அதில் பயந்த பெண்ணவள் மீண்டும் நடுங்க “ பிளீஸ் என்னை வேணா ரெண்டு அடி அடிச்சுக்கோங்க” என்று கன்னத்தை காட்ட
அங்கே ஏற்கனவே ஐந்து விரல் அடையாளங்கள் அச்சு போல் பதிந்து இருக்க அவன் மோக வலை சட்டென்று அறுபட
“ யார் அடிச்சது…” என்றான் குரல் இறுக்கி இருந்தது அவளோ அவனை பார்த்து “ அது.,.” என்று இழுக்க
“யாருன்னு கேக்குறேன் ல” என்றான் மீண்டும் கழுத்து நரம்புகள் புடைத்து நின்றது அவனை பார்க்கவே பெண்ணவளுக்கு உதறல் எடுக்க
“ அது… அன்… அண்ணா… தான்” என்றாள் திக்கி திணறி “ எதுக்கு…” அவன் கேட்க “ காசை தொலைச்சதுக்கு” என்றாள்
ஆம் இன்று வேலை விட்டு வீட்டில் அவள் வந்ததும் முகம் இறுகி போய் அமர்ந்து இருந்தான் பார்த்திபன்
அவள் அவனை கண்டும் காணாதது போல் நகர்ந்து செல்ல
“ நில்லுடி…” என்றான் அவளோ அதிர்ந்து நிற்க “ உன்ன நம்பி ஒரு வேலையை குடுத்தா அதை ஒழுங்கா பண்ண தெரியாதா உனக்கு…” என்று சீற
அவன் சத்தத்தை கேட்டு அவ்விடம் வந்த அவன் மனைவி மீனா “ என்ன என்னாச்சு இவ இன்னைக்கு என்ன பண்ணா” என கேட்டு கொண்டே வந்தாள்
அவளுக்கோ இவளை பார்ப்பதே பிடிக்காது பார்த்திபன் சொன்னதால் தான் வீட்டுக்குள்ளையே வைத்து இருக்கிறாள்
கோபமாக பிரியாவை பார்த்தவர் “ பத்து லட்சத்தை தொலைச்சிட்டு வந்து நிக்கிற…” என்க
நெஞ்சில் கையை வைத்தவர் “ பத்து லச்சமா காசு என்ன மரத்துலையா காய்க்குது இப்படி தொலைச்சிட்டு வந்து நிக்கிற, கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு” என்று அவள் பாட்டுக்கு கத்த
“ காசு கிடைச்சிருச்சு மீனா விஷ்வா கொண்டு வந்து குடித்தான்” என்க
“ அதனால அப்படியே விடுறதா அவ பண்ண தப்புக்கு தண்டனை வேண்டாம்” என்றவள் அவள் முடியை கொத்தாக பற்ற வலியில் முகம் சுழித்தாள் பெண்ணவள்
“ விடுங்க … அண்ணி வலிக்குது..” என்று அவள் கெஞ்ச “ உனக்கு சோறு போடுறதே பெரிய விஷயம் இதுல காசை வேற தொலைக்குற அதுக்கு தண்டன வேண்டாமா” என்று மீண்டும் முறுக்க
அவளுக்கோ முடி பிய்ந்து அவள் கையோடு சென்று விடுமோ என்ற வலி ஒரு வேகத்தில் அவர் கையை தட்டி விட
அவர் சுதாகரிக்க வில்லை போலும் தடுமாறி கீழே விழுந்தாள்
உடனே அவள் பதறி தூக்க போக “ அஆஅ…” என்ற அலறல் அந்த வீடு முழுவன் எதிர் ஒலிக்க அவள் கன்னத்தில் பளாரென்று அறைந்து இருந்தான் பிரபாகரன்
அவளோ கன்னத்தில் கை வைத்து அதிர்ந்து பார்க்க கண்கள் சிவக்க அவள் முன் ருத்ரா மூர்த்தியாக நின்று இருந்தான் பார்த்திபன்
குனிந்து மனைவியை தூக்கி நிறுத்தியவர் “ எவ்ளோ தைரியம் இருந்து இருந்தா என் மனைவியை கீழே தள்ளி விட்டு இருப்ப உன்னை” என்றவன் மீண்டும் பெண்ணவள் கன்னத்தில் அறைந்து இருந்தான்
“ இன்னைக்கு நைட்டு உனக்கு சாப்பாடே இல்லை போடி என் கண்ணு முன்னால இருந்து” என்று சொல்ல
பெண்ணவளும் அழுது கொண்டே அங்கே இருந்து ஓடி சென்று விட்டாள்
“ அப்போவே சொன்னேன் இவளை வீட்டுக்கு கொண்டு வர வேண்டாம்னு இப்போ பாருங்க ஏன் மேலேயே கையை வச்சுட்டா..” என்று மீனா சொல்ல
“ பொறு மீனா அவளை நான் ஒன்னும் சும்மா இங்க வச்சு இருக்கல அவளை வச்சு நிறைய பிளான் பண்ணி இருக்கேன் அது வரைக்கும் பொறுமையா இருப்போம்” என்று சொன்னவன் கண்களில் அப்படி ஒரு அனல்
அவள் சொன்னதை கேட்ட விஷ்வாவுக்கு அப்படி ஒரு கோபம் பார்த்திபன் மேல்
தொடரும்……
உங்கள் கருத்துக்களை கீழே இருக்கும் லிங்கில் பதிவு இடலாம்...