ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என்னோடு வா அன்பே....-கதை திரி

Status
Not open for further replies.

Nila Thendral

New member
Wonderland writer
என்னோடு வா அன்பே……


அத்தியாயம் 1:


“கடைசியா… கேக்குறேன் உன் முடிவிலை மாற்றமே இல்லையா…” என்று தனது முன் இருந்த சோஃபாவில் கால்மேல் கால் போட்டு கொண்டு கம்பீரமாக அமர்ந்து இருந்த விஷ்வ வரதனை பார்த்து கேட்டான் ஷியாம்


“நோ….. இது தான் என் முடிவு…” என்று அழுத்தமும் கம்பீரவுமாக வந்தது அவனின் வார்த்தைகள்
“ஒரு தடவ நல்லா யோசிடா….. வெர்ஜினிட்டி ஒரு தடவ போனா மறுபடியும் கிடைக்காதுடா….” என்று ஷ்யாம் மீண்டும் சொல்ல


“ வெர்ஜினிட்டி வச்சு பூஜை பண்ணவா முடியும், இல்லை தானே அதான்…. இந்த பொண்ணுங்க எப்படி இருப்பாங்கேனு பாக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்றவன் குரலில் மோகம் மட்டும்


“ பொண்ணு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க கல்யாணம் பண்ணிக்காலாமே, இப்படி இந்த மாதிரி பொண்ணுங்க கிட்ட தான் போய் தொலைக்கணுமா….” விடாமல் அவன் மண்டையை கழுவ பேசி கொண்டு இருந்தான் அவன் உயிர் நண்பன் மற்றும் அவன் PA ஷ்யாம்


நண்பன் இப்படி ஒரு தவறான பெண்ணுடன் தவறான உறவை வைக்க போகிறான் என்பதை ஏற்க்க முடியாமல் தவித்து கொண்டு இருந்தான் ஷ்யாம்


“ சை….. கல்யாணமா யார இந்த பொண்ணுங்களையா…. நீயும் தான் பாக்கிரியே…. ஏதாவது பணக்காரன் மாட்டுவானானு வந்து மேலேயே விழுவாங்க நாம தள்ளி விட்டா அடுத்தவன் மேலே போய் விழுவாங்க , இதுங்கள கல்யாணம் பண்ணி என்ன பண்ண அதுக்கு இதுவே மேல்” என்றவன் சலித்து கொண்டு எழுந்து மேஜை மேல் இருந்த ஸ்ப்ரே பாட்டிலை எடுத்து தன் மேல் அடித்து கொள்ள


“ நல்ல பொண்ணுங்களும் இருக்காங்க.. அதான் அம்மா பொண்ணு பாக்குறாங்களே கொஞ்சம் யோசிடா” என்க


அவனை ஏறிட்டு பார்த்தவன் “ அம்மா பாக்குறாங்க தான் எல்லாமே நம்ம ஸ்டேட்டஸ்கு ஏத்த மாதிரி தான் பாக்குறாங்க, நீயே சொல்லு இப்போ எந்த பெரிய வீட்டு பொண்ணு அடக்க ஒடுக்கமா இருக்காங்க ….. எல்லாம் பின்ஜிலையே… பழுத்து நிக்குதுங்க அதுங்க கூட கல்யாணம் குழந்தை இதெல்லாம் சரி வராது …. அதுக்கு தேவையான நேரம் இப்படி ஏதாவது பொண்ணை கூப்பிடணும் அனுபவிக்கனும் காசை குடுத்து அனுப்பணும் அது தான் நல்லது” என்று சொல்லி தோளை குலுக்க


ஷ்யாமுக்கு சலிப்பாக இருந்தது எப்படியும் அவன் முடிவை எடுத்துவிட்டான் இனி நான் சொன்னால் கேட்க மாட்டான் என புரிந்து கொண்டவன் பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டான்


அப்போது அவன் அலைபேசி அலற எடுத்து பார்த்தான் “ அந்த பொண்ணு வந்திடுச்சு போல போய் கூட்டிட்டு வரேன்..” என்றவன் இரண்டு அடி சென்று திரும்பி விஷ்வாவை பார்த்து “ கடைசியா என்னை மாமா வேலை பார்க்க வச்சுட்டே இல்லை..” என்று கேட்க
விஷ்வா சத்தமாக சிரித்து கொண்டான் , அதை கண்டவன் எரிச்சலாகி வெளியே சென்று விட்டான்


விஷ்வா விஷ்வ வரதன் வரதன் குரூப்ஸ் ஆஃப் கம்பெனியின் வாரிசு பாட்டன் முப்பாட்டன் காலத்தில் இருந்தே பெயர் போன குடும்பம்


வீட்டின் ஒரே பிள்ளை எல்லாவற்றிலும் கை தேர்ந்தவன் இப்போது வரதன் குரூப்ஸ் ஐ தூக்கி நிறுத்தும் பொறுப்பும் அவனுக்கு உண்டு


தாத்தா சொல்லே மந்திரம் என்று இருக்கும் விஷ்வாவுக்கு அவரை போலவே அழுத்தம் கோபம் என்று எல்லாமே உண்டு


சின்ன வயதில் இருந்தே பிசினஸ் செய்யும் அப்பாவையும் தத்தாவையும் பார்த்து வளர்ந்தவனுக்கு அது மட்டுமே பிடித்தம் ஆகி போனது


பெண்கள் வெறுப்பு என்று இல்லை ஆனால் அவனிடம் வரும் பெண்கள் எல்லாமே காசுக்கும் காமத்துக்கும் வேண்டி வருகிறவர்கள் அவர்களை துச்சமாக எண்ணி ஒதுக்கி விடுவான்
அவர்களை போன்ற பெண்களை கண்டு வளர்ந்தவனுக்கு இந்த காதல் கல்யாணம் குழந்தை என எதிலும் விருப்பம் இல்லை


பெண்களை மோகத்துடன் பார்த்து இருக்கிறான் ஆனால் தீண்ட எண்ணியது இல்லை, திருமணமே வேண்டாம் என்று அன்னை கொண்டு வந்த எல்லா பெண்களையும் விரட்டியவனுக்கு


இந்த மோஹ உணர்வை கட்டுப்படுத்தும் வழி தான் தெரியவில்லை, வயது முப்பதை தொட இருக்கிறது இன்று வரை கன்னி பையனாகவே இருந்து விட்டான்


இதற்கு மேலும் முடியவில்லை, திருமணம் செய்ய போவது இல்லை என்று முடிவை எடுத்தவன் ஒரு விலை மாதுவிடம் சென்று தனது மோகத்தை தீர்த்து கொள்ளலாம் என்று முடிவை எடுத்து விட்டான்


அதற்காக அவனது கெஸ்ட் ஹவுசில் இன்று வந்து இருக்கிறான்


கண்ணாடி முன் நின்று தான் அணிந்து இருந்த சட்டை மேல் தனது படிக்கட்டு தேகத்தை வருடியவன் கண்ணாடியோடு தன்னை பார்த்து “ ஹன்சாம் மேன்….. இன்னைக்கு ஒரு புடி…” என்று வாய் விட்டு சொல்லி சிரிக்க


“ சார்….” என்ற ஒரு இனிமையான குரல் சற்று பதட்டம் கலந்து கேட்க
கண்ணாடியோடு வாசலில் நிற்கும் பெண்ணை பார்த்தான் படபடக்கும் விழிகளோடு சற்று பதட்டமாக அவனை பயம் கலர்ந்த பார்வை பார்த்து நின்றாள்
அவனோ திரும்பி அவளை பார்த்தான் கண்கள் மின்னியது


மெரூன் நிற சல்வார் அணிந்து இருந்தாள் ஷால் இரு பக்கமாக போட்டு உடலை மறைத்து இருந்தாள் சுண்டினால் ரத்தம் வரும் அளவுக்கு சிவந்த நிறம், பிங்க் நிற உதடு ,பெரிய கண்ணு முகத்தில் எந்த அலங்காரமும் இல்லை முடியியை மொத்தமாக ஒரு கிளிப்பில் அடக்கி இருக்க அது இடை வரை நீண்டது


கண்கள் மெல்ல கீழ் இறங்கியது எடுப்பான அங்க வளைவுகள் பார்த்ததும் அவனை போதை ஏற்றவைக்க மேஜை மேல் சாய்ந்து நின்று கொண்டு இரு விரல்கள் அசைத்து வா என்பதை போல் அழைக்க


அவளும் சற்று தயங்கி கொண்டு மெல்ல நடந்து அவன் முன் வந்தாள் முகம் விளறி பயம் அப்பட்டமாக தெரிய
கையில் இருந்த செக்சை அவன் முன் நீட்டினாள் “சைன் பண்ணுங்க சார்…, ஷ்யாம் சார் தான் குடுத்தார்” என்று சொல்ல


செக்கை வாங்கி பார்த்தான் அவனின் செக் தான் ஷ்யாம் குடுத்து இருக்கிறான் அதில் ரூபாய் பத்து லட்சம் என்று இருக்க ஏறிட்டு அவளை தலை முதல் கால்வரை பார்த்தவன் “ ஒர்த் தான்..” என்று மனதில் நினைத்து கொண்டான்


மேஜை மேல் இருந்த பேனாவை எடுத்து அதில் கையெழுத்து போட்டு கொண்டே அவள் பயந்த முகத்தை பார்த்தவன் “ வேலைக்கு புதுசா…” என்று அவளிடம் கேட்க


விழிகளை விரித்தவள் “ உங்களுக்கு எப்படி தெரியும்..” என்று கேட்க மந்தஹாசமாக சிரித்தவன் “அதான் திரு திருணு முழுக்கிரியே அதிலேயே தெரியுது..” என்க அவளோ மழுப்பலாக ஒரு சிரிப்பை சிரித்தாள்


விரிந்த அந்த பன்னீர் இதழை இப்போதே கடித்து சுவைக்க அவன் எண்ணம் சொல்ல “ அலஞ்சானு நெனச்சிடுவா கண்ட்ரோல்..” என்று தனக்கு தானே சொன்னவன்


“ உன் பேரு என்ன…” என்று கேட்டு கொண்டே அவளை அளவிட்டான்
காதில் ஒட்டியவாறு பூ வடிவில் ஒரு சின்ன தங்க கம்மல், மெல்லிய தங்க சங்கிலி, கையில் ஒரு பிரேசிலில் அதும் தங்கத்தில் தான் இன்னொரு கையில் வாட்ச் பார்த்தால் பெரிய வீட்டு பெண் போல இருக்கிறாள் ஆனால் எதற்கு இந்த தொழில் என்ற எண்ணம் வர


அவளோ “ பிரியா…., தான்க்யூ சார் நான் கிளம்புறேன்…” என்று நகர போக
சட்டென்று அவள் கையை பற்றி தடுத்தவன் “ ஹேய் என்ன காசு வாங்கிட்டு எஸ்கேப் ஆகலாம்னு பாக்குறிய…. வாங்குன காசுக்கு வேலை யாரு செய்வா…” என்றவன்

சட்டென்று எழுந்த கோபத்தில் அவளை இழுத்து தன் மேல் போட்டவன்
அதிரடியாக அவளின் பன்னீர் இதழ்களை கொய்து இருந்தான்


இந்த அதிரடி தாக்குதலை எதிர்பார்க்காதவள் அவனிடம் இருந்து விடுபட திமிறி கொண்டு இருக்க, அவனோ அவன் முத்தத்துக்கு தடை செய்து கொண்டு இருக்கும் அவள் இரு கைகளையும் பிடித்து பின்னால் கொண்டு சென்று அவன் ஒரு கையால் அடக்கியவன்


மறு கையால் அவள் பின் கழுத்தை பற்றி தன்னுடன் நெருக்கி கொண்டே முத்தத்தை தொடர்தான்
பெண்ணவளால் ஒரு இன்ச் கூட அடையமுடியவில்லை கண்ணீர் மட்டும் நிற்க்காமல் வழிந்து கொண்டு இருக்க
முத்தம் இட்டவாறு அவளை அப்படியே தூக்கி சென்று கட்டிலில் போட்டவன் அவள் மேல் அழுத்தம் கொடுக்க தன்னால் முடிந்தவாறு அவனிடம் இருந்து விடுபட கால்களை உதைத்து போராடி கொண்டு இருந்தாள்


ஒரு கட்டத்தில் அவள் இதழில் இருந்து விடுபட்டவன் அவள் கழுத்துக்கு இடம் பெயர அந்த சின்ன இடை வெளியை பயன் படுத்தி தன் ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டி அவனை தள்ளிவிட அவனோ கோபத்தில் மீண்டும் அவளை நெருங்க முயல ஒரே அடி தான்


அவன் கன்னம் மறு புறம் திரும்பியது , அடி பட்ட தன் கன்னத்தை தொட்டு பார்த்தவன் கண்கள் சிவக்க அவளை பார்க்க


தன்னை இங்கே இருந்து காப்பாத்தியால் போதும் என்ற எண்ணத்தில் எழுந்து ஓட பார்த்தவளை ஒரே இழுப்பில் இழுத்து மீண்டும் கட்டிலில் போட்டவனின் கொஞ்சம் இருந்த மென்மையும் காணாமல் போக அங்கே அவனுக்கு கோபம் ஆத்திரம் மட்டுமே முன்னே நின்றது அவனையே அடித்து விட்டாள் அல்லவா


அவள் போட்டிருந்த துப்பட்டாவை இழுத்து இருந்தவன் அவள் கழுத்தில் மீண்டும் முகம் புதைத்தான் ஆவேசமாக அவளோ “ பிளீஸ்… என்னை விடு டா… , ஹெல்ப்… ஹெல்ப்… விடு டா…” என்று கத்த


அவன் எங்கே கேட்டான் அவன் செயலில் தான் குறியாக இருந்தான்
சத்தம் கேட்டு அவ்விடம் ஓடி வந்த ஷ்யாம் திறந்து இருந்த அறையில் செல்ல “ விஷ்வா… என்ன டா பண்றே….. இது அந்த பொண்ணு இல்லை….” என்று கத்த
அவள் மேல் இருந்தவாறே அவன் ஷ்யாமை திரும்பி பார்க்க அங்கே அவன் பின்னே இன்னொரு பெண் நின்று இருந்தாள் சற்று அலங்காரம் செய்து மெல்லிய புடவை அணிந்த பெண் அவளை புருவம் இடுங்க பார்த்தவன் திரும்பி அவனுக்கு அடியில் நசுங்கி கொண்டிருக்கும் பிரியாவை காண அவளோ “ என்னை விடு டா… பொறுக்கி….” என்று கத்த “ ஏய்…” என்று ஒரு உறுமல் தான் அவள் அசைவும் குரலும் அடங்கி விட்டது


பயத்துடன் அவனை அவள் ஏறிட்டு பார்க்க “ யாருடி நீ…” என்றான் அவள் மேல் இருந்த கோபத்தில் உறுமி கொண்டே


“விஷ்வா இது ராஜா குரூப்ச்ல இருந்து செக் வாங்கிட்டு போக வந்த பொண்ணு, முதல அவளை விடு” என்க


“ நீ அந்த பொண்ணை கூட்டிட்டு கிளம்பு இன்னைக்கு எனக்கு இவ போதும்…” என்று அவன் வக்கிர எண்ணத்தோடு சொல்ல அதிர்ந்து கண்களை விரித்தாள் பெண்ணவள்


தொடரும்…..
 
அத்தியாயம் 2:


அவன் பேச்சில் அதிர்ந்தவள் அவன் பிடி தளர்ந்து இருப்பதை உணர்ந்து கொண்டு கால்களையும் கைகளையும் வைத்து முழு பலத்துடன் அவனை தள்ளி விட , இதை எதிர் பார்க்காதவன் கட்டிலில் இருந்து கீழே விழுந்தான்
அந்த கண நேரத்தை பயன்படுத்தி கொண்டு வேகமாக அவ்விடம் விட்டு ஓடி இருந்தாள்


கொண்டு வந்த பாக், செக் மற்றும் அவன் கீழே போட்ட ஷாலை கூட எடுக்காமல் ஓடியவள் கீழே அவளுக்காக காத்திருந்த காரில் ஏறி கொண்டு “ சீக்கிரம் கிளம்புங்க ...” என்று சொல்ல வண்டியும் புறப்பட்டது அப்போது தான் அவளுக்கு மூச்சே வந்தது கண்களை மூடி காரில் சாய்ந்தவளுக்கு கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டு இருந்தது


அதே நேரம் எழுந்து அவள் பின்னால் ஓட போனவனை எட்டி பிடித்து தடுத்து இருந்தான் ஷ்யாம் “ என்ன விடு டா என்னையே அடிச்சுட்டா இன்னைக்கு அவளை உண்டு இல்லாம விட மாட்டேன்” என்று அவனிடம் இருந்து குதறி செல்ல பார்க்க


“ கொஞ்ச நேரம் அமைதியா இரு விஷ்வா ….. அது அந்த பொண்ணு இல்லை அவ கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தா அடிக்கதான் செய்வா, இது தான் நான் சொன்ன பொண்ணு” என்று அவன் பின்னால் நின்றவளை காட்ட
அந்த பெண்ணோ “அவளை விடுங்க சார்… உங்க டென்ஷனை நான் குறைக்கிறேன்…” என்று அவன் உடலை மோகமாக பார்த்து விட்டு சொல்ல


ஷ்யாம் இடம் இருந்து விடு பட்டவன் “ ஒழுங்கா வெளிய போடி ….. என் கண்ணு முன்னாலேயே நிக்காத” என்று கர்ஜிக்க
அதில் உடல் ஆட்டம் கண்டவள் விட்டால் போதும் என சென்று விட்டாள்


இப்போது திரும்பி ஷ்யாமை பார்த்தவன் “ அது தான் நான் வேறே மூடில இருக்குறேன்னு தெரியும் தானே அப்புறம் எதுக்கு அவளை உள்ள விட்ட” என்று சீற


“ டேய் அது செக் சைன் வாங்க வந்த பொண்ணு, நான் கீழே அந்த பொண்ணை கூப்பிட போனப்போ வந்தா சரி அந்த பொண்ணு வர்றதுக்கு முன்னாடி அனுப்பி விடலாம்னு தான் உன் கிட்ட அனுப்பினேன் , எனக்கு என்ன தெரியும் நீ இப்படி போய் பாய்வேனு…” என்று அவன் பங்குக்கு கத்த


“பண்றதையும் பண்ணிட்டு….” என்று பல்லை கடிக்க , கீழே அவள் விட்டு சென்ற செக்கை எடுத்து பார்த்த ஷ்யாம் “ இதுல பத்து லட்சம் ஃபில் பண்ணி இருக்கேன் அதை பார்த்து கூட டவுட் வரலையா யாராவது ஒரு பொண்ணுக்கு பத்து லட்சம் குடுப்பங்களா…” என்று கேட்க


அவனோ பின் கழுத்தை வருடி கொண்டு “பத்து லட்சத்துக்கு ஒர்த் ஆக தெரிஞ்சா …. அதான் சைன் பண்ணேன்…”
அவன் பேச்சில் சலிப்பாக இருக்கையில் அமர்ந்தவன் “இப்போ என்ன பண்றது அந்த பொண்ணு போய் இதை வெளிய சொன்னா உன் மானம் மட்டும் இல்லை என் மானமும் சேர்ந்து போகும்” என்று அவன் சொல்ல


கீழே கிடந்த அவள் ஷாலை எடுத்து கையில் சுற்றி கொண்டு அவள் வாசனையை நுகர்ந்தவன் “எனக்கு அவ வேணும்….” என்க


ஷ்யாமிற்கு தூக்கி வாரி போட்டது “ விஷ்வா… வேண்டாம் நான் இதுவே வெளிய தெரிஞ்சிடுமோனு பயந்திட்டு இருக்கேன் , நீ என்னடானா…, அந்த பொண்ணை பார்த்தா நல்ல பொண்ணு போல தோணுது விடுடா போகட்டும்” என்று கெஞ்சுதலாக சொல்ல


அவள் அடித்த கன்னத்தை தடவியவன் “என்னையே அடிச்சிட்டு போய் இருக்கா அவ்ளோ சீக்கிரம் விட்டிடுவேனா என்னை என்னை அடிச்சத்துக்கு அவ பதில் சொல்லி தான் ஆகணும்” என்க


“ விஷ்வா… ஆண்டி ஹீரோ மாதிரி பேசாதடா பயமா இருக்கு பாக்கவே பயந்த பொண்ணு மாதிரி இருக்கா…. உன் கிட்ட இருந்து தப்பிக்க வேறே வழி இல்லாம பண்ணி இருப்பா…” என்று மேலும் சமாதானம் செய்யும் பொருட்டு சொல்ல


“முதல அவ யாருன்னு விசாரி…. எனக்கு அவ ஃபுல் டீட்டைல்ஸ் வேணும்..” என்க ஷ்யாமுக்கு அவன் இறுகிய தோற்றத்தை நினைத்து பயமாக இருந்தது


அவனிடம் எப்போதும் இயல்பாக தான் இருப்பான் இன்று அவனிடமும் கடுமையாக பேச நல்ல கோபத்தில் இருக்கிறான் என்று புரிந்தது


எழ போனவன் காலில் அவள் கை பை தென்பட்டது இதை கூட எடுக்காம போய் இருக்கா என்று எண்ணியவன் குனிந்து அதை எடுத்து கொண்டு நிமிர

“யாரோடு…. அது..” என்றான் விஷ்வா
ஷ்யாமோ “ அந்த பொண்ணோடது தான் தப்பிச்சு ஓடும்போது விட்டுட்டு போய் இருக்கா..” என்க “ பாக் எல்லாம் கொண்டு வந்தாளா என்னை நான் பாக்கவே இல்லையே..” என்று சொல்ல
அவனை ஏறிட்டு பார்த்தவன் “ அதுக்கு உன் கண்ணு எங்க பாகை பாத்து இருக்கும் …” என்று முணு முனுக்க “ அதுவும் சரி தான்” என்றான் விஷ்வா


கைப்பையில் இருந்த பொருட்களை பார்த்தவன் கண்ணில் அவன் அடையாள அட்டை கிடைக்க எடுத்து பார்த்தான்


பெயர் பிரியா என்று இருந்தது அப்பாவின் பெயர் பக்கத்தில் ராஜா தேவ் என்று இருந்தது “ ராஜா குரூப்ஸ் ஓனர் பெயர் ராஜா தேவ் தானே” என்று எண்ணியவன் புருவம் இடுங்க அவசரமாக அட்ட்ரெசை பார்த்தான் ராஜா குரூப்சின் மாளிகையின் விலாசம் தான்

இதயம் ஒருகணம் ஆட்டம் கண்டது
பத்தா குறைக்கு கார்டியன் பார்த்திபன் என்று இருந்தது ராஜா தேவின் மூத்த மகன் , வயதில் பெரிய வேறுபாடு தெரிய


ஏறிட்டு விஷ்வாவை பார்த்தவன் “விஷ்வா ஐ திங்க் பிரியா…. , இந்த பொண்ணு ராஜா குரூப்ஸ் ஓனர் ராஜா தேவ் சாரோட பொண்ணுன்னு நினைக்குறேன்…” என்க


அவனை பார்த்தவன் “என்னடா சொல்ற அந்த ஆளு போன வருஷமே செத்துட்டாரு அந்த ஆளுக்கு 80 வயசுக்கு மேலே இருக்கும் அவரு கடைசி பையன் என் அப்பா கூட படிச்சவர், இந்த பொண்ணுக்கு ஒரு 23 வயசு இருக்குமா அதுக்கெல்லாம் வாய்ப்பே இருக்காது..” என்று சொல்ல


சற்று பயந்த ஷ்யாம் “ இல்லைடா அட்ரஸ் கூட அவங்க வீட்டு அட்ரஸ் தான் , அந்த பொண்ணோட கார்டியன் யாரு தெரியுமா ராஜா சாரோட மூத்த பையன்” என்க


சற்று முரணாக இருந்த உறவுகளை கண்டு அவன் யோசிக்க “அப்படி மட்டும் இருந்துச்சு செத்தோம்…. அந்த பொண்ணு போய் அவங்க கிட்ட சொன்னா…. நம்ம கூட இருக்குற காண்ட்ராக்டை கேன்சல் பண்ணிடுவாங்க, அது மட்டுமா அவங்க வீட்டு பொண்ணு மேலே கையை வச்சு இருக்க சும்மா விடுவாங்களா… உன் குடும்பம் மாதிரியே ரொம்ப செல்வாக்கான குடும்பம் , இதுலயும் அந்த பார்த்திபன் எல்லாம் கடஞ்சு எடுத்த பொறுக்கி” என்று அவன் பயத்தில் நெஞ்சை நீவி கொள்ள


“ என்ன பண்ணிடுவாங்க ஒண்ணும் புடுங்க முடியாது அவங்களோட நிறைய டீலிங்ஸ் நம்ம கம்பனி வழி தான் போகுது … அதனால அதை பத்தி கவலை பட வேண்டாம்” என்றவன்
எழுந்து கண்ணாடியில் தன்னை சரி செய்து கொண்டு கார் கீயை கையில் எடுத்தான்


“ இப்போ எங்க போறோம்…” என்று ஷ்யாம் கேட்க ஒன்றும் பேசாமல்
கப்போர்டில் இருந்து ஒரு கருப்பு நிற கோட்டை எடுத்து போட்டவன் அவன் கையில் சுற்றி இருந்த சாலை எடுத்து கோட்டின் பாக்கெட்டில் வைத்து விட்டு
ஷ்யாம் கையில் இருந்த செக் மற்றும் பாகை வாங்கி கொள்ள “ எங்க போக போற…” என்று ஷியாமின் கேள்வியில் “ ராஜா குரூப்ஸ்…. பிரியாவை பார்க்க” என்றவன் நிற்காமல் சென்று விட


அவன் பின்னே ஓடி இருந்தான் ஷ்யாம்…


காரில் அழுது வடிந்து கொண்டே சென்ற பெண்ணவள் நேரே சென்றது என்னமோ ஆபீசுக்கு தான் காரில் இருந்து இறங்கியவள் உள்ளே சென்று நேரே கழிப்பறைக்குள் நுழைந்து கொண்டாள்


கண்ணாடி முன் நின்றவள் தன் பிம்பத்தை பார்த்தாள் உதடு சற்று வீங்கி இருந்தது , அழுது அழுது முகம் வீங்கி இருந்தது மத்தபடி வேறு எந்த வித்தியாசமும் இல்லை


தண்ணீரை அடித்து முகத்தை கழுவினாள், அவன் தொட்ட இடம் எல்லாம் அறுவறுத்தது “ என்னை பார்த்தால் கால் கேர்ள் மாதிரி தெரியுதா,….” என்று எண்ணியவளுக்கு மீண்டும் அழுகை நிற்கவே இல்லை
அவர்கள் பேசியதை வைத்து ஆள் மாறி தன்னிடம் தவறாக நடந்து கொண்டான் என்று புரிந்தது, ஆனால் யாரென்று தெரிந்தும் மீண்டும் அத்து மீற முயற்ச்சி செய்தவனை நினைக்கையில் பயம் தான் முன் வந்து நின்றது


மீண்டும் மீண்டும் முகத்தை கழுவி விட்டு டிஷ்யூவினால் முகத்தை அழுந்த துடைத்தவள் அங்கே இருந்து வெளியேறினாள்


தனது இருக்கையில் வந்து அமர்ந்தவள் அங்கே இருந்த தண்ணீரை எடுத்து அருந்த மனம் கொஞ்சம் மட்டு பட்டது
கண்களை மூடி நிதானமாக யோசிக்க இப்போது தான் உண்மையான பயம் தொண்டை குழிக்குள் உருண்டது


“ செக்…” வாங்க சென்ற செக் எங்கே என்று கேட்டால் என்ன பதில் சொல்வாள், பார்த்திபன் கோப முகம் கண்முன் வர பதட்டம் வந்து தோற்றி கொண்டது


அப்போது ஒரு ஊழியன் “ மேடம் உங்களை பார்த்திபன் சார் அங்க கேபினுக்கு வர சொன்னார்” என்று சொல்லி விட்டு செல்ல


அவ்வளவு தான் அவள் உடல் முழுவதும் ஆட்டம் கண்டது “போச்சு …. செக் எங்கேன்னு கேட்டா என்னை சொல்றது…” என்று யோசித்தவள் “பேசாம உண்மையை சொல்லிடலாம்… அப்போ ஏதும் சொல்ல மாட்டார்” என்று எண்ணியவள் பயந்தவாறு தான் சென்றாள்


வாசல் வரை சென்றவள் கதவை தட்டி விட்டு “ மே ஐ கமின் சார்….” என்று கேட்டு கொண்டே உள்ளே நுழைய
முன்னால் பார்த்திபன் கோபமாக அமர்ந்து இருந்தார் அவனுக்கு முன்னால் இரண்டு பேர் அமர்ந்து இருக்க பயத்துடனையே உள்ளே சென்றாள்


அங்கே அவளுக்கு முதுகு காட்டி அமர்ந்து இருந்தவன் தனக்கு பக்கத்தில் வந்து நின்றவளை திரும்பி பார்க்க அவனை பார்த்த பெண்ணவளுக்கு தூக்கி வாரி போட்டது அங்கே அவளை அழுத்தமாக பார்த்து இருந்தது சாக்ஷால் விஷ்வா வரதனே தான்.


தொடரும்…..
 
அத்தியாயம் 3:


பெண்ணவளுக்கு கை கால்கள் ஆட்டம் கண்டது, அவனிடம் இருந்து தனது மானத்தை நூலிழையில் காப்பாற்றி தப்பி வந்து மூச்சு விட்டு இருக்க, ஆபீசில் வந்து கால்மேல் கால் போட்டு தெனாவட்டாக அமர்ந்து இருக்கிறான்


அவனின் அழுத்தமான பார்வையை பார்த்து விட்டு முன்னால் இருந்த பார்த்திபனை பார்த்தாள் அவன் கோபமுகம் இன்னும் கிளியை கொடுக்க தலை சுற்றுவது போல் இருக்க சட்டென்று விஷ்வா அமர்ந்து இருந்த இருக்கையின் பிடியியை தான் இறுக்கமாக பற்றி கொண்டாள்


இருக்கையை பற்றி இருந்த அவள் கைகளை பார்த்தான் நடுங்கி கொண்டு இருந்தது , அவள் பார்வை பார்த்திபனை நோக்கி இருக்க முகத்தில் அப்பட்டமான பயம், தன்னை மட்டும் அல்ல பிரபாகரனை கண்டும் பயப்படுகிறாள் என்று புரிந்து கொண்டான்


“இன்னைக்கு தானே வேலைக்கு சேர்ந்த உருப்படியா ஒரு வேலை கூட ஒழுங்கா பண்ண முடியாதா…..” என்று பார்த்திபன் எறிந்து விழ


அவளின் பிடி இன்னும் முறுகியது அதை கண்டவன் “ விடுங்க சார் தெரியாம தொலைச்சு இருப்பாங்க விடுங்க அதான் நாங்களே கொண்டு வந்து குடுத்திட்டோமே..” என்று விஷ்வா சொல்ல


அவனை நோக்கி திரும்பியவன் “ எப்படி விட முடியும் விஷ்வா பத்து லட்சம் சும்மா கிடைக்குமா என்ன, இது வேறே யாரு கையிலயாவது கிடைச்சா என்ன பண்ணி இருப்பேன் ….” என்று சொல்ல


“ இட்ஸ் ஓகே… சார் அதான் தொலஞ்ச பர்சை கொண்டு வந்திட்டோமே விடுங்க…” என்றான் மீண்டும்
உடனே பிரியாவை நோக்கி திரும்பியவன் “ இதா உன்னோட பாக்… அவங்க வீட்டு வாசல்ல தொலைச்சுட்டு வந்திருக்க, வந்து ஏன் கிட்ட சொல்லாம அழுது வடிஞ்சா எல்லாம் சரி ஆகிடுமா ….. போ போய் வேலையை பாரு…” என்று அவளிடம் அவள் பையை நீட்ட அதை நடுங்கும் கைகளால் பிடித்து கொண்டு அங்கே இருந்து வேகமாக வெளியேறினாள் பெண்ணவள்


அவள் சென்றதும் “ புதுசா வேலைக்கு சேர்ந்த பொண்ணா…” என்று விஷ்வா கேட்க அமாம் என்று மட்டும் பதில் வந்தது…


அதிலேயே பிரியவுடன் அவருக்கு நல்ல உறவு இல்லை என்று புரிந்து கொண்டான், அது அவனுக்கு இன்னும் வசதியாக தெரிந்தது, கொஞ்ச நேரம் மற்று விஷயங்களை பேசியவன் அங்கே இருந்து கைக்குலுக்கி விட்டு வெளியேறினான்


வெளியே வந்ததும் “ என்னடா இந்த ஆளு தங்கச்சி கிட்ட பேசுற மாதிரி தெரியலையே… இதுல ஏதோ இருக்கு..” என்று ஷ்யாம் சொல்ல


“ என்ன இருக்கும் அந்த ஆளுக்கு வயசான காலத்துல சின்ன வீட்டுக்கு பொறந்தா இருக்கும் அதான் இப்படி பேசுறான்” என்று சொன்னவன் கண்கள் அங்கே எல்லா இடத்திலும் பிரியாவை தான் தேடிக்கொண்டு இருந்தது


“நீ சொல்றதும் சரி தான்….” என்று ஷ்யாம் சொல்லி விட்டு திரும்ப விஷ்வாவை காணவில்லை “ இவன் எங்கே போயிட்டான் வெளியே போய்டானா..” என்று அவன் வெளியேறி விட


விஷ்வாவோ அவன் கண்கள் தேடி கண்டுகொண்ட பிரியாவின் பின்னால் சென்றது


இன்று அவள் முதல் நாள் வேலை வெளி உலகை சுதந்திரமாக சுவாசிக்க தொடங்க, அதன் முதல் அனுபவமே அவளை கொலை நடுங்க வைத்து இருந்தது அதிலும் அவன் மீண்டும் இங்கே வந்து அவன் மேல் எந்த தவறும் இல்லாதது போல் பேசிக்கொண்டு இருக்க பயம் தான் முன்னால் வந்து நின்றது


அதனால் கொஞ்சம் தலை சுற்றுவது போல் இருக்க கொஞ்சம் காஃபி குடித்தால் நன்றாக இருக்கும் போல தோன்ற அங்கே இருந்தவர்களிடம் கேட்டு கொண்டு காஃபி மிச்சின் அருகே சென்றாள்


காஃபியை எடுத்து கொண்டு அதற்கு பின்னால் சற்று ஒதுங்கியவாறு அமர்ந்து காஃபி அருந்த செய்து இருந்த அறையை நோக்கி அவள் செல்ல அதை அவன் கண்கள் கண்டு கொண்டு பின்னால் சென்றான்


அப்போது தான் திரும்பி நின்று கண்ணாடியோடு வெளியே தெரியும் கார்டனை நோக்கி கொண்டு அவள் வாசனையை நுகர்ந்து இருப்பாள் “ஹை டியர்…” என்ற கரகரப்பான குரல் அவள் காதருகே கேட்க பதறி திரும்பினாள்


அவளை தொட்டு விடும் தூரத்தில் நின்று இருந்தான் விஷ்வா, அவளோ பயத்தில் உறைந்து நிற்க அவள் பயந்த கண்களையும் நடுங்கும் இதழ்களையும் கண்டவன் “தப்பிச்சு போய்ட்டா தேடி வரமாட்டேனு நினைச்சியா, இப்படி நெருங்கி வருவேன்…” என்று அவர்களுக்கு இடையே அவன் பூச்சியமாக மாற்றி கொண்டு இருக்கும் இடைவெளியை கண்களால் காட்டி கொண்டு சொல்ல


அவள் மேலும் சுவற்றோடு ஒண்டினாள் “பிளீஸ் என்னை விட்டுடுங்க… நான் நீங்க நினைக்கிற அந்த மாதிரி பொண்ணு இல்லை…”கண்கள் குளம் கட்ட அவள் கெஞ்ச


அவள் நடுங்கும் கையில் ஆடிக்கொண்டு இருக்கும் காஃபி கப்பை வாங்கி அங்கே இருந்த இருக்கையில் வைத்தவன், அந்த கைகளை பற்றி கொண்டு அவன் கன்னத்தில் அழுந்த வைத்தவன் “ இந்த கை தானே என்னை அடிச்சது அதுக்கு தண்டனை கொடுக்க வேண்டாமா… இந்த விஷ்வாவை அடிச்சா என்னை நடக்கும்னு தெரியவேண்டாம்….” என்று சொல்ல


அவளின் கண்ணில் இருந்து கண்ணீர் சட்டென்று வழிந்தது, அவனிடம் இருந்து கையை உருவ முயன்று கொண்டே “ பிளீஸ் வேணும்னா ரெண்டு அடி சேர்த்து அடிச்சுங்கோங்க நான் வாங்கிக்கிறேன் பிளீஸ் என்னை விட்டுடுங்க…” என்று கெஞ்ச


அவள் கண்ணீர் அவனை ஏதோ செய்து இருக்க வேண்டும் , கையை விட்டவன் வழியும் கண்ணீரை பெரு விரலால் துடைத்து கொண்டே “இப்போ ஒன்னும் பண்ண மாட்டேன் ஆன கூடிய சீக்கிரம் எல்லாமே பண்ணுவேன்” என்றவன் கண்கள் அவள் உடலில் மேய நெருப்பில் நிற்பதை போல் உணர்ந்தாள் பெண்ணவள்


அவளிடம் இருந்து சற்று விலகியன் அவன் கோட் பாக்கெட்டில் இருந்து அவளது சாளை எடுத்து அவள் அங்கங்களை மறைத்து விட்டு “ நான் மட்டும் தான் பார்க்கணும் புரியுதா..” என்று சொல்லி கன்னத்தை லேசாக தட்டி விட்டு செல்ல


பெண்ணவள் தளர்ந்து இருக்கையில் அமர்ந்தாள், இப்படி ஒருவனின் கண்ணில் வந்து சிக்கி கொண்டோமே என்று மனம் வருந்த மட்டும் தான் அவளால் முடிந்தது


கீழே பார்க்கிங் ஏரியாவில் விஷ்வாவை தேடி களைத்த ஷ்யாம் திரும்பி பார்க்க அங்கே உள்ளே இருந்து விசில் அடித்தபடி கூலாக நடந்து வந்து கொண்டிருந்தான் அவன்


“ எங்கடா… போய் இருந்த, எவ்ளோ நேரமா உன்னை தேடுறேன்…..” என்று அவன் சற்று கோபமாக கேட்க


“பிரியாவை பார்க்க..” என்று தோளை குலுக்கி சொன்னவன் சுற்றி வந்து முன் இருக்கையில் ஏறிக்கொள்ள
வேகமாக ஓட்டுநர் இருக்கையில் ஏறிய ஷ்யாம் “அந்த பொண்ணை விடுற ஐடியாவே இல்லையா…..” என்று சற்று காட்டமாக கேட்க


“ நோ…. எனக்கு அவ வேணும்… அவளை பத்தின டீடெயில்ஸ் கொஞ்ச நேரத்துல எனக்கு வேணும்…” என்று சொல்லி போனை நோண்ட


“ என்னால முடியாது விஷ்வா…. இது தப்பு உனக்கு வேணும்னா உன் கூட வர விருப்பம் இருக்கற பொன்னை கூட்டிட்டு வரேன்… அந்த பொண்ணை விட்டுடு..” என்று சொல்லி காரை கிளப்ப


அவனை அழுத்தமாக பார்த்து “ எனக்கு அவ தான் வேணும்…. உன்னால முடியலனா வேலையை விட்டு கிளம்பு” என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேச


அவனை திரும்பி பார்த்தவன் இன்னொரு கையில் போனை எடுத்து பெர்சனல் டிக்டெக்டிவ் ஏஜெண்டை தொடர்பு கொண்டான்


அதை கண்டு விஷ்வாவின் இதழ்கள் விரிந்து கொண்டது


கொஞ்ச நேரத்தில் கார் அவர்கள் ஆஃபீஸ் வளாகத்துக்குள் சென்றது, காரில் இருந்து இறங்கி வேக நடையுடன் கம்பீரமாக செல்லும் இரு ஆண்களிலும் அங்கே நின்ற பெண்களின் பார்வை ஏக்கத்துடனும், ஆண்களின் பார்வை பொறாமையுடன் படிந்து மீள


எல்லா பார்வைகளையும் கடந்து இருவரும் உள்ளே செல்ல விஷ்வா தனது முதலாளி இருக்கையில் கம்பீரமாக இருக்க அவன் எதிரே அமர்ந்தான் ஷ்யாம், அன்றைய வேளைகளில் இருவரும் மூழ்கி போக
சட்டென்று ஷ்யாமின் அலைபேசி அலறியது “ டிக்டெக்டிவ் தான் எடுத்து பேசு…” என்று விஷ்வா சொல்ல அவன் ஆர்வத்தை புருவம் இடுங்க பார்த்து இருந்தான் ஷ்யாம்


அலைபேசி எடுத்து பேசிவிட்டு வைத்தவன் விஷ்வாவின் முகம் பார்த்து “ பெருசா எதுவும் தெரியல இப்போ தான் சென்னை வந்து இருக்கா போல பேரு பிரியா படிச்சு எல்லாம் கோயம்பத்தூர்ல இருக்குற ஒரு கான்வென்ட்லா தங்கி, அவங்க ஸ்கூல் காலேஜ்ல தான் , ராஜா தேவ் சார் இறந்தப்போ வந்து இருக்கா, அண்ட் இப்போ தான் மறுபடியும் இங்க வந்து அவங்க வீட்டுல தங்கி இருக்கா, பெர்சனல் ரிலேஷன் பத்தி எதுவும் தெரியல…. ஒரு வேளை நீ சொன்னத போல சின்ன வீடு பொண்ணா இருக்கும்..” என்று சொல்ல


இருக்கையில் சாய்வாக அமர்ந்து இருந்தவன் “ஃபுல் டீடெயில்ஸ் எப்படி தெரிஞ்சுக்கிறது…” என்க “உன் தாத்தாவுக்கு ஒருவேள தெரிஞ்சு இருக்கலாம் இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள் ஆச்சே…” என்று சொல்ல


“ சரி கேட்டு பார்ப்போம்….” என்றவன் யோசனையில் இருக்க மனது கேட்காத ஷ்யாம் “ அது தான் அப்பாவி பொண்ணுன்னு தெரியுதே விடு டா….” என்க “ அவ்ளோ சீக்கிரம் விடமாட்டேன் ஷ்யாம்” என்றான்


“ எனக்கு தெரியாம தான் கேக்குறேன் ஏன் இந்த பொண்ணு விஷயத்துல இவளோ சீரியஸா இருக்க, பிடிச்சிருக்குனா சொல்லு டா வீட்டில சொல்லி கல்யாணம் பண்ணிக்கோ..” என்று சலிப்பாக சொல்ல


“ புத்தி இருக்கிறவன் யாராவது கல்யாணம் பண்ணுவனா, எனக்கு அவளை ஜெஸ்ட் ஒரு வாட்டி வேணும் அவ்ளோ தான்” என்று படு சீரியஸாக பேசும் நண்பனை நினைத்து பயம் வந்து ஒட்டி கொண்டது ஷ்யாமிற்கு.


தொடரும்……
 
அத்தியாயம் 4:


சாலையில் தேர் போல் ஒழுகி வந்த அந்த சொகுசு கார் ஒரு பெரிய கேட்டின் முன் வந்து நின்றது, ரிமோட் கேட் மெதுவாக திறக்கவும் அந்த கார் உள்ளே சென்றது, பெரிய மைதானம் அளவிலான கார் பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்தி விட்டு முன் இருக்கையில் இருந்து ஷ்யாம் இறங்க டிரைவிங் சீட்டில் இருந்து இறங்கினான் விஷ்வா


தலையை கொதி கொண்டு துள்ளல் நடையுடன் உள்ளே நுழைந்தவனை அங்கே இருந்த பெரிய சோஃபாவில் அமர்ந்து வரவேற்றார் தாத்தா வரதன்
“ வாடா …. இன்னைக்கு எப்படி போச்சு…” என்று கேட்க அவர் அருகே சென்று அமர்ந்தான் விஷ்வா அவன் எதிரே ஷ்யாம் அமர்ந்து கொள்ள “ ஆள் Good தாத்தா…” என்றவன் சோஃபாவில் தலையை சாய்த்து கண்மூடி கொள்ள அங்கே வந்து சேர்ந்தனர் அவன் குடும்பத்தினர்


அம்மா வேணி அவர்களுக்கு டீ எடுத்து கொண்டு வர , பூஜை அறையில் இருந்து பாட்டி லக்ஷ்மி வர, அறையில் இருந்து வந்தார் அப்பா வெற்றி
பாட்டி அவன் பக்கத்தில் அமர்ந்து ஆதூரமாக தலையை தடவ அம்மா கொண்டு வந்த தேநீரை உறிஞ்சினான் விஷ்வா இந்த காட்சி அழகாக ஷ்யாம் கண்ணுக்கு தெரிய மனதிலோ “ இப்படி ஒரு அழகான குடும்பம் இருந்தும் அவன் ஏன் வில்லன் மாதிரி பண்றான்” என்று எண்ணி கொண்டது


“ வேலை ரொம்ப கஷ்டமா போச்சா பா, ரொம்ப சோர்வா தெரியுற..” என்று பாட்டி கேட்க “ நோ…. ஆம் பைன்” என்றவன் முகத்தில் இறுக்கம் மட்டும்


“ இன்னைக்கு தரகர்…” என்று வேணி ஆரம்பிக்க கூட இல்லை சட்டென்று திரும்பி ஒரு முறைப்பு தான் அவர் வாய் கப்பென்று மூடி கொண்டது


“ சரியான முரடன்” என்று வாய்க்குள் திட்டி கொண்டார்


“ தாத்தா உங்களுக்கு ராஜா குரூப்ஸ் ராஜா தேவை தெரியும் தானே …. உங்க பிரெண்ட் தானே அவர்” என்று ஷ்யாம் கேட்க


“ அமாம் ஏன் பிரெண்ட் தான் ஏன் கேக்குற..” என்று கேட்க
“ இல்லை அவரோட பெர்சனல் லைஃப் பத்தி தெரியுமா…” என்க புருவம் இடுங்க “ அவன் பெர்சனல் உனக்கு எதுக்கு டா..” என்றார்


“ இல்லை தாத்தா இன்னைக்கு ஒரு பொண்ணு ராஜா குரூப்ஸ் ல இருந்து செக் வாங்க வந்தா.. பொதுவா அவர் PA தான் வருவார் இன்னைக்கு புதுசா ஒரு பொண்ணு வரவும், ID செக் பண்ணேன், அப்பா பெரு ராஜா தேவ், கார்டியன் பேரு பார்த்திபன் அப்படின்னு இருந்துச்சு போதா குறைக்கு அவங்க அட்ரெட்ஸ் கூட அவங்க வீட்டு அட்ரெஸ் தான் ஆன அந்த பொண்ணுக்கு ஒரு 23 வயசு தான் இருக்கும் அதான் ஒரு டவுட்… ஒரு வேளை உங்க பிரெண்ட் வேறே பொண்ணு கூட…” என்று அவன் இழுக்க


“ டேய் டேய்…. போதும் நீ எங்கே போறேன்னு தெரியுது அப்படி எல்லாம் இல்லை, அது அவன் பொண்ணு தான் பொண்ணு அம்மாவும் அவன் பொண்டாட்டி தான்..” என்க


“ என்ன பா சொல்றீங்க…. அவங்க எப்படி… ரொம்ப வயசு இருக்குமே..” வெற்றி கேட்க “ அவன் அந்த காலத்து காதல் திருமணம் பண்ணவண்டா பொண்டாட்டினா அவ்ளோ உசுரு அவனுக்கு, அதான் அறுபது வயசுலையும் காதிச்சிருக்கான் அதனால என்னை அம்பத்தி மூணு வயசுல அவன் பொண்டாட்டி கற்பம் ஆயிட்டா…” என்றார்


“என்னங்க சொல்றீங்க அப்போ அவங்க பசங்களுக்கே பிள்ளைங்க இருக்குமே..” என்று கேட்க “ அமாம் பொண்ணுக்கு கல்யாணம் ஆகி மூணு பசங்க பெரிய பையனுக்கு ஒரு பையன் இருந்தான் ரெண்டாவது பையன் கல்யாணம் ஆகி அப்போ தான் அவன் மனைவி கர்ப்பமா இருந்தா , அப்போ பாட்டி வயசுல அந்த பொண்ணு கற்பம் ஆகவும் யாருக்கும் பிடிக்கல….


பிடிக்கலெனா அவன் ஏற்கனவே மூணு பசங்களுக்கும் சொத்தை பிரிச்சுட்டான் இனி மிச்சம் இருக்கிறது அவனுக்காக வச்சு இருந்த அந்த வீடுதான் அதுல நாலு பங்கு போய்டும்க்ற பயம் தான்” என்க


“ அப்புறம் என்ன ஆச்சு..” ஆர்வமாக ஷ்யாம் கேட்க


“ அப்புறம் என்ன கருவ கலைக்க போனாங்க அப்போ தான் டாக்டர் ஏற்கனவே மூணு மாசம் ஆச்சு இனி கலச்சா உயிருக்கே ஆபத்துன்னு சொல்லிட்டாங்க, அவனுக்கு மனைவிதான் முக்கியம் எல்லாரோட எதிர்ப்பையும் மீறி வெளிய பெருசா யாருக்கும் தெரியாம குழந்தை பெத்து கிட்டாங்க…


அப்புறம் டெய்லி பசங்க சொத்து எழுத பிரச்சனை, லேட் ப்ரெக்னென்சி அந்த பொண்ணுக்கு உடம்பு சரி இல்லாம படுத்திட்டா ஒரு நாலு வருஷத்துல அவ போய் சேர்ந்துட்டா


அவனால அதை தாங்க முடியல ஏன் மனைவி செத்தது அந்த பொண்ணு தான் காரணம் , அன்பா இருந்த பசங்க பிரச்சினை பண்ணவும் அந்த பொண்ணுதான் காரணம்னு அந்த பொண்ணு மேல அப்படி ஒரு வெறுப்பு…” என்க


“ இந்த ஆளு வயசான காலத்துல கையை கால வச்சிட்டு சும்மா இருந்தா எதுக்கு இப்படி ஆக போகுது..” என்று விஷ்வா சொல்ல சத்தமாக சிரித்தவர்


“ அது நமக்கு புரியும் அவனுக்கு புரியாதே…. அந்த கோபம் அந்த பொண்ணை நாலு வயசுல ஒரு மடத்துல இந்த கன்னியாஸ்திரி இருக்காங்களே அவங்க கவனிப்பில விட்டுட்டான்… மாசம் மாசம் காசு கொடுப்பான் , பாவம் அந்த பொண்ணு அங்க தான் படிச்சு வளர்ந்துது, எப்போவது போய் பாப்பான் அவளோ தான்” என்றார் சற்று வருத்ததோடு


“ சே என் இந்த ஆளு இப்படி எல்லாம் பண்றார் பாவம் அந்த பொண்ணு..” என்று பாட்டி வருத்தப்பட “ ஆனா இப்போ இங்க தானே தங்கி இருக்கா எல்லாம் சரி ஆயிடுச்சா” ஷ்யாம் தான் கேட்டான்


“ எங்கே சரி ஆச்சு…” என்று சலித்தவள் “ போன வருஷம் அவன் இறந்தப்போ தான் இந்த வீட்டுக்கு திரும்ப வந்துது அந்த பொண்ணு , அன்னைக்கு நான் அங்கே போனப்போ பார்த்தேன் அவளோ அழகா இருந்துச்சு ஒரு ஓரமா உக்கார்ந்து அழுதிட்டு இருந்தா..” என்க


“ நானும் வந்திருந்தேனே நான் பாககலேயே..” விஷ்வா சொல்ல அவனை ஒரு மார்க்கமாக ஷ்யாம் பார்த்தான்


“ நீ பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை ஒரு ஓரமா இருந்துச்சு… நான் சின்ன வயசுல பார்த்து இருந்ததாலே கண்டு பிடிச்சேன்..” என்றார்


“இப்போ அண்ணனுங்க பாத்துக்குறாங்களோ..” வேணி கேட்க


“ ஒரு மண்ணும் இல்லை அந்த பொண்ணு படிப்பு முடிஞ்சதும் தங்க வேறே இடம் இல்லை திரும்பி வீட்டுக்கு தான் வந்து ஆகணும் , வீட்டில வந்து தங்கனும்ன சொத்துல பங்கு வேண்டாம்னு எழுதி கேட்டு இருக்கான் அந்த பார்த்திபன் அதான் அது பயந்த பொண்ணு போல சொத்து வேண்டாம்னு எழுதி கொடுத்திருக்கு..” என்க


“ என்னங்க சொல்றீங்க..” என்று பாட்டி கேட்க “ உங்களுக்கு இதெல்லாம் எப்படி தெரியும்” என்று விஷ்வா கேட்க “ நம்ம வக்கீல் சரவணன் தானே அவனுக்கும் குடும்ப வக்கீல் அவன் தான் சொன்னான்” என்றார்


“ இனிமே அந்த பொண்ணை பார்த்து பாங்களா…” என்றார் வேணி


“ அந்த பொண்ணு பாவம் தான் , அந்த பார்த்திபன் சரியான கேடி அவனுக்கு லாபம் இல்லாத எதையும் பண்ணமாட்டான் வீட்டுல சும்மா சோறு போட கூடாதுன்னு வேலைக்கு அனுப்புறான் போல, அது மட்டும் இல்லை அழகான பொண்ணு, பொண்ணு…..” என்று சற்று அழுத்தியவர்

“ அந்த பொண்ணை வச்சு ஏதாவது பிசினன்ஸ் டீல் முடிக்க முடியுமானு பார்ப்பான்” என்க


நெஞ்சில் கை வைத்தார் பாட்டி “ என்னங்க சொல்றீங்க எனக்கு கேட்கவே பயமா இருக்கு” என்க “ அப்புறம் நீ என்ன நினைச்ச சொத்தை வாங்கி அந்த பொண்ணுக்கு சீரும் சிறப்பான கல்யாணம் பண்ணி வைப்பனா நா , அவனுக்கு லாபம் இல்லாத எதையும் அவன் பண்ண மாட்டான்” என்றார்


அதை கேட்டு விஷ்வாவின் முகம் இறுகியது, பார்த்திபன் மேல் அப்படி ஒரு கோபம் வந்தது , இன்று தான் தவறாக நடந்து கொண்டதை கூட சொல்லாமல் அவனை கண்டு அஞ்சி நின்றதிலேயே அவன் அவளை வேலை ஆள் போல தான் வைத்து இருக்கிறான் என்று இப்போது புரிந்து கொள்ள முடிந்தது


“ என்ன மாமா என்னனமோ சொல்றீங்க கேட்கவே பயமா இருக்கு, அந்த பொண்ணை காப்பாத்த வழியே இல்லையா..” என்று கேட்டார் வேணி நடுங்கும் குரலில்


“ ஒரு வழி இருக்கு..” என்க எல்லோரும் அவரை ஆர்வமாக பார்க்க “ உன் பையனை உம் அப்படின்னு ஒரு வார்த்தை சொல்ல சொல்லு …. நம்ம வீட்டு மருமகளா கூட்டிட்டு வந்திடலாம்..” என்றார் அவனை கடைகண்ணில் பார்த்து கொண்டு


அவனோ அவரை முறைத்து பார்க்க , “ மக்கும் எதுக்கு அந்த ராட்சன்சங்க கிட்ட இருந்து காப்பாத்தி இந்த முரடன் கிட்ட கொடுக்கவா…. அதெல்லாம் வேண்டாம் பேசாம நம்ம ஷ்யாமுக்கு பேசலாம் அவன் நல்லா பாத்துப்பான்” என்று சொல்ல


ஷ்யாமிற்கு குடித்து கொண்டு இருந்த டீ புரை ஏறியது, தலையில் தட்டி கொண்டே ஏறிட்டு விஷ்வாவை பார்க்க அவனோ சாய்ந்து அமர்ந்து ஒரு தொடையில் தட்டி கொண்டே அவனை வெறித்து பார்த்து கொண்டு இருந்தான்


“என்ன பார்வையே சரி இல்லை” என்று எண்ணியவன் திரும்பி அவரிடம் “ மா எனக்கு அந்த பொண்ணு தங்கச்சி முறை வரும் மா எனக்கு வேண்டாம்” என்றான் வேகமாக


அதை கண்டு விஷ்வாவின் உதட்டில் யாரும் கண்டு பிடிக்க முடியாத அளவு புன்னகை


“ அது எந்த முறை டா…” அவர் குழப்பமாக கேட்க “ ஏதோ முறை மா விடுங்க” என்றவன் அங்கே இருந்து எழுந்து சென்று விட்டான் , பிறகு உயிர் முக்கியம் ஆச்சே.


தொடரும்…….

என்னோடு வா அன்பே - கருத்து திரி
இங்கே உங்கள் கருத்துக்களை பதிவிடலாம்
 
Status
Not open for further replies.
Top