எபிலாக்
சில மாதங்கள் கழித்து,
ஐந்து மாத கருவை சுமந்து கொண்டு இருந்த காயத்ரியை தனது அறைக்குள் அழைத்து இருந்தான் சித்தார்த். அவளும் மூச்சு வாங்க வந்து நின்றவள் "என்னாச்சு சித்தார்த்?" என்று கேட்க அவனோ "உனக்கு ஒரு சர்ப்ரைஸ்" என்று சொல்லிக் கொண்டே அவள் கரம் பற்றியவன் அவள் கண்களை மூடிக் கொண்டே அழைத்து சென்றான். அவன் அழைத்து சென்றது வேறு எங்கும் அல்ல, பீட்டரின் அறைக்குள் தான். அங்கே சென்றதும் அவள் கண்களில் இருந்து விரல்களை அகற்ற, பீட்டரின் கூண்டை பார்த்தவள் "வாவ், அஞ்சு குட்டியா?" என்று கேட்டபடி குனிந்து பார்த்தாள். பச்சை நிற கால்களுடன் பீட்டர் போலவே குட்டிகள் இருக்க, பீட்டரின் மனைவியோ ஓரமாக தூங்கிக் கொண்டு இருந்தது.
குட்டிகளைப் பார்த்தவள் முகமெல்லாம் புன்னகையுடன் "பீட்டர் கன்க்ராட்ஸ்" என்று சொல்லிக் கொண்டே "ரொம்ப கியூட் ஆஹ் இருக்கு" என்று சொல்ல, அவனோ "உன் பிரென்ட் குழந்தை குட்டிகளோட வாழணும்னு ஆசைப்பட்ட தானே.. இப்போ ஹாப்பியா?" என்று கேட்க அவளோ "வெரி ஹாப்பி" என்று சொன்னவள் மேலும் "என்ன இருந்தாலும் பீட்டர் உங்கள விட ஸ்ட்ராங் தான்.. ஒரே தடவைல அஞ்சு குட்டின்னா சும்மாவா? நான் ஒண்ணே ஒன்னு தானே" என்று தனது மேடிட்ட வயிற்றைப் பார்த்துக் கொண்டே கூற அவனோ அடக்கப்பட்ட சிரிப்புடன் "சரிடி, பெட் வச்சுக்கலாமா? ஒன்னு ஒண்ணா பிறந்தா கூட நான் பீட்டரை பீட் பண்ணி காட்டுறேன்" என்று சொன்னான். அவளோ "அது சரி, நான் தான் பாவம்.. உங்களுக்கென்ன.. நீங்க சொன்னதுக்கு மேல செய்வீங்க.. நான் என்ன பண்ணுறது?" என்று குறும்பாக கேட்க அவனோ "நீ தானேடி சொன்ன? அதெல்லாம் முடியாது.. பெட் பெட் தான்" என்று சொல்ல, "ஆள விடுங்க சாமி.. என் உடம்பு தாங்காது" என்று சொல்லிக் கொண்டே வெளியேற போனவளை தன்னை நோக்கி இழுத்து, அவள் இதழில் இதழ் பதித்த சமயம், அவனது போன் அலறியது. அதை எடுத்துப் பார்த்தவன் இதழ்கள் மெதுவாக விரிந்து கொண்டன. அதில் அஜய் அப்போது தான் பிறந்த தன்னுடைய மகனைத் தூக்கியபடி ஷாந்தியுடன் இருந்த போட்டோவை அனுப்பி இருக்க, "காட் ப்ளஸ் மை கியூட் குட்டி" என்று பதில் அனுப்பியவன் போட்டோவை காய்த்திரியிடம் காட்ட, "அவ்வ், சோ ஸ்வீட் பேபி" என்று வாயெல்லாம் புன்னகையாக சொல்லிக் கொண்டாள்.
பிரம்மனுக்கும் அவன் செதுக்கிய அவனது படைப்புக்குமான பிணைப்பு வாழ்நாள் முழுதும் தொடரும்.