
அத்தியாயம் 6
நிரோ பிருந்தாவை தனியாக விட்டுச் சென்று ஒரு மணி நேரத்தை கடந்திருந்தது..
தனியாக இருந்த பிருந்தா, ஒரு ஆங்கில நாவல் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தாள்..
படுக்கையில் அமர்ந்திருவளின் வயிறு கீழ்நோக்கி தாழ்வதை போன்ற உணர்வு..
குழந்தை உருண்டு வருகிறது.. இது சாதாரண வலி தான் என மனதுக்குள் சொல்லிக் கொண்டே, எழுந்து நின்றாள்..
கால் தரையில் ஊன்றியதும் தான் தாமதம் சுருக்கென்ற வலி அடிவயிற்றில்..
“அம்மாஆஆஆஆ..” என அலறியபடி கீழ் வயிற்றை பிடித்துக் கொண்டவளுக்கு,. இரண்டு அடி எடுத்து வைக்க முடியவில்லை..
சுருக் சுருக்கென்ற வலி அதிகமாகிக் கொண்டே போனது..
“அம்மாஆஆஆ” என்றவளின் கைகள் நேராக போனை தான் எடுத்தது.. நிரோஷாவிற்கு அழைத்தாள்..
ரிங்க் போய்க் கொண்டேயிருந்ததை தவிர, அதை எடுப்பதற்கான வழியைத் தான் காணவில்லை..
“நிரோ.. நிரோ.. பிக்கப்.. பிக்கப் த கால்..” என மனதுக்குள் உருப்போட்டுக் கொண்டே, மெல்ல எழுந்தவளின் கண்களோ திரையில் தெரிந்த அவ்வியக்தன் என்ற கான்டக்ட் நம்பரிலேயே நிலைத்திருந்தது..
அவனின் நம்பர் தான் அது.. போன முறை செக்கப்க்கு செல்லும் போது, அவ்வியக்தனும் உடன் வந்தான்..
குழந்தையின் உடல்நிலையைப் பற்றி டாக்டரிடம் விசாரித்தவன், அவளின் போனில் தன் நம்பரை ஷேவ் பண்ணி விட்டே சென்றான்..
அவன் சேமித்த நம்பரை விட்டேற்றியாக நினைத்தவள், அந்த நிமிடமே மறந்து விட்டாள்.
ஆனால் இன்று, கைகள் ஏனோ தானாக அவன் நம்பரை தான் அழுத்தியது..
முழுதாக ஒரு நிமிடம் ரிங்க் போய்க்கொண்டேயிருந்தது..
எதிர்முனையில் யாருமே எடுக்கவில்லை என்றதுமே சட்டென்று போனை கட் பண்ணி விட்டாள்..
“இனி என்ன செய்வது?.” என யோசித்துக் கொண்டிருந்த பிருந்தாவின் போன் நம்பர் அலறியது..
அவ்வியக்தன் தான் அழைத்திருந்தான்..
எடுக்கலாமா? வேண்டாமா? என தவித்தபடி அமர்ந்திருந்தவளின் கைகளோ தானாக போனின் அழைப்பை எடுத்தது..
அழைப்பை எடுத்தவளுக்கு பேசத் தான் மனமின்றிப் போனது..
“ஹலோ.. பிருந்தா?..” என்ற குரலில், வயிற்றில் இருக்கும் குழந்தை.. தந்தையின் குரலைக் கேட்டு சந்தோஷத்தில் உதைத்ததா? இல்லை தான் உலகைக் காணும் நேரம் நெருங்கிவிட்டதை அறிந்து உதைத்ததா? என அறிவதற்கு முன்பாக..
குழந்தை உதைத்த உதையில் பிருந்தா தன்னை மறந்து, “அம்மாஆஆஆ” என அலறியே விட்டாள்..
முன்பெல்லாம் குழந்தை உதைக்கும் போது சிறு வலி மட்டுமே தோன்றும்.. ஆனால் இந்த வலி உயிர் போய் உயிர் வந்தது..
அவளின் அழுகையோடு கலந்த குரலைக் கேட்டவனுக்கு உடல் தூக்கிவாரிப் போட, வேகமாக எழுந்து அமர்ந்தான்..
இரண்டு நாட்களாக குடியின் பிடியில் இருந்தவன், காலை வேளையில் தான் உறங்க ஆரம்பித்திருந்தான்..
“பிருந்தா.. பிருந்தா..” என அவளை அழைத்துக் கொண்டே, காதில் ப்ளூடூத்தை எடுத்து மாட்டியவன், வேகமாக கார் சாவியை எடுத்துக் கொண்டு மாடிப்படியில் இருந்து கீழே இறங்கினான்..
“டேய்ய்ய். எங்கே டா போற?..” என மிதுனை அவன் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை..
வேகமாக ஓடியவன், “பிருந்தா. பிருந்தா.. நான் பேசுறது கேட்குதா?.. நான் வந்துட்டே இருக்கேன்.. கொஞ்சம்.. கொஞ்சம் பொறுத்துக்கோ..” என்றவனுக்கு தெளிவாக கேட்டது பிருந்தா அழும் அழுகை.
நிச்சயமாக அது குழந்தை பிறப்பதற்கான அறிகுறி என்பதை அவனும் அறிந்துக் கொண்டான்..
ஒரு மணி நேரத்தில் கடந்து வர வேண்டிய தொலைவை அரை மணி நேரத்தில் வந்து சேர்ந்தான் அவ்வியக்தன்..
நேராக உள்ளே வர, சோபாவில் அழுகையுடன் அமர்ந்திருந்தாள் பிருந்தா..
அவளின் கண்களில் அவ்வளவு கண்ணீர். ஏனோ அவளின் கண்ணீர் உயிர் வரை சென்று தாக்கியது அவனை..
“பிருந்தா.. பிருந்தா..” என அழைத்துக் கொண்டே வந்தவன், நொடி தாமதிக்காமல் அவளை கையில் ஏந்திக் கொண்டான்..
காரில் ஒழுங்காக உட்காரக் கூட முடியவில்லை அவளால்.. வலியில் உயிர் போனது அவளுக்கு..
அத்தனை வேகத்தில் ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து வந்தான்..
பிருந்தாவை செக் செய்த டாக்டர். கர்ப்பப்பை வாய் இன்னும் சரியாக திறக்கவில்லை.. குழந்தை பிறப்பதற்கு இரவு நேரமாகும் என சொல்லி விட, அதிர்ச்சியில் வாயை பிளந்து விட்டாள் பிருந்தா..
“என்ன நைட்டாகுமா?..” என மைனாக்குஞ்சு வாயைப் பிளந்தபடி வைத்திருந்தவளை சிறு சிரிப்புடன் பார்த்தான் அவ்வியக்தன்..
“பின்னே உடனே குழந்தை பிறந்திடுமா?.. உனக்கு வந்திருக்கிறது டெலிவரி பெயின் தான்.. பட் குழந்தை பிறக்கிறது எல்லாம் சொல்ல முடியாது..” என்றவனை வலியுடன் ஏறிட்டுப் பார்த்தாள் பிருந்தா..
5 நிமிடம் வலியே இல்லாததை போல் உணர்ந்தாள்.. ஆனால் அதற்கடுத்த 10 நிமிடம் வலியில் துடித்து அழுதாள்..
வலியில் துடிக்கும் பொழுதெல்லாம் அவ்வியக்தன் கை தான் அவளுக்கு பலமே..
அவன் கையைப் பிடித்தவளின் கரங்களோ, அநியாயத்திற்கு நடுங்கியது..
“என்னடா இவ இப்படி பயப்படுறா?.. ” என நினைத்த அவ்வியக்தனுக்கு, அவளின் பயம், அழுகை இரண்டுமே இவனை மிரட்டியது..
“கொஞ்சம் ரிலாக்ஸா இரு பிருந்தா.. அப்போ தான் குழந்தையை நல்லபடியா பெத்துக்க முடியும்”
“ஓஹோ.. அப்போ தான் நீ குழந்தையை தூக்கிட்டுப் போக முடியும்.. போடா நான் என் குழந்தையை யாருக்கும் தரமாட்டேன்.. உன்னை யாருடா கூப்பிட்டது?..”
“ஏது டா வா?..”
“அம்மாஆஆஆ..” என அதற்குள் வலியில் கத்தினாள்..
ஒரு நிமிடம் நன்றாக பேசினாள்.. மற்றொரு நிமிடம் அவனை மானாவாரியாக திட்டித் தீர்த்தாள்..
பிரசவ வலியில் அவளுக்கு என்ன பேசுகிறோம் என்றே புரியவில்லை.. அடிக்கடி பார்த்தீபனையும் திடடித் தீர்த்தாள்..
சில நிமிடம் ஏதோதோ சொல்லி அழுதாள்.. அவள் ஏன் அழுகிறாள் என புரியாவிட்டாலும், அவளின் கைகளை பிடித்தபடி அமர்ந்திருந்தான் அவ்வியக்தன் உற்ற துணையாக..
ஒரு கட்டத்தில் தாள முடியாமல் வாய் விட்டு கதறியழுதவளை பிரசவ அறைக்குள் அழைத்துச் சென்றனர் தாதியர்கள்..
அழைத்துச் சென்ற பின்னரும், பிருந்தாவின் அழுகைக் குரல் மட்டுமே வெளியில் கேட்டது..
“அம்மாஆஆஆஆ.. அம்மாஆஆஆ..” என்றவள் யார் யாரையோ அழைத்தாள்..
ஆனால் அவர்கள் யாரும் வந்து அவள் வலியை தாங்கிக்கப் போவதில்லையே..
குழந்தை என்ற பொக்கிஷம் தங்கள் கைக்கு கிடைக்க வேண்டுமாயின் வலி என்ற சாவியால் மட்டுமே முடியும்..
வலியில் ஒரு வித மயக்கத்தை தழுவ ஆரம்பித்திருந்தாள் பிருந்தா..
அவளை மயக்கத்தில் இருந்து விடுவிக்க எவ்வளவோ போராடினார்கள் தாதியர்கள்..
ஆனால் யாராலையும் அவளை மயக்கத்தில் இருந்து விடுவிக்க முடியவில்லை..
“சார்.. சார்..” என நர்ஸ் ஒருவர் வேகமாக அறையில் இருந்து வெளியே ஓடி வந்தார்.
“என்னாச்சி சிஸ்டர் எனி ப்ராப்ளம்?..” என அவ்வியக்தனை முந்திக்கொண்டு வந்து நின்றாள் நிரோஷா..
இப்பொழுது தான் தகவல் அறிந்து வந்திருக்கிறாள்..
“அவுங்க புருஷன் யாரு?..” என்றதும் திருதிருவென முழித்தனர் இருவரும்..
“சார் சொல்லுங்க பேஷன்டோட புருஷன் யாரு?..” என்றார்..
இருவரின் அமைதி அவரைக் கடுப்பேற்றியதோ என்னவோ?.. “என்ன ரெண்டு பேரும் அமைதியா இருக்கீங்க?.. புருஷன் எங்கே ம்மா?. புருஷன் இல்லாமலா புள்ளை வந்தது?..”
“அந்தக் குழந்தையோட அப்பா நான் தான்..” என ஓரடி முன்னே வந்த அவ்வியக்தனை ஒரு மார்க்கமாக பார்த்தார் நர்ஸ்..
“ஏன் இதை சொல்ல இவ்வளவு நேரமா?. நான் எவ்வளவு நேரம் கேட்கிறேன்.. புருஷன் யாரு?.. புருஷன் யாருன்னு.?” என சலிப்பாக சொன்னவர், அவன் முன்னால் ஒரு பார்மை நீட்டினார்..
“என்னதிது?..” என கேட்டாள் நிரோஷா..
“பேஷன்ட் மயங்கி விழுந்தட்டாங்க சார்.. நாங்க எவ்வளவு ட்ரை பண்ணியும் மயக்கத்துல இருந்து வெளியே கொண்டு வர முடியலை.. அதான் ஆப்ரேஷன் பண்ணலாம்னு இருக்கோம் சார்.. கையெழுத்துப் போடுங்க..” என்றதும் அவ்வியக்தனுக்கோ, இனம் புரியாத பயம் ஏற்பட்டது..
“ஆப்ரேஷன் பண்ணா அவளுக்கு ஏதும் ஆகாதுல்ல..” என நிரோஷா கேட்டாள்..
“குழந்தைக்கு ஏதும் ஆகாதுல்ல..” என கேட்ட அவ்வியக்தனை தீயாக முறைத்தாள் நிரோஷா.
“சார் நீங்க கையெழுத்துப் போட்டா, நாங்க சிக்கீரமாக ப்ரோசிஜர் ஸ்டார்ட் பண்ணிடுவோம்.. போடுங்க சார் ப்ளீஸ்..” என்றவர் நீட்டிய பார்மில் தயங்காமல் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான்..
ஆப்ரேஷன் முடியும் வரை அறை வாசலிலேயே காவலாய் கிடந்தனர் நிரோஷாவும், அவ்வியக்தனும்..
பல போராட்டத்திற்கு பிறகு மண்ணில் வந்து உதித்தான் அவ்வியக்தன் - பிருந்தாவின் தவப்புதல்வன்..
குழந்தையின் அழுகையை கேட்டவனுக்கு அவனையும் அறியாமல் சந்தோஷம் அவன் முகத்தில் வந்துப் போனது..
“சார் டவல் கொடுங்க..” என தாதி ஒருவர் வெளியே வந்து கேட்க, அவ்வியக்தன் திருதிருவென முழித்தான்..
நிரோஷா தான் கொண்டு வந்த பையில் இருந்து உடனே எடுத்துக் கொடுத்தாள்..
சிறிது நேரத்தில் அழகிய பேபி பிங்க் கலர் டவலில் புத்தம் புது ரோஜாய் மலராய், கருவறை விட்டு மண்ணகம் வந்து பூவை பார்த்து கண்களோடு சேர்ந்து உதடுகளும் மலர்ந்தது அவ்வியக்தன்..
“என் பையன்..” என உதடுகள் மெல்ல முணுமுணுக்க.. நிரோஷாவின் கைகளில் இருந்த குழந்தையின் முகத்தை ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்தான்..
அவனின் கண்களில் தெரிந்த ஆசையில், “தூக்குறீங்களா?..” என நிரோஷா கேட்டாள்..
“இல்லை.. இல்லை எனக்கு குழந்தையை தூக்க எல்லாம் தெரியாது?..” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே தாதி ஒருவர் ஆப்ரேஷன் அறையில் இருந்து வெளியே வந்து குழந்தையை வாங்கிக் கொண்டு சென்று விட்டார்..
குழந்தையின் எடை, குழந்தை பிறந்த நேரம் எல்லாவற்றையும் எழுதி குழந்தையின் கையில் மாட்டி விட்டிருந்தனர்..
சிறிது நேரத்தில் பிருந்தாவை நார்மல் வார்டிற்கு மாற்றியிருந்தனர்..
இன்னும் மயக்கம் தெளியாமல் தான் இருந்தாள் பிருந்தா..
சில மருந்துகள் மெடிக்கலில் வாங்கி வரச்சொல்லி நிரோஷாவிடம் தாதியர் சொல்லியிருந்ததால், அவள் மருந்து வாங்க சென்றிருந்தாள்..
அவ்வியக்தன் குழந்தையை தூக்கிச் சென்று விடலாம் என அறைக்குள் சென்றான்..
குழந்தையை தாயின் அருகிலேயே படுக்க வைத்திருந்தனர்.. மயக்க நிலையிலும் குழந்தையை வலது கரத்தால் அணைத்தபடி படுத்திருந்தாள்..
அவளின் முகத்தில் அவ்வளவு சோர்வு.. வேகமாக குழந்தையை தூக்கச் சென்றவனின் போன் அலறியது..
அங்கிருந்த நர்ஸ் ஒருவர் அவனை திரும்பிப் பார்க்க, சட்டென்று போனை எடுத்துப் பார்த்தான்..
அவனின் க்ரேனி திரிபுர சுந்தரி தான்..
சட்டென்று நெற்றியை நீவிவிட்டு போனை எடுத்தான்..
“எப்படியிருக்க அவ்வி?..” என்றவரின் பார்வை சற்று கூர்மையாகியது..
“எங்கே இருக்க அவ்வி?.. பார்க்க ஹாஸ்பிட்டல் மாதிரி இருக்கு?..” என்றவரைக் கண்டு தூக்கிவாரிப் போட்டது அவனுக்கு..
“அது வந்து க்ரேனி.. க்ரேனி..” என இழுத்துக் கொண்டிருந்தான்..
“சார் பையனைக் கொஞ்சம் பிடிங்க..” என நர்ஸ் ஒருவர், பூங்குவியலை அவன் கையில் கொடுத்து அவன் போனை வாங்கி விட்டார்.. எதிரில் வீடியோவில் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரியின் விழிகளில் விரிந்தது..
“யார் குழந்தை அவ்வி இது?.. பார்க்க உன்னை மாதிரியே இருக்கு..” என்றவரை மேலும் அதிர்ந்து பார்த்தான்..
"என் குழந்தை தான் க்ரேனி.." என்றான்..
"அப்போ என் பேத்தி எங்கே டா?.." என்றவருக்கு, அந்த நர்ஸே படுக்கையில் இருந்த பிருந்தாவை காட்டினார்..
நர்ஸ் செய்தது அதிகபட்சம் என அவனுக்கே தோன்றியது.. அவரை அடித்து நொறுக்கிவிடும் வேகம் கூட வந்தது..
"சிஸ்டர் என்ன பண்றீங்க?.." என அவ்வியக்தன் நர்ஸை அதட்டினான்..
போனை அணைத்து விட்டு அந்த நர்ஸ் அவ்வியக்தனை திரும்பிப் பார்த்தவர், "சார் உங்க ஒய்ப் மேல நீங்க எவ்வளவு பாசம் வச்சிருக்கீங்கன்னு நான் பார்த்துட்டு தான் சார் இருந்தேன்.." என்றவர் அவ்வியக்தன் கைகளில் இருந்த குழந்தையை வாங்கிக் கொண்டார்..
இன்னும் மயக்கம் தெளியாமல் படுத்திருந்தாள் பிருந்தா..
அவளின் அருகில் சென்ற அவ்வியக்தன் அவனையும் அறியாமல், பிருந்தாவின் நெற்றியில் இதழ் பதிக்க, அந்நேரம் கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள் நிரோஷா..
அவளின் கண்களுக்கு தப்பாமல் பட்டது இந்தக் காட்சி..
குழந்தை பிறந்து முடியாமல் கிடப்பவளிடம் தன் இச்சையை தீர்க்கப் பார்க்கிறானே, என்பது போல் தான் பார்த்து வைத்தாள் நிரோஷா..
Last edited: