M.Indumathi
Well-known member
Nice
Super sisபிரம்மா 21
அன்றிரவு அவளுடன் வேலை செய்யும் சக ஊழியர்களுக்கு ஹோட்டலில் டின்னர் கொடுக்க அவள் ஏற்பாடு செய்து இருக்க, குளித்து விட்டு முதலில் ஜீன்சை எடுத்தவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை அதனை வைத்து விட்டு புடவையை எடுத்தாள் உடுப்பதற்காக.
அதே சமயம், அவனும் குளித்து விட்டு ஜீன்சும் நீல நிற ஷேர்ட்டும் அணிந்து அதனை இன் பண்ணி விட்டவன் அதன் கையை முட்டி வரை மடித்து விட்டான். அவன் கட்டுடலோ அந்த ஷேர்ட்டை மீறி வெளியே தெரிய, ஹாலுக்குள் வந்து அவளுக்காக நேரத்தைப் பார்த்தபடி காத்துக் கொண்டு இருந்தான்.
நீண்ட நேரம் ஆன போதும் கூட அவள் வராமல் இருக்க, பொறுமை இழந்தவன் "ஷாந்தி, இவ்ளோ நேரமா என்ன பண்ணுற?" என்று கேட்க அவளோ "இதோ வந்துட்டேன் சார்" என்று சொல்லிக் கொண்டே புடவையுடன் வந்தவள் கெஞ்சுதலான குரலில் "இன்னைக்கு புடவை கட்டினேன் அது தான் லேட் ஆயிடுச்சு" என்று சொல்லிக் கொண்டே அவனை நோக்கி வர, தாமதமாக வந்ததால் கடுப்பாக அவளை நோக்கிய கண்கள் புடவையில் இருந்தவளை ரசனையாக நோக்கியது. அவளோ கையில் இருந்த மாலையைக் காட்டி, "இத போட தான் இவ்ளோ நேரம் ஆச்சு, போடவே முடியல, இட்ஸ் ஓகே, வாங்க போகலாம்" என்று சொல்லிக் கொண்டே முன்னே செல்ல, அவனோ அவளது கையை பிடித்தவன் "கொடு" என்று கையை நீட்டி அந்த மாலையை வாங்கிக் கொண்டான். அவளோ அவனை விழி விரித்துப் பார்க்க, "என்னையே பார்த்துட்டு இருந்தா எப்படி போட்டு விடுறது? திரும்பு" என்று சொல்ல, அவளும் கூச்சத்தோடு பின் பக்கம் திரும்பிக் கொள்ள, அவனோ மாலையை முன்னால் போட்டுக் கொண்டே பின்னால் எடுத்தவன், கழுத்தடியில் இருந்த அவள் முடியை தள்ளி வைத்து விட்டே மாலையின் கொக்கியை மாட்ட போன போது தான் கவனித்தான் அது நெளிந்து இருக்கின்றது என்று. உடனே "இப்படி நெளிஞ்சு இருந்தா எப்படி போட முடியும்? அத பார்க்க மாட்டியா?" என்று கேட்க, அவளோ "லேட் ஆயிடுச்சுன்னு எதையுமே கவனிக்கல சார்" என்று பதிலளிக்க, அவனோ இதழ் குவித்து "ஊப்" என்று ஊதினான். அவன் இதழில் இருந்து வந்த காற்று அவள் கழுத்தில் மோத அவளுள் ஒரு வித சிலிர்ப்பு தோன்ற கண்களை மூடிக் கொண்டாள். அவனோ மாலையை போட்டு விட்டவன் அந்த கொக்கியை பல்லினால் இறுக்க நினைத்து அவள் கழுத்தடியினை நோக்கி குனிந்து கொள்ள, அவன் மூச்சு காற்றை உணர்ந்தவள் விழிகளோ பட்டென்று விரிந்து கொண்டது. இந்தளவு நெருகத்தில் அவன் இருந்தால் அவளும் என்ன தான் செய்வாள். அவனோ கொக்கியை பல்லினால் அழுத்திய சமயம், அவன் இதழோ அவள் பின்னங் கழுத்தில் உரச, அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது. "என்னோட நிலைமை புரியாம ஏன் இப்படி பண்ணுறார்" என்று புலம்பியவள் கண்களை மூடிக் கொண்டே நிற்க, அவனும் கொக்கியை சரி செய்து விட்டு "இப்போ ஓகே" என்று சொல்லிக் கொண்டே அவளைப் பார்க்க, அவளோ அவனை ஏறிட்டுப் பார்த்தவள் ஒன்றும் சொல்லாமல் முன்னே செல்ல ஆயத்தமானாள். அவனோ மீண்டும் அவள் கையை பிடிக்க, அவளோ அவனை விழி விரித்துப் பார்க்க, "வரும் போது கண்ணாடி பார்க்க மாட்டியா?" என்று கேட்டவன் கன்னத்தில் இருந்த குங்குமத்தை தனது விரல் கொண்டு அழுத்தி துடைக்க, அவள் விழிகளோ எப்படி அவள் முயன்றும் தடுக்க முடியாமல் அவன் ஸ்பரிசத்தை ரசித்துக் கொண்டே மூடிக் கொண்டது.
அதுவரை அவளது உணர்வு போராட்டத்தை அறியாதவன், இப்போது தான் அவள் மூடிய விழிகளையும் விரிந்த அதரங்களையும் பார்க்கின்றான். அதைக் கண்டவனுக்கும் அடக்கி வைத்து இருந்த உணர்வுகள் பீறிட்டு வர, மெல்லிய புன்னகையுடன் அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே அவளது கன்னத்தை தனது பின்னங்கையால் வருட, அவள் கரமோ மேலெழுந்து அவனது ஷேர்ட் காலரை இறுக பற்றிக் கொண்டது. விழிகளை தாழ்த்தி அவளது கரத்தைப் பார்த்தவன் கண்களோ அவளது மென் கன்னத்தில் படிய, சற்றும் தயக்கம் இன்றி அவளது கன்னத்தில் தனது முதல் அச்சாரத்தைப் பதிக்க, அவளோ ஆழ்ந்த மூச்சுக்களை விட்டு உணர்வுகளை வெளிப்படுத்த, அவள் கரமோ அவனது அயர்ன் பண்ணிய ஷேர்ட்டை கசக்கிக் கொண்டு இருந்தது. அவனோ அவளது மேனி உரசும் நெருக்கத்தில் மேலும் நெருங்கிக் கொண்டவன் அடுத்த அச்சாரத்தை அவள் அடுத்த கன்னத்தில் பதித்தான். அவளுக்கோ உடம்பெல்லாம் ஒரு சிலிர்ப்பு உருவாக, அவனோ தனது மூன்றாவது முத்தத்தை அவள் நாசியில் பதிக்க, உணர்வுகளை அடக்கிக் கொண்டே கண்களை திறந்து அவனது மோக விழிகளை நோக்கியவள் "சார் லேட் ஆகுது" என்று சொல்ல, அவனோ "ஆகட்டுமே" என்று அவளது இதழ்களை பார்த்துக் கொண்டே கூற, அவன் அடுத்த நடவடிக்கையை உணர்ந்தவள் "எல்லாரும் பார்த்துட்டே இருப்பாங்க" என்று சொல்லிக் கொண்டே அவன் மார்பில் கை வைக்க, அவனோ அவள் இடையை ஒற்றைக் கையால் சுற்றி தன்னை நோக்கி இழுத்தவன் "என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியலடி" என்று ரகசிய குரலில் கூறி விட்டு, அதிர்ச்சியில் விரிந்து இருந்த அவளது கீழ் அதரங்களை அழுத்தமாக கவ்விக் கொள்ள, அவள் விழிகளோ மூடிக் கொள்ள, அவன் விழிகளும் அவளது இதழ் கொடுக்கும் இன்பத்தை ரசித்தபடி மூடிக் கொண்டது.
நீண்ட முத்தமது , இடை விடாமல் தொடர இருவரையும் நிதானத்துக்கு கொண்டு வந்தது அஜய்யின் போன் தான். அவள் இதழில் இருந்து இதழை பிரித்தெடுத்தவன் அவளை விழுங்கும் பார்வை பார்த்துக் கொண்டே போனை எடுக்க, "சார், நாங்க எல்லாரும் வந்துட்டோம்" என்று அவனுடன் வேலை செய்யும் ஒரு போலீஸ்காரன் சொல்ல, "இன்னும் டென் மினிட்ஸ் ல வந்திடுறோம்" என்று சொன்னவன் அவளை ஆழ்ந்து பார்த்து "எல்லாரும் வந்துட்டாங்களாம்" என்று ஏமாற்றமான குரலில் இதழ் பிதுக்கி சொல்லிக் கொண்டே முன்னே செல்ல, அவளும் அவனை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் பின்னால் தலையைக் குனிந்தபடி ஒரு வெட்க சிரிப்புடன் சென்றாள்.
ஜீப்பில் ஏறி ஜீப்பை எடுத்தவன் முகத்திலும் ஒரு பரவசம். இருவருக்குமான முதல் முத்த அனுபவம் அல்லவா? கசக்குமா என்ன? அவனுக்கோ அவளை மொத்தமாக அடைந்து விடும் அளவுக்கு உணர்வுகள் பேயாட்டம் ஆடிக் கொண்டு இருக்க, அதைக் காட்டாமல் இருக்க பெரும்பாடு பட்டுப் போனான். இப்படி அவள் மீது காதல் வரும் என்று அவனே எதிர்பார்க்கவில்லை. அவனே அந்த நிலைமை என்றால் அவளை சொல்லவே வேண்டாம். அவன் முத்தத்தின் தித்திப்பு இன்னும் அவள் இதழ்களில் நினைத்து இருக்க, சங்கடத்துடன் அவன் அருகே ஏறிக் கொண்டாள். இருவரிடமும் மௌனமே ஆட்சி செய்ய, அவர்கள் டின்னர் ஏற்பாடு செய்து இருந்த ரெஸ்டூரண்ட்டை வந்து அடைந்தார்கள்.
அங்கே இருந்தவர்களுடன் பேசி சிரித்ததில் இருவருக்கும் உணர்வுகள் மட்டுப்பட்டு இருந்தாலும் ஒருவரை விட்டு ஒருவர் அகலவே இல்லை. ஒருவன் அஜய்யின் கசங்கி இருந்த ஷேர்ட்டை காட்டி, "என்ன சார் இந்த இடத்துல அயர்ன் பண்ண மறந்துட்டிங்களா ?" என்று கேட்க அவனோ "க்கும்" என்று குரலை செரும, பக்கத்தில் இருந்தவளோ சங்கடமாக அவனைப் பார்க்க, அவனோ அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே "லேட் ஆயிடுச்சு, அது தான்" என்று சொன்னான்.
சாப்பிட அமரும் போது கூட அவன் அருகே தோள்கள் உரச உரிமையாக தான் அமர்ந்து கொண்டாள். அவனுக்கும் அவள் நெருக்கம் என்னவோ செய்ய எப்போது டின்னெர் முடியும்? எப்போது வீட்டுக்கு செல்லலாம்? என்கின்ற எண்ணமே ஓடிக் கொண்டு இருந்தது. சாப்பிட்டு முடிய, அவளோ பர்சில் இருந்து காசை எடுக்க, அவள் கையில் கை வைத்தவன் தனது பின் பாக்கெட்டில் இருந்த பர்ஸை எடுத்து கார்டை கொடுத்தான். அவளோ "என் பார்ட்டி தானே சார், நான் தானே காசு கொடுக்கணும்" என்று சொல்ல, அங்கிருந்தவனோ "யார் கொடுத்தா என்ன ஷாந்தி,?" என்று கேட்க, அஜய்யோ ஒற்றை புருவம் உயர்த்தி "எப்படி?" என்கின்ற ரீதியில் கேட்க அவளோ மென் சிரிப்புடன் முன்னே திரும்பிக் கொண்டாள். இருவரும் வீட்டுக்கு வரும் போது கூட பெரிதாக பேசிக் கொள்ளவே இல்லை.
வீட்டுக்கு வந்து காரை பார்க் பண்ணி விட்டு ஜோடியாக சென்ற போது அவளோ கையில் இருந்த திறப்பினால் வீட்டு கதவை திறக்க முற்பட, அவனோ அவள் மீது மொத்தமாக சரிந்து அவள் கை மீது கையை வைத்து திறந்தான். அவளும் ஒரு கூச்சத்துடனேயே உள்ளே அடி மேல் அடி வைத்து செல்ல, அவனோ வாசல் கதவை தாளிட்டு விட்டு அவள் முதுகைப் பார்த்துக் கொண்டே ஷேர்ட் பட்டனைக் கழட்டியபடி பின் தொடர, அவனை பக்கவாட்டாக திரும்பி பார்த்தவளுக்கு அவன் அவளையே விழுங்கி விடுவது போல பார்த்துக் கொண்டே ஷேர்ட்டை கழட்டுவது என்னவோ செய்தது. அடுத்த கணமே, தலையை குனிந்தபடி தனது அறைக்குள் செல்ல போனவளது இடையை பற்றி கண நேரத்தில் தன்னை நோக்கி இழுத்துக் கொண்டவன் அவளது கழுத்து வளைவில் முகம் புதைக்க, அவளோ "சார், வேணாம்" என்று சொன்னாலும் அவள் கண்கள் அவனது ஸ்பரிசத்தில் மூடிக் கொண்டது. அடுத்த கணமே அவளை தன்னை நோக்கி திருப்பியவன் அவள் இதழில் முத்தமிட்டுக் கொண்டே தனது அறைக்குள் கொண்டு சென்றான். அவளும் கணவன் அணைப்பிலும் முத்தத்திலும் அடங்கி போக, அவனது மஞ்சத்தில் அவர்கள் தாம்பத்தியம் அரங்கேறி போனது. அவளை மொத்தமாக கொள்ளை இட்டு விட்டு விலகி படுத்தவன் அவளை பக்கவாட்டாக பார்க்க, அவளோ வெட்கத்துடன் முகத்தை மறு பக்கம் திருப்பிக் கொண்டாள். அவனோ "நீ தான் நான் ஒண்ணுமே தரலன்னு பீல் பண்ணுன.. மொத்தமா என்னையே தந்துட்டேன்... இதுக்கு மேல வேற ஏதும் வேணுமா?" என்று கேட்க அவளோ இல்லை என்று தலையாட்டி விட்டு வெட்கத்துடன் அவனை அணைத்துக் கொண்டே அவனது திண்ணிய மார்பில் தலை சாய்த்து படுத்துக் கொண்டாள்.
அவன் காதல் காயத்துக்கு அவள் மருந்தாக, இருவரும் வாழ்க்கையை ஒன்றாக வாழ ஆரம்பித்து இருந்தார்கள். அவனோ "இனி சார்ன்னு கூப்பிடாதே, மூடே போகுது." என்று சொல்ல, அவளும் "அஜய்" என்று அவனை அழைக்க ஆரம்பித்து இருந்தவளோ அடுத்தடுத்த மாதங்களில் அவனது குழந்தையையும் சுமக்க ஆரம்பித்து இருந்தாள்.