ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பிரம்மா 23

பிரம்மா 23

அடுத்தடுத்த நாட்கள் அப்படியே நகர அன்று அவன் முடிக்க வேண்டிய வேலைகளை முடித்து இருந்தான். ஆய்வுகூடத்தில் இருந்தபடியே நேரத்தைப் பார்க்க அது மணி பத்தைக் காட்டியது.. பெருமூச்சுடன் அறைக்குள் செல்ல போனவன் ஒரு கணம் நின்று அவளது அறைக் கதவை தட்ட, அவளோ தூக்க கலக்கத்தில் கொட்டாவி விட்டபடி கதவை திறந்தவள் "சொல்லுங்க சித்தார்த்" என்று சொன்னாள். அவனோ அவளை மேலிருந்து கீழ் பார்த்து விட்டு "எனக்கு முக்கியமான ஒரு வேலை இருக்கு.. வில் யூ ப்ளீஸ் ஹெல்ப் மீ?" என்று கேட்க "இப்போவா?? " என்று கேட்டவள் கொட்டாவி விட்டபடி "சரி வரேன்" என்று சொல்லிக் கொண்டே பின்னால் சென்றாள். அறைக்குள் சென்றதுமே கதவை சாத்தியவன் அவளை அங்கிருந்த சோபாவில் இருக்க சொல்லி விட்டு மேசையில் இருந்த புத்தகத்தை தூக்கி கொடுத்து "படிச்சிட்டு இரு.. குளிச்சிட்டு வரேன்" என்றான். அவளோ மனசுக்குள் "சும்மாவே தூங்குது.. இதுல சயன்ஸ் புக் படிச்சா கும்பகர்ணன் போல தூங்க போறேன்" என்று நினைத்தவள் "என் மேல உங்களுக்கு இருக்கிற நம்பிக்கையை பார்க்கும் போது புல்லரிக்குது" என்று சொல்ல அவனோ "அரிக்கும் அரிக்கும்" என்று நக்கலாக சொல்லி விட்டு அங்கிருந்த டிராக்கில் ஷேர்ட்டை கழட்டி போட்டு விட்டு குளிக்க குளியலறைக்குள் நுழைந்து கொண்டான். படிப்பதற்காக புத்தகத்தை திறந்தவளுக்கோ தூங்கி வடிய அப்படியே சோபாவில் தூங்கி இருந்தாள்.

அவனோ குளித்து விட்டு இடையில் காற்சட்டையுடன் மட்டும் வந்தவன் அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே "சரியான கும்பகர்ணி" என்று முணுமுணுத்துக் கொண்டே பக்கத்தில் இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு நெருங்கி அமர்ந்தவன் அவளது நெற்றியில் இதழ் குவித்து ஊத அவளோ சிறிய முனகலுடன் கண்களை மூடி மீண்டும் தூங்க ஆரம்பித்தாள். அவனுக்கோ அன்று அவளுக்கு உடை மாற்றிய எண்ணம் வேறு வந்து சித்தமதை பித்தம் கொள்ள வைக்க, அவளது உச்சி முதல் பாதம் வரை உரிமையாக பார்த்தவனோ தனது நடு விரலால் நெற்றியில் இருந்து கோலம் போட தொடங்கினான். அவள் நாசி இதழ்கள் என்று அவன் விரல்கள் பயணித்து கழுத்தை அடைய, அவளோ ஏதோ ஊர்வது போல இருக்க, பதறி எழுந்தவள் அவனது கரம் கீழ் இறங்காமல் பற்றிக் கொண்டவளுக்கு நிதானதுக்கு வர நேரம் எடுத்தது. கொஞ்ச நேரம் தலையை உலுக்கி தன்னை சமன் செய்தவள் அவனைப் பார்த்து "தூங்கிட்டேனா?" என்று கேட்டாள் .

அவனோ அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே " ம்ம் " என்று சொல்ல "நீங்க என்ன பண்ணுனீங்க?" என்று அவள் கைக்குள் இருந்த அவனது கையை பார்த்துக் கொண்டே கேட்க, அவனோ "உன்னை எழுப்புனேன்" என்றான் சற்றே கரகரத்த மோகம் கலந்த குரலில். அவன் தான் இப்பொது மோகத்தின் உச்சத்தில் இருக்கின்றான் அல்லவா? அவளும் "ஓஹ்" என்றபடி அவனது கையை விட்டவள் "அப்படி என்ன முக்கியமான வேலை??" என்று கேட்டாள். அவனோ அவளை நோக்கி சற்றே முன்னால் சரிந்து இருந்தபடி அவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்துக் கொண்டே "ரீ ப்ரொடக்டிவ் சிஸ்டெம் பத்தி படிச்சு இருக்கியா?" என்று கேட்க அவளோ "இனப்பெருக்கம் பத்திதானே.. ம்ம்.. படிச்சி இருக்கேன்.. அதுல ஏதும் ஆராய்ச்சி பண்ண போறீங்களா?" என்று கேட்க அவனோ "ம்ம் அப்படியும் சொல்லலாம்.. அத தியரிட்டிகல் ஆஹ் தான் படிச்சு இருப்ப... நானும் அப்படி தான் படிச்சு இருக்கேன்" என்று சொல்ல அவளோ "ம்ம்" என்று சொன்னாள். அவனோ "அதில இன்னைக்கு பிராக்டிகல் பண்ணலாம்னு இருக்கேன்.. அதுக்கு ஹெல்ப் பண்ண தான் உன்னை கூப்பிட்டேன்" என்று சொல்ல அவளோ "அதுல எப்படி பிராக்டிகல் பண்ண போறீங்க?" என்று கேட்டவளுக்கு இப்பொது தான் அவன் சொன்னது புரிய, விழிகளை விரித்துக் கொண்டு அதிர்ச்சியாக வாயில் கை வைத்தபடி எழுந்து நிற்க, அவனும் எழுந்து நின்றவன் "ஹெல்ப் பண்ணுவ தானே" என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்டான்.

அது வரை அவனது மோகப்பார்வையை கண்டு பிடிக்காதவள், இப்பொது தான் அவனது மோகப்பார்வையை கண்டு கொண்டாள்.. அவனைப் பார்த்துக் கொண்டே "சித்தார்த்.. இப்போ என்ன திடீர்னு??" என்று தட்டு தடுமாறி கேட்க அவனோ "எனக்கு தோணிச்சு" என்றவன் அவளை நோக்கி அடி மேல் அடி வைத்துக் கொண்டே நடந்து சென்றான். அவளோ "சித்தார்த்.. இதெல்லாம் சரி இல்ல.." என்று சொல்லிக் கொண்டே பின்னால் நகர , அவனோ "அன்னைக்கு நீ தானே கேட்ட?" என்று சொல்லிக் கொண்டே அவளை மேலிருந்து கீழ் பார்க்க, அவன் பார்வையில் அவளுக்கோ மூச்சடைத்து.. ஆனாலும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டே "அது ஏதோ சும்மா கேட்டேன்... இப்படி அதிரடியா கேட்டா நான் என்ன பண்ணுறது?? கொஞ்சம் இதுக்கெல்லாம் ரெடி ஆக வேணாமா??" என்று கேட்க "ரெடி ஆக என்னடி இருக்கு?? நான் ரெடியா தான் இருக்கேன்" என்று சொன்னான்.

அவளுக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி, சித்தார்த்தா இப்படி பேசுகின்றான் என்று.. முத்தமிடவே அனுமதி கேட்டவன் அவன். இன்று அவளை மொத்தமாக கொள்ளையிட தயக்கம் இன்றி நெருங்கி வருகிறான். அவளோ "ப்ளீஸ் கொஞ்சம் நேரம் டைம் கொடுங்க" என்று சொன்னவளை தொட்டு விடும் தூரத்தில் நெருங்கி இருந்தவன் அவள் காதருகே இதழ்கள் உரச குனிந்து " நான் உனக்கு.வேணுமா ? வேணாமா?" என்று தான் கேட்டான். அவள் எப்படி வேணாம் என்று கூறுவாள்?? ஆனாலும் தாம்பத்தியம் என்று சொன்னதுமே முதல் முறை பெண்களுக்கு உரித்தான தயக்கமும் பயமும் இருக்க தான் செய்தது. அவனை ஏறிட்டு பார்த்தவள் "வேணும் ஆனா" என்று சொல்ல அவனோ "என்ன ஆனா? " என்று புருவம் உயர்த்தி கேட்க, அவளோ மேலும் பின்னால் நகர்ந்துசெல்ல முடியாமல் அவளுக்கு பின்னால் கட்டில் இருந்தது. அவளை தாண்டி எட்டிப் பார்த்தவன் "சரியான இடத்துக்கு நீயே வந்துட்ட" என்று சொல்ல அவளோ அவனை அதிர்ச்சியாக பார்த்து "சித்தார்த் நீங்க இப்படி எல்லாம் பேசுவீங்களா?" என்று கேட்க, அவனோ "இத விட மோசமா கூட பேசுவேன் உன் கிட்ட மட்டும்" என்று சொன்னவனது வெற்று மார்பில் கை வைத்து அவனை மேலும் நெருங்க விடாமல் தடுத்தாள். அவனுக்கு தான் இதெல்லாம் பொருட்டே இல்லையே. அடுத்த கணமே அவன் தனது கரத்தை அவள் வயிற்றில்.வைத்து மெதுவாக கட்டிலில் தள்ளி.விட, அவளோ கட்டிலில் மல்லாக்க கொண்டு விழுந்தாள்.

தன் முன்னே ஆறடிக்கும் அதிகமான உயரத்தில் வெற்று மார்புடனும் படிக்கட்டு தேகத்துடனும் நின்றவனைப் பார்த்தவளுக்கோ இதயம் வேகமாக துடிக்க, அவனோ அடுத்த கணமே அவள் மீது படர்ந்து அவள் கழுத்தில் முகம் புதைத்தான். அவன் ஸ்பரிசத்தில் அவள் தன்னிலை இழந்தாலும் "கல்யாணத்துக்க்கு முதல் இப்படி இருக்கிறது தப்பில்லையா சித்தார்த்" என்று கேட்க, அவனோ "நாளைக்கு காலையிலேயே கல்யாணம் பண்ணிக்கலாம்... ஆனா அவ்ளோ நேரத்துக்கு எனக்கு பொறுமை இல்ல.. எனக்கு நீ இப்போவே வேணும்டி . கல்யாணம் ஆனாலும் ஆகலன்னாலும் என் குழந்தையை சுமக்க போறது நீ தான்.. அதுவும் இங்க தான்" என்று அவள் ஷேர்ட்டை உயர்த்தி அவளது வெற்று வயிற்றில் கையை வைக்க, அவள் விழிகளோ அவன் சூடான கரத்தின் உஷ்ணத்தால் மூடிக் கொண்டது.

அவனோ விழிகள் மூடி மோன நிலையில் இருந்தவளைப் பார்த்தவன், தனது இதழை அவள் நெற்றியில் பதித்தான். அவளோ அவன் வெற்று தோள்களில் தனது நக கண்களைப் பதிக்க, அவன் இதழ்கள் நாசி, கன்னம் என்று தீண்டி இறுதியாக அவள் இதழ்களில் தஞ்சம் அடைய, அவளோ அவன் இதழ் அணைப்பில் சித்தம் இழந்து போனவள் அப்படியே அவனுக்குள் அடங்கிப் போனாள். அவன் இதழ்களோ அவள் இதழ்களுக்குள் ஆழ புதைந்து முத்தமிட, அவன் கரமோ கீழிறங்கி அவள் ஷேர்ட் பட்டனில் கை வைத்து தனது செயலை செவ்வனே செய்தது.

ஆராய்ச்சியாளன் அவன் அல்லவா? அவளையும் மொத்தமாக ஆராய்ச்சி செய்தவன் அவளிடம் சொன்ன போலவே பிராக்டிகலை முடித்து விட்டு, விலகி படுக்க, அவளால் தான் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவே முடியாவில்லை. அவளது கன்னமும் இதழும் கண்ட மேனிக்கு சிவந்திருக்க அது அவன் இதழ் செய்த சாகசமா அல்லது வெட்கமா என்றும் கூட தெரியவே இல்லை.

அவன் விழிகளோ அப்போதும் "இன்னும் வேணும்" என்பதைப் போல அவளையே மேலிருந்து கீழ் பார்க்க, "சித்தார்த் அப்படி பார்க்காதீங்க" என்று சொல்லிக் கொண்டே அவளை இறுக அணைத்துக் கொண்டாள் வெட்கத்துடன், அவனோ வாய் விட்டு சிரித்தபடி அவளை அணைத்துக் கொண்டே தூங்கிப் போனான்.

அடுத்த நாள் காலையில் எழுந்தவன் தனது மார்பில் படுத்தவளை தள்ளிப் படுக்க வைத்து விட்டு அவள் நெற்றியில் முத்தம் பதித்தவன் எழுந்து சமயலறைக்குள் காபி போட நுழைந்து கொண்டான். அவளோ எழுந்த சமயம், அருகே கட்டில் வெறுமையாக இருக்க, கண்களை மூடி தன்னவன் கொடுத்த இதழ் அணைப்புக்களை நினைவு கூர்ந்தவள் "பார்க்க தான் அம்பி மாதிரி இருக்கிறது.. நேற்று பண்ணுனதெல்லாம்" என்று முணு முணுத்துக் கொண்டே அங்கிருந்த ஷேர்ட்டை எடுத்து அணிந்து கொண்டே தன்னவனை தேடி சென்றாள். அவனோ காபி கலக்கிக் கொண்டு இருக்க, அவன் இடையை அணைத்து வெற்று முதுகில் கன்னத்தை பதித்தாள் காயத்ரி. அவனோ அவளை முன்னால் இழுத்து இடையை பிடித்து தூக்கி அங்கிருந்த கட்டில் ஏற்றி வைத்தவன் அருகே இருந்த காபியை நீட்டி "குடி" என்று சொல்ல, அவளோ அவனைப் பார்த்துக் கொண்டே குடிக்க ஆரம்பித்தவள், "நீங்க குடிக்கலையா?" என்று கேட்க, "குடிக்க தான் போறேன்" என்று சொல்லிக் கொண்டே தனது இதழ்களை ஈரமாக்கி கொண்டே அவள் இதழ் மீது இதழ் வைத்து சொன்னதை செய்ய, அவளோ அவன் மார்பில் செல்லமாக தட்டியவள் "சித்தார்த், என்ன இப்படி பண்ணுறீங்க?" என்று கேட்க அவனோ காதருகே குனிந்து "இதுக்கு மேலயும் பண்ணுவேன்" என்று சொல்லி அந்தரங்க ரகசியம் பேச, அவள் முகமோ வெட்கத்தில் சிவந்து போனது. முத்தமும் அணைப்புமாக அவர்கள் நேரம் நகர, இருவரும் ஆயத்தமாகி கோவிலில் சென்று திருமணம் செய்து கொண்டார்கள்.

சித்தார்த்தை பொறுத்தவரை அவனுக்கு திருமணம், சடங்கு, சம்பிரதாயம் எல்லாம் நம்பிக்கையே இல்லை. ஆனாலும் அவளுக்காக அவள் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு அவள் நெற்றியில் குங்குமம் வைத்தான். அவளுக்கோ அவன் குங்குமம் வைக்கும் போதே கண்ணீர் கசிய, அவள் முகம் தாங்கி நெற்றியில் முத்தமிட்டவன் "ஆராய்ச்சி, கண்டுபிடிப்புன்னு இருக்கிற என் கூட வாழுறது உனக்கு போர் ஆஹ் இருக்கும் பரவாலயா ?" என்று கேட்க அவளோ, " பரவாயில்லை, எப்போவுமே அடுத்தவங்களை பத்தியே நினைச்சுட்டு இருக்கிற உங்கள நினைச்சுட்டு நான் இருப்பேன்.. நீங்க சோர்வாகும் போது எனெர்ஜி டானிக் ஆஹ் இருப்பேன்.. அப்புறம்" என்று சொல்ல, அவனோ அவள் வாயில் கை வைத்து " போதும் போதும் வர்ணனை ரொம்ப அதிகமா போகுது" என்று சொன்னவன் "வா ஒரு செல்பீ எடுத்துக்கலாம்" என்று மாலையும் கழுத்துமாக எடுத்த போட்டோவை ஸ்டேஷனில் இருந்து புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்தது என்னவோ அஜய் தான்.

ஒருவர் அருகே அடுத்தவர் இருக்காவிடினும், அஜய்யை செதுக்கிய பிரம்மனான சித்தார்த்தும் அவனுக்காகவே எதையும் செய்யும் அஜய்யும் உள்ளத்தால் இணைந்தும் பிணைந்தும் தான் இருந்தார்கள். அவர்கள் பிணைப்புக்கு அவர்களே விளக்கம் சொல்ல முடியாமல் இருந்தாலும் அங்கு தாய் பாசத்துக்கு இணையான தன்னலமற்ற அன்பு இருவரிடையேயும் இருந்து கொண்டே தான் இருந்தது. சித்தார்த்துக்கு காயத்ரி மூலம் குழந்தை பிறந்தால் கூட அவனுக்கு எப்போதுமே முதல் குழந்தை அஜய் தான் என்று மறுக்கவும் மறக்கவும் முடியாது..


பிரம்மன் படைத்து விட்டான்.
Super sis
 
Top