ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பெண்ணியம் பற்றி உங்கள் கருத்து என்ன??

பெண்ணியம் னா என்ன ??? ஆணும் பெண்ணும் சமம் அப்டிங்கறதா... இல்ல பெண்தான் உயர்ந்தவ அப்டிங்கறதா???... என்ன பொறுத்தவரை இது இடத்துக்கு இடம் மாறும் ..... ஒரு ஆண்.. 40வயது வரை திருமணம் செய்ய வில்லை... சொந்தம் என்று ஒரு சிறிய வீடு மட்டுமே... அனாதை.. ஆனால் முயன்று கூலி வேலைசெய்து படித்து இடைநிலை ஆசிரியர் ஆகிய பிறகு நன்கு படித்த ஆசிரியை ஒருவரை மணக்கிறார்.. வயது வித்தியாசம் 17ஆண்டுகள்... வந்த பிறகு என்ன நினைத்தாரோ அவள வேலைக்கு செல்லகூடாது என தடுத்து விட்டார். . அந்த பெண் அழகு .. நிமிர்வு.. எனவே சரி என பிள்ளை வளர்த்துக்கொண்டே வயல் வேலை செய்து காசு தனக்கு சேர்க்கிறார்.. மனம் முழுக்க குமுறல் ஒரு பட்டதாரியை இப்படி செய்து விட்டாரே என... காட்சி மாறுகிறது.. இப்போது90வயது அந்த ஆளுக்கு மனைவி73 வயது.. மனைவியை நம்பி வங்கி கணக்கு எதயும் கொடுக்கவில்லை பென்ஷனையும் தற் கையில் வைத்துக்கொள்வார்... ஆனால் மனைவிக்கு இப்போது பயமில்லை.. போடாவாடா என்று பேசுவது... சமையத்தில் கெஞ்சி இறங்கி போகிறார் கணவர்.. இதில் மகனுக்கு திருமணம் முடித்தனர் ... மனைவி வேலைக்கு செல்லும் பெண்தான் வேண்டும் என்று தேடிபிடித்து... ஆனால் மகன் மனைவிக்கு உதவினால் சற்றும் பொருக்காத குணம்... இன்னும் இருவரையும் மனதளவில் பிரித்து வைத்து இன்பம் காண்கிறார்... இந்த பட்டதாரி தமிழ் பண்டிட் மாமியார்... இவர் மருமகளிடம் அடிக்கடி கூறும் வார்த்தை... என்ன பாவம் செய்தோ பெண்ணாய் பிறந்து விட்டாய்.. அவனிடம் வீட்டு வேலை சொல்லி செய்ய வைத்து மேலும் பாவம் சேர்க்காதே .. உன் உடைகளை அவன் தொடுவது பாவம்... மடிக்க சொல்லாதே என்பார்.... என்ன படித்தார் இவர்... எங்கே பெண்ணியம் பேசினாலும்.. இந்த கருத்துக்கள் குடும்பத்துக்கு உதவாது என்பார்... கணவர் மாமனார் மாமியார் அனைவரிடமும் போராடியே களைத்து போக வேண்டியது தான்... எதற்கும் தன் கணவரை முன்னிருத்தி காரியம் சாதிப்பது அந்த பெண்மணி... ஆனால் கூறுவது என்னை யார் மதிப்பார்கள் என்று.... போங்க பெண்ணியம் பேசி ஒரு பயனும் இல்லை
இதுக்கு என்ன சொல்றதுன்னு எனக்கும் தெரியல
 
Feminism is about all genders having equal rights and opportunities.... அதுக்காக கெட்ட விஷயங்களை சொல்லல, கம்பெனில ஆண் பெண் ஒரே வேலை செய்யும் போது ஆணுக்கு நிகரான சம்பளம் பெண்ணுக்கு பல இடங்களில் கொடுப்பது இல்லை, பையன் கல்யாணம் ஆகாம இருந்தா பிரச்னை இல்ல ஆனா பொண்ணு கல்யாணம் ஆகாம இருந்தா அந்த பொண்ணு பத்தி கண்டிப்பா தப்பா பேசுவாங்க, கல்யாணம் ஆகி டிவோர்ஸ் வாங்கிட்டா கூட பையன யாரும் ஏதும் சொல்ல மாட்டாங்க ஆனா பொண்ண தான் திட்டுவாங்க, அது என்ன பொண்ணு தான் எப்பவும் எல்லாம் வேலையும் செய்யணுமா ஆணும் பெண்ணும் வேலைக்கு போகும் போது வீட்டு வேலைய ரெண்டு பேரும் பகிர்ந்து செய்யணும் வேலை ரெண்டு பேருக்கும் பொதுவானது ஆனா இத நம்ம மக்கள் அக்ஸ்ப்ட் பண்ண மாட்டாங்க. எதுவா இருந்தாலும் பொண்ணு மட்டும் தான் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போகணும் பையன்னா அப்டி தான் இருப்பான்ன்னு ஒரே வார்த்தையில முடிச்சுருவாங்க. And rape விஷயத்துல கூட பொண்ணு நீ தான் அடக்க ஒடுக்கமா இருக்கனும் நீ அடங்காம இருப்ப அதான் அவன் இப்படி செஞ்சுட்டான்ன்னு சொல்ற ஊரு நம்ம ஊரு, சின்ன பொண்ணு என்ன செஞ்சுச்சாம்? பொண்ணு இப்படி தான் இருக்கனும் னு ஒரு definition வச்சு இருகாங்க அது ஏன் பசங்களுக்கு இல்ல? பொண்ணும் சக மனுஷி தான்ண்ணு ஏன் சொல்லி கொடுக்க மாட்டேங்கறாங்க? பையன் நீயும் இப்படி இருன்னு ஏன் யாரும் சொல்றது இல்ல? பொண்ணுன்னா மட்டும் தக்காளி தொக்கா? இந்த மாதிரி விஷயங்கள்ள தான் equal rights கேக்குறோம் இது தான் பெண்ணியம் னு நினைக்குறேன்.
true words..பெண்ணியத்தை காக்கிறதுல ஆண்களுக்கு முக்கிய பங்கு இருக்கு.. அவங்க ஆனா அந்த ஈகுவாலிட்டியை விரும்ப மாட்டாங்க ( சில ஆண்கள்)
 
நமக்கென்ற அடையாளமே பெண்ணியம்னு நான் .நினைக்கிறன். எல்லா விஷயத்திலயும் ஆண்களை தங்கி வாழமா நமக்கான வாழ்க்கையை நாம உருவாக்கிக்கணும்... அதுக்கு எல்லாருமே சப்போர்ட் ஆஹ் இருக்கனும்...அது தான் உண்மையும் கூட
பெண்ணியம்...

ஆண் பெண் சமநிலை அறவே மறுக்கப்பட்டு, 'நாம் அடிமையோ' என்னும் எண்ணத்தின் அழுத்தம் அதிகரிக்கும் வேலைதனில் மூச்சடைக்க மேலெழும்பி சுயமரியாதை காக்க வரும் பெண்ணின் நியாயமே, பெண்ணியம்!

பெண்ணியம்ங்கிறது என்னனு பேசற அளவுக்கு நிச்சயம் யாருக்கும் 100% தெளிவு இருக்காது. ஆனாலும் அடிக்கடி பேசணும். பேச பேச தான் தெளிவு கிடைக்கும்.

சோ யாராவது பெண்ணியம் பத்தி பேசுனா, அந்த கருத்து நமக்கு உடன்பாடு இல்லைனாலும், "இதெல்லாம் பெண்ணியமானு கேக்காம கடந்து போய்டணும்". புரிதல் இல்லாம தப்பான விளக்கமே ஆனாலும் அவங்க கருத்துரிமைல தலையிட கூடாதுன்னே நிறைய பேருக்கு புரிய மாட்டிங்குது.

தப்போ, சரியோ இப்பதான் பேசவே ஆரம்பிச்சிருக்கோம், அதுக்குள்ள இது பெண்ணியமா அது பெண்ணியமானு இகழ்ந்து பேசி, அடுத்தது யாரும் பேசவே யோசிக்கும் படி செய்திடக்கூடாது. முக்கியமா பெண்கள்!

பொதுவாவே பலகாலமா அடிமை படுத்தி வச்சிருந்த ஒரு இனம் தனக்கான உரிமை, குரல்னு எழுந்து வந்தாலே ஆதிக்கம் செலுத்தி வந்த இனத்துக்கு பக்குனு தான் இருக்கும். சோ முடிஞ்ச வரை அதை வளர விடாம பண்ணத்தான் யோசிப்பாங்க.

ஆண்கள தப்பு சொல்லமாட்டேன், எல்லா ஆண்களும் அப்டினும் சொல்ல மாட்டேன். ஆனாலும் அப்டியும் இருக்காங்க.

அப்படிப்பட்டவங்க, எதிர்பாலினமா அதை அவங்க செய்றது அவங்க நியாயமாவே இருந்துட்டு போகட்டும், ஆனா பெண்களே பெண்களின் கருத்துக்கு அணை போட கூடாது. அப்றம் நம்ம அடுத்த தலைமுறையும் பெண்ணியம்னா என்னனு கேட்டுட்டு மட்டும் தான் இருக்க முடியும்.

விளக்கமா இத சொல்லல.. சும்மா சொல்லணும்னு தோனுச்சு சொல்லிட்டேன். மத்தபடி நானும் பெண்ணியம் பேசுவேன், என் பையனுக்கும் பெண்ணியம் பத்தி சொல்லி கொடுப்பேன் ❣❣

thank u aishu ma fr made to share my thoughts.
நமக்கென்ற அடையாளமே பெண்ணியம்னு நான் .நினைக்கிறன். எல்லா விஷயத்திலயும் ஆண்களை தங்கி வாழமா நமக்கான வாழ்க்கையை நாம உருவாக்கிக்கணும்... அதுக்கு எல்லாருமே சப்போர்ட் ஆஹ் இருக்கனும்...அது தான் உண்மையும் கூட
 
பெண்கள் திருமணம் ஆவதற்கு முன்பாக ராணியாகவும். திருமணமான பிறகு ஒரு கேவலமான சந்து வாகவும் வலம் வருவதுதான் பெண்கள்
sad truth
 
Top